Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-4

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-4
சக்தி கல்லூரியில் சேர்ந்து ஒருவருடம் முடிந்து ,அடுத்த வருடம் ஆரம்பம் ஆனது.
ஏன் மாமா முகத்தை இப்படி வச்சிருக்கீங்க.. ஏதாவது பிரச்சனையா தேவி தயாவின் தலையை வருடிய படியே கேட்க.

இல்ல தேவிம்மா... நான் சொன்னா நீ ரொம்ப கஷ்டப்படுவே...

பரவாயில்ல மாமா... தினமும் ஒவ்வொருத்தரும் ஒருமாதிரி பேசாறாங்க... மரத்துப்போச்சு மாமா. அத்தையும் வரவர ரொம்ப குத்தி காட்டறாங்க..

நான் பார்ட்டி போனேயில்ல தேவிம்மா.. அங்க என் பிரண்ட்ஸ் எல்லோரும் நீ ஆம்பளையாடான்னு கேக்கறாங்க. கல்யாணமாகி ஐந்து வருஷம் ஆயிடுச்சு..

உடனே அழ ஆரம்பித்தாள் தேவி... ம்ச் இதுக்குதான் நான் சொல்ல மாட்டேன் சொன்னேன்...நீ கேட்கல...

டாக்டருக்கிட்ட போனோம் எல்லோமே நார்மல்தானே சொல்லுறாங்க மாமா. பேசாம நீங்க வேற கல்யாணம் செஞ்சிங்கோ மாமா.

உன்மேல காதலே இல்லையின்னு சொல்லுற தேவி... நமக்கு பிரச்சனை குழந்தைதான் புரியுதா...

புரியுது மாமா...அதுக்குதான் இரண்டாவது கல்யாணம் செஞ்சிக்கோங்க சொல்லுறேன்..
அதுக்கு மனோ சொல்லுறான்...ஏதொ பொண்ணுக்கு.. பிறக்கும் குழந்தை எப்படி நம்ம குடும்ப வாரிசாகும்...

புரியில மாமா...

வேற பொண்ண எதுக்கு கட்டிக்கனும்...சக்தியே கட்டிக்கிட்டா... அவளுக்கு அக்கா கஷ்டம் புரியும். உன் கூடவே தேவி இருப்பா...உங்க வீட்டு வாரிசாவும் இருக்கும்.. நாளைக்கு என்ன பிரச்சனையும் வராது சொல்லுறான்...

தயா பேச பேச முகம் மாறினாள் தேவி...அதை கண்டுக்கொண்ட தயா ,ஆனா நான் ஒத்துக்கல தேவி... என் தேவிக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன் ஒருநாளும்..என் வாழ்நாள் முழுவதும் எனக்கு தேவி.. தேவிக்கு நான் இருப்பேன் சொன்னேன்....

மாமா.. அவர் சொன்னதுல என் தப்பு இருக்கு... ஊருல நடக்காத விஷயமா நான் அப்பா,சக்திக்கிட்ட பேசி பார்க்கிறேன்.... அப்பாடா எப்படியோ இவளை சம்மத்திக்க வைச்சிட்டோம்... சொத்து இனிமே இரண்டு பாகமாதான் போகும்....நல்ல ஐடியா கொடுத்தடா மனோ என்று மனதில் நினைத்தான் தயா....
.......
இது எதுவும் தெரியாமல் சக்தி தன் கல்லூரி வாழ்க்கையை என்ஜாய் செய்துக்கொண்டிருந்தாள்.

அன்று கேன்டினில்...பாப்பா சிவாவுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்.. சுற்றுதே இந்த ஃபேன்ல தொங்கவிட்ருவான் பாப்பா... உனக்கு அவனபத்தி தெரியாது.

அய்யோ சித்தப்பூ அவன் இல்லாத டைம்மில வச்சிக்கலாம்.எனக்கு ஒரு இடம் தேவை அது இந்த கேன்டின் தான் பத்தாத அப்படியே ஸ்நாக்ஸ் தந்திராலாம்.நம்மகிட்ட வேலை செய்றவங்களுக்கு தனியா பணம் தந்திடலாம். ஓகேவா...

பயந்துக்கொண்டே தலையை ஆட்டினான்...வேலு.

அடுத்த நாள் காலையில் கேன்டினில் ஆறுபது பெண்கள் நின்றிருந்தார்கள்...
சிவாண்ணே நான் தேர்டு இயர் கார்த்திக் பேசிறேன்... உங்க கேன்டின்ல ஒரே லேடிஸ் கூட்டாம இருக்கு என்ன பிரச்சனையின்னு தெரியில உடனே வாங்க..சொல்லி போனை வைத்தான்.

வேலுவை போனில் கூப்பிட.. போன் எடுக்கவேயில்ல வேலு... ஐயா ஒரே பிஸியாக பெண்களை சைட் அடித்துக்கொண்டிருந்தார்.

எல்லோரும் அங்கே நிற்க, பெஞ்சில் ஏறி நின்றாள் சக்தி...டியர் ஃபிரண்ட்ஸ் வெல்கம் டூ ஆல்... என்று பேச ஆரம்பிக்கும்போதே அனைவருக்கு ப்பஸ் , பிரட் ரோல் வழங்கப்பட்டது. இந்த சத்ததில் சிவாவின் வண்டிசத்தம் கேட்கவில்லை.

உள்ளே போக முடியாத அளவுக்கு கூட்டம்.. என்னாச்சு தெரியல பதட்டம் வர சிவா பின் பக்கமாக சமையல் அறைக்குச் சென்றான்....

அங்கே வேலு கண்ணத்தில் கையை ஊன்றி சக்தியின் பேச்சை கேட்டுக்கொண்டிருக்க...அவன் பக்கத்தில் போய் நின்றான் சிவா...

இந்த சங்கத்தின் திறப்பு விழாவிற்கு வந்த அனைவரும் நன்றி... நான் நூறுபேருக்கு எதிர்பார்த்தேன். நீங்கள் எல்லோரும் உறுப்பினர்கள் என்று பெருமை பட்டுக்கொள்ளுங்கள்.

வேலுவின் தோளை தட்டி... என்ன நடக்குது சித்தப்பூ...
ஆஆ... எப்ப வந்தான்... மச்சான் அது சக்தி பாப்பா சங்கம் ஆரம்பிச்சிருக்கு அதுக்கு திறப்பு விழா...

என்னது சங்கமா...

ம்ம் கேளு... பாப்பா ரொம்ப திறமைசாலி...

டேய் அவ உனக்கு பாப்பாவா.. உன்னை வந்து கவனிக்கிறேன்... அதுக்குள் சக்தி பேச ஆரம்பிக்க... எல்லோருக்கும் ஸ்நாக்ஸ் வந்துடுச்சா...

வந்திடுச்சு சகோதிரி என்று ஒரு கூட்டம் சொல்ல.

சரி நம்ம சங்கத்தின் பெயர் “காதலிக்க படாதொரு சங்கம்”..என்னடா இப்படியோர் பெயரா நீங்க கேட்கலாம்.நான் நைட்டெல்லாம் யோசித்தேன்... இந்த பெண்களுக்கு எதனால பிரச்சனை வருது... இந்த லவ் .. இதுதான் மைன் பிராப்பளம். அவங்க சந்தோஷமே போயிடும்.. சில பேர் தற்கொலையும் பண்ணிக்கிறாங்க...

டேய் இதெல்லாம் ஒரு சங்கம்... வேலுவை முறைக்க.. இவ அப்பனுக்கு எப்படிடா இவ பொறந்தா..

எனக்கு தெரியாதடா சக்தி... இவங்க அம்மாவதான் கேட்கனும்...
கூட்டத்தில் ஒரு பெண் கேட்க...அப்ப லவ் பண்ண கூடாது சொல்லிறீயா சக்தி... அப்பறம் வாழ்க்கை இன்ரஸ்டா இருக்காதே...

லவ் பண்ணாத , சைட் அடின்னு சொல்லுறேன்... காதலிக்கிறவங்க ஒருத்தனையே சைட் அடிக்கனும்..ஆனா நாம் ஆயிரம்பேரை சைட் அடிக்கலாம். அத்தோட முடிஞ்சது.. அதவிட்டு நீ என் உயிர் நான் உன் டேஷ் டேஷ் தேவையில்ல...நோ கமிட்மென்ட்..பாய்ஸ் எப்படி டேக் ட் ஈஸியா எடுத்துக்கிறாங்க அதுப்போல நாமும் இருக்கனும். நம்ம ஸ்லோகன் நெத்தியடி சொல்லியடி.... எல்லோரும் சொல்லுங்க நெத்தியடி சொல்லியடி...

அடிப்பாவி கலாச்சாரத்தையே மாத்திறாளே... ஏய் கீழே இறங்கு.. சிவா அவளை மிரட்ட..

என்ன பால்கார் மீட்டிங் நடக்குதில்ல, டிஸ்டர்ப் செய்யாத போ.. எரும கீழே இறங்குடி.. இங்க இருக்கிறவங்க கிளம்புங்க நான் பிரின்ஸ்பால் கிட்ட கம்பளைன் செஞ்சிடுவேன்... சிவா சொன்னவுடன் எல்லா லேடிஸூம் கிளம்பினார்கள்...

ஏய் லூஸாடி நீ.. கிளாஸ் கட் அடிச்சிட்டு... இங்க எதுக்குடி வராங்க படிக்க.. அதவிட்டுட்டு தன் தலையில் அடித்துக்கொண்டு... வாழ்க்கையில உருப்படியா ஏதாவது செஞ்சிருக்கியா... உங்க அப்பா பெயர கெடுக்கவே வந்திருக்க நீ...

எல்லாம் கெடுத்திட்ட... ச்சே என்று தலையில் அடித்துக்கொண்டு வெளியே செல்ல பார்த்தாள் சக்தி.

நில்லு பில்ல எவ கட்டுவா.. சித்தப்பூ.. எவ்வளவு ஆச்சு... நாலாயிரம் ஆச்சு சிவா...

அவனை நேரே பார்த்த சக்தி..ம்ம்... என் அக்கௌவுன்ட்ல வச்சிக்க..

உனக்கு ஏதுடி இங்க அக்கௌவுன்ட்... உங்க அப்பாவே காசு கொடுத்துதான் சாப்பிடுவாரு...
இப்ப பணம் இல்ல பால்கார்....

இவ ஒரு ஆளுன்னு நீ இவ்வளவு சரக்கு போட்டிருக்க சித்தப்பூ... நான் ஏற்கனவே உங்கிட்ட சொன்னேன் இவ கூட சேராதேன்னு....பல்லை கடிக்க..

என்ன ஒவரா சித்தப்பூவ திட்டுற இந்தா என் மோதிரம் ,வைரம் புரியுதா இதை வச்சிக்கோ நாளை காசு கொடுத்திட்டு வாங்கிறேன்...அவள் ஆள்காட்டி விரலில் போட்டிருந்த மோதிரத்தை சிவாவிடம் கொடுத்தாள்....

எப்ப நீ பணம் தரீயோ அப்ப இந்த மோதிரம் உன்கிட்ட இருக்கும்...கிளம்பு..
வேலுவை நிற்க வச்சி...அர்ச்சனை செய்ய.. வேலு நொந்து போனோன்....

ராமநாதன் சார் உள்ளே வந்து டெபிளில் உட்கார. அப்பா சாமி. இந்த சார் வந்து நம்மல காப்பாத்திட்டாரு.

வாங்க சார்... சித்தப்பூ சாருக்கு டீ சொல்லு....

ராமநாதன் அமைதியாக உட்கார்ந்திருக்க... என்ன சார் கவலையா இருக்கீங்க...ஏதாவது பிரச்சனையா சிவா கேட்டான்.

சிவா படிக்கும் போதே ராமநாதனை பிடிக்கும்..அவர் பாடம் நடத்தவிதமும் நன்றாக இருக்கும்.. போக போக தோழர்கள் மாதிரி பழக ஆரம்பித்தார்கள்...

சம்பளம் ஒண்ணு பத்தமாட்டுது சிவா. ஏன்தான் இந்த வேலைக்கு வந்தோம் இருக்கு... பொண்டாட்டி பிள்ளைகளை ஊர்ல விட்டுட்டு இங்கே தங்கி பேசாம வேலையை விட்டிறலாம் இருக்கேன்....

ஏன் சார் அப்படி பேசிறீங்க....

இவங்க குவார்ட்ஸ் கொடுக்க மாட்டாங்க..வெளிய தங்கறாத இருக்கு சிவா...

ஸார் நீங்க கருணா சார்கிட்ட பேசி பாருங்க... அதுவும் நீங்க எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டாப்...சார் நான் ஒரு ஐடியா சொல்லட்டும்மா ஹாஸ்டல் வார்டன் வேலையை விட்டு போயிட்டாரு இல்ல.. நீங்க வார்டன்னா இருங்க.. அப்படியே உங்களுக்கும் இங்கே ரூமும் அரென்ஜ் பண்ணி தருவாங்க..

நல்ல ஐடியா தான் சிவா..ஸார்கிட்ட பேசிறேன்... உன்கிட்ட பேசினாவே ப்ராப்ளமே சால்வ் ஆயிடும்.என்ன சிவா...சக்தி ஒரே கலாட்டா போல..

ம்ம்ம்...
ஆனா பிறந்தா இந்த பொண்ணு மாதிரி பொறக்கனும்... படிக்கனும் அவசியமில்ல அப்பா சேர்த்து வச்சிருக்காரு வர மாப்பிள்ள பார்த்துக்க போறான் ... என்ன கவலைடா அந்த பொண்ணுக்கு...லைப்ப எப்படி என்ஜாய் பண்ணுது பாரேன்.

அவ சரியான ஜின்சான் கார்டூன் ஸார்... இந்த மார்வல், டிஸ்னி வர கார்டூன் டைலாக்க பேசறா...

ஆனா நல்ல பொண்ணு சிவா... எல்லார்கிட்டையும் நல்லா பழகறா... பசங்க கிட்ட டச் கிடையாது. ஒன்லி கேர்ள்ஸ்...போன வருஷம் எப்படி பாஸானா தெரியும்மா...

இதுல அம்மாவுக்கு கை வலிக்குதுன்னு ஒரு பேப்பரே எழுதில..தெரியுமா... ஆனா உன்கிட்டதான் முறைச்சிக்குது... ஏதோ சம்திங் நினைக்கிறேன்..

சார் அவ ஒரு மென்டல்... இதோ இந்த வேலுவை ஏமாத்திட்டு இருக்கு....

........
இது நடந்து ஐந்தாவது நாள்... காலை ஏழு மணிக்கு.. கருணாகரன் இல்லத்தில் ஊர் தலைவர்கள், உறவினர்கள் உட்கார்ந்திருக்க... ஊர் மக்களே கூடியிருந்தன....இந்த சிவாதம்பி சக்தியை காதலிச்சு ஊரவிட்டே கூட்டிட்டு போயிடுச்சு... என்ன ஓடி போயிட்டாங்கலாம்...அங்கே சிலர் பேச...

அவர்கள் நடுவில் சிவாவும்.... சக்தியும் நின்றிருந்தார்கள்.

-தெறிக்க விடுவான்....
 
தயா என்னவோ திட்டம் போட்டு
இருந்தான்
இப்ப என்ன ஆச்சு
 
தயா என்னவோ திட்டம் போட்டு
இருந்தான்
இப்ப என்ன ஆச்சு
நன்றி சகோ உங்க ஆதரவுக்கு
 
Top