Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 7

Advertisement

praveenraj

Well-known member
Member
நித்யா அனேஷியாவிடமிருந்து எப்படி டீ வாங்கிக் குடிப்பதென்று தயங்கியபடியே இருக்க, அதை புரிந்துகொண்டவளாய் நித்யாவின் அருகில் சென்று தன்னை செல்ப் இன்றோ பண்ணிக்கொண்டவள், "நீங்க பயப்படவே வேண்டாம். நான் அஸ்ஸாம் வரை போகணும். இன்பெக்ட் நான் இன்னும் மூன்றரை நாட்கள் உங்ககூடவே தான் ஒன்னா ட்ராவல் பண்ணப்போறேன். சோ நீங்க தைரியமா வாங்கிக்குடிக்கலாம்." என்றாள்.
நித்யாவிற்கு, எப்படி நாம அசாம் போறது இவங்களுக்குத் தெரியும் என்று புரியாமல் விழிக்க அதை உணர்ந்துக்கொண்டவளாய், "நான் ட்ரெயின்ல ஒட்டியிருந்த லிஸ்டை பார்த்தேன். சோ பயம் வேணாம். என்னைப் பார்த்தா உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உங்ககிட்ட இருக்கறதை திருடிட்டு போறவ மாதிரியா இருக்கு?"என்று சொல்ல,
அவள் அப்படியே அமைதியாக இருக்க,
"ஏங்க திருடறதுக்கு எல்லாம் ஒரு முகம் வேணும்ங்க, என்னைப் பார்த்தா அப்படியா இருக்கு?" என்று சொல்ல, நித்யா இப்போதுதான் நன்றாக அவளை உற்றுப்பார்த்தாள். அவள் முகம் உடை உடைமைகள் எல்லாமும் பார்த்ததும் ஒரு நம்பிக்கை வந்தது. பின்பு ஏதோ தோன்றியவளாய் அனி தன் ஹேண்ட்பேகிலிருந்து ஒரு கார்ட் எடுத்து நீட்ட அது அவளின் பிசினஸ் கார்டாக இருக்க இப்போது நித்யாவிற்கு இன்னமும் தெளிவு வந்தது.
இப்போது அதை வாங்கிக் குடிக்க ஆரமித்தாள் நித்யா.
"பாப்பா உங்களுடையதா?" என்று கேட்டவளிடம் ஆமாம் என்பதைப்போல் ஒரு புன்னகையைச் சிந்த,
"நீங்க மட்டுமா வந்திருக்கீங்க? கூட வேற ஜென்ட்ஸ் யாரும்..." என்று முடிக்கும் முன்னே,
"இல்ல. என் ஹஸ்பண்ட் வேற கம்பார்ட்மெண்ட்ல இருக்கான். ஸ்ஸ்..." என்றவள் முகம் சுளித்து "இருக்காரு" என்று சொல்ல, அதை நன்றாக கவனித்தவள், "லவ் மேரேஜா?"
ஆமாம் என்பதைப்போல் தலையை அசைத்தாள். டீ குடித்து முடிக்கவும் கொஞ்சம் பேச இன்னும் நம்பிக்கை பிறந்தவளாய் "உங்களைப் பற்றிச் சொல்லவேயில்லயே?"
"என்னைப் பற்றி சொல்ல பெருசா ஒண்ணுமில்ல. நான் இந்த மாதிரி..." என்று அவள் பணியைப் பற்றி சொல்லி அதன் காரணமாய் செல்வதையும் சொல்ல,
"நீங்க மட்டுமா தனியா?"
அவள் கேட்டு முடிக்கும் முன்னே, "இல்லைங்க என் டீமும் வேற வேற கம்பார்ட்மெண்ட்ல இருக்கு..."
இப்போது இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை...
அனேஷியா தான், "சாரிங்க, நீங்க எல்லாம் ஜாலியா கலகலன்னு பேசிட்டு இருக்கறதைக் கேட்டதும் என்னையே அறியாம ஒரு உற்சாகம் உந்துதல் வந்தது. அதுதான் நீங்க என்ன பேசுறீங்கன்னு கேட்டுட்டு இருந்தேன். அப்போதான் உங்க ஃபிரண்ட் என்னைத் திரும்பிப் பார்த்ததும் எனக்குப் புரிஞ்சது. யூ ஆர் ஃபீலிங் அன்கம்போர்ட்டபில் வித் மை ஆக்ட், (you are feeling uncomfortable with my act) சாரிங்க..."
"இதைத்தான் இதித்ரி பார்த்து அங்கிருந்தவர்களுக்குச் சொல்ல எல்லோரும் சேர்ந்து முறைக்கும் படி ஆகிவிட்டது" என்று நித்யாவும் நடந்ததைச் சொல்ல,
"அப்போ அவ்வளவு பயங்கரமாவா நான் இருக்கேன்?" என்றுக் கேட்ட அனேஷியாவிடம் "ஒன்னு சொல்லட்டா? யூ லுக் கார்ஜியஸ்..." என்று சொன்னாள்.
"சும்மா சொல்லாதீங்க..."
"ஏங்க ஒரு பெண்ணே ஒரு பெண்ணைப் பார்த்து எங்கயாவது இப்படி சொல்லுவாங்களா? நிஜமாலுமே நீங்க அவ்வளவு அழகா இருக்கீங்க..." என்றாள்.
அவள் சிரிக்க,
"அதுக்காக என்னை நீங்க 'அப்படி'யெல்லாம் நெனச்சிக்கக் கூடாது. நான் 'அப்படி' இல்ல..." என்று சொல்லி நித்யா சிரிக்க, அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்து அனேஷியா இன்னும் பலமாக சிரித்தாள். இருவருக்கும் சிரிப்பு அடங்க கொஞ்ச நேரம் ஆகியது. இவர்களின் சிரிப்புச் சப்தத்தில் அங்கிருந்த இன்னொரு பெண்மணி தூக்கத்திலிருந்து விழிக்க இடம் பொருள் ஏவல் கொண்டு இருவரும் அமைதியாகினர்.
பிறகு நித்யாவைப் பற்றிக் கேட்க அவள் ஒரு டாக்டர் என்றதும் இன்னும் ஆச்சரியம் அவள் முகத்தில். "சரிங்க, நீங்க தூங்குங்க நானும் தூங்குறேன்" என்று நித்யா நகர முயல,
"நித்யா"
என்ன என்பதைப் போல் நித்யா திரும்ப, "ஒரு ஹெல்ப்" என்று சொல்லி அவள் நிறுத்த,
"தாராளமா கேளுங்க அனி...""
காலையில உங்க ப்ரண்ட்ஸ் எல்லோரையும் இன்றோ பண்ணி விடுறீங்களா?" என்றதும் அவளின் தனிமை மற்றும் இப்போது அவள் சிரித்தது எல்லாமும் ஒரு டாக்டராய் பார்த்தவளுக்கு ஒன்று புரிந்தது, இவளுக்குள் நிறைய ப்ரோப்லேம்ஸ் இருக்கு, அண்ட் அதைவிட முக்கியம் அவளுக்கு பேச பழக பெரியதாக நட்பு வட்டம் தற்போதில்லை என்று உணர்ந்தவள், "கண்டிப்பா காலையில மீட் பண்ணலாம். அண்ட் தேங்க்ஸ் பார் தி சாய் அண்ட் யூவர் பிரன்ட்ஷிப்" என்று சொல்லி நித்யா விடைப்பெற்றுக்கொண்டாள்.
இப்போது அனேஷியாவுக்கு மனம் சற்று இலகுவானதுப் போல் இருந்தது. படிப்பு, மேற்படிப்பு, வேலை உயர்பதவி அந்த வேலைபளு, இடையிடையில் சந்தித்த நிறைய பிளிர்ட்ஸ், தன்னுடைய தாயின் இறுதிக் கட்ட போராட்டங்கள் அவரின் வலி, சில பிரிவுகள், எல்லாவற்றுக்கும் மேலே பல வருடங்களாய் அவளை நிம்மதியிழக்க செய்யும் சம்பவம் என்று நிறைய ஸ்ட்ரெசில் இருந்தவளுக்கு இப்போது நினைக்கையில் ரொம்பவும் வருத்தமாக இருந்தது. வாழ்க்கையில் எது நடந்தாலும் வி ஹேவ் டு மூவ் ஆன் என்பது எவ்வளவு நிதர்சனம். புறத்தில் எப்போதே வெளியே வந்துவிட்டதாக தோன்றினாலும் அகத்தால் இன்னமும் அங்கேயே தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிருக்கிறாள் அவள். மூச்சை நன்றாக இழுத்து விட்டாள், தன் செல்போன் எடுத்து அதிலிருக்கும் அவள் தந்தையின் புகைப்படத்தை பார்த்து, "சாரிப்பா. நான் உன்னை ரொம்பவும் கஷ்டப்படுத்திடேனில்ல? இன்னமும் கஷ்டப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். எனக்குப் புரியுது டேட், ஆனா என்னால முடியில... நீயும் ரொம்ப பாவம். அம்மாவை இழந்துட்டு நானும் இப்படி உன் பேச்சைக் கேட்காம, நீயும் எப்படிடா இவகிட்ட கேட்கறதுனு புரியாம ரொம்பவும் கஷ்டப்படுற" என்று புலம்பினாள்.
"தப்புப்பண்ண எனக்கு தண்டனை கிடைக்குது. அதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா எந்த தப்புமே பண்ணாம நீயும் தண்டனை அனுபவிக்கறதுக்கு நான் காரணமாகிட்டேன். ஒன்னு சொல்றேன் அப்பா, இந்த பயணம் எனக்கு அவ்வளவு முக்கியம். நான் எப்பாடு பட்டாவது இந்த பயணம் முடிவுல உனக்கு சந்தோசம் தான் கொடுக்கப்போறேன். கொடுக்கணும். என்ன அது நானும் சந்தோசபட்டு உனக்கும் சந்தோசம் தரமாதிரி இருந்தா நல்லா இருக்கும். இல்ல உன் சந்தோஷத்துக்காக நான் பொய்யா நடிச்சு நானும் சந்தோசம் படுற மாதிரி அமைந்தா கூட உனக்காக நான் அந்த வாழ்க்கையை தான் சந்தோச படுறமாதிரி நடிச்சாச்சும் கடத்துவேன். எப்படிப்பார்த்தாலும் நீ சந்தோஷ படுவ அது நிச்சயம். நான்???" அவளின் எண்ணவோட்டங்கள் எங்கெங்கோ சென்று அப்படியே உறங்கியும் போனாள்.
...........................
அங்கே ஹேமந்த் ஜிட்டன் இருவரும் கொஞ்ச நேரம் அவரவர் வாழ்வில் நடந்தவற்றை பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால் இங்கே ஜிட்டுவிடம் பேசிக்கொண்டு இருந்தாலும் அப்பப்போ ஹேமந்த்தின் கண்கள் அப்பெண்கள் மூவரின் மீதும் அலைபாய்ந்துக்கொண்டிருந்தது. நிச்சயம் தவறான கண்ணோட்டத்தில் இல்லை. குறிப்பாக ஜெசிந்தாவின் மீதே இருந்தது. அவன் இப்படி எங்கேயோ வேடிக்கைப் பார்ப்பது தெரிந்து ஜிட்டுவும் அவர்களைக் கண்டுக்கொள்ள "ஹேமா அது செபா வைஃப் தானே?
திரும்பி முறைத்தான் ஹேமந்த்.
"டேய் நிஜமா அது ஜெசிந்தா தான். நான் செபா கல்யாணத்துக்கு வந்தேன். எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. உனக்கில்லையா?" என்றவனை மீண்டும் முறைக்க,
"ஓ அப்போ உனக்குத் தெரியுமா? நான் தான் லேட்டா? சரிவிடு... அதுதான் விடுன்னு சொல்லிட்டேன்ல அப்புறோம் ஏன்டா என்னையே முறைக்கிற?"
"கஷ்டம்"
"என்ன கஷ்டம்?"
"இல்ல உன்னையெல்லாம் நம்பி ஒரு பொண்ணு, அதான் உன்னை இதித்ரி கல்யாணம் பண்ணா அந்த பொண்ணு நிலைமையை நெனச்சேன்..."
"டேய் சும்மா அடங்குடா, அதெல்லாம் ஒன்னுமில்ல நான் அவளை பத்திரமா பார்த்துப்பேன்"
"எப்படி நாம கோவா டூர் போன போது ஒரு நார்த் இந்தியன் பையனை பார்த்துக்கிட்டயே அப்படியா?" என்று சொல்ல,
"டேய் அது ஏதோ ஒரு முறை தவறிடுச்சு" என்று சொல்ல உடனே ஹேமந்த் அவனைக் கட்டுப்படுத்தமுடியாமல் வந்த சிரிப்பை உதிர்க்க இப்போது அந்த பெண்கள் கூட்டம் திரும்பி இவர்களைப் பார்த்தது.
கோவா டூர் இவங்க பசங்கயெல்லாம் சேர்ந்து போனாங்க. அப்போது ஒருநாள் மாலை அங்கிருக்கும் பாகா பீச்சில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து குளித்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே ஒரு நார்த்இந்தியன் கப்பில் அவர்களின் இருகுழந்தைகளுடன் வந்திருக்க எதையோ மறந்துவிட்டதால் அவர்கள் இருவரும் குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு அருகிலிருந்த இவர்களிடம் கொஞ்சம் பார்த்துக்கோங்க 5 மினிட்ஸ் நாங்க வந்துடுறோம்னு சொல்லிட்டு போக அங்கிருந்த மணிகண்டன் (இவன் அவர்களோடு படித்த மாணவன். ஆனால் அவ்வளவு க்ளோஸ் இல்லை. இக்கதாபாத்திரம் இக்கதையில் இனி வராது, நோ ஒற்றீஸ் ) வேண்டாம் நமக்கெதுக்கு வம்பு என்று சொல்ல, இவனோ அதற்குள் சரியென்று தலையை ஆட்ட அவர்கள் விடைபெற்றுக்கொண்டனர். சரியாக அப்போது சில பாரிநேர்ஸ் (foreigners ) அங்கே ஸ்விம் சூட்டில் (இதெல்லாம் கோவாவில் வெகு சாதாரணம்!) வர எல்லோரும் இங்கேயிருக்க அவர்களோடு சென்று போட்டோ எடுக்க ஜிட்டு ஓட (அவர்கள் நம்மோடு போட்டோ எடுத்துக்கொள்வார்கள். அதே உடையில்,) பின்னாலே மற்றவர்களும் சென்றுவிட எல்லோரும் அவர்களோடு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர் (அதெல்லாம் அந்த வயசுக்கே உரிய ஒரு பன் fun) நிறைய போட்டோக்கள் எடுத்துக்கொண்டு வர சரியாக அந்த நார்த் இந்தியன் பெண் ஒரு குழந்தையைக் காணவில்லை என்று தேட ஜிட்டனைக் கண்டு கண்டபடி திட்டி "நீ தான் பிள்ளையை கடத்திவிட்டாய்" என்று கூச்சலிட கூட்டம் சேர்ந்துக் கொள்ள அதற்குள் போலீஸ் வந்துவிட ஜிட்டன் முகத்தைப் பார்க்கவேண்டுமே! அழுதே விட்டான். ஒருவழியாக எல்லோரும் சேர்ந்து தேட அக்குழந்தை தூரம் வேறு சில குழந்தைகளுடன் விளையாடுவதைக் கண்டுபிடித்து ஒப்படைக்க ஜிட்டனை எல்லோரும் சேர்ந்து வாங்குவாங்குவேனா வாங்கினர்.
நாமளே இந்த இடத்துக்கு புதுசு, இதுல இந்த சமூக சேவையெல்லாம் தேவையா என்று சொல்ல, அதன்பிறகு அன்றிரவு எல்லோரும் கேம்ப்பைர் (camp fire) போது அவனை வைத்து செய்ததெல்லாம் வேறுகதை...

ஹேமந்த் சிரித்ததற்குக் காரணம், ஜிட்டனின் சுபாவம் அப்படி. ஆளு பேச்சில் மட்டும் நன்றாக உதார் விடுவான். ஆனால் பயங்கர தொடைநடுங்கி. இதை இவன் நித்யாவிடம் பேசும்போதெல்லாம் நீங்கள் பார்த்திருக்கலாம்.
ஜெசிந்தா :
ஒரு பெரிய பிசினஸ்மேனின் இரண்டுப் பெண்களில் மூத்தவள். அதிக செல்லம் கொஞ்சமே கொஞ்சம் கண்டிப்பு. அதற்காக ஸ்பாய்ல்ட் பிராட் (spoiled brat - கொஞ்சம் அடங்காத குழந்தை. brat என்றால் குழந்தை) என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அதிக பிடிவாதம் கொண்டு வளர்த்தப்பட்டவள். அவள் அன்னை தான் எத்தனையோ முறை சொல்லிச் சொல்லி சலித்துவிட்டார். அவள் தன் குணத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை. இவர்களின் பிசினஸ் சம்மந்தமாக ஆடிட்டிங் ஒர்க் பார்க்கும் ஆடிட்டரின் நெருங்கிய நண்பர் தான் செபாஸ்டினின் தந்தை (அவரும் ஆடிட்டர் தான்). எதேர்ச்சையாக தன் மகனுக்கு வரன் தேடுவதாய் இவர் சொல்ல அப்படி அறிமுகமானது தான் ஜெசிந்தாவின் குடும்பம். மேலும் அவர்களின் வசதிக்கு ஒன்றும் பெரிய குறை இல்லை என்பதாலும் செபாஸ்டினின் தந்தைக்கு இருக்கும் அந்த நல்ல பெயரின் காரணமாகவும் இருகுடும்பமும் ஒற்றுக்கொண்டு எதற்கும் தங்கள் பிள்ளைகளிடம் கேட்டுவிடலாம் என்று சொல்ல, செபாவின் தந்தை தான் சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ்ராஜ் ஆச்சே? நான் சொன்னால் என் மகன் மறுப்பேச்சு தட்ட மாட்டான் என்றதும் முடிவானது இவர்களின் திருமணம்.(இதெல்லாம் ஜெசிந்தா - செபாஸ்டின் போர்சனில் மீண்டும் வரும். இதுபோதும் இப்பொழுது)
ஏனோ ஆரம்பம் முதலே ஜெசிந்தா - செபாஸ்டின் இருவருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்துக்கொண்டிருந்தது. ஒரு ஃபிரண்டாகவே இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இருவருக்கும் ஈகோ. எட்டு மாதங்கள் ஓடிவிட்டது. இன்று மாலை ஜெசிந்தா அழுததற்கான காரணமும் இது தான். தான் சம்மந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் தன்னால் முடிவெடுத்து அதில் சாதிக்கவும் தெரிந்தவளாள் இப்படி தன் திருமண வாழ்க்கை மட்டும் கைமீறி சென்றுக்கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கம். எல்லோருக்கும் கல்யாணம் என்றால் ஒரு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு இருக்கத் தானே செய்யும்? அப்போது தனக்கும் அந்த எதிர்பார்ப்பு இருப்பதில் தவறில்லை தானே? ஆனால் தன் வாழ்வு மட்டும் ஏனிப்படி இருக்கிறது? அவளின் கடந்த சில வருடங்களில் மிக நம்பகமான நபர்கள் என்றால் அவளின் கொலீக்ஸ் தான். அதிலும் பெனாசிர் சற்று நெருக்கம். இருவரும் ஒரே கல்லூரி. ரேஷா லோகேஷ் இஸ்மாயில் ஆகியோர் இங்கே வந்ததிலிருந்து க்ளோஸ். இன்னும் ஓப்பனாக சொல்ல வேண்டுமென்றால் கல்யாணமாகியும் இருவரும் இன்னும் 'பேச்சிலர்' வாழ்க்கையை தான் இந்த எட்டு மாதங்களாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அழுத்தம் அவளுக்குள் நிறைய இருக்கிறது.
பெனாசிர் :
ஒரு லிபெரல் இஸ்லாமிய குடும்பத்துப் பெண். தந்தை அட்வொகேட். தனக்கு ஒரு அண்ணன் ஒரு தம்பி. அதனாலே டேட்'ஸ் லிட்டில் பிரின்சஸ் ஆக வலம்வருபவள். தந்தையின் வழிகாட்டுதல் படியே பொருளாதாரம் படித்து அதிலும் சாதித்து தற்போது வேலை செய்துக்கொண்டே பிஎச்டி (phd - in social work ) செய்துக்கொண்டிருக்கிறாள். அந்த சூர்யா இன்சயிட்ஸ்ல், சமூக காரணிகளில் குறிப்பாக 'பொது சுகாதாரம்' (health ) செக்ட்டாரில் நிறைய தீசிஸ் எழுதி லேன்செட் (lancet - மெடிக்கல் ஜர்னல் (medical journal )) முதலிய பிரபலமான பத்திரிகைகளில் நிறைய ஆர்டிகல்ஸ் எழுதியுள்ளார். நல்ல இன்டெலிஜெண்ட் ஆனவள். அதேபோல் ரொம்பவும் கலகலப்பானவள். எல்லோரிடமும் வெகு சாதாரணமாய் பழகக்கூடியவள். அப்படிதான் எல்லோரிடமும் பழகிக்கொண்டிருக்கிறாள்.
திருமணத்திற்கு அலைன்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சரியாக பிடிக்கொடுக்காமல் சென்றுக்கொண்டிருக்கிறாள். அதற்கு ஜெசிந்தாவின் திருமண வாழ்க்கை ஒரு முக்கிய காரணம். அவள் வாழ்வின் டே டுடே நிகழ்வுகளைக் கேட்டுக்கொண்டிருந்தாலோ என்னவோ ஒருவேளை நாளை நாமும் திருமண செய்துக்கொண்டால் இப்படி தான் கஷ்டப்படவேண்டுமோ என்று எண்ணவும் தொடங்கிவிட்டாள். தன்னை நீண்ட நாட்களாய் 'டா'வடித்துக்கொண்டிருக்கும் இஸ்மாயிலை கண்டும் காணாமல் ஒதுங்கிச் சென்றுக்கொண்டிருக்கிறாள்.
ஆனால் இந்த கேங்கில் அந்த ரகசியம் அறிந்துள்ளவள் இவள் மட்டுமே. அதாங்க செபாஸ்டினையும் - ஜெசிந்தாவையும் ஒன்றுச் சேர்க்கும் அந்த நாடகத்திற்கு நித்யா, மிருவிடம் பேசி ஒன்றும் தெரியாத 'பாப்பா ' போல் இப்போது ஜெசிந்தாவிடம் பயணித்துக்கொண்டிருக்கிறாள். எப்படியாவது தன் தோழியின் வாழ்வில் ஒரு மாற்றம் வந்துவிடாதா? என்று துடிக்கிறாள்.
..................
ஜிட்டேந்தர் :
வசதி குறைந்த கிட்டத்தட்ட மிடில் கிளாஸ் ஆச்சாரமான பையன். தந்தை ஒரு உலகளந்த பெருமாள் கோவிலில் அர்ச்சகராக இருக்கிறார். அது அவ்வளவு பிரசித்திபெற்ற கோவிலும் இல்லாததால் பொருளாதார நிலை கொஞ்சம் கம்மிதான். ஆனால் தற்போது இவன் வேலைக்கு சென்றுக்கொண்டிருப்பதால் கொஞ்சம் நிலைமை பரவாயில்லை. நியூ இந்தியா அஸுரன்ஸ் என்னும் பொது காப்பிட்டு நிறுவனத்தில் ஒரு அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிஸேராக இருக்கிறான். சொல்லப்போனால் அந்த கேங்கிலே அரசு உத்தியோகத்தில் இருப்பவன் இவன் ஒருவனே. ஒரு அரசு ஊழியர் என்பதை சுத்தமாக மறந்து எல்லோரும் இவனை அந்த கலாய் கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவன் அதற்கெல்லாம் எப்போதும் கோவப்படமாட்டான். அது தான் இவனின் சுபாவம். ரொம்பவும் ஜாலியான ஆள். இவனை யாராவது கலாய்த்து இவனை பழிவாங்க நினைத்தால் பாவம் அவர்கள் தான் நொந்து நூடுல்ஸ் ஆவார்கள். பின்னே "வந்தமா கலாச்சமா போனமான்னு இருப்பியா. போடா போயி புள்ளகுட்டிய படிக்க வைப்பியா" என்று கலாய்க்க வந்தவர்களையே கலாய்த்து அனுப்பும் ஆள். ஆனால் இவன் பெட்டிப்பாம்பாய் அடங்குவது நித்யாவிடம் மட்டும் தான். அது ஏனென்றெல்லாம் தெரியாது. சிலரிடம் நமக்கு ஓர் உணர்வு இருக்குமே. நம்மை அவர்கள் என்ன செய்தாலும் நாம் அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டோமே அதுபோல் தான். என்னதான் நித்யா இவனை பங்கம் செய்தாலும் இவன் அமைதியாகவே இருப்பான். ஒரு வேளை நித்யா அமைதியாக இருந்தால் இவனே சென்று அவளை வெறுப்பேத்தி கலாய் வாங்குவான்.
முன்பே சொன்னதுப் போல், நித்யா - விவான் இருவரின் காதலுக்கு சாரி இருவரின் அறிமுகத்திற்கே இவன் தான் காரணம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதனாலோ என்னவோ நித்யாவிற்கும் இவன் மேல் அலாதி ப்ரியம். இவன் குணம் தெரிந்ததால் தான் இவனை எப்போதும் கலாய்த்துக்கொண்டிருப்பாள்.
நித்யாவின் திருமணத்திற்கு சென்றவன் அப்போது பார்த்து மையல் கொண்டவள் தான் இதித்ரி. சும்மா ஆரமித்த பழக்கத்தை தன் 'ராஜ தந்திரங்களால்' இன்று காதல் வரைக் கொண்டுவந்து விரைவில் மணமுடிக்க போகிறார்கள். (அதற்கு அவன் நித்யாவிடம் கெஞ்சி கூத்தாடியது எல்லாம் வேறு கதைகள். அவனைப் பற்றிவரும் போது பார்க்கலாம்) இந்த கேங்கில் அடுத்த இரண்டு அறிவிக்க படப்போகிற 'ஜோடிகளில்' இவனும் இதித்ரியும் ஒன்று. மற்றொன்று ஹேமந்து - மௌனிகா. அதில் இன்னமும் சில இடியாப்ப சிக்கல் ஜோடிகள் இருக்கின்றது. அது தான் துவாரா - மிரு - தியானேஷ் (நீங்கள் பயப்பட வேண்டாம். மிருவின் ஜோடி இருவரில் ஒருவன் தான். ரிலேக்ஸ் ப்ளீஸ். மிரு கேரெக்டர் கொஞ்சம் காம்ப்ளெக்ஸ் ஒன்.)
.................................................
ஹேமந்த் ஏதேதோ யோசனையில் இருக்க புரண்டு படுத்தவன் அருகில் ஜிட்டன் உறங்காமல் இருக்கக் கண்டு, "என்ன டா தூங்கலயா?"
அவன் முறைத்தான்.
"என்னாச்சி? இப்போ ஏன் இப்படி பார்க்கற?"
"டேய் நான் பார்க்கல முறைக்கிறேன்" என்று அழுத்திச்சொல்ல,
"சிரித்த ஹேமந்த், சரி அப்படியே வெச்சிப்போம், இப்போ சொல்லு ஏன் முறைக்கிற?"
"ஏன்டா நீயெல்லாம் ஒரு காதலனா? உன்னையெல்லாம் எப்படி டா நம்பி மௌனி உன்னை காதலிக்கிறா?"
ஹேமந்த் முகம் கடுமையானது. அவனுக்கு மௌனிகாவைப் பற்றி யாரேனும் குறைச் சொன்னால் பொல்லாத கோவம் வரும்...
"இந்த முறைக்கிற வேலையெல்லாம் வேணாம். ஏன்டா உன்னை நம்பி வந்திருக்காளே அவக் கூட ஜாலியா நைட் ட்ராவல் பண்ணிவியாம். அதைவிட்டுட்டு இப்படி என் கூட இருக்கியே" என்று சொல்ல,
"என்ன பக்கத்து இலைக்கு பாயாசமா?"
"ஆமாடா, பேசாம நீ அங்க மௌனி கூட போயிட்டு இதித்ரியை இங்க அனுப்பேன்" என்று 'ஒபெனாகவே ' ஜிட்டன் கேட்பான் என்று ஹேமந்த் நினைக்கவில்லை. அவன் இன்னும் கோவமாய் முறைக்க,
"டேய் நீயாச்சும் பீச் பார்க் தேட்டர்னு அங்கங்க போயிருப்ப. ஆனா நான்? ஐ'ம் பாவம் புவர் இந்தியன் யூ நோ?" என்று சீரியஸாக கேட்க,
"நீ பார்த்த? நாங்க பார்க் பீச்சு தியேட்டர்னு சுத்துனதைப் பார்த்த?" என்று கோவமாய் கேட்கவும்,
"மச்சான் அப்போ நீயும் என் இனம்தானா? சூப்பர்டா அப்போ இப்பவும் ஒன்னும் கெட்டப்போல, வா நேரா அங்க போவோம் நீ மௌனிகூட இங்க வா நான் இதித்ரியை எங்கேயாவது..." என்று முடிக்கும் முன்னே அவன் தலையில் குட்டியிருந்தான் ஹேமந்த். ஜிம் பாய் என்பதால் அவனின் குட்டே அவனுக்கு அந்த வலி கொடுக்க,
"நல்லா கேட்டுக்கோங்கடா, விர்ஜின் பையன் சாபம் உங்களைச் சும்மாவே விடாது" என்றுச் சொல்லி அவன் திரும்பி படுத்துக்கொள்ள, ஹேமந்த் சிரித்தான். ஏனோ அவனுக்கும் இப்போது மௌனியைப் பார்த்திட வேண்டுமென்று மனம் இம்சித்தது. அவன் செல்போனை எடுத்து, அதையே கொஞ்சம் உற்றுப் பார்த்து, "இந்த போன் தானே மௌனிமா நம்மள மீட் செய்யவைத்தது" என்று அவர்கள் காதல் நாட்களை நினைத்தபடிய உறங்கியும் போனான்.
........................................
அங்கே விவான் அவர்களின் கம்பார்ட்மெண்ட் சென்றதும் இளங்கோ தியானேஷ் இருவரையும் அவரவர் இருக்கைக்கு அனுப்பிவிட்டு தன்னுடைய இருக்கைக்கு வந்து அமர்ந்தவnனின் மனமெல்லாம் கொஞ்சம் படபடப்புடனே காணப்பட்டது. காரணம் நிச்சயமாக இருக்கிறதே. இப்பயணம் எவ்வித தடங்கலும் இன்றி முடியவேண்டும் என்று அவன் நினைத்தாலும் அவன் உள்ளுணர்வு ஏதோ தவறாகவே சொல்லிக்கொண்டிருந்தது. அவன் என்ன செய்வதென்று புரியாமல் இருக்க அவனின் செல்போனை எடுத்து பார்க்க,
"தேங்க் யூ சோ மச்" என்று மெஸேஜ் வாட்சப்பில் வந்திருக்கக் கண்டு,
சிரித்தவன், கோவமாய் ஸ்மைலி போட்டு "தேங்க்ஸ் எல்லாம் வேணாம், எல்லாம் அஸ் பர் பிளான் தானே போகுது?" என்று குறுந்செய்தியை அனுப்பிவிட்டு காத்திருக்க பதிலே வராததால் இவனும் அமைதியாக படுக்கச் சென்றான்.
ஏதோ தோன்றியவனாய் துஷ்யந்தைத் தொடர்புக்கொள்ள அது முழு ரிங்க் போயும் எடுக்கப்படவேயில்லை. சரி அவன் வந்துவிடுவான். அவனுக்கு தான் இன்னும் டைம் இருக்கிறதே என்று நினைத்து உறங்கினான. ஊட்டியிலிருந்து வந்த களைப்பு , கொஞ்சம் லாங் பிரேக் என்பதால் எல்லா வேலையும் பொறுப்பாக ஒப்படைத்துவிட்டு கூடவே தன் தாய் தந்தைக்கு வேண்டிய உதவிகள் நபர்கள் எல்லாமும் சரிசெய்துவிட்டு வந்தவனுக்கு நிறைய அசதியாகவே இருந்தது. அப்படியே படுத்தவன் தான் உறங்கியும் போனான். (பயணங்கள் முடிவதில்லை ,,,)
 
Top