Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 16

Advertisement

praveenraj

Well-known member
Member
நித்யா விவான் லலிதா ராஜசேகர் நால்வரும் இரண்டு நாட்கள் கழித்து கும்பகோணம் சென்றனர். நித்யாவின் வீட்டிற்கு சென்று விவான் நித்யா காதலையும் அவர்கள் இருவரின் திருமணத்தைப் பற்றியும் ராஜசேகர் பேச நித்யாவின் தந்தைக்கு சொல்ல முடியாத கோவம் வந்தது. ஒரே வார்த்தையில் "எனக்கு இதுல சம்மதம் இல்ல" என்று சொல்லி "நீங்க கிளம்பலாம்" என்றும் சொல்லிவிட்டார்.
ஏனோ அவர் மறுப்பார் என்று நினைத்து தான் வந்தார்கள். ஆனால் இவ்வளவு பிடிவாதமாக மறுப்பார் என்று அவர்கள் நினைத்திடவில்லை. ஏனோ இதுவரை நித்யாவிற்கு இருந்த பயம் எல்லாம் மீண்டும் ஒன்று சேர அவள் கண்கள் கலங்கியே விட்டது. பின்னே தன்னால் இப்படி விவான் குடும்பமே அவமானப் படுகிறதே என்று அவளுக்கு வருத்தம் வேறு. அவள் என்ன செய்வதென்று புரியாமல் இருக்க மீண்டும் ராஜசேகர் பேச்சை எடுக்க அவர் வெடுக்கென எழுந்ததும் இதுவரை பொறுமையாக பேசிய ராஜசேகருக்கும் அதிக கோபம் வந்தது. இந்த களேபரத்தில் விவான் நித்யாவை விட இளையவன் என்று வேறு சொல்லவில்லை. அதையும் சொல்ல நித்யாவின் தந்தை கடும் சினம் கொண்டு அவர்களை வெளியே போகச்சொல்லிவிட்டார்.
அவர்களும் சரி கொஞ்ச நாள் கழித்து பேசலாம் என்று கிளம்ப நித்யாவும் அவர்களுடனே கிளம்பினாள். அவளுக்கு பயம் எங்கே தனியாக விட்டுச்சென்றால் தனக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்களோ என்று? அவளும் கிளம்ப அவளை இங்கேயே இருக்கும் படி அவள் வீட்டில் சொல்ல அவள் பயம் கண்டு விவானும் தன் தந்தையைப் பார்க்க தங்களோடே மீண்டும் அழைத்துச் சென்றனர்.
நித்யாவின் தந்தை தான் போலீஸூக்கு போவேன் என்று மிரட்ட இதுவரை பொறுமையாக மட்டுமே பேசிய ராஜசேகர் முதன்முறை தன்னுடைய பலத்தை உபயோகித்தார். தனக்கிருக்கும் செல்வாக்கு உட்பட எல்லாமும் சொன்னவர், "என்னால இப்பவும் கூட அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்துவைக்க முடியும் ஆனால் என் பையனுக்கு இன்னும் 22 தான் ஆகுது. சட்டப்படி ரெண்டு பேரும் மேஜர் தான். பட் பெத்தவங்க சம்மதம் இல்லாம கல்யாணம் செய்ய எனக்கு விருப்பமில்லை. அதுக்காக தான் வந்தேன்" என்று சொல்லிவிட்டு "வர மார்ச் அவனுக்கு 23 பொறக்குது அதுவரை தான் உங்களுக்கு டைம். இல்லைன்னா அதுக்கப்புறோம் நானே அவங்களுக்கு கல்யாணம் செய்துவைத்துவிடுவேன்" என்று மிரட்டியும் செல்ல நித்யாவும் அவர்களுடனே சென்றுவிட்டாள்.
ஏனோ இது நித்யாவின் தந்தையை இன்னும் கோவம் தான் படுத்தியது. அதற்குள் தனக்குத் தெரிந்தவர் மூலமாக சொல்லி நித்யாவின் தந்தையிடம் பேசும் வேலையும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதன் பின் ஒரு ஆறுமாதங்கள் நித்யா அங்கேயே தான் ஊட்டியில் பணிபுரிந்தாள்.
தன் வீட்டினர் தன்னிடம் பேசாமல் இருக்க முதலில் தன் தாய் பேச ஆரமிக்க பிறகு தம்பி என்று தந்தையைத் தவிர எல்லோரும் வேறு வழியின்றியும் நித்யாவுக்காகவும் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முயற்சிக்க இந்த பிரச்சனை அப்படியே தான் இருந்தது.
இதற்கிடையில் நித்யாவின் தந்தையும் விவானின் குடும்பத்தைப் பற்றியும் தொழில் பற்றியும் எல்லாம் அறிந்துக்கொண்டு தான் இருந்தார். மற்றவிஷயங்கள் அவருக்கு ஓரளவுக்கு சமாதானம் என்றாலும் வயது பிரச்சனை மட்டும் அவருக்கு ஒற்றுவரவில்லை. அந்த காலத்து ஆள், அவருக்கு தான் இதில் நம்பிக்கை இல்லை. என்ன நினைத்தாரோ நாட்கள் அப்படியே போக ஒருநாள் நித்யாவை அழைத்து வீட்டிற்கு வரும்படி சொன்னார்.
நித்யாவும் வர அவளிடம் கொஞ்சம் பேசினார். அவளுக்கு 26 நடந்துக்கொண்டிருந்தது. நித்யாவும் பெரிய வசதி இல்லையென்றாலும் ஓரளவுக்கு வசதி வாய்ந்தவள் தான். கூடவே மூத்த பெண் மற்றும் ஒரே மகள் என்பதால் அவளுக்கு அதிக செல்லமும் இருந்தது. வேறு வழியில்லாமல் அவர் பேசினார், "நித்யா நீயாவே உன் முடிவை எடுத்துக்க ஆரமிச்சிட்ட. நீ எடுத்த முடிவு சரியா இருந்தா நான் குறுக்க நிக்கமாட்டேன். பட் இது ரொம்ப தப்பான முடிவு. உன்னைவிட அவனுக்கு" என்றதும் நித்யா முறைக்க "சரி அந்த பையனுக்கு மூன்று வயசு வித்தியாசம். இன்னைக்கு அதெல்லாம் பெரிய விஷயமா தெரியாது. நாளைக்கே எதாவது சண்டைனு வந்தா அப்போ புரியும் நான் சொன்னது"
"நான் ஓப்பனா சொல்றேன் எனக்கு இந்த கல்யாணத்துல இன்னமும் சம்மதம் இல்ல. இருந்தாலும் உனக்காக ஓகே சொல்றேன்" என்று அவர் சொல்ல அவளுக்கு அளவில்லா சந்தோசம் ஆனால் அது கொஞ்ச வினாடிகள் கூட நீடிக்கவில்லை, உடனே தொடர்ந்தார் "ஆனால் ஒன்னு உங்க கல்யாணத்துக்கு ஆயுசு வெறும் மூணு மாசம் தான். மிஞ்சிமிஞ்சி போனால் ஆறு மாசம். அப்புறோம் நீயா என்னைத் தேடி வருவ, அப்பா நான் தப்பான முடிவு எடுத்துட்டேன்னு, அப்போ புரியும், கண்கெட்ட பிறகு தான் சூரிய நமஸ்காரம் பண்ணுவ. சரி அது தான் உன் தலைவிதின்னா யாரால மாற்ற முடியும்?" என்றவர் "உங்களுக்குள்ள நிச்சயம் காம்ப்பேக்டபிலிட்டி (இணக்கத்தன்மை) இஸ்ஸுஸ் வரும் பிறகு அதுவே ஈகோ ஆகும். சண்டை வரும் கடைசியில டிவோர்ஸ்ல வந்து நிற்கும். எல்லாமும் நானும் பார்க்கத்தான் போறேன். ஆனா நீ தான் அனுபவிக்கனும். பார்த்துக்கோ" என்று சொன்னவர் வேண்டா வெறுப்பாய் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னார்.
ஏனோ தன் தந்தையின் இந்த பேச்சு நித்யாவை ரொம்பவும் பாதித்தது. பின்னே இன்னும் திருமணம் கூட நடக்கவில்லை அதற்குள் பிரிந்துவிடுவாய் என்று சொல்கிறாரே என்று நினைத்து வருந்தியவள் மீண்டும் ஊட்டி என்று விவானிடம் எல்லாமும் சொன்னாள். அவளுக்கு அழுகையும் கூடவே வந்தது.
"நித்யா பயப்படுறியா நித்திம்மா?"
"இல்ல. ஆனால் இன்னும் வாழ்க்கையை ஆரமிக்கவே இல்ல அதுக்குள்ள இப்படி சொன்னா என்ன பண்றது விவா?"
"இதையே ஒரு சேலஞ்சா எடுத்துப்போம்"
அவள் புரியாமல் பார்க்க,
"ஸீ நம்ம லவ்வை யாருக்கும் நாம புரியவைக்க வேண்டியதில்லை தான். ஆனாலும் சில சமயங்களில் அது அவசியமாகிடுது. என்ன சொன்னாரு? ஆறுமாசமா? ஆயுசுக்கும் நாம சேர்ந்து இருக்கனும் அதை பார்க்கவே அவரு நாம வாழற வரைக்கும் அவரும் வாழனும். ச்சே இப்படி தப்பா பேசிட்டோமேன்னு அவரு ஆயுசுக்கும் பீல் பண்ணனும் அந்த மாதிரி வாழனும். என்ன?" என்று அவன் புருவம் உயர்த்த
ஏனோ நித்யாவிற்கு இருந்த பயமெல்லாம் விலக அவனை அணைத்துக்கொண்டாள்,
"விவா எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் கேட்கட்டா? தப்பா எடுத்துக்கக் கூடாது ப்ளீஸ்"
"கண்டிப்பா நித்து. கேளு"
"இப்போவே நான் உன்னைவிட மூணு வயசு பெரியவ. இன்னும் அஞ்சு வருஷத்துல எனக்கு 30 உனக்கு 27. அப்போ நான் உன்னைவிட ரொம்ப வயசாகிடுவேன், ஒருவேளை நமக்கு பேபி பொறந்தாக்கூட நான் ரொம்ப பெரிய பொண்ணா தெரியலாம். அப்போ உன்னை விட சின்ன பொண்ணுங்களைப் பார்க்கும் போது நாம அவசரப்பட்டுட்டோமோனு தோணலாம் அப்போ உனக்கு எப்பயாவது ஏன்டா இவளை நாம கல்யாணம் பண்ணோம்னு நெனப்பு வரலாம். அப்படி வந்தா?" என்று அவள் முடிக்கும் முன்னே அவளின் மோவாயை பிடித்துத் தூக்கியவன்,
"நித்திம்மா எனக்கு 57 ஆகும் போது உனக்கு 60 ஆகலாம், ஏன் எனக்கு 77 ஆகும் போது உனக்கு 80 ஆகலாம். ஆனா உன்னை நான் முதன்முதலில் பார்த்தபோது எனக்கு உண்டான அந்த ஃபீல் இன்னமும் எனக்கிருக்கு நித்திம்மா. எப்பயும் இருக்கும். சில பேரைப் பார்த்ததுமே நமக்கு பிடிக்கும். யாரு என்ன என்ன மதம் என்ன ஜாதி என்ன வயசு என்ன ஊரு எதுவும் நமக்கு தெரியாது அண்ட் தெரியவும் வேணாம். அப்படிதான் நித்யா நீ எனக்கு, இதுக்கு மேல எப்படி உனக்கு நம்பிக்கை தரதுனு எனக்கு தெரியில நித்து" என்றவன் அவளின் இதழில் ஆழமாய் நீளமாய் முத்தம் வைத்தான்...

பிறகு என்ன ஒரு ஆறுமாதத்தில் வெகு விமர்ச்சியாக விவான்-நித்யா திருமணம் நடைப்பெற்றது. சந்தோசமாக ஆரமித்தனர், ஆனாலும் முன்கூட்டியே சில விஷயங்களை அவர்கள் பேசிக்கொண்டனர். அதனால் முடிந்த அளவுக்கு அவர்களின் சின்ன சின்ன டிஃபரென்சை பெரியதாகாமல் பார்த்துக்கொண்டனர். "விவா எனக்கு ஒரு ஆசை. ஆசையை விட வைராக்கிரம்னு வெச்சுக்கலாம்"
"என்ன நித்தி?"
"என் அப்பா சொன்னாரு நம்ம கல்யாணத்துக்கு வேலிடிட்டி மூணு மாசம்னு. சோ"
"சோ?'
"அவரு மூக்கை உடைக்குனும்"
"ஊம் சொல்லு தூக்கிடட்டுமா?"
"அடப்பாவி நான் உண்மையிலே மூக்கை உடைக்க சொல்லல,"
"பின்ன?"
"ஐ வாண்ட் பேபி"
"ஹாம்? என்ன சொன்ன?"
சிரித்தவள், "டேய் நீ இன்னும் சின்னப் பையன் என்பதை நொடிக்கொரு முறை நிரூபிக்கிறாய்"
விவான் முறைக்க,
"நாம சீக்கிரம் பேரெண்ட்ஸ் ஆகணும்"
"அதுக்குள்ளையா?'
"கண்டிப்பா"
"ஆர் யூ சூர்?"
"எஸ் டேம் சூர்"
"அப்புறோம் என்ன ஆச்சு?"- மௌனி
"அப்புறோம் என்ன சுவிஸ் போனோம். த்ரீ மந்த்ஸ்ல இதோ மேடம் (இளவேனிலை சுட்டி) வந்துட்டாங்க என் வயித்துல"
"ஓ ஓ"
"என் அப்பா மூக்கை உடைக்கவே ஆறு மாசத்துல நான் ரெண்டு பேரா வீட்டுக்கு போயிட்டு வந்தேன். அப்புறோமும் என் வீட்டுல ஏனோ விவானை சரியா மதிக்காத மாதிரி எனக்கு தெரிஞ்சது. அவங்களுக்கு நான் வேணும் என் குழந்தை வேணும் ஆனா விவான் வேணாம். சோ நான் என் பிரேக்னென்சிக்கு கூட என் வீட்டுக்கு போக விருப்பமே இல்ல, ஆனா அம்மா (லலிதா அம்மா) கட்டாயப்படுத்தி அனுபனாங்க. மேடமும் வெளிய வந்துட்டா. அல்மோஸ்ட் த்ரீ இயர்ஸ் ஆகிடுச்சு" அவள் சிரிக்க
"இப்பயும் விவானை உங்க வீட்டுல ஏத்துக்கலையா?"
"இல்ல இல்ல. இப்போ விவான்கிட்ட எல்லாம் ரொம்பவும் பணிவா மரியாதையா தான் பேசறாங்க. ஆனா எனக்கு தான் என் அப்பா பேசுன பேச்செல்லாம் மறக்க முடியில. அவரும் என்கிட்டே எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டுட்டாரு. எனக்கு தான் அவ சொன்னதையெல்லாம் மறக்க முடியல"
"அப்புறோம்?"
"அப்புறோம் என்ன? அவருக்கு யாரு வேண்டாத மருகமானா நெனச்சாரோ இன்னைக்கு அவன் தான் அவருக்கு ரொம்பவும் வேண்டியவர். பின்ன அவரு பையனுக்கு (நித்யாவின் தம்பி) வேலை வேற வாங்கிக்கொடுத்தான் இவன்"
"அப்போ உங்க அம்மா தம்பி?"
"அவங்க எல்லாம் பிரச்சனையே இல்லை. அவங்க எப்பயோ என்னைப் புரிஞ்சிக்கிட்டாங்க. விவானையும் அக்செப்ட் பண்ணிகிட்டாங்க"
"சூப்பர் அக்கா. செம்ம" என்று எல்லோரும் சொல்லி சிரிக்க எதற்கு சிரிக்கிறார்கள் என்றே தெரியாமல் இளவேனிலும் சிரிக்க அவளைப் பார்த்து எல்லோரும் சிரித்தனர்.
அப்போதான் என்ட்ரி கொடுத்தான் விவான், "என்னடா பண்றீங்க எல்லோரும்? நானும் இப்ப வருவீங்க இப்ப வருவீங்கன்னு பார்த்தா ஒரு பக்கியும் வரல?'
"கரெக்ட்டா ஹீரோ என்ட்ரி பிடிங்க பிடிங்க" என்றாள் மௌனி
"என்ன ஹீரோ?"
"மச்சான் இவ்வளவு நேரம் உன் கதைதான்டா ஓடிட்டு இருந்தது"- இளா
"என் கதையா?'
"நித்யா-விவான் காதல்கதை"
"நிஜமா?" என்று அவன் நம்பாமல் பார்க்க நித்யா தலையை ஆட்டினாள்,
அதுவரை அனேஷியாவிடம் இருந்த இளவேனில் தாவி தன் தந்தையிடம் வந்தாள், "வாங்க வாங்க என் தங்க புள்ள"
"அண்ணா அப்படியே பேச்சை மாத்தாதீங்க உங்க கிட்ட நிறைய கேள்வி கேட்கணும்" - பாரு
"கேளு"
"அதெப்படி பார்த்ததுமே காதல்?"
"பாரு உன் அண்ணனுக்கு இப்ப தானே கல்யாணம் ஆச்சு?"
"ஆமா அது எதுக்கு இப்போ?"
"காரணம் இருக்கு. பொண்ணு பார்க்க போனீங்க தானே?"
"ஆமா அரேன்ஜ்ட் மேரேஜ் தான்"
"அப்போவே கன்பார்ம் ஆகிடுச்சியில?"
"ஆமா அண்ணா"
"எவ்வளவு நேரம் உங்க அண்ணா பொண்ணை நேர்ல பார்த்திருப்பாரு?"
"ஒரு 10 நிமிஷம்"
"வெறும் 10 நிமிஷம் பார்த்து மட்டுமே ஓகே பண்ற அர்றேஞ்ட் மேரேஜ்ல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு ஆனா அதுவே லவ் அட் பர்ஸ்ட் சைட்ல மட்டும் இந்த மாதிரி ஈன வெங்காயம் கேட்பீங்க?"
"ஓகே ஓகே. கூல் கூல்"
"அடுத்த கேள்வி ரொம்ப சுவாரசியமான கேள்வி" என்றாள் இதி
"வாட் ஆர் தி அட்வான்டேஜ்ஸ் ஆப் மேரிங் ஏன் எல்டெர் ஒன்? (பெரிய பெண்ணை திருமணம் செய்வதில் உள்ள நன்மைகள் என்ன?)
"ஷி பேம்பெர்ஸ் யூ லைக் எ கிட்" (ஒரு குழந்தையைப் போல சலுகை கிடைக்கும்)
"ஓ!"
"ரொம்ப ரொம்ப கேரிங்கா பார்த்துப்பாங்க. அவ்வளவு லவ், ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கும்" அவன் சிரிக்க, நித்யாவும் சிரித்தாள்.
"சரி அப்போ டிஸ்அட்வான்டேஜ்ஸ்?'
"அதே தான். எனக்கு தான் தெரியும், சொல் பேச்சை கேட்கணும்னு இல்லைனா இப்படி தான். அப்படி இப்படினு அட்வைஸ் திட்டு ஏன் அடிக்கூட கிடைக்கலாம், நான் அடியெல்லாம் வாங்குவதில்லை அப்பா" என்று விவான் சிரிக்க
"நம்பிட்டோம்"
"ஓகே நித்யா அக்கா இப்போ அதே கேள்வி தான் உங்களுக்கு,'சின்னப் பையனை' (அதில் ஒரு அழுத்தம்) விவான் முறைக்க, "கல்யாணம் செஞ்சா அட்வான்டேஜ் டிஸ் அட்வான்டேஜ் என்ன?"
"அட்வான்டேஜ் என்னை கொஞ்சம் கேர்புல்லா பார்த்துப்பான், என் மேல கொஞ்சம் அதிக அக்கறை, என்கிட்டயே எல்லா ரெஸ்பான்சிபிலிட்டியும் தந்துடுவான். டிஸ்அட்வான்டேஜ் அடிக்கடி என் வயசை வெச்சி கிண்டல் பண்ணுவான். லைக் இதெல்லாம் யூத் மேட்டர் உனக்கு சொன்னா புரியாது, நான் 90ஸ் கிட் இதெல்லாம் உனக்கு பிடிக்காது இப்படி என்னைய அடிக்கடி வெறுப்பேத்துவான்" என்று சிரிக்க,
"சூப்பர்"
"கடைசி கேள்வி?"
"உங்களுக்குள்ள சண்டை வருமா?"
"அதிகமா" இருவரும் சிரிக்க
"நிஜமா?"
விவான் தான் மௌனியை அழைத்து, "சண்டைகள் வந்தா தானே சமாதானம் நடக்கும்" என்று கண்ணடிக்க, எல்லோரும் சிரித்தனர்.
அதற்குள் அங்கே இருந்த தியா தான், "நித்யா உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்? விவானா இல்லை இளவேனிலா?"
இதைக்கேட்ட இளவேனில் வேகமாய் வந்து நித்யா அருகில் அமர்ந்துக்கொண்டாள்.
"ஏன்டா" என்று அவனை முறைத்த நித்யா இளவேனிலைத் தூக்கி "அம்மாக்கு உன்னை தான்டா செல்லம் பிடிக்கும்" என்று சொல்லி விவானைப் பார்த்து ப்ளீஸ் என்பதைப்போல் செய்ய,
"ஏன்?"
விவான் ரகசியமாய் சொன்னான், "ஒரு நாள் இப்படித்தான் நான் விளையாட்டுக்கு உங்க அம்மாக்கு உன்னைய விட என்னைய தான் பிடிக்கும்னு சும்மா சொல்லிட்டேன். கோவிச்சிட்டு அவங்க அம்மா கிட்ட போய் கேட்டு இருக்கா. அவளும் அதே சொல்ல ஒரே அழுகை. அப்போ என்ன உனக்கு பிடிக்காதானு? அப்பப்பா சமாதானம் செய்யறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு" என்றான் விவான்.
"அடப்பாவிங்களா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பச்ச மண்ணை அழவெச்சி இருக்கீங்க?"
அதற்குள் நித்யாவிற்கு லலிதா அம்மா அழைக்க இளவேனில் தான் தன் தாத்தா பாட்டியிடம் கொஞ்ச நேரம்பேசிவிட்டு நித்யாவிடம் போன் தர, அவர்கள் இன்னமும் சாப்பிடவில்லை என்றதும் செல்லமாய் திட்டியவர், பிறகு நித்தியாவிடம், "நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே நித்திம்மா?"
"ஐயோ சொல்லுங்க"
"எப்போ அடுத்த குழந்தை பிளான் பண்ணியிருக்கீங்க?"
"அம்மா!" அவள் சத்தமாக கேட்டு அதிர,
"ஏன் இவ்வளவு ஷாக்?"
"இல்லம்மா அது..."
"எனக்கு புரியுது இது மேனர்ஸ் இல்ல தான். இருந்தும் சொல்றேன், அன்னைக்கே ஒருநாள் என் பேத்தி என்கிட்டே கேட்டா பாட்டி பாட்டி எனக்கு ஏன் தம்பிப்பாப்பா இல்லனு?"
அவள் இளவேனிலை முறைக்க,
"அதுக்காக மட்டும் கேட்கல. ஒரு வேளை இன்னைக்கு காலகட்டத்துக்கு எக்கனாமிகளா யோசிக்கறதா இருந்தா நமக்கு அந்த அவசியம் இல்ல. கடவுள் புண்ணியத்துல நல்ல நிலைமையில தான் இருக்கோம். உன்கிட்ட சொல்ல என்ன? விவானுக்கு அப்புறோம் இன்னொன்னு வேணும்னு எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா? ஆனா விவான் கிடைச்சதே எனக்கு பெரிய லக். நீங்க அப்படியில்லை அதுதான் சொன்னேன். திங்க் அபௌட் இட். இளவேனிலுக்கும் மூணு வயசு ஆகுது..."
ஏனோ நித்யாவிற்கு தான் ஒரு மாதிரி எம்பேரெசிங்கா இருந்தது,
"நான் உங்க பிரைவேட் லைஃப்ல நுழையறதா நெனச்சா சாரி"
"ஐயோ அப்படியெல்லாம் இல்லை அம்மா"
"இல்ல விவான் கிட்ட வேணுனா நான்?"
"ஐயோ அம்மா தயவு செஞ்சு வேணா, சும்மாவே அவன் எள்ளுன்னா எண்ணையா இருப்பான் இதுல நோ" என்று சிரித்தாள்,
"சோ அப்போ நோ தான்..."
"ஆக்சுவல்லி எனக்கும் அந்த பிளான் இருக்கு"
"ஹாப்பி. அவன் கிட்ட கொடு"
"வேணாம் நீங்க அப்புறோம் அவன்கிட்ட பேசிக்கோங்க" அவள் வைக்க
"என்ன நித்து?" என்ற மிருக்கு,
"ஒன்னும் இல்ல..." என்றாள்.
வண்டி வைசாக் நெருங்க இந்த சந்தோசமான மனநிலையைக் கெடுக்கவே மீண்டும் விவானுக்கு அழைப்பு வந்தது. எடுத்தவன் அந்த புறம் சொன்னதைக் கேட்டு கடும் கோவம் கொண்டவன் வேகமாய் உள்ளே சென்றான்.
இப்படி திடீரென இவ்வளவு கோவமாய் அவன் போவதைப் பார்த்த எல்லோரும் அதிர்ச்சியாக ஹேமா மட்டும் அவன் பின்னாலே போனான்,
அங்கே விவியனுடன் பேசிக்கொண்டிருந்த துவாராவை நெருங்கியவன் துவாரா சட்டையைப் பிடித்து இரண்டு கன்னத்திலும் பளார் பளார் என்று வைக்க நடப்பது புரியாமல் பார்த்த விவியன் இருவரையும் பிரிக்க அதற்குள் ஹேமாவும் வந்துவிட அவன் விவானை பிடிக்க,
"டேய் எதுக்குடா அடிக்கற அவனை இப்படி?"
கோவம் கொண்டவன், மீண்டும் அவனை அடிக்க போக,
"விவான் ஸ்டாப் இட். எல்லோரும் பார்க்கறாங்க"
"பார்க்கட்டும் அப்போவாது எதாவது இருக்கானு பார்க்கலாம்"
"என்ன ஆச்சுடா?"
"இந்த நாயி கீர்த்தனா கிட்ட என்ன சொல்லியிருக்குனு தெரியுமா?"
"என்ன டா"
கொஞ்சம் பேக் வேர்ட்
அங்கே அவர்கள் எல்லோரும் விவான் நித்யா காதல் கதையைக் கேட்டுக்கொண்டிருக்க அதில் பங்குபெறாமல் இருந்த விவியன் சித்தாராவுடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருக்க விவான் தான் துவாராவிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, "சரிடா நான் போய் பாப்பாவைப் பார்த்துட்டு வரேன்" என்று இங்கே வந்துவிட, தனியே நின்றுக்கொண்டிருந்தான் துவாரா.
அவனின் செல்போன் அடிக்க எடுத்துப் பார்த்தவன் கீர்த்தனா தான் அழைக்கிறாள் என்று தெரிந்து அவன் அட்டென்ட் செய்யலாமா இல்லை வேணாமா என்று யோசிக்க அதற்குள் கால் கட் ஆனது. மீண்டும் அழைப்பு வந்தது,
"ஹலோ"
"போன் பண்ணாக் கூட எடுக்க மாட்டியா?"
"என்ன விஷயம் கீர்த்தி? சாப்பிட்டையா? மாப்பிள்ளை கிளம்பியாச்சா? பையன் ஸ்கூலுக்கு போயிட்டானா?"
"அவ்வளவு தான் கேட்பியா? வேற எதுவும் இல்லையா?"
"அவ்வளவு தான் வேற என்ன கேட்கணும்?"
கீர்த்திக்கு பயங்கர கோவம், இருந்தும் அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாகவே பேசினாள், "அப்பாக்கு ரொம்ப"
"நிறுத்து கீர்த்தி, வேற ஏதாவது பேசு?"
ஏனோ கோவத்தில், "ஏன்டா அவரைப் பற்றி பேசக் கூட கூடாதா? அவரு எனக்கு மட்டும் அப்பா இல்ல உனக்கும் தான், ஞாபகம் இருக்கா இல்ல அதும் இல்லையா?"
"எனக்கு அப்பான்னு யாருமில்ல"
"டேய்" ஏனோ அவளுக்கு பயங்கர கோவம், "அப்படி என்னடா பண்ணாரு அவரு? உன்னைப் படிக்க வெச்சது, நீ சாப்பிட்ட சாப்பாடு டிரஸ் எல்லாமும் அவரு தான் கொடுத்தாரு. அப்போல்லாம் எங்க போச்சு உன் வீராப்பு?"
"பெத்தா பெத்த கடமைக்கு அதெல்லாம் செஞ்சு தான் தீரணும்..."
"ஓ அப்போ உன் வழிக்கே வரேன், அப்போ பெத்த கடமைக்கு நீயும் தானே அவரைப் பார்த்துக்கணும்"
"அது தான் நீ இருக்கியே"
"எனக்கு மட்டும் என்ன தலையெழுத்து? (இந்த வார்த்தையை அவள் எவ்வித உள் அர்த்தத்தோடு எல்லாம் சொல்லவில்லை. காலத்துக்கும் அவள் தன் தந்தையை வைத்து பார்த்துக்கொள்ள அவளுக்கு சம்மதம் தான். இருந்தும் துவாராவை மடக்கவே இப்படி பேசுகிறாள்)
"உன்னால முடிஞ்சா பாரு கீர்த்தி இல்லைனா உன் அப்பாவை எங்கேயாவது..." என்று அவன் முடிக்கும் முன்னே பயங்கர கோவம் அவளுக்கு, கோவத்தில் அவள் திட்ட அவளுக்கு உடலே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அப்போது தான் நன்கு கவனித்தாள் அவன் சொன்ன 'உன் அப்பா' என்ற வார்த்தையை,
"ஓ என் அப்பா? அப்போ உனக்கு யாரு அப்பா மிஸ்டர் துவாரகேஷ்? உன் இனிஷியல் என்ன?" என்று அவளும் கோவமாய் வினவ,
"கீர்த்தி!" என்று உச்சஸ்தானத்தில் அவன் குரல் ஒலிக்க அவனுக்கும் அதிகமாக கோவம் வந்தது,
"கோவம் வருதா?"
"எனக்கு ஒன்னும் இவரை என் அப்பான்னு சொல்லிக்க ஆசையில்லை. என்ன பண்ண நம்ம அம்மா இவரு தான் உன் அப்பான்னு அடையாளம் காட்டிட்டாங்க" என்று அவன் சொல்ல கோவத்தில் அவனை கண்டபடி திட்டி அழுது காலை கட் செய்து விட்டாள் கீர்த்தி.
பிறகு தான் விவானுக்கு அழைத்தாள் கீர்த்தி. அவள் அழ அவளின் குரலிலே ஏதோ தவறு என்று உணர்ந்த விவான் எல்லாமும் கேட்க அவளை சமாதானம் செய்துவிட்டு நேராக வந்தவன் துவாராவை கண்டபடி அடித்தான். (பயணங்கள் முடிவதில்லை...)
 
Top