Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-10

Advertisement

praveenraj

Well-known member
Member
அங்கோல் ரயில் நிலையத்தில் சரியாக ஒரு நிமிடம் தான் நின்றது திப்ருகார்க் எக்ஸ்பிரஸ். அதற்குள் தன் பிரியாவிடையை ஒரு பெருத்த அறைகூவலின் வாயிலாக சொல்லிவிட்டு மெதுவாக கிளம்ப அப்போது அங்கே துவாராவின் கம்பார்ட்மெண்டில் இரண்டு நபர்கள் ஏறினார்கள். இருவரும் சுமார் 60 வயது மதிக்கதக்க ஜோடிகள். அவர்களை வழியனுப்ப வந்தவர்கள் அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு "பார்த்து பத்திரம் மாமா போயிட்டு போன் பண்ணுங்க நான் சகல கிட்ட சொல்லிடுறேன்" என்று சொன்னார். (அவர்கள் உரையாடியது தெலுங்கில். ஓரளவுக்கு புரியும்படி தான் இருந்தது.) மணியைப் பார்த்தான் துவாரா. அது விடியற்காலை 03 .10. அவர்கள் இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டே வந்து அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்தனர். லயிட் போட்டு தங்கள் உடமைகளை வைத்து பார்க்க அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான் துவாரா.
அவனின் நினைவு எல்லாம் ஸ்ரீதர் மீதே இருந்தது. அவரும் இப்படித்தான். இந்த காலத்தில் பெற்றவர்களைப் பிள்ளைகளே பார்த்துக்கொள்ள தயங்கும் போது மாமனார் மாமியார் என்றாலும் இப்படி கவனித்துக்கொள்ளும் மருமகன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எவ்வித முகசுளிப்பும் இல்லாமல் உண்மையான அன்போடு அல்லவா இருக்கிறார். கீர்த்தனா பார்த்துக்கொள்கிறாள் என்றால் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அவளுக்கு அவர் தந்தை. ஆனால் ஸ்ரீதருக்கு அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று என்ன தலையெழுத்து? ஒருபக்கம் அவனின் மாப்பிள்ளை மீது கர்வமாக இருந்தாலும் தான் செய்யவேண்டியதை செய்யாமல் தன் தங்கையிடமும் மாப்பிள்ளையிடமும் அந்த பாரத்தை ஒப்படைத்துவிட்டு இப்படி நிம்மதியாக சுற்றுலா செல்கிறேனே என்று அவன் மனம் அவனைக் குத்தியது. சுற்றுலா செல்லவில்லை என்றாலும் கூட அவரை இவன் பார்த்துக்கொள்ள மாட்டான். அவன் மனம் ஏனோ மாறவேயில்லை. அவருடன் பேசி கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்டது. மனம் பாறையைப்போல இறுகியது. மூச்சை ஆழமாக இழுத்து விட்டான். ஏனோ உடனே அவன் மருமகனை (கீர்த்தனாவின் பையன் ) பார்க்கவேண்டும் என்று தோன்ற அவன் செல்லில் இருக்கும் அவனின் புகைப்படத்தை பார்த்து சிரித்துக்கொண்டான். அதில் அடுத்தடுத்து வந்த புகைப்படங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தவன் அப்படியே கண்களை மட்டும் மூடி பழைய நினைவுகளுக்குச் சென்றான். அவனையும் அறியாமல் அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. ஒருவேளை அப்படி நடந்திருக்காவிட்டால் அவன் வாழ்க்கை மாறியிருக்குமோ? என்று ஒரு நப்பாசை. இருக்கலாம் என்று நினைக்க ஏனோ அவனையே அறியாமல் அந்த இன்சிடென்ட்டும் நினைவுக்கு வந்தது. அவன் உடலெல்லாம் நடுங்கி கூசியது. சொல்லமுடியாத ஒரு நிலை. எழுந்தவன் நேராக ரெஸ்ட்ரூம் சென்று முகத்தில் உடலில் தண்ணீரைத் தெளித்துக்கொண்டு வந்தான். இது இவனின் வழக்கம் தான். எப்போதெல்லாம் அவனுக்கு இப்படித் தோன்றுகிறதோ உடனே அவன் குளித்துவிட வேண்டும். அப்படிச்செய்தால் ஏனோ நெஞ்சில் ஒரு ஆத்ம திருப்தி.
வந்தவன் தன் சகாக்களைப் பார்க்க விவியன் கண்களை மூடியபடியே காதில் ஹெட் போனுடன் உறங்கியிருந்தான். இது அவன் அடிக்கடி செய்வது தான். பாட்டு கேட்டுக்கொண்டே அப்படியே உறங்கிவிடுவான். பலமுறை திட்டியுள்ளான். என்ன செய்ய சிலருக்கு தனிமையை விரட்டவும் சில கசப்பான நினைவுகளை மறக்கவும் பாடல் ஒருவகையில் உதவுகிறது. விவியனுக்கு அந்த பாக்கியம் கிட்டியதில் துவாராவுக்கு சந்தோசமே. பின்னே அவனுக்கு இந்த மாமருந்து கிட்டவில்லையே? சொல்லப்போனால் அவனுக்கு பாடல் தான் இன்னமும் அவன் நினைவுகளை கிளறிவிடும். பிறகு இருக்கும் நிம்மதி கூட பறந்துவிடும்.
செபாஸ்டின் என்ன செய்கிறான் என்று எட்டிப்பார்க்க அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனின் நிலையும் இப்படி இருக்கிறதே என்று அவனுக்கு கவலை. ஏனோ இப்படி கவலை தோய்ந்த முகத்துடனே மூவரும் இருப்பது அவனுக்கு ஒரு மாதிரி நெருடலாக இருக்க சற்று நடப்போம் என்று அவன் நித்யா மிரு இருக்கும் கம்பார்ட்மென்டுக்கு போக ஏதோ நினைத்தவனாய் "இல்ல பெண்கள் இருக்கும் கம்பார்ட்மெண்ட் இன்னும் விடியவேயில்லை. எப்படியும் தூங்கிக்கொண்டு தான் இருப்பார்கள் ஏன் அவர்களை தொந்தரவு செய்யவேண்டும்?" என்று நினைத்து இவன் இங்கேயே அமர்ந்து சில புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தான்.
மொபைல் எடுத்து அடுத்த நிறுத்தம் எங்கே என்று பார்த்தவன் விஜயவாடா என்றதும் கொஞ்சம் நிம்மதி அடைந்தான். அங்கே 10 நிமிடங்கள் வண்டி நிற்கும். ஆனால் வானிலை தான் ஒரு மாதிரி இருப்பதாகவே துவாராவிற்குத் தோன்றியது. அப்போது நியூஸ் படிக்க (மொபைல் ஆப்பிள் தான்) 'மாஹி ' நாளை மாலை 6 மணியளவில் ஒடிஷா கடற்கரையை ஒட்டி வங்கக்கடலில் கரையை கடக்கவிருக்கிறது என்றும் மேலும் அது அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இருந்ததைப் பார்த்தவன் உடனே செக் செய்ய அப்போது தான் பார்த்தான் இவர்கள் புவனேஷ்வரை இன்று (பொழுது விடிந்துவிட்டது) மாலை 06 .45 போல தான் சென்றடைவார்கள் என்று படித்ததும் இவனுக்கு என்னவோ ஒரு மாதிரி இருந்தது மட்டும் நிச்சயம். இவர்கள் புறப்படும் வரையில் அது சாதாரண புயலாக இன்னும் சொல்லப்போனால் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மட்டுமே இருந்தது. இப்போது என்னவென்றால் அது புயலாக வலுப்பெறும் என்றும் சொல்லப்படுவதால் அவனுக்கு இந்த பயம். இதனால் பயணம் ஏதேனும் தடைபடுமோ? என்ற சிறு அச்சமும் கூட ஏற்பட்டது.
தூக்கம் விட்டதற்கு பிறகு மீண்டும் தூக்கம் வருமே, அது எப்போதும் இதம் தான். இன்றும் அப்படியே துவாராவை அந்த தூக்கம் வருட அப்போது சாய் சாய் என்று ஒருவர் செல்ல அவனும் வாங்கி பருகினான். ஏனோ அவனுக்கு இப்போது தூங்க கூடாது என்று தோன்றியது.
அவன் பையிலிருந்த கல்கியை எடுத்தவன் வந்தியத்தேவனோடு காஞ்சியிலிருந்து ஆதித்த கரிகாலன் கொடுத்த செய்தியை சுமந்துக்கொண்டு பாழையறை வரை சென்றுக்கொண்டிருந்தவன் வீரநாராயணபுரம் ஏரிக்கரையில் ஆடிப்பெருக்கை கண்டுக்கொண்டே சென்றான். அத்தனை செழிப்பாக பண்டைய தமிழ்நாட்டை விளக்கியிருந்த கல்கியின் வரிகளில் மெய்மறந்து படித்துக்கொண்டிருந்தான். இந்த பொன்னியின் செல்வன் அவனுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். புக்ஸ் படிக்க ஆரமித்தவன் முதலில் படித்த நாவல் இது. அவன் பனிரெண்டாவது விடுமுறையில் வெறும் 7 நாட்களில் காலையிலிருந்து இரவுவரை இடைவிடாது படித்து முடித்தான். அதை இப்போது மீண்டும் அசைப்போட்டான்.
இந்த புத்தகம் அவனுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். அதற்கொரு காரணம் உண்டு. இப்படியொரு புத்தகத்தையே அவளின் வாயிலிருந்து தானே கேள்விப்பட்டான். அதும் மூன்றாண்டுகள் கழித்து தானே படித்தான்.
வாழ்க்கை எவ்வளவோ மாறிவிட்டது . மாற்றி விட்டது . ஆனால் இடையில் நாம் பழக்கப்படுத்திக்கொண்ட சில பழக்கங்கள் மட்டும் மாறவேயில்லை . மாறவேயில்லை என்பதைக்காட்டிலும் மாற்றிக்கொள்ள விரும்பவேயில்லை என்பது தான் நிதர்சனம்.
இடையில் முழித்த செபாஸ்டின் ரெஸ்ட் ரூம் சென்றுவந்து தூங்காமல் முழித்திருக்கும் இவனைப் பார்த்து, "என்னடா தூங்கலையா?"
"இல்ல மச்சி தூக்கம் வரல"
"தூக்கம் வரலையா இல்ல தூங்க முடியலையா?"
ஏனோ அவனின் கேள்வியில் இருந்த உள்ளர்த்தம் துவாராவிற்கு நன்கு புரிந்தது. அவன் எதுவும் சொல்லாமல் ஒரு புன்னகையை உதிர்த்தான்.
"நீயேண்டா இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?" அவனுக்கும் ஓரளவுக்கு காரணம் தெரியும் தான். இருந்தும் இந்த கேள்வியை இதுவரை நேரிடையாக துவாரவிடம் அவன் இப்போது தான் கேட்கிறான்.
"கல்யாணம் எல்லா எதுக்கு?" என்றவன் புன்னகையை சிந்த, "என்னடா நைட் நான் கேட்ட கேள்விக்கு நீ இப்போ என் வாயாலே பதிலை சொல்ல வெக்கிறாயா?" (இரவு அவர்கள் இங்கே வந்ததும் செபாவிடம் பேச முயற்சித்த துவாராவிற்கு அவன் இட்ட கண்டிஷன் ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன்)
"ச்சே ச்சே அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா தான் கேட்டேன்"
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மச்சி, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அதுகப்புறோம் வேணுனா பார்க்கலாம்..."
"அதென்ன வேணுனா? யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்" என்று சொன்னவன் அந்த இன்பத்தில் ஒரு அழுத்தம் தர,
"மச்சி இது என்னவோ வரம் மாதிரி தெரியிலையே சாபம் மாதிரி தெரியுதே?"
"ச்சே ச்சே எல்லோரும் செபாஸ்டினா என்ன?" என்று அவன் சிரிக்க இப்போது துவாரவின் முகம் வெளிறியது. இப்பொது என்ன பதில் சொல்லவேண்டும் என்றும் இவனுக்கும் தெரியவில்லை.
"சரிமச்சி சும்மா தான் கேட்டேன். ஏதும் தப்பா எடுத்துக்காத, அண்ட் என்ன பார்த்தெல்லாம் முடிவை எடுக்காத பை"
கல்யாணம் இதில் துவாராவிற்கு பெரிய உடன்பாடு இல்லை. அதற்கு அந்த ஒரு கேள்விதான் காரணம். என்றோ 'அவர்' வாயிலிருந்து வந்த அந்த கேள்வி அவனுள் பெரிய பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டும் நிச்சயம். சொல்லப் போனால் அது தான் நிஜம். அன்று கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு அப்போது ஒரு ரெடிமேட் பதிலை தந்திருந்தாலும் அது அவன் மனதார சொன்ன பதிலில்லை தான். அன்றைய சூழ்நிலையில் அவருக்காக அப்படி பரிந்துபேசும் நிலை. இன்றுவரை அந்த கேள்வி தான் அவனை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த கேள்வி கேட்டவரும் தான்.
முகத்தில் இன்னதென்று சொல்ல முடியாத உணர்வு.
ஆதவன் காலையில் தன் செங்கதிரைப் பரப்ப வண்டியானது இவ்வளவு நேரப் பயணத்துக்கான ஓய்வை எடுக்க காத்திருந்தது. வண்டி விஜயவாடாவில் 10 நிமிடங்கள் நிற்கும்.
செபாவிடம் பேசிவிட்டு கொஞ்சநேரம் மீண்டும் ஏதேதோ நினைவலைகளுக்குச் சென்றவன் பிறகு 'ஆழ்வார்கடியானின் ' சொல்நயத்தில் ஆட்கொண்டவன் மீண்டும் கல்கியை வாசித்தான். அங்கே செபா, விவி உட்பட யாருமே எழும் மனோநிலையில் இல்லை. வண்டி மெதுவாக சென்று நிற்க யாராவது ஏறுவார்களா என்று இவன் பார்க்க இவனின் எண்ணம் மாறாமல் சிலர் ஏறினார்கள். குறிப்பிடும் படி பார்த்தால் ஒரு முதியவர். முதியவர் என்றால் அநேகமாக இல்லை நிச்சயமாக 75ஐ கடந்திருப்பார். அவர் நடையே சொன்னது அவர் வயதை. இந்த வயதில் அதும் இவ்வளவு காலையில் ட்ரைனில் செல்லும் அளவிற்கு அப்படி என்ன நடந்திருக்கும் அவர் வாழ்வில்? அவருக்கு துணையாக ஒரு இளம்பெண். வயது 20 -24 இருக்கும். யார் அவர்கள்? எங்கு செல்கிறார்கள்? அவர் முகத்தில் ஒரு பதட்டம் கவலை தென்பட்டது. ஆனால் அவரோடு வந்த அவளோ அவ்வளவாக கவலை பட்டதாக தெரியவில்லை. ஆனால் அப்பெரியவர் ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்க அவருக்கு உறுதுணையாக இருந்தாள். ஏனோ அவளின் உடை பாடி லாங்குவேஜ் இரண்டும் வித்யாசமாக குறிப்பாக முரணாக இருந்தது. அவள் உடை மாடெர்னாக, வெறும் நைட் பாண்ட் டீ ஷர்ட் அணிந்து போனிடைல் இட்டு இருக்க அவளின் தாத்தா (எப்படியும் தாத்தாவாக தான் இருக்கும். அவர்களின் வயது வித்தியாசம் அப்படி) அதற்கேற்றாற் போல் ஜீவா பார்த்து பார்த்து என்று சொல்ல, நிச்சயம் தாத்தாவாக தான் இருக்கும். இவ்வளவு உரிமை கூடவே பாசம், அவன் கண்கள் அவளை விட்டு நீங்க மறுத்தது மட்டும் நிச்சயம்.
அவள் லக்கேஜ் எடுக்க போக,
"சரித்திரா, என்ன உட்கார வெச்சிட்டு போம்மா..."
"சரி தாத்தா"
"சரித்திரா" ஏனோ ஒருமுறை அதை சொல்லிப்பார்த்தான், 'சரித்திரா' ஸ்ட்ரேஞ் நேம். அதும் இவளுக்கு, இவ்வளவு மார்டெனாக இருப்பவளுக்கு என்று வியந்தான்.
அதிகாலை மணி 5ஐ கடந்து 15 நிமிடங்கள் இருக்கும். வண்டி நகராமல் நிற்பதைப் போலே உணர்ந்த இளங்கோ கண் விழித்துப் பார்க்க சற்று வெளிச்சமாக தெரிந்தாலும் மணி என்னவென்று பார்க்க செல்லை எடுத்தவன் அதைப் பார்த்து ஏதோ தோன்றியவனாய் "இன்னைக்கு, ஐயோ இதையெப்படி மறந்தேன்?' என்று தலையில் அடித்துக்கொண்டவன் திரும்பிப் பார்க்க அங்கே விவான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். தியானேஷும் அப்படியே தூக்கத்தில் இருக்க, "டேய் தியா தியா..."
"அம்மா போமா, இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன்" என்று சொல்ல கடுப்பானவன் "நல்லா சொகுசா வளர்த்து விட்டிருக்காங்க" என்று தலையில் அடித்துக்கொண்டு, "எரும மாடே எழு டா" என்று ஓங்கி முதுகில் ஒன்றை வைக்க,
"ஐயோ நானில்லை என்னை விட்டுடுங்க, நான் வேணாம் வேணாம் வேணாம்னு தான் சொன்னேன்" என்று பிதற்றி எழ,
"என்னடா ஆச்சு? ஏன் இப்படி?"
"நான் எங்க இருக்கேன்?"
"ஹாம் எமலோகத்துல..."
"மச்சான் அப்போ நீயும் செத்துட்டையா? கிலாடு டு மீட் யூ, சாவுல கூட நிம்மதியா இல்லாம உன்கூடவே சேர்ந்து வந்திருக்கேன். பாரு என் கிரகம். ஆமா என்ன மேட்டரு எதுக்கு இப்படி எத்துனை?"
"இன்னைக்கு என்ன நாளு ஞாபகம் இருக்கா?"
"ஹாம் நம்ம இறந்த நாளா? விஷ் யூ எ ஹாப்பி டெத் டே"
"எருமை இன்னைக்கு நித்யா பர்த் டே தானே?"
"அப்படியா?"
"என்ன அப்படியாவா?"
அவன் தன் மொபைல் எடுத்து பார்க்க fb நோட்டிபிகேஷன் வர, "ஆமா டா. இப்போ என்ன பண்றது?"
"பேன்ட்ரில கேட்கலாமா?"
"இவ்வளோ பதட்டம் எல்லாம் வேணாம் மச்சி. எப்படியும் விவா ஏதாவது பிளான் பண்ணியிருப்பான். யூ டோன்ட் ஒர்ரி"
"ஒருவேளை அவன் மறந்திருந்தா?"
"அப்போ இன்னைக்கு கண்டிப்பா அவன் டெத் டே தான்" என்று கேசுவலாய் தியா சொல்ல வெடித்துச் சிரித்தான் இளங்கோ.
"என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு? நீயும் தான் குடும்ப இஸ்திரி ஞாபகமிருக்கட்டும், உனக்கும் சேர்த்து தான் சொல்றேன்"
"என் பாரு அப்படியெல்லாம் இல்ல"
"எப்படி?"
"நித்யா மாதிரி அடாவடி கிடையாது"
"ஓ"
"அப்படியும் ஏதுவானலும் என் பாருவை எப்படி கரெக்ட் பண்ணனும்னு எனக்குத் தெரியும்" என்று சொல்லி கண்ணடிக்க,
"ஐயோ அபசாரம் அபசாரம், காலங்காலையில அதும் ஒரு அக்மார்க் விர்ஜின் பையன் கிட்ட பேசுற பேச்சா இது?"என்று போலியாக நடித்து தியா பழிப்பு காட்ட,
"எவெரி டைட் ஹாஸ் இட்ஸ் எப்" (ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு)
"என்ன சாபம் கொடுக்கறியா? போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் தான்" என்று சொன்னவன் தூங்கிக்கொண்டிருந்த விவானை எப்படி இளங்கோ தன்னை எழுப்பினானோ அப்படியே எழுப்ப,
"நித்துமா ஒரு 10 மினிட்ஸ் ப்ளீஸ் ப்ளீஸ்"
"ஏன்டா ஆகமொத்தம் ஒரு நாயும் நாம ட்ராவல் பண்றோம்னு நெனப்பே இல்லாம இருக்கீங்க? ஒழுங்கா மூஞ்சை தட்டு"
"நான் மாட்டேன். மச்சான் பேச்சே ஒரு மாதிரியா இருக்கு. திடீர்னு மூடு வந்து மிஸ்பிஹேவ் பண்ணிட்டானா நான் என்ன பண்றது?"
வெடித்துச் சிரித்தான் இளங்கோ, "மூதேவி எழுப்புடா"
"டேய் விவானு...விவானு"
"நித்து ப்ளீஸ் டி"
கோவம் வந்தவன் ஒரே உலுக்காக உலுக்க எழுந்தவன், "ஏன்டி இப்படி என்று எழ அங்கே இருவரையும் பார்த்து முழித்தவன். நீங்க தானா?"
"ஓ அவ்வளவு இளக்காரமா போச்சில்ல"
"அப்படியில்ல நான் கூட நித்யாவோன்னு பயந்துட்டேன். இப்படி தான் கூப்பிட்டே இருப்பா எழலனா மூஞ்சில தண்ணி ஊத்திடுவா இல்ல ஓங்கி குத்துவா இல்ல..."
"போதும் நிப்பாட்டு. காலங்காலையில கடுப்ப கிளப்பாத"
"ஏன்டா கடுப்பு?"
"மச்சான் அது ஒண்ணுமில்ல சார் இன்னமும் சிங்குலா இருக்காராம் அது தான் கவலை"
"தியா ஒரு உண்மையைச் சொல்றேன் கேளு. ப்ளீஸ் கல்யாணமே பண்ணிக்காதா. இப்படியே இருந்திடு"
கோவம் வந்தவன், "ஏன்டா நானும் பார்த்துட்டே இருக்கிறேன், அதென்ன கல்யாணம் ஆன எல்லோரும் மச்சான் கல்யாணம் வேணாம், சிங்குலா இருனு இப்படியே பேசுறீங்க?அப்போ 14 வருஷமா நான் கண்ட கனவெல்லாம் என்ன ஆகுறது?"
"வேணாம் டா அனுபவப்பட்டவன் சொல்றேன் கேளு"
"அப்படியா தேங்க்ஸ் பார் யுவர் அட்வைஸ். நானும் கல்யாணம் பண்ணிட்டு சொல்றேன். சரியா?"
"விடு மச்சான் சிலதுங்க பட்டா தான் திருந்தும்"
"நாங்க பட்டுக்குறோம். நீ மூடு. ஆமா இவ்வளவு வியாக்கியானம் பேசுறியே இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?"
"என்ன நாளு?"
"மச்சான் என்ன நாளாம். கேக்குறாரு துரை"
"என்ன டா இளா?"
"இன்னைக்கு நித்யா பர்த் டே"
"ஐயோ.மறந்தே போயிட்டேன்" அவன் துள்ளி எழ தியாவும் இளாவும் ஹைபை கொடுத்துக்கொண்டனர்.
"டேய் என்னையா கிண்டல் பண்றீங்க? அசோக் இந்த நாள் உன் கேலண்டர்ல குறிச்சி வெச்சிக்கோ, எப்படி நீங்க என்னை கிண்டல் பண்றீங்களா இதே மாதிரி நானும்..."
"டேய் டேய் நிறுத்து. முதல்ல நீ ஒரு கேலண்டர் வாங்கி நித்யா பிறந்த நாளுன்னு குறிச்சி வைடா. அடுத்தடுத்த வருஷத்துக்காவது உனக்கு உபயோப்படும்"
இப்போது இளா மீண்டும் தியாவுக்கு ஹைபை தர, கோவமாய் எழுந்தவன் ஏதோ யோசித்தவனாய், "டேய் டேய் முதல அந்த துவாரா பையனை பிடிங்க டா. எனக்கு முன்னாடி போய் விஷ் பண்ணிட போறான். அவ்வளவே தான் நான் இன்னைக்கு செத்தேன்" என்று துள்ளி எழுந்தவன் துவாராவுக்கு அழைத்தான்.
"சொல்லுடா"
"எங்க இருக்க?"
"ட்ரைன்ல"
"ஷப்ப்பா நாளைக்கு ஞாபக படுத்து நாளானைக்கு சிரிக்கிறேன்"
"என்ன டா?" (அதில் கொஞ்சம் கடுமை)
"மச்சி என்னாச்சி?"
"நத்திங்"
"சரி நீ அப்போ நித்யாக்கு விஷ் பண்ணல தானே?"
"ஏன் எதுக்கு?"
"அப்பாடா, இன்னைக்கு நித்தி பர்த்டேடா"
அவன் உடனே போன் எடுத்துப் பார்த்தான். "ஐயோ ஆமால மறந்தே போயிட்டேன்"
"நானும் தான்"
"அப்போ இப்பவே நித்யாவைக் கூப்பிடுறேன்"
"டேய் க்ராதகா நில்லுடா. அப்படி எதுவும் பண்ணித் தொலைச்சிடாத" (விவான் மனதில் பெரிய அச்சம் குடிக்கொண்டது)
"சரி சரி, அவ்வளவு பயம்?"
"லைட்டா"
"சரி என்ன சர்ப்ரைஸ்?"
"அது தான் நான் பிளான் பண்ணிட்டேனே"
"அடப்பாவி எப்போடா?"
"அதெல்லாம் அப்படி தான்" அவன் இங்கே இளா தியா இருவரையும் எள்ளலாக பார்த்தபடி சொன்னான்.
இப்போது பல்ப் வாங்குனது இளா, தியா தான்.
"சரி சரி நான் போல, நீயே போய் தொலை"
"இருடா நான் குளிச்சிட்டு பிரெஷ் ஆகி"
"மூடு. நான் சொல்லல ஓகே, அதுக்குள்ள வேற யாராவது சொல்லிட்டா?"
"ஐயோ அவ்வளவு தான் சாமியாடிடுவா"
"தெரியுதில்ல? அப்போ இப்போவே போ"
"ஓகே"
அங்கே அவர்களின் கம்பார்ட்மெண்டில் இன்னும் யாருமே முழிக்கவில்லை. எல்லோரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். இரவு ஜிட்டனை அடித்துவிட்டு அனேஷியாவைத் தேற்றி எல்லோரும் கொஞ்சம் பேசிவிட்டு தான் உறங்கினர். அதனால் இன்னும் யாருமே விழிக்கவில்லை.
.............................................................
கௌஹாதி, அஸ்ஸாம்.
ஏனோ அதிகாலையிலே அவன் விழித்துக்கொண்டான். என்னவென்று சொல்ல முடியாத ஒரு ஆனந்தம். ஆனந்தமா என்றும் தெரியவில்லை. ஒரு மாதிரியே இருந்தான். எழுந்தவன் ரெப்பிரேஷ் ஆகிவிட்டு வழக்கம் போல் ஜாகிங் போக தன்னை ரெடி செய்துக்கொண்டிருந்தான். இது கிட்டத்தட்ட இரண்டுவருடங்களாய் அவன் ஏற்படுத்திக்கொண்ட பழக்கம். காலையில் ஓடாவிட்டால் அன்றைய பொழுதே அவனுக்கு புலர்ந்ததுப் போல் தோன்றாது. எல்லாமும் பழக்கம் தானே. அவன் எப்போதும் போல் ஓட ஆரமிக்க ஆனால் இன்று அவனால் நன்றாக ஓடமுடியவில்லை. காரணம் நிச்சயம் உண்டு. இரவு நன்றாக உறங்கியிருந்தால் அவனால் இப்போது சிறப்பாக ஓடியிருக்க முடியும். இரவே அவனுக்கு தூக்கம் இல்லையே. கொஞ்ச தூரம் ஓடியவன் அதற்கு மேல் முடியாமல் அப்படியே அங்கு இருந்த பார்க்கில் அமர்ந்துவிட்டான்.
அப்போது வழக்கமாக அங்கே ரௌண்ட்ஸ் வரும் அந்த எஸ்ஐ அவனைக் கண்டு எப்போதும் போல் "குட் மார்னிங் சார்" என்றதும்,
அவரின் குரலைக் கேட்டவன், "யா குட் மார்னிங்"
(இவர்கள் உரையாடல் ஹிந்தியில். நமக்காக தமிழில்)
"என்ன சார் உட்கார்ந்துடீங்க?"
"என்னமோ தெரியில ஓட முடியில"
"என்ன சார் கண்ணெல்லாம் சிவந்திருக்கு. நைட் தூங்கலையா சார்?"
"இல்ல தூங்கினேன். கொஞ்சம் லேட் ஆகிடுச்சு"
"ஓகே சார் பார்ப்போம்" என்று விலகிவிட்டார்.
கொஞ்சம் இல்லை நன்றாகவே லேட் ஆகிவிட்டது. அவன் உறங்கும் போது மணி மூன்றிருக்கும். அப்புறோம் எப்படி அவனால் பிரெஷாக இருக்க முடியும்? அப்படியே அமர்ந்திருக்க அவனின் செல்போன் ஒலித்தது.
எடுத்தவன் ஸ்க்ரீனில் தெரிந்த தன் தாயின் முகத்தைப் பார்த்து, அவனையும் அறியாமல் ஒரு புன்னகை வர, "அம்மா குட் மார்னிங்"
"ஆம் மார்னிங் மார்னிங்"
"என்னமா காலையிலே இப்படி ஸ்ருதியே இல்லாம பேசுற? என்ன மேட்டரு?"
"உங்க அப்பா தான், 5 மணியில இருந்து எழுப்புறேன். ஆம் ஆம்னு சொல்லிட்டு அப்படியே படுத்து கிடந்தவர் இப்போதான் எழுந்து வந்து எனக்கு காஃபீ வேணும்னு கேட்கறாரு"
"போட்டுக் கொடுக்க வேண்டியது தானே?"
"ஏன்டா நீயும் உன் அப்பாக்கு சப்போர்ட்டா? டாக்டர் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு தினமும் காலையில வாக்கிங் கண்டிப்பா போகணும்னு. உடம்புல சுகர் கொலஸ்ட்ரால் பிபி எல்லாமும் அதிகமா வெச்சியிருக்காரு. ஆனா சொல்றதை மட்டும் கேட்கவே மாட்டேங்குறாரு, அவரைச் சொல்லி என்ன பண்றது? வாச்சதும் சரியில்லை பெத்ததும் சரியில்ல"
"ஏம்மா அக்கா என்ன பண்ணா?"
"அடி நாயே, அவள எங்க சொன்னேன்? உன்னைத் தான் சொல்றேன்"
"ஐயோ அம்மா என் டார்லிங். ஸ்வீட் ஹார்ட். வை திஸ் கொலவெறி? காலங்காலையில அப்படி என்ன கடுப்பு உன் மகன் மேல?"
"பின்ன என்னடா? வயசு என்ன ஆகுது இன்னமும் கல்யாணம் செய்யாம இருக்க?"
"அம்மா அது..."
"நிறுத்து டா, நீ ஊருக்கு வேணுன்னா கலெக்டரா இருக்கலாம். எனக்கு இல்ல. ஞாபகம் வெச்சிக்கோ திவேஷ்"
"சரிங்க மம்மி. மம்மி சொல் மிக்க மந்திரமில்லை"
"இந்த ஐஸ் வெக்கிற வேலையெல்லாம் வேணாம். இப்போ சொல்லு எப்போ கல்யாணம் பண்ணிப்ப?"
"ஐயோ அம்மா காலங்காலையில ஏம்மா என்னை இப்படி வறுத்தெடுக்குற? ஆனாலும் அப்பாகும் இதுக்காகவே ஒரு கோவில் கட்டலாம்..."
"அடி நாயே, வந்தேனா பாருடா"
"அம்மா எனக்கு ஒரு 10 நாள் டைம் கொடு நான் சொல்றேன்"
"என்னடா இன்னும் என்னைய ஏமாத்தலாம்னு பார்கிறாயா?"
"இல்ல. சத்தியமா சொல்றேன்"
"டேய் திவே உண்மையாவா? என்னடா மேட்டரு?"
"சொல்றேன்"
"டேய் யாரையாவது லவ்?"
"சொல்றேன் அம்மா. ஈவினிங் பேசலாம். இன்னைக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு. நான் ரெடி ஆகணும். பை."
"டேய்... டேய்... டேய்..."
அவன் வைத்துவிட்டான். இப்போது பொடிநடையாக அவனின் அறைக்குச் சென்றான் திவேஷ். (பயணங்கள் முடிவதில்லை...)
 
Last edited:
திவா,தியா,திவே......கொஞ்சம் கன்பியூஷன்.....:oops:
dhivesh (dhive)- collector lives in assam. dhiyanesh(thiya) journalist. dhuvarakesh(dhuva) main hero. okay? orelse should i clarify it?
 
Top