Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 28

Advertisement

praveenraj

Well-known member
Member
"டேய் விடுடா விடுடா" என்று யாழ் கத்திக்கொண்டே வர அவர்களுக்கு முன்னால் வந்து நின்ற பெனாசிர்,ரேஷா,இஸ்மாயில்,லோகேஷ் நால்வரும் துஷியை முறைத்துப் பார்க்க அவனோ அவர்களைப் பார்த்து,

"யாரு நீங்க? எதுக்கு இப்போ வழியை பிளாக் பண்றீங்க?"

அங்கே யாழோ முகத்தைச் சுளித்துக் கொண்டு நிற்க,"கையை எடுங்க" என்று பெனாசிர் சொல்ல,

"எந்த கை?"

"அந்தப் பொண்ணு மேல இருந்து கையை எடுங்க"

"அதெல்லாம் முடியாது. விட்டா ஓடிடுவா" என்று இவன் சொல்ல அதற்குள் அவன் மூஞ்சில் ஒரு குத்து விட்டிருந்தாள் ரேஷா.

"ஐயோ" என்று மூக்கைப் பிடித்தவன் அலற, இதுவரை விளையாடிக்கொண்டிருந்த யாழ் இப்போது உண்மையில் நிலைமை விபரீதம் ஆனதை நினைத்து,"எக்ஸ்கியூஸ் மீ அவன் என் ஃப்ரண்ட் தான். நாங்க சும்மா விளையாடிட்டு இருந்தோம்" என்று சொன்னாள் யாழ்.

"டேய் துஷி!டேய்" என்று அவனைப் பிடிக்க ஒரு அடியென்றாலும் சரியாக மூக்கில் குத்தப்பட்டதால் வலி உயிர்ப்போனது அவனுக்கு.

இப்போது என்ன செய்வதென்று புரியாமல் ரேஷா பெனாசிர் இருவரும் முழிக்க,

"எதெதுல விளையாடணும்னு விவஸ்தை இல்ல?" என்று வந்தது லோகேஷின் குரல்.

இப்போது மூக்கிலிருந்து லைட்டாக ரத்தம் கசிய,'ஏ ரத்தம்' என்று துஷி மேலும் அலற, "இருடா இருடா பிளாஸ்திரி எதாவது இருக்கானு பார்க்கறேன்" என்றவள் விவானுக்கு அழைக்க அதற்குள் காட்டன் எடுத்து நீட்டினான் லோகேஷ். வாங்கி மூக்கைத் துடைத்துவிட்டவள் அவனை அமரவைக்க,

இப்போது யாழுக்கு பயங்கரக் கோவம், "ஏங்க அடிக்கறதுக்கு முன்னாடி என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டிங்களா? இப்படியா அவசர படுவீங்க?"

"ஐயோ இல்ல சாரி" என்று பெனாசிர் பேச அதற்குள் ரேஷா தான், "உங்களுக்கு அறிவில்லையா? இப்படித் தான் பப்லிக் பிளேஸ்ல விளையாடுவீங்களா? உங்க ஃப்ரெண்டுனா அதுக்கு நீங்க தனியா இருக்கும் போது செய்யணும். ஏதோ தமிழ்ல பேசுனீங்களே உங்க முகம் ஒரு மாதிரி அசௌகரியத்துல இருந்தது அவனும்..." என்று சொன்னவள் துஷி முறைக்க,"அவரும் பார்க்க பொறுக்கி மாதிரி" என்றதும் கோவத்தில் எழுந்து விட்டான் துஷி, காட்டனை எடுக்க மீண்டும் ரத்தம் வந்தது.

"யாருடா உன்னை காட்டனை எடுக்கச் சொன்னா?" என்று மீண்டும் காட்டனை அவன் முக்கில் வைத்து அழுத்தியவள் அவன் மண்டையைத் தன் கையால் இடிக்க அவன் முறைத்தான்.

கொஞ்ச நேரம் அமைதி நிலவ,ஒருவர் மற்றொருவரைப் பார்த்தனர். "வா.போய்த் தூங்கலாம்" என்று துஷியை இழுத்துக்கொண்டு அவள் போக அவனோ ரேஷாவை கொலைவெறியில் ஒரு பார்வைப் பார்த்துச் சென்றான். யாழோ அம்மூவரையும் முறைத்தபடிச் சென்றாள்.

"ஏன்டி உன்ன யாரு அவசரப்பட்டு குத்தச் சொன்னா?"

"அது அந்தப் பொண்ணு கத்திட்டே வந்தாளா... அது தான் கொஞ்சம் எமோஷன் ஆகி அநியாயத்தைக் கண்டதும் பொங்கிட்டேன்"

"அவங்க வேற பார்க்க ரொம்ப க்ளோஸ் போல இருந்தது"

"இருக்கட்டும் அதுக்கென்ன?"- லோகேஷ்

"ஏன்டா வந்த இடத்துல பிரச்சனை? காலையில போய் ஒரு சமாதானம் போட்டுடலாம் என்ன?" - இஸ்மாயில்

"எல்லாம் இவளால் தான்" என்று பெனாசிர் ரேஷாவை குறைச்சொல்ல, "ஆமா அவ எங்கடி காணோம்?"

"ரெஸ்ட் ரூம் போனா. அப்புறோம் காணோம்"

"போ போய்க் கூப்பிடு அவளை. தூங்கலாம்"

ஜெஸியும் ரெஸ்ட் ரூமிலிருந்து வந்தாள். அவள் அழுதிருக்கிறாள் என்று நன்குப் புரிந்தது இருவருக்கும். எதையும் பேசிக்கொள்ளவில்லை. வந்து அமைதியாக படுத்தவள் கடந்த கால நினைவுகளுக்குச் சென்றாள்.

.......................................

விவானின் அன்னையிடம் கொஞ்ச நேரம் மனம்விட்டு பொதுப்படையாகத் தான் பேசினான் துவாரா.இன்றைய பிரச்சனைக்குப் பிறகு விவான் தன் அன்னையை அழைத்து கீர்த்தியிடம் பேசுமாறும் அவளை அங்கே ஊட்டிக்குக் கூப்பிடுமாறும் சொல்ல அதன்படியே அவரும் கீர்த்தியிடம் பேசினார். கீர்த்தி எல்லா புலம்பலையும் அவரிடம் சொல்லவும் "சரி நான் பேசுறேன் அவன் கிட்ட" என்று சொன்னவர் இப்போது துவாராவிடம் பேசினார். துவாரா அதிகம் மதிக்கும் சொன்னப் பேச்சுக் கேட்கும் இரண்டு நபர்கள் என்றால் அது விவானின் பெற்றோர்கள் தான்.

அவர்களிடம் ஒருபோதும் மறுபேச்சு பேசமாட்டான். அமைதியாகச் சொன்னதைச் செய்வான். இப்போதும் சில அறிவுரைகளை வழங்கினார் அவர். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டவன் தலையைத்தலையை ஆட்டினான்.

காதில் ஹெட் போன் போட்டு அவன் அருகில் நின்றவள் அவன் பேசுவதைத் தான் கேட்டுக்கொண்டு இருந்தாள். இவன் கொஞ்ச நேரம் பேசிவிட்டுத் திரும்ப அங்கே சரித்திரா நிற்பதைக் கண்டவன் சிரித்தான்.

ஏதோ கேசுவலாய் மீட் செய்வதைப்போல அவளும் ஹாய் சொன்னவள் "என்ன தூங்கலையா நீங்க?"

"இல்ல கொஞ்ச நேரம் ஆகட்டும். நீங்க பாட்டு கேட்கறீங்களா?"

திருதிருவென முழித்தவள் ஆம் என்று தலையை ஆட்டினாள்.

"இப் யூ டோன்ட் மைண்ட் நாம கொஞ்சம் பேசலாமா?"

அவளுக்கோ மனமெங்கும் பட்டர்பிலைஸ் பறக்க வேகமாய்த் தலையை ஆட்டினாள்.

.....................................................

செபா அவன் போனில் இருந்த எல்லாப் புகைப்படங்களையும் எடுத்துக்காட்ட அங்கே எல்லோரும் ஜிட்டுவைப் பார்த்து கலாய்த்துக்கொண்டு இருந்தனர். கூடவே ஹேமா தியா,மிரு, துவாரா, விவான், இளங்கோ, செபா உட்பட எல்லோரும் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு முந்தையப் புகைப்படத்தில் ஆளே வித்தியாசமாய் இருக்க எல்லோரும் சிரித்துக்கொண்டுப் பார்த்தனர்.

இளவேனிலிடம் விவானின் பழையப் படத்தைக் காட்டி அப்பா என்று சொன்னால் அவள் நம்பவே இல்லை. இல்லை இல்லை என்று மறுத்து தலையை ஆட்டினாள்.

"ஏய் உங்க அப்பா தான்டி இது" என்று எல்லோரும் சொல்ல இன்னொரு க்ளோஸ் அப் புகைப்படத்தைக் கண்டு அப்போது தான் நம்பினாள் அவள்.

கூடவே நித்யாவின் பழைய புகைப்படம் என்று எல்லாமும் காட்ட, மழலையாய்ச் சிரித்தாள். இறுதியாக நித்யா விவான் திருமணத்தில் எடுத்த குரூப் போட்டோவைக் காட்ட,"நான் எங்க எந்த போட்டோவிலும் இல்ல?" என்று கேட்ட இளவேனிலின் இன்னொசென்ஸ் கண்டு எல்லோரும் சிரித்தனர்.

"நீ அப்போ பொறக்கவே இல்ல குட்டி" என்றாள் மிரு.

"அப்போ நான் எங்க இருந்தேன்?" என்று மீண்டும் வினவினாள் அவள்,

இந்தக்கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் எல்லோரும் திருதிருவென விழித்தனர்.

"சொல்லுங்க" என்று கேட்க, ஒருவழியாக என்னென்னமோ சொல்லிச் சமாளிக்க அந்த கம்பார்ட்மென்டுக்கு விவானும் வந்தான்.

எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்க,"ஏன்டா சிரிக்கறீங்க?"

"மச்சான் போட்டோஸ் பார்த்திட்டு இருந்தோம் பாரு அப்போ உன் பொண்ணு கேட்டா ஒரு கேள்வி நம்ம பொங்கல் அகிலன் கூட அப்படிக் கேட்டிருக்க மாட்டாரு"

"யாருடா அது அகிலன்?" - விவி

"எங்க தெர்மோடைனமிக்ஸ் ப்ரொபெஸர்"

எல்லோரும் தன்னைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டு சிணுங்கிய இளவேனில் தன் தந்தையிடம் போக,"சரிடா குட்டிமா, எல்லாம் உன்னக் கிண்டல் பண்றங்களா? வா நாம கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம்" என்று அவளைத் தூக்கிச் சென்றான்.

எல்லோரும் அவரவர் இடத்திற்குத் தூங்கச் சென்றனர். சித்தாரா விவியன் அவர்கள் கம்பார்ட்மெண்ட் வர,"செம ஜாலியா போச்சு. டைம் போனதே தெரியில. தேங் யூ விவி"

"ஹா ஹா நோ ப்ரோப்லம். இப்போ ஓகே வா? மனசு நல்லா ஆகிடுச்சா? என்னை நம்புறியா?"

ஏனோ அந்தக் கேள்வி அவளுக்கு ஒரு மாதிரி ஆனது.

"சாரி விவி நான் அந்த அர்த்தத்துல சொல்லல சும்மா..."

"நான்... ஜஸ்ட் கிட்டிங். போய்த் தூங்கு குட் நைட்"

"குட் நைட் அண்ட் தேங் யூ"

ஜிட்டு ஹேமா இருவரும் தங்கள் கம்பார்ட்மெண்ட் வர அங்கே ரேஷா பெனாசிர் இருவரும் மட்டும் பேசிக்கொண்டிருக்க ஜெசி தூங்கி இருந்தாள். அவர்களைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்த அவர்கள் இவர்களை நோக்கி வந்தனர்.

....................................................

செபா தியா இளங்கோ இருவரும் சென்றுவிட விவான் மட்டும் இளாவைத் தூங்கவைத்து வருவதாகச் சொல்லி அனுப்பினான். சிரித்து கதைபேசி கதை கேட்டு சில கொண்டாட்டங்களுடன் இன்றையப் பொழுது போக எல்லோரும் உறங்கச் சென்றனர்.

மிரு, இதி, பாரு, அனேஷியா எல்லோரும் தூங்கிவிட்டனர். நித்யா தான் "இன்னும் எங்க இவனைக் காணோம்" என்று அவனைத் தேடிப் போக அங்கே அவன் தோளில் தூங்கிக்கொண்டிருந்தாள் இளவேனில். விவானும் அவளின் முதுகை தட்டிக்கொடுத்துக்கொண்டே ஏதேதோ யோசனையில் இருந்தான்.

"விவா?" என்று அழைக்கவும் "என்ன நித்யா?"

"என்ன யோசனை?"

"ஒண்ணுமில்ல சும்மா"

"விவான் என்கிட்ட எதையாவது மறைக்கிறீயா?"

"ஏன் நித்யா இப்படிக் கேட்கற?"

"இல்ல நீ ரெண்டு நாளா ஆளே சரியில்ல. அது தான்..."

"அது நான் இல்லாம அங்க என்ன செய்யுறாங்களோனு ஒரு டென்ஷன்"

அவள் முறைக்க, அவளின் கையை எடுத்து காதில் வைத்து காட்டிவிட்டு(அவளுக்கு காதுகுத்தி விட்டதை...) "பாப்பாவைக் கொடுத்திட்டுப் போய்த் தூங்கு"

பாப்பாவைக் கொடுத்தவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு,"எல்லாம் இந்தா துவாரா பையனால தான்"

"எதையும் யோசிக்காம போய்த் தூங்குப் போ"

"ஆமா நித்யா மாமா அத்தை எல்லாம் விஷ் பண்ணாங்களா?"

"என்ன நடிப்புடா சாமி?"

"என்ன ஆச்சு?"

"நீ ஞாபகப் படுத்தித் தான் அவங்க போன் பண்ணாங்கனு எனக்குத் தெரியாது பாரு. போ போய்த் தூங்கு"

"குட் நைட் பர்த்டே பேபி"

"இது உனக்கே ஓவரா இல்ல?"

"இல்ல" என்றவன் அவளுக்கும் முத்தம்வைத்து சென்றுவிட்டான். நித்யாவும் இளவேனிலைப் படுக்க வைத்துவிட்டுத் தூங்கினாள்.

..............................................................

"எத்தனை வயசுல இருந்து நீங்க விளையாடறீங்க?"

"ஏழு வயசுல கத்துக்க ஆரமிச்சேன். ஆனா பத்து வயசுல இருந்து தான் பெரிய இன்டெரெஸ்ட் வந்தது"

"ஓ நீங்க ஆந்திரால தானே ஏறுனீங்க? ஆனா தமிழ் பேசுறீங்க?"

"நான் தமிழ் பொண்ணு தாங்க. அம்மாக்கு ஜாப் அங்க ஆந்திரால சோ அங்க செட்டில்ட்"

"ஓ நீங்க ஒரே பொண்ணா?"

"ஆமா"

"அண்ட்?"

"கேளுங்க தைரியமா"

"இல்ல அது..."

"இப்போ எதுக்கு தாத்தாவைக் கூட்டிட்டுப் போறேன்னு தானே கேட்கறீங்க?"

"இல்ல... உங்க அப்பா?"

ஒரு நிமிடம் முகம் மாற உடனே சமம் செய்தவள், "என் தாத்தா அவர் மகனைப் பார்க்கணும்னு சொன்னாரு அதுக்குத் தான் போறோம்"

துவாராவுக்கு ஓரளவுக்குப் புரிய மேலும் எதையும் கேட்காமல் திடீரென "நாம ஏற்கனவே மீட் பண்ணியிருக்கோமா?"

இந்தக் கேள்வியைச் சத்தியமாக அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் முந்தையக் கேள்விகளைக் காட்டிலும் இதில் கொஞ்சம் திணறித்தான் போனாள்.

அவனோ அவள் குழப்பத்தில் கண்களை உருட்டுவதிலே சம்திங் பிஷ்ஷி என்று உணர்ந்துக்கொண்டு,"சரி வாங்க போலாம்" என்று அழைக்க, "நீங்க போங்க நான் வரேன்" என்று இருந்தாள்...

.................................................

"ஹலோ"

"ஆம் ஹலோ"

"நான் ஜெசி பேசுறேன். கொஞ்சம் மீட் சாரி சாரி நீங்க ப்ரீயா இருந்தா நாம கொஞ்சம் நாளைக்கு மீட் பண்ணலாமா?"

பழம் நழுவி பாலில் விழுகிறதென்று நினைத்தவன் சரியென்றான். இடத்தையும் டைமையும் பார்த்துக்கொண்டு அவன் அன்னையை அழைத்தான்.

"சொல்லு செபா எப்படியிருக்க?"

"அதெல்லாம் நல்லா தான் இருக்கேன். இப்போ இவ்வளவு சீக்கிரம் எனக்கு கல்யாணம் எங்கேஜிமென்ட்?"

"இதென்ன கேள்வி உங்க அண்ணனுக்கும் 25ல கல்யாணம் பண்ணிட்டோம். உனக்கும் செஞ்சிட்டா ஓகே"

"அம்மா எனக்கு இப்போ கல்யாணம் செய்ய விருப்பமில்லை"

"என்ன சொல்ற செபா?"

ஏனோ தாயின் உடல் நிலையை நினைத்து,"அப்படியில்ல கொஞ்சம் வருஷம் கழிச்சுச் செய்யலாம்னு"

"நாளைக்கு நாங்க மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ண அங்க வரோம்டா.எனக்கும் வேற உடம்பு சரியில்லையா சோ எனக்கேதாவது..."

"அம்மா சும்மா இப்படியெல்லாம் பேசாத..."

"டேய் நானும் மூணு வருஷமா டயாலிசிஸ் பண்றேன். என் உடம்பு ரொம்ப வீக் ஆகிடுச்சு" என்று சொல்ல அவனுக்கு எதையும் எதிர்த்துப் பேச முடியவில்லை.

மறுநாள் இவன் ஜெசியை மீட் செய்யப் போகும் முன்னே சில முன்னேற்பாடுகள் உடன் சென்றான். அவளும் ஹர்ட் ஆகக் கூடாது அதேநேரம் இந்த கல்யாணமும் நடக்கக்கூடாது என்று யோசித்தவன் ஜெசியைப் பார்க்க அவள் சொன்ன ரெஸ்ட்டாரெண்டிற்குச் சென்றான்.

"ஹாய் செபா.வாங்க" என்று அவள் சொல்ல இவனோ அனிச்சையாய் மணியைப் பார்த்தான். அவளுக்குப் புரிந்தது,"யூ ஆர் ஆன் எ ரைட் டைம் . நோ ஒற்றீஸ் "என்று அவள் சொல்ல,

"நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்"

"தாராளமா பேசலாம் வாங்க" என்று அமர்ந்தவர்கள் ஆர்டர் செய்துவிட்டு, "சொல்லுங்க" என்று அவள் சொல்ல,

"என்னைப் பற்றி நான் கொஞ்சம் சொல்லணும். என் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் ரொம்ப பர்பெக்ட்"

"பர்பெக்ட்டா இருக்கறதுல ஒன்னும் தப்பில்லையே?"

"தப்பில்லை தான்.ஆனா ஓவர் பர்பெக்ட்டா இருந்து எல்லோரும் அதே மாதிரி தான் இருக்கணும்னு எதிர்பார்க்கிறது தப்பு தானே?"

"அப்படியில்ல செபா.அவர் தாட் ஒருவேளை நாம கஷ்டப்பட்ட மாதி
ரி நம்ம பையனும் கஷ்டப்படக்கூடாதுனு நினைக்கலாம் இல்ல? ஆப்வியஸ்லி அப்படித்தான் நினைப்பாங்க"

"எல்லா பேரெண்ட்ஸ் நெனைக்கறது வேற, என் அப்பா நினைக்கறது வேற, எப்படிச் சொல்லுவேன்,எனக்கு 25 வயசாகுது ஆனா அவரைப் பொறுத்வரை எனக்கு இன்னமும் எதுவும் தெரியாது. இது தான் அவர் மைண்ட் செட்"

ஓரளவுக்கு ஜெசிக்கு எல்லாம் புரிந்தது. ஆனால் ரொம்ப டீப்பாக இல்லை.

"ஓகே இப்போ என்ன பண்ணனும்?"

"எனக்கு இப்போ மேரேஜ் பண்ற இன்ரெஸ்ட் இல்ல"

ஒருகணம் அவள் முகம் மாற பின்பு என்ன நினைத்தாளோ "எனக்கும் தான் செபா. ஆக்சுவலி என் வீட்டுலையும் இதைத் தான் சொன்னேன். அவங்க தான் பாரு அப்படி இப்படினு சொன்னாங்க இன்பேக்ட் அன்னைக்கு உங்களை நான் பார்க்க வர வரைக்கும் எனக்கும் இந்த கல்யாணத்துல இன்ரெஸ்ட் இல்ல.பட் ஆப்டர் தட் மீட்டிங் வை நாட்னு தோணுச்சு"

அவள் பேசுவதிலே அவளுக்கு எவ்வளவு விருப்பம் என்று புரிய, "ஜெசி நான் ஒன்னு சொல்லட்டா? நமக்கு இது செட் ஆகுமானு எனக்குத் தெரியில"

உடனே அவளுக்கு பட்டென கோவம் வர அடக்கிக்கொண்டவள்,"அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்லறீங்க?"

"இல்ல இப்படி கல்யாணத்துல விருப்பமே இல்லமா கல்யாணம் செஞ்சு உடனே மனசு மாறுறதெல்லாம் சினிமாவுல வேணுனா செட் ஆகும்.நிஜ லைஃப்கு..."

"இங்கப் பாருங்க ஒரு விஷயம் செட் ஆகுது செட் ஆகல அது நம்ம கையில தான் இருக்கு.மோரெவர் ஒரு டிரஸ் எடுக்கணும்னாலே ட்ரையல் பார்க்கவேண்டியிருக்கு எப்படி நீங்க பார்த்ததுமே செட் ஆகாதுன்னு சொல்றீங்க?"

'பிடிச்ச ஒரு விஷயத்தை வேணுனா ட்ரையல் பார்த்து எடுக்கலாமா வேணாமான்னு முடிவு பண்ணலாம். ஆனா பிடிக்காத ஒரு விஷயத்துக்கு ட்ரையல் பார்க்க வேண்டிய அவசியமே இல்ல' என்று மனதில் நினைத்தவன் (ஒருவேளை இதை அவன் வெளிப்படையாகச் சொல்லியிருந்தால் எல்லாம் அன்றைக்கே ஒரு முடிவுக்கு வந்திருக்கும் ) "இல்லங்க அது..."

"வீணாப் போட்டுக் குழப்பிக்காதீங்க. என் கூட வாழ்ந்துப் பார்க்காமலே எப்படிச் சொல்லலாம்? தேவையில்லாத பயம் கற்பனை உங்களுது. அண்ட் ஐ யம் சூர் நமக்குள்ள எல்லாம் செட் ஆகும். டோன்ட் ஒர்ரி"என்று அவள் சொல்ல

ஏனோ அவள் பேச்சில் இருந்த உறுதி அவனுக்குக் கொஞ்சமே கொஞ்சம் கான்பிடென்ஸ் தந்தது. இங்கு தான் இருவரும் தவறு செய்துவிட்டனர். செபாவின் மீது 70 % தவறு இருக்கிறது. உண்மை தான். ஆனால் மீதி 30 % தவறு ஜெசியிடமும் இருக்கிறது. அவன் அவனுடையப் பிரச்னையை மறைமுகமாய்ச் சொல்லியும் (தந்தையைப் பற்றி,செட் ஆகாது ) ஜெசி கேசுவலாய் எடுத்துக்கொண்டாள். எனக்கு இந்த கல்யாணத்துல பிரச்சனை என்று சொன்னவன் உங்களைக் கல்யாணம் செய்வதில் தான் பிரச்சனை என்று சொல்லாமல் விட்டதில் செபாவின் தவறு. ஆனால் ஏதோ ஒருமூளையில் அவனுக்கு அவள் மேல் சின்னதாய் நம்பிக்கை வந்தது உண்மை . அதை நம்பி மட்டுமே இருவரும் திருமணத்தில் நுழைய அங்கே ஆரமித்தது சிக்கல்.

ஓரளவுக்குப் பேசிவிட்டு கொஞ்சம் ஷாப்பிங் முடித்து விட்டு அந்த வாரம் என்கேஜ்மெண்டும் முடிந்து இன்னும் 40 நாட்களில் திருமணமும் முடிவானது.

ஜெசி எந்த ஒரு விஷயத்தையும் ஈசியாக எடுத்துக்கொள்ளும் கேரக்டர். ஆனால் செபா தன்னால் எதையும் ஈசியாக எடுத்துக்கொள்ள முடியவில்லையே என்று நினைத்து வருந்தும் கேரக்டர். இருவரும் திருமணத்தில் அடியெடுத்து வைத்தனர்.


.............................................

சரித்திராவிடம் பேசிவிட்டு வந்து அமர்ந்தவன் தூக்கம் வராமல் போக ஏதேதோ யோசனையில் ஆழ்ந்திருக்க அப்போது அவனுக்கு நாளைய நாள் நினைவுக்கு வர ஏனோ அவனையும் அறியாமல் உள்ளுணர்வில் ஒரு வித பயம் வந்துசென்றது.

ஆறுவயது சிறுவனாய் அன்று காலை வீட்டிலிருந்து ஸ்கூலுக்குச் சென்றான்.போகும் போது அவன் அப்பாகும் அம்மாக்கும் ஏதோ சண்டை. கீர்த்தி இரண்டரை வயது குழந்தை. அவன் அப்பாவும் பதிலுக்கு எதையோ பேச அவன் அன்னையும் எதையோ பேச கோவத்தில், "நீ இருந்து என்னை இப்படி படுத்துறதுக்கு பேசாம செத்துத் தொலையலாம்" என்று சொல்லிவிட்டு அவர் அவனை அழைத்துக்கொண்டு செல்ல அழுத அவன் அன்னையைப் பார்த்துச் சென்றான். அதுவே அவன் அவரை இறுதியாய்ப் பார்க்கும் நொடி என்று அவனுக்குத் தெரியாது.

மதியம் வேளையில் கீர்த்தியை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த விவியனின் அன்னை வீட்டில் கொடுத்துவிட்டு வந்தவர் தீயிட்டுக்கொண்டார். எல்லாம் அறிந்து அவரைக் காப்பாற்றுவதற்குள் ஹாஸ்பிடல் அழைத்துச் செல்லும் போதே இறந்துவிட்டார். காலை தன் தந்தை அவரைத் திட்டியது மட்டும் வந்த துவாராவிற்குப் புரிந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அவரிடம் அவன் பேசுவதில்லை. அதை முதலில் அவன் தந்தையும் இரண்டு மூன்று நாட்களுக்கு உணரவில்லை. அதன்பின் அவனை அழைக்க அன்று கோவமாய் அழுதுக்கொண்டு,"நீங்க தான் என் அம்மாவைக் கொன்னீங்க இனிமேல் உங்ககிட்ட நான் பேசமாட்டேன்" என்று சொல்ல அது இருவது வருடங்களாய்த் தொடரும் என்று யாரும் நினைக்கவில்லை.

அதன் பின் நிறைய நடந்துவிட்டது. அவன் மாமாவின் குடும்பம் (அன்னையின் சகோதரர்கள்) வந்து இறுதி காரியத்தைச் செய்துவிட்டு,"எங்க வீட்டுப் பெண்ணே போயிடுச்சி இனிமேல் எங்களுக்கு இந்த குடும்பத்தோடு எந்த சம்மந்தமும் இல்லை" என்று அவர்கள் கோவத்தில் பேசிவிட்டு செல்ல (இன்னும் சில விஷயங்கள் நடந்தது அதெல்லாம் பிறகு ஒரு எபியில் விரிவாக) அதன் பின் அங்கு இருக்கப் பிடிக்காமல் ஸ்கூல் போகவும் செய்யாமல் இருந்த துவாராவைச் சரிசெய்ய முடியாமல் திணறியவர் அவனை ஹாஸ்டலில் வேறு ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார். அங்கே தான் விவான் பழக்கம். கீர்த்திக்கு நினைவு தெரிந்து தன் தூரத்து பெரியப்பா வீட்டில் வளர்ந்தாள். ஆனால் அவர்கள் அவளை இரண்டாம் பட்சமாவே வளர்க்க விவரம் தெரிந்ததுமே அங்கிருந்து தங்கள் வீட்டிற்கே வந்துவிட்டாள். பள்ளி விடுமுறைக்கு மட்டுமே அங்கே வருவான் துவாரா. கீர்த்திக்கு அவர்கள் தந்தை என்றால் ரொம்ப இஷ்டம். அவளுக்கு நினைவு தெரிந்து எல்லாமுமாக இருப்பவர் அவரே.துவாராவுக்கு அவர்கள் தந்தையைப் போல் இதுவரை அவன் யாரையும் வெறுத்ததில்லை வெறுப்பதுமில்லை. ஆனால் இவ்வளவு கஷ்டத்திலும் அவனுக்கு வேண்டியதையெல்லாம் செய்துவிடுவார். அவர் தகுதிக்கு மீறிய ஸ்கூலில் தான் அவனைப் படிக்கவைத்தார். படிப்பில் துவாரா நல்ல ரேங்க் ஸ்டுடென்ட். அவன் காலேஜ் மெரிட்டிலே படித்தான். அவனுடைய இத்தனை வருடங்களில் அவனுக்குப் பெரியதாக இல்லை எவ்வித செலவையும் வைக்காமல் ஸ்கூல் முதல் கல்லூரி வரை எல்லாமும் விவான் தான் செய்வான். அவர்களின் நட்பின் புரிதல் அப்படி. be யோடு விவான் நின்றுவிட அவன் me முடித்தான் இன்று ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் ஒரு ப்ரொபெஸராக நல்ல வேலையில் தான் இருக்கிறான்.

படிப்பைத் தவிர அவனுக்குப் பெரிய இஷ்டம் ஷெட்டில்காக் (பேட்மிட்டன்). ஸ்கூலிலிருந்தே விவானும் அவனும் நல்ல பிலேயேர்ஸ். ஒற்றையர் பிரிவில் இருவரும் நன்றாக விளையாடினாலும் இவர்கள் இரட்டையர் பிரிவில் தான் சாம்பியன்ஸ். ஸ்கூல், ஜோனல், டிஸ்ட்ரிக்ட , என்று முடித்து ஸ்டேட் வரை ரெப்ரெசென்ட் செய்து இருக்கிறார்கள் இவர்கள் இருவரும்.

கீர்த்தி கல்லூரியை திருச்சியில் படித்துமுடித்தாள். ஒரு நல்ல வரன் வந்து திருமணமும் முடிந்து இரண்டாவது குழந்தை அவள் வயிற்றில் இப்போது வளர்கிறது. இத்தனை வருடங்களில் பலமுறை அவள் தந்தையையும் அண்ணனையும் பேசவைக்க முயற்சித்து தோற்றுக்கொண்டே இருக்கிறாள். இதில் 'அந்த' பிரச்சனைக்குப் பிறகு துவாராவின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம். அதை யாரிடமும் சொல்லவும் முடியாமல் அதற்கு தீர்வும் கிடைக்கப்படாமல் இன்றுவரைத் தவிக்கிறாள். அதெதுவும் இதுவரை விவானுக்கே தெரியாது.

திருமணம் செய்யாமல் இருப்பவனை சமாதானம் செய்ய கீர்த்தி விவானிடம் கேட்டதின் பேரில் விவான் இந்தப் பயணத்தை துவாரவுக்கே தெரியாமல் துவாராவுக்காக ஏற்படுத்தியிருக்கிறான். நான்கு நபர்களில் ஆரமித்து ஒரிசா வரை போடப்பட்டத் திட்டம் இன்று இத்தனை நபர்களோடு அசாம் வரை வந்துவிட்டது.

சரித்திராவை அதே ட்ரையினில் போக வைத்தது வரை எல்லா பிளானும் ஓகே ரகம் தான். நித்யா, விவான், இளவேனில், துவாரா என்று ஆரமித்த இந்த பயணத்தின் பிளானில் ஹேமா,மௌனி,இளங்கோ,பாரு,செபா, ஜிட்டு,இதித்ரி,மிரு,தியா,விவி என்று நீண்டு பிறகு துஷி,யாழ் வரை வந்துவிட்டது.

இதெதுவும் துவாரவிற்குத் தெரியாது.ஒருவேளை தெரிந்தால்? (பயணங்கள் முடிவதில்லை)

இதைச் சொல்லக்கூடாது இருந்தும் சொல்கிறேன், இந்தக் கதையில் இது ஒரு அதிமுக்கியமான எபிசொட். இந்த எபிசோட்ல விடப்பட்ட பல ப்ளாங்க்ஸ் இனி வரும் எபிகளில் நிரப்பப்படும். (அசாம் சென்றதும் தான்)

'ஆஹா என்ன ருசி' நல்லா இல்லையா? அதொரு புதிய ஜானர் கதை. பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் நிறுத்திவிடுகிறேன். புதன்கிழமையிலிருந்து ரெகுலர் அப்டேட்ஸ் வரும்.
 
நிறைய நானே கெஸ் பண்ணியிருக்கேன்...
எபி வர,வர கரெக்டானு டிக்்பண்ணிக்கிறேன்....

ஆஹா...என்ன ருசி நல்லா, வித்தியாசமாத்தான் இருக்கு...
ஆனால்...அதிலையும் நிறைய கேரக்டர்ஸ்....
அதனால் குழப்பம் வருது....

நட்பினில் முடிந்த பிறகு ஆஹா கொடுத்தீங்கனா....
concentrate செய்து படிக்கலாம் என்பது என் கருத்து.....
 
Nammada yaathra sugamattu pogumpol sapadu rusiya irrunthalum rusika mudila, reason name manasila pathiyuthila.ithuvae neelamana list athuvum kudi cherumpol characters seriya ull vanya mudila.
Sorry to comment like this.This is my opinion.
Katha nalla illa sollala. Globe jamoon sabidum pothu ice cream koduthal athoda taste enjoy panna mudila.athukaka ice cream taste illama illa.
 
இங்கேயும் நிறைய பேர்.. அங்கேயும் அப்படியே... கொஞ்சம் confuse ஆகிறது நிஜம்தான்..... இதை முடித்து விட்டு பின் தொடரலாம்..... வேற மாதிரி ஒன்றை கொடுங்கள்....
 
நிறைய நானே கெஸ் பண்ணியிருக்கேன்...
எபி வர,வர கரெக்டானு டிக்்பண்ணிக்கிறேன்....

ஆஹா...என்ன ருசி நல்லா, வித்தியாசமாத்தான் இருக்கு...
ஆனால்...அதிலையும் நிறைய கேரக்டர்ஸ்....
அதனால் குழப்பம் வருது....

நட்பினில் முடிந்த பிறகு ஆஹா கொடுத்தீங்கனா....
concentrate செய்து படிக்கலாம் என்பது என் கருத்து.....
ஓகே. உண்மைதான் அதிலும் நிறைய கேரெக்டர்ஸ் இருக்கு. முடிவிலி முடியும் வரை ஆஹா என்ன ருசி இனி ஒவ்வொரு சனிக்கிழமை மட்டும் வரும். என்னுடைய நான்கு கதைகள் மிக சொற்ப கதாபாத்திரங்களையே கொண்டிருக்கும். மற்ற நான்கு கதைகளில் அதிக கதாபாத்திரங்கள் இருக்கும். வாரம் ஒரு அப்டேட் தருவதில் ஏதேனும் ஆட்சேபணை இருக்கா? சரி பார்ப்போம் உங்க கெஸ் சரியா என்று... நன்றி ?
 
Top