Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாயகனோ நானறியேன் – நாயகன்3

Advertisement

Kokilavaniarjunan

Well-known member
Member
வெயில் தன் உக்கிரத்தை எல்லாம் காட்டி.. மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த மதிய நேரம்.. மகிழினி வீட்டில்.. வீட்டின் முன்புறத் திண்ணையில் அமிர்து அவ்வா பேத்தியோடு தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்.

தான் போட்ட ஐந்தை ஆறு தான் என மகிழினி சாதித்து பாட்டியின் நாயை வெட்டியிருந்தாள்.. ஹாலில் டிவியில் ஆழ்ந்திருந்த தாத்தா இரண்டு முறை வந்து எட்டிப் பார்த்துச் சென்றிருக்க.. ஏற்கெனவே பேத்தி கள்ளாட்டம் ஆடியதில் கடுப்பாக இருந்தவர்.. இவர் வரவும் "ந்தா.. எதுக்கு இப்ப பொண்ணு ஊட்டுக்கும் மாப்பிள்ளை ஊட்டுக்கும் நடக்கற மாதிரி நடந்துட்டு இருக்கிங்க.. பேத்தி வெளையாடற அழகப் பாத்து மெச்சிக்க வந்திங்களா" என இவர் மீது இறக்கி வைத்தார்.

"என்னவ்வா யாரு பொண்ணு வீட்டுக்கும் மாப்பிள்ளை வீட்டுக்கும் நடக்கறாங்க.. யாருக்கு கல்யாணம்" என கேட்டவாறே தன் பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு இவர்கள் அருகில் வந்தான் முகிலன்.

"நம்ப ஊட்டு கொமரன் தான்.. நானும் அப்ப புடிச்சு பாக்கறேன்.. குறுக்கையும் மறுக்கையும் நடந்துட்டே இருக்கார்" என பேரனிடமும் குறை பாட.. தாத்தாவைப் பார்த்தான் முகிலன்.

'நாம்பாட்டுக்கு சிவனேனு தானடா இருந்தேன்.. யார் வம்பு தும்புக்காச்சும் போனேனா' என இருவரையும் பாவமாகப் பார்க்க.. முகிலனுக்கு சிரிப்பு தான் வந்தது.. ஊரில் யாரும் தாத்தாவின் எதிர்நின்று கூட பேசத் தயங்குவர்.. இதுவரை அவன் அப்பாவே மரியாதையாகத்தான் பேசுவார்.. அவரை பாட்டி கிண்டல் அடிப்பதும்.. அதற்கு அவர் பரிதாப லுக் கொடுப்பதும் ரசிக்கும்படி இருக்க.. அங்கேயே அமர்ந்தான்.

மகிழ் சிரித்துவிட்டு தாத்தாவை தன் அருகில் அமர வைத்து.. அவளுக்கு உதவச் சொன்னாள்.. அவரும் அமர "இவளுக்கு நீங்க நாய் நகர்த்தப் போறிங்களா.. அதெல்லாம் தேவையே இல்லை.. அப்படியே ஊரை அடிச்சு சுருக்குப்பையில போட்ட உங்க சின்னாத்தா புத்தி.. அஞ்சு போட்டுட்டு ஆறு தான் போட்டேன்னே சாதிக்கறா" என்றார் ஆதங்கமாக.

"நீ ஜாக்கரதையா இருக்கோனும்.. விளையாட்டுன்னா எல்லாந்தான் இருக்கும்.. சரி சரி போடு" என அவரும் இவர்களுடன் சேர்ந்து கொள்ள.. மும்முரமாக விளையாடி.. சிலபல தகிடுதத்தங்களுடன் மகிழினி வென்றிருக்க.. தாத்தா அவ்வாவின் தீப்பார்வையை எதிர்கொண்டிருந்தார்.
அவளும் தாத்தாவும் வெற்றிக்குறி செய்து அவ்வாவை வெறுப்பேத்திக் கொண்டிருக்க.. சமையலை முடித்த தனம்.. ரகுவிற்கு சாப்பாடு எடுத்துச் செல்லுமாறு மகிழினியிடம் கூறினார்.

தாத்தா அவளைத் தடுத்து "வெயில்ல புள்ளையை போகச் சொல்ற.. முகிலா நீ ஒரு எட்டு பைக்ல போய் குடுத்துட்டு வா" என பேரனிடம் சொல்ல..
அவ்வா டென்சனாகி "உங்க பேத்திக்குத்தான் வெயில்லடிக்குது.. எங்களுக்கெல்லாம் நெலாக் காயுது.. எம்பட தங்கம் வெடியால இருந்து அல்லக்கன்னு அறுக்கறதைப் பாத்துட்டு இப்பத்தான் வந்துச்சு.. அவளையே போகச் சொல்லுங்க" என இருவரும் மாற்றி மாற்றி வழக்கடிக்க.. எப்படியும் இவர்கள் சண்டை ஓயாது என எண்ணிய தனம் மணியிடம் கொடுத்தனுப்பிவிட்டு.. ராகவனுக்கு சாப்பாடு பறிமாற உள்ளே சென்றுவிட்டார்.

முகிலன் மெதுவாக "படிச்சு முடிச்சுட்டில்ல.. அடுத்து என்ன பண்ணப் போற" எனக் கேட்க.. "வேலைக்குத்தான் போகனும் முகி" என்வளை இடையிட்டு "என்ன வேலை" என அவ்வா கேட்க.. அவரை முறைத்தவள் "ம்ம்.. உன்னை இப்படியே ஒரு ஃபோட்டோ எடுத்து அப்புடி வெளிய மாட்டி.. இங்கு பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை செய்யப்படும்னு போர்டு வைக்கப்போறேன்" என்றாள்.

முகிலன் அவளை முறைக்க.. தாத்தா "எழுத கூட வேண்டாம் கண்ணா.. இவ போட்டாவே போதும்.. கூட்டம் அள்ளும்" என்க.. பார்வையாலே இருவர் மீதும் நெருப்பை உமிழ்ந்த அவ்வா "வெகுநேத்தி தான் போங்க.. பேத்தி வர வரைக்கும் ஏரோபிளேன் மோடுல இருந்துட்டு.. இப்ப ப்போர் ஜி டவரு கிடைக்குதோ.. ரொம்பத்தான்" என டெக்னாலஜியை கலந்துகட்டி அடிக்க.. மகிழும் முகியும் அசந்து போயினர்.

முகி ஆச்சரியமாகி "எப்படிவ்வா.. இப்படி" எனக் கேட்க "இவ கூட பேச வாங்குன டச்சு போனு தானேடா நானும் ஊஸ் பண்றேன்.. இப்பல்லாம் மஞ்சள் ஒடிக்க ஆளு வாட்ஸ் அப்புல கூப்படறேன்" என்றார் பெருமையாக..

முகிலன் மீண்டும் "சரி சொல்லு கண்ணா.. என்ன பண்ணலாம்.. வேலைக்கு நான் எங்கயாவது பாக்கட்டுமா" என்க.. "இல்லடா.. நேத்து என் ஃப்ரெண்டு கிருத்திகா கிட்ட பேசினேன்.. நான் யுஜி படிச்ச காலேஜ்ல ஒரு வேகன்ட் இருக்காமா.. அதான் போய் ரெஸ்யூம் குடுத்துட்டு வரப் போறேன்.. அங்க இல்லைனா அப்புறம் பாத்துக்கலாம்" என்றாள்.

மூவரும் பேச தாத்தா ஏதோ யோசனையுடன் அவர்களிடம் இருந்து பிரிந்து.. தன் ஈஸி சேரில் அமர்ந்து.. விசிறியை வீசியபடி அமைதியாகிவிட.. தனம் வந்து சாப்பிட அழைக்கும் வரை பாட்டி பேரமக்கள் கூட்டணி கொட்டம் அடித்துக் கொண்டிருந்தது.

சாப்பிட்ட பின்.. நைனாவிடம் தயங்கி ரெஸ்யூம் கொடுத்து வருவதாக சொல்ல.. 'அவள் இத்தனை தூரம் மீண்டதே போதும்' என எண்ணிய ராகவன் தன் தந்தையைப் பார்க்க.. அவர் ஆமோதிப்பாய் தலையசைத்தார்.

'பொன்னென மலர்ந்த கொன்றை' என ஐங்குறுநூறு சிறப்பித்ததைப் போல.. பெருங்கொன்றையும், மயில் கொன்றையும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு.. மரத்தோடு இருந்த இலைகளை எல்லாம் மறைத்தபடி மஞ்சளும் சிகப்புமாய் மலர்ந்து.. நிலமகளின் மேல் கம்பளம் விரித்தாற் போலக் கிடக்க.. 'நானும் நானும்' என அவைகளோடு போட்டியிட்டபடி.. வேப்ப மரமும் தன் தேன் துளி சுமக்கும் சிறு வெண்பூக்களை சிதறவிட்டு.. மணம் பரப்பிக் கொண்டிருக்கும் ஏப்ரல் மாதத்தின் தொடக்கம்.

அந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நின்றிருந்தாள் மகிழினி.. ஏப்ரல் மாதத் தொடக்கம்.. அக்கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களுக்கு தங்கள் பட்டாம்பூச்சி காலத்தின் முடிவு.. கல்லூரி முழுவதும் இறுதி பரிட்சைக்காக பரபரப்பாக இருந்தாலும்.. சற்றே சோகத்தின் நிழலும் தெரியவே செய்தது.

தனது ரெஸ்யூமைக் கொடுக்க வந்திருந்தாள் மகிழினி.. சற்றே மாற்றங்களைக் கொண்டு இன்னும் மெருகேறி.. பொன்விழாக் கண்டு கம்பீரமாக நின்றிருந்தது அவள் படித்த அந்தக் கல்லூரி.
ஆஃபிஸ் ரூமில் தனது ரெஸ்யூமைக் கொடுத்துட்டு.. வெளியே வந்தவள் எதேர்ச்சையாக.. அவள் படித்த பிரிவின் துறைத்தலைவரைச் சந்திக்க அவரும்.. அந்த பாடப்பிரிவில் காலிப்பணியிடம் இருப்பதை உறுதி செய்து வாழ்த்திவிட்டுச் சென்றாள்.

இங்கே தானே அப்சர்வேஷனை வச்சுகிட்டு 'கடவுளே அந்த எக்ஸ்ப்ரிமெண்ட் மட்டும் வந்துடவே கூடாதுன்னு' வேண்டிகிட்டு லேப் ப்ராக்டிக்கல்ஸ்க்கு படிப்போம்.. 'இங்க தானே க்ரூப் ஃபோட்டோ எடுத்தோம்' என அழகிய நினைவுகள் பலவற்றைப் பரிசளித்த அந்த இடத்தை.. நின்ற இடத்தில் இருந்தே சுற்றிச் சுற்றிச் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கிருத்திகாவிற்கு ஃபோன் செய்துவிட்டு.. அவளுக்காக காத்திருந்தவாறே.. கம்பியைப் பிடித்தபடி நின்றிருந்தவளின் மோனத்தைக் கலைத்தபடி.. அந்தக் கார் வந்து நிற்கவும் அதிர்ந்தாள்.. அவளை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்க.. அதிலிருந்து இறங்கினான் ராஜா.. அவளை ஒரு கணம் கூர்ந்து கவனித்தானோ?? என இவள் எண்ணுவதற்குள் இவளைக் கடந்து.. அந்தக் கட்டிடத்தினுள் பிரவேசிக்க.. கல்லூரி முதல்வர் அவனை எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்.

நேற்று அவன் குரல் கேட்டபோதே சற்று அதிர்ந்தவள்.. இப்போது நேரில் பார்க்கவும் ரிக்டர் அளவிட முடியாத அளவு பூகம்பத்தில் சற்று ஆடிப்போனாள்.. அவளைக் கடந்து சென்ற அதிகபட்ச அந்த ஏழு அல்லது எட்டு வினாடிகளில் அவன் தோற்றத்தை முழுமையாக கண்களில் ஸ்கேன் செய்திருந்தாள்.

தன் கூலரைக் கழட்டி.. சுற்றி ஒரு பார்வை பார்த்து.. நிமிர்ந்து நடையுடன்
இவளைக் கடந்திருக்க.. அவன் வேட்டி சட்டை இவளை வெகுவாகக் குழப்பியிருந்தது.. நான்கு வருடங்கள் முன்பிருந்த சாக்லேட் பாய் கெட்டப் மாறி.. தற்போது பொறுப்பு கூடி.. வெள்ளை உடையில் ஒரு பெரியமனிதத் தனம் வந்திருந்தது.. இத்தனை யோசித்த தன் மூளையின் தலையில் கொட்டியவள் 'ஏன் இங்க வந்தான்' என பல்லைக் கடித்தாள்.

கிருத்திகா வந்துவிட தன் யோசனையை தற்காலிகமாக ஒதுக்கி அவளுடன் பேச ஆரம்பித்தாள்.. ஒரு கால்மணி நேரம் கழித்து பிரின்ஸிபலோடு பேசியபடி வெளியே வந்த ராஜா.. இவளும் தோழியும் பேசியபடி நிற்க.. ஒரு நக்கல் சிரிப்பை இவளைப் பார்த்து உதிர்த்தபடி அங்கிருந்து அகன்றான்.. அப்போதே மூளைக்குள் ஏதோ குடையத் துவங்கியது.

அவள் எண்ணம் சரி என்றபடியே.. தற்சமயம் காலிப் பணியிடம் இல்லை என்றும்.. நவம்பர் மாத செமஸ்டரில் வந்து பார்க்கச் சொல்லி பதில் கிடைக்க.. அவள் தோழி கிருத்திகாவிற்குத் தான் சங்கடமாகியது.. உறுதியாகத் தெரிந்த பின் தானே வரச் சொன்னோம்.. இப்படி ஆகி விட்டதே என.

தன் முகம் பார்க்க சங்கடப்பட்டவளைத் தேற்றி.. கேண்டினுக்கு அழைத்துச் சென்றவள்.. அவர்களையும் நலம் விசாரித்துவிட்டு.. ஸ்பெஷல் வடையும் வாங்கி.. அதை டீயில் தொட்டு சாப்பிட.. கிருத்திகா சிரித்தவாறே "இன்னும் இந்த லூசுத்தனமான பழக்கத்தை மாத்தலையாடி நீ" என வினவ
இல்லையெனத் தலையசைத்தவள் "வேற எங்கையும் நம்ம காலேஜ் டீ வடை மாதிரி இல்லைடி.. என்ன டேஸ்ட்" என கண்ணை மூடி ரசித்தவாறே சொல்ல.. அவள் தலையில் கொட்டியவள் "இப்படி கண்ணை மூடிகிட்டுத் தானே.. கம்ப்ளீட்டட் சைன் வாங்க எடுத்து வச்சிருந்த என் அப்சர்வேஷன் நோட்டை டீ குடிக்க வச்ச.. ஏ.டி மேம் இன்னும் அதை நியாபகம் வச்சு சிரிக்கிறாங்க தெரியுமா" என மூக்கை உறிஞ்சினாள்.

சற்று நேரம் இருவரும் கல்லூரியில் இவர்கள் அடித்த கூத்தை எல்லாம் ரிகலக்ட் செய்து பார்த்து மகிழ்ந்தார்கள்.. பின் ஒரு வழியாய் கிருத்திகாவிடம் விடை பெற்று.. பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்தாள்.

இங்கிருந்து செல்லும் வழியில் தான் தன் சின்னத்தாத்தா வீடு.. அதாவது ரகு அப்பா வீடு இருக்க.. கிளைப்பாதையில் பிரிந்து அங்கே சென்றாள்.

கிட்டத்தட்ட இவர்களின் வீட்டை ஒத்திருந்த அந்தப் பெரிய வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே வர.. அவள் தாத்தா ரங்க நாதன்.. வெளியே தோட்டத்திலேயே அமர்ந்திருந்தார்.

கயிற்றுக் கட்டிலில் இவளுக்கு முதுகு காட்டி அமர்ந்தபடி.. கட்டிலுக்கு கயிறு திரித்துக் கொண்டிருக்க.. சத்தம் காட்டாமல் மெதுவாக பின்னால் சென்று அவர் கண்களைப் பொத்த.. திடுக்கிட்டவர் "யாருடா அது.. நம்மகிட்ட" என பேசியபடியே கையை வருடியவர்.. அந்த வெண்பஞ்சு விரல்களின் ஸ்பரிசத்தில்.. பேத்தியை உணர்ந்து "கண்ணாயா" என உருகிய குரலில் அழைத்தார்.. அதில் தான் எத்தனை அன்பு.

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. போ.. நா உன் மேல கோபம்" என முகத்தை தூக்கி வைத்தபடி அருகில் அமர.. அவளது சின்னத்தாத்தா ரங்கநாதன் வாய்விட்டு நகைத்தார்.. தோற்றத்தில் அப்படியே நாராயணன் தாத்தாவின் பிரதிபலிப்பு.. ஆனால் என்னவோ வயதை மீறிய ஒரு தளர்வு.

"எம்பட கண்ணனுக்கு என்ன கோவமாம் தாத்தா மேல" என அவள் தாடை பற்றிக் கொஞ்ச.. கையைத் தட்டிவிட்டவள் "நான் வந்து நாலு நாள் ஆச்சு.. நீ என்னை வந்து பாத்தியா.. உனக்கு இருக்கறது நான் ஒரே பேத்தி.. கொஞ்சங்கூட உனக்கு என்மேல பாசமே இல்லை" என முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அதற்கு சின்னத் தாத்தாவோ "எங்கண்ணன் மூஞ்சியில முழிக்கிற மாதிரியா இந்தப்பய பண்ணி வச்சிருக்கான்.. நான் அவரை எதிர்த்தாப்ல பாத்தே நாலு வருசம் ஆச்சு.. முன்னால விட்டு பின்னாடி பாக்கறேன்.. நான் பண்ண தப்பை தான் என் பையனும் பண்ணி.. இப்ப குடும்பமே தனியாக் கிடக்குது" மெல்லிய சோகம் இழையோடிய குரலில்.

அவரை முறைத்தவள் "சித்தப்பாவை ஒன்னும் சொல்லாதே.. நாலு நாளா அங்க தோட்டத்து வீட்ல இருக்காரு.. நீ என்ன ஏதுன்னு விசாரிச்சியா.. எப்படியோ போன்னு விட்ட தானே.. பாவம் அவரு.. எல்லாரும் அவரையே குறை சொன்னா.. தெரிஞ்சு தப்பு பண்ணவன் எல்லாம் சுதந்திரமா திரியறான்.. ஆனா என் சித்தப்பா மட்டும் எல்லார் கண்ணுக்கும் விரோதி" என்றாள் கண்களில் நீர் திரள.

அவரும் அமைதியாகிவிட.. அதை கலைக்கவென்ற "அட யாரு பேத்தியா வந்திருக்கா.. சொல்ல மாட்டிங்களா" என்றவாறே வந்தார் மங்கை.. ரங்க நாதன் தாத்தாவின் மனைவி.. அவர் மகிழினியைப் பார்த்த பார்வையில் அவ்வளவு இளக்காரம், போலி பாசம், நக்கல்.

அதை உண்மையென நம்பிய தாத்தாவும் "ஆமா மங்கை.. கண்ணாளுக்கு எதாவது சாப்பிட குடு.. புள்ளை வெயில்ல வந்திருக்கு பாரு" என அவள் எங்கு சென்று வந்தாள் என விசாரித்தவர் "சேரிடா.. நானும் எனக்குத் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வைக்கிறேன்" என்கையில் மங்கை பாட்டி மோர் கொண்டு வர.. மறுத்தால் தாத்தா சங்கடப்படுவார் என அதை பருகினாள்.

நேரம் ஆவதை உணர்ந்து அவரிடம் விடைபெற.. சரியாக அந்நேரம் உள்ளே நுழைந்தான் முத்துக்குமரன்.. மங்கை பாட்டியின் பேரன்.. போலீஸ் யூனிஃபார்மில் வந்தவனைக் கண்டவள் அசிரத்தையாக முகத்தை சுழிக்க "என்ன மகிழு எப்ப வந்த.. நல்லாருக்கியா" என வினவினான்.

இவளும் தலையசைத்து நகரப் பார்க்க "என்ன மாமா கூட பேசாமையே போற" என தடுத்தவனை முறைத்தவள் தாத்தாவைப் பார்க்க.. தாத்தா மங்கையை நோக்கி ஒரு கண்டிப்பான பார்வையை செலுத்தினார்.

அதில் அரண்ட இருவரும் நகர.. அவள் தாத்தாவின் செயலில் திருப்தி அடையாமல் 'இப்ப திருந்தி என்ன பண்ண' என்ற லுக்கில் அவரை கடந்து விட.. வீட்டின் வாசலில் அவளை வழி மறித்தனர் பாட்டியும் பேரனும்.

மங்கை பாட்டி பட்டும் வைரமுமாய் மின்னியதையும்.. குமரனின் லட்சங்களை விழுங்கி ஒய்யாரமாய் நின்றிருந்த பைக்கையும் கண்டவளுக்கு ரத்தம் கொதித்தது.. இவர்கள் இப்படி இருக்க.. அங்கே தன் சித்தப்பா சாப்பாட்டை பசியில் அள்ளி சாப்பிட்டது நினைவு வர கண்கள் தாமாகக் கலங்கியது.

இருவரையும் உக்கிரமாக முறைத்தவள் 'என்ன' என்பது போலப் பார்க்க.. குமரன் தான் "லேட் ஆச்சே.. நான் வேணா கொண்டு வந்து வீட்டில விடவா" என ஜம்பமாய் கேட்க.. அவனை தீர்க்கமாகப் பார்த்தவள் "எனக்கு போக வழி தெரியும்.. நீங்க உங்க வேலையைப் பாருங்க" என வெட்டி விட..

மங்கை "ஏம்மா என்ன தப்பாக் கேட்டான்.. கொண்டு போய் விடட்டுமான்னு தானே.. அதுக்கு ஏன் சில்லுனு சண்டைக்கு வர.. ஏன் உரிமை இல்லையா அவனுக்கு" என கேட்க..

இதழ்கள் ஏளனமாய் வளைய "உரிமையப் பத்தி நீங்க எல்லாம் பேசாம இருக்கறது தான் நல்லது.. அப்புறம் நான் பேசினா காதுல கேட்க முடியாது ஆமா.. உரிமைப்பட்டவர் அங்க பரதேசியா திரிய.. இங்க நீங்க வாழ்ந்துட்டு இருக்கிங்க.. கொஞ்ச நாளைக்குத் தான் உங்க ஆட்டம் எல்லாம்.. அதுக்குள்ள எவ்வளவு முடியுமோ.. அவ்வளவு ஆடிக்கோங்க" என எடுத்தெறிந்து பேசிவிட்டு நகர.. மங்கை கோவமாக அவள் சென்ற திக்கைப் பார்த்துவிட்டு பேரனைப் பார்த்தார்.

அவனோ ஒருவித மயக்கத்துடன் அவளைப் பார்த்தபடி நிற்க.. காண்டானவர் "என்னடா அந்தப் பொடுசு இந்தப் போடு போடுறா.. நீ பல்லிளிச்சுட்டு நிக்கற" என்க.. அதே இளிப்புடன் "என்ன பொண்ணு அம்மத்தா.. செமயா இருக்கா.. நாலு வருஷத்தில இன்னும் அழகா மாறிட்டா.. எனக்கு இவளை கட்டி வை அம்மத்தா" என்றான்.

அவன் பேச்சில் அதிர்ந்தவர்.. சுற்றும் முற்றும் பார்த்தபடி "அடேய் வாயை மூடு.. நானே இந்த சொத்து உனக்கு கிடைக்க இல்லாத தகிடுதத்தம் பண்றேன்.. இதுல இவ வேணுமா உனக்கு.. எல்லாம் தெரிஞ்சும் கேட்டா நான் என்னடா செய்வேன்" என புலம்பினார்.

அவரை அலட்சியமாகப் பார்த்தவன் "ஏன் நான் கேட்கக் கூடாது.. நல்லா படிச்சு இங்கையே சப் இன்ஸ்பெக்டரா இருக்கேன்.. எனக்கென்ன குறைச்சல்.. சொத்து வச்சு என்ன புண்ணியம்.. இப்படி ஒரு பொண்ணு சிக்குமா.. ஆக வேண்டிய வேலையப் பாரு" என உள்ளே சென்றுவிட.. 'அவளை கட்டினா அந்த சொத்தும் வருமே' என லாபக் கணக்கு போடத் துவங்கினார் வைதேகி.

தோழியை சந்தித்ததில் மனம் சற்றே லேசாகி இருந்தாலும்.. பிரித்துப் பார்க்காத.. பார்க்க பயந்த ஒரு சில கடந்தகாலப் பக்கங்களை.. நினைவுப் புத்தகம் அவள் அனுமதியின்றி புரட்டத் துவங்கியது.
யோசித்தவாறே இருந்தவள்.. நேரம் போவதைக் கூட உணராமல்.. அப்படியே அமர்ந்திருக்க.. "கண்ணா.. கண்ணா" என பாட்டியின் அழைப்பு அவளை நினைவுக்குத் திருப்பியது.

தன் அறையில் இருந்து வெளியே எட்டிப் பார்க்க.. அவளது தோழி முத்தமிழும் அவள் தந்தை ராஜவேலுவும் வந்திருந்தனர்.. முகத்தை சீர் படுத்தியவாறு வெளியே வந்தவள் வந்தவர்களை வரவேற்று.. முத்துவின் அருகில் வந்து "வாடி.. நல்லாருக்கியா" என கேட்க..

அவளை முறைத்தவள் "எங்களை எல்லாம் நியாபகம் இருக்கா.. வந்து ரெண்டு நாள் ஆச்சு.. என்னைப் பாக்கத் தோணுச்சா உனக்கு.. என்னவோ நேத்து குடிசைக்குள்ள உட்கார்ந்தவ மாதிரி உள்ளையே இருக்க.. ஆனா காலேஜ்க்குப் போய் அவளை மட்டும் பாக்கத் தெரியுது" என கரித்துக் கொட்டினாள்.

அவள் தாடை பற்றி "சாரிடி.. இப்பையே ஏப்ரல் ஸ்டார்ட் ஆகிடுச்சு.. அடுத்த
மாசம் எல்லா காலேஜூம் லீவ்.. அதான் ரெஸ்யூம் குடுக்க நம்ப காலேஜ்க்குப் போனேன்.. இன்னைக்கு சாயங்காலம் நானே உன்னைப் பாக்க வரனும்னு நினைச்சேன்" என கெஞ்ச

"நீ சொன்னா நம்பிக்க வேண்டியது தான்.. என்னைப் பாக்க நேரம் இல்லை.. அவளைப் பாக்க இருக்கு" என முத்து கத்திக் கொண்டிருக்க.. முகிலன் வரவும் கப்சிப் ஆகிவிட்டாள்.

இவர்கள் சண்டையிட்டு சமாதானம் ஆகி முடித்திருக்கவும்.. அதற்குள் அவ்வாவும்.. ஊர் விஷயம் அனைத்தையும் ராஜவேலுவிடம் இருந்து வாங்கி இருந்தார்.. பின் மெதுவாக வந்த விஷயம் பற்றிக் கேட்க.. முத்து சொன்னாள்.. அவள் கூறியதைக் கேட்டு.. பாட்டியும் தாத்தாவும் இவள் முகம் பார்க்க.. இவள் எதுவும் தோன்றாமல் அமைதியாக நின்றாள்.

விஷயம் இது தான்.. முத்து சாரதா வித்யாஸ்ரமம் பள்ளியில் தான் மேல்நிலை ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறாள்.. தற்சமயம் அங்கு இயற்பியல் ஆசிரியர்ப் பணி காலியாக இருப்பதால்.. அவளை விண்ணப்பிக்கச் சொல்ல வந்திருந்தாள்.

'அப்போ காலேஜ்க்கு அவன் வந்ததுக்கும்.. இப்ப முத்து சொல்றதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா.. இல்லை நாந்தான் ஓவரா யோசிக்கிறேனா.. திரும்பவும் அவன் முன்னாடி போய் நிக்க முடியுமா' அவளுக்கு இரு கைகளால் தலையை சொறிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது.
சுற்றிலும் அனைவரும் இருக்கிறார்கள் என்ற நினைவில் தலைக்கு கொண்டு சென்ற தன் கையை.. காதணியின் திருகாணியை அட்ஜஸ்ட் செய்வது போல மாற்றிவிட்டு நிமிர.. அனைவரின் பார்வையும் இவளைத் தான் துளைத்தது.

'என்ன லுக்கு.. அவன் இருக்க திசைப் பக்கமே நான் தலை வச்சுப் படுக்க மாட்டேன்.. இப்பவே போய் பில்லி சூன்யம் எப்படி வைக்கறதுன்னு கத்துக்கப் போறேன்' என அவசரமாக அவள் அப்சரா பென்சில் கொண்டு மனதில் எழுத.. உள்ளே வந்த அவளின் தந்தை அதை நட்ராஜ் எரேசர் கொண்டு
வரக்கு.. வரக்கென்று ஒரே வார்த்தையில் அழித்துவிட்டார்.

உள்ளே வந்த ராகவன் தன் தந்தையிடம் "வேலு நேத்தே சொன்னான் நைனா.. எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.. சரி எதுக்கும் உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்க வரச் சொன்னேன்" என பணிவாகக் கூற.. தாத்தா யோசனையுடன் பேத்தியைப் பார்த்தார்.

"என்னங் மாமா யோசனை.. பழசெல்லாம் நினைச்சு வருந்தாதிங்க.. வேலை தானே.. அதைத் தவிர நம்ம புள்ளைக்கும் அவங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. படிச்ச படிப்பு வீணாப் போகக் கூடாது பாருங்க மாமா" என்றார் வேலுவும்.

அமிர்து அவ்வா தாத்தாவிடம் "அதான் எல்லாம் ஏற்கனவே முடிஞ்சு போச்சே.. தெரிஞ்ச இடம், பக்கத்துலயே இருக்கு பள்ளிக் கூடமும்.. புள்ளை பத்தரமா போய்ட்டு பொழுதோட ஊடு வந்துரும்" என்றார் அவர் பங்குக்கு.

'இவங்களுக்குப் பைத்தியம் பிடிச்சுப் போச்சா.. இத்தனைக்கு அப்புறமும் அவன்கிட்ட.. ச்சே அவர்கிட்ட வேலைக்கு போகனுமா.. என் நிம்மதியை குழி தோண்டிப் புதைக்கப் பாக்கறாங்க' என அவள் மனதில் குமுறியது யாருக்கும் தெரியாமல் போனது.

முகிலனாவது தனக்கு உதவுவான் என அவனைப் பார்க்க.. அவனோ ராஜவேலிடம் முக்கியமாக எதையோ கேட்டுக் கொண்டிருக்க.. மகிழ் பல்லைக் கடித்தாள்.

அதே போல அங்கே முத்துவும் மனதில் பல்லைக் கடித்தாள்.. வந்ததில் இருந்து இவளை ஒரு மனுசியாகக் கூட கண்டு கொள்ளாமல் தன் தந்தையிடம் ரொமேன்ஸ் பண்ணும் அவனை என்ன செய்வது என முறைத்தவள்.. மகிழின் அன்னையிடம் 'மஞ்சள் ரோஜாச் செடி குச்சி வேணுங்கத்தை' என பேசத் துவங்கிவிட்டாள்.

என்னென்னவோ வாக்குவாதங்களுக்குப் பிறகு.. ஏகமனதாய் அவளும் அவள் நைனாவும் பள்ளியில் சென்று பார்க்க முடிவாகியது.. முத்துவும் அவள் தந்தையும் விடைபெற்றுச் சென்ற பிறகு.. இவள் மறுத்து வாயைத் திறக்க 'தனம் அந்த ஜாதகத்தை எடுடி' என அவ்வா விசு ஸ்டைலில் கேட்க.. அவள் அமைதியானாள்..

பின்னர் அவ்வா.. அங்கு மாட்டியிருந்த மாத நாட்காட்டியைப் பார்த்து "நாளைக்கு புதன்கிழமை தான்.. எந்த நாளும் நட்சத்திரமும் பாக்கத் தேவையில்ல.. நாளைக்கே போய்ட்டு வந்துருங்க" என்க.. அவர்களை முறைத்தவள் (நைனாவை இல்லை) அமைதியாக தன் அம்மாவைத் தேடிச் செல்ல.. தனம் சரி செய்துவிடுவார் என்ற நம்பிக்கையில் மற்றவர்கள் நிம்மதியாக மூச்சுவிட.. அவ்வா தன் ஸ்மார்ட் ஃபோனை எடுத்தபடி.. பின் வாசலுக்குச் சென்றார்.
நாயகன் வருவான்...
 
எல்லாரும் எல்லா பக்கமும் fence போட்டாச்சு!
 
Top