Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நலங்கிட வாரும் ராஜா - 9

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 9

வாழ்கை தெளிந்த நீரோடையாய் போனால் யாருக்கு தான் சந்தோசம் இருக்காது. மதுஸ்ரீ எழிலரசனுக்கும் அப்படித்தான் ஆனது. மனம் தெளிந்த பின்னே இடைவெளிக்கு இடமில்லையே. நாலொரு கொஞ்சலும், பொழுதொரு கெஞ்சலுமாய் சென்றது அவர்களுக்கு.

அவளை தொல்லை செய்யாமல் விடியலில் எழுந்து அவன் கிளம்பினால், அவன் அசைவு கண்டே மதுஸ்ரீ முழித்து விடுவாள். அவன் குளித்து கிளம்பி வருவதற்குள் இவள் கையில் காப்பி டம்பிளரோடு நிற்பாள்.

“என்ன மது உன் தூக்கம் கெட கூடாதுன்னு தானே நான் மெல்ல எழுந்து வந்தேன்..” என்று புன்னகை மாறாமல் அவன் கேட்க,

“ஏன் புருசனுக்கு காலங்காத்தால காப்பி போட்டு குடுக்கனும்னு எனக்கு ஆசை...” என்பாள் அதே சிரிப்போடு.

“ம்ம்ஹும்.... வேற எதெல்லாம் குடுக்கனும்னு ஆசை...” என்று மதுவை எழில் பிடித்து இழுத்தால், அவனை தள்ளாத குறையாய் கடைக்கு அனுப்பி வைப்பாள்.

அதன்பிறகு அவளுக்கும் என்ன வேலை இருக்க போகிறது. வேதாச்சலம் எழும் வரை, மெத்தையில் உருண்டபடி இருப்பாள். நினைத்து பார்க்க இனிப்பான தருணங்கள் நிறைய இருந்து. அனைத்திலுமே எழில் வந்து புன்னகை புரிவான்.

எத்தனை அழகான வாழ்கை அவர்களுடையது. நிச்சயம் இது போன்றொரு வாழ்வை மதுஸ்ரீ எதிர்பார்க்கவில்லை. நாட்கள் ஆக ஆக, வயது கூட, திருமணம் நடக்குமா என்பதே பெரிய விசயமாய் இருந்திட, இதில் மனமொத்த வாழ்வை அவள் நினைத்து கூட பார்க்கவில்லை.

ஆனால் இத்தனை வருட காத்திருப்பிற்கும் பலனாய் எழிலரசன் அவளுக்கு கணவனாய் வந்தது நிச்சயம் அவள் செய்த பாக்கியம் தான்.வாழ்க்கை இதே இனிமையோடு பயணிக்க எழிலின் மனவோட்டமோ மதுவை விட மகிழ்ச்சியாய் இருந்தது.
அவனை பொறுத்தமட்டில் வீட்டில் அமைதியான, மிதமான சூழ்நிலை இருந்திட வேண்டும். சிறு வயதில் இருந்தே அவன் எதிர்பார்ப்பு இது ஒன்று தான்.

ஆனால் மதுஸ்ரீ வந்தபிறகோ வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை. மனதில் சிறு சஞ்சலம் தோன்றினாலும் எத்தனை அழகாய் கையாள்கிறாள். தேவையில்லாத கூச்சல் குழப்பம் இல்லை.

ஏது பேசினாலும் புன்னகையோடு பதில் சொல்லி, அனைத்திற்கும் மேலாய் வேதாச்சலத்தை அவள் வித்தியாசமாய் நினைப்பதே இல்லை. பேச்சுக்கொரு தரம் தாத்தா தாத்தா என்று அவரையும் இழுத்து, இதையெல்லாம் நினைக்கும் பொழுது எழிலுக்கு மனதில் மதுவின் மேலிருக்கும் பிடிப்பு இன்னும் இன்னும் அதிகமானது.

அவளுக்காகவாது அவனது கால்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று எண்ணினான். முன்னை விட அதற்காக கடினமாய் முயற்சித்தான்.

மதுஸ்ரீ கூட அவனை திட்டிவிட்டாள், “என்னங்க இப்ப எதுக்கு இவ்வளோ கஷ்டபடுறீங்க.. சரியாகும் போது சரியாகட்டுமே...” என்று சொன்னால் அவனோ கேட்கும் ரகமா.

“இதெல்லாம் முன்னமே செஞ்சிருக்கணும் மது. எதோ ஒரு எண்ணம் மெதுவா செய்வோம்னு இருந்துட்டேன்.. இனியும் அப்படி இருக்க முடியுமா?? ஆரம்பத்துல கொஞ்ச வலிக்கும்னு சொல்லிதான் இருக்காங்க...”

“அதெல்லாம் சரி இப்போ என்ன அவசரம்...??”

“அவசரம் இல்ல அவசியம்..” என்றவனுக்கு அவளது பார்வையும் முகமும் என்ன உணர்த்தியதோ, “என்ன மது இப்போ எதுக்கு டென்சன் ஆகுற...??” என்று அவள் கைகளை பிடித்து தன்னருகே அமர்த்தினான்.

“நீங்க ஏன் இவ்வளோ சிரமப்படுறீங்க??” என்றவளும் அவனது கைகளை பிடித்துக்கொண்டாள்.

“இதெல்லாம் சிரமமா??? இதை விட கஷ்டமான சூழ்நிலை எல்லாம் நான் பார்த்திருக்கேன் மது.. அதுக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமேயில்ல... இந்த அடி படும்போது இருந்ததை விட இப்போ இருக்க வலி கம்மிதான். இதுவும் கூட கால் சரியாக தானே...”

“ம்ம்ம்.....”

“என்ன டா??? எதுக்கு இப்போ சோக கீதம் பாடுற..??”

“இல்ல. ஒண்ணுமில்ல.. நீங்க வலியில கண்ணை மூடும் போது எனக்கு கஷ்டமாயிருக்கு அதான்...”

“அடடா அதெல்லாமில்ல மது நீ இப்படி அழுமூஞ்சி பாப்பாவா இருந்தா எப்படி, இனிமே நான் எக்ஸ்சர்சைஸ் செய்யும் போது நீ உள்ள வராத...” என்று சற்றே கடினமாய் கூற அவள் முகம் இன்னும் விழுந்துவிட்டது.

“என்ன மது.....”

“ஒண்ணுமில்ல... சீக்கிரம் ரெடியாகி சாப்பிட வாங்க...” என்று எழுந்து சென்றுவிட்டாள்.

இது தினமும் நடக்கும் விஷயமானது இவர்களுக்குள்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கந்தவேலு ஒருநாள் எழிலை காண அவனது ஹோட்டலுக்கே வந்தார்.

“வாங்க மாமா...” என்றபடி வரவேற்றவனுக்கு அவரது வாடிய முகமே பதிலாய் கிடைத்தது.

“உங்களை பார்க்கத்தான் வந்தேன் மாப்பிள்ள...”

“என்ன மாமா வீட்டுக்கே வந்திருக்கலாம்ல.. வீட்ல எல்லாம் எப்படியிருக்காங்க..??” என்றபடி அவரருகே அமர்ந்தவன், கடையில் வேலை செய்யும் பையனுக்கு கண் ஜாடை காட்டினான் பருக ஏதாவது கொண்டு வந்து தரும்படி.

“எல்லாம் நல்லாருக்காங்க மாப்பிள்ள.. உங்க அத்தைக்கு தான் சின்ன வருத்தம்...”

“ஏன் மாமா என்னாச்சு...?? வீட்ல எதுவும் பிரச்சனைய??”

“அதெல்லாம் இல்ல மாப்பிள்ள... மதுக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆகி ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சு.. மறுவீட்டுக்கு வந்துட்டு வந்தது.. அதுக்கப்புறம் மதுவா ஒரு போன் கூட பண்ணல.. வீட்டுக்கும் வரலை.. அதான்...”

அவரது மனநிலை தெளிவாய் புரிந்தது அவனுக்கு. இதில் அவனது தவறும் தானே இருக்கிறது. மதுஸ்ரீ ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்கிறாள். ஆனால் ஒருநாள் ஒரு பொழுது கூட அவன் அவளிடம் கேட்கவில்லையே வீட்டில் பேசினாயா??? இல்லை அங்கே போய் வரலாமா?? என்று.

இந்த எண்ணம் மனதில் ஓட, அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது அவளிடம் தனியாக செல் போன் இல்லை. தனக்கே ஏதாவது பேசவேண்டும் என்றால் வேதாச்சலத்தின் அலைபேசியில் இருந்து தான் அழைப்பாள். அவளாக வேண்டும் என்று கேட்டதும் இல்லை. இல்லையென்று குறைபட்டதும் இல்லை.

“அது.... சாரிங்க மாமா... எனக்குமே தோணல.. நிஜமா சாரி. மது நல்லா இருக்கா மாமா.. நீங்க அவளை நினைச்சு கவலை எல்லாம் படவேண்டாம்...” என்றான் வேகமாய் அவரை சமாதானம் செய்யும் நோக்கில்.

“ஐயோ மாப்பள, மது நல்லாதான் இருப்பா.. அதுல எங்களுக்கு சந்தேகமே இல்லை. ரொம்ப நாள் எங்க கூட இருந்த பொண்ணு. இப்போ பேச கூட இல்லைன்னா சங்கடமா இருக்காதா. அதான் உங்களை ஒருவார்த்தை கேட்டுட்டு, ப்ரீயா இருக்கும் போது வீட்டுக்கு கூட்டிட்டு வாங்கனு சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்...”

“அதுகென்ன மாமா நாளைக்கே கூட கூட்டிட்டு வரேன்... மது கைல போன் இல்லை மாமா. நானுமே அதை யோசிக்கல.. நீங்க எதுவும் மனசில வச்சுக்காதிங்க... ”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல மாப்பிள்ள. எல்லா பசங்களையும் அவங்க அவங்க வாழ்க்கைஏற்படுத்தி குடுத்துட்டோம். அதான் வீட்டுல ஒரு சின்ன விருந்து போல வைக்கலாம்னு ஒரு எண்ணம்.. இன்னும் வீட்லையும் சொல்லல.. ஸ்ரீதரன்கிட்ட கலந்து பேசிட்டு என்னிக்குன்னு சொல்றேன்.. மதுகிட்டயும் ஒருவார்த்தை சொல்லிடுங்க..” என்றவர் மேலும் சில நேரம் பேசிவிட்டு விடைபெற்றார்.

ஆனால் எழிலரசனுக்கு தான் மனம் சங்கடமாய் போய்விட்டது. இதை எப்படி தான் யோசிக்காமல் விட்டோம் என்று எண்ணியவனுக்கு முதலில் மதுவிற்கு ஒரு அலைபேசி வாங்கிட முடிவு செய்தான். அவன் சார்ந்த அனைத்து விசயங்களையும் அப்படி ஆராய்ச்சி செய்வாள்.

ஆனால் இன்று வரை இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட அவள் வாய் திறக்கவில்லை. அவளுக்கு ஆசையிருக்கும் தானே பிறந்த வீட்டில் அனைவரோடும் பேசவேண்டும், பார்க்கவேண்டும் என்று.

இந்த நினைப்பில் தன்னையே நொந்தபடி ஒரு அலைபேசியையும் வாங்கிக்கொண்டே வீட்டிற்கு சென்றான்.
எழிலரசனின் கையில் அதிகப்படியாய் ஒரு பை இருக்கவும், என்னவாய் இருக்கும் என்று ஆவல் கொண்டது மதுவின் மனது.

“என்னது இது.. மனுஷன் கையிலேயே வச்சுக்கிட்டு சுத்துறாரு...” என்றவளின் பார்வையோ அவன் கையில் இருந்த பையையே நோட்டமிட்டது.

“அப்படி வா வழிக்கு.. இன்னிக்கு நீயா வாய் திறந்து என்னனு கேக்காம.. நானா எதுவும் சொல்லமாட்டேன்....” என்று மனதினுள்ளே புன்னகைத்துக்கொண்டான்.

அவன் நினைத்து அவளுக்கு தெரியாதே.

“என்னவா இருக்கும்?? சினிமால காட்டுற மாதிரி அல்வா?? பூ?? எதுவா இருந்தாலும் வாசனை வருமே... இது என்ன புது தினுசு....”

“மது தட்டை பார்த்து இட்லி வைம்மா.. என்ன யோசனை...” என்றவன் அவன் கையில் இருந்த பையை வேண்டுமென்றே மேஜையின் மீது வைத்தான்.

“ஹா.. ஒண்ணுமில்லையே..” என்று கூறியவள், “இதென்ன பை..??” என்று கேட்டபடி அதனருகில் செல்ல, “அதெல்லாம் இருக்கட்டும், முதல்ல உங்க அம்மாகிட்ட பேசு.. இன்னிக்கு எனக்கு போன் பண்ணிருந்தாங்க..” என்று அவன் அலைபேசியை அவளிடம் கொடுத்துவிட்டு, மறுபடியும் அந்த பையை கையில் பிடித்துக்கொண்டான்.

“டேய் எழிலு அதை அங்குட்டு வச்சிட்டு தான் சாப்பிடேன்..” என்று வேதாச்சலம் சொல்ல,

“ஹா வச்ச உடனே தூக்கிட்டா என்ன செய்ய தாத்தா...” என்று சிரித்தான்.
பேசி முடித்துவிட்டு வந்தவளோ “என்னடா இது மிலிட்ரிகாரன் பொண்டாட்டிக்கு வந்த சோதனை.. ஒரு பைக்குள்ள என்ன இருக்குனு கண்டு பிடிக்க முடியலையே...” என்றவள் அதே நினைப்போடு உண்டு முடித்து, அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அறைக்கு சென்றாள்

அங்கே பார்த்தால் மெத்தையில் அவள் படுக்கும் இடத்தில் அந்த பை இருந்தது. எழிலரனை அறையில் காணவில்லை. சுற்றி முற்றி பார்த்தவள், அவனில்லை என்றதும் வேகமாய் அதை எடுத்து பார்க்க, எழிலும் அதே வேகத்தோடு அவளை பிண்ணிருந்து அணைத்திருந்தான்.

ஒருநொடி திடுக்கிட்டவள் “என்னங்க.. என்ன இது...” என்றாள் சிணுங்களாய்..

“பார்த்தா தெரியலை... ”

“ம்ம்ச் நான் இதை சொல்லல... நீங்க பண்றத சொல்றேன்...” என்றவளுக்கு கையிலிருப்பதை என்னவென்று காணவிடாமல் இப்படி அணைத்திருக்கிறானே என்று இருந்தது.

“நான் என்ன பண்ணேன்.. ஏன் மது இந்த மாடல் நல்லா இல்லையா??”

அவள் அவனை சொல்வது அவனுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் வேண்டுமென்றே அவனோ தான் வாங்கி வந்த அலைபேசியை பற்றி பேசினான்.

“எது?? என்ன மாடல்...எனக்கு ஒன்னும் புரியல...”

“என்ன மது என்ன புரியலை.. நீ சும்மா கை வச்சாலே போதும் ஆட்டோமேடிக்கா எல்லாமே நடக்கும்...” என்றான் அவள் கழுத்தில் முகம் புதைத்து.

“என்னங்க என்ன இது.. விடுங்க...” என்று விலக போனவளை மேலும் இறுக்கியபடி,

“ஏய் ஏய் மது ஆடாத.. ஸ்டிக் இல்லாம உன்னோட பேலன்ஸ்ல நின்னுருக்கேன்.. நீ விலகுனா நான் விழுந்துடுவேன்...” என்றான் வேகமாய்.

அவ்வளவு தான் இதற்குமேல் மது நகருவாளா என்ன??

கூச்சம் ஒருபுறம், நகர்ந்தால் விழுந்துவிடுவானோ என்ற அச்சம் ஒருபுறமாய் நின்று இருக்க, எழிலோ மதுவை தன் கை வளைவினுள்ளே நிறுத்தியபடியே அவள் கையில் இருந்ததை பிரித்து காட்டினான்.

“என்னங்க இது...??”

“ம்ம் பார்த்தா எப்படி தெரியுது??? ”

“எனக்கு கண்ணு நல்லாத்தான் தெரியுது.. இப்ப எதுக்கு இந்த போன்??” என்றவள் மெல்ல அவனையும் இழுத்து கட்டிலில் அமர்த்தினாள்.

அவளுக்கு அதை பிரித்துக்காட்டும் மும்முரத்தில் அவள் செய்வதை கவனிக்காது, அலைபேசியை பற்றி பேசிக்கொண்டு இருந்தவனுக்கு அமர்ந்த பிறகே புரிந்தது தன் மனைவியின் காரியம்.

“கொஞ்ச விடமாட்டியே...” சலிப்பாய் கூறினாலும் புன்னகை ஒட்டிக்கொண்டு இருந்தது அவன் முகத்தில்.

“உட்கார்ந்து கூட கொஞ்சலாம்.. சரி இப்போ எதுக்கு இது?? அதான் ஏற்கனவே ஒன்னு வச்சிருக்கீங்களே...”

“அடடா... மிலிட்ரிக்காரன் பொண்டாட்டி மக்கு பொண்டாட்டியா இருப்பா போலவே... என்னடா எழில் உனக்கு வந்த சோதனை...” என்று தன்னை தானே பார்த்து கேட்டுக்கொள்ள,

“ம்ம்ச் என்னங்க...” என்று மேலும் சிணுங்கி வைத்தாள் மது.

“இது உனக்கு தான் மது... பிடிச்சிருக்கா...??”

“ம்ம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா ஏன் திடீர்னு....”

“இன்னிக்கு உங்க அப்பா கடைக்கு வந்திருந்தார் மது...” என்றவன் மேற்கொண்டு நடந்ததை கூற, அவள் முகத்தில் எவ்விதமான பாவமும் இல்லை. ஆனால் அவனோ அதையெல்லாம் கவனிக்காமல்

“சாரி மது. நானுமே இதை யோசிக்கல பாரேன்.. நாளைக்கு அங்க போவோமா??” என்று கேட்டான்.
ஆனால் மதுவோ பட்டென்று “ஒன்னும் வேணாம்...” என்று கூறியவள் அவன் வாங்கிக்கொடுத்த அலைபேசியை ஆராய தொடங்கிவிட்டாள்.

“ம்ம்ச் மது.. ஏன் இப்படி சொல்ற..?? என்னாச்சு?? எதுவும் பிரச்சனைய??” என்றான் அவள் முகத்தை நிமிர்த்தி.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. விடுங்க. சரி இதை சொல்லுங்க.. இதுல எப்படி என்ன செய்யணும்...??” என்று டச் போனை காட்டிக்கேட்க அவள் பேச்சை மாற்றுகிறாள் என்று புரிந்தது அவனுக்கு.

முதலில் பேசிவிட்டு இதை இவளிடம் கொடுத்து இருக்கவேண்டுமோ என்று எண்ணினான். ஆனால் முடிவில் வென்றது என்னவோ மதுஸ்ரீ தான். இது என்ன அது என்ன என்று அலைபேசியில் இருக்கும் ஒவ்வொரு செயலிக்கு விளக்கம் கெட்டு அவனை கிறங்கடித்து விட்டாள்.

“டச் போன் வாங்கினது தப்பா போச்சே... ” என்று அவன் நொந்துக்கொள்ளும் அளவு அவள் படுத்திவிட்டாள்.

“மது வீட்ல வேலையெல்லாம் முடிச்சிட்டு சாவகாசமா இதை எடுத்துவச்சு நீயா நோண்டிப்பாரு... உனக்கே புரியும். ஒரே நாள்ல எல்லாம் வந்துடாது...” என்றவன் அவளிடம் இருந்து அலைபேசியை பிடுங்கிவைத்துவிட்டு,

“இப்போ சொல்லு என் பொண்டாட்டிக்கு என்ன கோவம்???” என்றான் அழுத்தமான குரலில்.

இப்படி அவன் அழுத்தமாய் பேசுவது எப்பொழுதாவது தான். நீ பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற தொனி இருக்கும்.
மதுவோ எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள்.

“மதுஸ்ரீ....”

“என்னங்க...”

“உனக்கு என்ன பிரச்சனை...??”

“பின்ன என்னங்க?? கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆச்சுல.. ஒருதரம் அங்க இருந்து யாராவது வந்தாங்களா.. இல்லையே.. மறுவீட்டுக்கு போயிட்டு வந்தோம், அதுக்கு அப்புறம் அம்மா அண்ணன் அப்பான்னு யாராவது ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போனாங்களா இல்லையே... எங்க அக்காங்களுக்கு எல்லாம் எப்படி போனாங்க தெரியுமா?? இப்ப மட்டும் என்னவாம் மகளை பார்க்கல பேசலைன்னு...” என்று கோவமாய் பேச அரம்பித்தவளுக்கு முடிவில் கண்ணீரே வந்தது.

அவளது கண்ணீரை கண்ட பிறகே எழிலுக்கு இத்தனை நாள் இவ்விசயத்தை மனதில் போட்டு உலட்டிக்கொண்டு இருந்திருக்கிறாள் என்று புரிந்தது.

“ச்சு.. என்ன மது... இப்போ ஏன் அழற..” என்றவன் அவளை தன் மீது சாய்த்து அவனும் கட்டிலில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டான்.
அவளும் அவனோடு ஒண்டிக்கொண்டாள்.

“போதும் டா அழாத...”

“ரெண்டு அக்கா கல்யாணத்துக்கு அப்புறமும் எப்படி எங்க வீட்ல இருந்து மாத்தி மாத்தி போய் பார்த்துட்டு வந்தாங்க தெரியுமா.. அவங்களை போல தானே நானும். இப்போ நான் பேசலை நான் வரலைன்னு சொன்னா?? எப்படிங்க?? நம்ம மட்டும் எதுல குறைச்சல்.. ”

“சரி சரி... உன் கோவம் புரியுது.. அங்க அவங்களுக்கு என்ன வேலையோ.. சூழ்நிலையோ.. இப்போ என்ன நாளைக்கே நேர்ல போய் அங்க எல்லார் கூடவும் சண்டை போடு சரியா...” என்றான் அவள் முத்துகை தடவியபடி.

“ம்ம்ஹும்.. நான் வரலை..”

“இங்க பாரு மது.. தப்புன்னு பார்த்தா எல்லாமே தப்பு தான்.. அவங்கவங்க இடத்துல இருந்து யோசிக்கணும்.. உங்க அப்பா அம்மாக்கு உன் மேல பாசமில்லாம இருக்குமா என்ன?? யோசி.. ஏதாவது காரணம் இருக்கும் தானே.. இன்னிக்கு உங்கப்பா அவளோ டயர்டா வந்திருந்தார்...” என்று மேலும் சிறிது நேரம் பேசிய பின்னும் அவள் சமாதானம் ஆகாதது போல் இருந்தாள்.

“என்ன மது... நான் இவ்வளோ சொல்றேனே...”

“ஹ்ம்ம் நாளைக்கு வேணாம்.. அதான் விருந்துக்கு சொல்றேன் சொல்லிருகாங்களே அப்போ போவோம். நாளைக்கு போன் வேணா போட்டு பேசிக்கிறேன்...” என்றவள் இதோடு இதை முடி என்ற பாவனையில் கணவனை பார்க்கவும் அவனும் இந்த பேச்சை இதோடு விட்டான்.
 
“ஹ்ம்ம்சொல்Sளைக்கு வேணாம்.. அதான் விருந்துக்கு சொல்றேன் சொல்லிருகாங்களே அப்போ போவோம். நாளைக்கு போன் வேணா போட்டு பேசிக்கிறேன்...” என்றவள் இதோடு இதை முடி என்ற பாவனையில் கணவனை பார்க்கவும் அவனும் இந்த பேச்சை இதோடு விட்டான்.
super sis
 
Top