Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 13

Advertisement

praveenraj

Well-known member
Member
நித்யாவிடம் கதைத்துக் கொண்டிருந்தான் விவான். அவளின் கையை எடுத்து அவன் உள்ளங்கைக்குள் வைத்துக்கொண்டு அருகருகே அமர்ந்துக் கொண்டு இருந்தனர். இவளும் எதையும் அவனிடம் கேட்கவில்லை. அவனும் எதையும் சொல்லவில்லை. நீண்ட மௌனம். இருவருக்குமே இது இப்போது அவசியம் தேவை என்று நினைத்துக்கொண்டிருந்தனர். சட்டென ஞாபகம் வந்தவளாய் விவானிடமிருந்த அவளின் கையைப் பிரிக்க முயல,
அவன் திரும்பி முறைத்தான்.
"ஹே டைம் ஆச்சு பாப்பா பசில அழுவா. நான் போறேன்"
"அதெல்லாம் வேணாம். இந்நேரம் சாப்பாடு ஊட்டியிருப்பாங்க"
"யாரு?"
"ஹேமா இல்லனா இளங்கோ இல்ல பாரு யாராவது. சொல்லிட்டேன்."
இப்போது திரும்பி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் நித்யா.
"என்ன நித்து இப்படி புதுசா பார்க்கற மாதிரி பார்க்கற? நான் உன் விவான் தான்"
"கரெக்ட்டா 'சின்னப்பையா' அதில் ஒரு அழுத்தம். அவள் அடக்கப்பட்ட சிரிப்புடன் அதைச் சொன்னாள். இப்படி சொன்னால் மட்டும் விவானுக்கு கொஞ்சம் கோவம் வரும். ஆனாலும் அவனை அடிக்கடி இப்படி தான் டீஸ் பண்ணுவாள்.
"அமைதியா இரு நித்தி. ப்ளீஸ் டோன்ட் ஸ்பாயில் தி மூட்" என்றவன் அவளின் தோளில் சாய்ந்துக்கொண்டான். இப்போது நித்யாவிற்கு தான் ஏதோ தவறாக பட்டது. அவன் ரொம்ப குழப்பத்தில் இருந்தாலோ இல்லை டென்ஷனில் இருந்தாலோ தான் இப்படி நடந்துக்கொள்வான்.
"என்ன ஆச்சு விவா?"
"ஒண்ணுமில்ல"
"பொய் சொல்லாத. என்கிட்டே சொல்லு"
"இந்த துவாராப் பையன் ஏன் இப்படி இருக்கான்? கீர்த்தி வேற போன் பண்ணி அழுதுட்டா" அவன் எல்லாமும் சொன்னான்.
நித்யாவிற்கு பயங்கர கோவம் வந்தது. அவளுக்கு இந்த பூசி முழுகுறது எல்லாம் பிடிக்காது. ரொம்பவும் ஸ்ட்ரெய்ட் பார்வர்ட். அவள் எழ முயற்சிக்க,
அதைப் புரிந்தவன், "இப்போ வேணாம் நித்திமா. அப்புறோம் கேட்கலாம்"
"அவன் என்ன நெனச்சிட்டு இருக்கான் மனசுல? என்ன அவன் என்ன பண்ணாலும் யாரும் கேட்கமாட்டாங்கனு நெனைக்கறானா? நீ வேணுனா ஃப்ரண்டு ஃப்ரண்டுனு உருகு நான் அப்படியெல்லாம் இருக்க மாட்டேன். எனக்கும் அவன் ஃப்ரண்ட் தான். இல்லனு சொல்லல ஆனா இன்னைக்கு எனக்கு பதில் தெரியணும்"
"நித்தி நித்தி ப்ளீஸ் நித்தி இப்போ எதுவும் பேசவேணாம் ப்ளீஸ். நீ ஏதாவது கேட்கப்போய் கிறுக்கன் மாதிரி நான் வரல நீங்களே போயிட்டு வாங்கனு சொல்லி இறங்கிப்போனாலும் போயிடுவான். கொஞ்சம் பொறுமையா இரு ப்ளீஸ்"
அவளும் யோசித்தாள். "செஞ்சாலும் செய்வான். நாயி" என்று சொல்ல,அவள் கோவமாய் இருக்க அவளை சீண்ட எண்ணி அவன் கைகள் அவள் இடையில் கோலமிட,
"டேய் விடுடா என்ன" என்று அவள் எழப் போக, நிறுத்தியவன் முத்தம் கொடுக்க நெருங்க நித்யாவும் ஒத்துழைத்தாள். உடனே அவள் எழ அவனும் எழுந்தான். அப்போது அவளின் தோழிகளிடமிருந்து அவளுக்கு அழைப்பு வர அவள் தங்கள் கம்பார்ட்மென்டுக்கு போவதாக சொல்லிவிட்டு விடைப்பெற்றாள்.
விவான் தான் அங்கேயே கொஞ்ச நேரம் அமர்ந்திருக்க அப்போது அவனுக்கு அழைப்பு வந்தது,
துஷ்யந்த் தான் அழைத்தான். "என்னடா நைட் போன் பண்ணியிருக்க? என்ன மேட்டரு?"
"எங்க இருக்க? ரெடியானு கேட்கத் தான் போன் பண்ணேன்"
"அதெல்லாம் ஓகே. இங்க வேற கிளைமேட் வேற சரியில்லை. புயல் கரையைக் கடக்குதாம்"
"பார்த்தேன் பார்த்தேன்.விடு எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்"
"அப்படிங்கற? சரி" கொஞ்ச நேரம் பேசிவிட்டு விவான் எழுந்தான்.
........................................................
கேக் எடுத்துக்கிட்டு வந்த துவாரா அதை சரித்திராவிடம் எப்படி தருவதென்று யோசித்துக்கொண்டிருந்தான். பின்னே அவளின் பெயரைக் கூட அவள் வாயிலாக இன்னமும் கேட்களையே. இருந்தும் எடுத்து வந்தான். அங்கே படுத்துக்கொண்டிருந்த அவளின் தாத்தாவிடம் நீட்டியவன், அவளைப் பார்க்க,
"என்னது?"
"கேக். ஃப்ரண்ட் பர்த் டே அதுதான். இவரு சாப்பிடலாம் இல்ல? ஒன்னும் ப்ரோப்லேம் இல்லையே?"
அவளோ, "இல்லைங்க எதுவும் வேணாம்" என்று அவள் மறுக்க இவனுக்கு தான் புஷ் என்று ஆனது. "ஏங்க என்னைப் பார்த்தா இதுல மயக்க மருந்து கலந்து தரவன் மாதிரியா இருக்கு?" அதில் உண்மையான ஆற்றாமை. பின்னே எவ்வளவு ஆசையாய் எடுத்து வந்தான்?
"ஐயோ நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை"
"இருங்க நான் சாப்பிட்டு காட்டுறேன்" என்று அவனிடம் இருந்த கேக்கை எடுத்து சாப்பிட்டான்.
சரித்திராவுக்கு தானொரு மாதிரி போக,"கொடுங்க" என்று வாங்கிகொண்டாள்.
"நான் கேட்கறேன்னு தப்பா எடுத்துக்க வேணாம். எங்க போறீங்கன்னு தெரிந்துக்கொள்ளலாமா?"
"கௌஹாத்தி வரைப் போகணும்" அவனுக்கும் மனம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. பின்னே அவர்களும் அங்கே தானே போகவேண்டும்.
"உங்களுக்கு என்னைத் தெரியுமா?" அவள் சாதாரணமாக தான் கேட்டாள் .
"இல்ல. ஏன் கேட்டீங்க?"
"இல்ல சும்மா தான்"
"பரவாயில்லைச் சொல்லுங்க"
"இல்ல கேக்கெல்லாம் தரீங்களே அதுனால தான் கேட்டேன்"
"ஏங்க சும்மா தான்" துவாராவுக்கே ஆச்சரியமாக போனது. 'தான் ஒரு பெண்ணிடம் இவ்வளவு சகஜமாக பேசுகிறேனா?' என்று. பின்னே அவன் மிக சமீபங்களில் ஒரு பெண்ணிடம் பேசுவதே மிகவும் அரிதாகிப் போனது. அவன் பேசும் பெண்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம். கீர்த்தி (அதுவும் இப்போது அவ்வளவு சகஜமில்லை), நித்யா, மிரு, பாரு அவ்வளவு தான். இதித்ரி மௌனியிடம் கூட அவ்வளவு சகஜமாக அவன் பேசமாட்டான். ஏனோ இப்போது இந்த குறுகிய வட்டத்தில் இவளும் இருக்கவேண்டுமென்று மனம் விரும்பியது.
"எங்க போறீங்க?" என்று கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அவள் கௌஹாத்தி என்று சொன்னதுமே அந்த பெரியவரின் முகம் மாறியது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஓரளவுக்கு சகஜமாக இருந்தவர் இப்போது கொஞ்சம் அசௌகரியம் கொண்டார். துவாரா ஒரு கீன் (keen - உன்னிப்பாக) அபிசர்வர். அவன் எல்லாமும் நோட் செய்துக்கொண்டிருந்தான். ஆனால் இவளோடு அவனுக்கு ஒரு கனெக்சன் இருப்பதாய் அவன் உணர்ந்தான். காரணம் தெரியவில்லை.
அவள் ஹேண்ட் வாஷ் செய்ய போக இவன் யோசனையில் இருக்க,
அவரையே பார்த்தான். அவரோ ஒரு மாதிரி பிரார்த்தித்தார். அவரின் எண்ணவோட்டத்தை துவாராவால் என்னவென்று சொல்ல முடியவில்லை. வந்தவள் அவரின் முகத்தைப் பார்த்து, "தாத்தா எதையும் யோசிக்காதான்னு எத்தனை தடவை சொல்றது? கம்முனு படுங்க" என்றாள்.
"உனக்கு கொஞ்சம் கூட வருத்தமோ பதட்டமோ இல்லையா சரு?"
"நான் எதுக்கு வருத்தப்படனும்? இல்ல அனாவிசியமா பதட்டம் படனும . ஞாபகம் வெச்சிக்கோ தாத்தா, நான் உனக்கு கூட துணைக்கு தான் வரேன். வேற எதுவும் இல்லை. வீணா கற்பனைப் பண்ணிக்காதீங்க அவ்வளவு தான்" அவள் சற்று காட்டமாகச் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டாள். இது துவாராவிற்கே ஆச்சரியமாக போனது. 'இவ்வளவு கடுமையா பேசுகிறாளே? இப்போது இவர்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்' என்று ஆவல் மட்டும் அதிகரித்தது.
................................................................
அங்கே ஜிட்டன் தான் ஜெசிந்தா, பெனாசிர், ரேஷா மூவருக்கு கேக் தர ஜெசி வாங்கிக்கொண்டு விஷயம் என்னவென்று கேட்டாள். 'இப்போது மற்ற இருவரும் இவன் யாரென்று புரியாமல் விழிக்க' மேலோட்டமாய் அவனைப் பற்றிச் சொன்னாள்.
"கங்கிராட்ஸ் மச்சி. அப்போ ஒர்க்குக்கு ஒர்க்கும் ஆச்சு, டூருக்கு டூரும் ஆச்சு ஹனிமூனுக்கு ஹனிமூனும் ஆச்சு, ஒரே கல்லுல மூணு மாங்கா என்று பெனாசிர் சொல்ல ரேஷா விழுந்துச் சிரித்தாள். ஜெசிந்தாக்கும் சிரிப்பு வந்தது. கூடவே வெட்கம் கோவம் எல்லாம் வர, ஜிட்டனும் சிரித்தான். ஆனாலும் அவர்களைப் பார்க்க அவளே அவர்களை இன்றோ கொடுத்தாள்.
"அண்ணா அப்போ நீங்க எல்லோரும் காலேஜ் ஃப்ரண்ட்ஸ் அப்படித்தானே?"
"ஆமா. பட் சில வெளி ஆளுங்களும் இருக்காங்க"
"செம ஜாலியா இருக்குமில்ல?"
"கண்டிப்பா"
என்னமோ நினைத்தவள், "அண்ணா சாரி" என்று ஜிட்டுவிடம் சொல்ல,
"ஏம்மா நானே அதை மறந்துட்டேன், நீ வேற ஏன் அதை நினைவு படுத்துற? கண்ணெல்லாம் புண்ணாயிருக்கு" என்று அவன் கண்ணைத் தேய்க்க, வந்த சிரிப்பை அடக்க முடியாமல் ஜெசி சிரித்தாள்.
அவன் பாவமாய் பார்க்க,
"சாரி சாரி அண்ணா"
இப்போது மீண்டும் பெனாசீர், ரேஷா என்னவென்று கேட்க அவள் சொல்ல கொஞ்சம் அந்த பெட்டியே சிரிப்புக் கோலமானது.
"கேக் கொடுக்க வந்தது ஒரு குத்தமா? அதுக்கு என்னை இப்படி பேக்கு ஆக்கிடீங்களே?" என்று அவன் சும்மா சொல்ல ,
மூவரும் எங்கே அவன் கோவித்துக்கொண்டுவிட்டானோ என்று நினைத்து சாரி கேட்க அவன் தான் கேசுவலாய் இருந்து, "நானா? கோவமா? ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலையே?" என்று வினவினான்.
கொஞ்சம் பேசிவிட்டு அவன் ஹேமாவைத் தேட அவன் இங்கே இல்லாததால் இவன் அவனைத் தேடிச் சென்றான்.
.......................................................................
ஹேமா, இளங்கோ, தியா மூவரும் சேர்ந்து எவ்வளவோ மன்றாடியும் இளவேனிலை சாப்பிட வைக்க முடியவில்லை. அவள் துறுதுறுவென இருக்க திண்டாடிப் போனார்கள் பாய்ஸ் மூவரும்.
"ஸபா முடியில டா" என்று இளங்கோ சொல்ல ,
"பாஸ் இப்போவே ப்ராக்டிஸ் பண்ணிக்கோ நாளைக்கு உனக்கு இது ரொம்ப அவசியம் உதவும்" என்று தியா இளங்கோவை வார, அதற்கு ஹேமா ஹைபை கொடுத்தான்.
இவர்கள் மூவரும் சிரிக்க எதற்கு சிரிக்கிறார்கள் என்றே தெரியாமல் பார்த்த இளவேனில் அவளும் சிரிக்க,
"எங்கள இப்படி சிரிப்பா சிரிக்க வெச்சிட்டு நீயும் சிரிக்கிறியா? உன்ன" என்று ஹேமா துரத்த அவளும் ஓடினாள் ஓடினாள் அவர்களின் கம்பார்ட்மெண்ட் வரை ஓடினாள்.
அவள் இப்படி மூச்சிரைக்க ஓடிவர பின்னாலே வந்த மூவரையும் பார்த்து பெண்கள் எல்லோரும் சிரிக்க,
"எம்மா தாய்களே தயவு செய்து இவளுக்கு சாப்பாடு மட்டும் ஊட்டச் சொல்லாதீங்க, முடியில, இதுவரை 6 கதை சொல்லியாச்சு, ஆனா 6 வாய் கூட வங்கல" என்று பாய்ஸ் பிராது வாசிக்க,
"கொடுடா இங்க" என்று வாங்கிய மிரு அவளுக்கு ஊட்ட அவள் அமைதியாக வாங்கினாள். உன்ன என்று ஹேமா இளவேனிலைத் தூக்கி மேலே சுற்ற அவள் சிரித்தாள். இதையெல்லாம் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அனேஷியா.
கொஞ்சம் பேக்வெர்ட் ;
விவானிடம் பேசிவிட்டு நித்யா அவள் கம்பார்ட்மென்டுக்கு வர, "வெல்கம் பர்த்டே கேர்ள்" என்று ஆரவாரமிட, அனேஷியா எழுந்த வாழ்த்துச் சொல்லி ஹக்கித்தாள். பின்பு அவர்கள் எல்லோரும் சேர்ந்து நித்யாவை ஓட்டினார்கள்.
"என்ன ஒரே ரொமான்ஸ் போல?" என்று மிரு ஆரமிக்க, மீண்டும் எல்லோரும் கோரஸ் பாட, நித்யாவிற்கு தான் என்னவோ போல் இருந்தது.
ஹேமந்த் இளவேனிலைத் தூக்கி மேலே சுற்ற இதையே பார்த்துக்கொண்டிருந்த அனேஷியாவின் முகத்தில் ஒரு வித உற்சாகம் தென்பட அதை பெண்கள் எல்லோரும் தவறாமல் நோட் செய்தனர். அவன் மேலும் அவளிடம் விளையாட,
"டேய் இப்போ தான் பாப்பா சாப்பிட்டா சோ தூக்காத, கீழ இறக்கிவிட்டு விளையாடு ஹேமா" என்றாள் மிரு. அவனும் அவளை கீழே இறக்கிவிட்டான். அவள் உடனே ஓடி ஒளிய ஏனோ அனேஷியா அவளைப் பிடிக்க முதலில் தயங்கியவள் திரும்பி நித்யாவைப் பார்க்க, "போடா ஆண்ட்டி தான் ஒன்னும் பண்ண மாட்டாங்க" என்று சொல்ல அவள் அனேஷியாவிடம் செல்ல ஏனோ அவளை எடுத்து முத்தம் வைத்தாள். ஹேமா தியா இளங்கோ உட்பட பெண்கள் எல்லோரும் அவளைப் பார்த்தனர். பாய்ஸ் அவளை யாரென்று தெரியாமல் பார்க்க அவளை இன்றோ செய்தனர்.
"ஓ இவங்களுக்குத் தான் சாப்பாடு சேர்த்து ஆர்டர் பண்ணச் சொன்னீங்களா?"
"ஆமா"
"ஒன்னும் பிரச்சனை இல்லையே?"- அனேஷியா
"ஏங்க இதுல போய் என்னங்க 13 பேருக்கு ஆர்டர் பண்ணப் போறேன் இப்போ 14 அவ்வளவு தானே?"
"தேங்க்ஸ்"
"அப்புறோம் இவங்க தான் ஜெசிந்தா ஓட பாஸ்" பாரு,
"ஓ அப்படிங்களா? சூப்பர். இப்போ ரொம்ப நெருங்கி வந்துட்டிங்க அப்புறோம் என்ன?"- தியா
"தேங் யூ. உங்க கேங்ல என்னையும் சேர்த்துகிட்டத்துக்கு"
"ஏங்க மெதுவா சொல்லுங்க. அப்புறோம் நாம ஏதோ கொலைகார கேங்குனு மத்தவங்க நெனச்சிக்கப் போறாங்க" என்று சொல்ல எல்லோரு கொஞ்சம் கலகலக்க,
"நாம கொலைக்காரங்களா? கொலைகாரங்களுக்கு உண்டான மரியாதை போச்சேடா உன்னால?"
மீண்டும் எல்லோரும் சிரித்தனர்.
"எனக்கொரு உண்மைத் தெரிஞ்சாகணும்" என்று மௌனி மீண்டும் ஆரமிக்க,
"நீ இன்னும் அதுல இருந்து வெளிய வரலையா குல்பி? போ ஏ குளிச்சிட்டையா?"
"என்ன உண்மைடா?"- தியா
"அதுவா நித்யா-விவான் லவ் ஸ்டோரி தெரியனுமாம்"
ஏனோ நித்யாவுக்கு ஒரு மாதிரி வெட்கம் வர, "நல்ல விஷயம் தானே?" மணியைப் பார்த்தவர்கள் "எப்படியும் நமக்கு லன்ச் வர இன்னும் 2ஹௌர்ஸ் இருக்கு. அதுவரைக்கும் டைம் பாஸ் ஆகட்டுமே சொல்லுங்க" - இளங்கோ,
"என்னது சொல்லுங்கவா? டேய் நீயும் தானே இவங்க காதலுக்கு தூது போனவன்? என்னமோ ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி சொல்ற?" - ஹேமா
"என்னைய விட இதுக்கு ஏத்த ஒரு ஆள் இருக்கான் இருங்க கூப்பிடுறேன்" என்று சொல்லி அவன் அழைக்க,
அவனின் முதுகை யாரோ சொரிய திரும்பியவன் அங்கே ஜிட்டனைக் கண்டு, "வா டா உனக்குத் தான் போன் பண்ணேன் நீயே வந்துட்ட"
"எல்லாம் கேட்டேன் கேட்டேன்"
"அப்போ சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்" -மௌனி
"சொல்லலாம் சொல்லலாம் ஆனா கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா?"
"என்ன செலவு?"
"எனக்கு இப்போ பசிக்குது கொஞ்சம் கொறிக்க எதாவது வேணும்"
உடனே மௌனி அனைத்து ஸ்நேக்ஸ்சும் எடுத்து நீட்ட அவன் சாப்பிட ஆயத்தமாக,
"இப்போ சொல்லப்போறீங்களா இல்லையா?"
"ஓகே எல்லோரும் அப்படியே கொஞ்சம் மேலப் பாருங்க"
"ஏன்?"
"காலங்காலமா தமிழ் சினிமால பிளாஷ்பேக்குனா இப்படி தான் எல்லோரும் மேலப் பாக்க அங்க ஒரு கொசுவத்தி சுருள் சுத்தும். அதுதான்"
"அண்ணா கடிக்காதீங்க ப்ளீஸ் சொல்லுங்க சொல்லுங்க"
"அன்னைக்கு ஆகஸ்ட் மாசம், அந்த ஆடிட்டோரியம் வண்ணமயமா இருந்தது. ஒரே பலூன் கலர்ஸ்னு. அப்போ அன்னைக்கு தான் அந்த காலேஜ் ப்ரெஷர்ஸ் டே இனாகுரேஷன். எப்பா ரைட்டரு கொஞ்சம் அந்த ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே சாங்க பேக் கிரௌண்ட்ல போடுப்பா கொஞ்சம் கரெட்கா இருக்கும்" (நீ மூடிட்டு கதையைச் சொல்லு டா ஜிட்டா)
"ரைட் விடு. நீ ஒருத்தன் தான் என்னையத் திட்டாதவன் இப்போ நீயும் சேர்ந்துட்ட ஓகே"
"அப்போ சுற்றி எங்கப் பார்த்தாலும் மக்கள் கூட்டம். அது ஒரு காலம். என்ஜினீரிங் படிச்சா லட்ச லட்சமா சம்பாதிக்கலாம்னு எல்லோரும் நம்பிட்டு இருந்த காலம். அப்போ நல்லா குண்டா ஒரு பையன் அவங்க பேரண்ட்ஸோட இருந்தான்" ஹேமா உடனே அவனின் தலையைக் கொட்டினான்.
"எங்க அப்பன் குதிர்குள்ள இல்லனு நீயே சொல்லிட்ட, ரைட் விடு"
எல்லோரும் சிரித்தனர். "அப்புறோம் அங்க ஒருத்தன் அவங்க அப்பா கூடவே பம்மிட்டு அவருக்குத் தெரியாம அங்க இருந்த பொண்ணுங்களை எல்லாம் சைட் அடிச்சிட்டு இருந்தான்"
"செபாவா?" - இளா
"அவனே அவனே"
"அப்புறோம் அந்த கூட்டத்திலே ரொம்பவும் டீசெண்டா ஸ்டைலா யங்கா யூத்தா ஸ்மார்ட்டா பணிவா குணமா அழகா..."
எல்லோருக்கும் புரிந்தது அவன் யாரைச் சொல்லுகிறான் என்று, இருந்தும் யாரும் கண்டுக்கொள்ளாமல் இருக்க,
"நம்ம விவான் அண்ணா வா?" -மௌனி
முறைத்தவன், "இல்ல"
"அப்போ துவா?"
"இல்ல"
"அப்போ தியா?"
"ஏய் நான் தான் அது" என்று ஜிட்டு சொல்ல,
ஹாம் என்று கண்களைத் தேய்த்துக் கொண்டு, "போடா" என்றவள் "எனக்கு கதையே வேணாம்" என்றாள் மௌனி. இப்போது எல்லோரும் ஆரவாரமிட,
"நீ கூட என்னைய கலாய்க்கிற? பார்த்துக்கறேன், ஆமா இப்ப பேச்சுவாக்குல என்னைய டானு சொன்ன?"
"ஒரு ப்ளௌல வந்திருக்கும், நீங்க கதையைச் சொல்லலைனா கெட்ட வார்த்தைக் கூட வரலாம்"
"அப்புறோம் இன்னொருத்தன் தீவிரமா அவன் குடும்பத்தோட இருந்தான், அவன்" என்று நிறுத்த எல்லோரும் யாரென்று பார்க்க,
"நித்து என்ன முழிக்கற? உன் புருஷன் தான்" ஏனோ நித்துக்கு வெட்கம் வர, "அப்புறோம் அன்னைக்கு பங்க்சன் முடிஞ்சு எல்லோரும் ஹாஸ்டல் போனோம். போனா என் ரூம்ல என்கூட மூணு பக்கிங்கல போட்டிருந்தாங்க"
இப்போது இளா அவனைக் கொட்ட,
"தொப்பி தொப்பி. இது ஒன்னு கவி ஒன்னு (கவியரசன் அவங்க கூட படிச்சவன். இந்த கதையில் நேரிடையாக வரமாட்டான்) மூணாவது தான் இந்த கதையின் ஹீரோ விவான்.
"ஏஸ்யூசுவல் எல்லோரும் நல்ல படியா பார்த்து பேசி கொஞ்சம் கொஞ்சம் ஃப்ரண்ட்ஸ் ஆனோம். டேஸ் அப்படியே போச்சு"
"ஆமா உங்களுக்கு விவான் லவ் ஸ்டோரி மட்டும் தான் வேணுமா? இல்ல இப்படியே போலாமா?"
"பர்ஸ்ட் லவ் ஸ்டோரி சொல்லுங்க மத்ததெல்லாம் அப்புறோம் பேசலாம்"
"ஓகே, அதுக்கு நாம டைரெட்டா செகண்ட் இயருக்குப் போகணும். போலாம்"
"எங்க ஹாஸ்டல்ல அடிக்கடி எதாவது போட்டி நடக்கும். குறிப்பா மெஸ்ஸுல சாப்பிடறதுல. அன்னைக்கு எங்க மெஸ்ல இட்லி போட்டாங்க. இன்னமும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அப்போ எதேர்ச்சையாக பெட் வந்தது. யாரு அதிக இட்லி சாப்பிடுறாங்கனு பார்க்கலாம்னு"
"நாங்க எல்லோரும் சாப்பிட ஆரமிச்சோம். நாங்கனா நான், விவான், செபா, இளங்கோ ஹேமா, துவாரா எல்லோரும்" (தியா - டேஸ்காலர்)
"போட்டியில ஜெயிக்கறவனுக்கு மத்தவங்க எல்லோரும் சேர்த்து அந்த வாரம் முழுவதும் ஸ்னேக்ஸ் வாங்கித் தரணும். இது எங்களுக்குள்ள அடிக்கடி நடக்கும் போட்டி தான்"
"7 ஓட துவா வெளியேறிட்டான். 8 ஓட உன் ஆளும் குய்ட் பண்ணிட்டான்" இளங்கோ சிரிக்க, "நான் 9 சாப்பிட்டேன் அதுக்கு மேல முடியில" பாரு தான் ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். பின்னே அவன் இப்போதெல்லாம் 4க்கு மேல் சாப்பிடுவதே இல்லையே. "இப்போ நான் ஹேமா செபா மூணு பேருதான், மூணுபேரும் பத்தாவது முடிச்சோம். அப்புறோம் ஆளுக்கு ரெண்டு வாங்குனோம். ஹேமா அதுல ஒன்னோட நிறுத்திட்டான். சோ இப்போ போட்டி எனக்கும் செபாக்கும் தான்"
"நாங்க ரெண்டு பேரும் ரெண்டையும் சாப்பிட்டோம். அப்புறோம் திரும்ப ரெண்டு இட்லி வாங்குனோம்" இப்போது எல்லோரும் குறிப்பாக பெண்கள் சிரித்துக் கொண்டே ஆச்சரியப்பட்டனர்,
ஹாஸ்டல் இட்லி ஒன்னும் நம்ம வீட்டு இட்லி மாதிரி எல்லாம் இருக்காது. அது கல்லுடைய இன்னொரு வடிவம் தான். சாதாரணமா 150 கிராம் வரும் ஒவ்வொரு இட்லியும்...
"அப்புறோம் என்னாச்சு? சொல்லுங்க"
"13வது இட்லி சாப்பிடும் போதே செபாக்கு வாமிட் வந்துடுச்சி. அப்புறோம் என்ன நான் தான் ஜெயித்தேன்" என்று சந்தோசமாய் கொக்கரித்தான் ஜிட்டன்.
"ஹேய் என்ன யாருமே எந்த ரியாக்சனும் தர மாட்டேங்கிறீங்க?"
"இதுல என்ன அவ்வளவு பெருமை?" - மிரு
"ஒரு நாள் ஒரு வேளை நீ 13ஹாஸ்டல் இட்லி சாப்பிட்டுப் பாரு அப்போ புரியும் அந்த கஷ்டம் என்னனு?" என்று சீரியஸாக முதல்வன் பட ரகுவரன் போல் ஜிட்டு சொல்ல எல்லோரும் சிரித்தனர்.
"அப்புறோம் என்ன ஆச்சு?"
"எல்லோரும் போய் தூங்க போனோம். சரியா நைட் 12மணியிருக்கும் எனக்கு செம வயித்த வலி"
"இட்லி தன் வேலையைக் காட்டிவிட்டதா?"
"ஆமா ஆமா. அன்னைக்கு என்ன பண்றதுனே தெரியில போய் வாமிட் பண்ணாலும் வரல. பாத்ரூம் போனாலும் வரல"
எல்லோரும் அவனின் நிலையை எண்ணி சிரித்தனர், "அப்போ என்ன பண்றதுனே புரியில. வயிறு வேற செம வலி. உடனே தூங்கிட்டு இருந்த விவானை நான் எழுப்பினேன்" இந்த இடம் தான் முக்கியமான இடம், "'நான்' 'நான் ' தான்" என்று நித்யாவின் காதில் கேட்கும் படி சொல்லி "விவானை அழைத்துச் சொன்னேன்"
"எங்க காலேஜ் எப்படின்னா ஒரு பெரிய கேம்பஸ். அதுல இன்ஜினியரிங், டீம்டு யுனிவர்சிட்டி, மெடிக்கல் காலேஜ் , பிசியோதெரபி, லா, டென்டல் எல்லாமும் இருக்கும். அங்கேயே ஹாஸ்பிடலும் இருக்கும். உடனே விவான் என்னைய ஹாஸ்டல் வார்டேன் கிட்டச் சொல்லி ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போனான்"
நித்யாவுக்கு அப்போது தான் சிரிப்பு வந்தது,
"நித்தி டூ யூ ஸ்டில் ரிமெம்பெர் தட் டே?"
"கண்டிப்பா அதை எப்படி மறக்க முடியும்?"
"ஓ ஓ" என்று எல்லோரும் கோரஸ் பாட,
"எப்பா கொஞ்சம் நிப்பாட்டுங்க, அது சரியா இன்னையோட 8 வருஷம் முன்னாடி நடந்தது. சரியா எட்டு வருஷம். அந்த நாள் நேத்து நைட் மாதிரி"
"புரியில?"
"ஹேய் நித்யா இங்க கதையை நீ சொல்றியா இல்ல நான் சொல்லவா?" என்று ஜிட்டு அதட்ட,
"நீயே சொல்லித் தொலை"
"அன்னைக்கு உடனே என்னைய அங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போனா சீப் டாக்டரும் டூட்டி டாக்டரும் ஏதோ எமெர்ஜென்சி கேஸ் அட்டென்ட் பண்ணப் போயிட்டாருனு சொல்லிட்டாங்க"
"அச்சச்சோ அப்புறோம்?"
"அப்புறம் எனக்கு வேற பயங்கர வயிறு வலி. அப்போ அங்க இருந்த நர்ஸ் தான் ஒரு ட்ரைனிங் டாக்டர் வேணுனா இருக்காங்க பாருங்கன்னு உள்ள கூட்டிட்டுப் போனாங்க. நானும் நம்பி போனேன்..."
"போனா, அங்க டாக்டர் பேரைக் கேட்டா நித்யஸ்ரீனு சொன்னாங்க. அப்போதைக்கு வேற வழியில்லன்னு உள்ள போனோம்"
"ஓ ஓ ஹீரோயின் இன்றோவா? சூப்பர் சூப்பர். யாராச்சும் இளையராஜா கிட்ட சொல்லி ம்யூசிக் போடுங்கப்பா" என்றாள் மௌனி.
"நித்யா என்ன என்ன பேச்செல்லாம் பேசுனனு ஞாபகம் இருக்கா உனக்கு?" (பயணங்கள் முடிவதில்லை...)
 
Top