Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-33

Advertisement

praveenraj

Well-known member
Member
அன்றைய நிகழ்வுக்குப் பிறகு ரேஷாவுக்கு மன நிம்மதியே தொலைந்துவிட்டது.'அவ யாரு ஈஈனு பல்லை இளிச்சிட்டு வந்து நிக்கறா? இவனும் கொஞ்சம் கூட சொரணையே இல்லாம அவ கிட்ட பல்ல பல்ல காட்டிட்டு நிக்கறான்'என்று அவள் அவனுக்கு நிறைய வசைவுகளைக் கொடுக்க அவள் உதடோ முணுமுணுத்தது. அவளின் ரூம் மேட் தான் அவளை அழைத்து,"என்ன ஆச்சு ரேஷு ஒரு மாதிரி இருக்க? என்ன ப்ரப்ளேம்?" என்றாள்.அவளோ ஒரு கேரளத்துக் காரி. இருந்தும் தமிழ் புரியும். ரேஷாவுக்கும் அப்படித்தான், மலையாளம் தெரியாது ஆனால் புரியும். அவளோ துஷியைப் பார்த்தது முதல் நடந்தது வரை எல்லாமும் சொல்ல,"ரேஷா ஞான் ஒன்னு பறையட்டா, உனக்கு அவன் மேல இஷ்டமோ?" என்று கேட்க அதுவரை அவனை திட்டிக்கொண்டு இருந்தவளுக்கு ஒன்று புரிந்தது," நான் என்ன பிராந்தா அவனை விரும்ப? ஹி இஸ் எ சீட், லையர், ஐ ஹேட் சீட்ஸ்"
"பட் இட் சீமிஸ் யூ டோன்ட் சௌண்ட்ஸ் லைக் இட்?" (ஆனால் நீ அப்படிச் சொல்வதைப்போல் தெரியவில்லையே?)
அவள் முறைக்க,
"ஹே ரேஷு குட்டி, அவன் அவளைத் திரிக்கி கொண்டுபோயால் நின்னாலே வேதனை பிக்குனேன்டேனென்?" (அவன் அவள் பின்னால் போனால் உனக்கு ஏன் வலிக்கிறது?)
"கைவசமுள்ளதோ?"(பொஸ்ஸவிவோ?)
"ஒரு பொடலங்காவும் இல்ல. இன்னும் ரெண்டு மாசத்துல என் ப்ராஜெக்ட் முடியுது நான் என் ஊருக்குப் போயிடுவேன்"
"ஞான் நின்னே காணும் பெண்குட்டி"(உன்னை பார்க்கத் தானே போறேன் ?)
"நீ காணோ காணோ..."
மறுநாளும் சில டெஸ்டிங் விஷயமாய் அவன் இவளை அழைக்க இவளோ அவனின் அழைப்பை ஏற்கவே இல்லை. அவனும் அவளுக்கு முடிந்த அளவுக்கு அழைத்துப்பார்த்து கடுப்பாகி அவன் மட்டும் சென்றுவிட்டான். இருவரும் செல்வதால் அவன் இவளை அழைத்துச் செல்ல அழைத்தான். அவன் அந்த டெஸ்டிங் இடத்திற்கு வர அங்கே அவனுக்கு முன்னால் இருந்தாள் ரேஷா. அவளைக் கண்டவனின் கண்களிலோ அலாதி கோவம்.கையில் மொபைலை வைத்துக்கொண்டு கேம் விளையாடிக் கொண்டிருந்தவளைக் கண்டு கோவம் கொண்டவன் அவளின் மொபைலை வெடுக்கென பிடுங்க,
"அறிவில்ல இப்படியா அடுத்தவங்க திங்க்ஸை பிடுங்குவ?"
"ஓ எனக்குக் கொஞ்சம் கம்மித்தான். உனக்கு தான் வழியுதே வேணுனா ஒரு டம்ளர்ல பிடிச்சுக் கொடு நான் குடிச்சிக்குறேன்"
"நாட் சோ ஃபன்னி"
"அத்தனை முறைக் கூப்பிட்டேனே நீ ஏன் ஒரு தடவை கூட எடுக்கல?"
"ஹாம் உன் போன் பார்த்து எடுக்கலாம்னு ஓடோடி வந்தேன்னா நடுவுல பூனை குறுக்க போயிடுச்சி. அதுதான் அட்டென்ட் பண்ணல"என்று எகத்தாளமாக அவள் பதில் சொல்ல,
"உனக்கெல்லாம் போய் ஹெல்ப் பண்ணனும்னு நெனச்சேன் பாரு. ஏதோ ஆண்ட்டி சொன்னாங்களேன்னு... உன்னைப்போய் நம்புறாங்க பாரு அவங்களைச் சொல்லணும்"
"பார்ரா உன்னையே நம்பும் போது என்னையெல்லாம் நிச்சயமா நம்பலாம். நான் ஒன்னும் உன்ன மாதிரி பொய் சொல்லி ஏமாத்துறவ இல்ல. நான் சிம்பு மாதிரி ,, எனக்கு நடிக்கத் தெரியாதுங்க"
"யாருக்கு உனக்கு?" அதற்குள் அவளின் டெஸ்டிங் வேலையெல்லாம் முடிய அவனும் ஆரமித்தான். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மீண்டும் இருவரும் அந்த ப்ராஜெக்ட் கைடின் வீட்டிற்கு சென்றனர். இவன் பைக்கில் வர அவளோ அன்றுபோல் ஆட்டோவில் வந்தாள். அது இவனுக்கு இன்னும் கோபம் கொள்ளச் செய்தது. அவன் முன்னால் சென்றுவிட இவளோ பின்னால் வந்தாள். இருவரையும் பார்த்த கைட் ஏதோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது. ரேஷாவின் வேலை எல்லாம் நல்லபடியாக முடிய அவனின் வேலையில் சில தவறுகள் இருக்க அவரோ ரேஷாவையே அதை சரிசெய்ய சொல்லிவிட்டு அவனுக்கும் உதவுமாறு சொல்லியனுப்ப இவள் முகத்தை வைத்தே இவளுக்கு இதில் விருப்பமில்லை என்று உணர்ந்தவன் வெளியே வந்ததும்,"கொடு நானே பார்த்துக்கறேன். வேண்டா வெறுப்பா எல்லாம் நீ ஒன்னும் செய்ய வேணாம்" என்று சொல்லவும் அவளோ,"எனக்கு உன்ன மாதிரி பொய் சொல்ல தெரியாது, ஏமாத்தத் தெரியாது. சொன்ன வாக்கை காப்பாத்தணும். சோ நானே செஞ்சு தொலையுறேன்" என்றாள்.
"வெய்ட் வெய்ட் அப்படி என்ன நான் ஏமாத்துறதைக் கண்ட?"
"ஓ அதுவே உனக்குத் தெரியாதோ?"
"எதா இருந்தாலும் ஓப்பானா சொல்லு"
"நீ அன்னைக்கு ஒரு பொண்ணை உன் பைக்ல கூட்டிட்டு போல? ஏன் மேம் கேட்கும் போது பொய் சொன்ன? நேத்து வந்தாலே ஒருத்தி அவ கூட தானே அன்னைக்குக் போல?"
திருதிருவென முழித்தவன்,
"என்ன பேச்சையே காணோம்?"
"ஓ அதுக்குத் தான் காலையில இருந்து சண்டையோ?"
"பாருடா நீ யாரு எனக்கு? நீ யார் கூட போனா எனக்கென்ன? நான் எதுக்கு சண்டைபோடனும்?" என்று சொல்லி சண்டையிட்டவளை கையைக் கட்டிக்கொண்டு பார்த்து சிரிக்க அவன் சிரிப்பதன் பொருள் புரிந்து,'ஐயோ இப்போ எதுக்கு நான் மூச்சு கட்டிட்டு பேசுறேன்? இவன் யாரு கூட போனா எனக்கென்ன? ஏன்டி கேரளத்து குட்டி நீ சொன்ன மாதிரி இருக்குமோ? சீ சீ இவனையா?" என்று நினைத்தாள்.
அவன் எதையும் பேசாமல் செல்ல,"டேய் எதாவது சொல்லிட்டுப் போ?"
"நான் யாரோடு பைக்ல போனா உனக்கென்ன? யாரோடு சிரித்து பேசுனா உனக்கென்ன? பை தி வே, ஆண்ட்டி சாரி மேம் கொடுத்த வேலையை முடிச்சிடு"
"நான் ஏன் செய்யணும்? நீ எங்க போற?"
"நீதானே சொன்ன நானே செஞ்சு தொலையுறேன்னு. நீங்க தான் பொய் சொல்ல மாட்டிங்களே. அண்ட் சோனா என்ன மூவிக்கு கூப்பிட்டா. நான் போறேன் பை"
"யாருடா சோனா?"
"ஒன் ஆப் மை கேர்ள்ப்ரெண்ட்ஸ். பை" என்று அவன் செல்ல இங்கே ரேஷாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
................................................
நித்யாவிடம் பேசிவிட்டு துவாரவின் கம்பார்ட்மெண்ட் போனான் விவான். அங்கே அவனோ யாரிடமும் பேசாமல் சாப்பிடவும் செய்யாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்க சென்று அவன் அருகில் அமர்ந்தான்.
திரும்பி பார்த்தவன் அமைதியாக இருக்க,"டேய் துவாரா ஜூஸாவது குடிடா?"
எனக்கெதுவும் வேணாமென்று சொல்லி அவன் அமர சரித்திராவின் தாத்தா தான் அவர்களைப் பார்த்தார். துவாரா எழுந்து ரெஸ்ட் ரூம் போக இன்று அவன் அன்னையின் நினைவு நாளென்று மேலோட்டமாகச் சொன்னான்.
அதற்குள் துஷிக்கு அழைத்து இளவேனிலை இங்கே அழைத்துவருமாறு சொல்ல அவனுடன் யாழினி,விவி, சித்தாரா ஆகியோர் வந்தனர். ரெஸ்ட் ரூமிலிருந்து வந்த துவாரா இளாவைப் பார்த்து தூக்க அவனோடு அவன் மடியில் அமர்ந்துக்கொண்டாள்.
இங்கே விவி சித்தாரா இருவரையும் பார்த்த சரித்திராவின் தாத்தா,"நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா தம்பி?"
"ஐயோ தாத்தா! இங்க இருக்க நாங்க எல்லோரும் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் தான். ஜோடிங்க எல்லாம் அங்கே இருக்காங்க" என்று முந்திக்கொண்டு சொன்னாள் யாழினி.
"எல்லோரும் ஃப்ரண்ட்ஸா? ஒரே காலேஜா?"
"ஸ்கூல் காலேஜ் ஃப்ரண்ட்ஸ்"
"ஸ்கூல்ல இருந்து ஒன்னா இருக்கீங்களா?"
"இல்ல சிலர் ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் சிலர் காலேஜ் மேட்ஸ்"
"ஓ!"
"எந்த காலேஜ்?" என்று கேட்டவர் மீண்டும் ஸ்கூலையும் கேட்டார்.எங்கே சரித்திராவும் துவாரவும் ஒரே ஸ்கூலோ இல்லை ஒரே காலேஜோ என்று அறிய ஆனால் எல்லோரும் வேறு வேறு ஸ்கூல் சொல்ல விவான் துவாரா மட்டும் ஒரே கல்லூரி என்க யாழி துஷி ஒரே ஸ்கூல் என்று சொல்ல, அவருக்கு நிறைய இடித்தது. அவர் யோசிக்க அதற்குள் "நீங்க எங்க போறீங்க தாத்தா?" என்று கேட்டான் விவி.
அவர் சரித்திராவைப் பார்க்க, எல்லோரும் இப்பொது அவர்களைப் பார்க்க,"சொல்ல வேணாம்னு நெனெச்சா வேணாம். சாரி"
"அதெல்லாம் ஒண்ணுமில்ல, என் தாத்தா அவரு பையனைப் பார்க்கணும்னு சொன்னாரு அதுக்குத் தான் கூட்டிட்டுப் போறேன்..."
"ஏங்க அவருக்கு பையன்னா எப்படியும் உங்களுக்கும் சொந்தம் தானே? பெரியப்பா சித்தப்பா மாதிரி?"
"அவரு தான் என் அப்பாவாம்" என்றவள் ஏனோ இங்கே இருக்கப் பிடிக்காமல் சென்று விட, எல்லோரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்தனர்.
'தேவையில்லாம பேசிட்டேனோ?' என்று நினைத்த யாழி,"சாரி தாத்தா. உங்க பெர்சனல் விஷயத்துல தலையிட்டுட்டோம்..."
"பரவாயில்லைம்மா. எனக்கு மட்டும் என்ன ஆசையா? எல்லாம் விதி?"
எல்லோரும் அவரைப்பார்க்க,
"எனக்கு ரெண்டு பையன் ஒரு பொண்ணு. என் பெரிய பையன் தஞ்சாவூர்ல இருக்கான். பொண்ணு சென்னைல இருக்கு. நான் என் சின்ன மருமகள் கூட ஆந்திராவுல இருக்கேன்" என்று சொன்னார்.
"என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா தான் படிக்கவெச்சேன். ஒழுக்கமா தான் வளர்த்தேன். ஆனா என் ரெண்டாவது பையன் மட்டும் குடி சீட்டுன்னு கெட்ட சகவாக்ஷம். நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிப்பார்த்தேன். அவன் திருந்தற மாதிரி தெரியில. சரினு அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வெச்சேன். அப்போவாது திருந்துவான்னு நம்பி... நல்ல பொண்ணு. வசதி இல்ல ஆனா நல்லா படிச்சிருந்தா. சரி இவளை நம்பி விட்டேன். ஆனா அவன் திருந்தவே இல்லை. வேலை செய்யுறேன்னு மூணு மாசத்துக்கு ஒரு வேலை செய்வான். எல்லாத்தையும் இழந்துட்டு வந்திடுவான். நானும் எவ்வளவோ முயற்சி பண்ணேன். சொத்தையெல்லாம் என் மருமகள் பேருல எழுதி வெச்சேன். அதுக்குள்ள தான் இவளும் பிறந்தா. சரி இனிமேலாச்சும் திருந்துவானு நம்பிட்டு இருக்க அவனோ "நான் திருந்திட்டேன் புதுசா ஒரு பிசினெஸ் பண்ணனும் இந்த ஒரு முறை பணம் தாங்கனு" சொல்ல, நான் நம்பல, "இல்ல கடனா நான் வாங்கிக் கட்டிடுறேன் சொத்தையெல்லாம் என் பேருல எழுதிக்கொடுங்க. நான் லோன் வாங்குறேன்னு" சொன்னான். நானும் நம்பி எல்லாம் செஞ்சேன். எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு ஓடினவன் தான் திரும்ப வரவேயில்லை."
"இவளுக்கு விவரம் கூட தெரியாது. அப்போவே போயிட்டான். எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியில. அதுக்குள்ள வீடு சொத்துனு எல்லாத்து மேலையும் வாங்குன கடன் வட்டி செலுத்தாம நோட்டீஸ் வர அவனைக் கண்டுபிடிக்கவும் முடியமா எல்லாத்தையும் வித்துட்டு கடனை அடைச்ச பிறகு பாவம் இவ அம்மா தான் வேலைக்கு போய் குடும்பத்தைப் பார்த்துச்சு. நாங்களும் இவனைத் தேட கொஞ்ச நாள் கழிச்சு அவன் பாம்பேல ஏதோ பொண்ணோட கூத்தடிக்குறானு தெரிஞ்சு அவனைத் தேடிப் போய்க் கேட்டா, அவன் இனிமேல் நான் வரவே மாட்டேன் . என்னை விட்டுடுன்னு சொல்லிட்டுப் போயிட்டான். என்ன பண்ண? அன்னையில இருந்து இவங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பா கூடவே இருக்கேன். அவங்க அம்மாவும் அங்கங்க ட்ரான்ஸ்பெர் வாங்கி வேலை செஞ்சு இன்னைக்கு ஆந்திராவுல இருக்கோம். எல்லாம் என்னால தான். என் மகன் திருத்தணும்னு நான் அநியாயமா ஒரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்துட்டேன். இப்போ ரெண்டு பொண்ணுங்க அதுனால கஷ்ட படுறாங்க. ஏதோ கடவுள் புண்ணியத்துல இவ நல்ல நிலையில இருக்கா. உங்களுக்குத் தெரியுமானு தெரியில என் பேத்தி ஒரு பேட்மிட்டன் பிளேயர்."
"இப்போ எதுக்கு நீங்க போறீங்க?" என்று இழுத்தான் விவி,
"அவன்,அதுதான் நான் பெத்தவன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில இருக்கானாம். அதும் யாருமில்லாம ஹாஸ்பிடல்ல, அனாதையா..." என்னும் போதே அவரின் கண்கள் கலங்கியது.
அந்தப் பெரியவர் இப்போது சொன்னதைக் கேட்டதும் ஏனோ யாழுக்கு உடனே கோவம் வந்து,"அந்த ஆளெல்லாம் இன்னுமுமா உயிரோட இருக்கான்? அந்த ஆளுக்கெல்லாம் எதுக்கு பீல் பண்ணனும்?" என்று சொல்ல அந்த பெரியவரின் முகம் ஒருநிமிடம் சுருங்க அருகேயிருந்த துஷி தான் அவள் தொடையைக் கிள்ளி அமைதியா இருடி" என்று சொல்ல,
கொஞ்சம் அமைதியாக இருந்தவர்,"நான் செத்து எனக்கு அவன் கொல்லிவெக்குற காலத்துல அவன் செத்து நான் கொல்லிவெக்குற நிலைமை எந்த அப்பாகும் வரக்கூடாதும்மா. எனக்கும் ஒன்னும் அவன் மேல பாசம் எல்லாம் இல்ல. இத்தனை வருஷத்துல என் மருமகளும் என் பேத்தியும் எவ்வளவு கஷ்டப் படுறாங்கனு எனக்கு நல்லாவே தெரியும். இருந்தும் என்னமோ சொல்லுவாங்களே தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு அப்படிக் கூட இருக்கலாம்..."
"போய்ப் பார்த்துட்டு மட்டும் வரப் போறீங்களா இல்ல?" என்று இழுத்தாள் யாழ்,
மீண்டும் முறைந்தனர் பாய்ஸ் எல்லோரும்.
"பெத்த கடமைக்கு ஒரு தடவை போய்ப் பார்த்துட்டு கொஞ்சம் பணம் கொடுத்துட்டு வந்துடுவேன்"
"உங்க நிலைமை புரியுது தாத்தா. ஆமா உங்க வைப்?"- சித்தாரா
"இதெல்லாம் பார்க்க வேண்டாம்னு அவ முன்னாடியே போயிட்டா"
அவர் சோகமா எல்லோரும் சோகமானதும்,"சாரி பசங்களா நான் என் கதையைச் சொல்லி உங்க எல்லோருடைய சந்தோஷத்தையும் கெடுத்துட்டேன்" என்றதும்,
"அதெல்லாம் ஒண்ணுமில்ல தாத்தா"
"ஆமா எங்க இருக்காராம் அவரு?"
"எங்கோ ஷில்லாங்காம், எனக்குத் தெரியில"
"மேகாலயா மாநிலம் தலைநகர். அங்க எப்படி?"
"அந்தப் பொம்பளை எல்லாத்தையும் ஏமாத்திட்டு போயிட்டாளாம். கூடவே அஸ்ஸாமில கொஞ்ச நாள் தோட்ட வேலையெல்லாம் செஞ்சானாம். அப்படியே உடம்புக்கு முடியாம யாரோ அங்க கொண்டு போய் விட்டிருக்காங்களாம்"
"இதுக்கு உங்க பேத்தி எப்படி சம்மதிச்சா வரதுக்கு?"
"அவன் ரொம்ப நாளா அங்க தான் இருக்கானாம்.எனக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே லெட்டர் வந்தது. அப்புறோம் மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு லெட்டர் போன மாசம் ஒரு லெட்டர், எதுக்கும் வரமாட்டேன்னு சொல்லிட்டா. என்னாலும் தனியா வரமுடியாதே? திடீர்னு போனவாரம் போலாம்னு சொன்னாள். நானும் கிளம்பிட்டேன். நான் கூட மனசு மாறிட்டான்னு நெனச்சேன் ஆனா..." என்றவர் விவானைப் பார்க்க,
"ஆனா தாத்தா?" - விவி
"உங்கள்ள யாருக்காவது என் பேத்தியை ஏற்கனவே தெரியுமா?"
"ஐயோ இல்லையே?" என்று துஷி,யாழ்,விவி, சித்து நால்வரும் சொல்ல விவான் மட்டும் அமைதியாக இருந்தான்.
"டேய் நீங்க தான் பேட்மிட்டன் பிளேயர் ஆச்சே உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே?"- யாழ்
"நீங்களா? யாரு?"
"இவனும் அங்க ரெஸ்ட் ரூம் போனானே அவனும்" அவள் தாத்தாவிற்கு எல்லாமும் புரிந்தது. கொஞ்சம் பேசிக்கொண்டு அவரின் மனதை மாற்ற முயற்சிக்க இளவேனில் ஏதேதோ கதைப்பேச அங்கே அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தனர்.
.................................................
இங்கே ஜிட்டு,இளங்கோ,பாரு,இதி,நித்யா,மிரு,மௌனி,ஹேமா,தியா,அனேஷியா செபா எல்லோரும் அமர்ந்து கொஞ்சம் கதை பேசிக்கொண்டிருக்க, அப்படியே அனேஷியாவிடம் பேச்சு வந்தது,"ஆமா நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?"
"அதானே நானும் அப்போவே கேட்கணும்னு இருந்தேன்?" என்றாள் நித்யா.
"ஆஹா நல்லா தானே போய்ட்டு இருந்தது இப்போ ஏன் திடீர்னு என்கிட்ட இந்தக் கேள்வி?" என்று முழித்தாள் அனேஷியா.
"எங்க எல்லோரையும் பற்றி நாங்க ஓரளவுக்குச் சொல்லிட்டோம். நீங்க மட்டும் எதையுமே சொல்லாம வெறும் அப்செர்வாரா மட்டும் இருக்கீங்க. சொல்லுங்க உங்களைப்பற்றி எங்க படிச்சீங்க நீங்க? ஸ்கூல், காலேஜ், வேலை?"
"பெருசா ஒண்ணுமில்ல. நான்,அப்பா,அம்மா மட்டும் தான் என் குடும்பம். எல்லோரையும் போல நானும் ஸ்கூல் முடிச்சதும் அடுத்து என்ன பண்ணலாம்னு இருந்தேன். என் அப்பா என்னை டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டார். எனக்கு அதுல இண்ட்ரஸ்ட் இல்ல. சோ சோசியல் ஸ்டடீஸ் மீது ஒரு ஆர்வம் அப்படியே யுஜி பிஜி முடிச்சிட்டு உடனே phd அப்ளை பண்ணினேன். முன்னாடி வேற இடத்துல தான் இருந்தேன் அப்புறோம் சென்னை வந்து சேர்ந்து அப்படியே போகுது..."
"பரவாயில்லையே உங்க அம்மா எல்லாம் எதுவும் கேட்கறதில்லையோ?"என்று சாதரணமாகச் சொன்னாள் பாரு.
"சொல்ல முடியாதே? ஏன்னா அவங்க தான் எப்பயோ போயிட்டாங்களே" என்று சொல்ல எல்லோரும் அமைதியாக, "சாரி கேன்சர். லேட்டா தான் தெரிஞ்சது. நான் அதுக்காகத் தான் சென்னை வந்து சேர்த்தேன். பட் லாஸ்ட் ஸ்டேஜ் ஆகிடுச்சு. ஒரு எட்டு மாசம் இருக்கும் அவங்க இறந்து..."
"சாரி"
"நத்திங். அவங்க இருக்கும் போது நிறைய விஷயம் சொன்னாங்க. நான் அப்போல்லாம் அவங்களை மதிக்கவே மாட்டேன். உனக்கு என்ன தெரியும்னு ரொம்ப திமிரா இருந்தேன். இன்னைக்கு எல்லாம் புரியுது. புரிய வெச்சுட்டாங்க..."
"சில பாயிண்ட்ல சில விஷயங்கள் புரியனும். இங்க சிலருக்கு இன்னமும் புரியலையே" என்று தியா சொல்ல செபாக்கோ எங்கே அவனைத் தான் சொல்லுகிறானோன்னு என்று நிமிர,"எங்க ஃப்ரண்டும் ஒருத்தன் இருக்கான். அவன் அப்பாவை இன்னமும் புரிஞ்சிக்கல அவன்" என்று சொல்ல,
"யாரு?"
"அவனை நீங்க இன்னும் பார்க்கல. டோன்ட் ஒர்ரி பார்த்திடலாம்" என்று சொல்ல அதற்குள் செபா எழுந்து போக,
"எங்கடா போறான் அவன்?" என்றான் ஹேமந்த்.
"ஏன் இதை அவன் கிட்டயே கேட்கவேண்டியது தானே?" என்றான் ஜிட்டு
"மச்சி அவங்க ரெண்டு பேரும் டூ உட்டு இருக்காங்கடா. உனக்குத் தெரியாதா?"
"சில்லி காய்ஸ். ஏழு கழுதை வயசாகிடுச்சி இன்னும் டூ விட்டுட்டு, அறிவே இல்லைடா உங்களுக்கு? கொஞ்சம் கூட மெட்ஸுரிடியே இல்ல? வளர்ந்தவங்க மாதிரியா பிஹேவ் பண்றீங்க?" என்ற ஜிட்டு," ஒழுங்கா அவனை இங்க கூப்பிடு. இப்போவே பழம் விடச் சொல்லு" என்று சொல்ல எல்லோரும் இப்போது கோரஸாக சிரிக்க,
"ஏன்டா சிரிக்கறீங்க? காய் விட்டா பழம் தானடா விடணும்? அது தானே ரூல்ஸ்?"
"ஓ அப்போ சார் மட்டும் இப்போ அப்படியே மெட்சூர்டா நடந்துக்கறீங்களோ? போய் அவனைக் கூப்பிடுங்கடா"
"உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ்சே இல்ல. நாம மட்டும் இப்படி ஜாலியா ஜோடியோட இருக்கும் போது..." என்றவன் ஹேமா பார்ப்பதைப் பார்த்து,"இதி கொஞ்சம் உன் கையைக் கொடு" என்று வாங்கியவன் அவன் கையுக்குள் தன் கையை வைத்து,"அவனை மட்டும் சிங்கிளா இருக்கானேனு அக்கறையே இல்ல?"
"ஏன்டா ஜிட்டு கையைப் பிடிச்சிருக்க உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?"
"அப்படியெல்லாம் இல்லடா எனக்கு நம்பிக்கை இருக்கு"
"பார்த்தா அப்படித் தெரியிலையே?" என்று இழுத்தான் இளங்கோ,
"இதி டார்லிங் வா நாம அடுத்த கம்பார்ட்மண்ட் போலாம். இங்க சில துஷ்ட சக்திகள் இருக்கு" என்று அவர்களைப் பார்த்து அவன் சொல்ல,
எல்லோரும் சிரித்தனர்.
"இதி இவனுங்க என்ன சொன்னானுங்கனு தெரியுமா? செபாவுக்கு ஜோடியா என்னையும் ஜோடியோட பிரிச்சு விட்டு தனியா விடப் போறாங்களாம்" என்று சொல்ல,
"அப்போ என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல? அப்படித்தானே?" என்றாள் இதி,
'ஆஹா சனியனைத் தூக்கி நானே பனியன்ல போட்டுக்கிட்டேனே' என்று யோசித்தவன்,"அப்படியெல்லாம் இல்லடா. இவங்க நம்மள பிரிச்சு நமக்குள்ள கோல் மூட்டி விடுவாங்க அதுதான்..."|
"அப்போ இவங்க என்ன சொன்னாலும் அதையெல்லாம் நம்புற முட்டாள் நானு, எனக்கு கொஞ்சம் கூட சுய அறிவே இல்லைனு சொல்லுற நீ? அப்படித்தானே?"
'ஆஹா இப்போ எஸ் சொன்னா உடனே எழுந்து கோவிச்சிட்டு போயிடுவா, நோ சொன்னா அப்போ என்மேல நம்பிக்கை இல்லையானு கேட்டு திட்டிட்டுப் போயிடுவாளே?' என்று யோசித்தவன்,
"பாரு இதி நீ முட்டாளானு கேட்டு இவ்வளவு நேரம் ஆகிடுச்சு ஆனாலும் உடனே இல்லைனு சொல்லாம யோசிக்கிறான், அப்போ இவன் உன்ன முட்டாளா தான் நினைக்கிறான்..." என்றான் இளங்கோ,
"டேய் நான் எப்போடா அப்படிச் சொன்னேன்? இதி இவனுங்க ஜாலியா என்டேர்டைன் பண்ண நம்மள யூஸ் பண்ணிக்கறானுங்க"
"இதி இன்னமும் நீ முட்டாள் இல்லைனு சொல்ல மாட்டேங்குறான் பாரு" என்று சொல்ல இதி எழ உடனே அவள் கையைப் பிடித்து இழுத்து,"சாரி சாரி இதி டார்லிங் நீ அறிவாளி புத்திசாலி இவங்க கூட மட்டும் நாம இருக்க வேணாம். என்ன விட்டு போயிடாத இதி நம்மள பிரிக்கவே இவனுங்க காத்திருக்கானுங்க" என்று கெஞ்ச எல்லோரும் சிரித்தனர்.
"சரி நான் உன்ன விட்டு போகல என் கையை விடு" என்று அவள் சொல்ல,
"ஹாம் விடமாட்டேன் விட்டா நீ போயிடுவ?"
"அட மெண்டல் நான் ரெஸ்ட் ரூம் போறேன் கையை விடுடா"
"ரெஸ்ட் ரூம் போறதுக்கு எதுக்கு இப்போ கோவமா எழுந்த?"
"நான் முட்டாள் இல்லைனு சட்டுனு உனக்குச் சொல்லத் தோணல இல்ல? அதான் கோவம்"
"இல்ல இதி அதெல்லாம் எதுக்குச் சொல்லிட்டு, அது தான் தெரியுமே நீ ஒரு..." என்று சொல்வதற்குள்,"பாரு இதி நீ ஒரு முட்டாள்னு சொல்றான்" என்று ஹேமா சொல்ல,"இதி நீ ஒரு அறிவாளினு தான் சொல்ல வந்தேன். என்னால முடியில...ப்ளீஸ் பிலீவ் மீ"
"நம்பித்தொலையுறேன் போ" என்று சொல்லிவிட்டு அவள் போக கெத்தாக அமர்ந்த ஜிட்டு,"இனிமேல் உங்க பூச்சாண்டியெல்லாம் வேலைக்கு ஆகாது. இதி நம்பிட்டாளே?" என்று ஆணவமாய்ச் சொல்ல,
"இருந்தாலும் ஜிட்டு உன் ராஜதந்திரம் இருக்கே சபாஷ்டா. எப்படியோ இதியை அவ வாயாலே உன்ன லவ் பன்றேன்னு சொல்ல வெச்சுட்ட இந்தா பிடி நான் தோத்துட்டேன்" என்று 500 ரூபாயை எடுத்து நீட்டினான் ஹேமா,
அவனும் ஆர்வத்தில் வாங்க அவன் பின்னாலிருந்து முறைத்துக்கொண்டு இதி வெளியேவர,
"ஐயோ இதி இது இவனுங்க என்னவோ பிளான் பண்ணிட்டானுங்க..." என்று திணற அவளோ கடுப்பாகி ஒரு அடி அடிக்க,
"சூப்பர் இதி நான் அப்பயே சொன்னேன் இதி ஒரு புத்திசாலி அவ கிட்ட உன் ராஜ தந்திரம் எல்லாம் பலிக்காதுனு அவ கண்டு பிடிச்சிடுவானு, கொடுடா இப்போ நான் ஜெயிச்சுட்டேன்" என்று அந்த ஐநூறு மீண்டும் வாங்கினான் ஹேமா, இன்னும் பத்திரகாளி ஆனாள் இதி.
"ஹாம் இவனுங்க எல்லோரும் ஏமாத்துறவுங்க" என்று குழந்தைப் போல் அழுத ஜிட்டு,"ப்ரோமிசா நான் எதுவும் பண்ணல, எந்த பெட்டும் வெக்கல" என்று சொல்லி அழ எல்லோரும் சிரித்தனர். (பயணங்கள் முடிவதில்லை...)
 
நீங்களும் இந்த ட்ரைன்ல ஒரு பேசஞ்சரோனு டவுட்டா இருக்கு ? ? ?
ஏன்னா அவ்ளோ எதார்த்தமா இருக்கு ???
 
நீங்களும் இந்த ட்ரைன்ல ஒரு பேசஞ்சரோனு டவுட்டா இருக்கு ? ? ?
ஏன்னா அவ்ளோ எதார்த்தமா இருக்கு ???
உங்களோட விமர்சனம் ரொம்ப நிறைவைக் கொடுக்குது. நான் காலேஜ் படிக்கும் போது கோவா வரை இப்படி ஃப்ரண்ட்ஸோட போயிருக்கேன்.அந்த எக்ஸ்பிரியன்சை வெச்சி தான் இதை எழுதினேன்.எனக்கு இந்த ஸ்க்ரிப்ட் யோசிக்கும் போது இருந்த சவாலே இது தான். அல்மோஸ்ட் 70% கதை ட்ரைன்ல தான் நடக்கும். இதை எப்படி சுவாரசியமா கொடுப்பேன்னு எனக்கு சந்தேகமும் இருந்தது.கூடவே நிறைய கதாபாத்திரங்கள் வேற? அவங்க எல்லோருக்கும் சமமான ஸ்பேஸ் வேற கொடுக்கணும்.பட் ஒருவழியா கதையை முடிச்சிட்டேன்.அண்ட் உங்களோட விமர்சனம் எனக்கு நிறைவையும் தருது.130 எபிசோட்ல இதுவரை 71எபிசொட் கொடுத்துட்டேன்.இன்னும் 18 எபி(இங்க 9) ட்ரைன்ல இருக்கும் அப்போறோம் அசாம்போனதும் கொஞ்சம் ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இருக்கு.நன்றி??
 
Top