தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 13 நிறைவுப் பகுதி

Advertisement

வணக்கம் மக்களே

இதோ தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே கதையின் நிறைவு அத்தியாயம். கதையை தொடர்ந்து படித்த, விருப்ப குறிகள் கொடுத்த, கருத்துக்கள் சொன்ன, உடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

விரைவில் வேறொரு கதையுடன் உங்களை சந்திக்கிறேன். அது புதுக் கதையா அல்லது இன்னொரு ரீரன் கதையா என்று சீக்கிரம் சொல்கிறேன்.

அத்தியாயம் 13_01

அத்தியாயம் 13_02

அத்தியாயம் 13_03

நன்றிகள் பல

ப்ரியங்களுடன்

வத்சலா ராகவன்
Aarumai niravai tharum kadhai aarumai
 
சந்தோசமான மனதிற்கு நிறைவாக இருக்கு இந்த முடிவு.
அவள் உயிர் பிழைப்பதும் ஷ்யாமின் முத்தமும் நெகிழ்ச்சியா இருந்தது.
நண்பன் தனா சாரு நல்ல முடிவெடுத்தாங்க.
முதலிரவில் பழக்க தோசத்தில் லவ் லாம் இல்லைன்னு சொல்றது அழகு.
மலரே பாடல் கேட்டா நிச்சயம் சந்தியா ஷ்யாம் ஜோடி நினைவிற்கு வருவாங்க.
Lovely super story thanks and congrats ma :love: :love: :love: :love: :love:
விரைவில் அடுத்த கதையுடன் வாங்க.
 
நானே எனக்கு
சொந்தம் இல்லடி பெண்ணே....
எனை நீ நாளும்
சொந்தம் கொண்டாட
முடியாது கண்ணே....


நட்பின் பிடியில்
நன்றிக் கடனாக
நண்பனின் நம்பிக்கையில்
நாளும் வாழும் என்னை
நம்பும் உன்னை எப்படி
நெருங்கிட முடியும் பாப்பா...

சொந்தம் வேண்டாம் என
சொல்லுக்கு சொல்லி
சுயநலமாக சிந்தித்து
சொந்தமாக்கி கொண்டேன் உன் வாரிசை....

என்னை மட்டும் யோசித்து
உன்னை மறந்தேன்
உன் நிலை எண்ணாமல்
என் நிலை தவறினேன்...

உயிர்இசை தந்த உனக்கு
உயிர் பரிசை தருகிறேன்.
உன்னோடு வைத்து கொள்....

உயிர்வலி பொறுத்து
உன்னிடம் சமர்ப்பித்து விட்டேன்
உன் சொத்தை
என் காதல் வாரிசை...







 
தவறு செய்து விட்டேன்
தனித்து செல்கிறேன்
தனி உலகத்திற்கு...

தாயாகி நின்றவள்
தவிக்க விடுகிறாள்
தந்தையாக நிற்க
தவழும் சிசு கரங்களில்...

தனியாக எங்களை
தவிக்க விட்டு சென்று விடுவாயோ பாப்பா....

தாங்காது பெண்ணே வந்து விடு
தவம் கிடக்கிறான்
தன்னவள் முன்
துறவறம் பூண்ட

துறவி போல....
 
இளமை கனாக்கள் இசையாய் மலர
இவளின் காதல் இதயத்தில் தொடங்க...

இருண்டதோர் காலம் இவன் ஒளியாய்
இவளுக்குள் இனிமையாக
இசைபிரியன் பிறக்க

இருளின் சப்தம்
இவனின் நிசப்தம் இடியாக மாற
இசையின் உயிர் பிறக்க,
இசைபோல் மென்மை, இமையாக அவன் காக்க
இசைபிரியன் என்றும் இவர்கள் வாழ்வின்
இன்னிசை


இனிமையின் புன்சிரிப்பே,
இறைவன் பரிசே,
இருவரின் ஏக்கம்
இன்பமாய் வந்து,
இசைப் பிரியனில்
இணைந்தனர்...



 

Advertisement

Advertisement

Back
Top