Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-13

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-13
காலை பத்து மணிக்கு கேன்டினில் வேலுவிடம் கதை பேசியபடி இருந்தாள் சக்தி...

சிவா உள்ளே வர...ஏய் கிளாஸூக்கு போகாம..இங்க என்ன செய்யற...

அது சிவா இன்னிக்குதான் நான் வெளியே வந்தேன்...எனக்கு பாடம் புரியல...போர் அடிக்குது சிவா..அதுவுமில்லாத சித்ரா மேம் கிளாஸ்...கேள்வி கேட்டாங்க எனக்கு தெரியில..அசையின்மென்ட் எழுத சொன்னாங்க...நான் முடிக்கல...அதான்.

ஏன் முடிக்கல..சும்மாதான வெட்டியா செல்லை நோன்டிட்டு இருக்க சக்தி...உன்னால முழு ஈடுபாடோட எதுவும் செய்ய முடியாதா...படிப்பு விஷியம் சக்தி....

நான் என்ன செய்யறது...தொழில்முனைவோர் பற்றி கேட்டாங்க..பிசினஸ் பற்றி ..எனக்கு புக்குல இருக்கிறது எதுவுமே புரியில சொன்னேன்...அதுக்கு அந்த குதிரை ,சிவாவுக்கு பொண்டாட்டியா இருந்து இது கூட தெரியாதா சொல்லுது...

அவளை கூர்மையாக நோக்கினான்..அடுத்து அவள் சொல்ல வரது...

சிவா பொண்டாட்டியா இருந்தா என்ன தெரிஞ்சிக்கனும் எப்படி பால் விற்கிறாருன்னா...அவங்க யாரு இப்படி பேச...உனக்கு பொண்டாட்டியா இருக்க என்ன தேவையோ அதுயிருக்கு....எனக்கு கோவம் வந்திடுச்சு...நான் வெளியே வந்துட்டேன்... சும்மா திரும்பி போக சொல்லாத...படிபடியின்னு உயிர வாங்கற...சக்தி அலுத்துக்கொண்டாள்...

நானே கொஞ்சம் பேசனும் நினைச்சேன்...சரி நீ வேலுகூட போ...

வேலு காரில் அவளை விழுப்புரம் கூட்ரோடுக்கு அழைத்துச் சென்றான்... ஒரு பெரிய சூப்பர் மார்கெட்டில் இறங்கினார்கள்...நேசன் சூப்பர் மார்கெட் பலகை போடபட்ட போர்ட்..உள்ளே வா சக்தி...இரண்டு அடுக்கு கொண்ட பெரிய மளிகை கடை.

இங்கே ஏன் கூட்டிட்டு வந்திருக்க வேலு... ஏன்னா இந்த கடை சிவாவுடையது சக்தி...தினமும் இங்கே தான் வருவான்... இவர்தான் மானேஜர் மூர்த்தி...சக்திக்கு அறிமுகம் படுத்த..அங்கே வேலை செய்த அனைவரும் சக்திக்கு வணக்கம் வைக்க...தலையை அசைத்தாள்..
கீழ்தளம் முழுக்க காய்கறி முதல் மளிகைப்பொருட்கள்..ஒருபக்கம் ஸ்டோரேஞ் செய்யப்பட்ட ஐஸ்கீரம் முதல் குளிர் பாணங்கள் வரை..மூனு கவுன்டரில் கம்ப்யூட்டர் பொருத்தியுள்ளது..மேலே ஏறினால் மாடியில் வீட்டு உபயோக பொருள் மேட்,பக்கெட் முதல் பிளாஸ்டிக் சேர் வரை... ஒரு பக்கம் முழுவதும் ஷோ கேஸ் ப்ரீயா இருக்க..இங்கே ஏன் எதுவும் வைக்கல சித்தப்பூ...


இது பெண்களுக்கான செக்ஷன் ..காஸ்மெட்டிக்ஸ் வைக்கலாம் யோசிச்சுருக்கோம் சக்தி...அது உன்னுடைய ஐடியாவை கேட்டு அமைக்கலாம் சிவா சொல்லிருக்கான்...

ரிலையன்ஸ் மாதிரி இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட்..இந்த மார்க்கெடுக்கு நானே இரண்டு மூனு தடவை வந்திருக்கேன் சித்தப்பூ...

வா சக்தி கடைக்கு பின்னாடி பில்டிங் இருக்கு அங்க பார்க்கலாம். இருவரும் செல்ல... அங்கே பெண்கள் சாம்பார்பொடி முதல் ஸ்நாக்ஸ் வகைகள் வரை குடிசை தொழில் மாதிரி செய்து பேக்கிங் செய்தார்கள்... ஆச்சரியமாக பார்த்தாள் ஓஓ இங்கேயிருந்து தான் ஜூஸ், ரோஸ்மில்க்.. மளிகை பொருட்கள் கேன்டினுக்கு போகுது...இவ்வளவு பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கான்...

சக்தி என்ன அப்படி பார்க்கிற...இவங்க சுற்றியிருக்கும் கிராமத்து பெண்கள்...சிவா எங்கே சித்தப்பூ...

வா கூட்டுட்டு போறேன்...ஊரை விட்டு சற்று தள்ளி...காம்பவுன்ட் தாண்டி கார் உள்ளே சென்றது..

இது என்ன பேக்டரி சித்தப்பூ... பாப்பா இது நேசன் பால் நிறுவனம்...இங்கே தான் பால பதப்படுத்துவோம்...தமிழ்நாட்டில ஹட்சன் பால் நிறுவனம் போல்...நாமளும் நேசன் பாக்கெட் பால் தயாரிக்கிறோம்..ஸ்டார்ட் செஞ்சு ஒரு மாசம்தான் ஆகுது...இப்ப விழுப்பரம் மாவட்டம் மட்டும் போக்ஸ் பண்ணிருக்கோம்..

இரண்டு நாளாதான் பால் சப்ளை செய்றோம்...பேக்டரியை சுற்றி பார்த்துக் கொண்டே ,சுற்றியிருக்க கிராமத்தில உள்ளவங்கிட்ட நாமதான் பால் வாங்குறோம்...அதுக்கு தான் சிவா அலைஞ்சிட்டு இருக்கான்..அப்பறம் டிலர்ஸ் தேவை..அதுவும் பார்க்கிறோம்... எங்க சித்தப்பூ சிவா...

அதோ அங்க ஒர்க்கர்ஸ் கிட்ட பேசிக்கிட்டு இருக்கான் பாரு.. சக்தி...சிவாவை பார்க்க..சிவாவும் அந்த நேரத்தில் திரும்பி பார்த்து..அவளை நோக்கி நடந்து வந்தான். அவன் அருகில் சென்று இறுக்க கட்டிக் கொண்டாள்.. சுற்றியிருந்தவர்களை மறந்தாள்...அவளுக்கு வார்தைகளால் கூற முடியாத மகிழ்ச்சி...சிறிய வயதில், இளைஞன் எவ்வளவு பக்குவப்பட்டவன்...இந்த நிலைமை வர இவனுடைய கடுமையான உழைப்பு,முயற்சி மட்டுமே... அதான் ஊரே அவனுக்கு சப்போர்ட் பண்ணுது...

இதில் அவனுக்கு நான் எதில் சமம் எள்ளி நகையாடியது அவள் மனசாட்சி..
முதன் முதலில் கட்டி அனைத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியவள்..அதோட நிற்காமல் சிவாவின் கண்ணத்தில் முத்தமிட்டாள்...சக்தி எல்லோரும் பார்க்கிறாங்க விடு..
பார்க்கட்டும் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு...ஐ லவ் யூ சிவா..ஆனா நான் உனக்கு பிட் இல்ல தெரியுது ... நீ காதலிக்கிறீயோ இல்லையோ அது எனக்கு தேவையில்லை ஐ லவ் டூ மச், திரீ மச், ஃபோர் மச்...நிறைய மச்..

இப்ப சொல்லு நான் யார்..

நீ பிஸினெஸ் மேன் சிவா...

அப்ப அந்த மேம் சொன்னது யார் மேல தப்பு... என் மேலதான் தப்பு சிவா..

எல்லாரும் இருக்க சொல்ல இப்படி எமோஷன் ஆக கூடாது சக்தி..எதுவா இருந்தாலும் நீ உடனே முடிவெடுக்கிற...சரி வா வீட்டுக்கு போலாம்...

காரில்.... சிவா என்னால நம்பவே முடியில...

சக்தி ,உனக்கு மூளையில்லையின்னு நொடிக்கு ஒரு தரம் சொல்லுற...ம்ம் சக்தி முறைக்க..
ஏன்டி என் வீடு எவ்வளவு பெரிசு , கார் என்ன விலை தெரியுமா...இதெல்லாம் மாட்டு பண்னையில சம்பாரிக்க முடியுமா... முதல்லே உன்கிட்ட ஒர்க்கர்ஸ் டிடைல்ஸ் கொடுத்தேன்.. அதுக்குட படிச்சி பார்க்கல...நீயெல்லாம் என்னத்த படிச்சியோ... தன்டம் ஆனது உங்கப்பா காசு.

ஹாங்...அதெல்லாம் விடு ..உன்னை கட்டிக்கொடுத்திருக்காரு அப்பவே தெரிய வேணாம்... உன் பாவாவ ப்ராக்கெட் போட்டாருன்னு சொன்னா கேட்டியா...

அப்ப எங்க அப்பா புத்திசாலிதான்...

ஆமாம் ஆமாம் மூளையே இல்லாத பெண்னை பெத்திருக்காரே....

ஓவரா பேசாதடா பால்கார்...

ஏய் அடிங்க...

சரி நீ எப்போ இந்த மாதிரி கட்டிபிடிச்சு ஐ லவ் சொல்லி உம்மா தர போற சிவா...
என்ன சாதிச்ச நான் ஒடி வந்து உன்னைய கட்டிபிடிக்க...முதல்ல டிகிரி கம்பிளீட் பண்ணுடி..
இங்க பாரு சிவா ஒரு வீட்டில இரண்டு பேரும் புத்திசாலியா இருக்க கூடாது...நமக்குள்ள பிரச்சனை வரும்...ஈகோ வரும்...சண்டை வரும்... மனஸ்தாபம் வரும்... ஆனா காதல் மட்டும் வராது...

இவ்வளவு பக்கம் பக்கமா பேசுறதுக்கு உன் பாடத்தை படிச்சாவது நீ பாஸ் ஆகுவ...
எனக்கு ஒரு டவுட் சிவா...எல்லா பேரும் நேசன் வச்சிருக்க...அதென்ன குலதெய்வம் பெயரா....

சிவா அவளை முறைக்க...என்ன சொல்லிட்டோம் இப்படி லுக் விடுறான்...
வீடு வந்து சேர..போயிடு சக்தி என் கண்ணு முன்னாடி நிற்காத..

என்ன கேட்டே...ன்.

உன் புருஷன் பேர கூட தெரியாத நீ எல்லாம் இரண்டு வருஷம் லவ் செஞ்சேன் பீலா விட்ட ,இந்த ஊரே நம்புது பாரு...அன்னிக்கு சொல்லிருக்கனும் ..என் பெயரை அந்த பொண்ணுக்கிட்ட கேளுங்க...அவளை அலட்சியமாக பார்த்து ,என் பெயர் சிவநேசன்...
........
இரவு, ஹாலில் சோபாவில் அமர்ந்து, கண்ணத்தில் கையை வைத்து சக்தி யோசித்தாள். ஏற்கனவே பால்காரனா நினைத்த போதே வச்சி செய்வான்..இப்போ இவனை பற்றி எல்லாம் தெரிஞ்சிடுச்சு என்ன ஆட்டம் ஆட போறான் தெரியிலையே.. அதுக்குள் வசியம் போட்டு லவ் பண்ண வச்சிடனும்...

சித்தப்பூ வீட்டிற்குள் வர, வாங்கிட்டு வந்திட்டியா...பாப்பா இந்தா மை என்று ஒரு சிறிய டப்பாவை கொடுத்தான்...

தேங்க்ஸ் சித்தப்பூ...இன்னிக்கு நைட் இருக்குடா சிவா உனக்கு..

ஆனா பாப்பா...இந்த மையை இரண்டு இடத்தில தடவுனுமாம்..ஒண்ணு நெத்தில..அப்பறம் முக்கியமான இடம் நாபியில...

நாபி யூ மீன் தொப்புள்..

எஸ் எப்படியாவது சிவாக்கு தடவிடு..அவன் வரான் நான் கிளம்பறேன்...
இரவு லைட்லேம்பு வெளிச்சத்தில்.... சிவா படுத்திருக்க , பக்கத்தில் சக்தி தூங்காமல் விழித்திருந்தாள்...சிவா அருகில் சென்று, ஹப்பா நல்லா தூங்கிட்டான் தலையனை அடியிலிருந்த டப்பாவை திறந்து அதிலிருந்து மையை எடுத்தாள்...பாவா இன்னிக்கு மாட்டின...மெதுவா சிவாவின் வயற்றின் மேல் இருந்த டி சர்ட்டை விலக்கினாள்...அம்மாடியோ சிக்ஸ் பேக் வச்சிருக்கான் போல...சக்தி திருட்டுதனமா சைட் அடிக்க கூடாது என்று அவள் மனம் எச்சரித்தது... மையை எடுத்து நாபியில் தடவ போகும் போது கையை பிடித்துக்கொண்டான் சிவா...

என்னடி செய்யற...என்ன இது...லைட்டை ஆன் செய்தான்.

அது.. அது...சிவா

என்ன கையில கருப்பா இருக்கு....

ம்ம் எச்சிலை விழுங்கி விட்டு சிவா பக்கத்து ஊருல கருப்பானாந்தா சாமியார் வந்திருக்காரு..அவரு கொடுத்த பிரசாதம் தான் இது...ஆண்கள் இந்த இடத்திலதான் வைக்கனும்மா..அப்பதான் தீர்காயூளா இருப்பாங்க சொன்னாரு...

சிவா நம்பாமல் அவளை பார்க்க...என்னை சந்தேக படுறீயா...

பின்ன யாருன்னா மையை தருவாங்களா...உனக்கு ஏன்டி புத்தி இப்படி போகுது...இந்த மாதரி வேலையை பொண்ணுங்க செய்வாங்களா..முதல்ல வெளியே போடு இதை..போய் பாத்ரூமில்ல கையை கழுவிட்டு வா...

ஐய்யோ மாட்டிட்டோமே..தன் கையை கழுவிட்டு வந்தாள்...இரண்டு பேரும் ஒவரா அழிஞ்சாட்டியம் பண்ணுறீங்க..நாளைக்கு காலையில இருக்கு...சக்தி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு இன்னிக்கு அலைச்சல் வேற நின்னது என் காலு வலிக்குது, தூக்கம் வருது ,ப்ளீஸ் தொந்தரவு செய்யாத சொல்லிட்டு..கவுந்து படுத்துக்கொண்டான்..

ஆனாலும் தூங்கமுடியவில்லை அவனால் இன்று வெளியே அதிகம் வேலையிருந்ததால் கால் வலியில் புரண்டி புரண்டி படுத்தான்..

இதை கவனித்த சக்தி... சிவா என்னாச்சு...

ம்ம் கண்ணை முடியபடி கால் வலிக்குது...சக்தி காலை பிடித்து விட...

வேணாம் விடு சக்தி... சிவாவின் பேச்சை பொருப்படுத்தாமல் காலை அழுத்தினாள்...அவள் பிடித்தது வலி குறைய டயர்டில் தூங்கி விட்டான்...
 
hiiiii அப்பாடி வந்துட்டியா????? இரண்டு மூணு நாளா உங்க ud தேடி தேடி வெறுத்திடேன்,
very nice ud....
 
Engapa poreenga, oru update ku thavama iruka vendiyatha irukku. Sakthi Sema, siva ultimate. But konjam andha ponna consider pannalame. Nesan Perla mattum thana.
 
நாபி target miss akinathala காலை தொட்டாச்சு எப்போது அவன் மனதை தொடுவது
 
யார் யார் கூட பேசுறாங்கனு தெளிவில்லாமல் ஒரு கதை?
 
Top