Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-01

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-01
காலை மணி 5.15 சேவல் கூவ.. அந்த பூங்குடி கிராமம் ,வீட்டின் முன் இளம்பெண்கள் கலர் கோலங்கள் போட்டு ,விளக்குகள் எறியவிட்டு அந்த தெருவே திருவிழாபோல் உருவாகியிருந்தன. அந்த ஊர் சிறிய நகராட்சி சொல்லலாம்.

அம்மா பால்... என்று டிவிஸ்-50 யில் ஹார்ன் அடிக்க , தூக்க கலக்கத்தில் கேட்டை திறந்து வெளியே வந்தாள். தலை மூடியை தூக்கி கேட்சரில் அடக்கி இரவு பேண்ட் சட்டையில் கையில் தூக்குடன் நின்றாள்.

“எவ்வளவு பால் வேணும்”, அந்த இளைஞன் கேட்க..

ம்ம்ம் தூங்கிக்கொண்டே “வழக்கமா எவ்வளவு கொடுப்பியோ அது”.

“நீ பள்ளிக்கூடம் பக்கம் போயிருக்கியா...”அந்த இளைஞனின் கேள்வியை கேட்டு தன் கண்ணை மெதுவாக திறந்து அவனை பார்த்தாள்,முதலில் கீழேயிருந்து ஆரம்பித்தாள். ஷார்ட்ஸும், டீ சர்ட் போட்டு தன் தலையில் துண்டால் தலைபாகை கட்டிக்கொண்டு வண்டியை தன்மீது சாய்த்து நின்றிருந்தான்.

என்னடா நம்ம ஊருல பால்காரன் டீசென்டா இருக்கான், கைலியில்ல கட்டிட்டு வருவானுங்க. நான் நாலு வருஷம் ஊரில் இல்லாததால எல்லாமே டிரண்ட் ஆயிடுச்சா. “ஓய் என்ன கொழுப்பா..” தன் பார்வையை நேராகி கேட்க.

“வழக்காம மூன்று லிட்டர் பால் வாங்குவாங்க, நீ சின்ன தூக்கு எடுத்துட்டு வர”.

“ஓ.. மாத்தி சின்னது எடுத்திட்டு வந்திட்டேன்.இரு எடுத்திட்டு வரேன்...”
தூக்கை எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்து வந்தாள் சக்தி..”சீக்கீரம் வா இவ்வளவு மெதுவா நடந்து வர, எனக்கு வேற வேலையில்ல...”

“ம்ம்ம்... ஐயாவுக்கு கலெக்டர் ஆபிஸில் கை எழுத்து போடற வேலையோ...”.

“இல்ல பில்கேட்ஸ் வீட்டுல பால் ஊத்திற வேல இருக்கு..தள்ளு” வண்டியை எடுத்து பறந்தான்.

அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்மணி கோகிலா கேட்டின் உள்ளே நுழைய...
“அக்கா என்ன விஷேசம் பொண்ணுங்க விடியற்காலையே மெக்கப் போட்டு அழகாக டிரஸ் செஞ்சிருங்காங்க, கலர் கோலம் வேற.”

“அதுவா சின்னம்மா இன்னிக்கு திங்கள்கிழமை நம்ம சிவாதம்பி இல்ல பால் எடுத்துட்டு வரும். அதான் அந்த தம்பியை பார்க்க இப்படி நிற்கிறாளுங்க. அவங்க ஆத்தாளும் வேற நிப்பாளுங்க”.

“யாரு அந்த பால்காரனா...”

“இன்னாபுள்ள இப்படி சொல்லிட்ட.. இந்த ஊரிலே அழகாக, நல்ல உயரமா, சிவப்பா ஹீரோ கணக்கா இருக்காரு சிவாதம்பி. நல்ல குணம், உழைப்பு அதற்கேற்ற பணிவும். யார் வீட்டுக்கு மருமகனா வருவானா இல்ல ஏங்கிட்டு இருக்கு இந்த ஊரே”, கோகிலா சிவாவின் பெருமையை சொல்ல..

“என்னடா இந்த பூங்குடி கிராமத்திற்கு வந்த சோதனை....பால்காரனை இந்த ஊரே டாவ் அடிக்குதா... அக்கா பாலை எடுத்துட்டு போய் கிச்சனில் வைங்க, அம்மா பூஜை அறையில இருங்காங்க”.
ஊரிலே பெரிய வீடு இந்த கருணாகரன் இல்லம்...கடந்த வருடம் கல்வி தந்தை என்ற அவார்டு வாங்கினார். அவருடைய மனைவி கோதை இதோ பூஜை அறையில். அவருடைய இரண்டாவது பெண்தான் சக்தி தங்களின் கல்லூரியில் படிக்க போகும் முதலாமாண்டு மாணவி.
கிராமம் என்பதால் இவர்களது தொழில் விவசாயம் இல்லைங்க...இவர் டிகிரி படித்தவர். தன் திறமையால், VNC என்ற பெயரில் காலேஜ், ஸ்கூல், பாலிடெக்னிக் , ரைஸ் மில், ஆயில் மில் போன்றவற்றின் உரிமையாளர். மூன்று பொண்ணை பெற்றவர், முதல் பெண்ணை தன் தங்கை ஆண்டாள் மகன் தயாளனுக்கு கொடுத்து வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கிட்டார்.

காலையில் பரப்பரப்பாக ஒடிக்கொண்டிருந்தது இந்த வீடு...காலை டிபனை முடித்துக்கொண்டு கிளம்பி வந்தார் கருணா..அய்யா சிவா வந்திருக்காரு..

வரச்சொல்லுப்பா...”வா சிவா”…. உட்காருன்னு சோபாவை காட்ட. “பரவாயில்ல ஸார் அக்ரிமென்ட்ல சைன் போடனும் மூனு வருஷ போட்டிருக்கேன்”. இந்த அக்ரிமென்டே அவசியமில்ல சிவா..

“எதுவும் எழுத்து வடிவாம இருந்தா நல்லதுதான் ஸார். நாளைக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதில்ல ஸார்”.

சக்தி ரெடியாகி கீழே வந்தாள்

“ஹாங் சிவா இது என்னுடைய இரண்டாவது பெண் சக்திப்ரியா”,

சக்தி திரும்பி பார்க்க , அட பால்கார், என்ன பார்மல் டிரஸ்ல வந்திருக்கான்.

“இங்க நம்ம ஸ்கூல்ல படிக்காம ஏமாத்தறான்னு சென்னையில்ல படிக்க வச்சேன். படிப்பு சுமார்தான் தம்பி. செல்லம் கொஞ்சம் அதிகம்”.

அவன் கேட்டானா கருணா, என் பயோடேட்டாவை சொல்லு அப்படியே மாப்பிள்ள பார்க்கட்டும், மனதில் வஞ்சினாள்.

முதல் பொண்ணு உனக்கு தெரியுமில்ல தேவிப்ரியா. அப்பறம் இதோ பேக்கை தூக்கிட்டு வராலே சின்னவ ஸ்ரீப்ரியா எட்டாவது படிக்கிறா. இதுவரை எந்த ரியாக்ஷன் இல்லாமல் நின்றவன் உதட்டில் புன்னகை மலர.

“ஒரு நிமிஷம் வரேன்”, ஒரு வேலையாக கருணா உள்ளே செல்ல.
அவனை பார்த்து கேட்டாள்..”என்ன சிரிப்பு, எல்லாம் ப்ரியாவா இருக்கே கருணா லைப்பில ஏதோ ப்ரியா கிராஸ் ஆயிருக்கான்னு. இருக்கலாம் கோதை ஏமாந்த நேரத்தில நடந்திருக்கும் எனக்கு அந்த டவுட் ரொம்ப நாளா இருக்கு” .

சிவா , சக்தியை கேவலமாக பார்க்க.. என்ன என்று புருவம் உயர்த்தினாள்.

“லூஸா நீ..”.

“என்னது மவனே யார பார்த்து”, எகிறிகிட்டு வர... கருணா அருகில் வந்தார்..அப்பறம் நம்ம காலேஜ் படிக்க போறா தம்பி பர்ஸ்ட் இயர் பி.காம். பார்த்துக்கோப்பா.

“சக்தி ஏதாவது டௌவுட் இருந்தா தம்பிய கேளு கோல்ட் மெடல். நம்ம காலேஜில் தான் படிச்சாரு”.

அய்யோ ஒருவேளை லக்ஸரா இருப்பாரா, அப்பாவே இப்படி புகழ்றாரு. எதுக்கும் ஐஸ் வைப்போம்.

“வணக்கம் ஸார்” என்றாள். ம்ம் என்று திரும்பிக்கொண்டான்.

“சிவாண்ணே நீங்க எழுதி கொடுத்த ஸ்பீச் சூப்பரா இருந்தது மிஸ் சொன்னங்க...அப்பறம் நான்தான் பர்ஸ்ட் பிரைஸ் ஜெயிச்சேன். தேங்க்ஸ் அண்ணா”, ப்ரியா சொல்ல.

அப்படியா பேபி...
“உனக்கு ஏதாவது தெரியிலன்னா வீட்டில மோகன் அண்ணா இருப்பான் கேட்டுக்கோ உங்க ஸ்கூல்தான் பத்தாவது படிக்கிறான்.”

“ஓகேண்ணா பை”.

இருவரும் சிவாவை பார்க்க... அன்னிக்கு கோதை மேடம் கேட்டாங்க.நான் எழுதி தந்தேன்.
“வாப்பா சிவா..காபி குடிப்பா,..”கோதை வரவேற்க

இல்ல மேடம் நான் வீட்டிலே குடிச்சிட்டேன். அக்ரிமென்டில் கையெழுத்து வாங்கினான். இதை பார்த்துக் கொண்டே வெளியே வந்த தயா... தன் மனைவியின் கையிலிருந்து பேக்கை வாங்கி.. நான் ரைஸ் மில்லுக்கு போறேன் மாமா என்று சிவாவை முறைத்துக்கொண்டே ,” உங்க அப்பாகிட்ட அவனுக்கு கான்டராக்ட் கொடுக்காதீங்க சொன்னா கேட்கிறாரா தேவி”...மனைவியிடம் மூனுமூனுத்துவிட்டு காரில் ஏறினான்.

முதல் நாள் காலேஜ், நம்ம சக்திக்கு தாங்க முதல்நாள்,காலேஜ் திறந்து ஒரு மாசம் போயிடுச்சு. ஜீன்ஸ்,டீசர்டில் பயங்கற ஸ்டைல்லாக வந்தாள். சேர்மேன் பொண்ணு என்ற பந்தாவும் கூட. கிளாஸ் பக்கத்து சீட்டில் வனிதா, அறிமுகமாகி கொண்டாள் சக்தி.

வகுப்பேடுக்கும் ஆசிரியரை பார்த்து இவங்க பேசியே கொல்லறாங்கடி வனி...போர் அடிக்குது எங்காவது போகலாம் -சக்தி.

இப்ப பிரேக் டைம் வரப்போது வா கேன்டின் போலாம்.
“போடி அங்க வரல”.

ஏய் இந்த காலேஜிக்கே பொழுதுபோக்கு இந்த கேன்டின்தான். சீக்கீரம் வாடி பெல் அடிச்சிடுச்சி. கூட்டம் அதிகமாயிடும்.

என்னடி சொல்லுற.. இருவரும் நடந்து கொண்டே இன்னிக்கு சக்தி எப்படியும் ஐந்து பிரப்போஸல் இருக்கும். என்னடி

“ம்ம் லவ் ப்ரபோஸல்.”

கேன்டினா இல்ல லவ்வர்ஸ் பார்க்கா....

அதான் இல்ல ஒரே ஆளுக்கு இவ்வளவு ப்ரபோஸல் இருக்கும்.

அந்த அளவுக்கு சூப்பர் ஃபிகர் நம்ம காலேஜில இருக்கா. இது தெரியாத நான் கிராமத்தில எவன் நல்லா இருப்பான்னு நினைச்சி லேட்டா வந்தேன்டி.

கேன்டின் உள்ளே சென்று டெபிளில் உட்கார்ந்தார்கள். ஏய் அங்கபாருடி கையை காண்பிக்க சக்தி திரும்பி பார்த்தாள்.

கல்லாவில் இருந்தவனிடம்.. அந்த பெண் ஒரு கடிதத்தை கொடுத்து ப்ளீஸ் இதை படிச்சி பாருங்க... வேணா மட்டும் சொல்லிடாதீங்க. ப்ளீஸ்...

எனக்கு இதில் விருப்பமில்லம்மா , நீ கிளம்பலாம்.. அந்த பெண் ஏக்கமா பார்த்து நகர... இப்போது அவனை பார்த்தால் சக்தி.

அட நம்ம பால்கார்.எழுந்து அவனிடம் சென்றாள் பின்னாடியே வனிதாவும்.
ஹாய் பால்கார், நீ கேன்டின்ல்ல தான் வேலை செய்யிறீயா.இது தெரியாத வணக்கமுல வச்சேன்.

அவளை கண்டுக்காமல்,

சித்தப்பூ அந்த மூனாவது டெபிளில் பசங்க ஏதோ பண்ணறாங்க என்னனு பாரு.
கையில் காபி ட்ரேவுடன் வெளியே வந்தான் வேலு..நம்ம சிவாவின் தூரத்து உறவு, இரண்டு வயது பெரியவன் சிவாவை விட. இதோ போய் பார்க்கிறேன் சிவா.
------தெறிக்க விடுவான்


ஹாய் பிரண்ட்ஸ்,
புதிய முயற்சியாக ஹீரோவை மையமாக வைத்து எழுதிற கதை... வழங்கமாக உங்களின் ஆதரவை எதிர்பார்த்து .......லஷூ
மறக்காம உங்கள் கமென்ட்ஸ் வேணும் நன்பர்களே......
 
Top