நிறம் மாறிய நேசம் 24

Advertisement

Sarayu R

Member
Member
அடுத்த பதிவு.

உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.


மறுநாள், தாத்தா வீட்டுக்கு கிளம்பும் போது அவர் வாங்கி தந்த புடவை, வளையல், செயின், பூ , காலில் கொலுசு என்று அவருக்கு பிடித்தமான விதத்தில் மீராவும், பாவாடை தாவணியில் அம்ரு கிளம்ப,
சங்கர், இந்த நால்வர், கூட்டணியிடம் நாங்க 4 பேர் 1 வண்டில போறோம். நீங்க 4 பேர் இந்த வண்டில வாங்கோ.
யாரு ஓட்ட?
மீரா முடியுமா? முடியாட்டி ,மோஹன் நீ பண்ணு. இந்த அருந்த வால் கிட்ட குடுக்காதே.
எல்லாம் எடுத்துண்டாச்சா?...
மீரா டென்ஷன்ல இருக்க, ஷ்யாம் நான் வேணா ஓட்டவா?
மீரா கிட்ட போய் டென்ஷன் ஆகாதே. நான் பார்த்துக்கறேன்.
எல்லாம் ஓகேன்னா பாவாடை தாவணி போட்டுப்பியா ... ஆசையா இருக்கு உன்னை அந்த மாதிரி பார்க்க....

எப்போதான் விளையாடணம், என்று தெரியாதா?..... என்ன ஷ்யாம்?

கைஸ், உங்க தாத்தா 2 பேரும் இவ US போனதில் இருந்து இவ கிட்ட பேசவே இல்லை. ஒரு மெஸேஜ் கூட அனுப்பலை. அதுனால அம்மையார் ஒரே டென்ஷன். என்ன பண்ணலாம்?

இவ தான் தாத்தா செல்லம் ஆச்சே!!!!
நாம போவோம், அவா என்ன சொன்னாலும் நாம அக்கா பக்கம் ஓகே யா? மோஹன் சொல்ல.....

ஜி, நீங்க சேர்ந்து இருங்கோ. நான் டிரைவ் பண்ணரேன், ஊருக்கு உள்ள போறப்ப நீங்க முன்னாடியும், ம்ருது பின்னாலயும் போகட்டம்.
எல்லாரும் சேர்ந்து தான் ஆத்துக்கு போய் இறங்கணம் என்று மோஹன் சொல்ல...
கைஸ் நாங்க சின்ன பசங்க, ரொம்ப ரொமான்டிக் சீன் வேண்டாம்... ம்ருது சொல்ல...அடிங்க என ஷ்யாம் வார நால்வரும் கிளம்பினர்....
மீராவின் கையை பிடித்து கொண்ட ஷ்யாம் என்னடி கை இவ்வளவு கோல்ட்ஆ இருக்கு?.
என்ன? மிஞ்சிபோனா இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லுவாளா? நம்ம பக்கத்து நியாயம் சொல்லுவோம்.
என்ன ஆனாலும் நான் உன்னை விட மாட்டேன். நம்பும்மா...
இவளை வைத்து எப்படித்தான் காலம் ஓட்டவோ?

நான் கல்யாணம் பத்தி கவலை படலை. என்னையே வேண்டாம் என்று சொன்னா?
ஜி கரெக்ட் தான், கம்ப்ளீட் லூசு தான்.
தாத்தாவோட ஆசை பேத்தி. குல விளக்கு இவளை வேண்டாம் என்று சொல்லவா!!!!
யுஎஸ் போய் மறை கழன்று போச்சா?

என்ன இவ படுத்தின பாடு இருக்கே அது பெரிய எபிசோட்.....

நீ ஜிய கல்யாணம் பண்ணிக்க கூடாது என்று சொன்னா, நான் பண்ணிக்கரேன். ஜி பாவம்.

அடிங்க...... போடி.......

என் புருஷன் தான்...
எனக்கு மட்டும் தான்... என்று மூவரும் பாட, மோஹன் வண்டியை நிறுத்தி ஷ்யாம், ம்ருது இடம் மாற்றி உட்கார, ரெண்டு காரும் ஒரே நேரத்தில் போய் சேர,
சங்கர், கெளரி முதலில் போய் கிருஷ்ணா, சுமித்ரா, ஷ்யாம், குழந்தைகள் வந்த விஷயம் சொல்ல, சுந்தரேசனும், புருஷோத்தமனும் அவர்கள் மனைவியுடன் வந்து, படியை விட்டு இறங்காமல்,
வாங்கோ வாங்கோ வாடா கோந்தே.... என்று சுமித்ரா, கிருஷ்ணா, ஷ்யாமை அழைத்தனர். என்ன அத்தி பூத்தாப்ல அண்ணனும் தங்கச்சியும் வந்து இருக்கா.... வாங்கடா ரெட்டை வாலுங்களா....
மீரா என்று ஒரு ஜீவன் இருப்பதாகவே கண்டு கொள்ளவில்லை.....
மோஹன் கையை கட்டிக் கொண்டு நின்றான். ஷ்யாம் மீரா கையை பிடித்து நின்றான். ம்ருது கோவமாக நின்றாள்.
சுமி, கிருஷ்ணா உள்ளே போகவா வேண்டாமா என்று நின்றனர்.

மோஹன் தான் வாயை திறந்து உங்களுக்கு கண்ணுல என்ன கோளாறு? இன்னும் வந்து இருக்கற ஒரு ஆளு கண்ணுல தெரியலையா?

மீனா, உன்னை தேடி யாரோ வந்து இருக்கா. என்ன என்று கேட்டு அனுப்பு. ஆத்துக்கு கெஸ்ட் வந்திருக்கா என்று சொல்லி சீக்கிரம் அனுப்பு.
மீரா ஷ்யாம் கையை இன்னும் அழுத்திப் பிடிக்க அவளை அணைத்து நின்றான். எல்லாரும் பாக்கறா..... கட்டிக்க வேண்டாம்....
நான் இப்படித் தான் இருப்பேன்.... சும்மா இரு....
அவா ஒதுக்கினாலும் உனக்கு நான் இருக்கேன். நாங்க இருக்கோம் தெரியட்டம்....
சங்கர் கண் காட்ட, மீரா ஷ்யாமுடன் முன்னால் வந்து தாத்தா, நான் உங்க மீரா வந்து இருக்கேன்.
ஆசிர்வாதம் பண்ணுங்கோ....
என்று குனிய,
எனக்கு மீரா என்று யாரையும் தெரியாது. ஆத்துல கெஸ்ட் வந்து இருக்கா. எதாவது உதவி கேட்டு வந்து இருந்தா சொல்லு. வாங்கிண்டு போ....
அதிர்ந்து விட்டனர்.....

பாட்டி வந்து ஏன்னா!!! என்ன ஆச்சு உங்களுக்கு.... ப்ராந்தா ( கிறுக்கு) பிடிச்சு இருக்கு?
இந்த ஆத்து மஹாலக்ஷ்மி, நம்ம வம்ச விளக்கு, உங்க பேத்தி , உங்க அம்மா மீரா வந்து இருக்கா,
அவ கல்யாணம் பண்ணிக்கற மாப்பிள்ளை அதுவும் நாம எல்லாரும் பார்த்து முடிவு செய்த பிள்ளை கூட வந்து இருக்கா,
1 வருஷத்துக்கு மேல ஆச்சு அவ கிட்ட நீங்க பேசி. இத்தனை நாள் டெய்லி மெஸேஜ் அனுப்பி இருக்கா ஒரு பதில் போடலை. பேசினா என்னை பேச சொல்லிட்டு உடனே கால் கட் பண்ணிடுவேள்.
அந்த குழந்தை என்ன தப்பு பண்ணித்து?
சங்கர் கௌரி மீராவிடம் வந்து அப்படியா? பேசலையா? என்று கண்ணால் கேட்க,
ஆமாம் என்று கண்ணை , தலையை அசைத்தாள்
அவ எந்த நிலமைல இந்த நாட்டை விட்டு போனாள் தெரியாதா? நாம தானே போக சொன்னோம்.
எப்போ வருவா என்று எதிர் பார்த்து இருந்துட்டு இப்போ என்ன குதிக்கரேள்?.
நீ வாடி ராஜாத்தி, இந்த கிழட்டு பிராமணர் பேசறத வகை வைக்காதே....
இந்திரா வா பெரியவாளா சித்து ( ஆரத்தியின் இன்னொரு பெயர் ) கரைச்சு போடலாம்......

கௌரியின் தந்தை புருஷோத்தமன் வந்து சுந்தரேசா, குழந்தை எப்போ வருவா என்று ஏங்கி இருந்துட்டு இப்போ என்ன கூத்து.
இந்த ஆத்துக்குள்ள அவ சிரிப்பு இருக்கு, அவ மூச்சு இருக்கு, அவ ஆசை இருக்கு, அவ பாட்டு இருக்கு அதை விட்டு வெளில போக மாட்டேன் என்று ஆத்தை விட்டு ஒரு வருஷமா வெளில வரலை.
டெய்லி பார்க்கற, போற கோயிலுக்கு போகலை. பைத்தாரன் மாதிரி இருந்த. இப்போ பைத்தாரன் மாதிரி நடக்கற.
சம்மந்தி ஆத்துல என்ன நினைப்பா?.

எப்போதும் உன்னை அவ கூப்பிடற மாதிரி கூப்பிடலை என்று கோவமா?. புக்காத்துகாரா, ஆம்படையான் முன்னாடி கூப்பிட முடியுமா?.
இந்த இங்கிலீஷ்ல சொல்லற மாதிரி டெலிகேட்டா இருக்காதா?....

கௌரியின் அம்மா இந்திரா வந்து, அண்ணா, நீங்க பெரியவா. சின்ன குழந்தைகள் தப்பு பண்ணினா அதை மறந்து மன்னிக்கலாமே.
ஏதோ தோணித்து சொல்லிட்டேன். தப்பா எடுத்துக்காதேங்கோ.....

ஷ்யாம் போய், உங்க சம்மதத்தோடு தானே நான் உங்க மீராவை பார்த்துக்க யுஎஸ் போனேன். எல்லாமே உங்களுக்கு தெரியுமே. அப்பறம்.....

எல்லாரும் நிப்பாட்டுங்கோ.......
அன்பு, ஆசை, பாசம் இதெல்லாம் மனசுல இருந்து வரணம்.
யாரும் எனக்காக பிச்சை கேட்டு நிற்க வேண்டாம்.
உண்மையான அன்பு இருந்தா இந்நேரம் கல்லும் கரைந்து இருக்கும்.
தான், தன் ஈகோ எல்லாம் பறந்து போய் இருக்கும்.
அது இல்லை என்று தெரிஞ்சாச்சே......

நாளைக்கு எனக்கு பிறக்க போற குழந்தைகளுக்காக நான் என்னை மாத்திக்கரேன்.
அம்மா நீ எவ்வளவு ஏங்கி இருப்ப, உன்ன நான் அம்மா என்று கூப்பிட.... கௌரி கௌரி என்று கூப்பிட்டே உன்னை காயப்படுத்தி இருக்கேன். நாளைக்கு என் பொண்ணு என்னை அம்மா என்று கூப்பிடாட்ட எப்படி இருக்கும்? சாரிம்மா என்று கௌரியை கட்டிக்கொண்டாள்.

அது போல தான் என்னை மாதிரி வயசுல 3 மடங்கு பெரியவரை சின்னம்பி, நீ வா போ என்று எவ்வளவு மோசமா நடந்து இருக்கேன்.
என்னைப்போல தானே ம்ருது, அஞ்சு, சஞ்சு எல்லாம். என்னை மட்டும் ஸ்பெஷலா கொஞ்சி நடத்தும் போது அவாளுக்கு மனசு கஷ்டப்பட்டு இருக்காதா.
அதுக்கு எல்லாம் தான் எனக்கு இப்படி நடக்கறது. ஐ டிசர்வ் இட்.

ஆத்து வாசல்ல வைத்து நமஸ்காரம் பண்ணறது .... நல்ல காரியத்துக்கு இல்லை. அதனால் நமஸ்காரம் பண்ணலை.
எனக்கும், நான் கல்யாணம் பண்ணிக்க போற என்னோட ஷ்யாமுக்கும் உங்க ஆசிர்வாதம் வேணும். ஆசிர்வாதம் பண்ணுங்கோ...
சரி நான் கிளம்பறேன்.....

கண்ணம்மா நானும் வரேன். அவாளுக்கு நீ வேண்டாம் என்றால் நானும் தான் வேண்டாம்.
வாடா... மீரா கையை பிடித்து ஷ்யாம் நடக்க, அக்கா என்று ம்ருது, மோஹன் சேர்ந்து கொள்ள.......
கௌரி, சங்கர், சுமித்ரா, கிருஷ்ணா திகைக்க.....

காரை நெருங்கிய மீரா ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு டிரைவர் சீட்டில் உட்கார, அக்கா நான் என்று ஆரம்பித்த மோஹனை கை தூக்கி நிறுத்தி கீ...பிளீஸ்....
அவள் தோள் தொட்ட ஷ்யாமிடம்
ஐ ஆம் ஆல்ரைட்.... என்னால முடியும்....

என்று சொல்லி அவளின் முறைப்படி ஸ்டியரிங்ஐ வணங்கி வண்டியை ஆன் செய்யும் முன்......
ஒரு முறை தான் இளவரசியாய் வளைய வந்த வீட்டை பார்க்க,
"எண்டே மீராம்மே" என்று சுந்தரேசன் கதறியபடி ஓடி வந்து தெருவில் விழ, அதைப்பார்த்து வண்டியில் இருந்து வெளியே ஓடி வந்து. சின்ன....
தாத்தா என்று அலறி மடியில் தாங்கினாள்.
மோஹனும் ம்ருதுவும் உடனே முதல் உதவி செய்ய, அடுத்த தெருவில் இருந்த ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர்
ஸ்ட்ரெஸ், ஷாக்..... 4 மணி நேரம் ஆப்சர்வேஷன்ல இருக்கட்டும்.
கவலைப்பட ஒன்னும் இல்லை.
ஓவர் எக்சைட்மெண்ட்.....

இங்க ஒரே கூட்டம் வேண்டாம். நானும் ஷ்யாமும் பார்துக்கறோம். ஷ்யாம் ஆர் யூ ஓகே?
மோஹன் , ம்ருது பாட்டியை சமாதான படுத்துங்கோ.
அப்பா, என்னோட மாமனார் மாமியார் மத்த எல்லாரையும் பார்த்துட்டு வாங்கோ.
எல்லாம் சரி ஆயிடும் நீங்க ஸ்ட்ராங்கா இருங்கோ என்று கட்டி அணைத்து தட்டிக் கொடுத்தாள்.

2 மணி நேரம் கழித்து தாத்தா நல்ல இருக்கார். கண்ணு முழிச்சுட்டார்.
நீங்க பார்க்கலாம்....
கண்ணம்மா போய் பாருடா....
நீயும் வா ஷ்யாம். நீ இல்லாம நான் எங்கேயும் இல்லை......
சேர்ந்து வந்த மீரா, ஷ்யாமை பார்த்த தாத்தா, கோந்தே வந்து என்னை மன்னி......
ஷ்யாம் தாத்தாவிடம் எல்லாம் சரி ஆயாச்சு.
எமோஷனலா ஆகக்கூடாது.
மீரா கையை எடுத்து தாத்தா கையில் வைத்து, தன்னுடைய கைக்குள் அவர்கள் கையை வைத்துக்கொண்டான்.
அந்த கை அணைப்பு, அது உணர்த்திய உணர்ச்சிகள்......
சுந்தரேசன் மனதில் இனி அவரின் மீரா ஷ்யாமுக்கு தான்.
அவன் அவளை தங்களை விட நன்றாய் பார்த்துக்கொள்வான்.
நிம்மதி பெரு மூச்சு..... வெளிப்பட்டது.

வீட்டிற்கு வந்த தாத்தாவை பெகள ( கலவர அல்லது பயமுறுத்தி) படுத்தி விட்டேளே!!!!! என்று எல்லாரும் சொல்ல,
மீராவும் ஷ்யாமும் இன்னும் உள்ளே வரவில்லை.
ரெண்டு பாட்டி ஆரத்தி எடுக்க, ரெண்டு தாத்தாவும் அவர்களை கை பிடித்து கூட்டி வர சந்தோஷ சாரல் வீசியது.....
 

Advertisement

Advertisement

Back
Top