Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 4

Advertisement

praveenraj

Well-known member
Member
கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்த செபா எழுந்து, "சாரி ஹேமா உன்ன வேற வீணா ஃபீல் பண்ண வெச்சிட்டேன். வா போலாம்." என்றான்.
"டேய் செபா..."
"சொல்லு"
"கேட்கறேன்னு தப்பா நினைக்காத, என்ன தான்டா உங்க பிரச்சனை? அதும் கல்யாணம் ஆகி ஆறு மாசம் கூட ஆகல..."
"எல்லாம் விதிடா"
"பாரு வந்தேன்னு வெச்சிக்கோ... இப்போ சொல்லப் போறியா இல்லையா?"
"அது வந்து..." சரியாக ஹேமந்தின் போன் ஒலிக்க "யாருடா அவன் நேரங்கெட்ட நேரத்துல..." என்று எடுக்க, மௌனி தான் அழைத்திருந்தாள்.
"சொல்லு மௌனி..."
"எங்க இருக்கீங்க?"
"ஏன்?"
"அம்மா ரெண்டு வாட்டி என்னைய கூப்பிட்டாங்க. உங்ககிட்ட பேசணுமாம்."
"என்கிட்டே பேசணும்னா எனக்கு தானே போன் பண்ணியிருக்கணும். அதென்ன உனக்கு போன் பண்றது?"
"இப்போ இந்த வியாக்கியானம் ரொம்ப முக்கியம் பாருங்க?"
"சரிடி பேசுறேன் இரு..."
"உள்ள வாங்க எல்லோரும் உங்களுக்காக வெயிட்டிங்"
"என்ன மேட்டரு?"
"சும்மா தான்."
"ஆமா ஜிட்டு வந்துட்டான்னா?"
"வந்துட்டே இருக்காராம்."
"இன்னுமா வரல அவன்? சரி வெய் நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்..."
"முதல்ல அம்மாக்கு போன் பண்ணுங்க. அவங்க கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டாங்க."
"சரி டி. வரவர ரொம்ப தான் ஓவரா போறீங்க மாமியாரும் மருமகளும்"
"மாமியாரா? யாரது?"
"என்னடி எங்க அம்மாவையே இப்படி பொசுக்குன்னு யாருனு கேட்குற?"
"ஓ காந்திமதி அம்மாவைச் சொல்றீங்களா?"
"மேடம், பார் யுவர் கைன்ட் இன்போர்மேசன், அவங்க என் அம்மா."
"எனக்கும் அவங்க தான் அம்மா. சொல்லப்போனா எனக்கு தான் அவங்க அம்மா. பார்த்திடலாமா அம்மா யாருக்கு சப்போர்ட்னு?"
"எம்மா, பரதேவதை தெரியாம சொல்லிட்டேன். மாமியாரும்..."
"ஏய்..."
"சாரி சாரி அம்மாவும் பொண்ணும் கூட்டு சேர்ந்து என்ன காலிபண்ணிடாதீங்க. ஐ அம் பாவம் புவர் கைய்..."
"யோசிச்சி சொல்றேன்!"
"அடிங்கு உன்ன..." என்றவன் எதேர்ச்சியாக திரும்ப செபா இவர்களின் உரையாடல்களைக் கேட்ட்டுக்கொண்டிருப்பதைக் கண்டவன், எங்கே அவன் மீண்டும் பீலிங் மூடுக்கு சென்றுவிடுவானோ என்று யோசித்து, "சரி மா நாங்க வரோம்" என்றவன் கால் கட் செய்தான்.
செபா தான் மீண்டும் ஏதேதோ யோசனைக்குச் சென்றான்.
"மச்சி, வா போலாம். எல்லோரும் நமக்காக வெயிட்டிங்காம்."
"போலாம் டா."
.....................................
அங்கே அனேஷியா, அவர்கள் செல்லும் போது எவ்வாறு அமர்ந்திருந்தாளோ அதே நிலையில் அப்படியே அமர்ந்திருக்க, நால்வரும் அருகில் சென்றனர்.
இஸ்மாயில் தான் அவளுக்காக வாங்கி வந்த உணவினை அவளிடம் தர,
அதைப் பெற்றுக்கொண்டவள் அப்படியே தன் பேகில் வைத்தாள்.
"மேடம், சாப்பிடலையா?"
"ஹ்ம்ம் கொஞ்ச நேரம் போகட்டும்."
"சூடா இருக்கும் போதே சாப்பிட்டுடுங்க மேடம்." ஒரு நிமிடம் எல்லோரையும் நிமிர்ந்து பார்த்தவள், "சரி நான் போய் பேஷ் வாஷ் பண்ணிட்டு வரேன்" என்று எழுந்து நடையைக் கட்டியவள் ஏதோ தோன்றியவளாய் திரும்பி, "ஆமா லோகேஷ் வந்திடுவாரா?"
வந்துட்டாரா? என்று கேட்டிருந்தால் கூட ஏதாவது சொல்லியிருக்கலாம் ஆனால் வந்திடுவாரானு கேட்டா என்ன பதில் சொல்வது என்று ஒருவரை ஒருவர் திருதிருவென பார்த்துக் கொள்ள, தீர்க்கமான பார்வை ஒன்றை நால்வர் மீதும் செலுத்தி விட்டு அவள் ரெஸ்ட் ரூம் விரைந்தாள்.
இங்கே இவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் மீண்டும் லோகேஷின் எண்ணை அழைக்க இம்முறையும் அது பதிலில்லாததால் ஏனோ இப்போது கோவம் எல்லாம் லோகேஷின் புறம் சென்றது. ஒருவேளை அவன் மேல் தான் தவறிருக்கிறதோ என்று எல்லோரும் நினைக்கத் தொடங்கினர்.
இப்போ இது மேனேஜருக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று ரேஷா வருந்த, ஐயோ லோகேஷ் ஒன்னும் அவ்வளவு பெரிய வசதி படைத்த குடும்பம் அல்லவே. அவனை நம்பி ஒரு தங்கையும் ஒரு தம்பியும் உள்ளனர். எல்லோரும் கொஞ்சம் பதைபதைத்தனர்.
அதற்குள் முகம் கழுவச் சென்றவள் வெளியே வந்து தனக்கு வாங்கிவரப்பட்ட உணவைப் பிரித்து உண்ணத் தொடங்கினாள்.
"மேடம்" என்று தயங்கிய படியே பெனாசிர் அழைக்க,
"சொல்லுங்க பெனாசிர்"
"அது லோகேஷ் இன்னும் 15 நிமிஷத்துல வந்திடுவாரு" என்றாள்.இது எல்லோருக்குமே அதிர்ச்சி. இப்போது எல்லோரும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கினர்.
அப்போது ரேஸாவின் மொபைல் சிணுங் , லோகேஷ் தான் என்றதுமே எல்லோரும் கேட்கும் விதமாய்,
"சொல்லு லோகேஷ்"
......
"ஆம் சரி" என்று சொல்ல, எல்லோரும் இழுத்த மூச்சினை சீராக விட்டனர். ஆனால் அனேஷியாவோ எதையும் வெளிக்காட்டாமல் சாப்பாட்டை ரசித்து உண்டவள்,
"ரொம்ப ரிலேக்ஸ்ட்டா இருக்கீங்க போல?" என்றதுமே,
ஐயோ எங்கே கண்டுபிடித்து விட்டாரோ என்று எல்லோரும் பேந்த பேந்த விழிக்க, "நான் இல்லாம நல்லா ஜாலியா சாப்பிட்டு வந்தீங்க போல அதைச் சொன்னேன்"
அப்பாடா என்று உணர்ச்சிவசத்தில் இஸ்மாயில் சொல்லிவிட,
"உங்க எல்லோருகிட்டையும் நான் ஒரு ஆப்லிகேசனை வெக்கலாமா?"
மீண்டும் விழித்தவர்களிடம், "என்ன ஆடு திருடானவங்க மாதிரியே எல்லோரும் ரியாக்சன் தரீங்க?"
"இல்ல மேடம் அது..."
"இது தான் நான் கேட்க வந்தது. இப்போ என்னதான் நாம அஃபிசியலா போனாலும் இது முந்தி மாதிரியெல்லாம் இல்ல. ரொம்ப லாங் ட்ரிப். சோ என்னை ஒரு சீனியரா நினைக்காம உங்க ஃபிரண்டா நினைசீங்கனா நான் சந்தோசப் படுவேன்."
என்ன சொல்வது என்று இருக்க,
"என்னைய ஒரு தோழியா பார்ப்பீங்களா?"
"என்ன பெனாசிர், ஜெஸ்ஸி சத்தத்தையேக் காணோம்?"
,,,,,,,,,
"அப்போ என்னைய உங்கள்ள ஒருத்தியா நினைக்க மாட்டிங்களா?"
"ஐயோ அப்படியெல்லாம் இல்ல மேம்" ஜெஸ்ஸி
"ப்ளீஸ் இந்த மேடம் எல்லாம் வேணாம். கால் மீ அனேஷியா"
"ஓகே அனேஷியா" எல்லோரும் சிரிக்க, அவள் ஃபிரண்ட்ஸ் என்று கையை நீட்ட எல்லோரும் புரிந்து அவள் கரத்தின் மீது கரத்தை வைத்தனர்.
அப்போது தான் சரியாக லோகேஷ் வந்தான். எல்லோரின் கையும் அவள் கையில் இருக்கக் கண்டவனின் முகம் அனலாய் கொதித்தது!
...............................
இளவேனிலைக் கையில் ஏந்தியபடி வெளியே வந்த துவாரகேஷ் அவளின் மழலை மொழிகளை ரசித்து அவளிடம் தன்னையே மறந்து சிரித்து கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தான். அவன் எண்ணமெல்லாம் கவலைகள் என்பதையே என்னவென்று தெரியாமல் சந்தோசமாய் சிரிக்கும் மழலை இளவேனில் மீதே இருந்தது. "ச்சே பேசாமல் கடைசி வரை குழந்தையாவே இருந்திருக்கலாம். எதுக்குடா வளர்ந்தோம் எதுக்கு அறிவு வந்தது கூடவே போட்டி கோவம் வெறுப்பு ஆற்றாமை பொறாமை எல்லாம்?" என்று வருந்தினான்.
மழலை இனிது !!!
........................
பேசி சிரித்துக்கொண்டே இருந்தவர்களில் பெனாசிர் எதேர்ச்சியாக திரும்ப லோகேஷைக் கண்டவள் எவ்வாறு ரியாக்ட் செய்வதென்று புரியாமல் இருக்க, இங்கே ரேஷா, இஸ்மாயில், ஜெசிந்தா எல்லோரும் அனேஷியாவுடன் சிரித்துப் பேச, மெதுவாக ஜெசிந்தாவுக்கு புருவங்களால் சிக்னல் செய்ய, முதலில் புரியாமல் விழித்தவள் பின்பு லோகேஷைக் கண்டு அதிர்ச்சியாக எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாய் அமைதியாகினர். "என்ன திடீர் அமைதி?"என்று திரும்பிய அனேஷியா லோகேஷைக் கண்டு சங்கதி என்னவென்று ஒருவாறு யூகித்துக்கொண்டாள். அவளும் தன்னால் இவர்களின் உறவு ஸ்பாயில் ஆகிவிடக் கூடாதென்று அமைதியாக அவள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அமர்ந்து புத்தகங்களைப் புரட்டினாள்.
"ச்சே, எவ்வளவு நாகரிகமாய் நடந்துகொண்டார் இவர்" என்று ரேஷா உட்பட எல்லோரும் அனேஷியாவை நல்லபடியாக நினைக்க, அங்கே சென்று அமர்ந்தவன் யாரையும் சட்டை செய்யாமல் இருக்க, ரேஷா தான் அவனை நோக்கி முதலில் சென்றாள்.
"என்னப்பா இங்க அமைதியா உட்கார்ந்துட்ட?"
"நீங்க எல்லோரும் ஏதோ பிசியா ஜாலியா இருந்தீங்க. சோ நான் எதுக்கு தேவையில்லாம" என்று சொன்னதிலே தெரிந்தது அவனின் கோவத்தின் அளவு.
அவன் மீண்டும் தன் போனையே நோண்ட, இப்போது இஸ்மாயில், ஜெசிந்தா பெனாசீர் என்று எல்லோரும் அவனைச் சுற்றி அமர்ந்து அவனை இலகுவாக்கும் முயற்சியில் இருக்க அவனோ உச்சக்கட்ட கோவம் பொறாமையில் இருந்தான். "என் வேலையை பறிச்சது மட்டுமில்லாம என் ஃப்ரண்ட்ஸ கூட சேர்த்து இழுத்துக்கிட்ட இல்ல?" என்று அனேஷியாவின் மீது தீரா வன்மத்தில் அமர்ந்திருந்தான்.
இவர்களும் அவன் திரும்ப பேசமாட்டானா என்று அமைதியாக அவனை வட்டமடித்தே அமர்ந்திருக்க, ஏதோ தோன்றியவனாய் திரும்பி, வா"ங்க சாப்பிட போலாம்" என்று சொல்ல இப்போது எல்லோரும் மீண்டும் திருதிருவென முழித்தனர். பின்னே ஆபிஸில் எப்போதுமே இவர்கள் தானே ஒரு கேங்காய் இருப்பார்கள். எல்லோரும் ஒன்றாகவே சாப்பிட்டு அரட்டை அடித்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் இன்று இவர்கள் எல்லோரும் உண்டுவிட்டு வந்துவிட அதை எப்படி சொல்வது? சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வான் என்று முழிக்க,
"என்ன பெனாசிர் எல்லோரும் ஆடு திருடனவங்க மாதிரி முழிக்கறீங்க? பசிக்கலையா?"
"இல்ல லோக் அது வந்து..."
"என்ன ரேஷா? கொஞ்சம் நேரம் முன்னாடி அந்த வாய் ஆடுனீங்க? இப்போ எங்க போச்சி சத்தத்தையேக் காணோம்?"
"அது வந்து, நாங்க சாப்பிட்டோம் டா" என்று இழுத்துச் சொல்லிமுடிக்க,
"ஓஹோ சாரி சாரி அதுதான் உங்களுக்கு புது கம்பெனி கிடைச்சாச்சே? இனி நானெல்லாம் எம்மாத்திரம்?" என்றவன் கோவமாய் எழுந்து வெளியே போக ரேஷா தான் இஸ்மாயிலிடம், "என்னடா இவன் இப்படி கோவிச்சுகிறான் என்ன பண்ண இப்போ?"
"சரி நீங்க எல்லோரும் இங்க இருங்க நான் கூட போய் பேசிப்பார்க்கிறேன்..."
"இது என்னடா வம்பா போச்சு? அவன் கூட பழகினா வேற யாரு கூடவும் பேசவும் பழகவும் கூடாதா என்ன? சுத்த நான்சென்ஸ் மாதிரி..." என்று சொல்லும்போதே அவள் இடுப்பு கிள்ளப்பட இது சிக்னல் என்று பெனாசிர் பேச்சை நிறுத்த,
"உனக்கு இப்படியெல்லாம் கூட பேச வருமா பெனாசிர்? ஓகே. நான் நான்சென்ஸ் தான். என்கூட இனி நீங்க யாரும் பேசவே வேணாம். நான் இப்போ உங்க கூட வரலாமா இல்லை அதும் கூடாதா..." என்று சொல்லி கோவமாய் அவன் வேலெட் எடுத்து போக,
பெனாசிரின் மண்டையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்தாள் ஜெஸி. "போச்சுப் போ இன்னும் என்னென்ன பிரச்சனையெல்லாம் பார்க்க வேண்டுமோ?"
இதுவரை நடந்த அனைத்தையும் தூரமிருந்தாலும் அவர்களின் முகபாவங்களில் மூலம் கண்டுக்கொண்ட அனேஷியா நேராக அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று, "சாரி கைஸ். என்னால உங்களுக்குள்ள எந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கும் வேண்டாம். நாம பழையபடியே இனி இருப்போம்" என்று சொல்லிவிட்டு அவள் சென்றுவிட,
இங்கே எல்லோரும் என்ன செய்ய என்று குழம்பினர். கூடவே அனேஷியாவின் மீது இதுவரை அவர்களுக்கிருந்த அனைத்து கெட்ட அபிப்பிரயாங்களும் அடியோடு அழிந்து ஒருவேளை மொத்த தவறும் தங்கள் மீதுதான் இருந்துள்ளதோ என்று யோசிக்கும் அளவுக்கு யோசித்துக்கொண்டிருந்தனர்.
..............................................
செபாவைக் கூட்டிக்கொண்டு ஹேமந்த் உள்ளே செல்ல, அங்கு அவர்கள் எல்லோரும் துவாராவைத் தவிர கூடி பேசிக்கொண்டிருந்தனர். இவர்கள் போனதும் ஹேமந்த்திடம் போனைக் கொடுத்து அவன் அன்னையிடம் பேச சொன்னாள் மௌனி. அவனும் அலைபேசியை எடுத்துக்கொண்டு தனியே சென்றுவிட, செபாவின் முகத்தில் ஓரளவுக்கு தெளிவு இருக்க எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர்.
"ஆமா நித்யா, பாப்பா எங்க?" - செபா
"துவாரா கிட்ட இருக்கா"
அவன் துவாராவை நோக்கிச் சென்றான்.
"இவனுங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி இருக்கானுங்க?"
"செபாக்கு கூட பேமிலி பிரச்சனை ஓகே. ஆனா துவாரா அண்ணா ஏன் இப்படி?" மௌனி
மற்றவர்கள் திரும்பி விவான், விவியனைப் பார்க்க, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஏனோ அனிச்சையாய் மிருவை நோட்டமிட்டனர்.
இது ஏனோ தியானேஷையும் கொஞ்சம் கோவப்பட வைத்தது.
அதையும் விவான் நோட் செய்துக்கொண்டான். அவனுக்கு தெரியாது இதையெல்லாம் விவியனும் நோட் செய்துக்கொண்டிருப்பதை.
அப்போதுதான் இளங்கோவும் பார்வதியும் வந்துக்கொண்டிருந்தனர். இளங்கோ யாரையாவது அழைக்கலாம் என்று போன் எடுக்க அதற்குள் அவர்களைப் பார்த்த நித்யா இளங்கோவை அழைத்திருந்தாள்.
பார்த்துக்கொண்டவர்கள் ஒன்றாக சேர, முதலில் விவான் தான், "மச்சான் காங்கிராட்ஸ்டா..."
அதற்குள் எல்லோரும் கோரஸாக வாழ்த்துச் சொல்ல சிரித்தபடியே பாருவும் இளங்கோவும் அதை ஆமோதிக்க,
"நம்ம மச்சான் இளங்கோக்கு ஒரு ஓபோடுங்க"- விவியன்
"அதென்ன மச்சானுக்கு மட்டும்? நம்ம மச்சிக்கும் ஒரு ஓ சேர்த்து போடுங்க" - மிரு
போட்டுட்டா போச்சு என்று மீண்டும் ஓ போட ஏனோ ஒரு நிமிடம் அங்கு கூடியிருந்த மொத்த ஜனமும் ஒருமுறை திரும்பிப் பார்க்க எல்லோரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை.
"சரி சரி வந்து சாப்பிடுங்க வாங்க" என்று இருவரையும் அமர்த்தி சாப்பிடச் சொன்னார்கள்.
அவர்களும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, சரியாக ஜிட்டு அவர்களைத் தொடர்புக் கொண்டான்.
"மச்சான்ஸ் வந்துட்டோம் டா"
"வாடா நாயே" என்று நித்யா வார,
"இரு இரு. வந்துட்டோம்மா?" - இளங்கோ
"அது வந்து நானும் இதித்ரியும் வந்திருக்கோம்"
"டேய் @@@###$$$ யாருடா உன்னை அவளைக் கூட்டிட்டு வரச் சொன்னா?"- ஹேமந்த்
"நான் எங்க டா கூட்டிட்டு வந்தேன்?"
"முட்டாள் !!$%^" - நித்யா
"ஏய் ஒரு குடும்ப பொண்ணு மாதிரியா பேசுற? வேணாம் நித்யா"
"இப்போ அவளுக்கு டிக்கெட்டுக்கு எங்க போறது?" ஹேமா
"அதெல்லாம் தெரியாது, எனக்கும் அவளுக்கும் டிக்கெட் வேணும்"
"டேய் !$%^, அவளை வேணுனா கூட்டிட்டு நீ அப்படியே வீட்டுக்குப் போ"
"மச்சான் விவானு நீ தான்டா எனக்கு கரிசனை காட்டணும். பல வருடங்கள் கழிச்சு என் வாழ்க்கையிலும் ஒரு நல்ல சம்பவம் நடக்கப் போகுது. ப்ளீஸ்..."
ஏனோ அதில் எல்லோரும் கோரேஸாய் சிரிக்க,
"இது சிரிக்கிற நேரம் இல்ல டா சிந்திக்கிற நேரம். ப்ளீஸ் மக்களே"
"சரி வந்துத் தொலை"
"இப்படி டீசெண்டா சொல்லுவையா... அதைவிட்டுட்டு பேட் ஒர்டஸ் எல்லாம் யூஸ் பண்ணிக்கிட்டு சின்ன புள்ளைங்களாட்டம்?"
"விவா, இதுக்கு தான் வேணாம்னேன். இடத்தை கொடுத்தா இவன் மடத்தை கேட்பான்" -நித்யா
"ஆமா அப்படியே பிடிக்கறாங்க போடி..."
"வாடா நாயே உனக்கு இருக்கு"


இறுதி நேரத்தில் இப்படி இதித்ரியை ஜிட்டேந்திரன் அழைத்து வருவான் என்று எவரும் நினைக்கவில்லை. சரி வந்து விட்டான், ஏதாவது செய்யவேண்டுமே என்று மணியைப் பார்த்தவன் வேகமாக ttr ஐ நோக்கிச் சென்று சில நூறுகளைக் கொடுத்து மன்றாடி ஒரு சீட் வாங்கி வந்துவிட்டான். அதும் கன்பார்ம் சீட் அல்ல. சப்போஸ் சம்மந்தப்பட்ட நபர் வந்துவிட்டால் அவன் மாறித்தான் தீரவேண்டும் என்ற முடிவோடு தான் கிடைத்தது.
"ஈ நட்புன்னா என்னனு தெரியுமா உனக்கு? நண்பன்னா என்னனு தெரியுமா உனக்கு? விவான்னா என்னனு தெரியுமா உனக்கு?" என்று ரஜினியைப் போல் நித்யஸ்ரீயிடம் பன்ச் டைலாக் பேச கோவத்தில் அவன் கையில் வைத்திருந்த சூடான டீயை அவன் மீதே கொட்டிவிட்டாள்.
"ஐயோ சுடுதே சுடுதே... ஏய் எரும மாடு?" அது அவன் பேண்டில் கொட்டிவிட ஏனோ அவனைக்காட்டிலும் அதிகமாக இதித்ரி தான் துடித்தாள்...
அவ்வளவு வலியில் அலறிய ஜிட்டு, ஏனோ இதித்ரி துடிப்பதைப் பார்த்து, "அவ்வளவு காதலா இதி என்மேல?"
அவனின் எள்ளலில் கடுப்பானவள், "இல்லை" என்று கோவமாக சொல்லி முறைக்க
"பாரு இதற்குப் பெயர் தான் காதல். உன் கண்ணுல துடிப்ப பாருடி" என்று இதித்ரியை மிருதுளாவும் நித்தியாவும் கிண்டல் செய்ய,
"அவ்வளவு காதலா இதி என் மேல?" - ஜிட்டு
"இல்லை ஒருவேளை உனக்கு ப்யூஸ் போச்சுன்னா அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்க வசதியா இருக்குமில்ல அதுக்கு தான்"என்றாள்.
அவளின் பதிலில் சுற்றியிருந்த இளங்கோ ஹேமந்த் விவான் மூவரும் ஹைபை கொடுத்துக் கொள்ள,
"அசிங்கப்பட்டான் ரப்பர் வாயன்" என்று பதில் கமெண்ட் கொடுத்த நித்யாவை பார்வதி மிருதுளா மௌனி மூவரும் கட்டிக்கொள்ள அந்த இடமே கொஞ்சம் கலகலப்பானது.
விவியனும் தியானேஷும் அவர்களோடு கமெண்ட் எதுவும் கொடுக்காமல் சிரித்துக்கொண்டிருந்தனர்.
இவர்கள் எல்லோரும் காது கிழிய கத்தி சிரிக்க ஏனோ ஒருநொடி அங்கிருந்த ஜனக்கூட்டம் எல்லோரும் இவர்களையெல்லாம் ஒரு மாதிரி பார்த்துப் போக இந்த சத்தத்தில் தூரம் அமர்ந்திருந்த அனேஷியா கூட ஒரு நொடி நிமிர்ந்து அதைப் பார்த்து அமைதியானாள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அங்கே லோகேஷும் கடுப்புடனே சாப்பிடச் சென்றான். "ச்சே இவளுக்கு இதே வேலையா போச்சு. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில என் ஃப்ரண்ட்ஸ் கூடவே இருந்து என்னை பிரித்துவிட்டாள்..." அவனுக்கு அனேஷியாவின் மீதான கோவம் பலமடங்கு அதிகரித்தது.
அவளுக்கு தான் என் மேல வெறுப்புனா இந்த இஸ்மாயில், ஜெசிந்தா, ஏன் பெனாசிர் ரேஷா கூட அவகிட்ட பல்லை இளிச்சிட்டு பேசுறாங்க என்று புலம்பினான்.
.................................
அடுத்த சில எபிகளில் ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றி சிறு குறிப்புக்கள் இடம்பெறும்.
முதலில் பயணங்கள் முடிவதில்லை குருப்பிலிருந்து வருவோம்.
1. ஹேமந்த்
ஹேமந்த், வீட்டிற்கு ஒரே ஆண் பிள்ளை. அவனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள். எல்லோரையும் போல் இன்ஜினியரிங் படித்து முடித்தான். அவனின் பெற்றோர்கள் பெரியதாக வசதியில்லை என்றாலும் அவர்கள் காலத்தில் ஓரளவுக்கு வசதி இருந்தது. அப்பா ரிட்டையர்ட் போலீஸ் ஆபிஸர். ஆனால் அந்த போலீசுக்கே உரிய கடுகடுப்பு எல்லாம் வீட்டில் கிடையாது. காரணம் அவரின் மனைவி. இதுவும் ஒருவகையில் காதல் திருமணம் தான். என்ன கொஞ்சம் தூரத்து சொந்த பெண் தான் அவரின் மனைவி. அந்த காலத்தில் படித்துவிட்டு வேலையில்லாமல் சும்மா சுற்றிக்கொண்டிருந்த போது போலீசுக்கு ஆள் எடுப்பதைப் பற்றி தெரிந்து சும்மா போய் அட்டென்ட் செய்தார். உடனே அவருக்கு வேலை கிடைத்துவிட சரி கிடைத்த வேலையைச் செய்யலாம் என்று சேர்ந்தும் விட்டார். சும்மாவே தனக்கு பெண் தரமாட்டேன் என்று சொன்ன மாமா போலீஸ் என்றதும் முடியவே முடியாது என்று வம்படியாக மறுத்து விட்டார். என்ன செய்ய இருவரும் பொறுத்துப் பொறுத்து பார்த்து இறுதியில் ஜகடம் ஜகடம் செய்து விட்டனர். (அதுதாங்க சம்போ சிவ சம்போ, சிவசிவ சம்போ, ஜகடம் ஜகடம் ஜகஜகடம்டம் ,,,) பின்பு நீண்ட போராட்டங்களுக்கு பிறகு இன்றைக்கும் ஓரளவுக்கே வீட்டில் மதிக்கிறார்கள். அவர்கள் தனியே வந்து வாழ்க்கை நடத்தி பின்பு பிறந்தவன் தான் ஹேமந்த். அவனுக்கு பிறகு ஒரு பெண். (ஹேமந்த்தின் அப்பா அம்மா தங்கை எல்லோருடைய பெயர்களையும் சொல்ல எனக்கும் தான் ஆசை ஆனால் ஏற்கனவே நிறைய பெயர்கள் என்று நீங்கள் கம்பளைண்ட் செய்ததால் தவிர்க்கிறேன். தேவைப்பட்டால் அவசியம் என்றால் மட்டும் சொல்கிறேன்.)
இன்ஜினியரிங் முடித்தவன் ஐடி வேலை கிடைக்க அப்போது பெங்களூரு சென்றவனை சிறைப்பிடித்தவள் தான் மௌனிகா. அவர்களின் காதல் கதை பின்னால் வரும் வேறொரு எபியில். அங்கே கொஞ்சம் வேலை செய்தவன் அது பிடிக்காததால் ஜிம் சேர்ந்தவன் இன்று ஒரு ஜிம் டிரைனர்.
.......................................................
அங்கே பலமான சத்தங்கள் கேட்க திரும்பிப் பார்த்தவள் தூரத்தில் சில பேர் கூட்டமாக சேர்ந்து களிப்பில் பேசிக்கொண்டிருக்க, சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் அவர்களைப் பற்றி ஒவ்வொரு விதமாக சொன்னார்கள்.
"இந்த ராத்திரி நேரத்துல இப்படி கூச்சல் போடுதுங்க பாரு. என்னமோ இதுங்க அப்பன் வீட்டு ரயில்வே ஸ்டேஷன் மாதிரி. இதுங்களை சொல்லி தப்பில்லை கலிகாலம்" என்று அவளுக்கு அடுத்திருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் தன் அருகில் இருந்தவரிடம் முறையிட்டார்.
ஏனோ அவளையும் அறியாமல் சிரிப்பு வந்தது அனேஷியாவுக்கு. அது ஏன் என்று தான் தெரியவில்லை. அவர்களிடம் இருக்கும் உற்சாகம் தன்னிடம் இல்லாததாலா? இல்லை அதுபோல தனக்கு நெருங்கிய நட்புகள் யாருமே இல்லாததாலா? வாழ்க்கையில் ஏற்கனவே இருக்கும் வெறுமைகள் போதாதென்று இப்போது புதுசாக மற்றொரு வெறுமையும் வந்து சேர்ந்தது அனேஷியாவுக்கு.
அனிச்சையாக திரும்பியவள் அங்கே ரேஷாவும் பெனசிரும் ஒரு மாதிரி சோகமாய் இருக்கும் ஜெசிந்தாவை சமாதானம் செய்ய முயன்றுக்கொண்டிருந்தனர். அதை தன்னைப்போலவே தூரம் நின்று வேடிக்கைப் பார்த்த இஸ்மாயிலிடம் என்னவென்று புருவம் உயர்த்த அவரோ தெரியவில்லை என்பதைப்போல் உதடு சுளித்தார்.
தெரிந்தாலும் எப்படியும் தன்னோடு இவர்கள் ஷேர் செய்யப் போவதில்லை என்று உணர்ந்தவள் தன் பையிலிருந்த பவுலா ஹவ்க்கின்ஸின் (paula hawkins ) தி கேர்ள் ஆன் தி ட்ரைனை (the girl on the train ) புரட்டினாள். அவள் சரியான புத்தகப் புழு. அதும் கிரைம் திரில்லர் என்றால் அவளுக்கு பசி தூக்கம் எதுவும் வராது. அதே தான் இப்போதும்.
கொஞ்சம் படித்தவள் அங்கே இருக்கும் இரைச்சல் சத்தத்தால் ஏனோ படிக்கும் ஆவல் போனது. திரும்பி பார்க்க அம்மூவரும் அதே நிலையில் இருக்க இப்போது லோகேஷும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டான். இவர்களை நம்பி இந்த ப்ராஜெக்ட்டில் எப்படி வேலை செய்ய போகிறேனோ என்று அவள் குழம்பவும் தயங்கவில்லை. இருக்கும் பிரச்சனை போதாதென்று லோகேஷ் வேற என்று எண்ணி தலையை ஆட்டிக்கொண்டாள். (பயணங்கள் முடிவதில்லை)
 
Top