Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா..பகைதீரா - 05

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா..பகைதீரா - 05

தீரன் தன் தந்தையை பார்த்துவிட்டு வரண்டாவில் நடந்துச்செல்ல அவனின் பின்னே சிட்டு சென்றாள்... இருவரையும் பார்த்து நர்மதா, தீரனை கூப்பிட்டாள்.. தம்பி தீரா சிட்டு என் ரூமிலே தங்கட்டும்.. நாளைக்கு கல்யாணம் தானே...

பரவாயில்ல சித்தி நேற்றுவரைக்கும் என் ரூமில என்கூடதான் தங்கிருந்தா... அதற்குமேல் நர்மதா பேசவில்லை... தீரன் சொல்லுவதுதான் இந்த வீட்டில் சட்டம்.. அவனிடம் யாருமே அதிகம் பேசமாட்டார்கள்.. முரடனும் கூட.. ஒரே வார்தையில் அடக்கிவிடுவான்.. நீலமேகம் மட்டும்தான் அவனுக்கு எதிர்ப்பாக நிற்பார்..

அண்ணா என்று சூர்யா வந்து தீரன் அருகில் நின்றான்.. எப்படிடா இருக்க..

ம்ம் நல்லாயிருக்கேனா.. சிட்டுவை பார்த்து அண்ணி வணக்கம் என்றான்...

சிட்டு சூர்யாவை பார்த்து புன்சிரிப்பை காட்ட.. இவங்களை எங்கியோ பார்த்த மாதிரியிருக்கே.. என்று சூர்யா யோசிக்க... அதற்குள் சேதுபதி சூர்யாவை அழைத்து அனைத்து வேலையும் முடித்துவிட்டாயா என்று விசாரித்தார்...

தீரன் ரூமிற்குள் நுழைந்தார்கள்... ஸார் பெரிய மாளிகை மாதிரியிருக்கு உங்க ரூம்... அப்பறம் உங்க தம்பி உங்களை விட அழகுதான் அதான் உங்க அத்தை பொண்ணு உங்களை வேணாம் சொல்லிடுச்சு..

போடீ என்று ஒரு மாதிரி பார்த்துவிட்டு பெட்டில் அமர்ந்தான்... போனில் பணியாளை அழைத்து இரவு உணவை ரூமிற்கே கொடுத்து அனுப்பும்படி கட்டளையிட்டான்..

டாக்டர் ஸார், இவ்வளவு பெரிய அரண்மனையை விட்டு அந்த சின்ன வீட்டில ஏன் தங்கியிருந்தீங்க..

சென்னையில பிராக்டீஸ் செஞ்சிட்டிருந்தேன் சிட்டு.. இங்க ஹாஸ்பிட்டல் கட்டியிருக்கோம்.. வரச்சொல்ல பார்க்கல..

ஸார் நான் அத்தை கூடவே படுத்திருப்பேன் எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க..

ஏன்னா நீ லூஸூ ,ஏதாவது உளறிட்டேனா கல்யாணம் முடிக்கும்வரை என் கூடவேயிரு.. அப்பறம் போய் உங்க அத்தை கூட படுத்துக்கோ..

ஏன் டாக்டரே கோவப் படுறீங்க... அவங்க ரொம்ப நல்லவங்க.. நான் யாருன்னு கூட கேட்கல பாருங்க எவ்வளவு தங்கமான மனசு.. ஒரு ஏழையை அதுவும் விதவையை மருமகளா வர சம்மதிக்கிறாங்க.. ஃபீல் பண்ணி சிட்டு பேச...

ஹாங்.. நீ இப்படிதான் உளறிக்கொட்டுவன்னு எனக்கு தெரியும்.. அவங்க ஏன் கேட்கலைன்னா.. என்னை எதிர்த்து பேசமாட்டாங்க.. மேலோட்டமா யாரையும் எடை போடாதே சிட்டு.. உன் சேப்டிக்கு தான் என்கூட தங்க வைக்கிறேன்...வெளியே ஒண்ணு பேசுவாங்க உள்ளே வேற மாதிரி உன்னை நினைப்பாங்க... அதுவும் எங்க மாமா நீலமேகம் இருக்காரே பயங்கற டேன்ஜர்... எனக்கும் அவருக்கும் ஆகாது... அதைவிட இரண்டு ஆள் வெளிநாட்டுக்கு போயிருக்கு...

அப்படியா டாக்டரு என்று கண்ணத்தில் கையை வைத்து அவன் எதிரில் உட்கார்ந்தாள்...

உன்னை கட்டிக் போறேன்தானே பொறாமையில உன்னை கொலைக்கூட செய்வாங்க.. இல்ல கடத்திட்டு போவாங்க..

க்கும்.. நான் பெரிய பணக்காரு என்னை கடத்திட்டு போயீ.. போங்க டாக்டரு...

நீ என் மனைவியானாள் பெரிய பணக்காரி ஆயிடுவே என்று மனதில் நினைத்தான் தீரன்.

முதல்ல இந்த டாக்டரே, ஸாரே சொல்லுறதை நிறுத்து... நீ யாருன்னு கண்டுபிடிச்சிடுவாங்க போல... நீ டிகிரி படிச்சிருக்கே சொல்லியிருக்கேன்.. யாராவது கேட்டா நைன்த் பெயில் சொல்லாதே...

அய்யோ டாக்டர்.. நான் பொய் சொல்ல மாட்டேன்.. நைட்டு தூக்கும் போது சாமி கண்ணை குத்தும் டாக்டரே.. ஆக்ஷன் செஞ்சி காட்டினாள்..

கண்ணை இறுக்கி மூடிக்கோ சாமி கண்ணை குத்தாது..

சிட்டு அந்த அறையை சுற்றி பார்த்தாள், நடுவில் நான்கு பேர் படுக்ககூடிய பெரிய சந்தன கட்டில் மயில் போன்று வேலைபாடு செய்திருந்தன... ஒரு பக்கம் பேஷனாக வார்டுரோப்.. ஆளுயர கண்ணாடி... ஒரு பக்கம் அம்பது இன்ச் டிவி, புத்தகசெல்ப் அதை ஒட்டி லேப்டாப் டெபிள்... இரண்டு ஏஸி, பிரன்ச் டைப் வின்டோ பால்கனி செல்ல...

தீரன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தான்.. அதற்குள் அவர்களின் உணவு வர... வேலையாள் ஒருவன் உணவு டெபிளை உள்ளே வைத்துவிட்டு சென்றான்..

சிட்டுவின் கண்களோ பளிச்சென்றானது... டாக்டரே எவ்வளவு வெரைட்டி எல்லாம் நமக்கே வா... யப்பா என்று உள்மூச்சியை இழுத்து விட்டாள். சிட்டு பேசிக்கொண்டே ஒரு தட்டில் தீரனுக்கு எடுத்துவைத்தாள்..

ஆமாம்... மதியமே நீ சரியா சாப்பிடல..

வராத கண்ணீரை துடைத்துவிட்டு இதுக்கே உன்னை பத்துவாட்டி கல்யாணம் செஞ்சிக்கலாம் டாக்டரே... நீ மட்டும்தான் என் வயிற்றை பார்க்கிற.. டாக்டரே.

அவளை உற்று பார்த்துவிட்டு... நானா உன் வயிற்றை பார்த்தேன்... நேத்து போதையில அதுவும் பார்த்தேனா..

அய்யோ எதாவது புரியுதா டாக்டரு தன் தலையில் அடித்துக்கொண்டாள் ... வயிறுன்னா பசிக்கு சாப்பாடு போடுறேன் சொன்னே...

சரி நீயும் சாப்பிடு.. ஒரு நாற்காலியை இழுத்து அவன் பக்கத்தில் போட்டான்..

நைட் இட்லி, சாப்பாத்தி, இடியாப்பம், பூரி சென்னா, சிக்கன் குழம்பு எல்லாம் ரூசி பார்த்து.. செம்ம ஸாரே.. டைவர்ஸ் பண்ணிட்டு திரும்பவும் என்னையே கட்டிக்குவியா ஸாரே..

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சிட்டுவையே பார்த்தான் ஒரே நாள்ல காதலா மாறிடுச்சா..

செம்ம டேஸ்டு டாக்டர்... இதை எப்படி மிஸ் பண்ணுறது.. அதான் திரும்பவும் என்னையே கல்யாணம் செஞ்சிக்கோ தீரனை பார்த்து கண்ணை சிமிட்டினாள்..

சோத்துக்கு விங்கனவ போல இவள... பல்லை கடித்தபடி ,கிச்சன்ல 60 வயசு தாத்தா தான் சமைக்குது அவரை கட்டிக்கோ தினமும் ஆக்கிபோடுவாரு மிஸ் ஆகாது..

சிட்டுக்கு பூரி தொண்டையில் சிக்கி புரை ஏறியது... அவள்தலையில் தட்டிவிட்டு தண்ணீரை கொடுத்தான்.. பார்த்து சாப்பிடுடி லபக் லபக்ன்னு கோழிமாதிரி சாப்பிடுற..

தண்ணீரை குடித்து பூரியை உள்ளே தள்ளிவிட்டு... ஏன் டாக்டரே இப்படி டென்ஷன் ஆகுறீங்க..

நான் கொஞ்சம் இல்ல ரொம்ப கோவக்காரன் சிட்டு என்னை பார்த்து பயந்தே என் அத்தை பொண்ணுக்கு என்னை பிடிக்காம போயிடுச்சு.. நான் யார்கிட்டையும் அதிகமா பேசமாட்டேன்.. என்னவோ தெரியல உன்கிட்ட தான் நான் அதிகமா பேசினதே...

சரி சாப்பிட்டு தூங்கு, நாளைக்கு சீக்கிரம் எழுந்துக்கனும்.. தன் செல்லில் மெசேஜை டைப் செய்துக்கொண்டே பேசினான் தீரன்

இப்ப மணி எட்டுதான் ஆகுது அதுக்குள்ள எப்படி...

இரண்டு மணிக்கு பியூட்டி பார்லரிருந்து ஆள் வந்துடுவாங்க.. சரியா நாலுமனிக்கு..எங்க குலதெய்வம் கிருஷ்ணர் மலைக்கோவிலுக்கு போறோம்... அங்க உன்னை தீபம் ஏற்ற சொல்லுவாங்க... விளக்கு எரிச்சிடுச்சுன்னா எங்க ஜமீனுக்கு மருமகளா ஆக்குவாங்க.. ஆறுமணிக்கு எங்க மண்டபத்துல மேரேஜ் நடக்கும், இல்ல கல்யாணம் கேன்சல்..

என்ன டாக்டரே இப்படி சொல்லுறீங்க.. அப்ப சாமி வாக்கு கொடுத்தா தான் கல்யாணமா..

எஸ்... அதுதான் ஜமீனோட வரைமுறை... ரூல்ஸ்.. அதுவும் முதல் பையனுக்கு மட்டும்தான்.. ஒழுங்கா பத்தவச்சிடு..

என்னத்த...

விளக்க சொன்னே..

என்னடா இது பிக்பாஸ் மாதிரி டாஸ்கெல்லாம் கொடுகிறீங்க... அப்ப வீட்டைவிட்டு அனுப்பிடுவீங்களா டாக்டர்..

ப்ச்... தூங்குடி எனக்கு டயர்டாயிருக்கு... பாதிநைட்ல சந்தனத்துல குளி, ஜவ்வாதுல குளின்னு உயிர எடுப்பாங்க... இந்த பெட்ல படுத்துக்கோ... நான் சோபாவில படுத்துக்கிறேன்...

நடுஜாமத்தில் எழுந்து அந்த குடும்பமே ரெடியாகின... தங்க ஜரிகையில் அரக்கு பட்டு வைத்து பட்டுபுடவை கட்டி, கழுத்திலிருந்து இடுப்புவரை நகையனைந்து, தலையில் பூச்சூடி, நெற்றிசூட்டி மாட்டியிருந்தாள்.... சிட்டு கீழேயிறங்கி வரும் அழகை பார்த்து கண் இமைக்காமல் நின்றான் தீரன்...

நம்ம சிட்டுவாடா பெரிய பொண்ணுமாதிரியிருக்கு அர்ஜூன் தீரனிடம் சொல்ல...

அப்சரஸ் மாதிரி இருந்தாள்... ஜமீனுக்கு கேற்ற ஷேர்வானியில் தீரன் கம்பீரமாக நின்றான்...

நான்கு காரில் குலதெய்வம் கோவிலுக்கு வந்தனர்.. மலையிலிருக்கும் கோவில் முன்னாடி கார்நின்றவுடன்... கீழே காலடி எடுத்து வைத்தாள்..

கணமான பட்டுபுடவை மீறி உள்ளே பணி புகுந்து கை, கால் வெடவெடுக்க ஆரம்பித்தது சிட்டுக்கு... டாக்டரே என்றாள்...

புரிந்துக்கொண்டான் தீரன்.. சட்டென்று அவள் கையை இறுக்க பற்றிக்கொண்டான்... பல் தந்தியடிக்க அவனை பார்த்தாள்... அவளின் முகபாவத்தை பார்த்து சத்தமில்லாமல் சிரித்தான்..

பாவிங்களா வெரைச்சிடுவேன் போல... குளிரு மைனஸ்ல இருக்கும்போல.. கோவிலுக்கு உள்ளே சென்றனர்... அங்கே யாகம் வளர்க்க, பூஜை நடைபெற்றது... இருவரும் மட்டும் மூலசானத்திற்கு சென்று கிருஷ்ணரை வணங்கி, சிட்டு தீப்பெட்டியை எடுத்தாள்.. அவள் பக்கத்தில் தீரன் இருப்பதால் அவளை முழுக்க ஒரு பக்கமாக மறைத்திருந்தான்..

இந்த குளிருல நம்மளே ஐஸ்கட்டியா இருக்கோம்... இந்த திரிசல் நனைச்சில்ல போயிருக்கோம்.. எப்படி விளக்கு எறியும் ஸாரே... தன் இடுப்பிலிருந்து மடித்துவைத்திருந்த கற்பூரத்தை எடுத்தாள்..

என்ன செய்யற..

அமைதியாயிரு டாக்டரே... திரியில் கற்பூரத்தை நுனுக்கி வைத்து தீப்பெட்டியால் விளக்கை ஏற்றினாள்.. கற்பூரம் சட்டென்று பற்றியதால் வெளியே நின்று பார்த்தவர்கள் விளக்கு எரிக்கிறது... சாமி உத்தரவு கொடுத்துட்டாரு என்று பூசாரி கத்த.. சாமிக்கு தீபாரதனை முடிந்து காரில் மண்டபத்திற்கு சென்றனர்...

காலை விடிந்து ஏழு மணிக்கு அந்த கிருஷ்ணர் கோவிலில் மற்றோரு கார் நிற்க... அதிலிருந்து இறங்கினார் மயூரி.. காலை ஊன்றி ஊன்றி நடக்க.. அவரை தொடர்ந்து புருஷன் நந்தகோபால் மற்றும் அவரின் மாமனார் கோவிலுக்குள் நுழைந்தனர்..

வாங்கம்மா... அவரை பூசாரி வரவேற்க..

அய்யா அர்ச்சனை செய்யனும்..

அம்மா இப்பதான் உங்க அண்ணன் மகன் தீரன் கல்யாணத்திற்கு சாமி உத்தரவு கேட்டு போனாங்க... சீக்கிரம் போங்கம்மா நம்ம மண்டபத்துல தான் கல்யாணம் நடக்கபோகுது..

சந்தோஷத்தில் கண்கள் கலங்க, ஏங்க வாங்க தூரமா நின்னு பார்த்துட்டு வரலாம்...

நந்தன் தன் அப்பாவை பார்க்க, போலாம் வாப்பா மருமக ஆசைபடுறா..

மூவரும் மண்டபத்திற்கு நுழைய நிற்க இடமில்லாமல் கூட்டமாக இருந்தது... அந்த எஸ்டேட்டில் வேலைசெய்பவர்கள், விருந்தினர்கள், கம்பெனியில் வேலை செய்வர்கள் இருந்தனர்... இவர்கள் நுழையவும் கெட்டிமேளம் கெட்டிமெளம் கொட்டவும்.. சிட்டுவின் கழுத்தில் அக்னியை சாட்சியாக வைத்து பொன்தாலியை பூட்டினான் தீரன்வர்மன்.

கூட்டத்தில் தன் அண்ணன் மகன் தீரனை எட்டி பார்த்தாள் மயூரி... அர்ச்சதை தூவி நிற்க அவன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மணப்பெண்ணை பார்த்து அப்படியே நின்றார்.. வாய் மட்டும் மகா என்று சத்தமில்லாமல் சொல்லியது..

தன் மாமனைரை பார்த்து முறைத்தாள்.. சத்தியமா எனக்கு தெரியாது மருமகளே என்றார் குஸ்தி வீரண்ணா.

குனிந்த தலையை நிமிர்த்தி, பூமியை பார்த்த கண் நேரே மண்டபத்தின் வாயிலில் நின்றிருந்த மயூரியை பார்த்து நக்கலாக சிரித்தாள் மகாலட்சுமி தேன்மொழியாள்...

----பகைதீரா என்னவனே
 
Nirmala vandhachu ???
 
Nalla twist ma
Maha nnu surya yosikka munnadi matter over
Karporam vachu deepam podampothu taan enakku doubt appo intha matter therinchu taan deeran ahh marriage panna num nu irrukku ponnu ???
 
நல்லா இருக்கு
ஏத்தியாச்சு விளக்கு
அத்தை பொண்ணா இவ
எல்லாமே திட்டம் போட்டு
நடக்குதா
 
Top