Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-09

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-09
தன் அப்பா,அம்மாவை கட்டிக்கொண்டு...தலையை அசைத்து சிவாவுடன் காரில் ஏறினாள் சக்தி...ஏதோ மணம் கணக்க .. முதன்முதலில் பயத்தை உணர்ந்தாள்...ஒரே ஊர்தானே இரண்டு நாள் சிவா வீட்டில் இருந்துவிட்டு மீதி நாள் நம்ம அம்மா வீட்டில தங்கிலாம்...

பால்கார் வீடு எப்படியிருக்கும்..நம்ம வேற வசதியா வாழ்ந்துட்டோம்... வசதியா இருக்கும்மா..முதல்ல ஏஸி இருக்கும்மா அவன் வீடு..ஒட்டூ வீட இல்ல சின்னதா மாடி விடா இருக்கும்..வேலு காரை ஒட்டி வர பின் சீட்டில் சக்தியும்,சிவாவும் உட்கார்ந்திருந்தார்கள்...அவள் கண்னை மூடிக்கொண்டே யோசித்தாள்...எப்படியிருந்தாலும் நான் ஏத்துகிட்டுதான் ஆகுனும்...

ஒரு இடத்தில் வண்டி நிற்க..சக்தி வீடு வந்திடுச்சி இறங்கு... வண்டியிலிருந்து வீட்டின் முன் இருவரும் ஜோடியாக நிற்க. வீட்டை பார்த்து மலைத்து போனாள்.. இந்த கிராமத்தில மார்டன் டைப் பங்களா. வாவ் என்று ஆச்சிரியப்பட..

சிவா இது உன்னோட வீடா... சூப்பரா இருக்கு பில்டிங்...வெளியே இருக்க லான், சுத்தி பூந்தோட்டம்.. செயற்கையான இந்த பவுட்டேஷன் அதில வாத்துங்க...நான் இந்த பக்கம் வந்தில்ல அதான் எனக்கு தெரியல..

ஏன் குடிசை வீடா இருக்கு நினைச்சியா...

அப்படியில்ல ஓட்டு வீடா இருக்கும்....சில பெண்கள் ஆலம் சுற்றி அவர்களை உள்ளே விட. தேனு இருவரையும் பூஜை அறைக்கு அழைந்து சென்றாள். அங்கே சிவாவின் அப்பா போட்டோவும் இருந்தது. விளக்கேற்றினாள் சக்தி. இருவரும் சாமி கூம்பிட்டு வெளியே வந்தார்கள்.

வீட்டை சுற்றி பார்த்தால்... சுத்தமாக வைத்திருந்தனர். பாலும் பழமும் இருவருக்கும் கொடுத்தனர்...

சிவா தன் அறைக்குச் சென்றான்...தேனுவும்,மோகனும் சக்தியுடன் பேசி கொண்டிருந்தார்கள்...சக்தியை தன் ரூமிற்கு அழைத்து சென்ற தேனு ரெஸ்ட் எடு சக்தி..ம்ம் சரி அண்ணி என்றாள்...

இரவு எட்டு மணிக்கு சக்தி வெளியே வர... ரேனுகா சிவாவிடம் வாக்குவாத்தில் இருந்தாள்... கல்யாணம் நடந்தா இந்த சடங்கு செஞ்சிதான் ஆகுனும்... அவங்க வீட்டில ரெடி பண்ண ஆள் அனுப்பிருங்கா சிவா...

அம்மா எது எப்ப நடக்கனும் எனக்கு தெரியும்...காலையிலிருந்து ரெஸ்ட் இல்லாம இருக்க சாப்பிட்டு போய் தூங்கு..நான் பேசிக்கிறேன் இவங்கிட்ட...

டேய் பிரச்சனை பண்ணாதடா ரேனுகா வாயை விட.. வீடே இரண்டானது சிவாவின் பேச்சு...கருணா சார்கிட்ட சொல்லுங்க நான் பார்த்துக்கிறேன்...

மெதுவாக வேலுவிடம் வந்து...சித்தப்பூ என்ன சிவா கத்தறான்.. என்ன சடங்கு...

ம்ம் அதுவா எல்லாம் உன் பர்ஸ்ட் நைட் தான்...

அப்படியா நல்ல விஷியம்தானே இவன் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறான்...பயபுள்ள நல்ல புள்ளையோ...ம்ம் நியாம நம்மதானே பயப்படுனும்...

ஏய் சித்தப்பூ என்னவோ சிங்கம்,புலி மிரட்டன... இன்னிக்கு உன் மச்சான் கவுந்துடுவான்...

நான் அன்னிக்கு சொன்னே இல்ல என்னைய நாய் மாதிரி சுத்தி வரப்போறான். இந்த நைட்ல அவன் திமிர அடக்கி...

நிறுத்து அவன் அந்த சடங்கதான் வேணாம் சொல்லுறான்....

சக்தி வாம்மா சாப்பிட...ரேனுகா கூப்பிட...அவர்களிடம் சென்றாள்...சாப்பிட்டு முடித்து நில நிறத்தில் சில்க் காட்டன் சாரியை கட்டிவிட்டு...சிறிதாக அலங்காரம் செய்து அவளிடம் பால் சொம்பு கொடுத்து ரூமிற்கு அனுப்பினார்கள்....

ரூமின் கதவை தட்டி அவள் உள்ளே சென்றாள்...சிவா பெட்டில் கால் நீட்டி செல்லில் மெயில் பார்த்திருந்தான்..எந்த வித அலங்காரமும் இல்லாமல் இருந்தது சிவாவின் அறை. ஆனால் ஸ்டார் ஹோட்டல் அறையை போல் லைட்ஸ், பால்ஸ் சீலீங்... நேர்த்தியான படுக்கை விரிப்பு...அறையை தன் கண்களால் சுற்றி பார்த்தாள். சூப்பரா இருக்கு சிவா....ரசிகன் போ...

இந்தா பால்...எழுந்து நில்லு கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கனும்மா...

அப்படியா..என்று எழுந்து நின்றான் சிவா...அவன் காலில் விழுந்தாள்...அவளை எழுப்பி விட்டான்...வெட்கம்,நானம் என்று எதுவும் வரவில்லை சக்திக்கு எப்பவும் பேசுவதுபோல் பேசினாள்...

என்ன அப்படி பார்க்கிற சிவா...என்னடா கால்ல விழுறாளா. அவன் அமைதியா அவள் பேசுவதை கேட்டான்... நீ என்னைவிட பெரியவன் அதான்.

நீ ஏன் வீட்ட விட்டு போனே.. இப்ப கேட்க எனக்கு உரிமை இருக்கு நினைக்கிறேன்...
ம்ம் முதல்ல சாரி கேட்கிறேன்..நீ நினைச்சிருக்க மாட்ட என்னுடைய சுழ்நிலை கையை பிசைந்து கொண்டே நான் பொய் சொல்லிட்டேன்....

அக்கா எப்பவும் மாமா பேச்சைதான் கேட்பாங்க..ஐந்து வருஷம் ஆயிருச்சு கல்யாணமாகி குழந்தையில்ல... இத சாதகமா பயன்படுத்திக்கிட்டாரு எங்க தயா மாமா.. என்ன பேசனாரு எப்படி சம்மதிக்க வச்சாரு தெரியல.எங்க அக்காவே கேட்கறா இரண்டாதாரமா மாமாவ கட்டிக்கோ...

அதுக்கு வீட்டைவிட்டு போகனும்மா...நல்லா வாய் நீளமா பேசுவயில்ல ..முடியாதுக்கா...தெளிவா பேச வேண்டியதுதான...உங்க அப்பாவே இதை சால்வ் பண்ணிருப்பார்...

சண்டை என்று வந்தால் எவ்வளவு வேணாலும் போடலாம்...ஆனா பாசத்தை காட்டி கேட்கிறா..கடைசில தூக்குமாட்டிக்க போயிட்டா என்ன செய்யறது தெரியில.. அப்பாவே உடைஞ்சிட்டாரு.. என்னைபற்றி அப்பாவுக்கு தெரியும் எங்க போவேன் தெரியுமா...எங்க அக்கா அவளுக்கு குழந்தை வேணும் சுயநலமாக யோசிக்கறா...என் வாழ்க்கை பத்தி ஏதாவது யோசிச்சால...எனக்குனு மனசுன்னு இருக்கு அதில ஆசையின்னு இருக்குமில்ல...
உன் அக்கா சுயநலவாதியின்னா...நீ..

நானா...கண்களை விரித்து சிவாவை நோக்க...

ம்ம் நீ இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்க....சுயநலமா யோசித்தது...சிவா என்றவனின் வாழ்க்கை...எனக்கு மனைவியா வரவ எப்படியிருக்கனும் ஆசையிருக்காதா....

சிவா...கையை அவள் முன் காட்டி நிறுத்து...

நீ சுயநலமாக சொன்ன பொய்...என் வாழ்க்கையே ஒண்ணுமில்லாம பண்ணிடுச்சு...
இப்ப என்னாச்சு.. நல்லாதான இருக்கிறோம்...இப்ப வாழ்க்கையை ஆரம்பிச்சு குழந்தைகளை பெத்துகிட்டு என் அப்பாவுக்கும் ,உங்க அம்மாவுக்கு சந்தோஷத்தை கொடுக்க போறோம்...

அவளை உற்று நோக்கி பன்னி கூடதான் பத்துக்குட்டி போடுது...அதுவும் நாமலும் ஒண்ணா...வாழ்க்கையில முன்னேற எண்ணமில்ல...அதாவது லட்சியம் அதுமாதிரி..
என்னடா இவன் பன்னி கூட கம்பெர் பண்ணிட்டான்...சரி சிவா வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலைமைக்கு வந்துட்டோம். பிறகு என்ன செய்வோம்... அடுத்து குழந்தைதான பெத்துப்போம்...

ம்ச்..நீ என்னடி படிச்சிருக்க... ஆப்ட்ரால் டிகிரி கூட முடிக்கல... குடும்பம் நடத்தனும்மா உன் கூட ... இருபது வயசுதான் ஆகியிருக்கு...நீயெல்லாம் என் பொண்டாட்டி ஆகுற தகுதியே இல்ல...

அதுக்கு டைவர்ஸ் பண்ண போறீயா...விடு நான் எங்க அப்பாவீட்டுக்கே போவேன்....
ஹா ஹா சிரிச்சான்...ஊர கூட்டி கல்யாணம் செஞ்சிக்கிட்ட... இப்ப நீ வேணாம் அப்பாவீட்டுக்கு போவே....

அதான் சொன்னேன் சின்ன பொண்ணு..முடிவு எடுக்க தெரியாது உனக்கு..உங்க அப்பாவே உள்ளே சேர்க்க மாட்டாரு....ஏன்னா நீ இப்ப சிவா பொண்டாட்டி...

என் பொண்டாட்டியாக தகுதியை வளர்த்துக்கோ சொல்லுறேன்... புரியிலையா நீ எனக்கு ஃபிட் இல்லை...அது வரைக்கும் இந்த முதலிரவு..மற்றதும்.. நமக்குள்ள எதுவும் கிடையாது... இதெல்லாம் நல்லா தெரியும் நினைக்கிறேன்...

நான் உனக்கு மனைவியா செட் ஆகலனா

டைம் தரேன் டிகிரி முடிக்கிற வரைக்கும்...உனக்கு ஓகே இல்லையின்னா டைவர்ஸ் தரேன்...

இன்னைக்கு மேட்டர் இல்லை சொல்லுறதுக்கு ஏன் பால்கார் இப்படி சுத்தி வளைச்சி பேசற...

அவள் கழுத்தை பிடித்தான், பால்கார் சொன்ன கொண்ணுடுவேன்.மிரட்டி விட்டான்...
சரி என்ன செய்யனும் சொல்லு...

காலையில அம்மா ஐந்து மணிக்கு எழுந்துப்பாங்க..நீ ஒரு ஐந்தரைக்கு எழுந்துக்கோ.. வீட்டுக்கு பின்னாடி பால் பண்ணை இருக்கு...எவ்வளவு பால் எடுத்துட்டு போறாங்க என்ட்ரி போடனும்...வெளியில இருந்து பால் சப்ளை பண்ணுவாங்க..அதையும் குறிச்சிக்கனும்...அப்பறம் கம்பயூட்டர்ல டேலி தெரியுமா...

அக்கௌன்ட்ஸே தெரியாது நான் எங்க டேலி... தெரியாது என்று தலையை ஆட்டினாள்...

சரி மோகன்கிட்ட கத்துக்கோ...கேன்டின்..ஹாஸ்டல் நான்தான் எடுத்திருக்கேன்...தினமும் பில் ,ஸ்டாக் லிஸ்ட் என்ட்ரி பார்க்கனும்.... நம்மகிட்ட பால் பண்ணை மற்ற இடமும் சேர்த்து 50 பேருக்கு மேல வேலை செய்யறாங்க சேலரி டிடைல்ஸ் நோட்டு போடனும்...

சிவா எனக்கு தூக்கம் வருது...பாதி சொன்னதுக்கே தூக்கம் வருதா.. தூங்கு...

நீ கீழே படுத்துப்பியா சிவா...

ஏன் கீழே படுக்கனும்..இல்ல எனக்கு கீழே படுத்து பழக்கமில்ல சிவா...

இங்கே படு..நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். நான் கன்ட்ரோல இருப்பேன்...பெட் பெரிசுதானே நீ அந்த சைட் படு...

விளக்கு அனைக்க பட்டது...கொஞ்சநேரம் போன பிறகு கண்ணை திறந்தாள் சக்தி...இவன் பெரிய அப்பாடக்கரா இருக்கிறானே...வேலியில போன ஒனானை எடுத்து வேட்டியில விட்ட கணக்கா இல்ல போச்சு...சித்தப்பூ சொன்ன மாதிரி நடக்கும்மா...

ம்ம் ஆனான பட்ட விஸ்வாமித்ரரே கவுந்துட்டாரு நம்ம மேனகையிடம்.. இவன் எப்பூட்டு...நான் இவனுக்கு மனைவியா இருக்க தகுதியில்லையாமே.. இந்த உலகத்திலே என்னை தவிர யாரும் உனக்கு மனைவி கிடையாது...நீ தான்டி என் உயிர் சொல்லி வருவ...வரவைப்பா இந்த சக்தி... அந்த மெல்லிய வெளிச்சத்தில் சிவாவின் முகத்தை பார்த்தால்.. ஆனாலும் அழகாதான் இருக்கான்.

நல்லா தூங்கறான்...டெஸ்ட் வச்சி பார்க்கலாம்.. அவள் காலைத்தூக்கி சிவாவின் இடுப்பில் போட..

சக்தி காலை எடு என்று தெளிவா கண்னை மூடி சொன்னான்...

ஐய்யோ.. பயப்புள்ள தெளிவா இல்ல இருக்கு...இந்த டீலும் நல்லாதான் இருக்கு எங்க லைப் இன்டரஸ்ட்டா போலையே பார்த்தேன்.

காலையில் ஐந்தரைக்கே எழுப்பி விட்டான்...அவள் கடமையை முடித்து கீழே இறங்கி வர... படிக்கட்டில் காபியை நீட்டி நின்றான் வேலு...

அண்ணா வேலு அண்ணா...

சொல்லு பாப்பா...

வச்சி செஞ்சிட்டான்னா...

ஹா ஹா...வேலு சிரிக்க....

இந்த தங்கச்சி அழறதை பார்த்து சிரிக்கிற...அன்னிக்கு என்ன சொன்ன நீ எனக்கு தங்கச்சி பாப்பான்னு..

சரி அழுவாத காபியை குடி... தெம்பா யோசிக்கலாம்..இப்ப சீக்கீரம் குடிச்சிட்டு வா பண்ணைக்கு போலாம்... உன் மாமியாருக்கு உடம்பு முடியில..அதான் தூங்குறாங்க...
வீட்டின் பின்புறம் மேல்கூரை ஸ்டில்லால் போட்டு மாட்டு பண்ணை வைத்திருந்தான்.. இடமே சுத்தம்மாக இருந்தது... அங்கே வேலை செய்பவர்கள் ப்ளு கலர்ல சீருடை அணிந்திருந்தார்கள்.

சித்தப்பூ இவ்வளவு பேரா வேலை செய்யறாங்க.....

இந்த கிரம்மதில மாடு வச்சிருக்கவங்க எல்லோரும் பாலை இங்க கொடுப்பாங்க.. இங்கிருந்து ஆரோக்யா கம்பெனி பால் எடுத்துட்டு போவாங்க சக்தி..உன் புருஷன் அந்த லாரியான்ட நின்னுருப்பான். பால டெஸ்ட் பண்ணுவாங்க வொர்கர்ஸ்... நீ எவ்வளவு பாலுனு என்ட்ரி போடனும். கொஞ்சம் பால் கேன்டின்ல, ஹாஸ்டல்ல, ஊர்ல கொடுப்போம்.
ஒன் அவர்ல முடிஞ்சிடும் சக்தி...பரப்பரப்பா வேலை நடந்து கொண்டேயிருந்தது...

காலை டிபனை சாப்பிட்டு முடித்த சிவா... காலேஜ் கிளம்பு சக்தி என்றான்...
என்னது காலேஜிக்கா...நோ வே..

.......தெறிக்க விடிவான்.
 
Very nice..
என்ன பா சிவா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்கான்????
 
நல்லா இருக்கு பதிவு
ஹ????
சிவா திட்டம் எல்லாம்
சரியா சொல்றான்
இவ கேப்பா?
 
Top