Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 5

Advertisement

praveenraj

Well-known member
Member
இவ்வளவு நேரமாக கிளீனிங் பிராசெசில் இருந்த திப்ருகார்க் எக்ஸ்பிரஸ் ஆனது முதன் முதலில் தாம்பரத்தில் தன்னுடைய இருப்பை பதிவு செய்யும் விதமாக ஒரு பெருத்த அறைகூவலை விடுத்தது. மணியைப் பார்க்க அது 9 .30 ஐ கடந்திருந்தது. வண்டி தாம்பரத்திலிருந்து கழுவிவிடப்பட்டு புறப்பட தயாராகிவிட்டது என்று மொபைலில் 'வேர் இஸ் மை ட்ரெயின்' ஆப் மூலமாக விவான் பார்த்துச் சொல்ல எல்லோரும் தங்களின் உடமைகளை மீண்டுமொரு முறை சரிபார்த்து விட்டு அமர்ந்தனர்.
"மச்சான் விவானு செகண்ட் ஏசி தானே?" - ஜிட்டன் தீவிரமாகக் கேட்க விவான் உக்கிரமாக முறைத்தான்.
"ஏன் சார் உங்க சீட் தேர்ட் ஏசில லாம் உட்காராதோ?" என்று நக்கலாய் இளங்கோ ஜிட்டனைக் கேட்க,
"ஏய் அப்போ செகண்ட் ஏசி இல்லையா? என்றவனைப் பார்த்து, "இந்தாங்க ராஜ பரம்பரை உங்க டிக்கெட். எங்களால் உங்களுக்கு தேர்ட் ஏசில தான் போட முடிஞ்சது. சாரி. நீங்க உங்க கம்போர்ட்க்கு எது தோது வருமோ அதுல வந்துடுங்க. சரியா?" என்ற விவான் அவனிடம் டிக்கெட்டை நீட்ட,
"மச்சான் ஒரு கேள்வி தானடா கேட்டேன். அதுக்கெதுக்கு இவ்வளவு கோவம்?"
"ஏன்டா நான் எத்தனை தடவ உங்க எல்லோரையும் கேட்டுட்டு தானே புக்கே பண்ணேன்? அப்பல்லாம் உன் இஷ்டம் மச்சான். உன் இஷ்டம்னு மண்டையை மண்டையை ஆட்டிட்டு இப்போ வந்து செகண்ட் ஏசியானு கேட்குற?"
"சரியில்ல மச்சான். சரியல்ல. ஏன்டி எப்படி இருந்த என் விவான இப்படி மாத்திட்ட?" என்று விவான் தன் மீது காட்டியக் கோவத்தை அப்படியே ஜிட்டு நித்யா மீது காட்ட,
"இங்க பாரு இந்த எகுறும் வேலையெல்லாம் மத்தவங்க கிட்ட வெச்சிக்கோ. என்கிட்டே வேணாம். கண்ணாடி கிண்டாடி எல்லாம் பறந்திடும் பார்த்துக்கோ." என்று அவனை மிரட்டினாள் நித்யா.
"என்னிவே என்னிவே (என்னையே என்பதை தான் அந்த மாடுலேஷனில் சொல்கிறான்) நீ அடிச்சிடுவையா? என்னிவே" என்று முன்னால் வர அதற்குள் அவள் கையிலிருந்த சூடான காஃபியை மீண்டும் அவன் புறம் ஊற்றப் போக,
"ஏய் நித்யா, பழசெல்லாம் மறந்துட்டியா? நான் மட்டுமில்லன்னா உனக்கு எல்லாம் கல்யாணமே ஆகியிருக்காது பார்த்துக்கோ?" என்றான்.
அவன் அப்படி சொன்னதும் மற்றவர்கள் எல்லோரும் அவ்வளவு தான் இன்னைக்கு ஜிட்டன் வாங்க போறான் என்று நினைங்க, மாறாக அவளோ அமைதியாக நின்றாள்.
அவன் அப்படி சொன்னதுமே உடனே அங்கிருந்த இளங்கோ மென்புன்னகையைச் சிந்த,
"ஏய் என்ன நித்யா, அவன் பாட்டுக்கு ரீல் ரீலா விட்டுட்டே இருக்கான் நீ என்னனா அமைதியாக நிக்குற?" என்று அதிதீவிரமாக மிரு வினவ,
"எப்படி பேசுவா? பின்ன அவ காதலுக்குகாக நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா?" என்றவன் பேசியபடியே மெல்ல இடுப்பைத் தேய்க்க, குபீரென விவானும் நித்யாவும் இளங்கோவும் சிரித்து வைத்தனர்.
அப்போது தான் அங்கிருந்த விவியன், ஹேமந்த், மௌனி, மிரு, தியா, பாரு, ஏன் இதித்ரி கூட ஆச்சரியமாக பார்த்தனர். பின்ன இந்த கதைகள் எதுவும் யாருக்குமே தெரியாதே. இவன் சொல்லுவது சும்மா விளையாடுகிறான் என்று நினைத்திருந்தவர்களுக்கு அவர்களின் சிரிப்பு அவன் சொல்லுவது எல்லாமும் உண்மை தானோ என்ற கேள்வியைத் தூண்டியது.
"நித்யா அப்போ இவன் சொல்லதெல்லாம்..." என்று இழுவையாய் இழுத்த மிருவிடம்,
"என்ன என்னையைப் பார்த்தா கிறுக்கனா தெரியுதா உங்க எல்லோருக்கும்? நான் அனுமார் மாதிரி" என்று சொன்னவுடனே,
"அதுதான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே" என்று தியானேஷ் கவுன்டர் தர,
முறைத்தவன், "குரங்கில்ல குரங்கே, ராமன் சீதா காதலுக்கு தூதுபோன அனுமான் மாதிரி இதோ இதுங்க காதலுக்கு தூதுபோன ஆளு நான் தான், நியாயப்படி பார்த்தா எனக்கு இவங்க வருஷாவருஷம் என் பேருல ஒரு பாராட்டு விழாவே எடுக்கணும், இருந்தும் பரவாயில்ல... கழுதைங்க ரெண்டும் எனக்குத் தெரிந்ததுங்களா போயிடுச்சி" என்று இழுத்து வசனம் பேச,
"ரொம்ப பேசுறானே" என்று நினைத்த தியானேஷ், "டேய் மூடு பண்ணது மாமா வேலை இதுல ஒரு பெருமை" என்று சொல்ல,
"சீச்சீ மாமா கிமான்னு கொச்சைப்படுத்தாத" என்று பெரிய மனிதத்தன்மையாய் சொல்ல,
"அப்படி என்னத்தைப் பண்ணி கிழிச்ச நீ? சொல்லுப் பார்ப்போம்..."
"அதை இதுங்க ரெண்டு பேரு கிட்டயே கேளு. இல்லயில்ல எல்லாத்தையும் துவாரகேஷிடம் கேளு அவன் சொல்லுவான் நான் பண்ணது மாமா வேலையா இல்லை தூதுவனான்னு..." என்று சொல்லி எங்கே நின்றால் எல்லோரும் ரவுண்டு கட்டிவிடுவார்களோ என்று நினைத்து அக்கூட்டத்திலிருந்து அலேக்காக எஸ் ஆகினான் ஜிட்டன்.
ஏனோ அவன் அப்படி சொல்லிப் போனதும் நித்யா விவான் இருவருக்குமே அவரவர் காதல் நாட்கள் நினைவு வர ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாளா?" என்று இப்பொது விவான் நித்யாவை அங்கிருந்தவர்கள் எல்லோரும் கலாய்க்க இருவரும் தத்தம் நினைவுக்கு வந்து ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் பிரிந்து அமர்ந்தனர்.
அதற்குள் நித்யாவிற்கு அவளின் போனில் அழைப்பு வந்தது. எடுத்துப்பார்த்தவள் தன் மாமியார் என்றதும் உண்மையான அன்போடு,
"சொல்லுங்கம்மா"
"எங்க மா இருக்கீங்க? கிளம்பிடீங்களா?"
"இல்ல இன்னும் ஒரு 40 நிமிஷம் ஆகும் போல"
"சாப்டீங்களா?"
"அதெல்லாம் ஆச்சி... நீங்க சாப்டாச்சா? மாத்திரை போட்டுடீங்களா? அப்பா சாப்பிட்டாரா? அவரும் மாத்திரை போட்டாரா?"
இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் வர, "நிறுத்து நிறுத்து. என்னையும் கொஞ்சம் பேச விடு தாயி, சொல்றேன்..."
"சாரி அம்மா சொல்லுங்க..."
"நானும் சாப்டாச்சு. அவரும் சாப்டாச்சு. அவருக்கு மாத்திரையெல்லாம் கொடுத்துவிட்டு அவர் தூங்கவே போயிட்டாரு. நானும் தூங்கணும். என்ன என் பேத்தி இல்லாம வீடே வெறிச்சோடி போயிடுச்சி. அதுதான் விசாரிக்கலாமேன்னு..."
"அப்போ பையன், மருமகள் எல்லாம் முக்கியமில்லை அப்படி தானே?"
"ஐயோ அப்படியெல்லாம் இல்லைடா. சும்மா..."
"அம்மா அவ துவாரா கூட இருக்கா. நான் இங்க மிரு கூட இருக்கேன். அவரு அங்க இளங்கோ கூட இருக்காரு. பேசணுமா?"
"அப்படியா? ரொம்ப தூரமா இருக்கானா?"
"இருங்க தரேன்..."
"விவான்...விவானு... டேய் ஹேமா ஹேமா..."
"என்ன நித்யா?"
"விவானைக் கூப்பிடு அம்மா லைன்ல இருக்காங்க..."
வந்து வாங்கியவன், "அம்மா நான் ஹேமந்த் பேசுறேன். நல்லா இருக்கீங்களா?"
"நல்லா இருக்கேன் ப்பா. அப்புறோம் அப்பா அம்மா எப்படி இருக்காங்க? தங்கைக்கு எப்போ கல்யாணம்?"
"பார்த்துட்டே இருக்கு. இன்னும் செட் ஆகலை."
"அப்போ அதுகப்புறோம் தான் உனக்கா?"
"ஆமாம்மா... அப்பா எப்படி இருக்காரு?"
"அவரு தூங்கிட்டாரு கண்ணா..."
"அப்படியா? சரி இருங்க விவான் கிட்ட தரேன்..."
"ஹேமா... துவாரா எங்க இருக்கான்?"
"துவாரா தான் உங்களுக்கு முக்கியம். அப்படி தானே?"
"எல்லோரும் ஒன்னு தான் கண்ணா..."
"துவாரா இங்க இல்ல. நான் விவான் கிட்ட தரேன்."
விவான் வாங்கியவன் சில குசல விசாரிப்பு எல்லாம் விசாரித்து அவரைச் சென்று உறங்கச் சொல்லிவிட்டு போனை நித்யாவிடம் தந்தான்.
......................................................
2. விவான்
விவானின் பெற்றோர்கள் பரம்பரை பணக்காரர்கள். அவர்களின் பூர்விகமே ஊட்டி தான். அங்கே அவர்களுக்கென்று ஒரு எஸ்டேட் உள்ளது. எதுவும் அவன் தந்தை காலத்திலோ இல்லை தாத்தா காலத்திலோ அவர்கள் சம்பாதித்தது இல்லை. அதற்கும் முன்னே அவர்கள் பரம்பரை சம்மதித்தது. அவர்களின் பெற்றோர்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று முறை தவறி நான்காவதாவதாக பிறந்தவன் தான் விவான். விவான் என்றால் முழுமையான வாழ்வு என்று பொருள். இது கிருஷ்ணரின் பெயரும் கூட. அதனாலே அவனுக்கு இந்த பெயர் வைத்தனர . ஒரே மகன் . அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்துக்கு ஒரே வாரிசு.
நன்றாக படித்தவன் பின்பு கல்லூரி படிப்பை மட்டும் வெளியே (ஊட்டி அல்லாது ) படித்தான். அப்போது அங்கு அவன் கண்டவள் தான் நித்யஸ்ரீ. ஜிட்டன் சொன்னதுபோல் அவன் தான் விவான் நித்யாவின் காதலுக்கு பெரிதும் உதவியவன். எப்படி என்றெல்லாம் பின்பு ஒரு எபியில். படிக்கும் காலத்திலிருந்தே நித்யாவுக்கும் ஜிட்டனுக்கும் ஆகவே ஆகாத . ஆனால் அது தீவிர சண்டையெல்லாம் கிடையாது. ஒருவரை ஒருவர் கலாய்த்து வெறுப்பேற்றிக்கொள்ளவர். அவ்வளவு தான். அது இன்றுவரை தொடர்கிறது. அவர்களின் காதலின் சாட்சியாக தான் இளவேனில் இருக்கிறாள். அந்த கேங்கில் முதலில் திருமணம் ஆனதும் இவர்களுக்கு தான். குழந்தை பிறந்ததும் இவர்களுக்கு தான். மோஸ்ட் லவ்வபில் கபிள்ஸ்.
இவர்களுக்குள்ளும் ஒரு சில சிக்கல்கள். அதற்காகவும் தான் இந்த பயணம். இது இவர்கள் வாழ்வை எவ்வாறு சரிசெய்யும்? பார்ப்போம்.
3. நித்யஸ்ரீ
நித்யஸ்ரீ சாரி சாரி. டாக்டர் நித்யஸ்ரீ விவான். கொஞ்சம் டிபிக்கல் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த செல்ல பெண். படிப்பில் படு சுட்டி. ஆசைப்பட்ட படியே டாக்டர் படிக்க வாய்ப்பு கிடைத்தது. சென்றாள் படித்தாள . கூடவே காதலும் வந்தது. சில பல போராட்டங்களுக்குப் பிறகு ஒருவழியாக தன் ஆசை நாயகனை கரம் பிடித்தாள். அவர்களின் காதலின் சாட்சியே இளவேனில்.
முதலில் பெற்றவர்கள் வீட்டில் சப்போர்ட் இல்லை. ஆனால் விவானின் தாய் தந்தையின் முழுமையான ஆதரவு இவளுக்கு தான். அவர்களுக்கு இவள் தான் இப்போதெல்லாம் பிரதானம். விவானே இரண்டாம் பட்சம் தான். அதும் அவ்வளவு சுலபமாக கிடைக்க வில்லை. காதலில் அவள் பெற்றதும் அதிகம் இழந்ததும் அதிகம்.
1 ac : ஒரு கம்பார்ட்மெண்டில் 2 அல்லது 4 பர்த் இருக்கும் .
2 ac : ஒரு கம்பார்ட்மெண்டில் 6 பர்த் இருக்கும் .
3 ac : ஒரு கம்பார்ட்மெண்டில் 8 பர்த் இருக்கும் .

அங்கே இளவேனிலை கையில் வைத்துக்கொண்டு அவளோடு மழலை மொழியில் பேசி ரசித்துக்கொண்டிருந்த துவாராவிற்கு ஏனோ அவனின் மழலை ஞாபகம் வந்தது. கூடவே கீர்த்தனாவின் மழலையும் ஞாபகம் வந்தது. (கீர்த்தனா துவாரவின் தங்கை.) வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று போல் அமைவதில்லை. அது அந்த பேப்பர், சிறுவர் மலரில் வரும் வழி கண்டுபிடிங்க புதிர் போன்றது. இந்த குட்டி முயல் தன் தாயை பிரிந்து விட்டது. வழிகள் நிறைய உள்ளதால் கொஞ்சம் உதவுங்கள் என்று இடியாப்பம் போல நிறைய பாதைகளை போட்டு கீழே தாய் முயலையும் போட்டிருப்பார்கள்? அதுபோல் தான் இங்கே நம் எல்லோருடைய வாழ்க்கையும். கிட்டத்தட்ட எல்லோரின் டெஸ்டினேஷன் ஒன்று தான் என்றாலும் பாதைகள் வேறு வேறு. சிலர் வெகு சுலபமாக பாதையைக் கண்டுபிடித்துவிடுவார்கள். சிலரோ ஒன்றிரண்டு ட்ரையல் அண்ட் எர்ரர் (trl and error ) முறையில் நிறைய முயற்சிகளைச் செய்ய வேண்டும். அதில் சிலர் வேகமாக தங்கள் இலக்கை அடைந்து அடுத்த இலக்கை நோக்கிச் செல்வார்கள். சிலரோ முதல் இலக்கை அடையவே கொஞ்சம் சிரமப்பட வேண்டும். ஒன்றே ஒன்று, அடுத்தவன் போட்ட பாதையை அப்படியே காப்பி அடிப்பது பார்க்க சுலபமாக தெரியலாம் ஆனால் ஒருவேளை அது தப்பாகி விட்டால் முதலில் போனவன் கூட தப்பித்து மீண்டு விடுவான் ஆனால் குருட்டான் போக்கில் அவனைப் பின்தொடர்ந்தவனின் கதி அந்தோ பரிதாபம் தான். சோ எவ்வளவு சிரமமாயினும் தனக்கான பாதையை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவன் அவன் இலக்கை அடைந்துவிட்டான் என்று நாமும் பேராசையோ பொறாமையோ கொள்ளாமல் பொறுமையாக செய்தல் வேண்டும . அதை தான் துவாராவும் நினைத்துக்கொள்கிறான். அவன் ஆருயிர் தோழன் விவானுக்கு திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்தாகிவிட்டது. விவியனோ இன்னும் அவனைப்போலவே இருக்கிறான். என்னென்னவோ எண்ணம் அவனை ஆட்கொண்டது. சிந்தையிலே இருந்தவனை அழைத்தும் திரும்பாததால் மாமா என்று அவனை முத்தமிட்ட இளவேனிலின் எச்சிலில் நினைவுக்கு வந்தவன், "என்னடா தங்கம்?"
"த்ரீ ட்ரெயின்" என்று அங்கு அப்போது வரிசையாக நின்றுக் கொண்டிருந்த மூன்று ட்ரையின்களைக் காட்டியது அக்குழந்தை.
"ஐயோ த்ரீ ட்ரைனா? பாப்பாக்கு நம்பர்ஸ் எல்லாம் தெரியுமா?" என்று அவளைப்போலவே மழலை மொழியில் குழைந்தபடியேக் கேட்க,
"எனக்கு த்ரீ ஹண்ட்ரேட் வரைக்கும் தெரியும்மே" என்று பெருமையாகச் சொன்னவளைப் பார்த்து,
"த்ரீ ஹண்ட்ரேட் வரைக்கு தெரியுமா? மாமாக்கு ஹண்ட்ரேட் தானே தெரியும். சொல்லித்தறீங்களா மாமாக்கு?"
"ஹ்ம்ம்" என்று மண்டையை ஆட்டியவள், "ஒன் ஹண்ட்ரேட் அண்ட் ஒன், ஒன் ஹண்ட்ரேட் அண்ட் டூ" என்று சொல்ல இவனும் அவளோடு சேர்ந்து சொல்லிக்கொண்டிருந்தான். அவள் ஒன் ஹண்ட்ரேட் அண்ட் டென் சொல்ல "போதும் குட்டி தங்கம், மாமாக்கு நாளைக்கு மீதி சொல்லி தாங்க. இப்போ வேடிக்கைப் பார்க்கலாமா?"
ஹாம் என்று சொன்னவள், "மாமா சாக்கி" என்று அவனிடம் சாக்லேட்டுக்கு அடிப்போட,
நித்யா இவளுக்கு எதையும் தருவதில்லை. ஒன்லி ஹோம் மேட் சாக்லேட்ஸ் தான். அதும் அவர்களே தயாரிக்கும் (விவான் ஊட்டியில் செய்யும் பிசினஸில் இதுவும் ஒன்று) சாக்கிலேட் தான் தருவார்கள். அவளை ஏதேதோ சொல்லிச் சமாளிக்க அவனை யாரோ தொட்டதும் திரும்பியவன் அங்கு செபா நிற்பதைக்கண்டு,
"என்னடா எல்லோரும் வந்தாச்சா?"
"ஆஹ்ம், இந்த ஜிட்டன் இதித்ரி கூட வந்துட்டு இப்போ அவளுக்கும் சீட் கேட்கறான்"
"ஐயோ! அப்புறோம் என்ன பண்றது?"
"விடு மச்சி எல்லாம் விவான் பார்த்துப்பான். நான் அதுக்குள்ள வந்துட்டேன்..."
"சரி டா எல்லோரும் வந்தாச்சு தானே? கிளம்பலாமா?"
"இரு மச்சி இன்னும் டைம் இருக்கு..."
குழந்தையை வாங்கினான் செபாஸ்டின். அவளைக் கொஞ்சியவனைப் பார்த்த துவாரா, "மச்சி உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே..."
"என் மேரேஜ் லைஃப் பத்தியும் அவளைப் பத்தியும் தவிர நீ என்ன வேணுனாலும் பேசலாம்..." என்றவன் அவனைப் பார்க்காமல் இளவேனிலைக் கொஞ்சிக்கொண்டிருக்க,
எதைப்பற்றி பேச வேண்டும் என்று துவாரா இப்போது அடிபோட்டானோ, அதை புரிந்துக்கொண்ட செபா, சரியாக பதிலுரைக்க... இப்போது என்ன பேசுவது என்று புரியாமல் துவாரா அமைதியாக நின்றான்.
"என்ன மச்சி ஏதோ பேசணும்னு சொன்ன?" தெரிந்தே துவாராவை வம்பிழுத்தான் செபா,
"நீ தான் பேச ஆரமிக்க முன்னாடியே கடிவாளம் போட்டுட்டியே?" என்று அவனையே தீர்க்கமாகப் பார்த்தான்.
"ப்ளீஸ். ரொம்ப நாள் கழித்து நாம எல்லோரும் இப்படி ஜாலியா இருக்கப்போறோம். தயவுசெய்து என் மூடை ஸ்பாயில் பண்ணிடாதீங்க. உன்னை மட்டுமில்ல துவாரா எல்லோரையும் தான் சொல்றேன்..."

4 . செபாஸ்டின்
செபாஸ்டின். மெர்வின் செபாஸ்டின். இவனின் தந்தை ஒரு பெரிய ஆடிட்டர். ஆம் இன்றைக்கு தமிழ் நாட்டில் இருக்கும் மிக பிரபலமான ஆடிட்டர்களின் கணக்கை எடுத்தால் அதில் நிச்சயம் இவன் தந்தைக்கு முதல் 20 குள் ஒரு இடம் கிடைத்திடும். கொஞ்சம் கண்டிப்பு சிடுசிடுப்பானவர். எப்படி கிட்டத்தட்ட சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ் ராஜ் போல். ஒரு அண்ணன், ஒரு அக்கா. மூன்றாவது இவன். பிள்ளைகளுக்கு என்ன தெரியும்? நாம் தான் அவர்கள் உடனிருந்து ஒவ்வொரு செய்கையிலும் அறிவுரை வழங்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர். அதேநேரம் ஒரு சர்வாதிகாரியோ இல்லை எதேச்சதிகாரியோ இல்லை. ஆனாலும் அவரிடம் ஜாலியாக நம்மால் உரையாட முடியாது. ஏதோ ஒன்று இவனுக்கு தடுக்கும். இவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் இவன் அன்னை தான். பாவம் அவருக்கு சில காலம் முன் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் போக அவரால் இவனுக்கு சரியாக உதவ முடிவதில்லை. 'ஐடி டூட்'(it dood) ஆகிய இவன் நிம்மதியாக ஜாலியாக இருப்பது இவன் ஆபிசில் தான். என்ன மற்ற பெற்றோர்கள் குறிப்பாக விவானின் தந்தையைப் போலோ இல்லை ஹேமந்தின் தந்தையைப் போலோ ஜாலியாக இருக்க மாட்டேங்கிறாரே தன் தந்தை என்று கடுப்பில் இருக்க திடீரென இவன் வாழ்வில் ஒரு குண்டைப் போட்டார். அது தான் கல்யாணம்.
ஒரு பெரிய பிசினெஸ் மேன் பொண்ணு. இரண்டு பெண்களில் மூத்தவர் என்று தான் ஜெசிந்தாவை இவனுக்கு அறிமுக படுத்தினார். ஏனோ பார்த்த மாத்திரமே இவனுக்கு அவளிடம் ஒரு ஸ்பார்க் வரவில்லை. சரி கொஞ்சம் பேசலாம் என்றால் அவளோ அவளின் ப்ரொபசனை பற்றிச் சொல்ல (அதுதாங்க அனேஷியா டீம் - சமூக காரணிகளின் தரவுகளைக் (social indicator data acquisition ) கணக்கெடுக்கும் வேலை) என்று சொல்ல அப்படி என்றால் என்ன என்று இன்றுவரை அவனுக்கு விளங்கவேயில்லை என்பது மட்டும் நிச்சயம். கூடவே எப்போதும் ஒரு மாதிரி சீரியஸாக யோசித்து அவ்வளவாக சிரிக்காமல் கிட்டத்தட்ட தன் தந்தையைப்போலே இருப்பதாலோ என்னவோ இருவருக்கும் சுத்தமாக ஆகவில்லை. சரி கொஞ்சம் பேசி புரிந்துகொள்ளலாம் என்று இவன் திருமணம் கழித்து ஒருமுறை வெளியே செல்ல அழைக்க அவளோ ஒரு முக்கியமான வேலை விஷயமாக போக வேண்டும் என்று சொல்ல அதற்கு பிறகு இருவரும் ஒரு ரூம் மேட்ஸ் அளவுக்கு கூட பழகிக்கொள்ளவில்லை. மீதி எல்லாமும் பிளாஷ் பேக்கில் மற்றொரு எபியில் டீடெய்லாக வரும். இறுதியாக இன்று ஊருக்கு போலாமா என்று கேட்க (ஏற்கனவே கேட்டதிற்கு சரி என்றவள்) இன்று அவசர காரணமாக அவளும் செல்ல வேண்டிய சூழலால் மறுக்க செம்ம காண்டாகிவிட்டான்.
படித்தவள் என்று ஏட்டிடூட் காட்டுகிறாள் திமிர் என்று இவன் நினைத்துக்கொள்ள அது தான் இன்று நடந்தது.
ஜெசிந்தாவின் மனநிலை என்ன என்பதை அவளைப்பற்றி பார்க்கும் போதோ இல்லை கதையின் ஊடே பார்க்கலாம்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நேரம் 10 ஐ நெருங்க ஏற்கனவே ஊட்டியிலிருந்து வந்த களைப்பின் காரணமாக செபாவிடம் பேசிக்கொண்டே இருந்த இளவேனிளுக்கு அப்படியே கண்ணைச் சொருக அவன் மீதே சாய்ந்து உறங்கலானாள். அதை லேட்டாக உணர்ந்த செபா, துவாரா இருவரும் அவளின் தூக்கம் கலையா வண்ணம் எடுத்துக்கொண்டு நித்தியாவிடம் சென்றனர்.
ட்ரெயின் வர போவதை உணர்ந்த எல்லோரும் ரெடியாக நிற்க திப்ருகார்க் எக்ஸ்பிரஸ் ஆனது சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைய காத்திருந்தது.
"தூங்கிட்டாளா செபா?"
"ஆமா நித்து. வேடிக்கை தான் பார்த்திட்டு இருந்தாள் எப்போ தூங்கினானே தெரியில..."
"ரொம்ப அலைச்சலில்ல அதுதான். கொடு நான் வெச்சிக்கிறேன்" என்று வாங்கப் போக மிரு தான், "ஏ ஏ நான் மடியில படுக்க வெச்சிக்கிறேனே?" என்றதும்
"தாராளமா இந்தா" என்று கொடுக்க அவளை மிருதுளா மடியில் கிடத்திக்கொண்டாள். இங்கே அவளையே ஏக்கமாய் துவாரா பார்க்க, கோவமாய் தியானேஷ் பார்த்தான்.
எல்லோரும் இதைக் கண்டுகொண்டாலும் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை . விவான் தான் என்னமோ பதற்றமாகவே இருந்தான்...
"என்னடா விவா ஏன் டென்ஷனா இருக்க?" என்ற இளங்கோவிடம்,
"ஒண்ணுமில்ல" என்று சொன்னதிலே ஏதோ இருக்கிறது என்று புரிந்துக்கொண்டான் இளங்கோ. சரி எதுனாலும் அப்புறோம் விசாரித்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.
அங்கே ஜெசிந்தாவைச் சுற்றி ரேஷா, பெனாசிர் இருவரும் அமர்ந்து அவளுக்கு ஏதேதோ சொல்லி ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தனர். இந்த முறையாவது எப்படியாவது பெனாசிரிடம் தன் மனதையும் காதலையும் சொல்லிவிட வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தான் இஸ்மாயில். லோகேஷும் ஏதேதோ யோசனையில் இருந்தான்.
அனேஷியா புத்தகத்தில் தீவிரமாக மூழ்கிவிட்டாள்.
இன்னும் நிறைய கேரக்டர்கள் (இதுவரை வந்ததில்லாமல் புதியதாக) வரும் சகோஸ். சோ கொஞ்சம் தெளிவாக கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சிரமமாக உள்ளது என்ற உங்கள் மனம் புரிகிறது. பட் ஸ்டோரி லைன் அப்படி ஆச்சே? என்ன செய்ய? முடிந்த அளவுக்கு சுலபமாக புரியும் படி சொல்லுகிறேன். சந்தேகங்கள் இருந்தால் தாராளமாக கமென்ட்டிக்கலாம். (பயணங்கள் முடிவதில்லை...)
 
இன்னும் வருவார்களா....இப்போ வரை புரியுது... படிக்க படிக்க கொஞ்சம் easy ah இருக்கு.... Interesting bro
yes sis. i've mentioned them but they are yet to come like sithara, yazhini, dushyanth thank you!
 
Top