Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 12

Advertisement

praveenraj

Well-known member
Member
காலை 06.15:
இளங்கோ தியானேஷ் இருவருடனும் கதையளந்து விட்டு விவான் ரெஃபிரஸ் ஆகி வர அப்போது அவனின் செல்போன் அடித்தது. எடுத்தவன் அதில் தெரிந்த பெயரைப் பார்த்து கொஞ்சம் குழம்பினான். குழம்பினான் என்பதை விட பயந்தான் என்பது தான் சரி. ஒரு வித தயக்கத்துடனே அட்டென்ட் செய்தவன்,
"சொல்லு கீர்த்தி" (கீர்த்தனா - துவாராவின் தங்கை)
"அண்ணா குட் மார்னிங்"
"குட் மார்னிங் டா"
"எங்க அண்ணா இருக்கீங்க?"
"ஆந்திரா பார்டர்ல என்ன விஷயம்மா?" அதில் கொஞ்சம் தயக்கம்,
"ஆஸ் யூசுவல் தான் அண்ணா"
"அப்பாவா?"
"ஆமாண்ணா. என்ன பண்றதுனே தெரியில. நைட் எல்லாம் ஒரே புலம்பல். துவாரா என்னை மன்னிச்சுடு மன்னிச்சுடு என் கூட பேசு பேசுன்னு"ஏனோ அதைச் சொல்லும்போதே கீர்த்தியின் குரல் கம்ம அவள் அழுகிறாள் என்று விவானுக்கு நன்கு புரிந்தது. என்ன செய்வதென்று புரியாமல் அவன் இருக்க,
"கீர்த்தி, கீர்த்திமா சின்ன பொண்ணா நீ? அழலாமா சொல்லு? அப்பாக்கு தான் வயசாகிடுச்சி இல்ல, இதெல்லாம் குவைட் நார்மல். அவங்க புலம்பறதுக்கு எல்லாம் நாமளும் சேர்ந்து வருத்தப்பட்டா அப்புறோம் நமக்கு தானே உடம்பு சரியில்லாம போகும்?"
"என்னால முடியில அண்ணா"
"கீர்த்திமா மாப்பிள்ளை ஏதாவது சொன்னாரா?"
"ஐயோ அவரு எதுவும் சொல்லல அண்ணா. ஒரு மாதிரி கஷ்டம் தான் படுறாரு, எனக்கு அப்பாவை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு , ரொம்பவும் கஷ்டப்படுறாரு மனசளவிலும் உடலளவிலும், அவரு என்ன அண்ணா தப்பு பண்ணாரு? அப்படியே தப்பு அவர் மேல இருந்தாலும் அதுக்குன்னு 20 வருஷமாவா பேசாம இருக்கறது? என்னால முடியில அண்ணா. எனக்குத் தெரியுது அப்பாக்கு கடைசி காலம் நெருங்கிடுச்சினு, அவரோட ஆசையும் எனக்கு புரியுது, உங்க ஃபிரண்ட எப்படியாவது பேச வைங்கண்ணா"
"என்னடா கீர்த்திமா இப்படி உங்க பிரெண்டுனு சொல்ற? நீ கூடவா அவனைப் புரிந்துகவில்லை?"
"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியில, எல்லா விஷயத்திலும் ரொம்ப ரொம்ப நல்லவனா இருக்கான். ஆனா அப்பா விஷயத்துல மட்டும் ஏன் இப்படி நடந்துக்கறானே எனக்கு புரியில, எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து எனக்கு அப்பா தான் எல்லாமே செய்யுறாரு, அப்படியே தப்பு அவர் பண்ணியிருந்தாலும் அதுக்கான பிராயச்சித்ததை அவரு செஞ்சிட்டாரு. எனக்கு இதுக்கு மேல என்ன செய்றதுன்னே தெரியில, இந்த லட்சணத்துல அவன் கல்யாணத்தை வேற இவரு பார்க்கணுமாம்"
"ஹே குட்டிம்மா எல்லா பேரெண்ட்ஸ்குமே அதுதானேடா ஆசை?"
"பின்ன என்ன அண்ணா?அவனும் பிடிவாதம் பிடிக்கிறான், இவரும் இப்படியே இருக்காரு, நடுவுல நான் தான் இப்படி கஷ்டப்படுறேன்"
"கீர்த்திமா நீ கேரியிங் தானே? கன்ஸீவா இருக்கும் போது இப்படியெல்லாம் நீ குழப்பிக்க கூடாதுமா"
"என்னால முடியில அண்ணா. எனக்கு மட்டும் ஆசையெல்லாம் இல்லையா? ரெண்டாவது பிரெக்னென்சி"அவள் உடைந்தே விட்டாள்,
இங்கே விவானுக்கு தான் இதை எப்படி ஹேண்டில் பண்ணுவதென்று புரியாமல் குழம்பினான், "குட்டிம்மா நீ வேணுனா ஊட்டி போறியா? நான் அம்மா கிட்ட சொல்றேன் கொஞ்ச நாள் ரிலேக்ஸ்டா இருடா"
"வேணாம் அண்ணா. நான் இங்கேயே இருக்கேன்"
இரண்டுபக்கமும் இப்போது மௌனம்.
"அண்ணா அண்ணி எங்க இருக்காங்க? இன்னைக்கு அவங்க பர்த்டே தானே?"
ஓகே இவளே பேச்சை மாற்றுகிறாள் என்று எண்ணியவன் அவளை இலகுவாக்க, "ஆமா டா. ஆனா செம கடுப்புல இருப்பாங்க உங்க அண்ணி"
"ஏன் அண்ணா? என்ன பண்ணீங்க?"
"இன்னும் விஷ் பண்ணவே இல்ல"
"அண்ணா பாவம் அண்ணி, சரி நானாவது விஷ் பண்றேன் கொடுங்க"
"மகராசி, கொஞ்சம் பொறு. நான் முதல்ல பண்ணிடுறேன், அப்புறோம் நீ பண்ணுவியாம்"
"சரி சரி ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்" என்று சிரித்தாள்,
"குட்டிம்மா, கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காத? நீ ஹாப்பியா தானே இருக்க? ஐ மீன் மாப்பிள்ளை உன்ன?"
"அண்ணா எனக்கென்ன குறை? அவர் அப்படியே உங்கள மாதிரி"
"என்ன மாதிரியா? அவ்வளவு பொறுப்போ?"
"இல்ல. நீங்க எப்படி அண்ணிக்கு பம்புறீங்களோ அப்படியே" என்றவள் சிரிக்க,
"ஹே வாலு என்னையே கலாய்க்கிறியா? அப்போ முதல மாப்பிளைகிட்ட போன் கொடு நான் கொஞ்சம் பேசணும்"
"ரெடி ஆகிட்டு இருக்காரு, அப்புறோம் தரேன்"
"குட்டிம்மா அப்பா அங்க இருக்கறதுனால உங்களுக்குள்ள எதுவும்?"
"ஐயோ அண்ணா, அவருக்கு உண்மையிலே சந்தோசம் தான். ஆனா அப்பா செய்யுற நடவடிக்கையில் தான் அவரும் கொஞ்சம் அப்செட் ஆகுறாரு"
"நீ கொஞ்சம் பொறுடாம்மா எப்படியாவது அவன் மனசை நான் மாற்ற முயற்சிக்கிறேன். என்ன பண்ண எல்லா விஷயத்தையும் நான் சொன்னா கேட்குறவேன் இதுல மட்டும் பிடிகொடுக்கவே மாட்டேங்குறான். இதுல வேற எதுவோ இருக்கு"
"சரிண்ணா சித்து அழுறான். அவனை வேற ஸ்கூலுக்கு கிளப்பனும் கொஞ்சம் வேலையிருக்கு..."
"ஓகே டா யூ கேர்ரி ஆன். அண்ட் எதையும் போட்டு குழப்பிக்காம இரு. இவ்வளவு பொறுத்துட்ட ஒரு 10 நாள் பொறு"
"சரிண்ணா. அவன் எங்க இருக்கான்?"
"அவன் வேற கூப்பே மா, நான் வேற கூப்பே"
"என்னது நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா இருக்கீங்களா? ஆச்சரியமா இருக்கே?"
"விவிகூட இருக்கான்"
"அப்போ சரி, பைண்ணா"
"பார்த்து கேர்புல்லா இரு, பை"
ஏனோ கீர்த்தனாவிடம் பேசிய பின் விவான் மனம் ரொம்பவும் கவலைக்குள்ளானது. கீர்த்தனா துவாராவுக்கு எப்படியோ அப்படியே தான் விவானுக்கும். சொல்லப்போனால் அவள் இவர்கள் இருவரிடமும் தனித்தனியாக பேசுவதை யாராவது கண்டால் இவளும் விவானும் தான் அண்ணன் தங்கை என்று சொல்லுவார்கள். அவ்வளவு பாசம் இருவருக்குள்ளும். ஏனோ இப்போது விவானுக்கு துவாராவை நினைக்கையில் அவ்வளவு கோவம் வந்தது. ஓங்கி ரெண்டு வெக்கலாம் என்னும் அளவுக்குக் கூட யோசித்தான். இன்று நித்யா பிறந்தநாள் என்னும் அந்த சந்தோச மனநிலை சற்று மாறி ஏனோ அவன் மனம் மிகவும் குழம்பியது மட்டும் நிச்சயம்.
சரியாக அப்போது அவன் முதுகில் இளங்கோ ஒன்று வைக்க, எப்போதும் இப்படி செய்தால் விவானுக்கு பயங்கர கோவம் வரும். உடனே எரிந்துவிழுவான் இல்லை பதிலுக்கு அடிப்பான். அவனை வம்பிழுத்துப் பார்ப்பதில் எல்லோருக்கும் ஒரு ஆனந்தம்.(என்ன ஆனந்தம் இந்த கரடிக்கு மொமெண்ட்!) ஆனால் இன்றோ வழக்கத்திற்கு மாறாக அப்படியே நின்றான்.
"விவா, டேய் விவா என்ன ஆச்சுடா?"
"ஒன்னுமில்லை" என்று தலையை ஆடியதிலே அவனுக்குப் புரிந்தது ஏதோ இருக்கிறதென்று,
"என்ன மச்சி சர்ப்ரைஸ் ரெடி ஆகலையா? எப்படி நித்யாவ சமாதானம் செய்யுறதுனு இருக்கியா?"
"நீ வேற நிலைமை புரியாம, அமைதியா இருடா"
"என்னாச்சி மச்சி?"
அவன் மேலோட்டமாக எல்லாமும் சொல்ல (கீர்த்தனா சொன்னதை)
"அவன்(துவாரா ) ஏன்டா இப்படி இருக்கான்?"
முகம் சுளித்து தலையை ஆட்டியவன் அமைதியாக சென்று அமர்ந்தான்.
......................................................
ரேஷா எழுந்து ரெஃபிரஷ் ஆகி வர அப்போது தான் கண்விழித்தாள் பெனாசிர். மெல்ல கண்களைத் திறந்தவள்,
"குட் மார்னிங் ரேஷு பேபி"
"குட் மார்னிங் குட் மார்னிங்"
"என்ன காலையிலே மூட் அவுட்டா?"
"கொஞ்ச நேரம் அமைதியா இருடி"
"சரி சரி" என்றவள் எழுந்து ரெஃபிரஷ் ஆக போக அங்கே ஜெசிந்தா இன்னமும் உறக்கத்திலே இருந்தாள். அதும் ஆழ்ந்த உறக்கத்தில்...
"ரொம்ப நேரம் எதோ யோசனையில முழிச்சே இருந்தா"
"நைட் அவ்வளவு நேரம் உபதேசம் பண்ணேன்"
"ஓ அதுனால தான் இவ்வளவு நேரம் தூங்குறாளா? அப்போ எனக்கும் நைட் பண்ணு பெனாசிர். எனக்கும் தூக்கமே வர மாட்டேங்குது" என்று சீரியசான தொனியில் கிண்டல் செய்தாள் ரேஷா.
கோவமாய் முறைத்துக்கொண்டே சென்றாள் பெனாசிர்.
................................................
எல்லோரும் கொஞ்ச நேரத்தில் ரெஃபிரஷ் ஆகிவிட்டு தான் நித்யா இருந்த கூபேக்குள் சென்று அவளுக்கு பர்த்டே விஷ் செய்து அவள் கோவித்து வந்து கேக் வெட்டி மௌனி அந்த கேள்வியைக் கேட்டுவிட்டுப் போனாள்.
அதற்குள் எல்லோரும் கலைந்து செல்ல, மௌனி மட்டும் அங்கேயே யோசித்துக்கொண்டிருக்க அப்போது ஹேமந்த் வந்தான். அவளின் குழம்பிய முகத்தைப் பார்த்து அவளை வம்பிழுக்க,
"ஹேய் குல்ஃபி, என்னடி தனியா யோசிச்சிட்டு இருக்க?"
"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்?"
"எனக்கும் தான்?"
"உனக்கென்ன?"
"இல்ல குளிக்காமலே இவ்வளவு பிரெஷா இருக்கியே அப்போ?"
ஓங்கி அவன் மார்பில் குத்துவிட்டாள்.
"இங்க குத்தாத இங்க குத்துனா உனக்கு தான்டி வலிக்கும், ஏன்னா நீ தானே என் ஹார்ட்ல குடியிருக்க"
"யக்" மூஞ்சை சுளித்தவள், "காலங்காலையில இப்படி கடிக்காதடா"
"அப்போ இப்படி கடிக்கவா?" என்றவன் அவளின் கன்னத்தை கடிக்க,
அப்போது அங்கே வந்தவன் இவர்களைப் பார்த்து நிற்க, மௌனி உடனே அவனை விலக்கியதும் யாரென்று திரும்ப அங்கே இருந்தவனைப் பார்த்து அவன் கண்டுக்கொள்ளாமல் மீண்டும் அவளை நெருங்க,
"என்னடா நடக்குது இங்க? நான் வந்துட்டேன் டா"
"ஏ உனக்கு மூளைதான் இல்லைனா பேசிக் மேனர்ஸ் கூடவா இல்ல? அதுதான் ரெண்டு லவ்வர்ஸ் தனியா இருக்கோமே மூடிட்டு போகவேண்டியது தானே?"
"டேய் இதெல்லாம் ஓவர்? இப்படி பப்லிக் பிளேஸ்ல..."
"போடா இங்கேயிருந்து"
"நான் போவேன் இல்ல இங்கேயே மல்லாக்க படுப்பேன் உனக்கென்ன?"
"உனக்கு... உனக்கு..." பல்லைக் கடித்தவன், "சரியா 'அந்த' நேரத்துல எல்லாம் மறந்து போயிடும்"
"மச்சி நீ அப்படியே பரசுராம முனிவர் பாரு. நீ சொன்னதும் எல்லாம் பலிச்சிட, போடா"
"விர்ஜின் பையன் சாபம் உன்ன சும்மா விடாது" அதற்குள் மௌனி அவனிடமிருந்து விலகி போக இன்னும் கடுப்பானவன் வந்து ஜிட்டனின் தலையில் நங்கென்று பல கொட்டுகளை வைத்தான். ஆமாங்க இது ஜிட்டு தான். மீதி கேக் இருக்கிறதான்னு பார்க்க வந்தவன் இப்படி ஹேமந்தை வெறுப்பேத்த ஜிம்பாய் கோவம் கொண்டு நன்கு குட்டினான்.
"ஆ வலிக்குது டா"
ஜிட்டன் தான் அந்த கேங்குலேயே கொஞ்சம் குள்ளம். சோ பெரும்பாலும் அவன் தலையை குட்டியே தங்கள் கோவத்தைப் போக்கிக்கொள்வார்கள்.
"ஏய் மலைமாடே, வலிக்குது டா. இப்படி குட்டி குட்டியே என்னைய வளரவிடாம பண்ணிடீங்கடா?"
"ஆமா அப்படியே இல்லனா இவரு கிரேட் காளி அண்டர்டேக்கர் மாதிரி 7 அடி வளந்திருப்பாரு போடா"
"இருடா உன்னைப் பற்றி நான் மௌனிக்கிட்ட சொல்லி வத்தி வெக்குறேன்"
"நித்து கிட்ட சொல்லி உன்னை இதித்ரி பக்கமே நெருங்க விடாம பண்ணிடுவேன் பார்த்துக்கோ"
"டேய் டேய் அப்படியெல்லாம் ஒன்னும் பண்ணித் தொலைச்சிடாதடா" என்று கெஞ்சினான்.
கேக் வெட்டிவிட்டு எல்லோரும் அவரவர் இருக்கைக்கு சென்றனர். நித்யா விவான் தவிர மற்றவர்கள் எல்லோரும் அங்கே அவர்களின் இருக்கைக்கு செல்ல அப்போது தான் குளித்து வந்த அனேஷியாவிடம் மிரு கேக்கை நீட்டினாள். என்னவென்று புரியாமல் பார்த்தவளிடம் விஷயத்தைச் சொல்ல, "ஓ அதுக்கு தான் காலையிலே குளித்து ரெடியா இருந்தாங்களா? சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேனில்ல?" என்று சொல்ல ஏனோ மிரு பாரு இருவருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. 'எல்லோரையும் கூப்பிட்டோமே இவளையும் கூப்பிட்டு போயிருக்கலாம்னு' யோசிக்க அவர்களின் வருத்தத்தை உணர்ந்த அனேஷியா, "ஓகே நோ ப்ரோப்லம்" என்றவள் அந்த கேக்கை வாங்கிக்கொண்டு, "எங்க நித்யாவ காணோம்?"
உடனே மிரு பாரு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க,
"ஏன் சிரிக்கறீங்க?"
"அவங்க ஹஸ்பண்டோட இருக்காங்க அந்த கம்பார்ட்மெண்ட்ல"
"ஓ" என்றவள் "தேங் யூ" என்று சொல்லிவிட்டு அமர, பாரு தான் அந்த கேள்வியைக் கேட்டுவிட்டாள். "இப்போ பரவாயில்லையா?"
"என்னது?"
"இல்ல நைட் ஒரு மாதிரி அப்செட்டா இருந்தீங்களே. அது தான் கேட்டேன்?"
உடனே அவள் முகம் மாறி, "அது இப்போதைக்கு தீராது" என்று விரக்தி கலந்த குரலில் சொல்லி அவர்களைப் பார்க்க அவர்கள் இருவரும் வித்தியாசமாய் இவளைப் பார்ப்பதைக் கண்டு, "ஹே நான் அப்படி சொல்லல, யா நைட்ட கம்பேர் பண்ணும் போது யா நவ் ஐ அம் பீலிங் பெட்டெர்"
இன்னமும் இருவரும் சகஜ நிலைக்குத் திரும்பாததால், அவர்களையே பார்த்தவள் "சொல்ல மறந்துட்டேன், நான் அனேஷியா" என்று சொல்லி கையை நீட்ட,
"நான் பார்வதி, நான் மிருதுளா"
"நான் இன்னும் சிங்கிள் தான்" என்று சொல்லி மிருவைப் பார்த்து கண்ணடிக்க, புரிந்தவள் "நானும் சிங்கிள் தான்" என்று சொல்ல,
புசுபுசுவென கோவம் வந்த பார்வதி, "அப்படியா அப்போ இருங்க நான் என் கம்பெனியை கூப்பிட்டு வரேன்" என்று நித்யாக்கா என்று நடக்க,
"ஹே சில் சும்மா தான் சொன்னேன்" என்று அனேஷியா சிரிக்க, ஏனோ ட்ரெயின் ரன்னிங்கில் சற்று வேகமெடுக்க அதில் பார்வதி சற்று தடுமாறினாள்,
"ஹே பாரு உட்காரு முதல" என்று அவளின் கையைப் பிடித்து அமரவைக்க, "இளங்கோ மட்டும் இப்போ பார்த்திருந்தான் அவ்வளவு தான்" என்று சொல்ல,
"ஏன்?"- அனேஷியா
"ஷி இஸ் கேரியிங்"
"இஸ் இட்?" என்று ஆச்சரியப்பட்டவள் சந்தோசத்துடன், "கங்கிராட்ஸ் பார்வதி"
"தேங் யூ"
"அப்புறோம் எதுக்கு இப்படி இந்த நிலையில ட்ராவெல் பண்றீங்க?"
"ஆக்சுவல்லி நேற்று தான் கன்பார்ம் ஆச்சு" என்று சொல்ல,
"ஓ" என்று சந்தோச பட்டவள் பின்பு, "உங்க ஹஸ்பண்டும் வந்திருக்காரா?"
"அவன் இல்லாமையா? அவன் வேற கம்பார்ட்மெண்ட்ல இருக்கான்" - மிரு
மிருவின் இந்த ஒருமை பேச்சைப் பார்த்தவள், "ஓ அப்போ இவங்க உங்க ஃப்ரண்ட் இல்லையா?" - அனேஷியா
"என் பிரெண்டோட வைப். எனக்கும்..."
"ஏங்க?" அனேஷியா திடீரென ஷாக் குரல் இட,
முதலில் புரியாமல் இருந்த மிரு புரிந்து, "யூ நாட்டி பெல்லோ" (naughty fellow-குறும்புக்காரி) என்று அவளை செல்லமாக அடித்து, "என் ஃப்ரண்டோட வைப் எனக்கு தங்கச்சி மாதிரின்னு சொல்ல வந்தேன்" என்று முடிக்க இப்போது மூவரும் சிரித்தனர்.
"அப்படியா நான் கூட ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்" என்று அனேஷியா சிரிக்க, இப்போது அவளோடு சேர்ந்து மூவரும் சிரித்தனர்.
பின்பு அவளைப் பற்றியும் அவளின் வேலையைப் பற்றியும் அவள் எங்கு செல்கிறாள் என்பதையும் மூவரும் பேச,
"அப்போ நீங்க மட்டும் தனியாவா வரீங்க?"
"இல்ல என் டீம் எல்லாம் வேற வேற கம்பார்ட்டெண்ட்ல இருக்கு"
மிரு தான்,"ஹே பாரு ஜெசி இவங்க டீம் தான்"
"அப்படியா?" என்று பாரு ஆச்சரியப் பட ,,
"ஜெசி? ஓ ஏன் உங்களுக்கு ஜெசிந்தாவைத் தெரியுமா?"-அனேஷியா
"அவ எங்க ஃப்ரண்டோட வைப் தான்"
"ஓ" என்று நிறுத்தியவள் யோசித்து, "அப்போ அவரும் உங்க கூடத்தான் ட்ராவல் பண்ணுறாரா?"
"ஆமா. ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு அதுல"
"என்ன?"
மேலோட்டமாக செபா - ஜெசியை பற்றி அனேஷியாவிடம் சொன்னார்கள்.
"யா நானும் பார்த்திருக்கேன். ஜெசி எப்பயுமே ஒரு மாதிரி சோகமா தான் ஆபிஸ் வருவாங்க" என்று அவள் சொல்ல,
"பார்ப்போம் இந்த ட்ராவல் அவங்களை ஒன்னு சேர்க்குதான்னு" என்று பாரு சொல்ல,
"அதென்ன சேர்க்குதா? சேர்க்குறோம்" என்று அனேஷியா சொல்ல இருவரும் சிரித்து டன் என்று கைகொடுத்துக்கொண்டனர்.
"செமயா இருக்குமில்ல இப்படி ப்ரெண்ட்ஸோட போறது?"
"கண்டிப்பா"
"அப்புறோம்" என்று எதையோ கேட்கவந்து அனேஷியா நிறுத்த,
"எதையோ கேட்கவந்தீங்க ஏன் நிறுத்தீட்டிங்க? தாராளமா கேளுங்க"
"அது நேற்று நைட் ஒருத்தரை..." என்று சொல்லி எப்படி சொல்வதென்று தெரியாமல் அனேஷியா நிறுத்த,
"நேத்து ஒருத்தனை மொத்துமொத்துனு மொத்துனீங்களே அவனைப் பற்றியா கேட்கறீங்க?" என்று சொன்ன மிருவுடன் சேர்ந்து பாருவும் சிரிக்க ஏனோ இப்போது இதற்கு சிரிப்பதா கூடாதா என்று தெரியாமல் அனேஷியா முழிக்க, அவளுக்கும் சிரிப்பு வந்தது தான் ஆனால் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.
"ஏங்க அதுதான் சிரிப்பு உதடு வரை வந்திடுச்சில்ல அப்புறோம் எதுக்கு அதை கண்ட்ரோல் பண்ணுறீங்க? சிரிச்சிடுங்க" என்று பாரு சொல்ல இப்போது அவளும் சிரித்தாள்.
பின்பு மூவரும் சிரித்து நிறுத்தி மீண்டும் சிரித்து நிறுத்த, "நான் திடீர்னு அவரை அப்படி பார்த்ததும்" என்று அவள் தயங்க,
"நிறுத்துங்க, நோ ப்ரோப்லேம். அது ஒரு மிஸ்அண்டர்ஸ்டேண்டிங் அண்ட் மிஸ் கம்யூனிகேஷன்ல நடந்த ஆக்சிடென்ட். அதுக்காக எதுக்கு இப்படி பீல் பண்றீங்க? அடிவாங்குனவனே கவலைப் படாம சும்மா ஜம்முனு சுத்திட்டு இருக்கான். நீங்க போய் பீல் பண்ணிட்டு?" (ஏனோ அவளை கொஞ்சம் இலகுவாக்க தான் மிரு இதைச் சொன்னாள். ஏனெனில் இவ்வளவு நேரம் சிரித்தவள் சற்று சீரியஸ் ஆக அவளை மீண்டும் சிரிக்கவைக்க தான் சொன்னாள். ஆயிரமிருந்தாலும் ஜிட்டனை அவள் விட்டுக்கொடுக்க மாட்டாள்)
"சாப்டீங்களா?"
"இல்லை இனிமேல் தான்"
"அப்போ சேர்ந்து சாப்பிடலாம் வெய்ட் பண்ணுங்க"
"நீங்க என்ன ஃபுட்டுக்கும் (food) சேர்த்தா ஆர்டர் பண்ணியிருக்கீங்க?"
"இல்ல இங்க பேன்ட்ரி அவ்வளவு நல்லா இருக்குமான்னு தெரியில அதுதான் வெளிய ஆர்டர் பண்ணிக்கலாம்னு" (இந்த மாதிரி ட்ரைனில் லாங் டிஸ்டேன்ஸ் ட்ராவல் செய்யும் போது அங்கே ட்ரைனிலே கிடைக்கும் பேன்ட்ரி உணவகத்தில் சாப்பிடுவதைக் காட்டிலும் ஏதாவது ஸ்டேஷனில் இருக்கும் உணவுகளை வாங்கி சாப்பிடுவது நல்லது. இது என் அனுபவத்தில் சொல்கிறேன்.அதற்கெல்லாம் இப்போது ஆப் (app )கூட இருக்கிறது. நாம் ட்ரைனில் இருந்தே ஆர்டர் செய்தால் விருப்பப்பட்ட ஸ்டேஷனில் நமக்கு அதை டெலிவெரி செய்துவிடுவார்கள்.நோ ப்ரோப்லேம்!)
"சூப்பர்ங்க. நாங்களும் வெளிய தான் ஆர்டர் பண்ணியிருக்கோம். வைசாக்ல (விசாகப்பட்டினம்) ஆர்டர் பண்ணியிருக்கானாம் ஹேமா. உங்களுக்கும் சேர்த்து பண்ணிடலாமா சொல்லுங்க?"
"ஐயோ உங்களுக்கு எதுக்கு சிரமம்?"
"நோ ப்ரோப்லம். இருங்க நான் ஹேமாவை கூப்பிடுறேன்"
"ஒரு நிமிஷம் என் டீம்மேட்ஸ் என்ன பண்றாங்கனு தெரியில நானும் கேட்கறேன்"
அனேஷியா இஸ்மாயிலுக்கு அழைக்க அவன் லோகேஷைக் கேட்க, "எங்களுக்கு நாங்க பண்ணிக்குறோம்னு சொல்லு இஸ்மாயில்" என்ற லோகேஷின் குரல் அனேஷியாவை வந்து சேர்ந்தது.
இஸ்மாயிலுக்கு இப்போது என்ன சொல்வதென்று புரியாமல், "சும்மா இருடா எல்லோருக்கும் ஒன்னாவே ஆர்டர் பண்ணிக்கலாம். அப்போ ஜெசி, பெனாசிர் எல்லாம் என்ன பண்ணுவாங்க?"
"அவங்களுக்கும் சேர்த்து தான் நான் ஆர்டர் பண்ணிடுறேன்" என்றான் லோகேஷ்.
"இதுவும் அவளுக்கு நன்றாக கேட்க" இஸ்மாயில் தயங்கினான்.
"ஓகே இஸ்மாயில். அப்போ நீங்க எல்லோரும் ஆர்டர் பண்ணிக்கோங்க. நோ ப்ரோப்லம். நான் எனக்கு பண்ணிக்குறேன். யாருக்காவது வேணும்னா கூச்சப்படாம சொல்லுங்க நான் பண்றேன்" என்றவள் அவனின் பதிலுக்கு கூட காத்திராமல் காலை வைத்துவிட்டாள்.
"அவங்க எல்லோரும் ஆர்டர் பண்ணிக்குறாங்களாம். நான் மட்டும் தான் நானே பண்ணிக்குறேன் தேங்க்ஸ்" என்று அவள் மிருவிடம் சொல்ல, அவள் பேசியது ஏனோ அருகில் இருந்த இருவருக்கும் நன்றாகவே கேட்டது. அவர்கள் தான் என்ன செய்வதென்று புரியாமல் இருக்க, மிரு உடனே ஹேமாவை அழைத்து, "டேய் இனி சாப்பாடு ஆர்டெர் பண்ணும்போதெல்லாம் ஒன்னு சேர்த்து ஆர்டர் பண்ணு" என்று சொல்லி அவள் வைக்க,
ஏனோ அனேஷியாவுக்கு தான் ஒரு மாதிரி இருந்தது. "தேங்க்ஸ்"
"ஹே சில்" அதற்குள் அனேஷியாவுக்கு அழைப்பு வந்துவிட இவர்கள் இருவரும் தனியே வந்தனர்.
"பாவம் அந்த பொண்ணு"
"எனக்கே கஷ்டமா போயிடுச்சி. இப்படியா பேசுவாங்க?"
"விடு இனி நாம அவங்கள நம்ம கூடவே சாப்பிட கூப்டுக்கலாம்"
........................................................
இளவேனில் மட்டும் பசிதாங்க மாட்டாள் என்று கருதி அவளுக்கு மட்டும் இட்லி வாங்கிக்கொண்டனர். அவளை அங்கே ஹேமாவே வைத்திருந்தான்.(ஹேமந்த் தான் ஹேமா. தியானேஷ் தியா)
மௌனியும் இதித்ரியும் கூட இப்போது தங்கள் கம்பார்ட்மென்டுக்கு வந்துவிட விவியன் தான் அந்த கேக்கை எடுத்துக்கொண்டு சித்தாராவிற்குக் கொடுக்க சென்றான்.
அவளோ நன்றாக தூங்கி 8 மணிபோல தான் எழுந்து பிரெஷ் ஆகிவிட்டு வந்தாள். வந்தவளுக்கு முன் சென்றவன், "இந்தாங்க கேக்" என்று விவியன் நீட்டினான்.
"ஏன் என்ன இது கேக்கெல்லாம் தரீங்க? எப்படி?"
"அதுவா எங்க ஃப்ரண்டுக்கு இன்னைக்கு பர்த்டே. சோ கேக் வெட்டுனோம்" என்று கதையைச் சொல்ல (இந்த மாதிரி ஒரே டைலாக் பலமுறை ரிப்பீட் ஆகலாம். ஏனெனில் ஒவ்வொரு பேரும்(pair) பேசவேண்டுமல்லா? கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்!)
"அப்படியா வாவ், தேங் யூ சோ மச்"
"யூ ஆர் வெல்கம்"
அவள் கேக்கை எடுத்து சாப்பிட்டு இருவரும் எதிரெதிரே அமர்ந்துக் கொண்டனர்.
"நேற்று அந்த பாட்டை ஒரு 10 தடவையாவது கேட்டிருப்பேன்" என்று சொல்ல,
"எப்படியிருந்தது சித்தாரா சித்தாரா?"
"என் பேர்ல பாட்டிருக்கும் போது அதெப்படி நல்லா இருக்காம போகும்?"
"ஓ அப்படி வரீங்க" என்று சொல்லி விவியன் சிரிக்க,
"அப்படியேதான்"
"எப்படி கேக் வந்தது? இங்க பேன்ட்ரில கிடைக்காதே?"
"அதையேன் கேட்கறீங்க? நைட்டே சென்னைல ஆர்டர் பண்ணி வாங்கி வந்து இங்க பேன்ட்ரில உருகாம இருக்க வெக்க சொன்னா முடியவே முடியாதுனு சொல்லிட்டானுங்க. அப்புறோம் எப்படியோ பேசி (சில காந்தி தாத்தாவை கொடுத்து) அவனுங்களை சமாதானம் படுத்தி, அப்பப்ப்பா, போதும் போதும்னு ஆயிடுச்சி"
"சோ ஸ்வீட் இல்ல?"
"ஆமாங்க இது ரெட் வெல்வெட் ஆச்சே?"
அவள் திருதிருவென முழித்தாள்,
"ஏன் என்னாச்சு?"
"நான் கேக்கை சொல்லல. அந்த கப்பிள்ஸை (couple - ஜோடி ) சொன்னேன். எவ்வளவு லவ் அண்ட் அஃபக்சன்"
பெரிய பல்ப் வாங்கியதாய் உணர்ந்தான் விவியன். முகத்தைச் சுளிக்க,
"எனிவேஸ் கேக்கும் சூப்பர் தான்" என்று அவள் சொல்லி மர்ம புன்னகை செய்ய,
அசடு வழிந்தான் விவியன்.
இப்போது மீண்டும் எப்படி பேச்சை ஆரமிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கொஞ்சம் தயக்கம் இருவருக்குள்ளும் குடிகொண்டது.
..................................................
ஜிட்டன் ஹேமந்த்திடம் நன்றாக கொட்டு வாங்கிவிட்டு அவர்களின் கம்பார்ட்மெண்ட்க்கு போக அங்கே அப்போது தான் விழித்த ஜெசிந்தாவிற்கு அவன் கேக் கொண்டுப்போனான். கூடவே இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து அவர்களுக்கும் சேர்த்து தான் எடுத்துக்கொண்டு போனான். (பயணங்கள் முடிவதில்லை...)
 
Top