ஹலோ அடுத்த பதிவு இதோ.
உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளவும். உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகேற்றும்.
காலமும் நேரமும் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லையே....
புது வருஷம் பிறந்து எல்லோரும் நம்பிக்கையுடன் நாட்களை தொடங்க...
ஒரு சனிக்கிழமை பாட்டு கிளாஸ் போய் வந்து, டயர்ட் ஆக ஃபீல் செய்த ஷ்யாம் ஞாயிறு வெளியில் வரவே இல்லை!!!!!
திங்கள் மீரா வெயிட் பண்ணி பார்க்க வராததால் ஆபீஸ் போயிருப்பான் என்று எண்ணி ஆபீஸ் கிளம்பி விட்டாள்.
நல்ல மழை, குளிர், ஸ்னோ.... என்று மோசமான வானிலை.
எல்லோரும் ப்ளூ, இருமல், காய்ச்சல்....
என்று லீவில் இருக்க, மீராவுக்கு அதிகமான வேலை. கை வலி.....
வீட்டிற்கு வந்து ஷ்யாமிடம் ஏதோ கேட்க வேண்டும் என்று கதவை தட்டினாள்.
கதவு திறக்க இல்லை.
தன்னிடம் இருந்த எக்ஸ்ட்ரா கீயால் கதவை திறந்து பார்த்தால் ஹை ஃபீவரில் அனத்தி கொண்டு இருந்தான் ஷ்யாம்.
ஆபத்துக்கு பாவம் இல்லை என்று தொட்டு பார்த்தால், அனலாக கொதித்தது.
ஹரி இந்தியா போய் இருந்தான்.
2 நாளாக சாப்பிடாமல் டிஹைட்ரேட் ஆகி இருந்தான் ஷ்யாம்.
அவனுடைய மெடிகல் இன்சூரன்ஸ் கார்டு, ID எடுத்துக்கொண்டு மெதுவாக நடத்தி காரில் ஏற்றி அர்ஜெண்ட் கேர் கூட்டி போனாள்
( அமெரிக்காவில் மாலை 5 மணிக்கு மேல் உடம்பு சரி இல்லை எனில் எமர்ஜென்ஸி அல்லது இது போல் உள்ள அர்ஜெண்ட் கேர் தான் போக முடியும். வெள்ளிக்கிழமை மாலைக்கு மேல் எனில் மிகவும் கஷ்டம்.
நம்ம ஊரு போல டாக்டர்கள் தனியாக பிராக்டீஸ் பண்ணுவது, நள்ளிரவு வரை நோயாளிகளை பார்ப்பது கிடையாது.)
104 டெம்பரேசர். ப்ளூ. ட்ரிப்ஸ் போட்டு மெடிசின் குடுத்து வீட்டுக்கு வரும் போது மணி 10.
ட்ரிப் உபயத்தில் கொஞ்சம் தெளிந்து இருந்தான்.
ஷ்யாம் இங்கேயே இருங்கோ.
நான் சூப், ரசம் பண்ணரேன். அடிக்கடி
ஃபீவர் செக் பண்ணனும். 4 மணி நேரத்துக்கு ஒரு தடவை டேப்லெட் குடுக்கணம்.
அப்பறம் ஹை ஃபீவர் குறைய நெற்றில வாட்டர் பேட்ச் போட வேண்டும்.
உங்களை நான் பார்த்துக்கறேன். 2 அல்லது 3 டிரஸ் எடுத்துண்டு வரவா? நீங்க வர முடியுமா?
உங்க ID, இன்சூரன்ஸ் கார்டு உங்க வாலெட் ல இருந்து எடுத்தேன்.......
இல்லை நான் என்னோட இடத்தில் இருக்கேன்.
உனக்கு எதுக்கு கஷ்டம்?
நான் பாத்துக்கரேன்....
எப்படி? 2 நாளாக சாப்பிடாம, இருந்த மாதிரியா?.. .....
நான் ஒரு பிரெண்டா தான் ஹெல்ப் ....
நிற்க முடியாமல் தள்ளாடிய ஷ்யாமை பிடித்து கொண்டு
பிளீஸ் ஷ்யாம் சொன்னா கேளுங்கோ....
அடுத்த 1 மணி நேரம் சூப், ரசம், கஞ்சி , எல்லாம் பண்ணி, ஷ்யாமுக்கு டிரஸ் எடுத்து வந்து...... மீரா ஒரே பிஸி.....
ரசம் சாதம் சாப்பிட்டு முடித்து அப்படியே அவள் மேல் வாயிலெடுத்து விட,
கொஞ்சம் கூட அசிங்க படாமல் அந்த இடத்தை க்ளீன் செய்து, ஷ்யாம் டிரஸ் மாற்ற ஹெல்ப் செய்து பெட்ரூமில் ஷ்யாம் படுக்க, சோஃபாவில் சாப்பிடக் கூட தோன்றாமல் படுத்தாள்.
2 மணிக்கு எழுந்து பார்த்தால் திரும்ப ஹை ஃபீவர் இருக்க, டேப்லெட், கஞ்சி, ஜூஸ் குடுத்து கோல்ட் வாட்டர் பேட்ச் குடுத்து ......
திரும்ப 4 மணிக்கு ஹை ஃபீவர் இருந்ததால் கோல்ட் ஸ்பாஞ்ச் பாத் குடுத்து ஃபுல் டிரஸ் திரும்ப மாற்றி.....
ஷ்யாமுக்கு எதுவும் தெரியாத நிலை......
ஆபீஸுக்கு 3 நாட்கள் ரெண்டு பேருக்கும் லீவ் சொல்லி, முடியும் பொழுது தான் மட்டும் வீட்டில் இருந்து ஒர்க் செய்வதாய் ஈமெயில் அனுப்பி......
அடுத்த நாள் ஒரு ப்ரெண்ட் மூலமாக, அவர்களின் இன்சூரன்ஸ் நெட்வொர்க் கில் உள்ள டாக்டர் ஆபீஸ் போய் ஷ்யாமை காட்டி...
அடுத்த 3 நாட்களும் தாயாக,
தாதியாக..... மாறி.....
இடையில் ஷ்யாம் ரொம்ப பயந்து போக தன் மடியில் படுக்க வைத்து.... நாள் முழுவதும் கவனித்து கொண்டாள்.
குழந்தையாய் அவளை கட்டிக்கொண்டு அவள் மடியில் தூங்கினான்.....
நான் ஏன் இவ்வளவு செய்யறேன்? காதலா? மனிதாபிமானமா?.....
அன்பா? ஆசையா?.......பாசமா? நேசமா....?
மீரா மனதில் தடுமாற்றம்.....
விஷ்வா விடம் நடந்ததை சொன்னாள்.
ஷ்யாமை கொண்டு அவன் பேரெண்ட்ஸ் கிட்ட பேச வைத்தாள்.
சுமித்ராவும் கிருஷ்ணாவும் மீராவிடம்
பேசும் போது உணர்ச்சியில் தடுமாறினார்.
கண்ணம்மா, நாங்க பண்ணின தப்பை மன்னிச்சுடும்மா......
நான் யாரு உங்களை மன்னிக்க?.....
நீ எப்பிடிடா இருக்க?. எங்களை மறந்துட்டியா ராஜாத்தி?
அடி மனதில் எல்லாம் இருக்கு. அந்த நினைவுல.......
எதுக்கு அதெல்லாம்....
ஒரு ப்ரெண்டா, மனிதாபிமானத்துடன் நடந்துக்கரேன். அவ்வளவுதான்....
ரொம்பவும் சாதாரணமாக பதில் சொல்லி அவர்களை சமாதான படுத்தினாள்......
இன்னும் கொஞ்ச நாளுக்கு வெளில சாப்பிடாம நான் சமைக்கறதை சாப்பிட சொல்லுங்கோ. அது போறும்.
கௌரி, சங்கரிடமும் இங்கு நடந்ததை, ஒன்று விடாமல் சொன்னாள்......
இந்த உடம்பு சரியில்லாத நேரத்தில் வந்த இவர்களின் அன்யோன்யம் திரும்ப நல்லதே நடக்கும் என்று அனைவரும் எதிர் பார்க்க......
ஷ்யாம் இப்பொழுது மீராவிடம் கம்ப்ளீட் சரண்டர். அன்பு,ஆசை, காதல், நேசம், ...... சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் மீராவிடம் பெரிய மாற்றம் இல்லை. இடையில் ஒரு டான்ஸ் பெர்பார்மன்ஸ் வர, நிறைய பிராக்டீஸ்.மீராவின் டான்ஸ் புரோகிராமுக்கு முழு ஹெல்ப் செய்து அவளை உற்சாக படுத்தினான்.
புரோகிராம் முடிந்து கையில் braces போட்டுக்கொண்டு வேலை பார்த்தாள்.
ஷ்யாம், தான் கார் ஓட்டுவதாக சொல்லி கைக்கு ரெஸ்ட் குடுக்க முயற்சித்தான்....
மார்ச் 20 இந்தியா கிளம்ப டிக்கெட் புக் செய்தனர். பிரீமியம் எகானமி டிக்கெட். மீராவுக்கு தெரியாமல் அதை தன் கையில் இருந்து மேல்கொண்டு பணம் போட்டு பிசினஸ் கிளாஸ் ஆக்கினான் ஷ்யாம்.
மார்ச் 15 விஷ்வா வந்தான்.
இதற்கிடையில் மார்ச் 14th மீராவின் பர்த்டே வர ஷ்யாம் அவளுக்கு கிஃப்ட், பிளவர்ஸ், கேக் வாங்கி கொண்டு
அவளின் யூனிட்டுக்கு வந்து,
ஹேப்பி பர்த்டே மை கண்ணம்மா...... என்று சொல்லி வாங்கி வந்ததை அவளிடம் குடுத்தான்.....
நான் பர்த்டே கொண்டாட மாட்டேன்...
ஆனாலும் தேங்க்ஸ்.....
கேக் சாப்பிட மாட்டேன் ....
அம்மா தாயே உன்னை பத்தி தெரியாதா? இது eggless கேக் சாப்பிடலாம்.....
என்ன ஏதோ பூஜை பண்ணறயா?.
ஆமாம், இன்னிக்கு காரடையான் நோன்பு, அம்மா பண்ண சொன்னா. இந்த கையோட பண்ண முடியலை. ஜஸ்ட் பூ, பழம் தான். நோ அடை......
சரடு கட்டிக்கணம். முடியலை. அதனால உம்மாச்சிக்கு போட்டுவிட்டு வரேன்.
நான் கட்டி விடறேன் என்று அவள் யோசிக்கும் முன் அந்த சரடை கட்டி விட்டான். அதை கேமராவில் க்ளீன் ஆக ரெகார்ட் பண்ணி விட்டான்.
வா ரெண்டு பேரும் சேர்ந்து ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணலாம் என்று அவளுடன் நமஸ்கரித்தான்....
மஞ்சள் சரடு கட்டி மனைவி ஆக்கி கொண்ட நினைப்பு.
நீ ஏன் கட்டின? எங்க அம்மா தனக்கு தானே தான் கட்டிப்பா.
நான் கை முடியல, வேண்டாம் என்று இருந்தேன்....
ஏண்டி !!!!!பொண்டாட்டிக்கு யாரு கட்டுவா? எங்காத்துல அப்பா தான் அம்மாக்கு கட்டுவார்.
அது தான் நான் பண்ணினேன்.
இப்போ நீ எனக்கு சட்டப்படியும், சாஸ்த்ரப்படியும் பொண்டாட்டி .......
எனக்கே இது சர்ப்ரைஸ் ....
உனக்கு......?
டேய்!!! என் பர்த்டே அன்னிக்கு என்னை கோபப்பட வைக்காதே!!!! கொலைகாரி ஆக்காதே.....
சின்ன குழந்தைகள் விளையாடும் போது நீ அப்பா, நான் அம்மா என்று விளையாடும். அது என்ன நிஜமா? உண்மையா? அது மாதிரி தான் இது....
மீரா நீ என்ன, மௌனராகம் ரேவதி மாதிரி சொல்ல போறியா? அல்லது சின்ன தம்பி பிரபு வா?....
இது சரடு, தாலி இல்லை!!!!!... மீரா சொல்ல,
தங்கம் இருந்தா தான் தாலியா? இந்தா என்று தன் கழுத்தில் இருந்த செயின்ஐ மீரா கழுத்தில் போட்டான்....
வந்த கோவத்தில் அந்த கேக்கை அவன் முகத்தில் அப்படியே தேய்த்து விட்டாள்.
அவன் அவள் பக்கத்தில் வந்து, அவளை அணைத்து, அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அதை அவள் முகத்தில் அப்படியே தேய்த்து விட்டு, முத்தம் குடுப்பது போல ரசித்து அதை அவள் முகத்தில் இருந்து எடுத்து ருசிக்க தொடங்கினான்......
பிளீஸ் போடா...................
என்னை விடுடா...........
கண்ணம்மா, உன்னோட பர்த்டேக்கு எனக்கு நானே எதிர் பார்க்காத கிஃப்ட். நீ தான் டிஃபரண்ட் ஆச்சே. அது தான் நான் குடுப்பதற்கு பதில் நீ குடுத்து இருக்க....
ஐ லவ் யூ டி பொண்டாட்டி......
என்று சொன்னவாறு வெளியேறிய ஷ்யாமை பார்த்து தலையில் கை வைத்து உட்கார்ந்தாள் மீரா..... ..