HERE WE GO WITH THE 9TH EPISODE HAPPY READING IN LEISURE FRIENDS
அத்தியாயம் 9
கம்ப்யூட்டரில் ப்ரசெண்டேஷன் செய்வதற்காக ஒரு விஷயத்தை சந்தியா பவர்பாய்ண்டில் மும்முரமாய் தொகுத்துக் கொண்டிருந்த பொழுது, உள்ளே வந்த அவளுடைய அறைத் தோழி வந்தனா "ஹாய் சந்தியா உனக்கு ஒரு வாழ்த்து வந்திருக்கு "என்றாள்.
வேலையில் மும்முரமாய் இருந்த சந்தியா முதலில் அதை சட்டை செய்யவில்லை.
"ஏய் என்னப்பா நான் சொன்னது காதிலே விழுந்ததா இல்லையா?"
"ம் எல்லாம் விழுந்துச்சு. நான் முக்கியமான ப்ரசெண்டேஷன் வேலையில் இருக்கிறேன் வந்தனா. ப்ளீஸ் என்னை தொந்தரவு பண்ணாதே"
"ஒகே வாழ்த்து தானே? நான் பிரிச்சுப் பார்க்கட்டுமா?"
சந்தியா பதிலே சொல்லாமல் தலையை மட்டும் அசைக்கவும் வந்தனாவே அதைப் பிரித்தாள்.
"வொன்டர்புஃல் இப்படியரு ரசனையான வாழ்த்தை நான் பார்த்ததேயில்லை. உள்ளே நினைவிருக்கிறதா சந்தியான்னு எழுதியிருக்குப்பா ப்ரம் அட்ரெஸ்லயும் பெயர் முகவரி எதுவுமேயில்லை. யார் அனுப்பியது சந்தியா இது?"
சந்தியா சட்டென்று திரும்பிப் பார்த்தாள். வந்தனாவின் கையிலிருந்த வாழ்த்து அட்டையில் மொட்டாய் இரு ரோஜா நிற உதடுகள் முத்தமிடும் பாவனையில் குவிந்திருந்தன.
அவசரமாய் அதைக் கையில் வாங்கி மொட்டாய் குவிந்திருந்த உதடுகளைப் பிரித்துத் திறந்தபொழுது உள்ளே நினைவிருக்கிறதா சந்தியா என்ற வரிகள் அவளை நோக்கிக் கண்சிமிட்டின.
நொடியில் சந்தியாவிற்கு வாழ்த்து எங்கிருந்து வந்திருக்கும் என்று புரிந்து போயிற்று.
'இது அரவிந்தனின் வேலை. அவனைத் தவிர வேறு யாருக்கும் இப்படியரு கார்ட் அனுப்பும் தைரியம் வராது.
எதை நினைவிருக்கிறதா என்று கேட்கிறான்? அவனையா இல்லை அவனுடைய முத்தத்தையா?'
சந்தியாவின் முகம் கோபத்தில் சிவந்தது.
'என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இந்த அரவிந்தன்? இவனுடைய விளையாட்டிற்கு ஒரு அளவேயில்லாமல் போய்விட்டதே'
சந்தியாவின் முக மாறுதல்களை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்த வந்தனா அவள் கைகளைப் பற்றி அழுத்தினாள்.
"ஈஸி.....ஈஸி சந்தியா. ஒரு வாழ்த்துக்குப் போய் ஏன் இவ்வளவு கோபப்படறே? "
கையிலிருந்த வாழ்த்து அட்டையின் உள் விவரம் தெரியாமல் வந்தனா பேச, விஷயத்தை அநாவசியமாய் வெளியே விடுவானேன் என்று சந்தியாவும் தன்னை சமாளித்துக் கொண்டாள்
ஆனால் அறைக்குள் நுழைந்த மாலதியின் கண்களில் அந்த வாழ்த்து அட்டை விழவும், சந்தியாவிற்கு உள்ளூர உதறல் எடுத்தது. விஷயமில்லாமலேயே வெறும் வாயை மெல்லும் மாலதிக்கு இப்பொழுது கிடைத்திருப்பது அருமையான வாய்ப்பில்லையா?
சந்தியா பயந்தது சரிதான் என்பது போல மாலதியின் விழிகளில் விஷமம் விளையாடியது
"என்ன சந்தியா அரவிந்தன் ரூட் போடறாரா?"
மாலதியின் வார்த்தைகளில் வந்தனா பிரமித்துப் போனாள்.
"ஏய் மாலு என்னடி சொல்றே? யூ மீன் தெட் கை அரவிந்தன்........அன்னிக்கு கல்ச்சுரல்ஸ்ல சீஃப் கெஸ்டா வந்தாரே அவரா நம்ம சந்தியாவுக்குக் வாழ்த்து அனுப்பியிருக்கிறார்?"
"அவரே தான்.......அவரும் நம்ம அம்மிணியும் டூயட் பாட வேண்டியது தான் பாக்கி..."
" மாலூ......நீ ரொம்ப ஓவராப் போறேடி......"சுட்டு விரல் நீட்டி எச்சரித்த சந்தியாவை மாலதி லட்சியமே செய்யவில்லை.
"சும்மா நடிக்காதடி சந்தியா. உங்களுக்குள்ள எதுவும் விஷயமில்லாமலா அந்த மனுஷன் இப்படியரு கார்ட் அனுப்பியிருப்பார்? உங்கம்மா கிட்ட சொல்ல வேண்டிய வேளை வந்தாச்சுன்னு நினைக்கிறேன்.........."
'ஐயோ! வேறு வினையே வேண்டாம்.....அம்மா இது தான் சாக்கு என்று அவள் படிப்பை நிறுத்தி மாமனுக்குக் கட்டி வைத்து விடுவாள்.......'
சந்தியா சட்டென்று மண்டியிடாத குறையாய் மாலதியிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்
"ப்ளீஸ் மாலு.......அந்த ஆளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. எங்க ஊரு பண்ணைவீட்டுக்காரங்களுக்கு தெரிந்தவராச்சேன்னு தான் அன்னிக்கு அவனை நான் சந்திக்கப் போனேன் நம்புடி.... சும்மா நம்ம ஊர்க்காரனாச்சேன்னு பார்க்கப் போனால் ரொம்ப வரம்பு மீறி நடந்துகிட்டான் எனக்கு வந்த ஆத்திரத்தில் அவனை நல்லா திட்டிட்டு வந்துட்டேன் தெரியுமா? ஆனால் அந்த ராஸ்கலுக்கு எதுவுமே உறைக்கலே. மறுபடியும் என்கிட்ட சீண்டி விளையாடறான்"..
மாலதி அவளைப் பார்த்த பார்வையில் நம்பிக்கையில்லை
"நிஜமாகவே உங்களுக்குள்ளே ஒண்ணுமில்லேங்கறியா?"
"ஐயோ சத்தியமாய் மாலு....நான் ஏன் உங்கிட்ட பொய் சொல்லப் போறேன்? இப்போ இந்த கார்ட் கூட நானா அனுப்பினேன்? அவன் தானே அனுப்பி என்னைச் சீண்டறான்?"
" அப்போ சரி........."
அரை மனதோடு ஒத்துக் கொண்ட மாலதியின் கண்களில் குறும்பு கொப்பளித்தது.
"உனக்கும் அவருக்கும் இடையில் ஒண்ணுமேயில்லேன்னா, நான் வேணா முயற்சி செய்து பார்க்கட்டுமா?"
சந்தியா தலையில் அடித்துக் கொள்ள நினைத்து முடியாமல் தலையைத் தடவிக் கொண்டாள். வந்தனாவோ நிஜமாகவே தலையில் அடித்துக் கொண்டாள்.
"எங்கடா இன்னும் வழியலையேன்னு பார்த்தேன். ஆரம்பிச்சுட்டாப்பா.........."
"என்னவோ நீங்கல்லாம் ரொம்ப ஒழுங்கு மாதிரியும், நான் தான் வழியற மாதிரியும் ஓவரா சீன் காட்டாதிங்கடி. ஊமைக் குசும்பா இருக்கற உங்களை மாதிரி ஆளுங்களைத் தான் நம்ப முடியாது..... "
"ஐயோ போதுண்டிம்மா உன் வியாக்கியானம்....... நீ வந்த விஷயத்தைச் சொல்லிட்டு இடத்தை காலி பண்ணு......."
"என்ன நீ என்னை விரட்டறதிலேயே குறியாயிருக்கே?.....".என்று அதற்காக வேறு சண்டை போட ஆரம்பித்த மாலதியை சமாதானப்படுத்த சற்று நேரமானது.
" நான் சந்தோஷமான விஷயம் ஒண்ணு சொல்ல வந்தால், நீங்க ரெண்டு பேரும் அதைச் சொல்லவிடாமல் என் மனநிலையையே கெடுக்கற மாதிரிப் பேசறிங்க......"
"சரி சரி கோபிச்சுக்காதே மாலு. அதான் ஆயிரம் தரம் சாரி சொல்லியாச்சுல்லே? அப்புறம் என்ன? இப்போ சொல்லு........என்ன விஷயம்?"
வந்தனாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மீண்டும் கேள்வி கேட்டாள் மாலதி.
" இந்த வருஷம் ஐ விக்கு நாமெல்லாம் எங்கே போறோம்னு தெரியுமா? "
அவர்களுடைய கல்லூரியில் வருடந்தோறும் இண்டஸ்ட்ரியல் விசிட் என்ற பெயரில் எங்காவது பெரிய தொழிற்சாலைகளுக்கு மாணவமணிகளைப் பாரவையாளர்களாய் அழைத்து செல்வது வழக்கம்.. அதைத் தான் மாலதி குறிப்பிடுகிறாளென்று புரிந்து கொண்ட வந்தனாவும் சந்தியாவும் பார்வையாலேயே எங்கேயென்று கேள்வி கேட்க, மாலதியின் உற்சாகம்
இரு மடங்கானது.
"பெங்களூர்டி சந்தியா......த ஹைடெக் சிட்டி . கம்பெனி எது தெரியுமா? சொன்னால் இன்னும் ஆச்சரியப்படுவிங்க தி பேஃமஸ் மைக்ரோஷாஃப்ட்...
.நமக்கு ப்ராஜெக்ட் கைடன்ஸ் பண்ணப் போறது யார் தெரியுமா? ட்ட்டடாயிங்........அரவிந்தன்........."
சந்தியாவிற்கு இதயம் ஒரு வினாடி நின்று துடித்தது. இந்த செய்தியை நிச்சயம் அவள் எதிர்பார்க்கவில்லை.
யாரிடமிருந்து விலகி நின்றால் நல்லது என்று அவள் நினைக்கிறாளோ அவனிடமேயே கோர்த்து விடும் விதியை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.