Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-26

Advertisement

praveenraj

Well-known member
Member
அங்கே ஹேமா, இளங்கோ, ஜிட்டு மூவரும் அவரவர் 'ஆட்களை' சமாதானம் செய்ய பின்னால் சென்றுவிட, அங்கு தனியே இருந்த தியா, மிரு, விவி மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்க அனேஷியா இளவேனிலிடம் விளையாட, நித்யா அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் செல்போன் அடிக்க அவளின் பெற்றோர்கள் தான் அழைத்திருந்தனர். "நித்யா சாரிடா. ஹாப்பி பர்த்டே, நிஜமாலுமே மறந்துட்டோம் டா. காலையில ஞாபகம் இருந்தது அப்புறோம் சொல்லலாம்னு நினைச்சோம் அப்படியே மறந்துட்டோம்" என்று சாரி சொல்ல முதலில் கோவமாக இருந்தவள் பின்பு சமாதானம் ஆகிவிட கொஞ்சம் கதையளந்து விட்டு இளவேனிலை அழைத்து பேசச் சொல்ல அவளும் தன் தாத்தா பாட்டியிடம் பேசிவிட நித்யாவிற்கு இருந்த சின்ன பாரம் குறைந்தது.

"வீட்லையா நித்யா?"

"ஆமா அனி. அப்பா அம்மா மறந்துட்டாங்களாம்..."

"ஏதோ வேலையா இருந்திருப்பாங்க, இதுக்கு போய் பீல் பண்ணலாமா?"

"அதில்ல எனக்கு வேற யோசனை"

"என்ன?"

"துவாராவைப் பற்றி"

புரியாமல் பார்த்தாள் அனேஷியா,

"துவாரகேஷ் எங்க கூட வந்தவன். விவானோட க்ளோஸ் ஃப்ரண்ட், ரெண்டும் ஸ்கூல்ல இருந்து ஒரே ஜோடிங்களாம். ஒரே ஸ்கூல் ஒரே காலேஜ் என்ன விவான் பிசினஸ் பார்க்காரு. அவன் அசோசியேட் ப்ரொபெஸரா இருக்கான்"

"ஓ"

விவியும் இப்போது அமர, தியாவும் மிருவும் அமைதியாக இருக்க, "தியா இங்க உட்காரு"

"என்ன நித்யா?"

"உட்காரு. உனக்கும் மிருக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை?"

"நித்யா வேற ஏதாவது பேசலாமே"

"தியா நீ சொல்லு"

"அது"

"உங்க பிரச்சனையில் எப்படி துவாரா வந்தான்?"

அது என்று ஆரமிப்பதற்குள் தியாவுக்கு அழைப்பு வர, "நித்யா கட்டாக் வரப்போகுது டின்னர் தான் போன்" என்று சொல்ல "சரி வாங்கு" என்றாள்.

"ஹூய் பாப்பா என்ன அமைதியா இருக்க? இந்நேரம் பசிக்குதுனு நீ சொல்லியிருக்கணுமே" என்று இளவேனிலைக் கேட்டாள் நித்யா,

"இங்க வா என் வாழைப்பூ" என்று அவளைத் தூக்கி முத்தம் வைத்தவள், "உனக்கு இந்த ஹேர் ஸ்டைல் சூப்பரா இருக்குடி மயிலு"

"அதென்ன வாழைப்பூ?"

இளவேனிலுக்கு வெட்கம் வர தன் அன்னையின் தோளில் இன்னும் நன்றாக ஒட்டிக்கொள்ள, "அது நான் வெச்ச செல்லப் பேரு. என்னடி வாழைப்பூ?"

"இன்னும் ஸ்கூல் சேத்தலையா? "- அனேஷியா

"இல்ல அனி இனிமேல் தான். எங்க இப்போல்லாம் ரெண்டரை வயசுலயே சேர்த்திடறாங்க, நானும் சேர்க்கலாம்னு நான் நெனச்சேன், மேடம் அவங்க தாத்தா பாட்டிக்கு ரொம்ப பெட். அவங்க தான் சின்ன பிள்ளைய எதுக்கு அதுக்குள்ள சேர்க்கணும்னு சொல்லி தடா போட்டுட்டாங்க"

"அப்போ இந்த வருஷம் கண்டிப்பா சேர்த்துடுவீங்க?"

"நிச்சயமா"

"அது..." என்று நிறுத்தினாள் அனி

"என்ன என்னமோ கேட்க வந்த? அப்படியே நிறுத்தீட்ட"

"இல்ல" என்றவள் சுற்றி நின்ற தியா மிருவைப் பார்த்துத் தயங்க,

"தாராளமா சொல்லு"

"நெக்ஸ்ட் சைல்ட் எப்போ?"

"...."

"சாரி தப்பா கேட்டிருந்தா. நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. அந்த கஷ்டம் நிறைய அனுபவிச்சு இருக்கேன். அதுனால கேட்டேன், சாரி டு இண்ட்ரூட் இன்டூ யுவர் பெர்சனல்"

"நோ ப்ரோபேலம். என் மாமியார் மாதிரியே நீயும் பேசுற" என்று சிரித்தவள், வேறு கதைகளைப் பேசினார்கள். தன் அன்னையை நினைத்து அனேஷியாவின் முகம் அதன் பின்பு மாறிவிட்டது.

விவி எழுந்து உள்ளே போக அப்போது தான் அங்கே தனியாக நின்றுகொண்டிருந்தாள் சித்தாரா.

"ஹாய் சித்து"

"என்ன சார் நீங்க தான் ரொம்ப பிஸி போல?"

"ஹே அப்படியெல்லாம் இல்ல" என்றவன், "சாரி நீ கதையைச் சொல்ல வரப்போ நான் கேட்கல"

"பரவாயில்ல"

"இப்போ சொல்றீங்களா ப்ளீஸ்"

சித்தாரா மீதிக்கதையை எல்லாம் சொன்னாள்.

கேட்டுக்கொண்டிருந்த விவியனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, இருந்தும் ஒன்றைக் கேட்டான்.

"அப்போ ராஜீவுக்கு அந்த பொண்ணோட கல்யாணம் ஆகிடுச்சா?"

"அப்படித்தான் சொன்னாங்க"

"புரியில"

"நாங்க அன்னைக்கே கிளம்பி வந்திட்டோம். அப்புறோம் அவனுக்கும் அவளுக்கும் கல்யாணமாம்..."

"எப்படிங்க இப்படி? அவ்வளவு டைலாக் எல்லாம் பேசுனார், நமக்கு தான் கல்யாணம், அப்படி இப்படினு..."

சிரித்தாள்,

"சரி விவியன் என் கதை இருக்கட்டும், உங்க கதையைச் சொல்லுங்க"

"என் கதையா? அதுல ஒன்னும் பெருசா இல்லைங்க. அதுதான் சொன்னேனே"

"அது எப்படி?"

விவி தன் பெற்றோர் எப்படி இறந்தார்கள் என்று சொல்ல, சித்துக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை,

"சாரி விவி"

"அட விடுங்க. அதெல்லாம் நான் கடந்து வந்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சு"

"நீங்க எப்போ கல்யாணம் பண்ணப் போறீங்க?"

"உண்மையைச் சொல்லவா, இல்ல பொய்ச் சொல்லவா?"

"பொய்ச் சொல்லுங்க" என்றவள் சிரித்து கண்ணடிக்க,

"நான் ஃபாதர் ஆகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்"

"அடப்பாவி கல்யாணம் செய்யாமலே வா?" (அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்தும் சும்மா விளையாடினாள்)

"ஏங்க அந்த ஃபாதர் இல்ல இது..."

"ஏன் விவி உறவுகள் மேல உங்களுக்கு ஆசையே இல்லையா? இல்ல நம்பிக்கை விட்டுப்போச்சா?"

"அப்படியெல்லாம் இல்ல, ஏங்க இது பொய்"

"அட ஆமாயில்ல மறந்துட்டேன். அப்போ உண்மையைச் சொல்லுங்க"

"இப்பயும் ஃபாதர் தான் ஆகணும். ஆனா ஒரு குழந்தைக்கு" என்று சொல்லி சிரித்தவன், "ஜஸ்ட் 'கிட்டிங்' (இங்கயும் கிட் தானா? என்ன இப்படி கிரேஸி மோகன் மாதிரி டைலாக்ஸ் வருதே?) என்னைய நல்லா புரிஞ்சிகிட்டு என் கூட ட்ராவல் பண்ண ஒரு கம்பாணியன் வேணும். அவ்வளவு தான்"

"அப்போ கடைசி வரை இப்படி ட்ராவல் பண்ணிட்டே தான் இருக்கப் போறீங்களா?கல்யாணம் செய்ய மாட்டிங்க?" என்று அவள் சிரிக்க ,,

"லைப்பே ஒரு ட்ராவல் தானே?"

"ஓ பிலோஷபி"

அவன் சிரிக்க,

"பட் எனிவேஸ் உங்க ஆசை நிச்சயம் நடக்கும். நான் சொல்றேன் இல்ல, கண்டிப்பா நடக்கும்"

அவன் சிரிக்க,

"என்னடா இவ வாழ்க்கையே புதிரா இருக்கு, இதுல இவ நமக்கு நம்பிக்கை தராலேனு யோசிக்கறீங்களா?"

"ச்சே ச்சே, அப்படியெல்லாம் இல்ல. சும்மா"

"நீங்க மீண்டும் கல்யாணம்..." என்று இழுத்தான் விவி

"இப்போ தாங்க ஒருத்தன் கிட்ட நம்பி அடிவாங்கி இருக்கேன். அதுக்குள்ளையா?"

அவள் சிரித்துக்கொண்டே கேட்க, விவிக்கு அவள் வலி புரிந்தது.

"ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணிங்களோ இந்த மேரேஜை?"

அவளிடம் பதிலில்லை. ஆனால் அவள் கண்கள் மெல்ல கலங்கி இருந்தது,

அவளை ஆசுவாசப் படுத்திக்கொண்டவள்,"எனக்கு இந்த லவ் மேல எல்லாம் நம்பிக்கை இல்லாம தான் இருந்தது. ஆனால் எனக்கு அந்த நம்பிக்கையை அவன் தான் தந்தான். ஐ ரியலி லவ்ட் ஹிம். ஐ என்ஜாயிட் இட். கொஞ்சம் எக்ஸ்பெக்டேஷன்ஸ் கூட இருந்தது. தப்பில்லையே?"

அவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

"பாவம் என்னால என் அத்தை,மாமா,அப்பா,அம்மா எல்லோரும் ரொம்ப ஹர்ட் ஆகிட்டாங்க. அது தான் ஒரு மாதிரி இருக்கு, என் லைப்ல நான் எடுத்த எந்த ஒரு முடிவுக்கும் ஃபீல் பண்ணதில்ல, ஒன்னு வெற்றி இல்லை அனுபவம் அவ்வளவு தான். தோல்வியைக் கண்டு நான் ஃபீல் பண்ணதில்ல, ஆனா என் கல்யாண விஷயத்துலயும் காதல் விஷயத்துலையும் நான் இப்படி ஒரு 'அனுபவத்தை ' கண்டிப்பா எதிர்பார்க்கவில்லை..."

"யூ வான்னா க்ரை?" (நீங்கள் அழவேண்டுமா?)

"ஹ்ம்ம்" என்று தலையை ஆட்டியவள் அவனை அணைத்துக்கொண்டு அழ உண்மையில் அவளின் நிலை அவனுக்கு நன்கு புரிந்தது. 'என்னத்தான் ஒரு விஷயம் நம்மள பெருசா பாதிக்கலைனு வெளிய காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள நமக்கு எவ்வளவு வலிக்கும்னு அவனுக்குத் தெரியாதா என்ன? பின்ன இன்று வரை அவன் பெற்றோரின் நினைவு அவனை வாட்டிக்கொண்டு தானே இருக்கிறது?'

கொஞ்சம் அழுதவள் அமைதியாக இருக்க,"இங்க பாருங்க சித்தாரா, நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி. இல்லைனா இப்படி நூலிழையில் தப்பித்து இருக்க மாட்டிங்க. ஒருவேளை கல்யாணம் ஆகியிருந்தா தான் ப்ரோப்லேம். எனக்குப் புரியுது உங்க பெயின், ஜஸ்ட் த்ரோவ் (throw - வீசிஎறியுங்க )இட் அவெ. லிவ் திஸ் மொமெண்ட், அது தான் நிரந்தரம். பழசை நெனச்சு ஃபீல் பண்றதுலையும், இல்ல எதிர்காலத்தை நினைத்து ஒர்ரி செய்வதிலும் ஒன்னும் நடக்கப்போறதில்லை"

"தேங் யூ. அண்ட் இப்போல்லாம் ஒரு பயம் வருது விவி. யாரைப் பார்த்துப் பேசினாலும் எங்க இவங்களும் நம்மள யூஸ் தான் பண்றங்களோனு, ஒரு இன்செக்குரிட்டி..."

"அப்படியெல்லாம் இல்லை. நல்லவங்களும் இருக்காங்க, ஜாலியா இருங்க"

"தேங் யூ"

"ஒன்னு கேட்கட்டா?"

"ஹ்ம்"

"உங்க டூர் பிளான் என்ன?"

"உண்மையைச் சொல்லனும்னா தெரியில, கைட் பார்த்துப் பேசணும்"

"வை காண்ட் யூ ஜாயின் வித் அஸ்?" (எங்க கூடவே நீங்க வரலாமே?)

"இல்ல அது..."

"எங்கக் கூடயும் லேடிஸ் எல்லாம் இருக்காங்க. வாங்க உங்களுக்கு ஒன்னும் ப்ராப்ளேம் இல்லைன்னா...?"

"இல்ல அது அவங்களுக்கு...?"

"ஓகே வாங்க அவங்களை உங்களுக்கு இன்றோ கொடுக்கறேன்" என்று அவளை அழைத்துச்சென்றான்.

விவி ஒரு பெண்ணோடு வருவதைப் பார்த்த மிரு நித்யாவிடம் சொல்ல,

"அடப்பாவி அப்போ ஒருத்தன் கூட சிங்கிளா அசாம் போய்ச் சேரமாட்டானுங்க போலவே?"

"ஹா ஹா" என்று மிரு சிரிக்க சித்தாராவை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தான்.

பொதுவாக எல்லோரும் பேச,

"விவி இவங்களுக்குத் தான் சேர்த்து சாப்பாடு ஆர்டர் செஞ்சியா?"

"ஆம்"

நித்யா,மிரு மற்றும் அனேஷியாவிடம் கொஞ்சம் பேசினாள் சித்தாரா.

................................................

ஜெஸியின் வீட்டில் இருந்து அழைப்பு வர அவள் அன்னை தான் அழைத்தார். "ஏண்டி கல்யாணத்துக்கு முன்னாடி தான் இப்படி ஊரூரா சுத்துன? இப்போ கல்யாணம் செஞ்சும் இப்படியே இருந்தா என்ன அர்த்தம் ஜெசி? கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல, உன்னைச் சொல்லக்கூடாது, எல்லாம் மாப்பிள்ளையைச் சொல்லணும். இங்க உன் அப்பா செல்லம் அங்க அவர்" என்று பேச ஏனோ உண்மை நிலையை நினைக்க ஜெசிக்குத் தான் தொண்டை அடைத்தது. பின்னே 'அவர் இந்த ட்ரைனில் ட்ராவல் செய்வதாவது எனக்குத் தெரியும் ஆனால் நான் எங்க இருக்கிறேன் என்ன செய்கிறேன் எதையும் அவர் தெரிந்துக்கொள்ள கூட விரும்பவில்லையே? கிட்டத்தட்ட ஒரு நாள் (என்ன கிட்டத்தட்ட ரெண்டு நாள் முழுவதுமாய் முடிந்துவிட்டது. நேற்று காலை கடைசியாகப் பார்த்தது. பேசியது.அதும் வெறும் பை மட்டும் தான்) எங்க இருக்க? என்ன செய்யுற? எதையும் அவர் இதுவரைக் கேட்கவில்லை' அவளுக்கு ஏனோ அழுகை வர அங்கே விளையாடிக்கொண்டிருந்த லோகேஷ், இஸ்மாயில், பெனாசிர், ரேஷா நால்வருக்கும் ஒரு மாதிரி ஆனது.பேசிவிட்டு வைத்தவள் எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றாள்.

அன்றைக்கு ரெஸ்டாரண்டில் செபாவுடன் பேசிமுடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றாள் ஜெசி. ஏனோ அவளுள் ஒரு இனம்புரியாத சந்தோசம். ஏனென்று தெரியவில்லை. முதலில் கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்லாமல் தான் சென்றாள். அங்கே பார்த்ததும் சண்டை வேறு. ஆனால் இதையெல்லாம் கடந்து ஏதோ ஒன்று அவளுக்கு அவனை ஈர்த்தது. என்னவென்று யோசித்தாள், 'தான் அவ்வளவு கடுமையாக நடந்துக்கொண்ட போதும் பொறுமையாக என்னை ஹேண்டில் செய்து என்னையே ஓகே சொல்ல வைத்துவிட்டானே' என்று எண்ணி வியந்தாள். இவள் கோவமாய்த் தான் பேசினாள் ஆனால் அவன் இவளிடம் சண்டையிட்டால் நிலைமை வேறுமாதிரி ஆகிவிடும் என்று எண்ணி நிதானமாக ஹேண்டில் செய்ததை அவளோ அவள் மீதிருந்த இன்ரெஸ்ட்டின் காரணமாய்த் தான் என்று நினைத்துக்கொள்ள ஓகே சொல்லிவிட்டாள்.

அங்கே செபா வேறு தன் அத்தையிடம் பேசிவிட்டு வைக்க வேறுவழியில்லாமல் அவரும் அவர் அண்ணனுக்கு அழைத்தார்.

"சொல்லுமா என்ன சொன்னான் உன் செல்ல மருமகன்?"

"அண்ணா அது அவனுக்கு இப்போ எதுக்குக் கல்யாணத்துக்கு அவசரப் படுறீங்க?" என்று சொன்னது தான் தாமதம்,

"என்னம்மா நீ? அவன் தான் சின்னப் பையன் எதுவும் புரியாம பேசுறானா நீயும் அவன் கூட சேர்ந்து பேசுற? அவனுக்கு என்ன தெரியும்? எல்லாம் காலகாலத்துல நாம தான் செய்யணும்" என்று சொல்ல,

"இருந்தும் அவன் சம்மதம்"

"அவனே சம்மதம் சொல்லிட்டான் நீ என்ன பேசுற? ஹ்ம்ம் ஹ்ம்ம்னு எப்பயும் போல தான் சம்மதம் சொன்னான். என்னைக்குத் தான் என்கிட்ட வாயைத் திறந்து பேசுறானே தெரியில? அதை விடு, அடுத்த மாசம் கல்யாணம்னு சொன்னதும் அவன் சொன்னான் பாரு அதுக்குள்ளையானு... அதுலே தெரிஞ்சது அவன் சம்மதம் என்னனு, அப்பா கிட்ட எப்படி உடனே ஓகே சொல்றதுன்னு அப்படிக் கேட்கறான். படவா" என்று அவர் பாட்டிற்குப் பேச இங்கே அவன் அத்தையோ மனதால் கருவினார். "இல்ல அண்ணா அது"

"ஆமா நீ என்ன வர வர ஒழுங்கா சமைக்கவே மாட்டேங்கிறியாம்? மாப்பிள்ளை எப்படிடா சொல்றதுன்னு புரியாம சொல்றாரு. என்ன இது இப்படியா இருப்ப?' என்று அவருக்கே அறிவுரை வழங்க போனை வைத்தால் போதும் என்று நினைத்தவர் வைத்துவிட்டு தன் மகன் சேவியருக்கு அழைத்து, "டேய் இந்த மாதிரி" என்று எல்லாமும் சொன்னார்.

"சரிம்மா நீ கவலைப்படாத நான் பேசுறேன் செபாகிட்ட, டோன்ட் ஒர்ரி" என்று வைக்க சேவியர் செபாவை அழைத்து ஒரு ஐடியா சொல்கிறேன் பேர்வழி என்று சொல்ல பாவம் அது செபாவை இன்னும் சிக்கலாக்கும் என்று அவன் நினைக்கவில்லை.

மறுநாள் ஜெசி ஆபிஸ் போக எல்லோருக்கும் சம்மந்தம் ஓகே ஆனதைச் சொல்ல என்கேஜ்மென்ட் தேதியே குறிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார் செபாவின் தந்தை.

சேவியர் கொடுத்த ஐடியாவை கொண்டு செபாவும் மறுநாள் ஜெசியைச் சந்திக்க அவள் வேலைசெய்யும் ஆபிஸ் சென்றான்.

செபா அவளுக்காக அங்கே கேன்டீனில் காத்திருக்க, வீணாப்போன ரேஷா பெனாசிர் இருவரும், "எப்படியோ ஜெசிக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்" என்று கிண்டல் செய்துக்கொண்டு போக அது அவனை இன்னும் ஹர்ட் செய்ய ஜெஸியும் வந்தாள்.

"என்ன விஷயம் திடீர்னு? நேத்து தானே பார்த்தோம்?"

"இல்ல உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். அவசியம்"

"ஓகே சொல்லுங்க"

"உங்களுக்கு இந்த மேரேஜ்ல?" என்று இழுக்க,

"ஏன் அப்பா சொல்லியிருப்பாரே?" என்று அவள் அவள் தந்தையைச் சொல்ல அவனோ தன் தந்தையைத் தான் சொல்கிறாள் என்று நினைத்துக் கடுப்பாக,

"என்ன சாப்பிடுறீங்க?"

"நத்திங்"

"அட இருங்க இங்க பர்கர் நல்லா இருக்கும். நான் வாங்கிட்டு வரேன்" என்று அவள் சென்றுவிட, மீண்டும் மீண்டும் அவள் விருப்பங்களைத் தன் மீது திணிக்கிறாளே என்று கோவம் வர சரியாக தப்பான நேரத்தில் வந்தார் மிஸ்டர் எக்ஸ். அதுதாங்க செபா குடும்பத்தையும் ஜெசி குடும்பத்தையும் கோர்த்துவிட்ட அந்த ஆடிட்டர். "என்ன தம்பி இங்க" என்று விசாரிக்க அப்போது தான் ஜெஸியும் வந்துவிட, "ஹ்ம்ம் ஹ்ம்ம் நடத்துங்க நடத்துங்க" என்று சொல்லிச் சென்றவர் சரியாக 'பத்தவெச்சிட்டியே பரட்டை' வேலையும் செய்துவிட்டார்.

உடனே அவன் தந்தையிடமிருந்து அழைப்பு வர,"என்ன செபா இது? ஆபிஸ் டைம்ல தான் போய் பொண்ணப் பார்க்கணுமா?" என்று ஆரமித்து மீண்டும் ஒரு லெக்சர் வர பிடிக்காத பர்கர் வேற வேண்டாவெறுப்பாக சாப்பிட்டவன் கடமைக்குப் பேசிவிட்டு ஓடிவிட்டான்.

ஜெஸியோ இதை அவன் சம்மதமாய் எடுத்துக்கொள்ள, அடுத்தடுத்த களேபரங்கள் நடக்கத் துவங்கியது.

.............................................

"மௌனி ஹே மௌனி,இங்க பாரு டி. ஹேய் அழுக்கு மூட்டை நில்லுடி"

"ஆமா நான் அழுக்கா தான் இருக்கேன். அதுதான் அவளை பேனு பார்த்திட்டு இருந்தியே"

வேகமாய் அவளை இழுத்தவன்,"உனக்கே அறிவு வேணாம்? சின்ன புள்ள மாதிரி பொசெசிவ் சண்டை போடுற?"

"போடா நீ நான் இருக்கறதை மறந்து அவளைப் பார்த்திட்டு இருந்தயில்ல?"

"மௌனி நீயாடி இப்படியெல்லாம் பேசுற?" என்றவன் அவள் தலைமுடியை இடதுகையால் நீவியவன் தன் நெற்றியை அவளின் நெற்றியில் முட்டி,"எவ்வளவு கோவம் வருது டி உனக்கு? அதைவிட பொசெசிவ்..."

"போடா" என்று அவனை அவள் விலக்க, அவனோ அவள் இடையை இன்னும் நெருக்கமாய் அவனை நோக்கி இழுத்து நிறுத்தினான்.

"யாராவது வரப் போறாங்க விடு ஹேமா"

"யாருவந்தா எனக்கு என்ன கவலை?" என்றவன் அவளின் கோவம் என்னும் நோய்த் தீர சில பல 'மருத்துவ முத்தங்களைத் ' தர ஆயத்தமானான்.

டாக்டரிடம் அடம்பிடிக்கும் சிறுபிள்ளையென முதலில் திமிரியவள் பின்பு சாக்லேட் கொடுத்த குழந்தையைப் போல அவனுக்கு 'கோஆப்ரேட்' செய்தாள். இதுக்குப் பேரு தான் கோ -'ஆப்பரேசன்' என்று சொல்லப்படும் போல! எனிவேஸ் நமக்கெதுக்கு அந்த சங்கதியெல்லாம்...

......................................................

கோவமாய்ப் போன பார்வதி பின்னாலே, 'பாரு' என்னைப் பாரு என்று tr போல அடுக்கு மொழிகளை கையாண்டான். பின்னே இளங்கோ 'அடிகள்' தானே அவன்?

"போ... போய் அவளையே நல்லா பாரு. அவங்க தான் கல்யாணம் ஆகாதவங்க நீ என்னனா பொண்டாட்டியைக் கிட்ட வெச்சிட்டே அதும் குழந்தையோட இருக்கும் பொண்டாட்டியை..."

"பார்வதி என்னைப் பாரடி..." என்று பாட அவளோ கோவமாய்ப் போக, பிறகு "எனக்கு அவ்வளவு தான் லிரிக்ஸ் தெரியும். ப்ளீஸ் என்ன கோவம் உனக்கு?"

அவள் முறைக்க,

அவன் என்ன செய்வதென்று புரியாமல் இருப்பதைப் பார்த்தவள் சிரிக்க, "என்ன பயந்துடீங்களா?"

"பாரு? ஆர் யூ ஓகே?"

"சும்மா கோவிச்சா என்ன செய்யுறீங்கன்னு பார்த்தேன். பரவாயில்லையே மூஞ்சி தொங்கிப் போகுது"

"கேசுவலாய்ப் பார்த்தது ஒரு தப்பா?"

"இதித்ரியும் மௌனியும் தான் ரொம்ப பொசெசிவ் ஆனாங்க. சோ நாமளும் ஆனா என்ன செயிரீங்கணு பார்த்தேன், பரவாயில்ல இன்னும் கூட அந்த லவ் பாசம் பொடலங்கா எல்லாம் கொஞ்சம் இருக்கு..."

"அடி க்ரதாகி. என்னை டெஸ்ட் பண்ணியா அப்போ?"

"ச்சே ச்சே இப்போ இல்ல அதுக்கு இன்னும் மூணு வருஷம் இருக்கு"

"அதென்ன மூணு வருஷம்?"

"நித்யாக்கா விவான் அண்ணா கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆகுது. அப்போ நீங்களும் நாலு வருஷம் கழிச்சு எவ்வளவு மாறுறீங்கன்னு நான் பார்க்கணும்" என்று சொல்லிக் கண்ணடிக்க,

"அடிப்பாவி என்னா ஒரு வில்லத்தனம்? உன்னைப்போய்ப் பச்சைப்பிள்ளைன்னு நெனச்சிட்டேனே?"

"ஹா ஹா என்று அவள் ps வீரப்பா போல் சப்தமாய்ச் சிரிக்க கைகளை நம்பியார் போல் முறுக்க"

"பாரு நீ மட்டும் சீரியல் நடிக்கப் போன சீரியல் வில்லிங்க எல்லோரும் செத்தாங்கப் போ"

அவளுக்குக் கொஞ்சம் நிற்கச் சிரமமாக இருக்க அதை உணர்ந்தவன் அவளை அமர வைத்து, "என்ன பண்ணுது?"

"சும்மா கோவமா இருக்குற மாதிரி வேகமா வந்தேனா அது தான்"

அவனும் அவள் அருகில் அமர அப்போது தான் கோவமாய் வந்த இதித்ரியின் பின்னாலே கெஞ்சிக்கொண்டு வந்தான் ஜிட்டு.

"இதி இதி, பிலீவ் மீ" என்று சொன்ன ஜிட்டுவைப் பார்த்து பாரு இளங்கோ இருவரும் சிரிக்க,

"டேய் அதுக்குள்ள சமாதானம் செஞ்சிட்டியா?"

அவனோ வேண்டுமென்றே அவன் கையை பாரு தோளில் போட,

"ஆணவம்?" என்றவன் சட்டென குனிந்து "கொஞ்சம் ஐடியா கொடுடா ப்ளீஸ்"

இப்போது பாருவும் சேர்ந்து சிரிக்க,

"எம்மா நீயாவது கொஞ்சம் சொல்லேமா?"

"மச்சான் நீ இந்த ஸ்பேனர் பார்த்து இருக்கியா? அது தான் மச்சான் நட் போல்ட் எல்லாம் டைட் பண்ணுவாங்களே அது"

முறைத்தான் ஜிட்டு

"சரிசரி நீயும் மெக்கானிக்கல் தானே? யூ நோ ஸ்பேனர் பலவகை உண்டு, அது பல சைசில் இருக்கும். ஏன்னா நட் போல்ட் எல்லாம் ஒரே சைஸ் இல்ல. ஒவ்வொன்னும் ஒவ்வொரு சைஸ். இன்னும் டீப்பா சொல்லனும்னா திரேட் (thread - நட்டில் இருக்கும் அந்த கோடுகள்.technical terms) ஒவ்வொன்னும் ஒவ்வொரு சைஸ்"

"நிறுத்து. இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்ற?"

"காரணம் இருக்கு மச்சி. அதுமாதிரி தான் ஒரு நட்டுக்கே தனித்துவம் இருக்கும் போது ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு டைப் மச்சி. உன் ஆளைப் பத்தி உனக்குத் தான் தெரியும். தெரியனும். எந்த ஸ்பேனர் போட்டா எந்த நட்டை டைட் செய்யுறதுனு...சோ மூடிட்டுப் போடா வெண்ணை..."

முகமெங்கும் அனல் பறக்க முறைத்தான் ஜிட்டு. "ஏன்டா முடியாதுனா முடியாதுனு சொல்லணும், இதுக்குப்போய் ஸ்பேனர் நட்டுனு ஒரு கதை. இதுல திரேட்க்கு விளக்கம் வேற? நீ படிப்பாளி தான் அதுக்குன்னு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியில? நீ படிச்சவன்னு உன் திமிரைக் காட்டுறியா? இருடா உன்ன... இன்னேரம் நான் கால்ல விழுந்தாவது சமாதானம் செஞ்சி இருப்பேன். உன்னால என் க்ரைம் ரேட் (crime rate) வேற கூடியிருக்கும். உன்னை..." என்றவன் ஓங்கி அவன் மண்டையில் குட்டிவிட்டு, "இதி இதி... இவனுங்க எல்லோரும் நம்மள பிரிக்கறதுலையே குறியா இருக்கானுங்க. ப்ளீஸ் இதி என்கூட பேசு" என்று பின்னாலே போன ஜிட்டுவைப் பார்த்துச் சிரித்தனர் இளங்கோ பார்வதி இருவரும்...(பயணங்கள் முடிவதில்லை...)
 
Top