Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 11

Advertisement

praveenraj

Well-known member
Member
தூக்கத்தில் இருந்தவள் விழித்து மணியைப் பார்க்க, பொழுது விடிந்துவிட்டது என்று அறிந்தவள் பின்பு தான் உணர்ந்தாள் இன்று தன் பிறந்த நாளென்று. அவள் எழுந்து குளித்து ரெடி ஆகி வந்தாள். அவளுக்கு நினைவு தெரிந்து முதன்முதலில் தன் பிறந்தநாளை இப்படி ட்ராவெலிங்கில் கொண்டாடுகிறாள். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கோவிலுக்கு செல்லும் அவளோ இன்று முடியாதே என்று நினைத்து கொஞ்சம் வருந்தினாலும் எதையும் வெளிக்காட்டாமல் வர அப்போது மிரு, இதித்ரி இருவரும் விழித்துக்கொள்ள அவர்களும் சென்று ரெடி ஆகி வந்தனர். அதற்குள் இளவேனில் முழித்துக்கொள்ள அவளை குளிக்க வைக்க நித்யா செல்ல அப்போது குளிக்க சென்ற பாரு அவளை தான் குளிப்பாட்டுவதாய் சொல்லி அழைத்துச் சென்றாள். நித்யாவுக்கு இப்போது கண்டிப்பாக புரிந்தது எப்படியும் இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் உண்டு. அதனால் தான் யாருமே தன்னை இன்னமும் விஷ் செய்யவில்லை என்றும் புரிந்தது. அதற்குள் எல்லோரும் எழுந்துவிட மௌனியைத் தவிர்த்து எல்லோரும் ரெஃபிரஸ் ஆகிவர அங்கே அனேஷியா தான் இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தாள். தூங்கும் அவளையே ஏனோ பார்த்துக்கொண்டிருந்தாள் நித்யா.
அப்போது எதிரே இரண்டு வாலிபர்களைக் கண்டவள், நடுவில் எங்கேயாவது ஏறியிருப்பார்கள் என்று நினைத்து விட தன் அத்தை கூட இன்னும் அழைக்கவில்லை என்று யோசிக்க, ஏன் தன் பிறந்த வீட்டில் கூட இன்னமும் அழைக்கவில்லையே. என்ன தான் திருமணம் ஆகி மூன்று வருடங்களுக்கு மேல் ஆனாலும் தன் வீட்டில் இன்னமும் அந்த மரியாதை கிடைக்கவில்லை என்ற வருத்தம் அவளுக்கு இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் சொன்ன வார்த்தைகள் எல்லாத்தையும் நினைத்துப் பார்த்தாள். ஏனோ அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.
அவர்கள் எல்லோரும் வந்துவிட அப்போது தான் விழித்த அனேஷியா இவ்வளவு காலையில் இப்படி ரெடி ஆகி இருப்பவளை விந்தையாய் பார்க்க அவளோ எதையும் சொல்லவில்லை. அவள் ரெடி ஆக சென்றுவிட்டாள். என்ன இருந்தாலும் அவளுக்கு முதல் விஷ் விவானிடமிருந்து தான் வாங்கவேண்டும் என்று ஒரு ஆசை. பின்னே கடந்த 8 வருடங்களாக அவன் தானே முதலில் விஷ் செய்பவன். அந்த ஆவல் அவளுக்கு இருக்கத்தான் செய்தது.
மணி 7.30 தான் ஆகியது. அப்போது எல்லோரும் கதைப் பேசிக்கொண்டு இரவு நடந்ததை மீண்டும் நினைத்துக்கொண்டு இருந்தனர். அங்கிருந்த யாரும் நித்யாவை விஷ் செய்யவில்லை. திடீரென கூப்பேக்கு வந்த விவான், துவாரா, உட்பட எல்லோரும் அவர்களைப் பார்க்க விவான் நித்யாவைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்க அதற்குள் இளவேனில் தந்தையைப் பார்த்த களிப்பில் ஆரவாரமிட அவளை தூக்கி கொஞ்சியவன் ஓரக்கண்களால் நித்யாவைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவளின் பொறுமையை நன்கு சோதித்துக்கொண்டிருந்தான்.
இளவேனிலுக்கு முத்தம் வைத்துவிட்டு நித்யாவுக்கு வாழ்த்தலாம் என்று குனிய அதற்குள் பின்னாலிருந்து
"விஷ் யூ மேனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே நித்யா" - ஜிட்டன் சொல்ல கடுப்பான விவான் எழுந்து அவன் மண்டையில் நங்கென்று குட்டு வைக்க, எல்லோரும் ஜிட்டனையே முறைத்தனர்.
தலையைத் தேய்த்துக்கொண்டே, "அப்போ இன்னும் இவன் விஷ் பண்ணலையா?" என்று அப்பாவியாய் கேட்க நித்யாவிற்கு தான் கோவம் வர அதை விவானிடம் காட்டிவிட்டு கோவமாய் எழுந்து போக (பின்னே இத்தனை வருடங்களாய் முதலில் அவன் தானே விஷ் பண்ணுவான், இன்று தான் ஜிட்டு கெடுத்துவிட்டானே,)
கோவமானவன் மீண்டும் ஜிட்டன் தலையில் இரண்டு மூன்று குட்டு வைத்துவிட்டு நித்யா பின்னாலே சென்றான். அதற்குள் இதித்ரி உட்பட எல்லோரும் அவனை வசைப்பாட, மிரு, பாரு, மௌனி எல்லோரும் ஜிட்டனை முறைக்க,
"ஸ்டாப். நேற்று நைட் உங்க கிட்ட நான் வாங்கனதெல்லாம் பத்தாதா?"
அதற்குள் மிரு, "அதையே தான் நானும் கேட்கறேன், உனக்கு மூளையே இல்லையா?"
"ஸ்டாப், ஐ அம் ஸ்பீக்கிங் நோ கிராஸ் ஸ்பீக்கிங்" என்றவன் முன்னே செல்ல,
"எங்க போற?" இத்திரி
"நித்யாக்கு கைக்கொடுக்க"
"எனக்கு கொடுக்கலாமே" என்று இதித்ரி சிரிக்க
"மை பிளேசர் மை பிளேசர்" என்று கையை நீட்ட அதை பிடித்து முறுக்கினாள். அப்போது எல்லோரும் ஆளாளுக்கு அவன் முதுகில் ஒன்றை வைத்துவிட்டு ஓடினர்.
கடுப்பானவன் எல்லோரையும் துரத்த,
அங்கே கோவித்துக்கொண்டு முன்னே போன நித்யாவின் பின் சென்றவன் வேகமாய் கையை பிடித்து இழுத்து டோர் பக்கம் நிறுத்தி, "நித்துமா சாரி டா"
அவள் முறைக்க,
"ப்ளீஸ் நித்யா, ப்ளீஸ் ப்ளீஸ்"
"ஏன்டா லவ் பண்ணும் போதெல்லாம் நைட் எல்லாம் முழித்து இருந்து எனக்கு விஷ் பண்ணுன இப்போ நானா கேட்கற வரைக்கும்..." என்று சொல்லி நிறுத்த,
"ஏ நித்து, சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு இருந்தேன் அதுக்குள்ள அந்த பன்னாடை பரதேசி" என்று பல்லை கடிக்க, "ப்ளீஸ் ப்ளீஸ் நித்"
"டூ யூ ஸ்டில் லவ் மீ?"
"என்னடி ஆச்சு? எதுக்கு இப்படியெல்லாம் கேட்குற?"
"இல்ல எனக்கு உண்மை தெரியணும்"
"அப்படியா?' என்றவன் மர்ம புன்னகை சிந்தி அவளை நெருங்க
கையை நீட்டி தடுத்தவள், "ஒழுங்கா அங்க நின்னே பேசு"
"டார்லிங் பேசனும்னா இங்க நின்னே பேசலாம், ஆனா..." அவன் இழுக்க,
"ஆனா"
அவளை நெருங்க,
அதற்குள் அந்த கம்பார்ட்மெண்டில் இருந்த ஒருவர் எழுந்து வரவும் விலகினாள்.
கடுப்பானவன் கையை மடக்கி விட்டு "நித்து நில்லு"
அவள் போக
"நித்து"
"நித்து நில்லுடி" அந்த 'டி'யில் ஒரு அழுத்தம்.
அவள் திரும்ப அவன் உதடு மர்ம புன்னகையையே சிந்தியது.
"என்ன சொன்ன?"
"ஒன்னும் இல்ல"
"இப்போ என்ன சொன்ன?"
"கிட்ட வா" என்றவன் அவள் சுதாரிப்பதற்குள் அவளை கைவளையத்தில் இழுத்தவன் அவள் கண்களைப் பார்த்து, "மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே மை குயின்"
"அப்பப்பா, அப்புறோம்?"
"மை லவ், மை வைப், அண்ட் மை லைப்" என்று சொல்லி சிரிக்க,
"கிட்டத்தட்ட மூன்று வருஷம் கழித்து இந்த டைலாக் சொல்ற... ஏம் ஐ ரைட் மிஸ்டர் விவான்?"
அவன் விரலை அவளின் கன்னத்தில் வைத்தவன் அவள் தடுக்க கையை கொண்டுவர,
"தடுத்தா சண்டை, தடுக்காட்டி சமாதானம், இப்போ சொல்லு கையை வெக்கவா இல்ல கையை எடுக்கவா? விவான் கவுன்டிங் ஸ்டார்ட்ஸ்" என்றதும்,
"எவ்வளவு நாளாச்சுடா நீ இப்படியெல்லாம் என்கிட்டே பேசி?"அவள் கண்களில் ஒரு ஏக்கம். "ஏன்டா அதான் வைப் ஆகிட்டாளேன்னு யூ டுக் மீ பார் க்ராண்ட்டெட்?"(அவ்வளவு சாதாரணமா போயிட்டேனில்ல)
"நான் அப்படியா தெரியுறேன்? இல்ல என் நடவடிக்கை அப்படியா தெரியுதா? உனக்கே இதுக்கான பதில் தெரியும் நித்திமா. தெரிஞ்சிட்டே நீ கேள்வி கேட்கற?"
"வேலை ஒர்க் டென்ஷன் இருக்க தான் செய்யும் விவான். அதுக்குன்னு என்னைய மறந்துட்ட இல்ல?"
"மறந்தவன் தான் இப்போ டூர் போலாம்னு உன்னைய கூட்டிட்டு வரேன்னா?"
அவள் எதையுமே பேசாமல் இருக்க அவளின் முகம் நோக்கி நெருங்கியவன் அவளின் இதழை மென்மையாய் தீண்டினான்.
சரியாக அப்போது பின்னாலே அவர்களைத் தேடி வந்த கூட்டத்தில் மௌனி முதலில் வந்து இவர்களைப் பார்த்திட திடுக்கிட்டு பேக் வாங்க அவளை பின் தொடர்ந்தே வந்த மிரு இதித்ரி பாரு இளங்கோ என்று எல்லோரும் ஒருவர் மீது ஒருவர் ஜாம் ஆகி அங்கேயே நிற்க,
"ஏன்டி இப்படி திடீர்னு நின்ன?" - மிரு
"ஸ்ஸ்ஸ்ஸ். உள்ள ஒரு கௌதம் மேனன் படம் ஓடிக்கிட்டு இருக்கு" என்று சொல்ல,
"அப்படியா எங்க தள்ளுங்க நான் பார்க்கறேன்" என்று முந்திவந்த ஜிட்டனை எல்லோரும் மீண்டும் மொத்தினர். இவர்கள் அமைதியாக இருக்க சந்தடி கேப்பில் இளவேனில் தான் உள்ளே புகுந்து அங்கே வந்து நிற்க அதைப் பார்த்த நித்யா வேகமாய் விவானை பின்னே தள்ளிவிட அவன் சென்று இடித்துக்கொண்டான். நல்லவேளை குழந்தைக்கு எதுவும் புரியவில்லை! அவளோ அம்மா என்று நித்யாவை நெருங்க, எல்லோரும் ஆஜராகினர். விவான் தான் தலையைத் தேய்த்துக்கொண்டிருக்க,
"மச்சான் அடி பலம் போல?" என்று ஹேமா அவனை வார,
முறைத்தான் விவான்.
அதற்குள் இளங்கோ கேக்கை கொண்டுவர எல்லோரும் கேசுவலாய் இருக்க நித்யா தான் "எப்படி?" என்று ஆச்சரியப்பட,
விவான் அவளைப் பார்த்து கண்ணடித்து எப்படி என்றவாறு புருவம் உயர்த்த, அவளும் பதிலுக்கு கண்ணடித்து சூப்பர் என்று சைகை செய்ய,
"எப்பா சாமிங்களா நாங்களும் இங்க தான் இருக்கோம், கொஞ்சம் கவனித்தா நல்லா இருக்கும்"
"எப்படிடா?" என்று நித்யா கேட்டேவிட,
"அதெல்லாம் அப்படித்தான்"
உடனே கேக்கை பிரித்து கேண்டில் ஏற்ற, அதற்குள் கேக்கைப் பார்த்த இளவேனில் துள்ளி குதித்து அவள் அந்த கத்தியை எடுத்துக்கொண்டு நான் தான் வெட்டுவேன் என்று அடம் பிடித்தாள்.
விவானோ, "பட்டுகுட்டி அம்மாக்கு தானே இன்னைக்கு பர்த்டே சோ அம்மா தான் வெட்டணும்" என்று சொல்ல அவளோ,
"ஹ்ம்ஹூம் நான் தான் வெட்டுவேன்" என்று அடம் பிடிக்க, நித்யா தான், "சரி நாம சேர்ந்து வெட்டுவோமா?"
"ஹம்ம்" என்றுதலையை ஆட்ட நித்யா இளவேனிலின் கையை பிடித்து கேக்கை வெட்ட எல்லோரும் ஆரவாரமிட்டு கூச்சலிட்டனர். அந்த சப்தத்தில் அந்த கம்பார்ட்மெண்ட்டே கொஞ்சம் திரும்பி பார்க்க எல்லோரின் முகத்திலும் சிரிப்பு.
வெட்டிய கேக்கில் முதலில் நித்யா எடுத்து இளவேனிலுக்கு ஊட்ட அடுத்து விவான் என்று எல்லோருக்கும் வந்தது. அப்போது தான் அதி முக்கியமான சந்தேகத்தைக் கேட்டாள் மௌனி,
"யாரு கேக் வாங்குனது?"
"ஏன்?" - ஹேமா
"இங்க பாருங்க அக்காக்கு 30த் பர்த்டேன்னு போட்டிருக்கு"
விவியன் மற்றும் அவளைத் தவிர எல்லோரும் சிரித்தனர்.
"ஏன் சிரிக்கறீங்க? அண்ணா அப்போ நீங்க வயசுல பெரியவரா?" என்று விவானைப் பார்த்து கேட்க மீண்டும் சிரிப்பு வெடித்தது. அவனோ ரொம்ப பொலைட்டாக "ஐ அம் 27" என்று சொல்ல,
"நீங்க சொல்றதைப் பார்த்தா நித்யாகா உங்களைவிட வயசுல பெரியவங்கனு சொல்லுவீங்க போல?" என்று அவள் கேசுவலாய் கேட்டு கேலியாக சிரிக்க,
"இருந்தா என்ன தப்பு?" விவான் கேட்க,
முதலில் அதை உணராமள் இருக்க, விவியன் கேட்டான் "அப்போ?"
"எஸ் ஷி இஸ் எல்டெர் டு மீ" (அவள் என்னை விட பெரியவள்)
"வாட்?" இப்போது மேலும் அதிர்ந்தாள் மௌனி.
"அக்கா இவரு சொல்றது?"அவ்ளோ தலையை ஆட்ட,
"ஹோலி ஷிட் அக்கா எல்லோரும் என்னை பிராங்க் பண்ணலையே?"
"ச்சே ச்சே" இப்போது அவளைத் தவிர எல்லோரும் கேக்கில் கவனமாக இருந்தனர். விவியன் சித்தாராக்கு கேக்கை எடுத்துக்கொண்டான். மிரு அனேஷியாவுக்கு எடுத்துக்கொண்டாள். துவாராவும் வேகவேகமாய் எடுத்தான்.
ஜிட்டன் தான் சின்ன பையன் போல கேக்குக்கு சண்டைப் போட்டுக் கொண்டிருந்தான்.
"இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்" என்று மௌனி தீவிரமாக கேட்க அதற்குள் விவானின் தாய் அவளுக்கு அழைக்க, ஹேமா இளங்கோ இருவரும் மீதி கேக்கை அங்கிருந்தவர்களுக்கு கொடுத்தனர். எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தவள் விவியனைப் பார்க்க அவனும் தெரியாது என்று சொன்னான்.
இந்த ஸ்டோரி முன்ன பின்ன நான் லீனியரா போகும். அதாவது இப்போது மணி 7 .30 என்று காட்டியுள்ளேன் . அடுத்த எபியில் மீண்டும் காலை 05.30கு போகும். ஒரே சமயம் நடக்கும் நிகழ்வுகளை இப்படித்தான் தர முடியும்.
மணி காலை 05 .15,விஜயவாடா
அங்கே தங்கள் கம்பார்ட்மெண்டில் ஏறிய அப்பெரியவர் நடக்கமுடியாமல் தள்ளாடி வர பின்னால் வந்தவள் லக்கேஜ் எடுக்க போக
"சரித்திரா என்னை உட்கார வெச்சிட்டு போம்மா"
"சரி தாத்தா"
அவளின் பெயரையே உச்சரித்துப் பார்த்தவன் அவனையும்(துவாரகேஷ் ) அறியாமல் ஒரு சிரிப்பு அவன் உதட்டோரம் வந்தது. அவளையே இப்போது பார்கலானான். அவள் மீண்டும் தன் தாத்தாவின் அருகில் வந்து அவரின் கையைப் பற்றி அங்கே அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சீட்டிற்கு வர அது இவனின் எதிர் சீட் ஆனது. ஒரு மாதிரி அவன் மனமெல்லாம் படப்படவென அடித்தது. மீண்டும் கண்கள் அவளை வட்டமடித்தது. அவனுக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது. அதாவது ஒரு பெண்ணை இப்படி 'எம்பேரேஸ்' செய்யுமாறு பார்த்தலும் ஒரு வகையில் பெண்களுக்கு எதிரான வன்முறையே என்று எண்ணுபவன். பின்னே அடிக்கடி கீர்த்தனா வெளியே எங்கேயாவது சென்றுவிட்டு வந்தாள் இதைப் பற்றியல்லவா பாட்டு படிப்பாள். அப்போது அவன் நாடி நரம்பெல்லாம் புடைக்கும். ஆனால் இன்று தானே இப்படி நடந்துக்கொள்வது அவனுக்கே கேவலமாய் இருந்தது. இருந்தும் அவள் மீது அலைபாயும் கண்களை மட்டும் அவனால் எடுக்க முடியவில்லை.
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ

நிலைபெயறாது சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா
என்மனம் அலைபாயுதே கண்ணா ஆ ஆ

மேற்சொன்ன பாடல் கண்ணனை நினைத்து பாடப்பட்டதாகும். இதுவே male வெர்சனாக இருந்தால் இப்படி தான் இருக்கும் போல!
தன் தாத்தாவை உட்காரவைக்கும் போது அவர் தள்ளாமையில் முகம் சுளிக்கும் போதெல்லாம் அவள் உதடும் சுளித்தது. கண்களில் காருண்யம் முகத்தில் அமைதி அவளின் எண்ணதை மட்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை துவாராவால். அவள் சென்று தங்கள் உடைமைகளை எடுத்து வர அவரோ முடியாமல் அங்கே படுக்க ஆயத்தமானார். கொஞ்சம் தடுமாற உடனே அவருக்கு உதவியவன் அவரை படுக்க வைத்தான்.
"தேங் யூ எங் மேன்" என்று அவர் புன்னகையிட,
இப்படி திடீரென ஆங்கிலத்தில் பேசுவார் என்று எதிர்பாராதவன், "யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்" என்று பதிலுக்கு புன்னகைத்தான். அவர் படுத்துக்கொள்ள அவள் பின்னாலே வந்தாள்.
அவரின் இந்த நிலமையைப் பார்த்து எதையோ சொல்ல வாயை எடுத்தவள் எதையும் சொல்லாமல் அமைதியாக அதைக் கண்டுக் கொண்டனர் இருவரும்.
"என்னடா எதையோ சொல்ல வந்து நிறுத்திட்ட?"
"சொன்னா மட்டும் கேட்டுடுவீங்களா?" ஆனாலும் அதில் கடுமை இல்லை. ஒரு வித ஆற்றாமையே இருந்தது.
அவர் சிரித்துக்கொண்டு, "உன்னை நான் தொந்தரவு செய்யுறேனில்ல?"
"நான் இப்போ அப்படி சொன்னேனா? எதுக்கு இந்த வயசுல அதும் இப்படி சிரமப்பட்டு போகணும்னு தான் கேட்குறேன்? அப்படியே பாசம்" என்று ஆரமித்தவள் அமைதியாக நிறுத்த,
"முடிமா. பாசம் பொத்துக்கிட்டு வருதோன்னு தானே கேட்க வந்த?"
"நான் எதையும் கேட்கல" என்றவள் தன் செல்லை எடுத்து யாருக்கோ அழைத்தாள், "ஆம் ட்ரெயின் எறியாச்சு"
.........
"சரிம்மா பார்த்துக்கறேன்"
அவள் வைத்துவிட, "யாரு பானுமதியா?"
"ஆமா" அவர் முகம் ஒருகணம் மாறி பழையபடி வந்தது. ஏனோ இதையெல்லாம் எதிரிலே அமர்ந்து கூர்மையாக கவனித்துக்கொண்டிருந்தான் துவாரா. அவனுக்கே இது நாகரிகம் இல்லை என்று தெரிந்தாலும் எதற்காக போகிறார்கள் என்று அறிந்துக்கொள்ள அவனுக்கு ஒரு ஆவல்.
"சரி தாத்தா பார்த்து இருந்துக்கோங்க எனக்கு அடுத்த கம்பார்ட்மெண்ட். எதாவதுனா கூப்பிடுங்க" என்றவள் ஏனோ இப்போது தான் துவாராவையே பார்த்தாள். அவள் பார்க்கும் பொருள் அவனுக்கும் புரிந்தது. "நீங்கள் வேண்டுமானால் என் இருக்கைக்கு மாறி செல்கிறீர்களா?" என்பது தான் அவள் பார்வையின் பொருள். அதை அவன் உணராமல் இல்லை. ஒருவேளை வேறுயாராவது இருந்திருந்தால் கேட்காமலே அவன் சொல்லியிருப்பான். ஆனால் இப்போது? யோசித்தான்.
"எக்கியூஸ் மீ"
அவள் திரும்ப, "நீங்க வேணுனா தாராளமா இந்த" அங்கே காலியாக இருந்த இடத்தைக் காட்டி "இருந்துக்கோங்க" என்றதும்,
அவள் யோசிக்க, "அங்க உட்காருங்க யாராவது வந்தா மாற்றிக்கொள்ளலாம்"
அவள் இன்னமும் தயங்க,
"அப்படி யாராவது வந்தா நீங்க மாறவேண்டாம். என் ஃபிரண்ட்" என்று தூங்கும் விவியனைச் சுட்டி "அவன் போவான் உங்க இடத்துக்கு. சோ டோன்ட் ஒர்ரி" (ஏன்டா நீ வேணுனா போவேன். அது எதுக்கு சும்மா இருக்குற விவியனை கோர்த்துவிடுற. அவனே பல வருஷங்களுக்கு பிறகு அவன் வாழ்க்கையில ஒரு ஒளியைப் பார்த்திருக்கான். நல்லா வருவீங்கடா நீங்க? இந்த ஹீரோக்கு ப்ரெண்டா மட்டும் இருக்கவே கூடாது. நீ கவலைப் படாதடா விவி நான் இருக்கேன்)
அவள் சரியென்று அங்கேயே செட்டில் ஆகினாள்.
அவன் எண்ணம் மட்டும் அவளையே சுற்றிச்சுற்றி வந்தது. ஏனோ இப்போது தான் துவாராவிற்கு இளங்கோவின் நிலைமை புரிந்தது. எப்படி ஒரே முறை ட்ரெய்னில் பார்வதியைப் பார்த்துவிட்டு அவளுக்காக புலம்போ புலம்பென புலம்பி தள்ளவிட்டான். எத்தனையோ முறை வாரணம் ஆயிரம் பார்த்து சூர்யாவையும் கௌதமையும் கழுவிக்கழுவி ஊற்றியிருக்கிறான். "பின்னே எப்படி டா ஹீரோக்கு பக்கத்துலே ஹீரோயின் வருவார்களாம் என்று, நானும் எத்தனை வருஷமா ட்ரைன்ல போயிட்டு வரேன் எனக்கு மட்டும் ஒரு தடவைக் கூட இப்படி நடந்ததில்லை" என்று சொல்லி ஆதங்கப்பட்டவனின் குரல் கடவுளுக்குக் கேட்டுவிட்டது போல,
இப்படியெல்லாம் சொல்லுவதால் அவளை சமீரா ரெட்டி என்று நினைத்துவிட வேண்டாம். அவள் அப்படியெல்லாம் ஒன்றும் அழகில்லை. ஐ மீன் பார்த்ததும் ஸ்பார்க் வருமளவிற்கு எல்லாம் பியூட்டி இல்லை. ஆனால் கேர்ள் நெக்ஸ்ட் டோர் (நம் அக்கம் பக்கத்துக்கு பெண்ணைப் போல) என்பார்களே அப்படி தான் இருந்தாள். மிக சாதாரணமாக ஒப்பனைகள் துளியுமில்லாமல். பட் சம்திங் இஸ் டெபென்னெட்ல்லி தேர் வித் ஹர் (அவளிடம் ஏதோ இருக்கிறது. நிறைய இங்கிலிஷ் சென்டென்ஸ் தான் வருது. அதுக்கு ஈகுவலான தமிழ் சென்டென்ஸ் போட்டா அந்த பீல் வரல, அதுனால தான் இப்படி அதுக்கான மீனிங் சேர்த்து போடுறேன்,சாரி)
அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கும் போதுதான் விவான் அவனை அழைத்தான் (போன எபி). அவனிடம் பேசியவன் மீண்டும் கல்கியை எடுக்க அப்போது நந்தினியின் அழகைப் பற்றி ஊர்மக்கள் பேசுவதாய் கல்கி சொன்னதெல்லாம் படிக்க அவன் ஒவ்வொருமுறையும் திரும்பி சரித்திராவைப் பார்த்தான். அது ஏனென்று தான் அவனுக்கும் விளங்கவில்லை. இருந்தும் அப்போது தான் அவனுக்கு அவனின் லட்சியங்களே நினைவுக்கு வந்தது. ஒருகணம் திடுக்கிட்டவன், "நானா? அதும் திரும்ப ஒரு பொண்ணு பின்னாடியா?" அவளின் நினைவு வர மீண்டும் மனம் ஊஞ்சலாட திரும்பி அவளைப் பார்த்தான். ஏனோ 'இவள்' 'அவள்' போல் இருக்க மாட்டாள் என்று அவன் மனம் சொன்னது. மனம் சொன்னது என்பதைக் காட்டிலும் அப்படி இருக்கக்கூடாது என்று மனம் மன்றாடியது மட்டும் நிச்சயம். மீண்டும் குழப்பங்களுக்குச் சென்றவன் அப்படியே கண்களை மூடினான்.
......................................................
அங்கே காலையில் விவானை எழுப்பி அவனிடம் உரையாடிக்கொண்டிருந்த இளங்கோ தியானேஷ் ஆகியோரின் பேச்சு சப்தம் மட்டும் சிரிப்பொலியில் விழித்த இஸ்மாயில் மணியைப் பார்க்க அது ஐந்து தான் என்றதும் அவன் திரும்பி லோகேஷப் பார்த்துவிட்டு உறங்கினான். அவனுக்கு இப்படி பகலில் விடிந்த பிறகும் நன்றாக உறங்கவேண்டும் என்று நீண்ட நாட்கள் ஆசை. ஆனால் பாவம் காலையிலே நமாஸ் செய்யவேண்டும் என்று எழுந்துக்கொள்வான். சரியென்று ரெஸ்ட் ரூம் சென்றுவந்து அங்கேயே ஒரு துணியை விரித்து நமாஸ் செய்ய அமர அதைக் கவனித்த தியா மற்ற இருவரையும் அழைத்துக்காட்ட இப்போது மூவரும் கப்சிப் ஆனார்கள். அவன் செய்வதையே கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அவன் மீண்டும் வந்து படுத்துக்கொள்ள இப்போது என்ன செய்வதென்றே புரியாமல் இருந்தனர் மூவரும . பின்னே இவ்வளவு சரியாக இருப்பவனைப் பார்த்து ஆச்சரியம் தான் கொண்டனர்.
......................................................
காலையிலே விழித்துக்கொண்டாள் ரேஷா (ரேஷா என்றால் இறகு என்று பொருள். பெரிய ஆடம்பர குடும்பமும் இல்லை மிடில் க்ளாஸும் இல்லை. இரண்டுக்கும் இடையில். ஸ்டாட்டிஸ்டிக்சியன் (statisticsian - புள்ளியியலாளர்). அப்படினா சேகரிக்கிப்பட்ட டேட்டாக்களை எல்லாம் உபயோகித்து தேவையானவற்றை கணக்கிட்டு கொடுக்கும் வேலை. சூர்யா இன்ஸயிட்ஸ்ல் ஒரு முக்கிய பணியில் இருப்பவள்.) வீட்டிற்கு ஒரே பெண். எல்லா திருட்டுத்தனத்தையும் செய்து ஆனால் எதிலும் மாட்டாமல் சிலர் இருப்பார்களே அப்படிப்பட்டவள். ஊமைகுசும்பி.
விருப்பப்பட்டு தான் ஸ்டாடிஸ்டிக்ஸ் படித்தாள். அதற்கான வேலையும் கிடைத்தது. அதையும் விரும்பித்தான் செய்கிறாள். பொதுவாக இந்தமாதிரி டேட்டாக்களை எடுக்கும் இடத்திற்கு எல்லாம் இவள் போகமாட்டாள். போனதில்லை. ஆனால் இம்முறை நார்த் ஈஸ்ட் என்பதால் அவர்களோடு தொத்திக்கொண்டு வந்துவிட்டாள். வீட்டில் அலைன்ஸ் பார்க்கிறார்கள். பண்ணா லவ் மேரேஜ் தான் என்று இருக்கிறாள . ஆனால் யாராவது நெருங்கி வந்தாள் கிட்டவே சேர்க்க மாட்டாள் . அவ்வளவு ஏன் குறுகிய வட்டத்திற்குள் வாழ்பவள். ஆனால் ஆசை மட்டும் பெரியது.
இந்த காதல் பண்ணனும்னு ஆசைப்பட்டு ஆனால் காதல் பண்ண முடியாமல் காதல் பண்ணுவர்களைப் பார்த்து பார்த்தே எப்படியாவது காதல் பண்ணிவிட வேண்டும் என்று துடித்து காதலும் செய்யாமல் காதலிக்கவும் செய்யப்படாமல் காதலுக்காக காத்திருக்கும் காதல்காரி. ( புரிஞ்சுதா? கண்டிப்பா புரிந்து இருக்காது. திரும்ப பொறுமையா படிங்க நிச்சயம் புரியும்.)
அவசரமா ஒரு காதல் வேணும் அவளுக்கு. இல்லையேல் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுவிடுவாள். வீட்டில் திருமணப் பேச்சு எடுக்கப்படும் போதெல்லாம் வேண்டாம் என்று சொன்னவள் ஒருவேளை யாரையாவது லவ் பண்ணுகிறாளோ என்று தந்தை கூப்பிட்டுக் கேட்க இல்லை என்று சொல்லி பல்ப் கொடுத்தவள். ஒருவேளை இவள் காதல் செய்தால் இவள் பயப்படவே தேவையில்லை. ஏனெனில் அக்மார்க் அப்பா பொண்ணு. இந்த கல்லைக் கண்டால் நாயை காணோம். நாயைக் கண்டால் கல்லைக்காணோம் என்பார்களே அது இவளுக்கு பொருந்தும். வீட்டில் பர்மிசன் இருந்தும் இவளுக்கு ஆள் இல்லை. இவளோடு படித்தவர்கள் எல்லாம் வீட்டில் பர்மிசன் இல்லாமலே காதலித்தனர் . இவளோ? அதற்கு காரணம் ஒருவன்.
சரி அதுக்கெல்லாம் நாம சரிபட்டுவர மாட்டோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள். பார்ப்போம்! (பயணங்கள் முடிவதில்லை...)
சில தவிர்க்கமுடியாத காரணத்தால் நேற்று அப்டேட் கொடுக்கமுடியலை. இனி தவறாமல் கொடுக்கிறேன். நன்றி. கதை எப்படி இருக்கு? பிடிக்குதா பிடிக்கவில்லையா?
 
Top