நிறம் மாறிய நேசம் 23.1

Advertisement

Sarayu R

Member
Member
அடுத்த பதிவு.
இரு பகுதிகளாக குடுத்து இருக்கிறேன்.

உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

அடுத்த நாள் கௌரி, சங்கர் கிளம்ப,
மீரா மெதுவாக, அம்மா நான் இனிமேல் இங்க இருந்து ஆபீஸ் போகலாமா? இல்லை ஹாஸ்டல்? அல்லது ஏட்ரியம் போகவா? அப்பறம் இந்த சரடு என்ன பண்ண?

ஒரு 2 அல்லது 3 வாரம் இங்க இரு.

பரவாயில்லை. இதுல டிராவல் வேற இருக்கே.
அப்பறம் லீவ் போட்டு விடு.
இந்த வாரம் ஊருக்கு வரும் பொது பாட்டி கிட்ட கேட்கலாம்....
ஒரு வேளை இந்த சரடு கட்டி கொண்டதுக்கு அப்பறம் தான் அந்த சாபம் மட்டு பட்டு இருக்கோ!!!! என்னமோ???

உன்னோட செயின்ல சரடை சுத்தி கட்டிக்கோ.....
என் செயின் அவன் கிட்ட இருக்கு!!!!.
அவனோடது என் கிட்ட இருக்கு....
அது நான் அவனுக்கு போட்ட தாலியாம்...

ரொம்ப டாமிநேட் பண்ணறான்.
அநியாய பொசசிவ்......... நினைத்ததை சாதிக்கறான்..... படுத்தரான்ம்மா....
எப்படி சமாளிக்க?.....

ரொம்ப அலட்டாதே....தனியா வளர்ந்து இருக்கான். மனுஷாளுக்கு ஏங்கி இருக்கான். உனக்கு நடந்ததை சமாளிக்கரதுக்குள்ள துடிச்சி போயிட்டான் தெரியுமா?

ஷ்யாம், விஷ்வாக்கும் கோயில் கட்டணம்.
என்னமா ரெண்டு பேரும் பிளானிங், எக்சிக்யூக்ஷன்...... நமக்கு கிடைத்த வரம் அவா ரெண்டு பேரும்.
அவாளல தான் நீ எங்களுக்கு திரும்ப கிடைத்து இருக்க...... கௌரி கண்ணில் கண்ணீர்.....

அப்பறம் நீ தனியா இருக்கும் போது எப்பிடி வேணா கூப்பிடு.
தாத்தா பாட்டி முன்னாடி அவன் இவன் என்று சொல்லாதே. அந்த கால மனுஷா.....
சுமி கிட்டவும் எப்படி கூப்பிடணம் என்று ஒரு வார்த்தை கேளு.
அவாளுக்கு பாவம் ஷ்யாம் மட்டும் தானே....ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கா... நீதான் இனிமேல் எல்லாமே.
பதவிசா இரு.
இப்போ நான் அம்மா கௌரி சரியா? பிரின்சிபால் கௌரி இல்லை.

நாங்க பிரியாவை பார்த்துட்டு கிளம்பரோம் ராஜா.
நீ US கிளம்பும் போது எப்படி போன? இப்போ ஹேப்பி யாடா பட்டு.....
கேட்ட அம்மாவை கட்டிக்கொண்டு முத்தம் குடுத்தாள்.
பாத்துடி... உன் ஆளு பார்த்தா என்கிட்ட சண்டைக்கு வருவான்...
கௌரி கலாய்க்க.....

போ கௌரி நீ மோசம்....

என்ன அம்மா பொண்ணு கொஞ்சல் ஓவரா?
அப்பாவையும் கொஞ்சம் பாருடி கண்ணம்மா.....
கௌரி உன் பொண்ணு கிட்ட இருந்து கத்துக்கோ.....
கௌரி முகத்தில் செம்மை.... கௌரி இப்பவும் நீ அழகு தாண்டி....
அப்பா நான் இங்க இருக்கவா இல்லை ரொமான்டிக் ஜோடி மட்டும் தானா?

அடிங்க....

மீரா நாங்க பிரியாவை பார்த்துட்டு, ஏர் போர்ட் போய் கொண்டு விடரோம்.... நீ ரெஸ்ட் எடு....என்று எல்லோரும் கிளம்ப,
அம்ரு மோஹன் ஷ்யாம் கூட கூட்டணி போட.....
ஜிஜாஜி என்ஜாய் என்று கண்ணடித்து கிளம்பினர் அம்ரு , மோஹன்.....

உங்க அக்கா இதெல்லாம் தெரியாத தத்தி..... கொஞ்சம் சொல்லிக்குடு அம்ரு.... இது ஷ்யாம்......

யக்கா நீ வாங்கிண்டு வந்ததை எல்லாம் நானே எடுத்துண்டாச்சு...
தேங்க்ஸ் யக்கோவ்...அம்ரு சொல்லிக்கொண்டே போனாள்.
சாக்லேட் குடுடி என்று மோஹன் சொல்ல ஒரே அடி பிடி....

அவர்கள் கிளம்ப, மீரா தனியாக போய் படுத்துக்கொண்டாள்
கொஞ்ச நேரத்தில் அவள் ரூமுக்கு வந்த ஷ்யாம், ஹை பொண்டாட்டி....
பெயின் இருக்கா?
பரவாயில்லை ..... கொஞ்சம் ஓகே. இன்னும் 1 நாள் ஆகும்.

கட்டிலில் அவள் மடியில் படுத்துக்கொண்டு....
நம்பவே முடியலை..... நீயும் நானும் இப்படி.....

கண்ணா இன்னும் ஒரு மாசம் கன்ட்ரோல் பண்ணிக்கோப்பா......
மோஹன், அம்ருக்கு நாம ரோல் மாடல் இல்லையா....

ம்ம். ம்ம்

நான் ஒன்னும் தத்தி இல்லை. யாரும் எனக்கு எதுவும் சொல்லி குடுக்க வேண்டாம் என்று ஷ்யாமிடம் சிணுங்கினாள்.....
அப்படியா அதையும் தான் பார்ப்போமே என்று ஷ்யாம் தன் டிரேட் மார்க் புருவத்தை தூக்கி சொல்ல.....
பாரு பாரு.....

ஒரு வேளை தனியா வளர்ந்ததால் திடீர் என்று கிடைத்த நீ
எனக்கே எனக்கு என்பதால்
அநியாய பொசசிவ்........., அப்பறம்
ரொம்ப டாமிநேட் பண்ணரேனா?.

ஹே........ நான் கௌரிக்கிட்ட சொன்னத கேட்டியா.....?

ம்ம்......ம்ம்
சீட்டிங்.....
ஆமாம் உன்னோட அம்மாவ ஏன் பேர் சொல்லி கூப்பிடற?
அதுவா, என்னை பாட்டி, தாத்தா தானே வளர்த்தா. அப்போ அம்மா காலேஜ் எக்ஸாம் என்று பிஸி....
இந்த ஜாயின்ட் ஃபேமிலில பெரியவா சின்னவாளை எப்படி கூப்பிடராளோ அது தானே குழந்தைகள் பழகும்.
அம்மாவை ரெண்டு பக்கம் தாத்தா பாட்டி பேர் சொல்லி தான் கூப்பிடுவா. அதனால் கௌரி.
அம்மாவோட அம்மா மாமாம்மை, ரொம்ப நாள் அந்த தாத்தாவை கௌரி கூப்பிடற மாதிரி அப்பா என்று சொல்லி இருக்கேன்

நாளைக்கு நம்ம குழந்தைகள் அப்படி சொல்ல கூடாது.
அவா முன்னாடி நான் உன்னை அப்பா என்று தான் சொல்லுவேன். நீ அம்மா என்று தான் சொல்லணம். கொஞ்சல் எல்லாம் தனியா தான். ஓகே யா?

அது சரி குழந்தை வேணும் என்றால் எனக்கு நீ வேணுமே!.....உனக்கு நான் வேணுமே!!!!!
என்ன..... எப்படி .....?

போடா நீ திருந்தவே மாட்டியா?

சரி விளக்கு ஏற்றணம்.....
இல்லாட்டா மித்தும்மா தப்பா நினைப்பா... நான் ரொம்ப சமத்து.....

ஹாலுக்கு போகலாம்..... வா....கண்ணா.
எழுந்தவளை இழுத்து தன் மேல் விழ வைத்து அவளின் இதழ்களை சிறை எடுத்தான்.

கல்யாணம் வரை உன்கூட தனியா நான் இருக்க மாட்டேன். ரொம்ப மோசம் நீ....
இப்பிடி இருந்தா ஹாஸ்டல் போகட்டா? இல்லாட்டி நீ ஏட்ரியம்ல போய் ஸ்டே பண்ணு....

தாயே வேண்டாம்..... ஐ வில் டிரை...

விளக்கு ஏற்றி துணிகளை மடித்துக்கொண்டு இருந்தாள் .
சுமித்ரா வந்து மீரா, ஷ்யாம் சாப்பிட்டு விட்டு கார்ல போய் பிரியாவை பாருங்கோ.
அது தான் சேஃப்.....
அப்பறம்,
Friday ஈவ்னிங் ஃப்ளைட் புக் பண்ணலாமா?
ரிசப்ஷன் எங்க, எப்போ பிளான் பண்ணலாமா?.......
கிச்சாப்பா ( மீரா, ஷ்யாம் அர்த்தப் பார்வை பார்க்க) இன்விடேஷன், கூப்படறவா லிஸ்ட் ரெடி பண்ணனும். மீரா உனக்கு ஏதாவது ஆசை இருக்கா ஏதாவது ஆஸ்ரமம், சேரிட்டிக்கு
குடுக்க.....?

அம்மா வந்து, ஸ்ட்ரிக்ட்டா கிஃப்ட்ஸ், பிளவர்ஸ், வேண்டாம்.
QR code வைத்து அவா பேர்லயே ஆஸ்ரமம், சேரிட்டிக்கு , குடுக்க வைக்கலாம்.
லஞ்ச் ஏதேனும் ஆஸ்ரமம், வேத பாட சாலைக்கு .....
ரொம்ப சிம்பிளா பண்ணனும் ஆனா அப்பாவோட பொஸிஷன் அதுக்கு வர பெரிய இடம்.... அது பார்க்கணம் இல்லையா.
என்னம்மா ஓகே யா?
மித்தும்மா, கிரிஷ்ப்பா எப்போ அப்பா, அம்மா வா மாறித்து?
பிடிக்கலையா? என்று கட்டிக்கொண்ட மீராவை, தங்கம் இதுக்காக தானே ஏங்கிண்டு இருந்தோம்.
நீ எப்படி கூப்பிட்டாலும் பிடிக்கும்.....

என்ன கிருஷ்ணா, சுமித்ரா இப்பிடி சொல்லறா?....... என்று மீரா கேட்க,

அடிங்க... என்று ஷ்யாம் துரத்த.....

சரி சரி சாப்பிட்டு விட்டு பிரியாவை பார்த்துட்டு வாங்கோ. நந்து வையும் பார்த்துட்டு வர முடியுமா?

நாளைக்கு ஆபீஸ் இருக்கு...... சீக்கரம்...
நந்திதாவின் குழந்தைக்கு வாங்கிய கிப்ட்ஸ், பிரியா, நந்திதாவுக்கு வாங்கிய பெர்ஃப்யூம், லோஷன், கிச்சன் டூல்ஸ்.... சாக்லேட் எடுத்துக்கொண்டு கிளம்பினர்.....

அவர்களுக்கு தெரியாமல் ஒரு செக்யூரிட்டியையும் அனுப்பி வைத்தார் கிருஷ்ணா.....
 

Advertisement

Advertisement

Back
Top