Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 23

Advertisement

praveenraj

Well-known member
Member
"எனக்குப் பிடிச்சவனை!"

"அப்போ உனக்கு என்னைப் பிடிக்குமா?"

"ஓ பிடிக்குமே"

"அப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?"

முதலில் அவனின் இந்த கேள்வியில் ஸ்தம்பித்து நின்றாள் சித்தாரா. அவனுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறது என்று அவளுக்குத் தெரியும் தான். இருந்தும் இப்படி திடீரென அதும் நேராக கல்யாணம் செய்துக்கொள்ள கேட்பான் என்று அவள் துளியும் எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வதென்று புரியாமல் விழிக்க அப்போது தான் தன் சகாக்கள் எல்லோரும் தங்களை நோக்கி வருவதை உணர்ந்து, "நான் கொஞ்சம் யோசிக்கணும்..."

"சுத்தி வளைத்து சொல்றீங்களா வேண்டாம்னு?"

உடனே தலையை மறுப்பாக ஆட்டியவள், "நான் இதைப்பற்றி என் வீட்டுலயும் பேசணும்"

"நீங்கதானே சொன்னீங்க உங்க வீட்டுல உங்க முடிவுக்கு எதிரா எதையும் சொல்ல மாட்டாங்கனு?"

"கண்டிப்பா மாட்டாங்க தான். ஆனாலும் நான் திடீர்னு போய் உங்களைக் கல்யாணம் செய்யணும்னு சொல்ல முடியுமா? மோரெவர் என் கரியர் இப்போ தான் ஸ்டார்ட் ஆகியிருக்கு சோ..."

அவளின் முகத்தைப் பார்த்தவன், "ஓகே டேக் யுவர் ஓன் டைம். என்ன இந்த ப்ரொஜெக்ட் முடிஞ்சதும் நான் ஊருக்குப் போகணும். வீட்டுல வேற கல்யாணம் பேச்சு எடுத்துட்டு இருக்காங்க. அதுனால தான் இப்படி திடீர்னு கேட்டுட்டேன். சாரி தப்பா கேட்டு இருந்தா..."

"ஐயோ சாரி எல்லாம் வேணாம். நான் இதை இப்போ எதிர்பார்க்கவில்லை"

அதற்கு மேல் எல்லோர் அவரவர் இடத்திற்குச் சென்றுவிட்டனர். சித்தாராவின் மனதில் அவன் கேட்ட கேள்வி ரீங்கார மீட்டுக்கொண்டே இருந்தது. ஏனோ இவள் 'யோசிச்சு சொல்றேன்னு' சொன்னதும் அவன் முகமே மாறிவிட்டது. அதை இவளும் கவனிக்கத் தவறவில்லை. அவள் வீட்டிற்குச் செல்ல அவள் அத்தையோ இவளின் குழப்பதைக் கண்டு விசாரிக்க எல்லாமும் சொன்னாள்.

"நீ என்ன பதில் சொன்ன?"

"யோசிக்கணும்னு"

ஏனோ வாய் யோசிக்கணும் என்று சொன்னாலும் அவள் முகமோ ஒருவித உற்சாகம் கொண்டது. அதை நோட் செய்துகொண்டார். "கண்டிப்பா பையனைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. குடும்பம் ஜாதகம் எல்லாம் இருக்கு. நீ முதல்ல ஒரு முடிவைச் சொல்லு. அடுத்ததைப் பத்தி அப்புறோம் பேசலாம்..."

ஏனோ மறுநாள் முதல் மீண்டும் பழையபடி வேலைகளில் மூழ்கினார்கள். அவனோ அதன்பிறகு இவளைத் தொந்தரவுச் செய்யவில்லை. இவளும் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். நாட்கள் வேகமாய் ஓடி அந்த வேலை முடியும் நேரமும் வந்துவிட்டது. அங்கே ராஜீவையும் ஊருக்கு வரும்படி அழைப்புகள் வர, வேலையை முடித்துவிட்டு அக்ரீமெண்ட் க்ளோஸ் செய்துவிட்டு மீண்டும் எல்லோரும் ஒன்றாக சாப்பிடவர, ராஜீவ் நாளை ஊருக்கு கிளம்புவதாய் சொல்ல ஏனோ சித்தாராவிற்கு ஒரு மாதிரி ஆனது. அவளின் முகத்தைப் பார்த்து உணர்ந்தவன் எதையும் அவள் வாயாலே சொல்லட்டும் என்று காத்திருந்தான்.

மறுநாள் அவன் ஊருக்குப் போக அங்கே கதையே வேறு மாதிரி இருந்தது. ராகவி வீட்டில் கேட்க ஜாதகம் பார்த்து எல்லாம் சரி என்று முடிவாக இவனிடம் ஒப்புதலை பெறவேண்டி காத்துக்கொண்டிருந்தனர் இவன் பெற்றோர். அவனுக்கு அந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியாக இருக்க, ஒரே வார்த்தையில் நோ சொன்னவன் தான் ஒரு பெண்ணை விருப்புவதாய்ச் சொல்லி அவளின் சம்மத்திற்காகக் காத்திருப்பதாய்ச் சொல்ல தந்தைக்குக் கூட அவ்வளவு கோபமில்லை தன் தாய்க்குத் தான் பயங்கர கோவம். "அதெல்லாம் முடியாது. உனக்காக உன்னையே நெனச்சு இங்க ஒரு பொண்ணு இருக்கா. நோ" என்று அவர் சொல்ல, "நான் ராகவியைக் கல்யாணம் பண்ண மாட்டேன்" என்று அவன் செல்ல ஏனோ அப்போது வீட்டிற்கு வந்த ராகவியின் காதில் எல்லாம் விழ அவளோ அழுதுகொண்டு சென்றாள்.

விஷயம் அறிந்து இரு குடும்பமும் மனவருத்தத்தில் இருக்க, அன்று தான் சித்தாராவும் ராஜீவுக்கு அழைத்தாள். தன் சம்மதத்தையும் தன் வீட்டில் சொல்ல அவர்கள் ராஜீவை அவன் பெற்றோர்களோடு வந்து பார்க்கும் படிச் சொன்னதைச் சொல்லவும் ராஜீவ் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான்.

ராஜீவ் தன் தந்தையிடம் சொல்ல அவரோ கொஞ்சம் நாட்கள் போகட்டும் என்றார். அதை அவளிடமும் சொல்ல அவளும் ஓகே சொன்னாள். தன் அன்னையிடம் பேச அவரோ தான் வரமாட்டேன் என்றதும் முதலில் இவனுக்குக் கோவம் வர பிறகுத் தன் தந்தையை அழைத்துக்கொண்டு சென்று முதல் தரப் பேச்சுவார்த்தையைப் பேசிவிட்டு வந்தனர். அவன் அன்னைக்கு சித்தாராவை ஏனோ பார்த்தது முதல் பிடிக்கவில்லை. அது தான் உண்மை. எல்லாமே தான் நினைத்ததுப் போல் தான் நடக்க வேண்டும் என்று நினைத்த ராஜீவின் அன்னைக்கு சித்தாரா மீது வன்மம். ராகவி இருக்கும் இடத்தில் இவளா என்று நினைத்துக் கருவினார். ஆனால் எல்லாம் கைமீறி சென்றுவிட்டது. இருவீட்டாரும் பேசி திருமண தேதி வரை குறித்து விட்டனர்.

எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி மீண்டும் ராகவியை மருமகளாய் கொண்டுவர விரும்பினார். கொஞ்சம் தந்திரமாய் நடித்தார். காரணமுண்டு சித்தாராவிடம் பேசிய வரை அவளொரு இண்டிபெண்டெண்ட் பொண்ணுஎன்பதை அறிந்துகொண்டார். சோ இவள் வீட்டின் மருமகளாய் வந்தால் தன் ஹோல்டு போய்விடும் என்று நினைத்தார். ஆனால் தடுக்க முடியவில்லை.

நாட்கள் வேகவேகமாய் நகர்ந்தது. திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருக்க எல்லாமும் மறந்து உளமாற அவளை ஏற்றுக்கொள்வதைப்போல் இருந்தார். அவளுடைய நிறுவனம் சென்னையில் இருந்தது . ராஜீவின் பூர்விகம் மதுரைக்கு அருகில். ராஜீவ் இனி மதுரையில் செட்டில் ஆகலாம் என்று பேச, சித்தாரா சென்னையில் என்றாள். அங்கேயே முதல் விரிசல் வர ஆரமித்து இருந்தது. இதற்கு இடையில் இருவரும் ஒருவாறு பேசி மதுரையிலே இருப்பது என்று முடிவாக, இங்கே ஒரு கிளையை நிறுவலாம் என்றும் இருந்தாள். சின்ன வயதிலிருந்து எல்லாமும் தன் விருப்பப்படியே நடந்துக்கொண்டிருக்க முதன்முதலில் ராஜீவுக்காக தன் விருப்பங்களை விட்டுத்தர முன்வந்தாள். ஆனால் சின்ன சின்ன சந்தேகங்கள் இருக்கத்தான் செய்தது. இன்னும் ஒருவாரம் இருக்கையில் எல்லோரும் மதுரைக்கு வந்துவிட அங்கு ராகினியும் ராஜீவின் அன்னையும் பேசுவதை எல்லாம் கேட்க நேர்ந்தது. "என்ன ஆனாலும் சரி நீ தான் என் மருமகள்" என்று அவர் சொல்லி "அவ கேரக்டர் எல்லாம் விசாரிச்சு தான் அவங்களை மதுரையிலே இருக்குமாறு செய்யவைத்தேன். எப்படியும் அதற்கு மறுத்து ஒரு பிரச்சனை வரும் என்று நினைத்தேன். ஆனால் வரவில்லை. இந்த முறை அப்படி நடக்காது" என்று பேச அதைக் கேட்டவள் நேராக அவர்களின் முன் சென்று நிற்க முதலில் இவளைக் கண்டு அதிர்ந்தாலும் பின்பு தைரியமாகவே அவர் பேசினார். "இவள் தான் என் வீட்டு மருமகள்" என்று ராகவியைச் சுட்டிக்காட்ட கோவம் கொண்டவள் ராஜீவிடம் கடும் கோவத்தில் அனைத்தையும் தெரிவிக்க ஆயத்தமானாள்.

.................................................

ஒரு வழியாக ஜிட்டு இதித்ரியின் கைக்காலில் விழுந்து சமாதானம் செய்து அழைத்துவர அங்கே பாய்ஸ் எல்லோரும் அவனைப் பார்த்துச் சிரிக்கவும் முறைத்தபடி அமர்ந்தான் ஜிட்டு.

"சொல்லுங்கப்பா கதையை. எங்க விட்டோம்? ஆஹ்ம் அன்னைக்கு அம்மாவைக் காப்பாத்தி இவ உன்னை வாங்குவாங்குனு வாங்கிவிட அப்புறோம் நீ வெறுப்புல இருக்க... கரெக்ட்?"

"ஹ்ம்ம். இவ பாட்டுக்குத் திட்டிட்டு இருக்க அப்போ என் அம்மாவோட ஃப்ரண்ட் ஒருத்தவங்க அம்மாவைப் பார்த்து பேசவர கொஞ்சம் பேசிட்டு, யாரு உன் பசங்களா?" என்று இவர்களைப் பார்த்து கேட்க,

"ஹேமா, ஹரி நான் சொல்லியிருக்கேன் இல்ல என் ஃப்ரண்ட் காயத்திரி" என்று சொல்ல "என்னப்பா ஹரி என்ன பண்ற?" என்று ஹேமாவிடமும் "அப்புறோம் பொண்ணு ஹேமா என்ன படிக்கிறா?" என்று அப்பாவியாய் அவர் வினவ ஹேமா ஹரிணியைத் தவிர எல்லோரும் சிரித்தனர்.

பிறகு விளக்கிச் சொல்ல பேச்சை மாற்றும் பொருட்டு அருகே நின்ற மௌனியைப் பார்த்து "யாரு உன் பையனோட கேர்ள் ப்ரெண்டா?" என்று மீண்டும் குட்டையைக் குழப்ப உண்மையில் அந்த நொடிதான் ஏனோ ஹேமாவின் பெற்றோருக்கு அப்படியொரு எண்ணமே வந்தது. பின்னே எதற்கெடுத்தாலும் கோவப்படும் தங்கள் மகனையே நிற்கவைத்து கேள்விகளால் விளாசிவிட்டாலே என்று நினைக்க ஏனோ தன் கோவத்தைத் தீர்க்க உடனே சிரித்துக்கொண்டே, "ஐயோ ஆண்ட்டி என் டேஸ்ட் இப்படியெல்லாம் இல்ல. இன்னும் பெட்டரா இருக்கும்" என்று சொல்ல ஏனோ இது ஜோக் அல்ல என்று அந்த ஆண்டியைத் தவிர எல்லோருக்கும் புரிந்தது.

அவனின் அந்த பதிலில் உண்மையில் மனமுடைந்தாள் மௌனி. அதை அவள் முகமே காட்டிக்கொடுக்கவும் செய்வதறியாது விழித்தனர் ஹேமாவின் பெற்றோர். "சரிவாங்க சாப்பிட்டேப் பேசலாம்" என்று அவர் அழைக்க அவொய்ட் செய்யமுடியாமல் சென்றனர். சரி இதற்கு மேல் இருக்க வேண்டாம் என்று மௌனி நகரப் பார்க்க அந்த ஆண்ட்டி இருக்கச்சொல்லவும் இருந்துவிட்டாள்.

சாப்பிடும் போது அவளைப் பற்றி விசாரிக்க அவள் வளர்ந்த ஆர்பனேஜ் பற்றிச் சொல்லவும் உண்மையில் அவளின் நிலை ஹேமாவின் பெற்றோருக்கும் தங்கைக்கும் வருத்தம் தர, இவன் மட்டும் ஒரு பார்வையைப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருளில் ஒரு ஏளனம். சாப்பிட்டு விட்டு கைகழுவ வர அவளை முறைத்துக்கொண்டே வந்தான் ஹேமந்த். அவள் விடைபெற போக ஏனோ அவளுக்கு எதையாவது வாங்கித்தர வேண்டும் என்று ஹேமந்த்தின் பெற்றோருக்குத் தோன்ற அங்கிருந்த ஜூவல்லரி ஷாப்பிற்குள் கூட்டிச்சென்று சின்னதாய் ஒரு கம்மல் வாங்கித்தர (ஹரிணிக்கு வாங்க தான் அவர்களின் பிளான். ஏனோ மௌனிக்கும் வாங்கித்தர வேண்டி அழைத்துச் சென்றனர்) இவள் எவ்வளவோ மறுத்தும் வற்புறுத்த "உன் அம்மா வாங்கித் தந்தா இப்படித் தான் சொல்லுவியா?" என்று கேட்கவும் அமைதியாக வாங்கிக்கொண்டாள். இதற்கான பணத்தை ஹேமாவிடம் தந்துவிட வேண்டும் என்று வாங்கும் போதே முடிவு செய்துவிட்டாள்.

ஜுவல்லரியிலிருந்து கூட வெளியே வரவில்லை அதற்குள் அவள் காதிற்கு மட்டும் கேட்குமாறு, "எப்படியோ வந்ததுக்கு ஓசியில ஒரு நகை வாங்கிட்ட" என்று அவன் சிரித்துக்கொண்டே எள்ளலிட கோவத்தைக்காட்டிலும் மௌனிக்கு அழுகை தான் முதலில் வந்தது. தன் கையிலிருந்த atm கார்டை நீட்டி பின் நம்பரை சொன்னவள் "தயவு செய்து பணத்தை எடுத்துக்கோங்க. நானே இப்போ எடுத்துத் தந்திடுவேன். அது உங்க அம்மாக்குத் தெரிந்தா ரொம்ப கஷ்டப்படுவாங்க. இதை உங்ககிட்டயே திருப்பிக் கொடுக்க முடியும், முதன்முதலில் அம்மா ஸ்தானத்தில் ஒருதவங்க எனக்கு வாங்கிக் கொடுத்தது" என்றவள் கண்களில் கண்ணீர் வர அவன் முன்னால் தன் பலகீனத்தைக் காட்டக் கூடாது என்று எண்ணியவள் வேகமாய் அவன் பாய்க்கட்டில் கார்டை போட்டுவிட்டு நடந்தவள், "யாருமே இல்லாம இப்படி வளருவதில் என் தப்பு எதுவுமே இல்ல சார். சாரி உங்கள அவமானப் படுத்துனதுக்கு. இனிமேலாச்சும் உங்க அம்மா அப்பாவை வெளிய கூட்டிட்டுப் போனா பார்த்து பத்திரமா கூட்டிட்டுப் போங்க" என்றவள் ஹேமாவின் பெற்றோரிடன் அவசர வேலை என்று சொல்லி விடைபெற்றாள். ஏனோ ஹேமாவின் மீதிருந்த நல்லதொரு பிம்பம் அவளை விட்டுச் சென்றது.

அவளை அவமான படுத்த வேண்டும் என்று தான் நினைத்தான் ஹேமந்த். ஆனால் அவள் அழுதுபடிப் போனது ஏனோ ஹேமாவுக்கு வலியைக்கொடுக்க நடந்து வந்தவனுக்கு உண்மையில் வலித்தது. நினைவுக்கு வர தன் அன்னையின் கைவிரல்கள் அவன் கன்னத்தில் பதிந்திருந்தது.

..........................................

அன்றைய நாள் அதுவரை அந்த கிளையின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த மிஸ்டர் கிருபாகரன் வேறு நிறுவனத்திற்குச் செல்வதால் எப்படியும் இனி தனக்குத் தான் அந்தப் பதவி என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டுக் காத்திருந்தான் லோகேஷ். அவன் தான் இப்போதைக்கு சூர்யா இன்சைட்ஸ்யில் அதிகம் படித்தவனும் கூடவே சீனியரும். அன்று தான் திடீரென வந்தாள் அனேஷியா. 'இனி இந்த சூர்யா இன்சைட்ஸ்கு புதிய தலைமை இவள் தான்' என்று அறிமுகப் டுத்த லோகேசுக்கு ஜென்மமே செத்துப்போனது. பின்னே இளைஞர்களுக்கு இனி முக்கியத்துவம் தரப்படும் என்று சொல்வதைக் கேட்ட லோகேஷ் மேலும் இதுநாள் வரை அதிகம் புகழப்பட்டவன், படுபவன் என்று இருக்கும் காராணத்தால் தனக்குத் தான் வரும் என்று நினைக்க காலையிலிருந்தே கொஞ்சம் ஜாலியாக வந்தவன் லிப்டில் ஏற கூடவே புதியதாய் ஒரு பெண்ணைக்கண்டதும் மனம் துள்ளிக்குதித்து ஆர்ப்பரித்தது. இவளை மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பார்த்தது நினைவுக்கு வர அவளையே வித்தியாசமாய்ப் பார்த்தவன் அங்கே சென்றதும் 'இவள் தான் புதிய ஹெட் என்றும் இனி இவளுக்குக் கீழே தான் வேலை செய்யவேண்டும்' என்று சொல்ல லோகேசுக்கு இரண்டு கோபங்கள். முதலாவது தனக்குக் கிடைக்கவேண்டியது இவளுக்குக் கிடைத்துவிட்டது என்ற ஆதங்கம். இரண்டாவது இனி இவளுக்குக் கீழே வேலைசெய்யவேண்டும் என்றதும் ஒரு வெறுப்பு தோன்றியது.

அதற்கு ஏற்றார்ப் போல் அனேஷியாவும் தன் பணிசார்ந்த விஷயங்களில் மிகவும் கடுமையைக் காட்டுவாள். இயற்கையிலே கொஞ்சம் கோவம் பிடிவாதம் இரண்டும் கலந்த கலவை தான் அனேஷியா.அதன் கூடவே தன் அழகு அதன் பின்னால் வட்டமடிக்கும் ஆண்கள் தன் பொருளாதார நிலை என்று அதற்கே உரிய மிடுக்கு, பேச்சு, நடை என்று இருக்க புதியதாய் அவளைப் பார்க்கும் யாருக்கும் கொஞ்சம் திமிர் பிடித்தவள் போல் தான் தெரிவாள். பாவம் அவளின் உள்ளக்குமுறல்கள் யாருக்கும் தெரியாது.

தன்னுடைய இந்த குணத்தால் அவள் இழந்ததும், இழந்துகொண்டு இருப்பதும் அதிகம். ஆம் அவளின் தாய்க்கு கேன்சர் வந்து ட்ரீட்மென்டில் இருக்கிறார். அதன் காரணமாய்த் தான் வெளியூரில் வேலை செய்துக்கொண்டிருந்தவள் தன் தாயுடன் இருக்க இங்கே வந்துச் சேர்ந்தாள். ஏற்கனவே தன் தாய் தன்னுடன் அவ்வளவாக பேசுவதில்லை. இதில் அவள் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை என்று தன் அன்னையிடம் சொன்னாலோ அன்றே மிக கடுமையாக அனேஷியாவிடம் பேசியவர் சில உண்மைகளை எல்லாம் சொல்ல திடுக்கிட்டாள். 'தன் மகளின் இந்த அவசர புத்தியால் நிறைய தவறு செய்துவிட்டாள் கூடவே இழந்தும் விட்டாள்' என்று உணந்தவர் அதை அவளுக்கு உணர்த்துவதற்காக தன் மகளிடம் இனி கொஞ்ச நாட்கள் பேசாமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க அது அதற்கான பலனை முழுவதுமாய்த் தந்தது. பின்னே ஏற்கனவே அவளுக்கு அவளின் தவறுகள் புரிந்து தன்னைத் திருத்திக்கொண்டு தான் இருக்கிறாள். இந்த நேரத்தில் தான் அவருக்கு கேன்சர் வர தன் தாய் படும் கஷ்டத்தை எல்லாம் அருகிலிருந்துப் பார்த்தாள். அவள் தன்னைப் பார்த்துக்கொள்வதிலே அவள் தன்னை மாற்றிக்கொண்டாள் என்று அவளுடைய தாய்க்கும் புரிய, மெல்ல மெல்ல தன் இறுதி ஆசையை சொல்லவும் ஏனோ அதில் அவளுக்கு முழு உடன்பாடு இல்லை என்றாலும் ஒற்றுக்கொண்டாள்.

இந்த சமயத்தில் தான் லோகேசும் ஒருநாள் வெகு சாதரணமாய் அவளிடம் பேச முயல அன்று கடுமையாகப் பேசிவிட்டுச் சென்ற அனேஷியாவின் மீது தீரா வன்மம் கொண்டான் லோகேஷ். எதற்கெடுத்தாலும் அவளின் முடிவுக்குக் கீழ்படியாமல் இவன் இஷ்டத்திற்கு எல்லாம் செய்ய அது இருவருக்குள்ளும் நிறைய விரிசல்களை உண்டுசெய்தது. ஆனால் பழைய அனேஷியாவாக இருந்திருந்தால் இந்நேரம் லோகேஷ் எனக்கு இந்த வேலையே வேண்டாம் என்று துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடியிருப்பான். காலம் அவளை மாற்றியது, மாற்றிக்கொண்டுடே இருக்கிறது. இடையில் தன் தாய் தன்னுடைய இறுதி மூச்சை விட, ஏனோ அவரின் ஆசையை நிறைவேற்றவே துடிக்கிறாள். ஏற்கனவே லோகேசுக்கும் தனக்கும் வாய்க்கால் தகராறு இதில் இப்போது கிடைத்த இந்த ப்ரொஜெக்டை முதலில் லோகேஷ் தலைமையில் தான் அனுப்ப முடிவெடுக்க திடீரென தானே செல்வதாய்ச் சொல்லி தன் தலைமையில் செல்ல லோகேசுக்கு அவள் தன்னை வேண்டுமென்றே அவமானப் படுத்துவதாய் நினைத்தவன் இந்த ப்ரொஜெக்டை சரிவர செய்யாமல் அவளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்த ஏற்கனவே சில பல திட்டங்களைத் தீட்டி விட்டான் என்று அறியாமல் பயணப்படுகிறாள் அனேஷியா.

.....................................................

அனேஷியாவுக்கு அழைப்பு வந்தது, "அனி எங்க இருக்க?"

"புவனேஷ்வர் நெருங்கப் போறோம். ஏன்?"

"சும்மா தான். சாப்பிட்டாச்சா?"

"ஹ்ம்ம்"

"ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க அனி?"

"உனக்குத் தெரியாதா என்ன?"

இங்கே எல்லோரும் சத்தமாய் கதை பேசிக்கொண்டிருக்க (விவான், நித்யா, தியா, ஜிட்டு எல்லோரும்) கொஞ்சம் தூரம் தள்ளிச் சென்றாள் அனேஷியா.

"என்ன ஆச்சு அனி? எல்லாம் ஆஸ் பெற் பிளான் தான் போயிட்டு இருக்கு. அப்படித்தானே?"

"ஹ்ம்ம்"

"என்ன அனேஷியா எல்லாத்துக்கும் ஒரு வார்த்தையிலே பதில் சொல்ற? எனக்குத் தெரிந்து என் அனேஷியா இப்படி இல்ல, அவளுக்கு இப்படிப் பேசச்சொல்லியெல்லாம் தரவேண்டிய தேவையில்லையே?"

"எல்லோரும் எல்லா நேரத்துலையும் ஒரே மாதிரி இருக்க முடியாது ......."(ஒரு பெயரைச் சொல்லுவாள். அது சஸ்பென்ஸ்)

"உன் ஆசை கண்டிப்பா நடக்கும். நாங்கயெல்லாம் எதுக்கு இருக்கோம் சொல்லு? விட்டுடுவோமா?"

"ஹ்ம்ம்"

"என்ன சும்மா ஹ்ம்ஹ்ம்... சரி அப்பாவிடம் பேசுனியா?"

"ஆம்"

கோவமாய் அவன் போனை வைத்தான். மீண்டும் இவளே அழைத்தாள், "சாரி..."

கொஞ்சம் பேசிவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தாள்.

....................................................................................

தன் தந்தை பேசுவதற்கெல்லாம் இப்படி ஹ்ம்ம் மட்டுமே கொட்டிக்கொண்டு இருக்கிறோமே அதும் எதிரில் நம்மையே இப்படிப் பார்த்துக்கொண்டு இருக்கும் ஜெசியை நினைக்க அவனுக்கு ஏனோ அவமானத்தில் கண்களில் கண்ணீரே முட்டிக்கொண்டு வர அவரோ அந்தப் பக்கம் எதையும் உணராமல் "அப்போ நெக்ஸ்ட் வீக் என்கேஜ்மென்ட் வெச்சிடுலாம் தானே? உன்கிட்டப் போய்க் கேட்கறேன் பாரு? உனக்கு என்ன தெரியும்? அதான் பார்த்தாச்சு பேசியாச்சு இன்னும் என்ன?" என்று சொன்னவர் போனை வைக்க எழுந்தவன் "ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்" என்று சொல்லி நேராக உள்ளே போக அவனின் நிலையை நினைத்து அவனுக்கு அவன் மேலே கழிவிரக்கம் வர என்ன செய்வான் மூஞ்சியை நன்கு கழுவிக்கொண்டு 'என்ன ஆனாலும் சரி இந்த கல்யாணம் மட்டும் நடக்கவே கூடாது. ஒருவேளை இவளை கல்யாணம் செஞ்சிகிட்டா என் அப்பா ஒரு பக்கம் இவ ஒருபக்கம் நான் சாகவேண்டியது தான்' என்று யோசித்து முகத்தைக் கழுவியவன் 'இனி சண்டைக்காரன் காலில் விழுவதைக் காட்டிலும் சாட்சிக்காரன் காலில் விழுவது எவ்வளவோ மேல்' என்று நினைத்து வெளியே வந்தவன் ஜெசி இருக்கும் டேபிளுக்குப் போக,

"என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?"

"புரியில?"

"இந்த கல்யாணம் பத்தி"

அவள் ஏனோ தந்தையிடமே சொல்லிவிடலாம் பின்ன இங்க இவனிடம் இவ்வளவு வீம்பு செய்து இப்போதே ஓகே அதும் இவன் முன்னால் சொன்னால் அது தனக்கு எம்பரஸ் என்று நினைத்தவள், "நான் வீட்டுல சொல்லிக்கிறேன். சரி டைம் ஆச்சு நீங்க வர சண்டே பிரீ தானே நாம கொஞ்சம் பேசலாம். வெளியப் போலாம் . நான் என்ன இடம்னு சொல்லிடுறேன் பை பை" என்று அவள் எழ (உண்மையில் காலையில் கல்யாணத்தைப் பற்றி சொல்லும்போது வராத வெட்கம்,இவன் புகைப்படத்தைப் பார்க்கும் போது வராத வெட்கம் இங்கே பேசும்போது வராத வெட்கம் எல்லாம் சேர்ந்து இப்போது அவளை வாட்ட)உடனே எஸ் ஆனாள். அவசரத்தில் மீண்டும் அவனிடம் தான் ஆர்டர் தான் போட்டுவிட்டு வந்துள்ளேன் என்று மறந்துப்போனாள்.

செபாவோ இப்போது யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்று யோசித்தான். அவனுக்கு முதலில் ஞாபகம் வந்தது ரோஸி அத்தை . தன் தந்தையின் ஒரே செல்லத் தங்கை . ஏனோ தன் தந்தையிடம் வெகு சாதரணமாய் உரையாடும் ஒரே நபர் அவர் தான். அவன் அழைக்க,

"கங்கிராட்ஸ் செபா. புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரே... நல்ல யோகமடா..." என்று கலாய்க்க, "ஸ்டாப் இட் அத்தை" என்றதும்,

"என்ன செபா குட்டி என்ன ஆச்சு?"

"அத்தை எனக்கு இப்போ கல்யாணம் வேணாம். ப்ளீஸ் அப்பாவிடம் சொல்லுங்க.அவர் என்கிட்டே ஒரு வார்த்தைக் கூடக் கேட்காம எல்லாம் முடிவு பண்ணிட்டாரு. ப்ளீஸ் நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்"

"ஹேய் என்ன ஹெல்ப் அப்படினு எல்லாம் பேசுற? என்ன பண்ணனும் சொல்லு"

"எனக்கு இந்த கல்யாணம் வேணாம்"

"ஏன்?"

"ஏன்னா எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ண விருப்பமில்லை"

"டேய் வயசு என்ன 26 ஆகுது இப்போ இல்லனா எப்போ?"

"இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகட்டும்..."

"டேய் நல்ல இடமாம். நல்ல பொண்ணாம். நீ பொண்ணைப் பார்த்துட்ட தானே? ஓகேயும் சொல்லிட்டு இப்போ நடிக்கிறையா?"

"அதெப்படி உங்களுக்குத் தெரியும்?"

"இப்போ தான் அண்ணா சொன்னாரு. டேய் நான் கலாய்ப்பேனு சும்மா காட்டியும் கல்யாணம் வேணாம்னு சொல்ற ரைட்?"

"ஐயோ உங்களுக்கு நான் எப்படிச் சொல்வேன். கொஞ்ச நாள் போகட்டும்"

"சரி நான் வேணுனா கல்யாணம் மட்டும் கொஞ்சம் தள்ளிப் போடச் சொல்லட்டா"

"ஐயோ" என்று இவன் சொல்ல,

"ஏன்டா?"

"எனக்காக எதுக்கு அந்தப் பொண்ணு வெய்ட் பண்ணனும் சொல்லுங்க? சோ"

"சோ"

"அவங்க கிட்ட வேற பையனைப் பார்க்கச் சொல்லிடுங்க. நாம அப்புறோமா பார்க்கலாம்"

"செபா உனக்கே தெரியும் அண்ணிக்கு உடம்பு சரியில்ல. சோ "

"ஐயோ அத்தை, எனக்கு அந்தப் பொண்ணு வேணாம்..."

"என்ன? என்ன சொன்ன?"

"எனக்கு அந்தப் பொண்ணு வேணாம்"

"செபா என்னடா சொல்ற? அந்தப் பிள்ளையைப் பிடிக்கலையா? ஏன் அழகா இல்லையா?"

"ஐயோ அழகா தான் இருக்கா. ஆனா வேணாம்"

"வேணாம் வேணாம்னு மொட்டையா சொன்னா என்ன அர்த்தம்? ஏதாவது காரணம் சொல்லு?"

"எனக்கும் அந்தப் பொண்ணுக்கும் சரிபட்டு வராது"

"ஓ சார் எத்தனை நாளா அந்தப் பொண்ணுகிட்ட பழகுறீங்க?"

"இதெல்லாம் பழகிப் பார்க்கணும்னு அவசியமே இல்ல. பார்த்ததுமே சொல்லலாம்"

"டேய் பொண்ணு அழகா இருக்காம். ஆனா எனக்குச் சம்மதமில்லையாம். இதைச் சொன்னா உங்க அப்பா என்னையும் சேர்த்துத் திட்டுவாரு. இந்த வம்புக்கே நான் வரல நீயே சொல்லு என் அண்ணா கிட்ட"

"அத்தை அத்தை. சரி எனக்கு அவளைப் பிடிக்கலைனு வெச்சிக்கோ"

"அப்போ உன் அப்பா கிட்ட நீயே பிடிக்கலைனு சொல்லு"

"ஆனா பிடிச்சிருக்குனு சொல்லிட்டேனே" ஆம் தந்தை பேச்சு வாக்கில் பிடித்திருக்கிறதா என்று கேட்க இவனும் ஆமென்று சொல்லிவிட்டான்.

"நீ பேசுறதுல எங்கேயாவது லாஜிக் இருக்கா பாரு? உங்க அப்பா கிட்ட பேசணும்னா ஒரு இடத்துல கூட பிசிர் தட்டக் கூடாது. அப்போதான் நம்ம பக்கம் கேஸ் நிக்கும். தி மோஸ்ட் ஐ கேன் டூ இஸ் ரெண்டு மாசம் தள்ளிப் போடச் சொல்லிப் பேசறேன். அதும் எப்படியும் கன்பார்மா என்னால சொல்ல முடியாது பார்த்துக்கோ..."

"கோவத்தில் போனை கட் செய்தான்"

அவருக்கும் மனம் சரியில்லாமல், தன் அண்ணனிடம் உடனே பேச அழைத்தார்.(பயணங்கள் முடிவதில்லை) i won't be available for next few days. sorry for the inconvenience
 
எல்லாரும் ஆளுக்கொரு பிளான் போட்டு சீக்ரெட்டா பேசுறத பாத்தா ஏதோ ட்ரெயின கடத்த போற மாதிரியே இருக்கு ? ? ?
 
துவா போல அனுவிற்கும் ஒரு மர்ம பிளாஷ் பேக் இருக்கும் போல.....
Take your own time...
கண்டிப்பா இருக்கு? thankyou !
 
எல்லாரும் ஆளுக்கொரு பிளான் போட்டு சீக்ரெட்டா பேசுறத பாத்தா ஏதோ ட்ரெயின கடத்த போற மாதிரியே இருக்கு ? ? ?
ஹி ஹி. கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு டைலாக் ஒரு கேரெக்டரே சொல்லும். நன்றி ??�
 
Top