Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-32

Advertisement

praveenraj

Well-known member
Member
குளித்து முடித்து சாப்பிடலாம் என்று வந்த துஷியும் யாழும் விவானுக்கு அழைக்க அவனோ,"இங்க நாங்க சாப்பிடவே ஆரமிச்சாச்சு" என்றதும் அவர்கள் இருவரும் விழுந்தடித்துக்கொண்டு வர இங்கே ஜிட்டு மீதிக் கதையைத் தொடர்ந்தான்,
இதித்ரி சொன்னதில் அங்கிருந்த எல்லோரும் சிரிக்க ஜிட்டுவோ எல்லோரையும் பார்த்துவிட்டு,"காதல்ல இதெல்லாம் சாதரணமப்பா" என்றதும்,
"என்ன காதலா? அதுக்குள்ள காதலா?" பாரு கேட்க ,,
"சீ அப்போ எனக்கு இவன் ஒரு பைத்தியக்காரனாட்டம் தான் தெரிந்தான்" என்று இதித்ரி சொல்ல,
"ஏன் இப்போ கூட எங்க எல்லோருக்கும் அப்படித்தானே தெரியிறான்" என்று ஹேமா கவுண்ட்டர் கொடுக்க எல்லோரும் ஹை பை கொடுத்துக்கொண்டனர்.
"இந்த மாதிரியான கலாய்க்கெல்லாம் மனம் தளரமாட்டான் இந்த ஜிட்டன். நான் பினிக்ஸ் பறவைடா" என்று சொல்ல,
"அப்படியா! தியா அந்த லைட்டர கொடு..." என்ற ஹேமாவிடம்,
"எதுக்கு?"
"நீ தானே சொன்ன, நீ பினிக்ஸ் பறவைனு அது எரிந்துகொண்டே இருக்கும்டா அது தான் டெஸ்ட் பண்ணலாம்னு" என்று சொல்ல உடனே எழுந்தவன் இதியின் அருகில் அமர்ந்து,"காலையிலே இவனுங்க என்ன கொல்ல பார்த்தானுங்க இதி. பாரு இப்பயும் கூட முயற்சி செய்யுறாங்க" என்று சொல்லி இது தான் சாக்கென்று அவனை நெருங்கி அமர,
"டேய் நீ இதை சாக்கா வெச்சே உன் பாண்டிங்கை டெவெலப் பண்றியா?"என்றான் தியா
"சரி சரி கதையை கண்டினு"
"நான் எழுந்து நின்று மீண்டும் விழப் போக உடனே இவ என்னைப் பிடிச்சா"
"ஓ!"
"அப்போ என் மனசுக்குள்ள சர்வம் பட பிஜிஎம் தான் ஓடுச்சு. எல்லோரும் கண்ணை மூடி அந்த பிஜிஎம்க்கு நானும் இதியும் இருக்கறதை இமேஜின் பண்ணுங்க"
"நல்ல படம்டா அது"
"இதி பாரு சைட் கேப்புல உன்ன கொலைபண்ண சொல்றான்" - தியா
"புரியில?"
"திரிஷா செத்துப்போயிடுவா"
"இதி இவனுங்க நம்மள பிரிக்கறதுலேயே குறியா இருக்கானுங்க, டோன்ட் ஃபால் ஃபார் தி ட்ராப்"
"எனக்கு அப்படியே மனசெல்லாம் சிறகடித்துப் பறந்தது. எங்கே இந்தக் கதையில நான் கடைசிவரை சிங்கிளாவே இருந்திடுவேனோனு நெனச்சேன். கடவுள் என்ன கைவிடல... என் வாழ்க்கையிலும் ஒரு காதலுக்கு மரியாதை, காதல் கோட்டை, காதல் மன்னன் இப்படி பல படங்கள் வந்தது"
"தேங்க் யூ, காலம் முழுக்க எனக்கு இப்படி கை கொடுப்பீங்களா?"
இப்போது எல்லோரும் மீண்டும் சிரித்து,"அடப்பாவி உண்மையிலே அப்படியா கேட்ட? அதும் முதல் மீட்டிங்லேயே?"
"ஏன் என்ன தப்பு? ரொமான்டிக் டைலாக் எல்லாம் நீங்க மட்டும் தான் பேசணுமா? நானெல்லாம் பேசக்கூடாதா?"
"இதி அதுக்கு உன் ரியாக்சன் என்ன?"
அப்போ கடைசி வரை இப்படி விழுந்துட்டே தான் இருப்பீங்க?பெட்டெர் யூ ஹேவ் எ வாக்கிங் ஸ்டிக் அண்ட் ப்ளீஸ் கன்சல்ட் எ டாக்டர், எஸ்பெஸல்லி சைக்கியாட்ரிஸ்ட்.(ஒரு கைத்தடி வாங்கிக்கோங்க, ஒரு நல்ல டாக்டரை பாருங்க.அதும் மனநல மருத்துவரை)
"ஹா ஹா அப்போ பைத்தியம்னே முடிவு பண்ணிட்டியா இதி? சூப்பர் போ..." என்றாள் மிரு
"பின்ன என்ன பண்றது? யாரு என்னனே தெரியாதாம். பார்த்ததும் ஜொள்ளு வழிந்து இப்படி சினிமா டைலாக் எல்லாம் பேசுனா நான் பைத்தியம்னு நெனைக்கமா வேற என்னனு நெனைக்கறது?"
"அப்புறோம் என்ன ஆச்சு?"
அப்போதான் வீணாப்போன இவன்(ஹேமந்த்)வந்தான். இடம் பொருள் ஏவல் தெரியாம,"டேய் மெண்டல் இங்க என்ன பண்ற? அப்பா ac வேலைசெய்யலனு ஆளைக்கூப்பிட சொன்னா நீ என்ன அந்தப் பொண்ணு கால்ல விழுத்திட்டு இருக்க? சாரிங்க இவன் இப்படித் தான். அவன் சொன்ன எதையும் சீரியஸா எடுத்துக்காதீங்க" என்று சொல்லிட்டுப் போயிட்டான்.
"கை கொடு மச்சான்.நான் எங்க போனேன் அப்போ?" - தியா
"நீங்கயெல்லாம் உள்ள இருந்தீங்க"
"ஆரம்பத்துல இருந்தே என் காதலுக்கு எதிரியா நீதான் இருக்க, உன்னால என்ன இவ நம்பவே இல்ல" என்றான் ஜிட்டு
"என்ன ஆச்சு?"
"நான் திரும்ப டைனிங் ஹால்ல இருந்தேன்.அப்போ இவ சாப்பிட்டு இருந்தா. நான் மெல்ல போய் சாம்பார் வேணுமா சட்னி வேணுமான்னு கேட்டு",
"சாரிங்க. நான் யாரோ கூப்பிட்டாங்கனு திரும்பினேனா சோ ஸ்லிப் ஆகிட்டேன். அண்ட் நான் மெண்டல் எல்லாம் இல்லைங்க. நான் ஒரு கவர்மென்ட் எம்பிளாய். எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு உங்களுக்கு?" என்று கேட்க
"வாரே வா. அண்ணா உங்களுக்குள்ள இவ்வளவு தைரியமா? எப்படி?" என்ற பாருக்கு,
"காதலைச் சொல்ல பயப்படுறவன் காதலிக்கவே தகுதி இல்லாதவன்"
"ஏய் இது விஜய் சொன்னது"
"கண்டுபிடிச்சிட்டியா? ஆனா இப்போ அது நான் சொன்னது. சோ சொல்லிட்டேன்"
"அதுக்கு இதி என்ன சொன்னாங்க?"
"மிஸ்டர் கல்யாண வீடுன்னு பார்க்கறேன் இல்ல செருப்பு பிஞ்சிடும்" என்று சொல்லிவிட்டு இதித்ரி கோவமாய்ப் போக,
"அப்புறோம் என்ன ஆச்சு?"
எனக்கு பசி எடுத்தது. நான் சாப்பிட பந்தியிலே உட்காந்துட்டேன்.
"நீங்க சாப்பிடத்தைக் கேட்கல உங்க காதல்?"
"இவ நேரா போய் என்னைப்பற்றி விசாரித்து இருக்கா. நான் மாப்பிள்ளையோட ப்ரண்ட்னு தெரிஞ்சதும் நேரா நித்யா கிட்டயே என்னைப்பத்தி சொல்லிட்டா"
"ஐயோ என்ன ஆச்சு?"
"இந்த லூசு(நித்யா) என்ன சொல்லியிருக்குனா, 'அவன் அப்படித்தான் எப்பயுமே காமெடி பண்ணிட்டு இருப்பான். சீரியஸா எடுத்துக்காதானு' சொல்லிட்டு என்னைக் கூப்பிட்டு கேவலமா திட்டுனா,
"அப்புறோம்? என்ன ஆச்சு?"
"அன்னைக்கு நைட் எங்களுக்கு ரூம் புக் பண்ணியிருந்தாங்க. நாங்க எல்லாம் ஒரு ரூம்ல இருந்தா எதிர் ரூம்ல இவங்க எல்லாம் இருந்தாங்க. வழக்கம் போலவே என்ன எல்லோரும் கலாய்க்க அப்போ இவ என்னைப் பார்த்து அங்க பேசுவதை ஒட்டு கேட்டு இருக்கா"
"ஓ"
"ஆமா இவரு பெரிய மன்மத குஞ்சு. நாங்க ஒட்டுகேட்குறோம். ஒரே சப்தம், கூச்சல் தூங்கவே முடியல சோ வெளிய வந்து பார்த்தேன்..." என்றாள் இதி
"அப்போ பார்த்து வெளிய மீண்டும் இந்த நாய் (தியா) போக, அவனைப் பார்த்து,
"அவர் உண்மையிலே கவர்மெண்ட் எம்ப்ளயானு" கேட்க, போதையில இருந்த நாய் "ஐயோ அவன் கவர்மென்ட் வேலையெல்லாம் இல்லைங்க அவனுக்கு கவர்மென்ட் வேலை வாங்கணும் வாங்கணும்னு நெனச்சு கொஞ்சம் டிப்ரெஸ் ஆகி மூளை மழுங்கி யாரு கேட்டாலும் நான் கவெர்மென்ட் ஆபிஸேர்னு சொல்லிட்டு இருப்பானு..."என்று சொல்லி உளறிவிட்டு போயிருக்கான்.
எல்லோரையும் பலமாக சிரித்து,"ஏன்டா தியா இப்படிச் சொன்ன?"
"பின்ன என்கிட்ட ஒரு பொண்ணு வந்து இவனைப் பத்தி கேட்டா அதுதான் ஏதோ உளறிட்டேன்"
"ஐயோ அப்புறோம் என்ன ஆச்சு?"
"நைட் எல்லாம் நல்லா யோசிச்சேன். எனக்கு இந்தப் பொண்ணு மேல ஒரு இன்ரெஸ்ட்னு புரிஞ்சு காலையிலே நித்யாவைத் தேடிப்போய் அவளைப்பத்தி விசாரிக்கப் போனேன்..."
"சூப்பர். நீங்க செம ஷார்ப் அண்ணா" - பாரு
"நான் நித்யா ரூமுக்கு போக அங்க யாருமே இல்லை. சரி நான் நித்யா வரட்டும்னு நெனச்சு அங்கேயே இருக்க அங்கேயிருந்த மேகசனை படிக்க எடுக்க அந்நேரம் பார்த்து உள்ள வந்த இவ நான் நகையெல்லாம் திருடுறேனு நெனச்சு கதவை வெளிய பூட்டி எல்லோரையும் கூட்டிட்டா..."
"ஐயோ இதென்ன உங்களுக்கு வந்த சோதனை?"
............................................
அன்றைக்கு கொஞ்ச நேரம் அவங்க ரெண்டுபேரும் (துஷி, ரேஷா) அந்த கைட் வீட்டுலையே இருக்க கொஞ்சம் டிஸ்கஸ் பண்ண அவர்,"ரெண்டு பேரும் ஒரே ஏரியால ஆனா வேற வேற ப்ராஜெக்ட் பண்றீங்க. சோ நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிக்கோங்க. அப்போதான் உங்க ப்ராஜெக்ட் நல்லா போகும்" என்று சொன்னவர் இருவரையும் அறிமுகப் படுத்திவிட்டு அன்றைய வேலையை முடிக்கவும் மழை நிற்க மாட்டேனு பெய்ய அவளுக்கு எந்த வண்டியும் கிடைக்காமல் போக,
அவள் தங்கியிருக்கும் விடுதியைத் தாண்டித் தான் துஷி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் அவளை அவனுடனே அனுப்பினார்.
அவளோ தயங்க,"இங்கப் பாரும்மா இவனும் தமிழ் பையன் தான். என் ப்ரண்டோட பையன். என் பையன் மாதிரி தான். சோ நீ தைரியமா இவன் கூட போகலாம். அண்ட் சாரி இன்னைக்கு உன்ன நான் வரச் சொல்லியிருக்கவே கூடாது. மழை பெயுறது வேற தெரியாம நான் கூப்பிட்டேன். சோ நீ இவன் கூடவே போ. டேய் துஷி பார்த்து பத்திரமா இறக்கிவிடனும் சரியா?"
"நோ ப்ராப்லம் ஆண்ட்டி. நான் கேரண்டி" என்று சொல்லி அவளை அழைத்துச்சென்றான் துஷ்யந்த். அங்கே இருந்தவரை எதையுமே கேட்காதவன் பைக்கில் வரும் போது அவளைப்பற்றியும் அவள் குடும்பம் அவள் படிப்பு எப்படி ஒடிஷா வந்தாள் எல்லாமும் கேட்க ஏனோ ரேஷாவுக்கு அவன் மீதிருந்த நல்ல அபிப்ராயம் அப்படியே இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சரியத் துவங்கியது.
இவளும் சில கேள்விகளுக்கு முதலில் பதில் சொன்னவள் பின்பு சொல்லாமல், சொல்லப்பிடிக்காமல் அமைதியாக வர அவனோ இதைப் பற்றித் தெரியாமல் அவளை இறக்கிவிட்டு செல்ல அவள் ஒரு தேங்க்ஸ் மட்டும் சொல்லிவிட்டு,"பார்க்க நல்லா இருக்கான். ஆனா அங்க வீட்டுல ஒரு மாதிரி பழகினான்.என்னைக் கண்டுக்கவே இல்ல ஆனா இப்போ வரும் போது சும்மா இல்லாம கேள்வியாக் கேட்டு என்னைத் துளைச்சிட்டானே?" என்று நினைத்தவள் அவளின் வேலைகளில் மூழ்கினாள்.
நாட்கள் அப்படியே போக ஹாய் ஹலோ என்று பேசுவதும் சிரிப்பதும் என்ற அளவுக்கு வந்தாலும் அவன் அங்கே அந்த கைடின் வீட்டில் ஒருமாதிரியும் வெளியே ஒரு மாதிரியும் பழகுவதும் அன்று ஒருநாள் அவள் வெளியே அவுட்டிங் வர அவன் பின்னால் ஒரு பெண்ணை உட்கார வைத்துக்கொண்டு சென்றதும் அவளுக்கு குழப்பம் தந்தது. மறுநாள் அவர்கள் வீட்டிற்கு வந்தவனிடம் அவர்களின் கைட்,"நேத்து எங்க போன துஷி?" என்றதற்கு,
"எங்கேயும் போகலையே ஆண்ட்டி.ஏன்?"
"நேற்று உன்ன மாதிரியே யாரோ ஒரு பெண்ணோட பார்த்ததா சொன்னாங்க..." என்று சொல்ல,
"ஆண்ட்டி நான் அப்படி பண்ணுவேனா? என் பைக்ல ஏறுன ரெண்டாவது பெண் இதோ இவங்க தான். முதல என் அம்மா" என்று அவன் பாட்டிற்கு ரீல் விட, ரேஷாவிற்கு அவன் மீதிருந்த நல்ல அபிப்ராயம் மொத்தமாய்ச் சென்றது. பின்ன அவ்வளவு ஜாலியாக பேசுபவன் ஏன் பொய்ச் சொல்ல வேண்டும் என்று நினைக்க, அவனிடம் முன்பு போல் பேசாமல் ஒதுங்கினாள்.(முன்பே அவ்வளவு ஃப்ரீயாக எல்லாம் பேசமாட்டாள் அது வேறு. அதன் பிறகு அவனிடம் ஒழுங்காக பேசுவதையே நிறுத்திவிட்டாள்)
அந்த வாரம் ப்ராஜெக்ட் விஷயமா ஒரு டெஸ்டிங் செய்ய அவர்கள் இருவரும் சென்றனர். அப்போது தான் அவனைப் பார்த்தும் கூட பேசாமல் இருக்கும் ரேஷாவை உணர்ந்தான் துஷி.
"ஹே ரேஷா என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க?"
"நத்திங்க்..."
அவனும் அதன் பிறகு அவளிடம் பேசவில்லை. அவர்கள் அங்கே வேலையை முடித்துவிட்டு வர அப்போது சரியாக அவனுடன் அன்று பைக்கில் பயணித்தப் பெண் அவன் முன்பு வந்து நிற்க அவளோடு வழக்கமாகப் பேசுவதைப்போல் பேசிவிட்டு அவளை அனுப்பு முயல,
"என்ன நீயே ட்ராப் பண்ணு துஷி" என்றவளுக்கு,
"ஏன் தாயே மீண்டும் நான் உன்னக் கூட்டிட்டு போறது உன் அத்தைக்குத் தெரிஞ்சு அவங்க என்னை டின் கட்டவா?" என்று சொல்லிவிட்டு அவளை அனுப்பிவைக்க ரேஷாவிற்கு வாய் வரை வார்த்தை வர தான் ஏன் அவன் மீது கோவப் படுகிறோம் என்று தெரியாமலே அவள் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட அதன் பின் அவளை அனுப்பி வைத்துவிட்டு துஷி ரேஷாவைத் தேட அவளைக் காணாது அவளுக்கு அழைப்பு விட்டும் அவள் அதை எடுக்கவே இல்லை. இவனும் சாதரணமாக எடுத்துக்கொண்டான்.
*************
"என்னைப் பார்த்து திருடன்னு சொல்லி இவ கூப்பிட உடனே நித்யா எங்க பாய்ஸ் அவ வீட்டைச் சேர்ந்தவங்க எல்லோரும் வந்து ரெடியா நின்னு கதவைத் திறக்க அப்போ என்னைப் பார்த்திட்டு உடனே எல்லோரும் சிரிக்கவும் புரியாம திருதிருனு முழிச்சிட்டு நின்னா. அப்புறோம் தான் நித்யா நான் யாருனு எல்லாமும் சொல்ல..."
"சூப்பர் உடனே சாரி கேட்டு இருப்பாங்களே? கரெக்ட்டா?" - பாரு
"அப்போ நீங்க பைத்தியமெல்லாம் இல்லையா?" - இதி
உடனே எல்லோரும் சிரித்து ,"ஐயோ அண்ணா உங்க நிலைமையை நெனச்சா எனக்கு சிப்பு சிப்பா வருது" - மௌனி
"அப்புறோம் தான் இந்த புண்ணியவதி (நித்யா) என்னைப்பத்தி எல்லாமும் சொல்லவும் இவ அந்த தியா பையனைப் பார்த்து முறைத்தாள்"
"சாரிங்க நான் தெளிவா இருக்கும் போது நீங்க கேட்டு இருக்கனும் இல்ல?" என்றான் தியா.
"உண்மையிலே நீங்க இன்சூரன்ஸ் கம்பெனில வேலை செய்யுறீங்களா? என்றாள் இதி
"சத்தியமா நான் கவர்ன்மென்ட் ஆபிசர் தான். அதும் சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஆபிசர்
"
"சாரிங்க ரொம்ப மிஸ்கம்யூனிகேசன். நேத்து நீங்க ரோலிங்ல வந்து என் கால்ல விழுந்தது கூடவே நைட் கன்பூசன் எல்லாம் உங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்" என்றவள் பிறகு கல்யாணத்திற்கு ரெடி ஆக செல்ல,
"அவ்வளவு தானா இதி? இதித்ரினு கூப்பிட பெருசா இருக்கு
அதுக்கு தான் சார்ட் பார்ம், கூப்பிடலாம் தானே?"
"எது நாலு எழுத்து பேரு உங்களுக்கு பெருசா மிஸ்டர்?"
"இதித்ரினு கூப்பிட்டா ஒரு டிஸ்டன்ஸ் ஃபீல் ஆகுது. அதுவே இதினு கூப்பிட்டா ஒரு க்ளோஸ்நெஸ் ஃபீல் ஆகுது"என்று அவன் பேச சுற்றியிருந்த தியா,ஹேமா,நித்யா இளங்கோ எல்லோரும் இதுவரை காமெடி பீசாகவே பார்த்துப்பழகியவன் ரொமான்ஸ் செய்வதைப் பார்த்து ஷாக் ஆகி இருந்தனர்.
"ஓகே ஜிட்டு" என்று அவள் செல்ல, அவனோ
சிரித்து "ஜிட்டு... சோ ஸ்வீட் இல்ல?" என்றான்.
"டேய் உன்னை நாங்க இத்தனை வருஷமா ஜிட்டுனு தானே கூப்பிடறோம்?"
"நீங்க கூப்பிட்டதும் இதுவும் ஒன்னா? ஸ்டுபிட்ஸ்.அவ வாயில கேட்கும் போது தான்
என் பேரு எவ்வளவு அழகா இருக்குனு தெரியுது தெரியுமா?"
"டேய் இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல?"
- ஹேமா
"ஏன்டா நீங்க மட்டும் தான் ரொமான்ஸ் பண்ணனுமா? நாங்கயெல்லாம் பண்ணக்கூடாதா? அப்புறோம் பாய்ஸ் எல்லோரும் ஒன்ன நல்லா கேட்டுக்கோங்க. நானும் ஹீரோ தான் நானும் ஹீரோ தான் நானும் ஹீரோ தான்" என்று அழுத்திச் சொல்லிவிட்டு அவன் செல்ல இங்கே இளங்கோ,செபா,துவாரா இளங்கோ,ஹேமா எல்லோரும் முழித்துக்கொண்டு இருந்தனர்.
"என்னடா இவன் ஆளே மாறிட்டான்?" என்ற ஹேமாக்கு
"எல்லாம் காதல் படுத்தும் பாடு"

"அப்புறோம் என்ன ஆச்சு அண்ணா ஸ்விஸர்லேண்ட் போய் டூயட் எல்லாம் பாடுனீங்களா?"
"எங்கம்மா வெச்சான் இந்த ரைட்டர். இவன் கண்னுக்கு நானெல்லாம் ஹீரோவாவே தெரியில..."
"அப்புறோம் சொல்லுங்க என்ன ஆச்சு?"
"அன்னைக்கு நிறைய பேசுனோம். ரெண்டு பேருக்குமே ஓரளவுக்கு எல்லாம் செட் ஆனது. அவ அப்போதான் படிச்சிட்டு இருந்தா. பிஜி வேற பண்ணனும்னு சொன்னா. அக்கா வேற இருக்காங்கனும் சொன்னா. எனக்கும் நிறைய ரெஸ்பான்சிபிலிட்டிஸ் எல்லாம் இருந்தது. அப்படியே நாலு வருஷம் ஆகிடுச்சு. அவ அக்காக்கும் மேரேஜ் முடிஞ்சது. என் அக்காக்கும் மேரேஜ் முடிஞ்சது"
"வாரே வா. கலக்கறீங்க போங்க? அப்போ அடுத்து உங்க மேரேஜ் தானா?"
இருவரும் சிரிக்க,
"வெட்கம் படுறீங்க ஜிட்டு அண்ணா. நீங்க வெட்கமெல்லலாம் படுவீங்களா?"
"அவனுக்கு பேசிகலி வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் இல்ல பாரு" என்றான் இளங்கோ.
"இது அந்த வெட்கம் இல்ல? ஸ்டுபிட்.லவ்"- ஜிட்டு .
"நித்யாக்கா உங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சதும் எப்படி இருந்தது?"
"அதையேன் கேட்குற? மேரேஜ் முடிஞ்சதும் நேரா என் கிட்ட வந்து நித்யா நான் இதியை விரும்பறேன் அதை அவ கிட்ட சொல்லிட்டனேனு சொன்னான் பாரு எனக்கு அப்படியே ஹார்ட் அட்டாக்கே வந்திடுச்சு, இருந்தும் நான் இதி சின்ன பொண்ணு இதெல்லாம் அவளுக்குப் புரியாதுனு சொன்னா அவளோ பல்ல இளிச்சிட்டு வந்து நிக்கறா. நான் ஷாக் ஆயிட்டேன். பார்ரா இந்த பையனுக்குள்ளும் என்னவோ இருந்திருக்குனு? 7ஜி அப்பா மாதிரி நெனச்சிக்கிட்டேன். இருந்தும் ஜல்லடை போட்டு தேடுனாலும் இவனை மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்கமாட்டான் தான்"
"எங்க இன்னொரு முறை சொல்லு நித்யா.இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே"- ஜிட்டு.
இப்போது ஹேமா,இளங்கோ,செபா,விவான்,துஷி என எல்லோரையுமே அழைத்தவன்,"நல்லா கேட்டுக்கோங்கடா இடியட்ஸ்"
அவர்கள் எல்லோரும் நித்யாவை முறைக்க,
"என்ன பண்ண சொல்றீங்க? அவன் உண்மையிலே நல்லவன் தானே?"
"அசிங்கப்பட்டார்கள் ஆட்டோ காரர்கள். ஹா ஹா" என்று துள்ளி குதித்தான் ஜிட்டு, "சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்" என்று பாடல்பாட,
"அஞ்சடில ஒரு அமிதாப் பச்சனை பார்த்துக்கோங்க" - தியா கோவமாய்ச் சொல்ல,
"அஞ்சடியோ ஆரடியோ எனக்கு ஆள் இருக்கு.உனக்கு? தொப்பி தொப்பி" என்று சிரிக்க கோவமாய் தியா எழுந்து போனான்.
"டேய் தியா நில்லு" என்று பின்னாலே ஹேமா போக,
"டேய் ஓவர் சீன் எல்லாம் இல்ல. அவன் சாப்பிட்டான் சோ கைகழுவ போறான். போ போ இடத்தைக்காலி பண்ணு. காத்து வரட்டும்" என்று சொன்ன ஜிட்டு எழுந்து போக,
"இவனையெல்லாம் எப்படிம்மா நம்பி ஓகே சொன்ன?" என்று சிரித்துக்கொண்டே கேட்டான் இளங்கோ.
"இந்த நாலு வருஷத்துல என்ன நிறைய சிரிக்க வெச்சி இருக்கான். அண்ட் கோவமே பட்டதில்லை. எல்லாத்தையும் டேக் இட் ஈஸியா எடுத்துப்பான். அவன் இன்னொசென்ஸ் தான் அழகே"
"ஓ!" என்று எல்லோரும் இப்போது இதியை கலாய்க்க,அவள் எஸ் ஆனாள்.
என்ன தான் ஜிட்டுவை எல்லோரும் ஓட்டினாலும், ஹேமா,தியா,செபா,விவான் இளங்கோ என பாய்ஸ் எல்லோருக்கும் அவனை நினைக்கையில் மகிழ்ச்சி தான். அவர்களுக்குத் தெரிந்து அவனைப்போல் யாராலும் இருக்கவே முடியாது. எவ்வளவு கலாய்ச்சாலும் சீரியஸாவே எடுக்க மாட்டான் என்று நினைத்தவர்கள் அவனிடமிருந்து எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸா பெருசா எடுக்காம எல்லாத்தையும் ஜாலியா ஈஸியா எடுக்கணும்னு ஒரு பெரிய விஷயத்தை கற்றுக்கொண்டார்கள்.
எல்லோரும் எழுந்து கையை கழுவிவிட்டு வர நித்யா மட்டும் இளவேனிலுக்கு ஊட்டிக்கொண்டு இருந்தாள். விவானும் யோசனையில் இருக்க இளவேனிலுக்கு ஊட்டியவள் கைகழுவ செல்ல பின்னாலே சென்றான் விவான். அதற்குள் எல்லோரும் அசெம்பிள் ஆகி கொஞ்சம் பேசி மீண்டும் ஜிட்டுவை கலாய்க்க அவனின் அந்த ஈஸியா எடுத்துக்கொள்ளும் பிஹேவியரை அனேஷியா நீண்ட நேரமாக யோசித்துக்கொண்டு இருந்தாள்.
வாஷ் செய்யச் சென்ற நித்யா கழுவிக்கொண்டிருக்க பின்னாலே வந்தவன் தன் கையை அங்கிருந்தே நீட்டினான். அவனுக்கு வழிவிடாமல் நித்யா மறைத்துக்கொண்டு நிற்க இவனும் விளையாடி கையை நீட்டி கழுவும் சாக்கில் இருபக்கமும் அவளை அணைக்கட்டினான். முதலில் புரியாமல் நின்றவள் அவன் அவளை நெருங்கி வந்து அவள் கன்னத்தோடு அவன் கன்னம் உரசி அணைத்து நிற்க, "விவான் தள்ளு யாராவது வரப்போறாங்க"
"யாரும் வரமாட்டாங்க எல்லோரும் போயிட்டாங்க"
"விளையாடாத விவான்"
அவன் மூக்கை அவள் கன்னத்தில் உரசியபடியே அந்த கண்ணாடியில் இருவரும் பார்க்க அவளோ என்னவென்பதைப் போல் புருவம் உயர்த்தவும்,
"ஐ மிஸ் யூ நித்யா"
"பார்ரா இவ்வளவு கிட்ட இருந்து மிஸ்ஸாம்"
அவன் கைகள் அவள் இடையைச் சுற்றிப்பிடிக்க, "விடுடா என்ன"
"நித்யா நீ பெருசாயிட்ட போல? ஹிப் சைஸ் எல்லாம் கூடிடுச்சு நித்தி" என்று சொல்லி கண்ணடிக்க, முறைத்தாள் அவள்.
"என்ன டாக்டர் நீ? கலோரிஸ் பர்ன் பண்ணனும். நீ பர்ன் பண்றியா இல்லையா?"
"உங்க அக்கறைக்கு ரொம்ப தேங்க்ஸ். நான் பண்ணிக்குறேன்"
"இல்ல நித்யா தேர் இஸ் அன் ஈசியஸ்ட் வே டு பர்ன் கலோரிஸ். தெரியுமா?"
"டேய் நீ எதுக்கோ அடிபோடுறன்னு தெரியுது. நான் அதுக்கு ஒத்துவரல என்ன ஆளை விடு" என்று அவள் நழுவப்பார்க்க,
"எ டீப் பேஷநெட் (ஆழமான ஆத்மார்த்த) கிஸ் பர்ன்ஸ் 5 கலோரிஸ் எ மினிட்ஸ் ஆம்"
"ஆஹாம்? எப்போ இருந்து சார் டாக்டர் ஆனீங்க?"
"இன்னொன்னும் இருக்காம் நித்யா 25 நிமிஷத்துல 100 கலோரிஸ் வரை பர்ன் பண்ண வைக்க எனக்குத் தெரியும். என்ன நீ கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணனும்" என்றவன் கண்ணடிக்க,
"அப்ப்பா என்ன சாருக்கு இன்னைக்கு ரொமான்ஸ் அருவியா கொட்டுது?"
"இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. இதுனால நீ அம்மா அப்பா அண்ட் எல்லோரையும் விட நம்ம இளா குட்டி ரொம்ப ஹேப்பி ஆவா"
"இளா?" என்று அவள் முகம் சுளிக்க,
"அவளுக்கு தான் தம்பியோ தங்கையோ வேணும்னு கேட்டலாமே? நீ கூட அம்மாகிட்ட ஓகே சொன்னியாமே?"
"டேய் உன் பேச்சே ஒரு மார்க்கமா இருக்கு. ஒழுங்கா தள்ளிப்போ"
"அம்மா கேட்டதுக்கு ஓகே சொன்னியாம். நான் கிட்ட வந்தாலே இப்படிப் பண்ற? நீ என்ன குந்தி தேவியா தனியா குழந்தை பெத்துக்க?"
"என்னடா ஆச்சு? நல்லா தானே நைட் தூங்க போன? ஏன் இப்படி?"
"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லையே?"
அதற்குள் அங்கே கைகழுவ வந்த அனேஷியா,"ஹ்ம்ம்" என்று தொண்டையைச் செரும இருவரும் விலகினர். சிரித்துக்கொண்டே வந்தவள் நேராக ரெஸ்ட் ரூம் செல்ல,
"போச்சு போச்சு உன்னால என் மானம் போகுது போடா" என்று நித்யா விலகிச் செல்ல,
"பதில் சொல்லிட்டுப் போ நித்யா"
"நான் குந்தி தேவி இல்ல" என்றவள் கண் சிமிட்டிச் செல்ல,
"அப்போ டோன்ட் ஒர்ரி. உன் ஆசையை நான் நிறைவேத்துறேன். அண்ட் ஐ ஈவென் ஹெல்ப் யூ டு ரிடியூஸ் கலோரிஸ். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..."
"நீ கெட்ட சின்ன பையன்டா" என்றவள் சென்றுவிட, விவானும் கொஞ்சம் ரிலேக்ஸ்ட் ஆனான். பின்னே நேற்று இரவிலிருந்து ஏன் சில நாட்களாகவே இருந்த ஸ்ட்ரெஸ் எல்லாம் குறைவதைப்போல் இருக்க அவன் துவாராவைப் பார்க்கச் சென்றான்.
சிரித்துக்கொண்டே வந்து அமர்ந்த நித்யாவைப் பார்த்து,"என்ன அக்கா சிரிச்சிட்டே வரீங்க என்ன மேட்டரு?" - மௌனி,
"நத்திங்" என்று சொன்னாலும் விவான் சொன்னதெல்லாம் நினைத்து அவளுக்கு வெட்கம் வர,
"நீங்க வெட்கப்படுறதைப் பார்த்தா பெரிய ரொமான்ஸ் சீனே நடந்திருக்கும் போலயே?" என்று சொல்லவும் இப்போது எல்லோரும் அவளை ஓட்ட ஏனோ இப்போது செபா மட்டும் அங்கே அந்நியமாய் இருப்பதைப்போல் உணர்ந்தான்.(பயணங்கள் முடிவதில்லை)
இது முழுக்க முழுக்க இன்றைய காலத்து ஸ்டோரி.அப்பப்போ சில 18+ விஷயங்கள் எட்டிப்பார்க்கலாம்.
 
Last edited:
Top