Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்- 1

Advertisement

praveenraj

Well-known member
Member
வணக்கம் . முடிவிலி அப்படின்னா infinite னு அர்த்தம் . இந்த கதையோட ஆதாரமே நட்பு தான் . அண்ட் இதில் நட்பு மட்டுமின்றி நம்மை சுற்றி நடக்கும் எல்லாவற்றின் மீதும் ஒரு ஒளியை செலுத்தும். நம்முடைய வாழ்க்கையானது ஒரு தெளிந்த நீரோடையைப் போல நிற்காமல் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் நமக்குமே கூட நாம் வாழ்கிறோம் என்ற எண்ணத்தையும் உணர்வையும் தரும். ஆனால் சமயங்களில் அது எங்கேயோ சில பல காரணங்களால் தடைப்பட்டு விடும். ஏன் ஓடையில் ஓடும் தண்ணீர் கூட இலை தழைகளால் அதன் பயணம் தடைப்பட்டு நிற்குமே. அந்த நீரும் போகாமல் அதன் பின்னால் வரும் நீருக்கும் வழிவிடாமல் அடைத்துக்கொண்டு வெள்ளமாகவோ இல்லை பேரழிவாகவோ மாறும் அபாயமும் உண்டு. அப்போது அந்த தடைகளையும் அடைப்புகளையும் எடுத்தால் தான் அந்த நீரின் ஓட்டம் சரியாகும்.


இந்த கதையிலுமே கூட சில (பல ) நபர்களின் வாழ்க்கையானது அந்த ஓடையைப் போல தடைப்பட்டுவிட சிலருக்கோ அது மிகவும் இயந்திரமயமாகி விட சிலருக்கு அது அவர்களின் கட்டுப்பாட்டை விட்டு விலகி சென்றதைப் போலே ஒரு உணர்வையும் தந்துவிட, யாராவது வந்து அவர்களின் அடைப்புகளை எடுப்பார்களா என்று காத்திருக்காமல் அவர்களாகவே அவர்களின் வாழ்க்கையை ரெஃபிரேஷ் ஆக்கிக்கொள்ள புத்துணர்ச்சி ஆக்கிக்கொள்ள ஒரு முடிவு எடுக்கிறார்கள். அந்த முயற்சி என்னவென்றால் ஒரு பயணம். தங்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க இல்லை புனரமைக்க அவர்களால் அவர்களுக்கே ஒரு பயணம். என்ன பயணம் ? யார் அவர்கள் ? என்ன பிரச்சனை அவர்களுக்கு ? அவர்கள் பிரச்சனைகளுக்கு எல்லாம் அந்த பயணம் பதிலளித்ததா ? போன்ற கேள்விகளுடன் இந்த சமூகத்தின் மீதான பார்வையையும் அதன் விழுமியங்களையும் (values) அதனூடே இங்கே பின்னப்பட்டிருக்கும் மாய வலையையும் அறிந்துகொண்டார்களா ? என்பதே இந்த 'நட்பென்னும் முடிவிடியில்'.

பயணம் - ( பிரயாணம் ) இந்த சொல்லே போதும் எல்லோருக்குள்ளும் குற்றாலம் அருவி போலே மனமெங்கும் சில்லென்ற ஒரு உணர்வைத் தந்துச் செல்ல. பாருங்கள் பயணத்தை விளக்க உதவும் குற்றாலம் உவமைக் கூட நாம் பயணித்தால் தான் அடையமுடியும். சோ இங்கே பயணங்களை விரும்பாதவர்களும் உண்டோ? மேலோட்டமாக பார்த்தால் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு செல்லுவதை பயணம் என்று குறிப்பிட்டாலும் நாம் நம்முடைய வாழ்க்கையின் பல படிநிலைகளை கடந்து இப்போது இருக்கும் இடத்தை வந்தடைந்தது கூட ஒரு பயணம் என்று தான் சொல்ல முடியும். இல்லையா பின்னே ?


சோ பயணம் அப்படிங்கற சொல் ஒரு படிமம் ஆகும். படிமம் என்றால் என்ன ? கொஞ்சம் தமிழ் இலக்கணத்திற்கு சென்று வருவோம். சொற்களால் நம் நெஞ்சின் திரையில் வரையும் ஓவியமே படிமம். கண்டிப்பாக புரிந்திருக்காது. விளக்குகிறேன். நம் மனதை பற்றி சொல்லும் போது கற்பனைக் குதிரையை காற்றாற்று வெள்ளம் போல் ஓடவிடுகிறாய் என்று சொல்லுவோம் தானே. அப்போது நம் மனதை ஒரு குதிரையோடு உவமைப் படுத்தி அதற்கு ஒரு உருவம் கொடுத்து அது ஓடுவதைப் போலே நாம் சொல்லுவதும் என்னமோ அதை கேட்பவர்களுக்கும் இதே தமது மனத்திரையில் வரும். சோ படிமம் என்றால் ஒன்றை உவமைப் படுத்த உபயோகிக்கும் இமேஜ் போன்றது. இப்போது இங்கே பயணத்தை ஏன் படிமம் என்றேன் என்றால் நாம் பயணம் என்று நினைக்கும் போதே நம் மனமானது அதற்கு ஒரு உருவத்தைக் கொடுத்திருக்கும். நான் அதைப் பற்றி பேச தொடங்கியதுமே நாம் ரசித்த பயணத்தையோ நாம் மறக்கமுடியாத பயணத்தையோ உடனே நினைவுக்கு கொண்டுவந்துவிடும்.


சிலருக்கு தன் தாயுடன் சென்றது, தன் தந்தையுடன் சென்றது இல்லை சகோதர சகோதரிகளுடன் சென்றது என்று கண்டிப்பாக எல்லோருக்கும் தங்கள் வாழ்வில் மறக்கமுடியாத அளவுக்கு பயணம் என்று ஒன்று இருந்திருக்கும். சரி பயணம் எப்போது தொடங்கியது ? இல்லை எப்போது தொடங்கியிருக்கும் ? ஒரு அனுமானம் யோசியுங்கள் !


நவீன கால மனிதர்களுக்கு (homo sapiens ) முந்தைய காலகட்டவர்களை homo erectus எனப்படுவார்கள். இந்த ஹோமோ சேப்பியன்ஸ் எல்லோரும் இன்றைய ஆப்பிரிக்காவில் இருந்து தான் தோன்றியிருக்க கூடும் என்று ஆந்த்ரோபோலஜிஸ்ட்ஸ் (anthropologists )(மானுடவியலைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் ) கணித்துள்ளார்கள். ஏனென்னில் வரலாற்றில் மிகவும் தொன்மையான மனித மண்டை ஓடுகளின் (skulls ) ஆராய்ச்சி முடிவுகள் இதையே சொல்லுகிறது. இதற்கு சாட்சியாகவே இன்னும் உலகத்தில் தனித்தே வாழக்கூடிய primitive society peoples (பழமையான சமூக மக்கள் ) எனப்படும் நபர்கள் இன்னும் நீக்ரோவ் எனப்படும் சென்டினலீஸ் (sentinelese peoples from andaman and nicobar ) எனப்படுபவர்கள் அனைவரும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மக்களை ஒத்து இருக்க காரணம்.

இப்போ எதற்கு இவ்வளவு பெரிய டீடெய்ல் என்றால் ஆம் பயணம் எப்போது தொடங்கியது என்ற கேள்வியை நான் முன்னே கேட்டேனல்லவா அதற்காகவே. சோ மனித நாகரிகமானது தோன்றும் போதே சொல்ல போனால் நாகரிகம் என்று ஒன்று தோன்றும் முன்னே தோன்றியது தான் இந்த பயணம். அதனால் கூட நம் எல்லோருக்குமே பயணம் என்றாலோ இல்லை புது இடம் என்றாலோ ஒரு கிளுகிளுப்பு உண்டாகிவிடுகிறது என்று நினைக்கிறன்.


கதைக்குள் வருகிறேன். பயணங்கள் எதனால் ஏற்படுகிறது ? நிச்சயமாக தேடலால் தான். ஆம் தேடல் என்ற ஒன்றே இங்கே பயணங்களை தீர்மானிக்கிறது. தேடல் என்பது என்ன ? அல்லது இப்படி கேட்கலாம் எதை நாடி இந்த தேடல் ? அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலர் பணம் சார்ந்து சிலர் உறவு சார்ந்து சிலர் வேலை சார்ந்து சிலர் கடமை சார்ந்து ஆனால் தேடல் என்று ஒன்று எல்லோருக்கும் உண்டு. சரி பயணங்கள் மனிதர்களுக்கு மட்டுமே சேர்ந்ததா என்றால் நிச்சயம் இல்லை. மனிதனைக் காட்டிலும் விலங்குகளும் பறவைகளும் பயணித்துக்கொண்டே தான் இருக்கிறது. சரி அப்போ பயணம் என்பது உயிருள்ளவற்றுக்கு மட்டும் தான் சொந்தம் என்று சொல்லிவிட முடியுமா ? இல்லையே தினமும் கோடானுக்கோடி விண் கற்கள்(meteors ) அஸ்டெரொய்ட்ஸ் (asteroids ), comets (தூமகேது ), ஸ்டார்ஸ் (நட்சத்திரங்கள் ) விண் தகடுகள் இவ்வளவு ஏன் நாம் வசிக்கும் இந்த பூமியும் கூட பயணித்துக்கொண்டே தான் இருக்கிறது. அதன் நீட்சியாகவே தான் நமக்கு இரவும் பகலும் ஏன் காலநிலைகள் பருவநிலைகள் எல்லாமும் தோன்றுகிறது. அப்போ பயணம் என்பது எல்லோருக்குமே பொதுவானது தானே ?


இவ்வளவு நேரம் பயணத்தைப் பற்றியே பேசி உங்களை போர் அடித்துவிட்டேன் என்று புரிகிறது. சோ இப்போது பயணிகளைப் பற்றி பேசுவோமா ? நாம் அன்றாடம் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் எல்லாவற்றுக்கும் செல்கிறோம். அங்கே நாம் காண்பது என்ன ? வெவ்வேறு பயண முகங்களே. ஒவ்வொரு முகத்திற்கும் பின்னால் ஒரு ஒரு கொயர் நோட் புத்தகத்தை நிரப்புமளவுக்கு நமக்கு காரணம் கிடைக்கும். ஏன் சில பயணங்கள் காரணமே இல்லாமல் கூட நிகழலாம். சிலர் சந்தோசமாய் வந்து இறங்குவார்கள். சிலரோ சோகமாய் இறங்குவார்கள். சிலர் மகிழ்ச்சியாய் செல்வார்கள் சிலரோ ஏன்டா போகவேண்டும் என்று போவார்கள். பூமி ஏன் அந்த 23 1/2 டிகிரி கோணத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது ? ஏன் பூமியைத் தவிர வேறெங்கும் உயிர் வாழ சாத்தியக்கூறுகள் இல்லை ? நமக்கெல்லாம் அது அநாவிசியம்.


சென்னை எழும்பூர் ரயில் நிலையம் :

இரவு 7 .30 மணி

வழக்கமாய் ரயில் நிலையங்களில் இருக்கும் கூட்ட நெரிசல் அன்றும் இருந்தது. அன்று மட்டுமில்லை என்றும் இருக்கும். ஏனெனில் நம் நாட்டில் பயணப் படுபவர்களைக் காட்டிலும் அவர்களை வழியனுப்பி வைக்க வரும் கூட்டமே அதிகம். ஐயோ போகிறானேவில் தொடங்கி எப்போடா போவான் என்ற நிலை வரை... இன்னும் சிலரோ திரும்ப எப்போது வருவானோ என்ற ஏக்கத்தோடும் சிலரோ எங்கே திரும்ப வந்துவிட போகிறானோ என்ற அச்சமுமே இந்த கூட்டம் நிரம்பி வழிய காரணம் என்று நினைக்கிறன்.

15929 'திப்ருகார்க் எக்ஸ்பிரஸ்' சென்னையிலிருந்து திப்ருகார்க் (அஸ்ஸாம் ) வரை செல்லும் ரயிலானது தனது அடுத்த 60 மணிநேர பயணத்தை எதிர்பார்த்து அதற்கு வேண்டியவற்றில் தன்னை தயார்படுத்திக்கொண்டு இருந்தது.

அதில் நீங்களும் பயணிக்க தயாரா ?...
இரண்டு வாரங்களாகவே அந்த கட்டிடம் மிகவும் பரபரப்பாக உள்ளது. ஒரு புதிய ஆர்டர் வந்துள்ளதால் இந்த பரபரப்பு. சூர்யா இன்ஸயிட்ஸ் (surya insights ). spotlight the social development இதுவே அவர்களின் டேக் லைன். அப்படி என்றால் சமூக வளர்ச்சிக்கான காரணிகளை கணக்கிடுவது என்பது பொருள்.

இன்றைய உலகில் தகவல் , தரவுகளே (data / information ) வளம். எதை எடுத்தாலும் எங்கு சென்றாலும் நமக்கு மிகவும் தேவையாகி விட்டது இந்த தகவல் மற்றும் தரவுகளே. அதனாலோ என்னவோ ரிலையன்ஸ் ஜியோ அறிமுக படுத்தும் போது அதன் தலைவர் முகேஷ் அம்பானி ஒரு வார்த்தையைச் சொன்னார்.data is present day oil என்று . உலகம் எங்கும் தற்போது டேட்டா மயமாகிவிட்டது . சரி அவர்களின் வேலை என்ன ? இந்தியா முழுவதும் குறிப்பாக குக்கிராமங்களில் வசிப்பவர்களை சர்வே செய்து டேட்டாகளை பெறுவதே அவர்களின் நோக்கம். அவர்கள் ஒரு சேம்பிள் சர்வே மேற்கொள்ளுவார்கள். ஒன்று அவர்களை நேர்காணலில் சில கேள்விகளைக் கேட்டு அதற்கான பதிலை பதிவுசெய்துக் கொள்வார்கள். இல்லையேல் questionnaire (கேள்வித்தாள்கள் நிரம்பிய ஒரு காகிதத்தை) மக்களிடம் கொடுத்து அவர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வார்கள். இது எப்போதும் வழக்கத்தில் உள்ள ஒரு நடைமுறையே. ஏன் அரசாங்கம் கூட இதையே தான் பின்பற்றி சென்சஸ் முதலிய தகவல்களை பெற்றுக்கொள்கிறது. அவ்வாறு தகவல்களைப் பெறும்போது நேரிடையாக மக்களையே சந்தித்து பெறப்படுவதால் அவர்களின் எண்ணவோட்டத்தை நம்மால் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்.

பெரிய பெரிய நிறுவனங்கள் தான் புதிதாய் அறிமுகப்படுத்தப்போகும் பொருட்களை இதன் அடிப்படையிலே தான் தேர்ந்தெடுகிறார்கள். மக்களின் அபிமானங்களைப் பெற்றுவிட்டால் அவர்கள் அகலக்காலை வைத்து தொழிலை விஸ்தாரப்படுத்திவிடுவார்கள் . மார்க்கெட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு பொருட்களும் இதன் அடிப்படையில் தான் வருகிறது. இதை நீங்கள் கார்ப்பொரேட் சூழ்ச்சி என்றும் வைத்துக்கொள்ளலாம் இல்லை வியாபார தந்திரம் என்றும் வைத்துக்கொள்ளலாம். எதுவானாலும் அது ஒரு பெரிய ரிசெர்ச் அண்ட் டெவெலப்மெண்டைக் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ) கடந்து தான் வணிக சந்தைக்குள்ளே கால் பதிகிறது.

முன்பு சொன்னது போலவே இதை தனியார் நிறுவனங்கள் மட்டும் பயன்படுத்துவதில்லை. அரசாங்கமும் கூட இதையே தான் நம்புகிறது. இதன் அடிப்படியில் தான் புதியதாக ஒரு திட்டமோ ஸ்கீமோ எதுவானாலும் அமல்படுத்தப்படுகிறது. என்ன ஒன்று பெரும்பாலும் அரசாங்கம் தங்களுக்கு தேவையான தரவுகளை தாங்களே கணக்கிட்டுக்கொள்வார்கள். இதற்காகவே இந்தியா அரசாங்கத்தில் தனியாக mospi (ministry of statistics and program implementation ) என்று ஒரு அமைச்சரைவே உள்ளது. என்ன அரசாங்கம் செய்வதை தனியாக செய்யும் நிறுவனங்களே இவை.

சமூக காரணிகள் என்று வரும் போது பப்லிக் ஹெல்த் (பொது சுகாதாரம் ), கல்வி (education ), ஊட்டச்சத்து (நியூட்ரிஷன் ), வாழ்வாதாரம் (livilihood ) ,sanitation and hygiene ,மற்றும் பல... இவ்வாறு இவர்கள் திரட்டும் தகவல்களை வைத்தே அரசாங்கம் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் நியூஸ் பேப்பரில் ஆர்டிகிள் ( article ) எழுதுபவர்களும் ஏன் phd முதலிய தீசிஸ் (thesis ) செய்பவர்களும் ஏன் ஸ்டார்ட் அப் (start up ) நிறுவனங்கள் தொடங்கும் நபர்களும் ngo எனப்படும் தொண்டு நிறுவனங்களும் மற்றும் பல காமன் மேன் ஆகிய நான் உட்பட எல்லோரும் அதை உபயோக படுத்த முடிகிறது.

இன்னும் சிம்பிள்ளாக சொல்ல வேண்டுமானால் நீங்கள் எதைப்பற்றியாவது தெரிந்துகொள்ள உடனே கூகுளிக்கிறீர்களே அப்போது நொடியில் உங்களுக்கு கிடைக்கும் தரவுகள் தகவல்கள் எல்லாமும் கூட இவர்களால் தான் நமக்கு கிடைக்கப் பெறுகிறது. ஒரு வழியாக அந்த சூர்யா இன்ஸயிட்ஸ் என்ன செய்கிறது ? எதற்காக இதெல்லாம் செய்கிறது ? அப்படி என்றால் என்ன ? முதலியற்றைப் பற்றி உங்களுக்கு ஒரு சின்ன ஐடியாவாவது கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். கதைக்குள்ளே போவோம்.

சூர்யா இன்ஸயிட்ஸ் - அவர்களுக்கு மிக சமீபத்தில் கிடைக்கப்பட்ட ஆர்டர் என்னவென்றால் பழங்குடியின மக்களின் (tribal peoples ) வாழ்க்கை முறைகள் அவர்களின் சமூக பழக்கவழக்கங்கள் முதலியவற்றை ஆராய இன்று ஒரு குழு நார்த் - ஈஸ்ட் இந்தியாவிற்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது. புதியதாக வந்து சேர்ந்துள்ள நபர்களைக்கொண்டு அங்கே சற்று சீனியரான ஒரு பெண்ணின் தலைமையில் அக்குழு இன்றிரவு அந்த திப்ருகார்க் எஸ்பிரஸில் பயணிக்க போகிறது.

டாக்டர் அனேஷியா மற்றும் தன் சகாக்களுடன் இன்றைய இரவு புறப்பட தயாராகி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தனர். டாக்டர் என்பதால் மருத்துவர் என்று நினைக்க வேண்டாம் அது phd டாக்டரேட். 27 வயதே நிரம்பிய இளங்கன்னி.

....................................................
"பயணங்கள் முடிவதில்லை " - வாட்ஸ் ஆப் குழுவானது சிணுங்கியது...

"மச்சானஸ் ரீச்சட் எக்மோர் கைஸ். ஷல் ஐ ஸ்டாண்ட் அவுட் ஆர் கோ இன் ?" - ஹேமந்த்

"எரும கிடா அங்கேயே இருடா உள்ள போயிடாத நான் இன்னும் 10 மின்ட்ஸ்ல வந்துடுவேன்" - மிருதுளா.

"நானாடி எரும ? இருடி வந்ததும் இந்த எரும என்னவெல்லாம் செய்யுதுனு பாரு" என்றவன் கோவமான சில ஸ்மைலிகளைத் தட்ட,

"நீ கவலைப் படாத பேபி ! யாமிருக்க பயமேன். இந்த தியானேஷ் இருக்க பயமேன் ! நான் வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேனு சொல்லு" என்று பதிவிட்டான்.

"ஹை ஜாலி ஜாலி ! சிங்கம் களம் இறங்கிடுச்சி !" - மிருதுளா ஹேமந்தை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள் .

திடீரென திவேஷ் டைப்பிங் என்று காட்ட...

"கலெக்டர் சார் ! வணக்கம்" என்று ஹேமந்த் அதற்குள் டைப் செய்து இருந்தான்.

"ஹேவ் எ ஹாப்பி ஜர்னி கைஸ் ! இன்னும் சரியாய் மூன்றரை நாளுல நீங்க இங்க இருப்பீங்க. ஐ யம் வைட்டிங்" - திவேஷ்

"கண்டிப்பா கண்டிப்பா... நாங்களும் வெயிட்டிங் " - மிருதுளா டைப் செய்ய உடனே ஹேமந்த் வழிமொழிதான்.

கேபிலிருந்து இறங்கிய மிருதுளாவை பார்த்த ஹேமந்த் இந்தப் பக்கமிருந்தே கையைத் தூக்கிக்காட்ட அதை கண்டுக்கொண்டவள் அவளும் கையைத் தூக்கி ஆர்பரித்தாள்.
இன்றைய உலகம் அவசர உலகமாகிவிட்டது. பரபரப்புக்கு துளியும் பஞ்சமில்லாமல் போய் விட்டது . ஏன் நாம் கூட சாதாரணமாக எதையாவது சொல்ல முயன்றால் எவரும் அதை கேட்க தயாராக இல்லை. வசூல் ராஜா படத்தில் ஒரு வசனம் வரும், "எங்கங்க சினிமாவுளையும் மசாலா கேட்கறானுங்க தியேட்டர்ளையும் மசாலா கேட்கறானுங்க" என்பது போல். சோ மக்களை பரபரப்பாக்கவும் அவர்களை எப்போதும் ஒரு அட்டேன்சனிலே வைத்திருக்கவே எல்லா தகவல் தொடர்பு ஊடக பிரிவு செய்தித்தாள் ஆகியோர் ஆவலாய் உள்ளார்கள். விஞ்ஞான உலகில் டெக்னாலஜி வளர்ச்சியின் காரணமாய் யூடியூப் வாட்ஸ் ஆப் , பேஸ் புக் , ட்விட்டர் முதலியவை வளர்ந்துவிட்டது. அவைகளிலும் கூட எல்லோரும் ஒரு சேனலை ஆரமித்து ஒரு விஷயம் பரபரப்பாகி விட்டால் போதும் அதையே தூக்கி பிடித்து அதை ஒரு வழிபண்ணிவிடுகிறார்கள். சமீபத்திய உதாராணம் அத்தி வரதர். ஆம் என்னதான் அவரைப் பற்றிய ஒரு வெளிச்சம் உலகத்திற்கு தெரிய வந்தாலும் அதனால் ஏற்பட்ட சிரமங்கள் கொஞ்சமா ? அவரை தரிசிக்க சென்று எத்தனை மரணங்கள். அவர் வெளியே வந்து திரும்ப உள்ளே செல்லுவதற்குள் அந்த ஒரு மாத காலத்திற்கு ஒரு ப்ரளயத்தையே உண்டாக்கி விட்டனர் நம் ஆட்கள். இதற்கெல்லாம் யார் காரணம் ?

நிச்சயம் மக்களாகிய நாமே தான். முன்பெல்லாம் ஒரு விஷயம் நடந்தால் அது நமக்கு மறுநாள் தான் தெரியவேவரும் அதும் செய்தித்தாள் வழியாக மட்டுமே. அதுவே நள்ளிரவு 12 மணியைக் கடந்துவிட்டால் அது நாளை மறுநாள் தான் தெரியவரும். அப்புறோம் செய்தி வாசிப்பு என்னும் காட்சி ஊடகம் வழியே நாம் அன்றைய நிகழ்வுகளை முடிந்த அளவுக்கு அன்றைக்குள் அதாவது காலை மதியம் இரவு என்று மூன்று முறை செய்திகள் வாசிக்கப் படும். அப்போது மட்டுமே நம்மால் அதை தெரிந்துக்கொள்ள முடிந்தது.

எனக்கு இன்னும் நன்றாக நினைவில் உள்ளது , 2004 சுனாமி , வீரப்பன் சுட்டுக்கொலை , அமெரிக்கா ட்வின் டவர் தகர்ப்பு , 2003 இந்தியா ஆஸ்திரேலியா உலகக்கோப்பை இறுதி ஆட்டம் முதலிய அனைத்து முக்கியமான நிகழ்வுகளையுமே மறுநாள் காலையோ இல்லை அன்று மாலையோ தான் அதும் டிவி நியூஸ் வழியாக தான் தெரிந்துகொண்டேன்(டோம் ). அதில் ஒரு நியாயமான ஏக்கம் வருத்தம் சோகம் மகிழ்ச்சி எல்லாமும் இருந்தது. இன்றோ நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பிரேக்கிங் நியூஸ் ஒளிபரப்பி பிரேக்கிங் நியூஸ்கான மரியாதையே போய் விட்டது.

நான் பிரேக்கிங் நியூஸ் வாசிப்பதை தவறென்று சொல்லவில்லை ஆனால் அதில் அதிகரித்து வரும் பேக்(fake ) நியூஸ் என்னும் மாயைக்கு நாம் அனைவரும் இறையாகிவிடுகிறோம் என்பதை தான் தவறு என்று சொல்கிறேன். இன்றைய டிஜிட்டல் உலகில் மிகப்பெரிய மெனேஸ்(menace )(அச்சுறுத்தல் ) என்று கேட்டால் அது fake நியூஸ் தான். ஒரு விஷயத்தை நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று யோசிக்காமல் ஃபார்வேர்ட் செய்வதால் அது கட்டுக்கடங்காமல் தொடர் சங்கிலியாக (uncontrollable chain reaction) ஆகி பரவிவிடுகிறது. எப்படி சமீபத்திய பிரேசிலின் அமேசான் காட்டுத்தீ போல இன்னும் அணைக்க முடியாமல் திண்டாடுகிறோம்.

இதை தடுக்கவே சமீபத்தில் பல நடவடிக்கைகளை பல நிறுவனங்கள் எடுத்து வருகிறது. கூகுள் கூட கூகுள் நியூஸ் இனிஷியேடிவ் (gni ) என்று ஒன்றை தொடங்கி உள்ளது. beyond fake news initiative என்பதை பிபிசி (bbc ) எடுத்துவருகிறது

சரி இதெல்லாம் எதற்கு இங்கே என்றால் காரணம் இருக்கு. தியானேஷ் ஒரு ஜர்னலிஸ்ட். ஜர்னலிசம் (journalism ) மீது கொண்ட பேராவலின் காரணமாக என்ஜினீரிங்கை படித்து முடித்தவன் பிறகு தன் விருப்பமான ஜர்னலிசத்தைப் படித்தான். அவன் ஒரு பிரிண்ட் மீடியாவில் நியூஸ் எடிட்டராக வேலை செய்கிறான். சொல்லப்போனால் அதில் அவனும் ஒரு உரிமையாளரே. முற்றிலும் ஆன்லைனில் மட்டும் இயங்கும் ஒரு நிறுவனம . இது ஒரு ஸ்டார்ட்டப் ஆக இருக்கிறது. மற்றதெல்லாம் பின்பு சொல்கிறேன்.
அவன் இப்படி திடீரென டூர் செல்வதால் அவனின் ஜூனியர்களிடம் மேலே சொன்னது போல நன்கு அறிவுரைகளை வழங்கிவிட்டு வந்துள்ளான். அவன் வர சில நாட்களாவது ஆகும் என்பதால் இந்த பயம் கடமை அவனுக்கு இருக்கிறது. வாழ்க்கையிலே ஒரு முக்கியமான நிகழ்வுக்கு அச்சாரமாய் இந்த பயணத்தை எதிர்பார்த்திருக்கிறான்.

அவன் செல்லும் போது அவனின் ஜூனியர் ஒருவன், அ"ண்ணா எப்படி போறீங்க அஸ்ஸாமுக்கு ?"

"ட்ரெயின் டா. புக் பண்ணியாச்சு."

"எது ?"

"திப்ருகார்க் எக்ஸ்பிரஸ்."

அவன் சற்று யோசிக்க,

"என்னாச்சி டா ?"

"ஒண்ணுமில்லைணா"

அவன் முகத்தை வைத்தே ஏதோ தவறு என்று புரிந்தவன், "இங்க வா நெல்சன் என்ன ஆச்சி ?"

"அண்ணா அது நாளைக்கு மதியம் "மாஹி " கரையைக் கடக்கிறது. (மாஹிங்கறது புயலின் பெயர்களில் இல்லாத ஒன்று. நானே வைத்தது.

"விடுடா பயப்படாத நாங்க அதுக்குள்ள தாண்டிடுவோம்னு நெனைக்கிறேன். டோன்ட் ஒர்ரி. எதுனாலும் எனக்கு உடனே சொல்லிடு சரியா ?"

"சரிங்க அண்ணா"

"பை. பாக்கலாம்" என்றவன் தன் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு ஆட்டோவில் வந்துக் கொண்டிருக்கும் போது ஹேமந்த், மிருதுளா இருவரும் வாட்ஸ் அப்பில் செல்லமாக சண்டையிட்டு கொண்டிருக்க குறுக்கே புகுந்து கலாய்த்தான். (மேலே சொன்னது.)

...................................................................................................

அதற்குள் "பயணங்கள் முடிவதில்லை" மீண்டும் சிணுங்கியது.

"மச்சான்ஸ் நான் வர கொஞ்சம் லேட் ஆகிடும் போலட . காட்டா ஸ்ட்ரக் இன் ப்ளடி டிராபிக் டா (நான் வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டேன்) ஸ்டில் இன் வடபழனி. பயமா இருக்கு டா. என்ன பண்ண ? "- ஜிட்டேந்தர்

** *********** - ஹேமந்த்
^^^^^^^^^^^^^^- மிருதுளா
####################################- தியானேஷ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@- நித்யஸ்ரீ
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&- செபாஸ்டின்
+++++++++++++++++++++++++++++++- துஷ்யந்த்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$- ஹேமந்த்
(எல்லாம் சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள்)

"போதும். நிப்பாட்டுங்க. இதுக்கு மட்டும் எங்கேயிருந்தாலும் எல்லோரும் ஒன்னு கூடிடுங்க... ட்ரெயின் எடுக்கறதுக்குள்ள நான் அங்க வரேன் எப்படியாவது வந்து சேருறேன். இப்போ எல்லோரும் அவங்கவங்க வேலையை மூடிட்டு பாருங்க" என்று பொங்கியிருந்தான் ஜிட்டு என்கின்ற ஜிட்டேந்தர்.

"ஹேய் என்ன சொன்ன ?" - நித்யஸ்ரீ

"உங்க வேலையை பாருங்க தெய்வமேனு சொன்னேன். நான் எப்படியாவது வந்து சேர்ந்துடுறேன் தெய்வமே. மகமாயி கொஞ்சம் என்மேல கருணை காட்ட படாதா ?" என்று உடனே தன்னுடைய மாடுலேஷனை மாற்றி பம்பினான் ஜிட்டு.

"உனக்கெல்லாம் கருணையே கிடையாதுடா @@@@@"

"நிப்பாட்டுன் சொல்லிட்டேன். டேய் விவானு கொஞ்சம் உன் பொண்டாட்டிய அடக்கி வாசிக்க சொல்லுடா எப்பா... முடியில. ஐ யம் பாவம் புவர் இந்தியன் கைய்(guy)."

"சாரி மச்சான். நான் அன்னைக்கு ஒருநாள் உனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடுத்தேனில்ல ? அதுனால உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் எப்பயும் தலையிட மாட்டேன்" என்றான் விவான்.

"டேய் என்னைக்கோ ஒரு நாள் எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி செஞ்சி கொடுத்த சத்தியத்தை நீ இன்னும் பிடிச்சிக்கிட்டு இருக்க ? உண்மையிலே நெஞ்சில கையை வெச்சி சொல்லு பாப்போம் நீ சத்யவான்னு ? நான் திட்டு வாங்குறதுல அப்படி உனக்கு என்னடா சந்தோசம் ? இல்ல என்னை திட்டுறதுல உன் பொண்டாட்டிக்கு அப்படி என்ன சந்தோசம் ?"

"என்னடா அங்க சத்தோம் ?" - நித்யஸ்ரீ

"சும்மா பேசிகிட்டு இருக்கேன் மகராசி" - ஜிட்டு

"விவா வா வந்து பாப்பாக்கு டிரஸ் மாத்திவிடு. கண்ட நாய் கூட எல்லாம் என்ன வெட்டி பேச்சு வேண்டிக்கிடக்கு ?"

"ஒரு சந்தேகம் கேட்க;லாங்களா மிஸஸ் விவான்"

"என்னடா ?"

"ஆமா மேடம் எங்க இருக்கீங்க ?"

"இங்க தான் ஸ்டேஷன் பக்கத்துல ஒரு ஹோட்டல்ல ரூம் எடுத்து இருக்கோம்..."

"ஓ... உங்க வூட்டு காரரு எங்க இருக்காரு ?"

"இங்க தான் என் முன்னாடி கட்டில்ல உட்காந்து இருக்கான். ஏன் ?"

"அதை நேர்ல உங்களுக்கு கூப்பிட முடியாதா ? அதுக்கும் இந்த வாட்ஸ் அப்ல தான் சொல்லனுமா ?"

"ஏன் உனக்கென்ன டா பிரச்சனை இதுல ?"

"நல்லா கேட்டுக்கோங்க மக்களே. என்னை மொக்கை பண்ணனும்னே எதிர்ல இருக்க புருஷனை இந்த வாட்ஸ் அப்ல அதும் நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்... அப்போ வந்து என்ன வெறுப்பேத்தும் இவளை என்ன பண்ணலாம் ? ஐயோ ராமா இந்த டிராபிக் வேற என்னை சோதிக்குதே..." என்று புலம்பினான் ஜிட்டு.

"நித்து அவனை விடாத" - மிருதுளா.

"விடமாட்டேன் மிரு விடமாட்டேன்..."

"ஆஹா ஒன்னு கூடிட்டாங்கய் யா ஒன்னு கூடிட்டாங்க... ஜிட்டா நீ இன்னைக்கு நல்ல படியா ட்ரெயின் ஏறிட்ட நீ ஜெயிச்சிட்ட டா..." ( பயணங்கள் முடிவதில்லை )

முதல் அத்தியாயம் என்பதாலும் கதைக்கு தேவையானதாலும் சில எக்ஸ்டரா பிட்டிங்ஸ் எல்லாம் கொடுக்க வேண்டியதாக போனது. இனிமேல் இவர்களின் பயணம் மட்டும் தான் இந்த 'நட்பென்னும் முடிவிலி '. நிறைய கதாபாத்திரங்கள் வரும் அண்ட் எல்லோரையும் பற்றி இன்னும் ஒன்றிரண்டு அத்தியாயத்தில் தெளிவுபடுத்துகிறேன். முடிந்த அளவுக்கு சீக்கிரம் தர பார்க்கிறேன். நன்றி .
 
உங்களுடைய "நட்பென்னும்
முடிவிலியில்"-ங்கிற அழகான
அருமையான லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், பிரவீன்ராஜ் தம்பி
 
Last edited:
Top