HERE WE GO WITH THE 10TH EPISODE HAPPY READING IN LEISURE FRIENDS
அத்தியாயம் 10
அன்று கல்லூரியின் பார்வையாளர் நேரத்தில் சந்தியாவைச் சந்திக்க குடும்ப வக்கீல் நாராயணன் வந்திருந்தார்.
"என்னம்மா சந்தியா மூனு வருஷம் முன்னால உங்க தாத்தாவோட காரியத்தில உன்னைப் பார்த்தது. அப்புறம் இப்போ தான் மறுபடியும் பார்க்கறேன் பொண்ணு வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோம்பா உங்க மாமி. அது வாஸ்தவம் தான் போலிருக்கு எனக்கு மேல உசரமாய் வளர்ந்துட்டியே....."
சந்தியா பதிலே சொல்லாமல் வெறுமனே முறுவலிக்கவும் நாராயணன் அவளைப் பாராட்டும் விதத்தில் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
"உன் மாமா என்னவோ நீ ரொம்பச் சின்னப் பெண்ணாயிருக்கேன்னு கல்யாணத்தைத் தள்ளிப் போட்டான். இப்போ மட்டும் அவன் உன்னைப் பார்த்தான்னா இன்னும் ஏன் கல்யாணத்திற்கு நாள் குறிக்கலேன்னு உங்கம்மாவையும் என்னையும் பிடுங்கி எடுத்துடுவான். சரி தானே நான் சொல்றது?"
அவருடைய வேடிக்கைப் பேச்சு சந்தியாவிற்கு ரசிக்கவில்லை என்பதை புத்திசாலி நாராயணன் நன்றாகவே புரிந்து கொண்டார். சில நிமிட அமைதிக்குப் பின் மெதுவாய் கேட்டார்
" உன் தாத்தாவோட உயிலுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் உனக்கு இஷ்டமில்லையா சந்தியா? உன் அம்மா கூட உனக்கு இந்த ஏற்பாட்டில் அவ்வளவாய் ஈடுபாடில்லை என்று சொன்னதாய் ஞாபகம். அது நிஜம் தானா சந்தியா?"
என்ன பதில் சொல்வது என்ற தர்மசங்கடமான நிலைமையில் தவித்த சந்தியா பின்னர் மெதுவாய் சமாளித்துக் கொண்டு பதில் சொன்னாள்.
" நான் இன்னும் தீர்மானமாய் எந்த முடிவிற்கும் வரவில்லை அங்கிள். பிரச்னையைச் சந்திக்கும் நேரம் வர்றப்போ அதைப் பார்த்துக்கலாம்னு இருக்கேன். இப்போதைக்கு என் கவனமெல்லாம் படிப்பில் மட்டும் தான்....."
"தட்ஸ் குட்......."என்று அவளை சிலாகித்தார் நாராயணன்.
"நான் நினைத்ததைக் காட்டிலுமே நீ ரொம்பத் தெளிவாய் தான் இருக்கிறாய். ஆனால் ஒன்று மட்டும் உன்னிடம் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உன்னுடைய அம்மா தான் தன்னுடைய தகப்பனாரின் விருப்பத்தை நிறைவேற்றிவிடவேண்டும் என்று துடிப்புடனிருக்கிறாளே தவிர உன் மாமனுக்கு உன்னை மீறி எதுவும் செய்ய விருப்பமில்லை. இந்தக் கல்யாண ஏற்பாட்டை தறகாலிகமாய் மட்டுமில்லை நீ விரும்பினால் நிரந்தரமாகவும் நிறுத்திவிட உன் மாமன் தயாராய் தானிருக்கின்றான்......."
"அப்படி என்னிடம் சொல்லுமாறு மாமா உங்களிடம் தகவல் சொல்லி அனுப்பினாரா?"
ஏளனமாய் கேட்ட சந்தியாவைப் பார்த்து பதட்டத்துடன் பரபரத்தார் நாராயணன்.
"ஐயோ அப்படியெல்லாம் அவன் ஒண்ணும் நேரிடையாய் என்னிடம் எதுவுமே சொல்லலே சந்தியா. உங்க ரெண்டு பேரோட விட்டேற்றியான ஸ்பாவம் பார்த்து நானா ஊகிச்சது தான். என்னுடைய ஊகம் தப்பா சரியான்னெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியலே. ஆனால் ஒண்ணு மட்டும் நிச்சயம். நீங்க ரெண்டு பேரும் இணைந்தால், உங்கம்மா தாத்தாவோட நானும்
சந்தோஷப்படுவேன்றது நூற்றுக்கு நூறு நிஜம்......"
"பார்க்கலாம் அங்கிள்......அவசரத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டு பின் சாவகாசமாய் வருத்தப்படுவதாய் தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். அது போல் நான் அவசரப்பட விரும்பவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாய் சொல்வேன் அங்கிள். இந்தக கல்யாண ஏற்பாடு வேண்டுமானால் எனக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் மாருதி எஸ்டேட்ஸை எதற்காகவும் கை நழுவ விட நான் தயாராகயில்லை........"
"அப்படின்னா எஸ்டேட்டிற்காகவாவது உன் மாமனை மணந்து கொள்ளத் தயார் என்று சொல்கிறாய் அப்படித் தானே சந்தியா?"
"அப்படி எந்த உறுதிமொழியும் இப்பொழுது என்னால் தரமுடியாது அங்கிள்."
" ஏன் சந்தியா உன் மனதில் வேறு யாரையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாயா என்ன? இப்படி பிடி கொடுக்காமலேயே பேசுகிறாய்? எதாவது காதல் கீதல்னு.........."
நாராயணன் தூண்டிலை வீசிவிட்டுக் காத்திருந்தார். ஆனால் சந்தியாவோ கழுவுகிற நீரிலும் நழுவுகிற மீனாய் பிடி கொடுக்காமலேயே பேசினாள்.
" நீங்க வேற அங்கிள் ? இங்கே எனக்கு படிக்கும் பாடமே சமயத்தில் நினைவிற்கு வரமாட்டேங்குது. இதிலே காதல் கத்தரிக்காயெல்லாம் எங்கேயிருந்து நினைக்க? அப்படி எதுவும் நினைக்கவும் தான் ஏது நேரம்?"
சாதுரியமாய் பேசி வக்கீல் மாமாவைச் சமாளித்த மாதிரி பெற்றவளை சந்தியாவால் சமாளிக்க முடியவில்லை
அந்த வார இறுதியில் மகளைப் பார்க்க வந்த சத்யாவிடம் பெங்களூர் போவதாக சந்தியா சொன்னது தான் தாமதம், தன் வழக்கமான பல்லவியை ஆரம்பித்து விட்டாள் சத்யா
மகள் கோவையில் தங்கிப் படிப்பதே அவளுக்கு சம்மதமில்லையாம். தம்பி சொல்லி விட்டானே என்ற ஒரே காரணத்திற்காக அனுமதித்திருக்கிறாளாம். இதில் மாநிலம் விட்டு மாநிலம் படிப்பிற்காகத் தானென்றாலும் சந்தியா போவதில் அவளுக்கு துளியும் விருப்பமில்லையாம்
அம்மா வரிசையாய் இராகம் பாடாத குறையாகச் சொல்லிக் கொண்டே போக, சந்தியா தாள மாட்டாமல் காதைப் பொத்திக் கொண்டாள்.
"ப்ளீஸ்ம்மா........உன் ஆலாபனையை கொஞ்சம் நிறுத்திக்கோ....."
"இல்லே சந்தியா.......நான் என்ன சொல்ல வர்றேன்னா........"
"ஐயோ நீ எதுவுமே சொல்ல வேணாம்மா. மகளைப் பார்க்க வந்தோமா பார்த்தோமா அவகிட்ட நாலு வார்த்தை ஆசையாய் பேசினோமான்னு இல்லாமல் எப்பப் பாரு ஆயிரத்தெட்டு அறிவுரைகள்.... ஏம்மா நீ என்னைப் பற்றி உன் மனசுல என்ன தான்மா நெனச்சுட்டிருக்கே? தாயைப் போல பொண்ணுன்ற பழமொழிக்கேற்ப நானும் யாரையாவது காதலிச்சிருவேனோன்னு பயப்படறியா? அந்த பயத்துல தான் இப்படி ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் போடறியா? கவலையேபடாதே. உன் பொண்ணு காதல் மட்டுமில்லை
கல்யாணம் கூட தேவை தானான்னு யோசிக்க ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு........"
"என்னடி சந்தியா சொல்றே?"
சத்யா பதட்டத்துடன் நிமிர்ந்தாள்.
"உண்மையைத் தான்மா சொல்றேன். காதலிச்சுக் கல்யாணம் பண்ணி நீயெல்லாம் என்ன சுகத்தைக் கண்டுட்டே? அதெல்லாம் இல்லாமலேயே வாழ முடியாதா என்ன? நான் நல்லா படிச்சு எதாவது ஒரு துறையில் சாதனை பண்ணனும்னு நெனச்சிருக்கேன். அதனால இப்பொதைக்கு என் கவனமெல்லாம் படிப்புல மட்டும் தான் அதை நீ முதல்ல புரிஞ்சுக்கோ..."
வாய்ப்பேச்சில் சந்தியாவை யாரும் மிஞ்சியதாய் சரித்திரமேயில்லை.
அரை மணி நேரம் அம்மாவைப் பேசிப் பேசியே கரைத்து பெங்களூர் செல்வதற்கு அனுமதியும் வாங்கிய சந்தியாவிற்குத் சத்தியமாய் தெரியாது பெங்களூர் வாசம் அவள் வாழ்க்கையில் பல திருப்பங்களைக் கொண்டு வருமென்று.