Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா...பகைதீரா-08

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா...பகைதீரா-08

தலையில் மேல் கையை மடக்கி வைத்து விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் தீரன்... அவனருகில் முட்டிப்போட்டபடி வந்தாள் சிட்டு... அவளும் அவனை போல விட்டத்தையே பார்த்தாள்.. முகநாடியில் கையை வைத்து யோசித்தாள்...

என்னடி செய்யற...

அதுவா டாக்டர்... நீங்க மேலே பார்த்துட்டு இருந்தீங்களா... ஏதாவது நம்ம கண்ணுக்கு தெரியுதா பார்த்தேன்..

ப்ச்... என்றான்..

என்னாச்சு என்று புருவத்தை உயர்த்தி கேட்டாள்..

ஐந்தாவது படிக்கிறவரைக்கும் அம்மா இருந்தாங்க... தனிமை தெரியல... இந்த ரூமுல அம்மாவை தவிர யாரையும் அலோ செய்யலை..யாரும் வர மாட்டாங்க.. எங்க சித்தப்பா பேமிலி, அத்தை பேமிலி டூருக்கு, கோவிலுக்கு போவாங்க... என்னை கூட்டிட்டு போகமாட்டாங்க... இப்படிதான் சுவற்றை பார்த்துட்டு இருப்பேன்... இந்த அரண்மனையில நான் மட்டும் தனியாதான் இருப்பேன்டி... அதுக்கே இந்த வீட்டுக்கு வர பிடிக்காது...

அப்ப மாமா...

அவருக்கு நிற்க நேரமில்லை, பிஸினஸ் பிஸினஸ்னு ஓடிட்டே இருப்பார்... டைம் கிடைக்கும் நேரம் என்கூட செலவிடுவார்.. ஆனா டைம் எப்பனாதான் கிடைக்கும்... அப்படி அவரையே கவனிக்காது ஓடினதால இன்னைக்கு சுகர் அதிகமாகி பக்கவாதம் வரை வந்திடுச்சு, ஒரளவு குணமாயிட்டே வராரு..

ஸ்ட்ரைன் பண்ணகூடாது... அதிக நேரம் நிற்க, நடக்க முடியாது...இந்த ரூமுல எங்கம்மாவுக்கு அப்பறம் உனக்குமட்டும் தான் அனுமதி கொடுத்திருக்கேன்... சாப்பிட்டியா கேட்க கூட மாட்டாங்க, பசிச்சா வேலைக்காரங்க எடுத்துட்டு வரச்சொல்லுவேன்..

அதான் இவ்வளவு ஃபீலிங்கா..ஆமாம் டாக்டரே உங்களை எப்படி கூப்பிடறது... ம்ம் அத்தான் ஓகேவா..

நோ... நல்லாவேயில்ல..

அப்ப மாமா சொல்லவா..

வேணாம் நீ என் அத்தை பொண்ணுல்ல...

அப்ப அவன் காதருகில் சென்று தீதீரா...சொல்லவா..

பல்லை உடைப்பேன்டி.. உன் வயசென்ன என் வயசென்ன...

ஆமாம் இல்ல.. வயசானவங்களை பெயர்விட்டு கூப்பிட கூடாது...

ஓய் யாருக்குடி வயசாச்சு... இருங்க ஸாரே நானே யோசிக்கிறேன்... சொல்லி கொஞ்சம் நேரம் அமைதியானாள்..

ஹாங்... தம்பி.. அவள் கூப்பிட்டவுடன் தூக்கிவாரி போட்டது தீரனுக்கு.. அதான் டாக்டரு சமந்தா விஜயை பார்த்து கூப்பிடுவாங்களே... தன் கண்ணை அடித்துவிட்டு ,தம்பி ரோஸ்மில்க் வாங்கிதரவான்னு... பாருங்களேன் விஜயையும் டாக்டரு நீங்களும்..

எரும எரும அவள் முதுகில் அடித்துவிட்டு.. தாலிகட்டின புருஷன தம்பின்னு கூப்பிடுவ...

தன் முதுகை தேய்த்தபடி வேற எப்படி கூப்பிடுறது மச்சான்... என் சிகப்பு மச்சான்..

ஐய்யோ தூங்க விடாம இப்படி அலும்பல் செய்யறாளே... என்ன ஸ்லாங் இது... இங்க பாரு ஏங்க...வாங்கன்னு கூப்பிடு சரியா... இப்ப தூங்கவிடு முதல்ல தூரமா படு...

.....

அடுத்தநாள் காலை 6 மணிக்கே குளித்துவிட்டு புதுபுடவை அணிந்து கையில் காபி எடுத்துக்கொண்டு தீரனை எழுப்பினாள்...

பாவா.. பாவா அவனின் கையை சுரண்டினாள்...

தன் கண்ணை சுருக்கி சிட்டுவை என்ன என்று பார்த்தான்...

பாவா எழுந்து காபி குடிங்க பாவா..

இவ வேற எந்த படத்தை பார்த்து இந்த சீனை போடுறான்னு தெரியல... என்னடி புதுசா பாவான்னு..

சின்ன வயசில எங்கம்மா, அப்பாவை பாவா பாவான்னுதான் கூப்பிடுவாங்க..

கேவலமா இருக்கு... அப்ப நாலுபேர் இருக்க சொல்ல உங்களை எப்படி கூப்பிடுறது..

ரொம்ப முக்கியம் இருடி நான் பிரஷ்ஷாயிட்டு வரேன்...

....

டைனிங் ஹாலில் அந்த குடும்பமே இருவரும் வரும் வரை காத்துட்டு இருந்தன... காலை உணவை அனைவரும் ஒன்றாகதான் சாப்பிடவேண்டும் என்று அந்த அரண்மனையின் பழக்கம்..

மாடியின் படியில் இறங்கிவர... சிட்டு கிட்டே வரும்போது நீலமேகம், ஏன் வாசல் கதவை திறந்து வச்சிங்க... கண்ட கண்ட நாயெல்லாம் சாப்பிடுற இடத்துக்கு வருது...

அவர் சொல்லுவதை கேட்டு நின்றுவிட்டாள் சிட்டு... காதில் விழுந்த வார்த்தையை கேட்டு திரும்பினான் தீரன்...

தீரா நான் நாயைதான் சொன்னேன்...

அவரை முறைத்துக்கொண்டே சேரில் உட்கார்ந்தான்... பின்னாடி வந்த சிட்டு... நீலமேகத்திடம் அதை இன்னோரு நாய் சொல்லுது பாருங்களேன் சித்தப்பா ...

சூர்யா அவன் மனைவி வர்ஷா, நீலமேகம் காய்தரி, நடுவில் மகேந்திரன் அவர் பக்கத்தில் சேதுபதி அவர் மனைவி, மகள் அமர்ந்திருந்தனர்... மகேந்திரனின் இடதுபக்கம் வந்தமர்ந்தான் தீரன்... அனைவருக்கும் உணவுகளை பரிமாற தொடங்கினர் பணியாட்கள்.... ஆனால் சிட்டு சேரில் உட்காரவில்லை...

தீரன் தன் அப்பாவிடம், நேற்று ரொம்ப டயர்டா இருந்தீங்க... இன்ஜக்சன் போட்டபிறகு பரவாயில்லையா...

தீரன் பேசிக்கொண்டிருக்கும்போது அவன் தட்டின் மேல் பொன்வளையல் அனைந்த கரம் உணவை பரிமாற தன் விழியை உயர்த்தி பார்த்தான்... அவன் கட்டின தாலி நெஞ்சிற்கு கீழே தொங்க... அவளை நிமிர்ந்து பார்த்தான்.. சாப்பிடுங்க...

அவனுக்கு பிடித்தமான நான் வெஜ் உணவான இடியாப்பம், மட்டன் கிரேவியை வைத்தாள்...

நீயும் சாப்பிடும்மா என்றார் மகேந்திரன் அனைவரும் சிட்டுவையே பார்க்க..

பரவாயில்ல மாமா.. அவர் சாப்பிட்டு முடித்தபிறகு நான் சாப்பிடுறேன்.. மனைவியா அவருக்கு பரிமாற ஆசைப்படுறேன்...

கேட்டவுடன் சந்தோஷம் மகேந்திரனுக்கு... நல்ல பொண்ணுமா நீ அதுவரைக்கும் சாப்பிடாம இருப்ப..

ம்ம்...

மெதுவாக பார்த்தீயா, சூர்யா தன் மனைவியிடம் கேட்டான்... வர்ஷா சிட்டுவை பார்த்து முறைத்தாள்...

தீரன் சாப்பிட்டு முடித்து எழுந்துவிட, அவன் தட்டிலே பூரியை வைத்து சாப்பிட்டாள்..

சேதுபதி, அம்மா சிட்டு ,அரண்மனையில தட்டுக்கா பஞ்சம்

சின்ன மாமா, புருஷன் சாப்பிட்ட எச்சில்ல ரூசி அதிகமா இருக்கும்மா அதுக்குதான் சாப்பிடுறேன்... அவள்சொல்லுவதை கேட்டு , கையை கழுவிட்டு வந்த தீரன் அப்படியே நின்றுவிட்டான்...

பூரியை வாயில் பிட்டு சாப்பிட வழக்கமாக புரையேறியது சிட்டுக்கு...

கடகடன்னு வந்து அவள் தலையை தட்டிவிட்டு தண்ணீரை எடுத்து தந்தான் தீரன்... முழுங்காதே , மெதுவா சாப்பிடு என்றான்..

சேது நர்மதாவிடம் , மருமகள்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ... எப்படி அந்நோன்யமா இருக்காங்க...

.....

சித்தியும், அத்தையும் சிட்டுவை பிடித்துக்கொண்டார்கள்...

என்னங்க சித்தி..

இங்க உட்காருன்னு அவர்களின் நடுவில் உட்கார வைத்தார்...

நேத்து நாங்க சொன்னமாதிரி, தீரன் மனசை நோகாம நடந்துக்கிட்டியா...

அட போங்க சித்தி , நான் எப்படி டிசைன் டிசைனா நடந்தேன் தெரியுமா.. எங்க உங்க மகன் என்னை பார்த்தாரு விட்டத்தையே பார்த்துட்டு, படுத்து தூங்குடின்னு சொல்லிட்டாரு...

அப்ப எதுவும் நடக்கலையா, காயத்ரி கேட்க..

அட நான்தான் நடந்தேனே..

மக்கு... மக்கு... உனக்கு எதாவது நாங்க சொல்லுறது புரியுதா...

இவர்கள் உரையாடலை மேலிருந்து பார்த்த தீரன், சிட்டு என்று அழைத்தான்..

ஹாங்..வரேன்ங்க, சித்தி உங்க ராசா கூப்பிடுறாரு நான் போறேன்...

.....

அன்று இரவு... பனியாள் தீரனின் ரூம் கதவை தட்டினான்.. கதவை திறந்த தீரன்... ஐயா.. நம்ம பாப்பு வந்திருக்கு சொல்ல..

நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன்... தீரன் தோட்டத்தை நோக்கி நடந்தான்... அதை கேட்ட சிட்டு... அஜ்ஜூவை போனில் அழைத்தாள்..

டேய் அண்ணா சீக்கிரம் வாடா..

அடுத்த செகன்டே அவள் முன்னாடி வந்து நின்றான்.. எதுக்கு தூங்க போறவனை கூப்பிட்ட சிட்டு... நிம்மதியா தூங்க கூட விடமாட்டியா.. அதான் உனக்கு ஒருத்தன் கிடைச்சிட்டான்ல அவனை டார்ச்சர் பண்ணு...

அஜ்ஜூ யாரோ பாப்புவாம் வந்திருக்கா...அவளை பார்க்க தீரன் போறான்டா..

எங்கே..

அரண்மனையில்ல அந்தபுரத்திற்கு அங்கதான் கீப்பெல்லாம் வச்சிப்பாங்க..

ச்சே.. என் பிரண்டை தப்பா சொல்லாதே சிட்டுமா..

யாரு உன் பிரண்டு நாலு வாட்டி லவ் பையிலியர் என்கிட்ட சொன்னான்... அதற்குள் பனியாள் வந்து அம்மா, ஐயா தோட்டத்திற்கு கூப்பிட்டாருனு சொல்லி சென்றான்...

பார்த்தீயாடா இவன் செய்யற கசமூசாவ என்னை லைவ்வா பார்க்க வைக்கபோறான்டா.. நீயும் வாடா அர்ஜூன் கையை பிடித்து இழுத்து வந்தாள்...

பெரிய தோட்டம்... அங்கிருந்த லானில் உட்காரும் இருக்கை போட்டிருந்தன... தீரனை பார்த்தவுடனே பயந்து நின்றனர் இருவரும்..

பெரிய சேரில் தீரன் அமர்ந்திருக்க அவன் காலடியில் பாப்பு என்று அவன் வளர்க்கும் புலி ஆட்டுக்கறி சாப்பிட்டுக்கொண்டிருந்தது... அதுக்கு ஒவ்வொரு தொடை கறியை போட்டான்.. மடியில் அதுயின்று எடுத்த குட்டி சோட்டுவை தடவிக்கொண்டிருந்தான்...

சிட்டு... பாப்புன்னா இதுவாடி கை உதறின அர்ஜூனுக்கு... நம்ம செஞ்ச தில்லுமுல்லு தெரிஞ்சுது இதுக்கு நைட் டின்னர் என் லெக்பீஸை தான்டி போடுவான்..

வாயை மூடுடா தொடைநடுங்கி.. நீயே காட்டி கொடுத்துடுவ போல...

நான் கிளம்பறேன் சிட்டு... அர்ஜூன் நழுவிக்கொள்ள..

இரண்டு நாளுக்கு முன்னாடி நடந்ததை யோசித்து பார்த்தாள் சிட்டு... தீரன் மயங்கி அவளின் மேல்விழ.. அவனை அனைத்தபடி தன் செல்லில் பல போட்டோக்கள் எடுத்து அர்ஜூனை அழைத்தாள்..

சொல்லு மகா... அண்ணா, நான் கொடுத்த சிம்மை போட்டு இந்த போட்டோவை தீரன் கல்யாணம் செய்யற பொண்ணுக்கு அவங்க மாமாவுக்கும் அனுப்பிட்டு சிம்மை தூக்கி எறிந்திடு... அப்பறம் நான் கதவை திறந்துதான் வச்சிருக்கேன்.. ஓகேவா நீ ஆறுமணிக்கு வழக்கமா வரமாதிரி வா...

தீரன், சிட்டுவை பார்த்து, வா..பயப்படாதே ஒண்ணும் செய்யாது..

ஏங்க இதுதான் பாப்புவா..

ம்ம்... நான் இங்க வந்துட்டா என்னை பார்க்க வந்திடும்...

இங்கதான் வளர்கிறீங்களா...

புலியை வளர்க்க கூடாது சிட்டு, இதை வளர்த்தது எங்க அத்தை அவங்க இப்ப இல்ல... அதற்கு அப்பறம் நான்தான் வளர்க்கிறேன்... சாப்பிட்டு காட்டுக்கு போயிடும்.. எனக்கு பார்க்கனும்போல இருந்துச்சுனா நான் காட்டுக்கு போய் பார்ப்பேன்...

பாப்பு இங்கபாரு சிட்டுவை காட்ட... அவளின் அருகே வந்து அமைதியாக நின்று அவள் காலை நக்கியது.. சிட்டு அப்படியே சிலையாக கண்ணை மூடி நின்றாள்... மனதில் மாமா இந்த ஐந்தறிவுள்ள புலிக்கு நான் மயூரியோட மகளுன்னு தெரியுது... உனக்கு நான் யாருன்னே தெரியலையா....

பாருடா, சிட்டு ,பாப்புக்கு உன்னை பிடிச்சிருக்கு போல... யார்கிட்டையும் போகாது உன்கிட்ட வருது... பயப்படாதே அதை தடவி கொடு... சிரித்தபடி அதன் முதுகில் தடவினாள் சிட்டு...

.....

அடுத்த நாள் மதிய உணவை எடுத்துக்கொண்டு மகேந்திரன் அறைக்கு சென்றாள் சிட்டு..

மாமா மதியம் மட்டும்தான் சாதம் ,மற்ற நேரம் கஞ்சிதான் கொடுக்கனும் என் புருஷன் சொன்னாரு... நைட் இடியாப்பம் சாப்பிடலாம்... அவரை நிமிர்த்தி உட்கார வைத்தாள்... டெபிளில் மேல் வைத்த தட்டை எடுக்க போக...

நீ மயூவோட பாப்பாதானே....மகேந்திரன் கேட்க...

அப்படியே நின்று... திரும்பாமலே இல்ல என்றாள்..

பொய் சொல்லுறே... இந்த மார்லையும் தோளையும் தூக்கி வளர்த்தவன்... என் தங்கச்சியோட ஜாடை அப்படியே உன்கிட்ட இருக்கு... அவர் சொன்னவுடன் கதவை தாளிட்டு திரும்பி நின்றாள்..

அப்படியா அப்ப முன்னவே தெரியும்போல..

நீ அனுப்பின போட்டோவை பார்த்தவுடனே தெரிஞ்சிக்கிட்டேன்... மகாலட்சுமி... யாரோ ஒரு பொண்ணை ஜமீனுக்கு மருமகளா எப்படி ஏத்துக்க முடியும்.. ரிசார்ட்ல உங்கம்மா கூட பேசுனதை பார்த்தேன்..

புத்திசாலிதான்... எதுக்கு வந்திருக்கேன் தெரியும்போல...

கண்கள் கலங்க, மகா... என் பையன் தாங்கமாட்டான்டா.. அவனை ஏமாத்தாதே.. ப்ளீஸ் .. கைகூப்பினார் மகேந்திரன் வர்மன்...

----பகைதீரா என்னவனே
 
Nirmala vandhachu ???
 
Top