Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-02

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-02
சாரிண்ணா இவ தெரியாம பேசிட்டா... சுந்தரியின் கையை பிடித்து வாடி போலாம் இழுத்தாள் வனி.

அதற்குள் இன்னொரு பைனல் இயர் படிக்கும் பெண் ஒருத்தி வந்து சிவா முன்னாடி நின்றாள்...

சிவா இப்ப நீ என்னுடைய லவ்வ ஏத்துக்கல நான் என் கையை அறுத்துப்பேன் என்று கையை நீட்டினாள்.

நீ ஏதாவது அறுத்துக்கோ.. எனக்கு இஷ்டமில்ல, எங்க அத்தை பொண்ணோட நிச்சியம் ஆயிடுச்சு புரியுதா...

இல்ல நீங்க பொய் சொல்லிறீங்க ....பீளீஸ்.. என்று கெஞ்சினாள்...
அவள் கெஞ்சுவதை பார்த்து சக்தியால் கோபத்தை அடக்க முடியாமல், ஏய் உனக்கு அறிவிருக்கா உலகத்தில இவனை தவிர ஆம்பள்ளையே இல்லையா. அவன்தான் உன்னை கண்டுக்கவேயில்ல... போய் படிக்கிற வேலைய பாரு.

ஹலோ.. யார பார்த்து அவன் இவன் சொல்லுற.. உன் வயசு என்னடி...போடி இங்கிருந்து...-சிவா
இது எங்கப்பா காலேஜ் நான் போகமாட்டேன்...விரைப்பா நிற்க...

சாரிண்ணா சக்தி வாடி... வனி அவளை கூட்டிக்கொண்டு டெபிள் சேரில் உட்கார்ந்தார்கள்.... சிவா தன் வியாபாரத்தை கவனிக்க..

ஏன்டி அந்த அண்ணா பேச்சுக்கு போற...

இரண்டு சிக்கன் பப்ஸை, வேலு அவர்கள் டெபிளில் வைக்க... நீதான் சேர்மேன் பொண்ணு சக்தியா...
ஆமாம் சித்தப்பூ...

உனக்கும் சித்தப்பூவா....சரி நூறு ரூபாய்க்கு மேல பில் வந்தால் பாதாம் கீர் ப்ரீ.

பால்காரன் புத்திசாலிதான்.. வீட்டில மிந்த பாலை பாதாம் கீர் ஆகிட்டான்.வனி இனிமே இந்த காலேஜில பொழுதுபோக்கே இந்த கேன்டின் தான். பால்கார் எப்ப வருவான்.

ஏன்டி..

அவன் கொஞ்சம் சுடுமூஞ்சி... ஆனா நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்.
யாருடி.. வேற யாரு நம்ம சித்தப்பூ வேலு தான்...

சிவாண்ணா மதியம் லன்ச்க்கு தான் வருவாரு. சோ 11.15 மணிக்கு ப்ரீ...அப்ப நம்ம காய்த்ரி மேடம் காமர்ஸ் க்ளாஸ்டி பிளேடுதான்.

சரி வா பில் பே பண்ணிட்டு கிளம்பலாம்...திரும்பவும் சிவாவிடமே வந்தாள். என்ன பால்கார் இன்னிக்கு நீ ஊத்தின பால்ல அவ்வளவு தண்ணீ. கலப்படம் செய்யற மேன் ,கண்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போவேன். ஊர் மக்கள ஏமாத்திற..

அவளை ஒரு பார்வை பார்த்து...ம்ம் நேத்து நைட்டு மாடு மழையில் நனைச்சிருச்சு அதான் தண்ணீயா ஆயிடுச்சு பால்... அது என் மிஸ்டேக் இல்ல...

வாயில்லா ஜீவனுக்காக விட்டு போறேன் இல்லன்னா, கேஸ் போட்டு கம்பி எண்ண வைப்பேன் ,.

கீழ் உதட்டை கடித்துக் கொண்டு தன் சிரிப்பை அடக்கினான்.

இவன் ஏன் இப்படி சிரிக்கிறான்...ம்ம் சொல்லிட்டு இருவரும் சென்றார்கள்.

என்னடா மாப்பு, நம்ம சேர்மென் பொண்ணு இவ்வளவு மக்கா...வேலு சிரிக்க....அப்பன் புத்திசாலி அலையா அலைஞ்சி பணம் சேர்க்கிறார். பாவம்டா இந்த புள்ள வெகுளி...

யாரு இவளா திமீர்,கொழுப்பு சித்தப்பூ....

ராமநாதன் சாருடைய அக்கௌன்ட்ஸ் வகுப்பு போய்க்கொண்டிருக்க... அதில் கவனமில்லாமல் கண்ணத்தில் கை வைத்து எதையோ யோசித்திருந்தாள் சக்தி... ம்ம் அவன் ஏன் சிரித்தான்...பிறகு ஏதோ புரிந்த மாதிரி அடப்பாவி மழையில மாடு நனைச்சா எப்படி பால்ல தண்ணியாகும். ஐயோ நம்ம லூஸூ மாதிரி பேசிட்டல்ல வந்தோம்.

ஏய் வனி ...வனி என்று கூப்பிட அதை பார்த்த ராமநாதன்...சக்தி கிளாஸ கவனி இல்ல வெளியே போ. என் கிளாஸ தொந்தரவு செய்யறது எனக்கு பிடிக்காது.

எல்லோரும் இவளை திரும்பி பார்க்க...அசால்ட்டா எழுந்து தேங்க்யூ சார்...என்று வெளியேறினாள்.
--------
மாலை வீட்டுக்குள் நுழையும் போதே கருணாகரன் தன் மனைவி கோதையிடம் கேட்க ஆரம்பித்தார். உன் மக எப்போ வந்தா...

அவரிடமிருந்த பேக்கை வாங்கிக்கொண்டே மதியமே வந்துட்டா. இதோ கீழே இறங்கி வரா பாருங்க கேளுங்க...

அம்மா, உன் புருஷன்கிட்ட போட்டு கொடுக்கிற...இங்க பாரு உனக்கு போட்டியா அங்க ஒருத்தன் இருக்கான், அதான் பால்காரன்...உன் புருஷனுக்கு இஞ்சி டீ என்ன. ஓட்ஸ் கஞ்சி...வெஜ் சாலட் இப்படி பொண்டாட்டி மாதிரி பார்த்துக்கிறான் சொல்லிட்டேன். அப்பறம் என் வாழ்க்கை போச்சின்னு வந்து நிற்காதே ....

போடி இது எனக்கு ஏற்கனவே தெரியும். சிவா நல்லா பார்த்துப்பான்...

சக்திம்மா ஏன்டா பாதியிலே காலேஜ் விட்டு வந்துட்ட...

அப்பா.. உனக்காகதான் நான் காலேஜ் வரேன், இல்லன்னா காஷ்மீரில் இருக்க அத்தைவீட்டுக்கு போயிடுவேன். சும்மா படி படின்னு சொல்லாதே...

சக்தி அப்பாவ புரிஞ்சிக்கவே மாட்டியாடா, போடா நீ நல்லா படிக்கனும்தான் அப்பாவோட ஆசை..

கருணா..நீ படிச்சதே போது, இந்த சொத்தெல்லாம் யாரு அனுபவிக்கிறது. அதுக்குதான் நான்.

அப்படியே கோதையை திரும்பி பார்த்து நல்லா பெண்ண பெத்திருக்க, கண்களாலே பேசினார் கருணாகரன்.

தேவி இன்னும்மா மாப்பிள்ளை வரல..அது அப்பா ஃபிரன்ட்ஸ் கூட பங்கஷன் போறார்ன்னு போன்ல சொன்னார்ப்பா. எங்க போறாருன்னு விசாரிக்குனும் தேவிம்மா...சரிப்பா என்று தலையை ஆட்டினாள். தேவி அப்படியே சக்தி எதிர்பதம்..அமைதியான சுபாவம்.. எளிதில் நம்பிவிடுவாள். கல்யாணமாகி ஐந்து வருடம் ஆயிற்று இன்னும் குழந்தையில்லை.

ச்சே இனிமே கோயிலுக்கே போக மாட்டேன்...சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள் வளர்மதி... கருணாவின் தங்கை, தயாவின் அம்மா.

ஏன் வளர்.
பின்ன என்ன அண்ணி, கோயிலுக்கு வரவ எல்லாம் உனக்கு பேரன், பேத்தி இல்லையா கேட்கிறாளுங்க என்று அங்காயித்தாள்.

இதை கேட்டவுடன் கண்கள் கலங்க தேவி நிற்க.. ஏன்டா கேட்டோம் என்றாயிற்று கோதைக்கு... சில நாட்களாக வளர் இப்படி தேவியை குத்தி பேசுவது தொடர்கிறது.
இப்பதான் இருப்பத்தைந்து ஆகுது என் மருமவளுக்கு, கொஞ்ச நாள் போகட்டும் சொல்லுங்க அத்தை ,சக்தி துடுக்காக கேட்க.

உனக்கு ஒண்ணும் தெரியாது நீ சின்ன பொண்ணு... உன் வாயை மூடு... சக்திக்கும்,வளர்க்கும் எட்டாம் பொருத்தும்.இங்க இவர்கள் சண்டையிட கருணா அவர் ரூமிற்கு சென்றார்.
--------
தயா...நீ சொன்னதது சரிதான் சக்தி தேவதை மாதிரி இருக்காடா.செம பிகரு..
அதுக்குதான் மனோ என் மாமன் அவளை வெளியே அனுப்பி படிக்க வைச்சான்.ஆனா திமீர் பிடிச்சவ. என்னைய ஒரு பைசாவுக்கும் மதிக்க மாட்டா. கையிலிருந்த சரக்கை குடித்துக்கொண்டே சொன்னான் தயா.

சரி ஏன்டா அந்த கேன்டின் கான்ராக்ட் மறுபடியும் சிவாக்கே கொடுக்கிறாரு உன் மாமா.அவனை கண்டா எரிச்சலா வருதுடா.

நீ பழைய விஷியத்தை மறக்கலையாடா.அதையே நினைச்சிட்டிருக்க.
பின்ன அவ அக்காவ பொண்ணு கேட்க போனபோது, எங்க அப்பாகிட்ட, பொண்ணு தர மாட்டேன் சொன்னா பரவாயில்ல பொறுக்கிக்கு என் அக்காவ தரமாட்டேன் சொல்லிட்டேன். என் வசதியென்ன, நான் MLA மகன்டா. அவனை வளரவிடக் கூடாது மச்சான்...அவன் என்கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கனும். கான்ராக்டை என் சொந்தக்காரனுக்கு கொடுக்க சொன்னா உன் மாமா எங்க கேட்கிறாரு. சரி ரூமுக்கு போ உனக்காக கேரளா குட்டி காத்துட்டு இருக்கா.

ஏன்டா மச்சான் நீ லேட்டா சொல்லுற...முதல்ல அதுதானே முக்கியம் என்று தள்ளாடிக்கொண்டே ரூமிற்கு சென்றான் தயா.

தயாவும் ,மனோவும் கடந்த ஐந்து வருடமாக நன்பர்கள், மும்பையில் மேல் படிப்பு படித்து முடித்து ,தேவியை கல்யாணம் செய்த பிறகு தன் மாமன் தொழில்களை கவனிக்க ஆரம்பித்தான் தயா.
---------
இரண்டு மாதம் சென்றது. சிவா வண்டியோட்ட பின்னாடி வேலு உட்கார்ந்து வந்தான் ,சிவா... இந்த சக்தி பொண்ணு தொல்லை தாங்க முடியிலடா.

என்னாச்சு சித்தப்பூ...அது பில்லு நூறு ரூபாய்க்கு மேல ஆனா பாதாம் மில்க் ஃப்ரீ சொன்னோம் தானே

இவளும் வனிதாவும் சாப்பிட்டதே இரண்டு சமோசா... பக்கத்துல இருக்கிற எல்லார்க்கிட்டயும் காசு வாங்கி ஒரே பில்லா போட்டு இரண்டு பாதாம் மில்க் வாங்கி குடிச்சிட்டு...போகும் போது பால்காரன்கிட்ட ரோஸ்மில்க் செய்ய சொல்லு அக்காவுக்கு ரோஸ் மில்க்தான் புடிக்கும் வரட்டா சித்தப்பூ சொல்லுறா.

போன வாரம் ஆறு பொண்ணுங்க கூட வந்தா சிவா, நிறைய சாப்பிட்டாங்க ஆனா பில் கம்மியா வருது. எனக்கு ஒண்ணுமே புரியுல சிவா.. தினமும் கணக்கு 200 ரூபாய் இடிக்குது . ஏதோ ஏமாத்தறா

ம்ம்ம் எப்ப வராங்க. 11.15 மேல ,ஹாங் சிவா நீ இல்லாதப்ப தான் இந்த சக்தி வரடா.
சரி இன்னிக்கு நான் உள்ள இருக்கிற ரூமில் இருக்கேன்.நான் இங்கே இருக்கிறதா சொல்லாதே, வண்டிய காலேஜிக்கு வெளியே விடு.
-----தெறிக்க விடுவான்.
 
அருமை
இந்த தயா என்ன இப்படி
இருக்கான்
சக்தி சிவா வம்பு நல்லா
போகுது
 
Hiii!!!!
2 days before i read ur all stories, i like very much,ur way of writing style, நிஜமாவே சும்மா தெறிக்க விடறீங்க
 
பொருக்கிக்கு பொண்ணு தரமாட்டேன் என்று சொல்லிட்டான் என்பதற்கு சொல்லிட்டேன் என்று உள்ளது
 
Top