Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-20

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-20

நர்ஸ் பேபியை இனியன் கையில் கொடுக்க நிகழ்ந்து போனான்... தனக்கான ஒரு புதிய உறவு..இனி நான் அனாதையில்ல என் அப்பாவே திரும்ப வந்த மாதிரி உணர்ந்தான்...

இன்று பூத்த பூவு..பூவை விட மென்மையாக இருந்தான் இனியன் மகன்..பத்திரமாக இருகையில் வாங்கிக்கொண்டான்...கண்கள் கலங்க நிற்பதை பார்த்து ரேனுகா அவன் தோளில் கை வைத்தாள்...

அத்தை என் பையனை பாரு அப்படியே தேனு மாதிரியே இருக்கான் வெள்ளையா... ஆமாம் மாமா...சக்தியும் ஆசையாக பார்த்தாள் அந்த குழந்தையை...

அத்தை நான் அனாதையில்ல தானே... இங்க பாரு என் மகன் வந்துட்டான்..

மாமா இதுயென்ன பேச்சு..என் அக்கா காதில கேட்டா அவ்வளவுதான்... அத்தை நான் இருக்கேன்டா..நான் ஒண்ணு சாகல புரிஞ்சிக்கோ...

அய்யோ கொஞ்சம் நிறுத்திருங்களா... டேய் செல்லக்குட்டி உன் மாமியை பார்டா..அவங்கல்லாம் போரு... சந்தோஷத்தை என்ஜாய் பண்ணாதவங்க... மாமி உங்கள தூக்கிட்டா.. சொல்லி குழந்தையை வாங்கினாள்...மற்ற மூவரும் சிரித்தனர்...

நர்ஸ் தேனுவ பார்க்கனும் இனியன் கேட்க..

அவங்க மயக்கத்தில இருக்காங்க...கொஞ்ச நேரம் கழிச்சி பாருங்க....

மாமா..வாங்க சாப்பிட்டு இருக்க மாட்டிங்க டீ குடிக்கலாம்...

இரண்டு மணி நேரம் கழித்து.. உள்ளே தேனை பார்க்க சென்றார்கள்.. இனியன் அவளின் தலையை வருடி விட்டான்...ரொம்ப வலிச்சதா தேனு..இல்லை என்று தலையை ஆட்டினாள்... குழந்தையை அவளிடம் காட்டினார்கள்...உன்னை மாதிரியே இருக்கான்டி...ம்ம்

அவர்களுக்கு தனிமையை கொடுத்து ரேனுகா முதலில் வெளியேற. பிறகு சிவாவும் போக இன்னும் சக்தி வரலியே திரும்பி அவளை பார்க்க...சக்தி வைத்த கண் எடுக்காமல் இனியனை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்..

தலையில் அடித்துக் கொண்டு அவள் கையை பிடித்து வாடி இழுத்து சென்றான்..சக்தி தன் வாயை முடாமல் அப்படியே நின்றாள்...

தன் மனைவியின் மேல் உள்ள காதல், அனைவரும் சென்று விட்டார்கள் என்று நினைத்து... தேனுவின் அருகில் அமர்ந்து டாலி வலிக்குதாடா... ரொம்ப தேங்க்ஸ்டா எனக்கு பாப்பாவ கொடுத்துக்கு, சொல்லி நெற்றியில் கண்ணத்தில் என்று மாறி மாறி முத்தமிட்டிருந்தான் கடைசியில் அவளின் இதழில் இனைந்தான்...இதை தான் நம்ம சக்தி பார்த்திருந்தாள்...

சிவா அவளின் கையை கிள்ள..ஸ்ஸ் ஏன் கிள்ளுற...

லூசு அங்கேவே நிற்பியா...ஆன்னு பார்த்து...

சிவா லைவ்வா இப்போதான் பார்க்கிறேன்... எவ்வளவு அழகான காதல்... தன் மனைவியின் மேல் உள்ள அன்பின் வெளிபாடு சிலர் வார்த்தைகளால், சிலர் முத்தத்தால்... இதில் காமம் இல்ல சிவா...

இருவரும் அங்கே இருக்கும் சேரில் அமர்ந்தார்கள்

ம்ம்... ரொம்ப கஷ்டப்பட்டு சேர்ந்தவங்க...

அண்ணா, தேனு அக்கா மேல எவ்வளவு காதல் பாரு... நீயும் இருக்கீயே...

ஆமாம்... ஆனா ஒரு சிறிய திருத்தம்... அக்காவுக்கு தான் மாமாமேல ரொம்ப காதல்...

அய்யோ உன் அக்காவ விட்டு தர மாட்டியே...

நான் உண்மையை சொன்னேடி...ஏன் நீயும் குழந்தை பெற்றால்...நானும் இப்படிதான் உன்னை பார்த்துப்பேன்...

ஹா ஹா... ஒரு ரொட்டிக்கே வழியில்லையாம் இதுல பிரியாணி கேட்குதாம்..

இதுயென்னடி பழமொழி புதுசா.. உன்ன மாதிரியே இருக்கு...

பேச்ச மாற்றாதே சிவா...அவள் தோள்மேல் கையை போட்டு... எனக்கும் நிறைய ஆசையிருக்கு சக்தி... அக்காவுக்கு என்ன வயசு தெரியுமா... ஆனா உனக்கு நீ சின்ன பொண்ணு .. அட்லீஸ்ட் படிப்ப முடிப்பே நினைச்சேன்... அப்பறம் தான் குழந்தை பற்றியே யோசிக்கனும்.

காசா பணம்மா இப்பவே யோசிக்கலாம் சிவா...தூக்கமே வரல..நீ பேசு நான் கேட்கிறேன்..-சக்தி.

சரி... என்னை மாதிரியே பொண்ணு வேணும்... முக்கியமா அறிவா.. உன்ன மாதிரி இருக்க கூடாது. என் பெண்ணை நிறைய படிக்க வைக்கனும்..

ஏன் என்னை மாதிரி பொறக்க கூடாதா..

ச்சீ.. நீ கேர்லஸ் கேர்ள்..அவ பொறுப்பா என் தொழிலை திறம்பட ஆளுவாள்..

ரொம்பதான்.. அப்பறம் ஏன் என்னை கட்டிக்கிட்ட...அறிவா இருக்கிறவளா பார்த்து கல்யாணம் செஞ்சிக்க வேண்டியது தானே..அவள் கூறும் போதே சந்தியா மனதில் தோன்ற அப்பவே கேட்டிருந்தாள் தெளிவாகிருப்பாள்.. தேவையில்லாத விஷியம் என்று விட்டுவிட்டாள்.

என் விருப்பத்தை எங்கடி கேட்ட..நீ சொன்ன பொய்..

போதும் நிறுத்து... அவஅவ ஆயிரம் பொய் சொல்லுறா..நான் ஒரே பொய்ய சொல்லிட்டு உங்கிட்ட படுற பாடு இருக்கே... நான் யோசிக்க சொன்னது.. குழந்தைக்கு முன்னாடி.. அதாவது கல்யாணம் நடந்து.. குழந்தை வருவதுக்கும் இடையே...

என்ன இடையை.. ஓஓ பத்து மாசம் சொல்லுறீயா.. ம்ம் நல்லா பார்த்துப்பேன் நீ கவலை படாதே சக்தி.. உனக்கு நார்மல் டெலிவரி தான்..

போடா.. நீயும்.. உன் யோசனையும்...போய் ஒரு ஜூஸ் வாங்கிட்டு வா.. அதாவது குடிக்கலாம் சாமி... கண்ணத்தில் கையை வைத்தாள்...

ஏய் நீ என்ன சொல்ல வரன்னு தெரியுது.. அதுக்கு நீ ரெடியாகலையே...

யார் சொன்னா.. நான் எப்பவோ ரெடி தெரியுமா.. இங்க பாரேன் சிவா... கொஞ்சம் வெட்கமா தான் இருக்கு ஆனா என்ன செய்யறது நீ சின்ன பையனாதான் இருக்க..

ம்ம் நானு..

எஸ்.. பிஸினஸ் செய்ய உன் மூளை ஓகே.. ஆனா குடும்ப நடத்த இது சரி வராது.. இப்போ நான் ஐடியா சொல்லுறேன் பாரு...

அவள் சொல்லுவதை கேட்க நிமிர்ந்து உட்கார்ந்தான். அவள் அவன் பக்கம் திரும்பி... சிவா அண்ணாவுக்கு பையன் பொறந்திருக்கானா.. அதுப்போல நாம்ம எண்ணி பத்தே மாசம் பொண்ணை பெத்துக்கனும்.. புரியுதா.. அப்பறம் ஃப்ரி தான் நீ சொல்லுற மாதிரி நான் படிக்கிறேன்.. காலேஜ் எங்க போக போது...நம்ம காலேஜ் தானே அப்பாகிட்ட சொல்லிக்கலாம்...

அவள் காதை திருக்கி... நான் சின்ன பையனாடி.. ஐடியாவை பாரு.. படிக்க போடின்னா.. பிள்ளையை பெத்துக்க போறாலாம்... அப்பறம் படிப்பாலாம்.. முதல்ல நீ எனக்கு மனைவியா இருக்க தகுதியா நிருப்பி...

அதான் சொன்னேன்.. நீ கேட்க மாட்டுறே...நீதான் டெஸ்டே பண்ண மாட்டிறீயே..

ஏய் இங்க பாரு... நீ பீஜீ படிச்சிட்டு வந்தா தான் நமக்குள்ள எல்லாமே... அடுத்த வருஷம் ரெடியா இரு.. உங்க அப்பா காலேஜில்லை வெளியூருக்கு போக போற...

பீஜீயா போடா..நீ எனக்கு டைவர்ஸே கொடு... பரவாயில்ல எங்க அப்பாவீட்ல செட்டில் ஆயிடுறேன்.

அடிங்க கொண்ணே போட்டுருவேன்... முட்டாள் மாதிரி பேசாதே...சரி வா. அந்த பெஞ்சில படுத்துக்கோ.. டைம் ஆகுது.. சிவா மடியில் தலையை வைத்து சிவா செல்லில் ஏதோ பார்த்துக் கொண்டே அவளை தட்டி தூக்க வைத்தான்...

அடுத்த நாள் காலையில்... சிவாவின் பாட்டி, சித்தப்பா குடும்பமே வந்தது. இனியன் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றான்..சக்தியின் குடும்பமும் வந்து பார்த்தனர்..

மதியமாக சக்தி, குழந்தைக்கு துணி எடுக்க வெளியே சென்றாள்... அப்படியே நகை கடைக்கு சென்று குழந்தைக்கு கழுத்து செயின் எடுத்து வந்தாள். கடையை விட்டு வெளியே வர.. யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டு அந்த பிரஷ் ஜூஸ் கடையை பார்த்தாள்...

அதே இடத்தில் பத்து நிமிடம் நின்று பார்த்தாள்... இப்படிக் கூட என் சிவாவுக்கு சிரிக்க தெரியுமா.. அவனுடைய முத்து பற்கள் தெரிய ஒரு பக்கம் கண்ணத்தில் சிறியதாக குழி விழ...ரசித்து பார்த்தாள் சக்தி. பக்கத்தில் அவனிடம் ஜூஸ் குடித்துக் கொண்டிருக்கும் பெண்ணையும் பார்த்தாள்.. சிவாவிடம் பேசிக் கொண்டே தன் முகத்தில் விழும் முடியே எடுத்து காதில் சொறுக்கிய படி பேசினாள்..

எவ்வளவு அழகாயிருக்கா... அன்னிக்கு லாவண்யா போட்டோவில் காட்டின பொண்ணு சந்தியா நேரில் ரொம்ப அழகாக இருக்கா...எதிர் கடையிலிருக்கும் கண்ணாடியில் தன் உடலை பார்த்தாள்.. ச்சே நம்ம கலர் கம்மி.. அவன் சொல்லுற மாதிரியே குண்டாதான் இருக்கேன் இடையில் கை வைத்து பார்த்தாள்.. எக்ஸ்ரா சதையில்ல இருக்கு..



வாயை அடக்கிறீயா சக்தி... இப்போ கேன்டினும் சொந்தம் சும்மா சிக்கன் பப்ஸ், பர்கரு, கீரீம் கேக் இப்படியே உள்ளே தள்ளினா.. எப்படியிருக்கும் பாடி வீங்கன மாதிரிதான் இருக்கும் அவள் மனசாட்சி எள்ளி நகையாட...

அதுக்கு இவனுக்கா என்னால இந்த ஸ்நாக்ஸை விட்டுதர முடியாது. எனக்கு ஒண்ணும் அந்த சந்தியா மாதிரி ஜீரோ சைஸ் வேணாம்.. நம்ம நார்மலா இருந்தா போதும்...

இவ்வளவு பதுமையா அழகாக பொண்ணு பக்கத்தில் இருந்தால் எல்லோருக்குமே சந்தோஷமாதான் இருக்கும்.. அதான் அவனுக்கு என்னையை பிடிக்கலை போல... இந்த சிவா முதல்லே சொல்லியிருந்தா நான் வேற முடிவு எடுத்திருப்பேன்... சக்திக்கு தாழ்வு மணப்பாண்மை வர ஆரம்பித்தது..அவன் நமக்கு ஏற்றவன் இல்லை என்று அடிக்கடி நினைக்க ஆரம்பித்தாள்...

பதினைந்தாவது நாள் குழந்தைக்கு பெயர் பீரஜீத் என்று வைத்தனர்...சிவாவும், சக்தியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்...

அன்று மாலை ராமநாதன் ஸார் சிவாவை பார்த்தார்... என்ன சிவா இந்த பக்கம்.. ஒரு வேலையா வந்தேன் சார்.

சிவா சக்தி சூப்பரா படிக்கிறப்பா வீட்டா கோல்ட் மெடலே வாங்குவா.. நல்ல டேலேன்ட் கேர்ள்..

அப்படி .. சக்தி சொல்ல சொன்னாளா சார் .. சிவா கேட்க.

ராமநாதன் திருத் திரு என்று முழித்தார்...

இல்ல சிவா முட்டாள் இல்லை படிக்கதான் எண்ணம் வர மாட்டேங்குது... ஆனா பாஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆகுவா.. நீ பயப்படாதே சிவா..

ஓகே ஸார் நான் கிளம்பறேன்..



-தெறிக்க விடுவான்.
 
Top