Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-9

Advertisement

praveenraj

Well-known member
Member
"என்ன இதி இப்படி பொசுக்குன்னு முத்தமெல்லாம் கொடுத்துட்டே? இதனால நாளைக்கு அவன் அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டா என்ன பண்ணுவ?" என்று சீரியஸாக கேட்ட மிருவிடன்,
"ஐயோ மிரு அவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வருவான்னு நினைக்கிறாயா?" என்று புருவம் உயர்த்தி கொஞ்சம் அழுத்ததுடன் கேட்க, இப்போது அவர்கள் எல்லோரும் மீண்டும் ஒருமுறை வெடித்துச் சிரித்தனர்.
எல்லோரும் சிரித்தாலும் நித்யாவின் கண்கள் அனேஷியாவின் மீதே இருந்தது. அவள் ஏற்கனவே ஏதோ குழப்பத்திலும் குற்றயுணர்ச்சியிலும் இருக்கிறாள் என்றுணர்ந்த நித்யா இப்போது ஜிட்டுவை அடித்ததால் அவள் இன்னும் அதிகமாக வருந்துகிறாள் என்று உணர்ந்து அவளை என்ன சொல்லி சமாதானம் செய்யலாம் என்று யோசிக்க இவர்கள் எல்லோரும் மேலும் ஜிட்டுவை கலாய்த்துக்கொண்டிருக்க அதில் கவனம் செலுத்தாமல் இருந்தவளைப் பார்த்த மௌனி நித்யாவை உலுக்கவும் சுயம் பெற்றவளின் முகத்தில் சிரிப்பே இல்லாததால் என்னவென்று எல்லோரும் வினவினர்.
அவள் பார்வை சென்ற திசையைக் கண்ட இதித்ரிக்கு மேலும் கோவம் வந்து முகம் மாறி, "எல்லாம் அவளால தான்" என்று சொன்னதும் நித்யா முறைக்க அமைதியானாள்.
"தப்பு அவ மேல மட்டும் இல்ல. அந்த நாய் மேலயும் இருக்கு. யாராயிருந்தாலும் அப்படிதான் நடந்திருப்பாங்க. ஒருவேளை வந்தவன் ஜிட்டுவா இல்லமா போயிருந்தா?" என்று நித்யா நிறுத்த, எல்லோருடைய முகத்திலும் கலவரம் உண்டானது. சரி இருங்க நான் வரேன் என்று எழுந்து அனேஷியாவின் இருப்பிடம் சென்றவள் அவள் முன்னே அமர்ந்தபோதும் அதை உணராமல் இருந்தவளின் தொடையில் கையைவைக்க திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் முகத்தில் இருந்த கலவரத்தைக் கண்டு,
"ஹே சில். நான் தான்."
அவள் முகம் சுரத்தையே இல்லமால் இருக்க, "லீவ் இட். அதையே இன்னமும் யோசிச்சிட்டு இருக்கியா அனி?"
"நான் தெரிஞ்சி..." என்று தொடங்க அவளை கையுயர்த்தி அமைதியாக இருக்கச் சொன்னவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அனேஷியாவை அருகில் அழைத்து அவளுக்கு ஒரு ஹக் தர, அதில் இன்னமும் அழுது உடைந்து தேம்பியபடி அவளை இன்னமும் இறுக்கிக்கொண்டாள்.
இதை பார்த்துக்கொண்டிருந்த நால்வருக்கும் ஒன்றுமே புரியவில்லை. பின்னே அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆனது யாருக்குமே தெரியாதே?
கொஞ்ச நேரம் அப்படியே இருந்தவள் ஏதோ தோன்றியவளாய் அவளை விட்டு விலகி, "தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹக் அண்ட் சாரி நித்யா ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன்" என்றுதும்
"ஃப்ரண்ட்ஸ்குள்ள எதுக்கு தேங்க்ஸ் சாரி எல்லாம்?" அனி இவளைப் பார்த்துக்கொண்டே இருக்க, அவள் கண்கள் தான் ஏனோ கலங்கியது. அவளை அப்படியே தன்னுடைய மடியில் படுக்க வைத்து அவள் முதுகில் ஆதுரமாய் வருடிக்கொடுக்க அந்த இதம் அந்த அன்பு அந்த வருடல் இப்போது அனேஷியாவுக்கு அவசியம் தேவைப்பட்டதால் அப்படியே நிம்மதியாக உணர்ந்தவள் உறங்கியும் போனாள்.
அவளை அவளின் படுக்கையில் படுக்க வைத்து போர்வையால் போர்த்திவிட்டு தங்கள் இருக்கைக்கு வந்தவளை எல்லோரும் வினோதமாய் பார்த்தனர்.
"ஐ திங்க் ஷீ இஸ் டெரிபெல்லி டிஸ்ட்டர்பேட். ஆல் ஷி நீட் இஸ் லவ் அண்ட் அபெக்சன்" (அவள் அதிகம் மனமுடைந்துள்ளாள். அவளுக்கு அன்பும் ஆதரவும் தேவை) என்று சொல்லி அங்கே அமர்ந்தாள்.
"உனக்கு ஏற்கனவே அவளை சாரி அவங்களைத் தெரியுமா?" - மிரு
"இல்ல"
"அப்புறோம் எப்படி?"- மௌனி
நேற்று இரவு நடந்ததை அவள் சொன்னாள். (மணி 12 ஐ கடந்துவிட்டது. சோ அது நேற்று தான்)
இப்போது யோசிக்கையில் அனேஷியா மீதிருந்த கொஞ்ச நஞ்ச கோவமும் விலகி எல்லோருக்கும் அவள் மீது ஒரு காருண்யம் ஏற்பட்டது. (காருண்யம் - இரக்கம்)
பிறகு அவளைப் பற்றி தெரிந்ததை நித்யா எல்லோருக்கும் சொல்ல, அவளின் டெசிகிநேசன் தெரிந்து கொஞ்சம் ஆச்சரியப்பட்டனர். "பரவாயில்லையே நம்ம வயசு தானே இருக்கும்?" - பாரு
"ஆமா"
"சரி தூங்குங்க காலையில பார்க்கலாம். குட் நைட்." எல்லோரும் படுத்துவிட்டாலும் ஏனோ இப்போது எல்லோரின் நினைவும் அனேஷியாவைச் சுற்றியே இருந்தது.
........................................................
அங்கே தன் இருக்கையிலிருந்து எழுந்த சித்தாரா, விவியனை நோக்கி அடியெடுத்து வைத்தாள். அவன் முன்னே என்ன பேசுவது என்று மனதிற்குள் 20 முறையேனும் ரிகர்சல் பார்த்திருப்பாள்.
அவனோ காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு கண்களை மூடியபடியே பாட்டை முணுமுணுத்துக்கொண்டிருந்தான். யாரோ தன் முன்னால் நிற்பதைப் போன்று உணர்ந்தவன் திடுக்கிட்டு கண்களைத் திறக்க எதிரே நின்ற பெண்ணைப் பார்த்ததும் ஒரு கணம் பயந்து மிரள,
"சாரி ஃபார் தான் டிஸ்டர்பன்ஸ்" என்று அவள் தயங்க,
"இன்னமும் அவள் தன்னிடம் தான் பேசவந்திருக்கிறாளா?" என்று யோசித்துக் கொண்டிருந்தான்,
அவன் அருகிலிருந்த இருக்கையைப் பார்த்து, "மே ஐ..." என்று கேட்ட,
அவனையும் அறியாமல் அவன் தலை சம்மதம் தர அவள் அமர்ந்தாள். அவளுக்கும் அதிக படபடப்பாக இருக்க, அவனுக்கு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை பார்த்தும் இவனே எடுத்து அதை அவளுக்கு நீட்டினான்.
"தேங்க் யூ" என்றவள் வாங்கி ஒரு மிடறு பருகி,
"என்னை தப்பா எடுத்துக்காதீங்க" என்று சொல்லி தயங்க,
"பரவாயில்ல" என்று அவன் சொல்லவும் அவள் ஹார்ட் தாறுமாறாக துடித்தது மட்டும் நிச்சயம்.
"இதுக்கு முன்னாடி நீங்க ஒரு பாட்டு கேட்டுட்டு இருந்தீங்களே? அது என்ன பாட்டுனு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்று உதடு சுளித்து கேட்டவளை வினோதமாக பார்த்துக்கொண்டிருந்தான் விவியன்.
"புரியுது.யாருடா இவ சம்மந்தமே இல்லமா திடீர்னு வந்து என்ன பாட்டு கேட்டுட்டு இருந்தீங்கன்னு கேட்கறாளேனு நீங்க யோசிக்கிறீங்க, ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட், எனக்கு ஒரு கெட்ட பழக்கம்" என்றவள் தன் மனநோயை சொல்லி புலம்ப அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அவனும் கொஞ்சம் பலமாக சிரிக்க,
எம்பேரஸ் ஆனவள், "புரியுது நீங்க நினைக்கறது, ப்ளீஸ்..." என்று கெஞ்சினாள்,
இப்போது அவளை இலகுவாக்க, "என்ன பாட்டு?"
"முன்னாடி கேட்டிங்களே அது?"
"ஏங்க நான் ரொம்ப நேரமா பாட்டு தான் கேட்டுட்டு இருக்கேன். உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?"
"அது சித்தாரா சித்தாரானு..."
யோசித்தவன் புரிந்து, "ஓ டும்டும்டும் மா?"
அவள் புரியாமல் பார்க்க,
"அது மாதவன் ஜோதிகா நடிச்ச டும் டும் டும் படத்துல வர பாட்டு" என்று சொல்ல அவளுக்கு என்னமோ ஒரு பெரிய பாரமே குறைந்தது போல மூச்சை இழுத்துவிட்டாள்.
அவளின் செய்கையைப் பார்த்தவன் சிரித்துக்கொண்டே, "என்ன காரணம்னு நான் தெரிஞ்சிக்கலாமா?"
"நான் சித்தாரா" என்று கையை நீட்ட, அவனுக்குப் புரிந்தது. சிரித்தவன், "நான் விவியன்"
"விவியன் ரிச்சர்ட்சன்னா?"என்றவள் ஒரு இடைவெளி விட்டு சிரிக்க,
தன்னை கலாய்க்கிறாள் என்று உணர்ந்தவன், "ஆமா ஆமா, ரிட்டையர் ஆகி இப்போ உங்க முன்னாடி உட்கார்ந்து பேசிட்டு இருக்கேன்" என்று சிரிக்க,
"அப்போ ஆட்டோகிராப் கண்டிப்பா வாங்கணுமே?" என்று அவளும் சிரித்தாள்.(விவியன் ரிச்சர்ட்ஸன் புகழ்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்)
"தாராளமா, ரசிகையின் ஆசை தான் என் ஆசையும்" என்று அவன் பென் எடுக்க,
அவளும் அவனை சீண்ட எண்ணி தன் கையை நீட்டினாள்,
"சோ ஃபண்ணி(funny)" என்று இருவரும் சிரித்துக்கொண்டனர்.
இப்போது என்ன பேசுவதென்று புரியாமல் நிற்க, அவனே ஆரமித்தான்,
"அதெப்படி இந்த நேரத்துல யாருன்னே தெரியாத ஒருத்தன் கிட்ட தைரியமா பேச வந்தீங்க? ஜான்சி ராணியோ?"
"நீங்க என்ன சிங்கமா புலியா உங்களைப்பார்த்து பயப்பட? அண்ட் நீங்க ஒன்னும் தனியா இருக்கும் பெண்ணை கடத்தி ரேப் பண்றவன் இல்லையே?" என்று கேள்வியோடு நிறுத்தி அவனைப் பார்க்க,
ஏனோ அவள் கேட்டது அவனுக்கு ஒரு மாதிரியானது. அவன் முகம் மாற,
"சாரி சும்மா தான் சொன்னேன். உங்களை அஃபண்ட் (offend -புண்படுத்த) பண்ண ஒன்னும் சொல்லல" என்று நிறுத்த,
"நோ ப்ரோப்லேம், ஆக்சுவல்லி நாங்க தான் அசிங்கப்படணும். ஒரு பொண்ணு ஒரு பையனை சகமனுஷனா நெனச்சி நெருங்க கூட முடியாத நிலைமையை ஏற்படுத்தியதற்கு..." என்று அவன் நிறுத்த,
"காந்தி சொன்னது கரெக்ட் தான்"
"என்ன?"
"என்னைக்கு ஒரு பொண்ணு நட்டநடுராத்திரியில தனியா போயிட்டு பத்திரமா திரும்ப வராளோ அன்னைக்கு தான் உண்மையான சுகத்திரமே இந்தியா அடைஞ்சதா அர்த்தம்னு சொன்னாரே"
அவனுக்கு இப்போது என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை, ஆனால் அவள் ஏனோ அவனின் மனதை மட்டும் கவர்த்துவிட்டாள்.
"விரைவில் வரும், எதிர்பார்க்கலாம்..."
"ஏங்க காந்தி செத்தே 70 வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. நல்லா பண்றீங்க காமெடி..."
"ஏங்க இப்படி பேசுறீங்க? மாறும். மாற்றம் ஒன்றே மாறாதது..."
"பார்க்கலாம்" என்றவள் சிரிக்க, "உங்களைப்பற்றி சொல்லவேயில்லை ?" என்று அவனை நோக்க,
"நான் விவியன். பிஸிக்ஸ் ப்ரொபசர். அவ்வளவு தான்"
"என்னங்க திருக்குறளோட குட்டியா சொல்றீங்க?"
அவன் பதிலளிக்காமல் இருக்க,
"ஓ யாருன்னே தெரியாத இவ கிட்ட எதுக்கு எல்லாமும் சொல்லணும்னு பார்க்கறீங்களா?"
அவனுக்கு அவளொரு புதிராகவே தெரிந்தாள். பட்டுபட்டுனு பேசுறாளே என்று வியக்க,
"என்னடா இவ இப்படி பேசறாளேன்னு தானே யோசிக்கறீங்க?"
அவன் திருதிருவென விழிக்க,
"அது மேனுபேக்சரிங் டிபெக்ட் அப்படிதான். கொஞ்சம் உளறுவாய்" என்று கூறி சிரிக்க, அவளின் இந்த குணம் அவனுக்கு மேலும் பிரமிப்பை ஏற்படுத்தியது.
"சரி சித்தாரா என்னைப் பற்றி கேட்டீங்களே உங்களைப்பற்றி எதையும் சொல்லவேயில்லை ஏன்?"
"நீங்க கேட்கவேயில்லையே" என்று தோள் குலுக்கியவளைப் பார்த்து இன்னும் இன்னும் அதிசயத்தான்.
"செம ஜோவியல்ங்க நீங்க, சான்ஸ்லெஸ்..."
"தேங் யூ , நான் சித்தாரா. வேலூர் என் சொந்தவூர். நான் ஒரு இன்டீரியர் டிசைனர். ஒரே பொண்ணு. சோ அதிக செல்லம. இப்போ கொஞ்சம் பீலிங் மோட்ல இருக்கேன்."
கலகலவென்று பேசியவள் இறுதியில் மட்டும் கொஞ்சம் அமைதியாகினாள்.
அவனுக்கு என்னவென்று தெரிந்துக்கொள்ள ஆவலாக தான் இருந்தது. பின்னே சில பேரிடம் பேசும்போது நமக்கு அவர்களுடனான உரையாடல் முடிவேயில்லாமல் தொடராதா என்று தோன்றுமே அப்படித்தான் இருந்தது விவியனுக்கு இப்போது,
"சரிப்பா நான் தூங்கறேன். ரொம்ப டையர்டா இருக்கேன். பை. காலையில மீட் பண்ணுவோம். நல்லா விலாவாரியா பேசலாம் என்ன ஓகேவா?"
அவன் தலையை மட்டும் ஆட்டினான்.
"ஓகே டாட்டா"
அவளை போகவிட்டவன், பின்பு ஐயோ எங்க போறாங்கன்னு கேட்காம விட்டுட்டேனே என்று உச் கொட்டியவன். அவளுடன் பேசியதையெல்லாம் நினைத்து பார்த்துச் சிரித்தான். ஏனோ இதுவரை அவனை ஆட்கொள்ளாத ஒரு புதிய உணர்வு அவளிடம் பேசியதும் ஏன் பேசும்போதே அவனை ஆட்கொண்டது. அவனுக்கு அது இன்னதென்று தான் விளங்கவில்லை. சென்று அவளை மீண்டும் பார்க்கலாமா என்று கூட தோன்றியது. இல்லை வேணாம் என்று அவன் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு, சொல்லப்போனால் நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவன் மனம் சற்று நிம்மதியாகவும் இலகுவாகவும் இருப்பதாய் உணர்ந்தான்.
அங்கே பெண்கள் எல்லோரும் சேர்ந்து கும்மியதில் காலை கைப்புள்ள வடிவேலுவைப் போல கொஞ்சம் விஸ்கி விஸ்கி நடந்தவன் அவர்களின் கம்பார்ட்மெண்ட்டுக்கு போக மணி இரண்டைத் தாண்டியிருந்தும் இன்னமும் உறங்காமல் ஏதோ யோசனையில் திளைத்திருந்த ஜெசியைக் கண்டவன் அவள் அருகில் சென்று கணுக்கால் வலியால் ஜெசிந்தாவின் அருகில் அமர திடுக்கிட்டவள் தன் கைப்பையிலிருந்த பெப்பர் ஸ்ப்ரேஐ எடுத்து சரமாரியாக அடிக்க,
"ஐயோ ஜெசிந்தா ஏம்மா இப்படி பண்ண?" என்று கதறிக்கொண்டு வாஷ்பேசின் நோக்கி விரைந்து நடக்க வலியால் முடியாமல் அங்கேயே இடறி விழுந்தான் அவன். அவளோ யாரடா இவன் நம்ம பேரைச் சொல்றான் என்று சுயம் பெற்றவள் அவன் கீழே விழுந்து வலியில் கதறுவதைக் கண்டு துடிக்க மூஞ்சியில் அடித்த பெப்பர் ஸ்ப்ரே வேறு எரிச்சல் தர துடித்தவனின் மீது இரக்கம் கொண்டவள் தன் வாட்டர் பாட்டில் எடுத்து அவன் முகத்தில் தண்ணீர் தெளிக்க அவன் முகம் வலியிலும் இன்றைக்கு ஏன் அவன் வாழ்க்கை இப்படி இருக்குனு யோசிக்க அப்போது
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே, இன்பத்தில் ஆடுது என் மனமே என்ற பாடல் அங்கே அருகே உறங்கியவர் மொபைலில் ஒலிக்கவும் , அவன் முகத்தைக் கண்டவள் அவளையும் அறியாமல் சிரித்தாள்.
"கருமம் கருமம் இன்னைக்கு யாருமூஞ்சில முழிச்சேனோ தெரியில" என்று புலம்ப அவளோ அவனின் முகத்தைக்கண்டு ஏற்கனவே எங்கேயோ பலமா வாங்கியிருக்கான் போல என்று நினைத்து சிரித்தாள்.
"சிஸ்டர் சிரித்தது போதும், கொஞ்சம் ஹெல்ப் மீ ப்ளீஸ்"
அவள் கையைத் தரவே யோசிக்க,
"ஏம்மா என்மூஞ்சைப் பார்த்தா கொலைகாரன், கொள்ளைக்காரன், கற்பழிக்கிறவன் மாதிரியா இருக்கு?"
அவள் இல்லையென்று தலையாட்ட,
"அப்புறோம் ஏன் தாயே யோசிக்கிற? ப்ளீஸ் ஹெல்ப் மீ" என்று சொல்ல அவள் கையை கொடுத்து அவனை தூக்கி நிறுத்தினாள். முகத்தைக் கழுவியவன், "கொஞ்சம் பேசலாமா?" என்றதும்,
அவளோ இன்னமும் இவன் யாரென்று தெரியாமல் விழிக்க,
"எம்மா உன் புருஷனோட நண்பன் தான் நானு. பயப்படாம என்கூட பேசலாம்"
ஏனோ இப்படி திடீரென உன் புருஷன் என்றது அவளுக்கு ஒரு வித்யாசமான உணர்வையே தந்தது.
அவன் அந்த இருக்கையில் அமர்ந்து காலை நீட்டியவன், "உட்காரும்மா"
அவள் தயங்க,
"முடியில ப்ளீஸ்"
அவளும் அமர்ந்துக்கொண்டாள். "நான் ஜிட்டேந்திரன். செபா நான் எல்லாம் காலேஜ் மேட்ஸ்."
அவள் ஆச்சரியமாக புருவம் உயர்த்த,
"உங்க மேரேஜ்க்கு வந்தேன்"
"அப்படியா?"
"நல்லா லெக் பீஸோட பிரியாணி போட்டீங்க கரெட்டா?"
அவளோ சிரித்து, ஆமாம் என்று தலையசைக்க,
"எங்க அஸ்ஸாம் தானே போறீங்க?"
"உங்களுக்கு எப்படி?"
"நாங்கதான் போன்பண்ணி விசாரிச்சோமே"
அவள் சற்று மிரள,
"பயப்படாத" என்றவன் "செபாக்கும் உனக்கு என்ன பிரச்சனை?"
அவள் தயங்கி, "அது..."
"ஓகே அது உங்க பெர்சனல். சொல்லணும்னு அவசியமில்லை" என்றவன் ஒருநிமிடம் அவளைப் பார்த்து, "ஆக்சுவல்லி உன்கிட்ட ஒரு சப்ரைஸ் சொல்லணும்"
அவளோ என்னவென்றுப் பார்க்க,
"சர்ப்ரைஸா ஷாக்கானு நீ தான் சொல்லனும்"
"புரியில"
"செபாவும் ட்ரைன்ல தான் இருக்கான்"
புரியாமல் விழித்தவள், "இந்த ட்ரைன்லயா?"
ஆமா என்று தலையை ஆட்டினான்.
உடனே திரும்பி அவர்கள் கம்பார்ட்மெண்டில் பார்க்க,
"இந்த ட்ரைலனு தான் சொன்னேன், இந்த கம்பார்ட்மெண்ட் இல்ல, அடுத்து"
அவள் முகத்தில் தெரிந்தது ஆச்சரியமா அதிர்ச்சியா என்று அவனுக்குப் புரியவில்லை.
"ஜெசிந்தா, ஒன்னு கேட்கட்டா?"
"ஹ்ம்ம்"
"உனக்கு செபாவை பிடிக்குமா ஜெசி?"
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. முழித்தாள்.
"என்ன சொல்றதுன்னே தெரியில, உண்மையை சொல்லனும்னா தெரியில"
"தெரியிலையா?"
"ஆமா. ஒருத்தரை பார்த்தா மட்டும் பிடிக்கும்னு சொல்ல முடியாது அண்ணா... உங்களை அண்ணான்னு சொல்லலாம் தானே?"
"இட்ஸ் மை ப்ளஷர்"
"அது வெறும் கவர்ச்சி தான். உண்மையிலே ஒருத்தங்களை பிடிக்குமா பிடிக்காதான்னு பேசி பழகிப் பார்த்தா தான் தெரியும்"
"ஆர் யூ ஜோக்கிங்? உங்களுக்கு கல்யாணம் ஆகி 8 மாசம் இருக்கும் தானே?"
"ஆமா. ஆனா நாங்க ஒரு ப்ரெண்ட்ஸ் அளவுக்கு கூட பேசிக்கிட்டதில்ல"
இப்போது ஜிட்டனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவன் அவளையே தீர்க்கமாய் பார்க்க,
"அது" என்று ஏதோ சொல்லவந்தவள் அப்படியே நிறுத்த,
அவளின் தயக்கத்தை உணர்ந்தவன், "ஜெசி ஒரு ப்ரெண்டா நீ என்கிட்டே எல்லாமும் ஷேர் செய்யலாம். எனக்கு நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கனும். அவ்வளவுதான்"
"நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் மட்டும்தான் பண்ணியிருக்கோம்" என்று சொல்ல முதலில் புரியாதவன் குழம்ப பின்பு புரிந்து அதிர்ந்தான். "நிஜாமாவா?"
"ஆமா"
இப்போது தான் அவனுக்கு ரொம்பவும் குழப்பமாக இருந்தது. "எங்க கேங்கிலே கல்யாணத்துக்கு அதிகம் எதிர்பார்த்திருந்தது அவன்தான்" என்றவன் ஏதோ தவறாய் சொல்லியதாய் நினைத்து நாக்கை கடித்தான்.
அவன் சொல்லவருவது ஜெசிந்தாவுக்கு தெளிவாக புரிந்தது. "அப்போ அவர் யாரையாவது லவ்..."
"சீச்சீ அதுக்கெல்லாம் அவன் சரிப்பட்டு வரமாட்டான்" என்று சொல்ல ஏனோ அவனின் இந்த ஸ்பான்டேனியஸ் (spontaneous - தன்னிச்சையாக) பதிலில் அவளுக்கும் சிரிப்பு வந்தது கூடவே ஒரு நிம்மதி. "அவனுக்கு நிறைய ட்ரீம் இருந்தது. எப்படியெல்லாம் இருக்கனும் எப்படி கல்யாணம் பண்ணனும் இப்படி..."
அவள் பார்க்க,
"எல்லாம் அந்த எம்டன் கெடுத்துட்டாரேன்னு அதிகம் புலம்புவான். சரி நான் இன்னொன்னு கேட்கவா தப்பா எடுத்துக்க மாட்டியே?"
"தாராளமா"
"ஏன் நீயே அவன்கிட்ட ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்திக்க தவறின?"
"எனக்கும் அப்போ கல்யாணத்துல விருப்பமே இல்லை." அவன் பார்ப்பதை உணர்ந்து, "ஐயோ அண்ணா எனக்கு லவ் எல்லாம் கிடையாது. எனக்கு என் கரியர் ரொம்ப முக்கியம். அதுல எஸ்தாபிளிஷ் ஆகணும்னு ஆசை"
"ஓகே"
"அவருக்கு தெரியுமா நான் இங்க தான் இருக்கேனு?"
"இல்ல. சொல்லவேணாம்னு முடிவுபண்ணிட்டோம்"
"பண்ணிட்டோம்?"
"ஆக்சுவல்லி எங்க கேங் எல்லோரும் ஒரு முடிவெடுத்திருக்கோம் அது இந்த பயணத்துல உன்னையும் அவனையும் ஒண்ணுசேர்க்கணும்னு" என்று தங்கள் திட்டத்தை உளறினான்.
அவளோ சிரித்தாள்.
"ஏன் சிரிக்கிற?"
"இப்போ என்கிட்டே சொல்லிடீங்களே..."
"எம்மா யாராவது ஒருத்தருக்குத் தெரியணும் தானே?"
"ஆனா நான் அபிஷியலா போறேனே?"
"பெரிய பொடலங்கா அபிஷியல்"
அவள் முறைத்தாள்.
"சரி என்ன பிளான் பண்ணியிருக்கீங்க சொல்லுங்க?"
"நான் பிளான் எல்லாம் பண்ணல, எல்லாம் நித்யாவைக் கேட்டா தான் தெரியும்"
"நித்யா?"
"விவான் வைஃப்"
"விவான்?"
"விவானே தெரியாதா? சுத்தம் என்றவன் அவன் படத்தைக்காட்டினான்.
"அவரோட பெஸ்ட் ஃபிரண்டோ?"
"பெஸ்ட்னா இளங்கோ தான், அப்புறோம் ஹேமா கூட"
"ஹேமா?"
"தாயே பெண்ணில்ல பையன் தான் ஹேமந்த். அவ்வளவு பொசெசிவ்?"
அவள் சிரிக்க,
"உனக்கும் அவனை ரொம்ப பிடிக்குமா?"
"எப்படி சொல்ல? பிடிக்கும் ஆனா எதுவுமே தெரியாதே?'
"சரி அவனைப் பற்றி நான் சொல்றேன் ஓகேவா?"
அவள் யோசித்தாள்.
"என்ன யோசனை?"
"எனக்கு இந்த லைஃபே பிடிக்கல அண்ணா. எனக்கு ஒரு ட்ரீம் இருந்தது. என்னை கல்யாணம் பண்றவர் என்னை நல்லா புரிஞ்சிக்கணும் என் கேரீற்கு சப்போர்ட் பண்ணலைனாலும் எதிர்ப்பு சொல்ல கூடாது, நிறைய லவ் பண்ணனும், அப்புறோம்..."
"நிறுத்து நிறுத்து நீ கெளதம் மேனன் பேனா?"
"ஏன்?"
"இல்ல நீ ஒரு ஐடியல் லைஃப் எதிர்பார்த்திருக்க. (ideal - perfect, சரியான) அதெல்லாம் படத்துல தான் கிடைக்கும். இது ரியாலிட்டிமா. கொஞ்சம் ப்ராக்டிகலா இரு"
"அப்புறோம் உங்களைப் பற்றி?"
"நான் கவெர்மென்ட் எம்ப்லாய்." ஜிட்டன் தன்னைப் பற்றி சொல்லி பின்பு தங்கள் பயணத்தைப் பற்றிச் சொன்னான்.
"ஐயோ நிஜமாலுமே ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் போறீங்களா? செம்மயா இருக்குமே" என்றவள் முகம் உண்மையான வருத்தம் கொண்டது.
"விடு ஜெசி. இப்போதான் நீயும் எங்க கேங்ல ஜாயின் பண்ணிட்டையே" என்று சொல்ல
"இல்லையே. செபாகும் என்னை பிடிக்குமான்னு தெரியிலையே?" என்று உதடு சுளிக்க,
"அதெல்லாம் பிடிக்காம தான் உன்கூட இருக்கானா?"
"அப்போ பிடிக்குமா?"
"கொஞ்சம் பேசுங்க ரெண்டுபேரும். எல்லாம் சரியாகிடும்"
"தேங் யூ சோ மச் அண்ணா. நான் நாளைக்கு அவங்க எல்லோரையும் பார்க்கணுமே"
"இரும்மா நான் நித்யா கிட்ட பேசிட்டு சொல்றேன்"
"ஆமா ஏன் அழுத முன்னாடி?"
"அது"
"சொல்லு ஜெசி"
"உண்மையிலே விருப்பமில்லாம தான் கல்யாணம் பண்ணேன். ஐ மீன் நான் ரிலேஷன்ஷிப்குள்ள போக இப்போ தயாரா இருக்கேனு பீல் பண்ணல. ஆனா அதையும் மீறி சரி பார்த்துக்கலாம்னு சொல்லி தான் போனேன். நான் ரொம்பவும் செல்லமா வளர்த்தப்பட்டேன். கூடவே நான் கொஞ்சம் அடங்காத பிள்ளைனு அம்மா சொல்லுவாங்க. இருந்தும் என்னை நான் ஸ்டபார்னு(stubborn) தான் சொல்லுவேன். சோ என் வாழ்க்கையில எல்லாமே என் முடிவுப்படிதான் நடந்தது என் கல்யாணத்தை தவிர, இன்பேக்ட் நான் விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணேன். ஆனா நான் எதிர்பார்த்த எதுவும் இல்லைனு ஒரு வெறுப்பு. இதுக்கு நடுவுல என் வேலை சம்மந்தமா கொஞ்சம் பிஸி ஆகிட்டேன். அண்ட் நான் உண்மையா சொல்லனும்னா கல்யாணத்துக்கு ரெடியே ஆகலை. திடீர்னு நல்ல இடம்னு சொல்லி எல்லாம் ஓகே ஆகிடுச்சு. சரி கல்யாணத்துக்கு அப்புறோம்" என்று அவர்கள் வாழ்வில் நடந்ததை சொல்ல ஆரமித்தாள்.
ஜிட்டன் தான் "இப்போ வேணாம் தாயே. எனக்கு ரொம்ப உடம்பு வலிக்குது. தூக்கமா வருது. பொறுமையா பேசுவோம். ஓகே?"
"ஐயோ சாரிண்ணா. கண்டிப்பா"
எல்லாம் சுமுகமாக போனதாய் ஜெசிந்தா நினைத்திருக்க பாவம் அவளுக்கு தெரியாது அவள் இன்னமும் செபாவின் பாயிண்ட் ஆப் வீவ்வைப் பற்றியே கேட்கவில்லையே. அவன் நிலைப்பாடு என்ன? அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் என்ன? என்றோ நடந்த சின்ன சின்ன நிகழ்வுகள் அவனுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது அவ்வளவு சுலபத்தில் மாறிவிடாது. கொஞ்சம் சிரமப்படணும் என்று... பார்ப்போம் டீடெய்லாக பிறகொரு எபியில்.
வாங்கிய அடியெல்லாம் ஜிட்டனை ரொம்பவும் உடல் சோர்வுவடையச் செய்ய சென்று அவனது இடத்தில் உறங்கலானான். வண்டி அங்கோல் (ongole) ரயில் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தது... (பயணங்கள் முடிவதில்லை)
 
Top