Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-29

Advertisement

praveenraj

Well-known member
Member
சித்தாரா கொஞ்சம் நிம்மதியாக வந்து தூங்க, விவியன் தான் அவள் வாழ்வில் நடந்ததை நினைத்துக்கொண்டு இருந்தான். அவனுக்குத் தெரிந்து இவ்வளவு போல்டான பெண்ணை அவன் பார்த்ததில்லை. ஆனால் வெளியே வலிக்காததுப் போல் காட்டிக்கொண்டாலும் உள்ளே அவள் அனுபவிக்கும் வலியும் அதன் வெளிப்பாடாய் வந்த கண்ணீரும் அவனுக்கு ஏனோ வலித்தது.

ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க அங்கே அவள் உறங்கிக்கொண்டு இருந்தாள். அவளோடு என்னவென்று சொல்ல முடியாத ஒரு கனெக்சன் இருப்பதாய் அவன் யோசித்துக்கொண்டிருக்க அப்போது எதிரே இன்னும் தூங்காமல் பழைய நினைவுகளில் இருந்த துவாராவைப் பார்த்தவன், "துவா தூங்கலையா?"

"தூக்கம் வரலடா. ஆமா நீயென் ஒரு மாதிரி இருக்க?"

"அது..." என்றவன் திரும்பி சித்தாராவைப் பார்க்க,"என்னடா?"

அவன் எல்லாமும் சொன்னான்.

"விவி டூ யூ லவ் ஹெர்?"

"டேய் ச்சி உடனே லவ்வா? அதெல்லாம் ஒன்னுமில்ல..."

"ஏன்டா இவ்வளவு நாளா தனியா தானே இருக்க? ஏன் நீ கல்யாணம் செய்யக் கூடாது?"

"இப்போ எதுக்கு இதெல்லாம்?"

"சரி அப்போ என்ன தான் பிளான்?"

"இந்த டூர் முடியட்டும் சொல்றேன்" என்று அவன் சொல்ல, துவாராவுக்குப் புரிந்தது.

"வாடா உன் கூடக் கொஞ்சம் பேசணும்" என்றான் விவி.

"எதைப்பத்தி?"

"எதைப்பத்தினு சொன்னா தான் வருவியா? வாடா"

இருவரும் மீண்டும் எழுந்து அங்கே போக இப்போது இவர்களைப் பார்த்த சரித்திரா அவள் இடத்திற்கு வந்துவிட,

"சொல்லு"

"எனக்குக் காலையில உன்மேல செம கோவம்"

"டேய்"

"மூடுடா. கீர்த்தி என்னடா பண்ணா? துவாரா எனக்குத் தெரிந்து நீ இப்படி இல்லையேடா. இப்போ ஒரு மூணு நாலு வருஷமா தான் இப்படி இருக்க. என்ன ஆச்சுடா?"

துவாராவுக்கு ஏதேதோ நினைவுகள் வர,"ப்ளீஸ் அதைப்பத்திப் பேசாத..."

இப்போது தான் விவியனுக்கு ஏதோ புரிவதுப் போல் இருந்தது. 'சம்திங் இருக்கு' என்று நினைத்தவன்,"சரி பேசல..."

கொஞ்ச நேரம் அப்படியேப் பேசிவிட்டு அவர்கள் இருக்கைக்கு வர அங்கே சரித்திரா காதில் ஹெட்போனுடனே தூங்கிவிட அதை எடுக்கலாமா வேண்டாமா என்று நினைத்துக் குழம்பியவன் அவள் காதிலிருந்ததை எடுத்துவிட உடனே கண் விழித்தாள் அவள்.

அவ்வளவு அருகில் அவனை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் உடனே விழித்துவிடுவாள் என்று இவனும் எதிர்பார்க்கவில்லை...

அவள் துள்ளி எழ,"சாரி ஹெட் போன் போட்டுட்டுத் தூங்கிட்டீங்க. அது தான்..."

"தேங்க்ஸ்" என்று சொன்னவள் மறுபடியும் படுத்துக்கொண்டாள்.

'நாம கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமா நடந்துக்கிட்டோமோ?' என்று அவன் யோசித்தபடி அவனும் உறங்கினான்.

..........................................................................

மூக்கில் வாங்கிய குத்துடன் துஷி அசதியில் தூங்கிவிட யாழ் தான் தூங்கும் அவனைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவன் பொதுவாகவே வலிதாங்க மாட்டான்.'சாரிடா துஷி எருமை. இருந்தாலும் அந்தக் குள்ளச்சிக்கு இவ்வளவு கொழுப்புக் கூடாது. சட்டுனு உன்னைக் குத்திட்டா' என்று நினைத்தவள் அதை நினைத்துச் சிரித்தாள்.

திருமணம் சம்மந்தமாக எதிலுமே பெரிய ஈடுபாடு காட்டாமல் இருந்த செபாவை இப்போது நினைக்கையில் ஜெசிக்கு எல்லாமும் புரிந்தது. இறுதியாக அவன் சொன்னது,"எனக்கு இந்தக் கல்யாணம், நீ, இந்த வீடு எதுவும் பிடிக்கல" என்ற வார்த்தை மட்டும் காதில் ஒலிக்க, 'உனக்குக் கொஞ்சம் கூட என்னைப் பிடிக்காதா செபா? அதனால தான் இப்போவரைக்கு நான் எங்க இருக்கேன், என்ன பண்றேன் எங்கப் போறேன் எதையுமே தெரிஞ்சிக்க நீ விரும்பலையா? ஏன் நான் உயிரோடதான் இருக்கேனா இல்லையானு கூட நீ தெரிஞ்சிக்க மாட்டியா?' என்று நினைத்தவள்,

'இந்த மாதிரி நான் என் ஃப்ரண்ட்ஸ் ஓட டூர் போறோம். நீயும் வா ஜெசி நாம போலாம்னு சொல்லியிருந்தா நான் எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு வந்திருப்பேனே. ஆனா நீ நான் உன் கூட வரணும்னு விரும்பல இல்ல? எப்படி விரும்புவ? என்னைத்தான் உனக்குப் பிடிக்கவே பிடிக்காதே'என்று மீண்டும் மீண்டும் நினைத்தவள் அப்படியே அழுதபடியே உறங்கியும் போனாள்.

இங்கே செபாவும் மாலை அவனுக்கு வந்த அழைப்பை நினைத்துக் கொண்டிருந்தான். அவன் அன்னையிடமிருந்து வந்தது அழைப்பு,"எங்கடா நீ மட்டும் போற அவளையும் கூட்டிட்டுப் போலாமில்ல?" என்று சொல்ல,

"வேலை இருக்காம்" என்று அவன் பட்டும்படாமல் சொல்ல,

"டேய் செபா நீங்க ஹேப்பியா தானே இருக்கீங்க?" என்று அவர் கேட்டதும் என்ன சொல்லுவான் இவன்? "ஹ்ம்ம்" என்று மட்டும் சொல்லி வைத்தான்.

'நீ வெறும் காதலை மட்டும் காட்டியிருக்கலாமே ஜெசி? எதுக்குக் கூடவே உன் பிடிவாதம் அந்த கட்டளை எல்லாம் சேர்த்துக் காட்டுன? எனக்குத் தெரியும் நான் தப்பா பேசிட்டேன். நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது'

'எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல.ஆனா உன்ன பிடிக்கும் ஜெசி. எனக்கே புரியில உன்னைப் பிடிக்காம எல்லாம் கண்டிப்பா நான் எட்டு மாசம் உன்கூட ஒரே வீட்டுல தங்கியிருக்க முடியாது...'

'இப்போ கூட என்கிட்ட உனக்குப் பேசத் தோணல தானே?' அவன் அமைதியாகக் கரைந்தான்.

இறுதியாக அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவத்தை நினைத்தான். அன்று இவனுக்காகப் பொறுத்தவள் பொங்கிவிட்டாள்.

"செபா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்"

"என்ன?"

"ஏன் ஒரு மாதிரி இருக்க?"

"நான் நல்லா தான் இருக்கேன்"

"இந்த ஒன்பது மாசத்துல இன்னைக்கு நீ சிரித்த மாதிரி நான் ஒரு நாள் கூட பார்த்ததில்லை. எங்கிட்டன்னு இல்ல எங்கேயும், என்ன பிரச்சனை உனக்கு?"

"எல்லாமே பிரச்சனை தான்" என்று சொன்னவன் ரூமிற்குள் போக, அவனைப் பிடித்து நிறுத்தினாள்.

"எனக்கு பதில் சொல்லிட்டுப் போ"

"என்ன பதில்?"


"உனக்கு என்ன பிரச்சனை?"

"......."

"சொல்லு செபா ப்ளீஸ்"

"என்ன சொல்லணும்? எனக்கு இந்த கல்யாணம், நீ, இந்த வீடு எதுவும் பிடிக்கல. போதுமா?" அவன் சென்றுவிட்டான். ஜெசிக்கு தான் என்னமோ போல் ஆகிவிட்டது. இப்போது தான் அன்று அவன் தற்சமயம் கல்யாணம் செய்யும் எண்ணமில்லை என்று சொன்னது புரிய இதுவரை அவர்கள் வாழ்வில் நடந்ததை நினைத்துப்பார்த்தாள்.

இன்று அவனுடைய கொலீக் ஒருவருக்கு மேரேஜ் ரிசெப்சன். அந்தப் பெண் ஜெசிக்கு தோழி. சோ எதேர்ச்சையாக இவள் அங்கே போக ஏற்கனவே அங்கே இருந்தவன் அவ்வளவு ஜாலியாக சிரித்துப் பேசிக்கொண்டிருக்க ஒருமுறைக் கூட தன்னிடம் அவன் இவ்வாறு இருந்ததில்லையே என்று நினைத்தவள் குழம்ப ஃப்ரண்ட்ஸ் ஓட சேர்ந்து ஆட்டம் பாட்டம் என்று இவன் இருக்க, அவளுக்கு ஏனோ தலை வலித்தது. கோவமாக வீட்டிற்கு வந்தவள் அவனின் அறையில் டிரஸ் வைக்கப் போக இவள் போனமுறை வெளியூர் சென்று அவனுக்கு வாங்கிவந்த பொருட்கள் எல்லாம் கீழே கடந்தது. அப்படியே நூல் பிடித்தபடி போக அவனுக்காக அவள் வாங்கிக்கொடுத்த எதுவும் அவன் இதுவரை பயன்படுத்தாமல் அப்படியே இருக்க எல்லாமும் இப்போது தான் கவனிக்கிறாள் . அவளுள் நிறைய சந்தேகங்கள் வர அவனிடமே கேட்டுவிடலாம் என்று கேட்டவளுக்கு அவன் பதில் அதிர்ச்சியளித்தது.


அதற்கடுத்த நாள் தான் நேற்றைய நாள்.(இவர்கள் பயணம் செய்யத் துவங்கிய நாள்) நேற்று முடிந்து இன்று முடிந்து நாளையும் வரப்போகிறது அவளுக்கு ஏனோ எல்லாமும் தவற விட்டதைப்போல் தோன்றியது.

...........................................................................................................................................................................

ரயிலின் பயணத்தின் மூன்றாம் நாள் காலை 05 .15(முதல் நாள் இரவு மட்டும. இரண்டாவது முழு நாள். இன்று மூன்றாவது நாள்)

புருலியா ஜங்க்சன் வெஸ்ட் பெங்காலின் கிழக்குப் பகுதி .


திப்ருகார்க் எக்ஸ்பிரஸ் தன்னுடைய மூன்றாம் நாள் பயணத்தில் இருந்தது. இரவெல்லாம் ஒருவித குழப்பத்திலிருந்த ரேஷா காலையிலே விழித்துக்கொண்டாள். எழுந்தவள் ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு வந்து அமர காஃபி வாங்கிப் பருகினாள்.

அவள் அன்னைக்கு அழைப்பை விடுக்க காலையில் பேசிக்கொண்டிருந்தவளுக்கு ஒரு குண்டு விழுந்தது. "ஒரு ஜாதகம் வந்திருக்கு ரேஷா அப்பாக்கு எனக்கு எல்லாம் ரொம்ப இஷ்டம்"

"அம்மா என்ன இது? நான் தான் ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொன்னேன் தானே? இப்போ யாரைக்கேட்டு இதை ஓகே பண்ணீங்க?"

"ஓகே எல்லாம் பண்ணலடி. நல்ல இடம் அது தான் சொன்னேன்"

"அதெல்லாம் முடியாது" என்று இவள் சொல்ல, "காலங்காலையில என் பிபிஐ ஏத்தாத. முதல போட்டோ பாரு அப்புறோம் பிடிச்சிருக்கா இல்லையானு பார்ப்போம்"

கோவமாக போனை வைத்துவிட்டாள். மீண்டும் பெட்சீட்டை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கினாள்.

நேற்றைய இரவு உறக்கமில்லாமல் தவித்தவர்கள் நால்வர். துவாரா, ஜெசிந்தா, செபா, விவான். ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை.

விவான் தூங்கச் சென்றதும் அவனுக்கு ஒரு அழைப்பு வர,

"சொல்லு"

"ஒன்னும் பிரச்சனையில்லை தானே?"

"யாரு சொன்னா?"

"சொல்லு விவான் ப்ளீஸ்"

"ஒண்ணுமில்லை"

"பொய்ச் சொல்லுற"

விவானிடமும் பதிலில்லை.

"அப்போ என்ன நடந்தது?"

"நான் இப்போ எதையும் சொல்ல முடியாது. சொல்லக் கூடிய நிலையில் இல்லை, ஹோப் தி பெஸ்ட்."

அந்தப்பக்கம் அழும் சப்தம்.

"அழாத ப்ளீஸ் @#$%"(ஒரு பெயர்.தெரிந்தே தான் ப்ளாங்க்)

ஏதேதோ சமாதானம் செய்தான். சில விஷயங்கள் நடக்காது என்று தெரிந்தும் இல்லை நடக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும் ஏதோ ஒரு மூலையில் இது நடந்துவிடக்கூடாதா என்று நாம் ஆசைப்படுவோமே? அதுபோல் தான் விவானின் நிலைமை.

இதுவே அவனின் தூக்கமின்மைக்குக் காரணம். சில வாரங்களாகவே அவன் மிகுந்த மனவுளைச்சலில் இருக்கிறான். துவாரா, கீர்த்தி, சரித்திரா என்று அடுத்தடுத்து பிரச்சனைகள்.

பொதுவாக இந்த மாதிரி அவன் மனமுடைந்து இருந்தால் அவன் மனம் நித்யாவை அதிகம் தேடும். இப்போது முடியாதே? இந்த டூரை அரேஞ் செய்த ஒரே காரணத்திற்காக அவன் அதிகம் மனவுளைச்சல் அடைகிறான். இருந்தும் நல்ல முடிவுக்காக என்று நினைத்து காம் டவுன் ஆகிறான். நல்ல முடிவா என்று பார்ப்போம்?

........................

கல்யாணம் முடிந்ததும் எல்லோரையும் போல ஹனிமூன் செல்லலாம் என்று முடிவெடுக்க அந்நேரம் பார்த்து செபாவின் அன்னைக்குக் கொஞ்சம் உடல்நிலை முடியாமல் போய்விட அது முடிந்து அடுத்த பிளான் போடுவதற்குள் ஜெஸியின் பாட்டி இறந்துவிட மூன்றாவது பிளான் போடும் போது அவளுக்கு ஆபிசில் புதிய ப்ராஜெக்ட் இயர் எண்டு என்று வந்துவிட இந்தப்பக்கம் செபாக்கு வாழ்க்கையே பிடிக்காமல் போனது.ஆனால் ஜெஸியோ அதைப்பற்றி எதையும் கண்டுக்கொள்ளாமல் கேசுவலாய் இருப்பதாக தோன்ற இவன் நைட் ஷிப்ட் சென்றுவிட அவள் பகல் ஷிப்ட் செல்ல இருவருக்கும் இளைப்பாறவும் கலந்து பேசவும் ஒருவர் என்ன நினைக்கிறார் என்று மற்றொருவர் அறிந்துக்கொள்ளவும் முடியாமலே போய்விட்டது.

ஜெசி கல்யாணம் தான் ஆகிவிட்டதே இனி எங்கு சென்றுவிடப் போகிறான் என்று நினைத்து கொஞ்ச அவசர ப்ரொஜெக்டில் மூழ்கிவிட, அவனுக்கு அவன் அன்னை உடல்நலம் குன்றியது மேலும் அவன் ஆசைப்பட்ட மாதிரி 'எதுவும்' நடக்காமல் அவன் எதெல்லாம் நடக்கக்கூடாது என்று நினைத்தானோ அதெல்லாம் நடக்க அந்த ஈகோ என்னும் சுவர் இருவரும் அறியாமலே சீனப் பெருஞ்சுவர் போல நீண்டுவிட காலங்கள் அப்படியே ஓடிவிட்டது. ஆக்சுவல்லி இந்த ப்ரொஜெக்ட் முடிந்ததும் கொஞ்ச நாட்கள் லீவ் எடுக்கலாம் என்று தான் ஜெசி நினைத்திருந்தாள். இதுவேறு தள்ளித்தள்ளி போய்க்கொண்டே இருந்தது. இந்த ப்ரொஜெக்ட் மூன்று மாதங்களுக்கு முன்னாலே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் தாமதம் ஆகிவிட முதலில் பெயர்க் கொடுத்ததால் அவளால் வெளியேற முடியவில்லை.

இந்த சமயத்தில் தான் அந்த கல்யாணத்திற்குச் சென்றுவர அந்த நாள் சண்டையில் முடிந்தது. மறுநாள் அவள் இங்கே ப்ரொஜெக்ட் விஷயமாய்க் கிளம்ப செபா டூர் விஷயமாய்க் கிளம்பினான்.

அந்த இரவு சண்டையின் காரணமாய்த் தான் பெனாசிரிடம் எழும்பூர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது எல்லாமும் சொல்லி அவள் அழுதுவிட்டாள். ஜெசி வாழ்வில் நடந்த, நடக்கும் எல்லாமும் அறிந்தவள் பெனாசிர் மட்டும் தான். பெனாசிரும் "கொஞ்சம் பிரேக் எடு பேசு" என்று பலமுறை சொல்லிவிட்டாள். அவளோ 'இந்த ப்ராஜெக்ட் முடிந்ததும் ஓய்வு எடுக்கலாம்' என்று நினைத்தவள் இப்போது வேலையையே விட்டுவிடலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டாள். அவன் சொன்ன 'நீ' உட்பட என்ற வார்த்தை அவளைக் கூர்மையாய்த் தாக்கியது.

ஆக்சுவல்லி ஸ்பீக்கிங் இதில் இன்னொரு சுவாரசியம் இருக்கிறது. ஜிட்டு ஜெசியிடம் இந்த ட்ரைனில் தான் செபா பயணிக்கிறான் என்று சொல்லும் முன்னாலே அவளுக்குத் தெரியும். இந்த டேட்டும் அந்த டேட்டும் சிங்க் ஆவதால் தான் ஜெஸ்சி இப்போது பயணிக்கிறாள்.

நேற்றிரவு ஜெசிக்கு அழைப்பு வந்தது. எடுத்துப் பேச அந்தப்பக்கம் ஹேமா தான் பேசினான். "ஜெசி அழாத.ஃபீல் பண்ணாத.எல்லாம் சரிபண்ணிடலாம். கொஞ்சம் பொறு" என்று சொல்ல அதற்குள் போனை பிடுங்கினாள் மௌனி.

"ஜெசி,டோன்ட் ஒர்ரி. எனக்குத் தெரிந்து உண்மையிலே செபா அண்ணா எந்தப் பொண்ணுப் பின்னாடியும் சுத்துனது இல்ல. மோரெவர் அவர் யாரையும் லவ்வும் பண்ணதில்ல. சோ அவருக்குக் கண்டிப்பா உன்னைப் பிடிக்கும். அன்னைக்கு எங்க ஆபிஸ்ல பொங்கல் செலிபிரேசனுக்கு கபிள்ஸ் எல்லாம் கூட்டிட்டு வரலாம்னு சொன்ன அப்போ செபா அண்ணா ஆசையா இருந்தாரு. ஆனா அன்னைக்கு அவரு மட்டும் தான் வந்தாரு. அவரு முகமே சரியில்லை"

(எல்லாருடைய கைன்ட் அட்டேன்ஷனுக்கு - செபா வேலை செய்யும் அதே ஐடி கம்பெனியில் தான் மௌனியும் வேலை செய்கிறாள். செபா தான் வேலையை வாங்க உதவி புரிந்தான். பெங்களூரில் ஒர்க் செய்தவள் ஹேமந்த் சென்னை வந்து ஜிம் ஆரமிக்க கொஞ்சகாலம் அங்கே வேலை செய்தவள் மீண்டும் சென்னைக்கு வந்து இங்கே செபாவின் ரெபரென்சில் அவன் கம்பெனியில் சேர்ந்துவிட்டாள்.சோ செபா- மௌனி-ஹேமா-விவான்-ஜெசி என்று ஒரு தொடர்ச் சங்கிலியால் இந்தப் பயணம் நிகழ்கிறது. இந்த டூருக்கு செபாவே ஜெசியை அழைப்பான் என்று நினைக்க அவனோ எதையும் சொல்லாமல் சென்றுவிட ஜெசி மௌனி மூலமாய் அவர்கள் அசாம் செல்லும் பிளான் தெரிந்தும் தெரியாததுபோல் பயணிக்கிறாள். ஆக்சுவல்லி செபாவுக்கு அசாம் வந்து ஒரு 'ஸ்வீட் சர்ப்ரைஸ்' கொடுக்கலாம் என்று ஜெசி நினைத்துக்கொண்டிருக்க அவனின் வார்த்தையால் சுக்குநூறாய் உடைந்துப்போனவள் 'எந்த' பயணத்துக்கு மிகவும் ஆவலாய்க் காத்திருந்ததாளோ அதே பயணம் அவளுக்கு அழுகையை மட்டுமே தந்தது. இதில் அவளுக்கே தெரியாத ட்விஸ்ட் என்னவென்றால் ஜிட்டு தான் பெரிய 'லாட் லபக்கு தாஸ்' என்று நினைத்துக்கொண்டு ஜெசியிடம் ஆறுதல் சொல்லுகுறேன் பேர்வழி என்று சென்று 'பெப்பர் ஸ்ப்ரேயில்' அடிவாங்கி சஸ்பென்ஸ் சொல்லுறேன்னு சொல்லி எல்லாமும் சொல்லி 'கெத்து'காட்டிக்கொண்டு இருக்கிறான். இதுல சார் ஓவர் பர்பார்மென்ஸ் செய்யுறேன்னு நெனச்சு நேத்து யாழிடம் செபாவை மூக்குடைகிறேன் என்று நினைத்து 'உளறவும்' செய்து இருப்பான். நல்லவேளை ஹேமா சரியான நேரத்தில் அவன் காலை மிதித்து காப்பாற்றினான். இந்த ரகசியம் ஜெசி,மௌனி,ஹேமா,விவான் தவிர யாருக்கும் தெரியாது. இந்த லட்சணத்தில் மிரு நித்யா எல்லோரும் அன்று செபா வரவில்லை என்று சொன்னதும் ஜெசிக்கு போன் செய்து ஓவர் பர்பார்மென்ஸ் வேறு செய்தார்கள். அப்பாடா ஒரு சஸ்பென்ஸ் ரிவீல்ட்

அதுதான் செபாவும் வாரானே பின்ன எதுக்கு ஜெசி அழுதுக் கொண்டே இருக்கிறாள் என்று உங்களுக்கெல்லாம் ஒரு டவுட் இருக்கலாம். அவனுக்கு அவள் மீது காதலே இல்லை என்று சொன்னது தான் அவளை ரொம்ப ஹர்ட் செய்தது.

இதெல்லாம் தெரிந்து தான் அன்று ரயில் நிலையத்தில் ஹேமா செபாவைத் தனியாக அழைத்து மெல்ல பேச்சுக்கொடுத்தான்.

.................................................................................................................................................................................

ஏனோ அதிக மனபாரம் ஜெசியைத் தாக்க அவளோ விழிக்காமல் உறங்கிக்கொண்டே இருந்தாள். ரேஷா தூங்கும் ஜெசியைப் பார்த்து அவளின் முடியைக் கோதிக்கொண்டு இருந்தாள். ரேஷாவுக்கும் ஜெஸியின் வாழ்வில் நடந்த எல்லாமும் தெரியும். என்ன அரைகுறையாகத் தான். ஜெஸியின் வாழ்க்கையைப் பார்த்து தான் ரேஷா பெனாசிர் இருவரும் திருமணத்தில் பெரிய ஆர்வத்தைக் காட்டவில்லை.

கம்பார்ட்மெண்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்க விழித்த செபா ரெஸ்ட் ரூம் சென்று விட்டு வர அவனுக்கு ஏனோ தூக்கம் வரவே இல்லை. ஜெசியை அவனுக்கும் பிடிக்கும். என்ன ஜெசியைப் போல் கல்யாணத்திற்கு முன்பிருந்தே எல்லாம் இல்லை. கல்யாணத்திற்குப் பிறகு தான். பொதுவாக எப்போதும் சல்வாரில் தான் இருப்பாள் ஜெசி. கல்யாணத்திற்குப் பிறகு ஒரு மூன்று முறை தான் சேரீ கட்டியிருக்கிறாள். அவன் அவள் அழகில் மெய்மறந்து ரசித்தும் இருக்கிறான். மேலும் நைட் ஷிப்ட் முடிந்து இவன் வீடுவர விடியற்காலை 3 - 4 மணியாகும். அப்போது நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கும் ஜெசியை பலமுறை 'சைட்' அடித்திருக்கிறான்.

'என்னிடம் கொஞ்ச நேரம் மனம்விட்டு ஃப்ரண்ட்லியாக பேசமாட்டாளா இவள்?' என்று பலநாள் நினைத்திருக்கிறான். கல்யாணம், அம்மாக்கு உடல்நிலை சரியில்லை இருவரும் வேலை வேலை என்று ஓட நாட்களும் ஓடிவிட்டது. எப்படியாவது இந்த டூரில் ஜெசியை அழைத்துக்கொண்டு போய்ச் சமாதானம் பேசி சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் அவனும் நினைத்தான்.

இந்த வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை தான். இந்த வீடும் அவனுக்குப் பிடிக்கவில்லை தான் (வீடு என்பது வெறும் கல் மண் ஆகியவற்றால் செய்தது அல்ல. உணர்வுகள் உறவுகள் தான் வீடு) ஆனால் அவளை அவனுக்கு கொஞ்ச கொஞ்சமாகப் பிடிக்கத் தான் செய்தது. பிடிக்கிறது. அன்று ஜெசியிடம் டூர் பற்றி கேட்க வரும் போது அவள் எஸ் சொல்லியிருந்தால் இந்நேரம் இது டூராக மட்டும் இருந்திருக்காது. ஹனிமூனாகவே இருந்திருக்கும்.

நித்யா-விவான், பார்வதி-இளங்கோ,மௌனி-ஹேமா,இதித்ரி - ஜிட்டு வரை எல்லோரும் ஜோடியாக ஜாலியாக இருக்க,ஏன் விவி-சித்து என்று கூட ஜோடி சேர்ந்துவிட தான் மட்டும் இப்படி தனியே அதும் உரிமைக்கும் உறவுக்கும் ஆள் இருந்தும் இப்போது உடன் இல்லையே என்று அவனுள் ஒரு வெறுமை.

அவளைப் பார்த்து இரண்டு நாட்களாகிறது. ஏன் பேசக்கூட இல்லை. கோவத்தில் அவள் எங்கே சொல்லுகிறாள் என்று கூட அவன் கேட்கவில்லை. நேற்று தன் அன்னை கேட்க அவனுக்கு ஒருமாதிரி இருந்தது. இப்போது அவன் யாரிடம் கேட்பான். அவளின் தோழிகள் நம்பரும் இல்லை. அவளிடமே பேசலாம் தான் ஆனால் என்னவென்று கேட்பது? அவனுள் தயக்கம். தன் தந்தையைப் போல் இருக்கக்கூடாது. தனக்கு வரும் மனைவியிடம் எல்லாமும் ஷேர் செய்யவேண்டும். அவளும் என்னிடம் எல்லாம் ஷேர் செய்யவேண்டும். இன்பேக்ட் ஒரு ஃப்ரண்ட்ஸ் போல இருக்கவேண்டும் என்று கனவுக்கோட்டைகளைக் கட்ட நிஜத்தில் அதற்காக ஒரு ஸ்டெப்பும் எடுக்காதது அவன் தவறு தான். 'ஒருநாள் எனக்கு லைட்டா பீவர்னு தெரிஞ்சு எனக்காக ஆபிஸ் லீவ் எல்லாம் போட்டா நான் தான் ஏதோ கோவமாய்ச் சொல்லி அவளை நோகடிக்க அவள் தான் வீம்புக்காரி ஆச்சே? உடனே அவள் ஆபிஸ் சென்றுவிட அவள் சென்றபின் அவள் இருந்திருக்க வேண்டும் என்று துடித்த மனதை அவன் யாரிடம் சொல்லுவான்? ஊருக்கு அவள் சென்றுவிட அந்த வீட்டின் வெறுமை. என்ன தான் அவளுடன் ஒரு சுமூக உறவு இல்லை என்றாலும் அவள் இல்லாமல் இது வீடில்லை வெறும் கல்லும் மண்ணும் தான்' என்று உணர்ந்துக் கொண்டான்.

சின்ன வயசிலிருந்து தான் ஆசைப்பட்டதை வெளியே சொல்லமுடியாமல் அப்படியே சொன்னாலும் உடனே நிராகரிக்கப்படுவதைப் பார்த்துப் பார்த்தே பழகியன், அவன் ஆசைகளை வெளியே சொல்லாமலே இருந்துவிட்டான். ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழவும் முடியாமல் இருக்கும் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் இரண்டிற்கும் இடையில் ஓடிக்கொண்டு இருப்பது ஒரு நரகம்! (பயணங்கள் முடிவதில்லை)
 
Top