ஹலோ அடுத்த பதிவு இதோ.
உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளவும். உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகேற்றும்.
எதற்கு என்று போன பொழுது ஷ்யாம் நெருங்கி வர, மீரா பின்னால் நகர்ந்து நகர்ந்து தன் முதுகு க்ளாசெட் கதவில் இடித்து நிற்க, அவள் அங்கும் இங்கும் நகர முடியாமல் தன் இரு கைகளை க்ளாசெட் கதவில் அழுத்தி அவளின் இரு பக்கம் வைத்து நிற்க,
அவன் கை சிறையில் அவள். ...
இப்போ போ பார்ப்போம்!!!!
அவள் கீழே குனிய. அவனும் குனிய...சும்மா விளையாடாத.....
நான் விட்டா தான் நீ போகமுடியும் தெரியும் தானே.....
ம்ம்.....
என்னடா நம்ம சிக்நேச்சர் பதிலை காணுமே என்று பார்த்தேன்.
எனக்கு வேண்டியதை குடு. நான் சொல்லறத செய். விட்டு விடுவேன்...
என்ன? ......
க்ளாசெட் கதவை திற....
நீ கொஞ்சம் பின்னாடி போ...
அப்பதான் முடியும். இல்லாட்டா இடிப்பேன்.
நான் நகர மாட்டேன். உன் சாமர்த்தியம்.....
ஒரு சுற்று டான்ஸ் ஆடுவது போல சுற்றி ஒரு இடி இடித்தாள்..... இதெப்படி இருக்கு?......
என்ன பண்ணனும் சொல்லு?
கதவை திறந்தாச்சு.
உள்ள பாரு.....
பார்த்தால் டிரஸ், லெகங்கா,saree, அக்ஸ்ஸரிஸ், பெர்ஃப்யூம், ......
ஏது? யாருக்கு?
நான் தான் வாங்கினேன்,
என்னோட பாட்டிக்கு...
கேள்வியை பாரு....
லூசு.....
லூசா இருந்தா ஏன் கட்டிக்கணம்? கொஞ்சணம்?
அன்னிக்கு என்கேஜ்மென்ட் டிரஸ் எடுக்கும் பொது உனக்கு ஒரு saree வாங்கு என்று சொன்னப்ப என்ன கத்தின? சொல்லு.
ஆமாம் கத்தினேன், அதுக்கு என்ன இப்போ?.
இது எல்லாம் உனக்காக வாங்கினேன்.
கட்டிப்பியா? பிடிச்சு இருக்கா?
நீ, நான் வாங்கினத ஏற்றுக் கொண்டால், உனக்கு நான் யாரு?...
மௌனம்... அந்த நாளை நினைத்து....
நான் உன்னோட அப்பாவா?
இல்லை என்று தலை ஆட்டினாள்.
அப்போ உன்னோட அண்ணா, தம்பி?
இல்லை.
உன்னோட பிள்ளை?... இல்லை...
உன்னோட கணவன்? அதற்கும் இல்லை என,
அப்போ யாரிடி நானு?
ஹார்ட் அட்டாக் குடுக்கறையே.....
படு பாவி.....
வந்து.... வந்து....
என்ன வந்து... போயி..?.
என்னோட வயிற்றில் வளர்ந்து பிறக்க போற நம்ம குழந்தைகளின் அப்பா....
கணவனுக்கும் இதுக்கும் என்னடி வித்யாசம்? சொல்லு.....
கண்டுபிடி....மவனே யோசி.... நான் பை....
இந்த saree கட்டிக்கோ.
ஜீன்ஸ்,பாண்ட், டீ ஷர்ட் வாங்கி உடனே போட்டுக்கற மாதிரி இல்லை புடவை. தெரியுமா?
ஐய்யோ !ஐய்யோ!
அக்கா தங்கச்சி கூட பொறந்தா தெரியும்.
இப்படி ஒத்த பிள்ளை கிட்ட மாட்டிகொண்டியே மீரா. நீ பாவம்டி..... என்று வாய் விட்டு புலம்ப.....
ஏன்? ....
லூசு.... மேட்சிங் ப்ளவுஸ், ஷேப்வியர் அல்லது இன்ஸ்கர்ட் இல்லாம எப்படி...?
இது தானா? நாங்க என்ன உங்களை மாதிரியா?
பாரு..... எல்லாம் இருக்கு....
எப்படி? .... உனக்கு தெரியும்?.....
அது ஐயா சாமர்த்தியம்..... இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டான்.
கட்டிக்கறையா இல்லை கட்டிவிடவா?
வேண்டாம் வேண்டாம் நானே பார்த்துக்கறேன் ....
நீ குளிக்க போ...
நான் கட்டி முடிக்கறவரை வரக்கூடாது.
அவனை தள்ளி விட்டு விட்டு கட்டிக்கொள்ள தொடங்கினாள்.
அன்று அவளை எடுத்துகொள்ள சொன்ன புடவை...... நினைவுக்கு வந்தது.
கை வலியோடு கட்டி, பின் குத்த முடியாமல், முதுகுப்புறம் பட்டன், முடிச்சு போட முடியாமல் நின்ற மீராவின் பின்புறம் வந்து, காதலோடு தன் மூச்சு காற்றை அவளின் முதுகில் பரப்பி, உதவுவதாக பேர் பண்ணி, கட்டி அணைத்து அவள் முகத்தை கையில் ஏந்தி முத்த மழை பொழிந்தான்.
அவன் கை அணைப்பில் அவள், அவள் உதடுகள் அவன் உதடுகளுக்குள்...
மூச்சு கூட விட முடியவில்லை.
பிளீஸ் விடுப்பா.......
நான் போகணம்......
நீ டிரஸ் பண்ணிக்கோ நான் வெளில போறேன்.
ஒன்னும் வேண்டாம். உன்னோட முன்னாடியே மாத்திப்பேன்.
போடா....வெக்கமா இல்லையா?
ஏன்டி மனச தொட்டு சொல்லு. என்னை முழுசா பார்த்து, எத்தனை தடவை எனக்கு டிரஸ் மாத்தி விட்டு இருக்க எனக்கு உடம்பு முடியாதப்ப?.
எங்க அம்மா கூட ரெண்டாவதுக்கு அப்பறம் எனக்கு ஹெல்ப் பண்ணலை. அப்பவே நான் பெரிய பையன் ஆயிட்டேன்.
இப்போ நீ.... ஒரு தடவைன்னா என்ன ஓராயிரம் தடவைன்னா என்ன? புதுசா சொல்லற. நான் என் கண்ணம்மா முன்னாடி டிரஸ் மாத்துவேன். நீ வேணா கண்ணை மூடிக்கோ.
ஷ்யாம் மீரா வாங்கோ....
புடவை கட்டி கொண்டு வந்த மீராவை பார்த்து, கண்ணா லெக்கிங்ஸ், டாப்ஸ் எப்பிடி saree யா மாறியது?
என்ன ஸ்பெஷல் அந்த ரூம்ல? மேச்சிங் ப்ளவுஸ் தூள் கிளப்பு..... கண்ணடித்து சுமித்ரா கேட்க, மித்தும்மா.....பிளீஸ் என்று சிணுங்கினாள்.
மித்தும்மா, கொஞ்சம் பின் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணரேளா? கை முடியலை.....
அழகாக கட்டி விட்டு ரசிக்க தொடங்கினாள்.....
அம்மா எனக்கு கொஞ்சம் மிச்சம் வைக்கறையா?.
ஏன்டா இப்படி ஜொள்ளு.... தாங்கலை..
சரி மீரா விளக்கேத்து!!!!
ரெண்டு பேரும் சேர்ந்து நமஸ்காரம் பண்ணுங்கோ.
இருவரும் சேர்ந்து சுமித்ரா,
கிருஷ்ணாவை நமஸ்கரிக்க.....
கற்பாறையாய் இருந்த மீரா எப்படி மெழுகாய், உருகும் பனியாய் மாறினாள்?
பெண் என்பவள் ஒரு புரியாத புதிர். மீராவும் தான்....
12 மணிக்கு ஆர்தோ கிட்ட போகணம்.
டிரஸ் சேஞ்ச் பண்ண போகும்போது மீரா, பிளீஸ் இதுலயே இரேன்.... தாபத்தோடு ஷ்யாம் கேட்க,
ஸ்டீராய்டு ஷாட் போட்டா 24 ஹவர்ஸ் வலிக்கும்.
அப்ப ரிமூவ் பண்ண முடியாது. அண்டர்ஸ்டான்ட்ப்பா.......
நீ ஆபீஸ்ல இப்படி இருக்கக் கூடாது... கொஞ்சம் பிராஜக்ட் லீட்ஆ இருப்பா.....எப்படி சமாளிக்க போறேனோ தெரியலை.....
ஷ்யாம், கிருஷ்ணாவுடன் ஆர்தோவிடம் போய் ஷாட் போட்டுக்கொண்டு வந்தால் வீட்டில் கௌரி, சங்கர், மோஹன், அம்ரு.....
சர்ப்ரைஸ்........ என்று மோஹன், அம்ரு ஓடி வர....
மீரா இந்த உலகிலேயே இல்லை.
ஃப்ளைட் ஏறியதில் இருந்து என்னவெல்லாம் நடந்தது முடிந்து விட்டது.
கௌரி, சங்கரை கட்டிக்கொண்டு மீரா அழ
இனிமேலும் இவர்களைஇப்படி தவிக்க விட வேண்டாம். என் பிள்ளைக்கு முடியாது. போற போக்குல சீமந்தம் தான் முதல்ல வரும் போல தோணறது. பேசாம அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் பண்ணி விடலாம்.
ரிசப்ஷன் இங்க பண்ணலாம்.
கௌரி என்ன சொல்லற?
நகை, டிரஸ் எல்லாம் அப்பவே வாங்கி ஆச்சே......
ஆமாம் சுமி,
இன்னும் 2 செட் வாங்கலாம். ஏப்ரல்
30க்குள் கல்யாணம் வைத்துக்கலாம். மே மாசம் அக்னி நக்ஷத்திரம் ஆரம்பித்து விடும்.
1 மாசம் தான் இருக்கு.
வர வாரம் தாத்தா பாட்டியை பார்க்க வரட்டும். நீங்களும் வாங்கோ.
நீங்க மே முதல் வாரத்தில் ரிசப்ஷன் பண்ண புக் பண்ணிடுங்கோ.
நான் 4 நாள் முகூர்தத்துக்கு கேட்டுண்டு வந்து இருக்கேன்.
கௌரி நீ செம ஸ்பீடு........
எங்க கௌரி எப்போதுமே இப்படித்தான்....சங்கர் வழிய....
அப்பா பிளீஸ் ..... ஒரு காலேஜ் பிரின்சிபால் மாதிரி இருப்பா...என்று மோஹன் சொல்ல,
அம்ரு , மோஹனிடம் அண்ணாச்சி
(2 நிமிஷம் முன்னாடி பிறந்ததால்) நாளைக்கு நீயும் இப்படி தான்.
ஜீன்ல இருக்கு.
தாத்தா, அப்பா, நீ... பாரம்பரியத்தை விடாதே..... .நம்ம குடும்ப மானம் உன் கையில் தான் இருக்குப்பா.... காப்பாத்து......ப்பா
அடிங்க.... வாய் ஜாஸ்தியா போறது.....
ஷ்யாம் அவர்களின் செல்ல கொஞ்சலை பார்த்து ஏங்கினாலும்
அங்க மட்டும் இல்லை இங்கேயும் மீனாக்ஷி ஆட்சி தான்.நாங்க பாரம்பரியத்தை காப்பாத்துவோம்.
நீங்க எப்பிடி மேடம்?.....
ஜீஜாஜி...... யூ டூ?....
மீராவால் கையால் சாப்பிட முடியவில்லை...
பிசைந்து தாங்கோ, ஸ்பூன் வைத்து லெஃப்ட் ஹேன்டால சாப்பிடரேன்....
வேண்டாம் என்று அம்ரு மோஹன் இருவரும் போட்டி போட்டு கொண்டு ஊட்ட,
ஷ்யாம் எனக்கும் பிளீஸ்......என்று வர,
மீரா, அம்ரு , மோஹன் தங்களுக்குள் ஏதோ பெங்காலியில் பேச, கெளரி மூன்று பேரையும் முறைக்க,
Āmarā duḥkhita ( வீ ஆர் சாரி) என்றனர்.
ஷ்யாம் தனியாக வளர்ந்ததால், இது போல் சகோதர பாசத்துக்கு ஏங்கி இருப்பது நன்றாக தெரிந்தது.....
கௌரி சங்கர் இனிமேல் தங்களுக்கு 4 குழந்தைகள் என்று தெரிந்து கொண்டனர்........
நடப்பது எல்லாம் நந்திதா, விஷ்வாவுக்கு ஷ்யாம் இருவரின் ஃபோனில் இருந்தும் மெஸேஜ் அனுப்பினான்.....
எப்படிடா போய் சேர்ந்து 3 மணி நேரத்துல என் தங்கச்சியை கவுத்த?செம கில்லாடி டா நீ......
இத, இங்க இருக்கும்போது பண்ண தெரியலையா? முட்டாள்.....
மீராவுக்கு, தங்கச்சி இந்தியா போய் 3 மணி நேரத்துல கவுந்தாச்சா?.
என்னடி பண்ணினான்? . என்னோட மானம் போச்சு.....
ஆனா ரொம்ப ஹேப்பி டா
என்று மெஸேஜ் வர,
அதை ஷ்யாம் மீராவிடம் காட்ட, எப்படி விஷ்வாவுக்கு தெரியும் என்று பார்த்ததால் ஷ்யாமின் வேலை என்று அவனை முறைத்தாள்......
அம்ரு ஷ்யாமிடம் ஜீஜாஜி ஹனி மூன் எங்க என்று கேட்க,
மோஹன், லூசாடி,
10 மாசமா US ல என்ன நடந்தது? இப்போ இது வேற தனியா.... என்று சொல்ல.....
ஷ்யாம் அவனிடம் தலைவா...... US ல என்ன நடந்ததா? நொந்து போய் இருக்கேன். நீ வேற....
உங்க அக்காவை தெரியாதா?
ஐய்யோ அவ சரியான ரூல்ஸ் ரங்கநாயகி..... ஷ்யாம் சொல்ல,
ஆமாம் சரியான HO.... மோஹன் சொல்ல
HO அப்படின்னா? என்று கேட்ட ஷ்யாமுக்கு Head office. இந்த புது பேரு
ரூல்ஸ் ரங்கநாயகி.... கூட நன்னா இருக்கு.....
மீரா, இவர்களின் கிண்டல், கேலி எதுவும் அறியாமல் வலி, மருந்தின் தாக்கம் தூக்கத்தில் ஆழ்ந்தாள்