நிறம் மாறிய நேசம் 21

Advertisement

Sarayu R

Member
Member
ஹலோ அடுத்த பதிவு இதோ.

உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளவும். உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகேற்றும்.


அடுத்த நாள் விஷ்வா வர, ஒரே பிசியாக ஓடியது.....
இரவு சாப்பாட்டுக்கு மீரா வீட்டிற்கு வந்த இருவரும்.....
மீராவின் வேலையை செய்து முடித்து விட்டு கிளம்ப,
மீரா ஏதோ சொல்ல வருவதை உணர்ந்த விஷ்வா, டேய் ஷ்யாமா நீ போ. நான் கொஞ்ச நேரம் கழித்து வரேன்.....
என்ன பாசமலர் பார்ட் 2?....
போடா....

என்னடா என்ன விஷயம்?.....
மெதுவாக நடந்ததை சொன்னாள்.

ஏற்கனவே எங்க ஆத்துல எல்லாரும் அவன் பக்கம். இப்போ இது தெரிஞ்சா....
தெரிஞ்சா..... வா? ஆல்ரெடி வீடியோ எல்லாருக்கும் போயாச்சு.
அது தான் குஷில இருக்கான்..... கேக் ஈஷல்.. வரை......

அதிர்ந்தாள்..... ஐய்யோ என்று தலையில் கை வைத்து உட்கார்ந்தாள்...

இது வெறும் நோம்பு சரடு என்று தூக்கி போட்டு விட்டு போனால் அங்க நடக்கற பஞ்சாயத்துக்கு பதில் சொல்ல முடியாது.
நான் இந்த தாலி, மஞ்சள், புருஷன் சென்டிமென்ட் பார்க்கற ஆளு இல்லை.

உடம்பு முடியாம போனப்போ ஹெல்ப் பண்ணினது அப்பறம் ஒரே ஆட்டம் தான்.
யாரா இருந்தாலும் ஹெல்ப் பண்ணி இருப்பேன். ஆனா ஷ்யாம் விஷயத்தில் கொஞ்சம் கூடவே சாப்ட் கார்னர் காட்டி விட்டேன்

சரி கவலை படாதே.....
நான் மார்ச் 31st தான் வரேன். அதுக்குள்ள என்ன பண்ண என்று யோசிக்கிறேன்.

விஷ்வாவிடம் ஷ்யாம் ஃப்ளைட் டிக்கெட் அப்கிரேட் பண்ணிய விஷயம் சொன்னான்.
டேய் நீ போற போக்கு சரி இல்லை...
பாவம் டா மீரா. இந்த மாதிரி டார்ச்சர் பண்ணாதே....
அப்பறம் சொல்லிடுவேன் ... எல்லாத்தையும் ....
சொல்லு எனக்கு என்ன கவலை?....

நீ மட்டும் இந்தியால பிரியா கூட ஒரே குஜால், நான் இங்க பக்கத்துல இருந்தும் .....

டேய் எனக்கும் பிரியாவுக்கும் கல்யாணம் ஆயாச்சு...
உன்னை விட நான் பெரியவன் வேற...
எல்லாம் ஒழுங்கா இருந்திருந்தா எங்களுக்கும் தான் கல்யாணம் ஆகி இருக்கும்.
டேய் உன்னை திருத்த முடியாது. நான் தூங்க போறேன்.

அவளை படுத்தாதடா...

அடுத்து வந்த நாட்களில் ஷ்யாம் இருக்கும் திசை கூட திரும்பவில்லை மீரா.
இந்தியா ஆபீஸ், அங்க செய்ய வேண்டிய வேலை பற்றி பிளானிங்ல நேரம் போனது.......
முதல் அத்தியாயத்தில் ஏர் போர்ட்ல நடந்ததை படித்தோம்.....

தோஹா வந்த பின் மீராவின் ஹேன்ட் லக்கேஜ்ஐ தானே தள்ளிக்கொண்டு வந்த ஷ்யாம்,
ஹே விஷ்வா மெஸேஜ்.....
மீராவும் பார்க்க,
மீரா, எவ்வளவோ முயற்சி பண்ணினேன். வேற வழி இல்லை.
பிரியா இப்போ தான் ரெஸ்டுக்கு (அபார்ஷனுக்கு அப்பறம்) அவ அம்மா ஆத்துக்கு போய் இருக்கா..... அண்ணா நகரிலிருந்து உனக்கு கம்யூட் கஷ்டம்.
திரும்ப சொல்லறேன் உன்னோட சேஃப்டிக்காக நான் வரும் வரை ஷ்யாம் ஆத்துல இருந்து போய் வா.

ஹோட்டல், ஹாஸ்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட் வேண்டாம்.
இந்தியா போனபின் காரணம் உனக்கு தெரிய வரும்.
நீ வெளில தங்கி, அது தெரிய வந்தால் உன்னோட உயிருக்கு ஆபத்து.....
புரிஞ்சுக்க பாரு.
அண்ணா

ஷ்யாம் சந்தோஷமலையின் உச்சியில் இருந்தான்....

வேதாளம் பெரிய உச்சாணிக் கொம்பை பிடித்துக்கொண்டது......

இதுவும் ஒரு சர்ப்ரைஸ் இல்லையா ஷ்யாம்?. எனக்கு தெரியவே தெரியாது என்று சொல்லாதே......

நீ, விஷ்வா எல்லாரும் ஒரே குட்டைல ஊரின மட்டை தானே.
நான் பெரிய ஆளு, என் சேஃப்டி, உயிருக்கு ஆபத்து, இன்னம் என்ன கதை பாக்கி இருக்கு!!!!!

உங்க எல்லாருக்கும் நான் ஒரு ஏமாளி.
எவ்வளவு ஏமாத்தினாலும் பொறுத்துப்பேன் வடிவேலு சொல்லரமாதிரி இல்லையா.....
11th ஹவர்ல சொன்னா எப்படி?

நான் சென்னை போய்ட்டு எங்க ஆத்துல இருந்து வர சொல்லறேன். ஏட்ரியம்ல தங்கிக்கறேன்......

அவள் முறைக்க அவன் முறைக்க, அடுத்த பிளைட் ஏறி சென்னை வரும் வரை அவள் பேசவே இல்லை.

சென்னை ஏர்போர்ட்டில்
2 செக்யூரிட்டிஸ் வந்து டிப்ளமேட் கவுன்டர் வழியாக வெளியில் வர, மீராவுக்கு ஒன்றுமே புரியலை.
வெளியில் வந்ததால் தமிழ்நாடு அரசின் ஜீப் நிற்க செக்யூரிட்டி வழி நடத்த இருவரும் ஷ்யாமின் புது வீட்டுக்கு வந்தனர்.
உள்ளே நுழையும் முன் சுமித்ரா ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்தாள்.
எதுவுமே புரியாமல் நின்ற மீராவை கட்டி அணைத்து சுமித்ரா, கிருஷ்ணா கண்ணா எப்படி இருக்க? உன்னை பார்த்து ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுத்தே.....

என்னை ஏன் இங்க கூட்டிண்டு வந்திருக்கேள்? யாரோட வீடு?....
நம்ம ஆம் தான்.
எனக்கு சீப் செக்ரேடரி புரொமோஷன் கிடைத்ததால் கவர்ன்மென்ட் குவாட்டர்ஸ். செக்யூரிட்டி பந்தோபஸ்து இருப்பதால் இப்போ உனக்கு நல்லது. அது தான் இங்க இருக்கோம்

வாவ் !!!!!!!
சீப் செக்ரேடரி பெரிய பதவி.
கங்கிராஜுலேஷன்ஸ்... அ.... அங்கிள்.....

என்னடா அங்கிள்?
கிருஷ் அப்பா..... அப்படி தானே கூப்பிடுவ?
அப்படி கூப்பிட உரிமை இல்லையே!!!!!
நான் என்ன பண்ண?.....

வந்தவுடனே ஆரம்பிச்சாச்சா? நீ திருந்தவே மாட்டியா? ஏண்டி மீரா இப்பிடி இருக்க?.....
ஒன்னோட லக்கேஜ் என்னோட ரூம்ல இருக்கு.... என்ற ஷ்யாமிடம்

நான் உன்னோட இருக்க மாட்டேன். வேற ரூம் வேணும்.
ஆமாம் மகாராணி என் கூட இருக்க மாட்டா......
ஷ்யாம் நான் பார்த்துக்கறேன் என்று சுமித்ரா சொல்ல,
வேற ஒரு ரூமில் மீராவின் லக்கேஜ் இடம் மாறியது.

அம்மா நான் கொஞ்சம் தூங்கரேன்!!!!!
ஃப்ளைட்ல தூங்க முடியலை.

ஆன்டி, நான் குளிச்சுட்டு வரேன்.
சாரி என்னால உங்க தூக்கம் போயிடுத்து. சாரி....

ஏதோ சொல்ல வந்த கிருஷ்ணாவை கண்ணால் சைகை செய்து
ஓகே ராஜாத்தி.... என்றாள் சுமித்ரா.

பாவம் அவளுக்கு ஒன்னுமே நடந்தது தெரியலை. புரிய வரை விட்டு பிடிப்போம். இதுல நம்ம புள்ளை வேற ஆடரான்....

குளித்து வந்த மீராவிடம்,
கண்ணம்மா நீ வந்தாச்சு என்று கௌரி , உன் அப்பா கிட்ட சொல்லு.
இங்க இருக்கேன் என்றும் சொல்லு.
நிறைய விஷயம் நடந்து விட்டது.
அதை சொல்லரோம். அப்பறம் நீ முடிவு பண்ணிக்கோ.....

பால் தரவா?.
இல்லை தலை வலிக்கிறது. காஃபி?
இரு கொண்டு வரேன்.
மூவரும் காஃபி குடித்துக்கொண்டே பொதுவாக பேசினார்கள்.
ஷ்யாமை அவனுக்கு முடியாத போது பார்த்துக் கொண்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்லவும்......

தூங்கவே முடியலை. நேக்கும் காஃபி.... என்று ஷ்யாம் சொல்லி வர,
அதற்குள் மீரா கௌரி சங்கரிடம் பேச எங்க தங்கி இருக்க?
ஓ. ..... ஷ்யாம் ஆத்துலயா?
சரி உடம்பை பார்த்துக்கோ, நைட் பேசலாம்........

என்ன ஆச்சு? யாருமே முந்தி மாதிரி இல்லையே!!!

ஹேய் மீரா, நீ ஃப்ரீ என்றால் நான் இந்த புராஜக்ட் பத்தி கொஞ்சம் நோட்ஸ், ஸ்லைடு ரெடி பண்ணி இருக்கேன். வந்து பார்த்து ஓகே யா என்று சொல்லு.....

நான் இங்க இருந்து பார்க்கறேன். எனக்கு அனுப்பு.......

முடியாது..... இங்க வா......

நான் வர மாட்டேன்.
அப்பறம் என்ன ஹேய், ஹோய்....
ஒழுங்கா கூப்பிடு.....
எனக்கு பேர் இருக்கு.....

எப்பிடி பொண்டாட்டி வாடி என்றா?

பொண்டாட்டி, கிண்டாட்டி என்றால் இருக்கு மவனே!.......
இருவரும் சண்டை போடுவதை பார்த்து சுமித்ரா, கிருஷ்ணன் தலையில் கை வைத்து அமர.....

டாட், இவளுக்கு ஸ்டீராய்டு ஷாட் போடணம். எந்த ஆர்தோ கிட்ட போக?இன்னிக்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்க முடியுமா?
இனிமே அவ பிஸி ஆயிடுவா. கை வலிக்கும் பாவம்.....
சரி டா....... பண்ணரேன்.

நீ வரியா? நான் வந்து.... கையை பிடித்து இழுக்கவா ? இல்லை தூக்கிண்டு வரவா?...

நீ ஒன்னும் வர வேண்டாம். நானே வரேன்......
இங்க உட்காரு என்று தனக்கு பக்கத்தில் கட்டிலில் காண்பித்தான்.

நான் இங்கேயே இருக்கேன் என்று கீழே அமர்ந்து ம்ம் குடு........

தன் செல் ஃபோனை குடுக்க....லாக் ஆகி இருக்கு. அன்லாக் பண்ணு....
நீயே பண்ணு.... Xxxxxxஇதுதான் பாஸ்வேர்ட்
சைபர் செக்யூரிட்டில இருந்ததுண்டு ஷேரிங் பாஸ் வேர்ட்.....
உருப்படும்...... தலையில் அடித்துக்கொண்டாள்.

இது என்ன வீடியோ?...

வாய மூடிண்டு பாரு.....
எல்லா கலகத்துக்கும் காரணமான நாள்!!!!!!
கதிர் ஆபீஸில் செய்த களேபரம், ஷ்யாம் தாக்கப்பட்டது, போலீஸ் வந்து எடுத்த ஆக்ஷன், கதிரின் அரெஸ்ட், அது தொடர்பான கோர்ட், வழக்கு, ஷ்யாமின் சர்ஜெரி, அந்த காலுடன் விசாரணைக்கு சென்றது, பெயிலில் வந்த கதிர் ஷ்யாம் வீட்டை அடியாட்களை வைத்து தாக்க, திரும்ப ஆபீசுக்கு கன் (gun) உடன் வந்து சுட, அதில் ஒருவர் தாக்கப்பட,
திரும்பவும் போலீஸ் , அரெஸ்ட் என்று போக.....
பார்த்துக்கொண்டிருந்த மீரா கண்ணில் கண்ணீர் பெருக்கெடுக்க....
எதுக்கு இதை நீ காமிக்கற? இதுவா நோட்ஸ்?
உனக்கு நடந்தது தெரிய வேண்டாமா? அதுக்கு தான்....
போறும் ...... பயமா இருக்கு....
அதுக்கு தான் பக்கத்துல உக்கார சொன்னேன்....
இரு நான் வரேன்....
அவள் அருகில் கால் நீட்டி அமர்ந்தான்...
பயத்தில் இருந்த அவள் கையை பிடித்துக்கொண்டு, ......
பாரு அப்போ எல்லா டவுட்டும் போகும்.....

கிருஷ்ணாவின் முயற்சியால் பெரிய லெவல் அதிகாரிகள் இறங்க, கதிரின் தந்தை மேல் இருந்த மற்ற குற்றங்களுக்காக கட்சி மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க,
அந்த வருத்தத்தில் அரசியல்வாதிகளுக்கு வரும் நெஞ்சு வலி வந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட, பெயிலில் வந்த கதிர் அவன் தந்தைக்கு இடையில் சண்டை பெரிய அளவில் வெடிக்க, கதிர் அவன் தந்தையை சுட, பாதுகாப்பு கருதி போலீஸ் கதிரை சுட, அங்கேயே கதிர் இறந்தான்.
கதிரின் தந்தையும் 2 நாட்களில் இறக்க, எந்த ஒரு இடத்திலும் மீரா, பெயர் வராமல் பார்த்துக்கொண்டனர்.
தந்தை , மகன் சண்டையை பணம், சொத்து, ஊதாரிதனம் என்று கொண்டு போனதால் இந்த வழக்கு வெளியில் வேறு விதமாக பார்க்கப்பட்டது.
கதிரின் வழக்கு விசாரணை ஆபீஸில் நடந்தது கதிரின் மறைவால் தள்ளுபடி செய்யப்பட்டது.....
மீரா ஓ என்று அழ, என்ன செய்கிறோம் என்று புரியாமல் பிரமை பிடித்து இருக்க, கை கால் பயத்தில் நடுங்க,
அதிர்ச்சி தாங்காமல்
ஷ்யாம் மடியில் படுத்து என்னால எல்லாருக்கும் கஷ்டம்...... ஒரே அழுகை.....
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது.
சாரி ஷ்யாம், என்னால தானே உனக்கு இப்படி ஆச்சு. இதுக்கு எல்லாம், நீங்க செய்த ஹெல்புக்கு நான் எப்படி பதில் சொல்ல போறேன்?
சாரி டா.....
அவளை மெதுவாக தடவி குடுத்து இனிமேல் ஒன்னும் பிராப்ளம் இல்லை!!!!!
இனிமேல் நீ அழக்கூடாது.

ஷயாமா நாங்க வரலாமா? சுமித்ரா, கிருஷ்ணா உள்ளே வந்து அவளை கட்டிக்கொண்டு எல்லாம் முடிஞ்சாச்சு. இனிமே எல்லாமே ஹாப்பி தான்.

எல்லாம் சரி இன்னும் ஒன்னு புரியலை. நீ ஏன்.... என்று ஷ்யாமை பார்த்தாள். சுமித்ரா, கிருஷ்ணாவிற்கு ரிங் விஷயம் தெரியுமோ, தெரியாதோ என்று சொல்லாமல், அவனையும் அவர்களிடம் மாட்டி விடாமல், அவனைப் பார்த்தாள்.

என்ன ரிங் விஷயமா? இவன் பண்ணின முட்டாள் தனம் என்று சுமித்ரா ஷ்யாமை ஒரு அடி போட்டாள்...

சும்மா இரு சுமி....
பாவம் ஏதோ நினைப்பில் பண்ணிட்டான். திட்டாதே!!!!!

இல்ல மீரா.... அவன் பார்க்க கழற்றி உன் கையில் குடுத்தா, என் மேல கோவமா இருப்பான் உன்னை விட்டு விடுவான். அப்பறமா உன்கிட்ட வந்து சொல்லிக்கலாம் என்று இருந்தேன்
அது முட்டாள்தனம் என்று இப்போ நினைக்கிறேன்.

முட்டாள்தனம் தான்!!!?!
நீ விலகினா அவனுக்கு வழி விடற மாதிரி தானே.....
அந்த பொண்ணை பாரு, எங்களுக்கு தெரியுமோ தெரியாதோ என்று ஜஸ்ட் உன்னை பார்த்து வார்த்தையை கூட முடிக்காமல்.....
என்ன ஆனாலும் எங்க மாட்டுப்பொண்ணு சமத்து தான்....

ஆமாம் நீங்க தன் மாட்டுபொண்ணு என்று சொல்லணம். அவளுக்கு நாம இப்போ அங்கிள், ஆன்டி ஆயிட்டோமே!!!! என்றாள் சுமித்ரா.

இதுவரை ஒரு மகாராணி மாதிரி ஷ்யாம் மேல சாய்ந்து அவன் அணைப்பில் உட்கார்ந்திருந்த மீரா... எழுந்து சுமித்ரா கிருஷ்ணாவை கட்டிக்கொண்டு
எனக்கு ஒண்ணுமே புரியலை. என்ன பண்ண தெரியலை. ஷ்யாம் மேல ஒரே கோவம். என்னை எவ்வளவு படுத்தினான் தெரியுமா? அப்பறம் நீங்க வேற கண்டுக்கவே இல்லை.
அப்போ நான் என்ன பண்ண? கண்ணை உருட்டி கேட்ட மீரா வை கட்டி முத்தமிட்டு, நீ இன்னும் குழந்தை தான்

உங்க பிள்ளைக்கு நான் வேண்டுமா வேண்டாமா தெரியலையே...அப்போ என்ன சொல்ல?

என்னது உனக்கு தெரியலையாடி பொண்டாட்டி என்று ஷ்யாம் அவளை கட்டி அணைத்து முத்தம் இட்டான்.

டேய் கொஞ்ச நாள் பொறுத்துக்கோடா. எங்க முன்னாடியே இப்பிடியா?.... இது ரொம்ப ஜாஸ்தி.....

இவ்வளவு நேரம் அவ எப்படி உட்கார்ந்து இருந்தா பார்க்கத்தானே செய்தேள்.... மாமனார், மாமியார் முன்னாடி இருக்கற மாதிரியா.....
நான் என்னமோ அவளுக்கு சிம்ஹாசனம் மாதிரி சாய்ந்து போஸ் குடுக்கறா.... மீராவுக்கு அப்போதான் உரைத்தது....
ஷ்யாம் நீ ஒன்னும் சிம்ஹாசனம் இல்லை. சிம்மம் தான்......

இன்னும் என்னை பிடிச்சு இருக்கா? மீரா கேட்க,

மூவரும் கட்டி பிடிக்க, சாரி மித்தும்மா, கிருஷ்ப்பா.....

எதுக்கு இன்னிக்கு வரும்போது ஆரத்தி எடுத்தேள்?
சுமித்ரா மீராவின் தோள் மீது கை வைத்து, டிரஸ்க்குள் மறைத்த சரடு செயினை எடுத்து, இதுக்கு தான்...
என்று கண்ணடித்தாள்....

வா வந்து விளக்கேத்து. வெட்கத்தில் சிவந்த மீரா எழ.....
யேய் சோம்பேறி குளிச்சுட்டு வாடா...

சரி நான் போய் ஸ்வீட் பண்ணரேன்.
நீங்க வாங்கோ என்று இருவரும் வெளியேறினர்.

தனிமையில் ஷ்யாம் மீராவிடம் எனக்கு கிக் வர மாதிரி saree கட்டிக்கோ. பிளீஸ்..
என்கிட்ட...இப்போ புடவை இல்லை. 2 தான் கொண்டு போனேன். அங்கேயே விட்டு விட்டு வந்துட்டேன்.
அப்பறம் இப்போ கை இருக்கற நிலையில் கட்டிக்க முடியாது.

நான் கட்டி விடறேன்....

டேய்.... என்ன டா ஒரேடியா போற?
சும்மி கிட்ட சொல்லவா?

இங்க வா... என்று பில்ட் இன் க்ளாசெட்
கிட்ட கூட்டிக்கொண்டு போனான்.....
எதற்கு?......
 

Advertisement

Advertisement

Back
Top