Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 8)

Advertisement

Aviraa

Well-known member
Member
பகுதி-8

"ஏட்டய்யா இங்கிருந்த என் கிணத்தை காணல'.,,, கண்டுபிடிச்சுதாங்க.... வடிவேல் காமெடி மாதிரி.. அமேசான் மாதிரி அடர்ந்த காட்டுக்கு, நடுவுல என்னை நிக்க வைச்சுட்டு ...,, என் ஆபிஸ்ஸை, காணோம், கண்டுபிடிச்சுத் தானு.... கேட்பிங்களா?... எஜமான் .... என சற்றுப் போலி பணிவுடன், தன் முதுகை வளைத்துக் கூறினாள் ரதி..

"ஏய் என்ன நக்கலா?... வண்டியை விட்டு இறங்கினதும், சுத்தி பார்த்துட்டு... யூ சீப் ராஸ்கல்னு கத்தினே ....; இப்ப ஆபீஸ்ஸை கண்டு பிடிச்சுத் தரணுமா?... எசமான்னு.. நக்கல் அடிக்கிற ; என்ன பயம் விட்டுப் போச்சா. ... என்னை மீறி
யாருக்கிட்டவும்... பேச மாட்டேன்னு .. கையெழுத்துப் போட்டு கொடுத்து இருக்கிற என்ன.. அதையும் மறந்துட்டியா?...."பல் இடுக்கில் வார்த்தைகளைக் கடித்து பாண்டியன் துப்பவும்.. அவர்கள் அருகில் பேட்டரி கார் ஒன்று வந்து நிற்கவும், சரியாக இருந்தது..

தான் பேசியதற்கு தெனாவட்டாக நின்று, தன்னையே எதிர் பார்வை பார்த்துக் கொண்டிருந்த ரதியை .. முறைத்தவாறே ... அக்காரின் பின்னாடி அமர்ந்தவன். வெளியே நின்றிருந்தவளிடம் ..தலையைத் திருப்பி.,

"காருல தூக்கி உன்னை உட்கார வைக்கனுமா?.. நான் உட்கார்ந்த, உடனே என் பக்கத்துல, உட்கார மாட்டியா? ஒவ்வொரு தடவையும், வந்து என் பக்கத்துல உட்கார்னு, வெத்தலை ; பாக்கு வைக்கணுமா உனக்கு " என பாண்டியன், வார்த்தைகளை அழுத்தமாக உச்சரித்த விதத்திலேயே, பட்டென்று அவனருகே, ரதி அமர.. அவள் .... அமர்ந்த உடன்; பேட்டரி கார் ஓட்டுநர் .. காரை இயக்க ஆரம்பித்தார் ..

"எசமான்; உங்க அனுமதியில்லாம மத்தவங்க கிட்ட போன்லையோ.. அல்லது நேரிலையோ.. பேசக்கூடாதுனு தான் இருந்தது அந்த டாக்குமெண்ட்ல; உங்க கிட்ட நான் பேசக்கூடாதுனு எதுவுமே இல்லையே?.. அதனால உங்ககிட்ட பேச, கேள்வி கேட்க, எனக்கு முழு உரிமையும் இருக்கு என்றவள்.. வெளிப்புறம் திரும்பி அமர்ந்துக் கொண்டாள்..

"தன்னிடம் பேசுவதற்கு, எந்த தடையும் அந்த டாக்குமெண்டில் போடாததால், அதை சரியாகப் புரிந்து..அவள் சரியான பாயிண்ட்டை பிடித்து பேசும் விதத்தில், சற்று தன்னை மீறி அவளை மனதினுள் மெச்சியவன்....வெளியே முறைப்பொன்றை அதற்கு பரிசாக... அவளுக்கு வழங்கினான்..

அவனின் முறைப்பிலிருந்து தப்பிக்கும், விதமாக...., சுற்றுப்புறத்தை கவனிக்க ஆரம்பித்தாள் ரதி..

காரின் இருபுறமும் அகன்ற பெரிய, பெரிய மரங்கள் வரிசையாக நின்றிருக்க .. அம்மரங்களை தாண்டிய இடங்கள் பெரும் வனப்பகுதியாக காட்சியளிக்க .. நடுவே தெரிந்த சாலையில் இவர்களின் கார் .. பொம்மை கார் என... ஊர்ந்துக் கொண்டிருந்தது ...

தங்களுக்கு இருபுறமும் தெரிந்த ... வேறுபட்ட அகலத்தில் ... உயர்ந்த மரங்களையும் .. பசுமைப் போர்வைப் போர்த்திய அவ்விடத்தையும் ..கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தவள்.. மீண்டும் அவளுக்கே உரியதுடுக்குத் தனத்துடன் ..

"இப்போ நாம பயணம் செய்யுறது; ஜூராசிக் பார்க் பார்ட் -3 - யோட அடர்ந்த காட்டுப் பகுதி....... இங்க தான்..ஜூராசிக் பார்க் பார்ம் -1 -ல் நடித்த டைனோசரஸின் கொல்லு, பேத்தி, பேரன்கள் இருக்கிறார்கள்.. அவர்களை காணத்தான் ... அந்த படத்தில் வருவது போல் இந்த காட்டுப் பயணம்". . எனச் சொல்லி, பாண்டியனின் முகம் பார்த்து ... பின் தலை குனிந்து, மெளனமாக தனக்குள் சிரித்துக் கொண்டாள் ரதி..

"மக்கு.. மங்குனி .. மைண்ட் வாய்ஸ்னு சத்தமா சொல்லி சிரிக்கிற " .. என பாண்டியன் இதழ் பிரித்து முறுவல் பூக்கச் சொல்ல..

இந்த இரண்டு நாளில் ....அவனின் இதழ் சிந்தும் முதல் சிரிப்பை ஆச்சரியமாக... பார்த்தவள்
" என் மைண்ட் வாய்ஸ் அவ்வளவு சத்தமாவா?.... கேட்குது என்றிருந்தாள் "

ஒரு விரலை உதட்டில் வைத்து, ஆச்சரியமாக... அவள் பேசிய விதத்தில் இம்முறை, பற்கள் வெளியே தெரியுமாறு உடல் குலுங்கச் சிரித்தவன் ... அதன் பின்....சற்று நேரத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு .. அவர்கள் இறங்கும் இடம் வந்ததும்.. ஒட்டுனர் இடம் ..கோபால் அண்ணா.. நாங்க இங்கேயே ! ...இறங்கிறோம்.. நீங்க வண்டியை ஆபீஸ் முன்னாடி நிறுத்திடுங்க... என்று விட்டு... காரிலிருந்து இறங்கி நின்றவன், சற்று உள்பக்கமாக குனிந்து, இவ்வளவு நேரம் அவன் சத்தமாக சிரித்ததை எண்ணி ...." ஆ.வென "வாய் பிளந்து அமர்ந்திருந்தவளை, சொடக்கிட்டு ... " இப்படி வாயை தொறந்து இருந்தினா....

பேத்தி, பேரன்..டைனோசர் ... உன்வாய்க்குள்ள போயிடும், ... அது வரதுக்குள்ள... வாயை மூடிட்டு சீக்கிரம் ..கீழே
இறங்குறீயா".. என்று சிரித்தவாறே
ரதியை கலாய்த்தான் ...

"க்கும், என தோள்பட்டையில் 'முக வாயை இடித்தவள்.. காரை விட்டு இறங்கி அவனருகே, நின்றாள் ... அவன் அடித்த ஜோக்கிற்கு சிறிதாக நகைத்தப்படியே....

அவள் இறங்கியதும் கார் அவர்களை விட்டு மறையும் வரை அமைதி காத்தவன். யாருமற்ற காட்டுப் பகுதியில் நடந்தவாறே, " காலையில் தான் உன் அப்பன் .. உன்னை வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிட்டான்.. அப்போ அழுதுட்டு, இப்போ.... என் கண்டிஷனையும் மீறி, என் கூட இவ்வளோ, வாய் அடிக்கிற . இவ்வளோ எதார்த்தமாக சிரிச்சுட்டு இருக்க.. ...எப்படி?.. என சற்று நேரமாக இருந்த இளக்கம் மறைந்து ...ஆராய்ச்சியாக அவள் முகம் பார்க்க..

அவனின் கூற்றில், ஒரு நொடி முகம், கசங்கி அடுத்த நொடிதெளிந்தவள்.. " "எப்பவுமே ?... நான் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்க மாட்டேன் ... அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் .. .... அதை எனக்கு உருவாக்கியவர்களை... எதிர்த்து என் கடைசி மூச்சு வரை.... போராடுவேன்.. அது யாராக இருந்தாலும்... ஏன்? எனக்கு உயிர் கொடுத்தவரானால் கூட ..

ஏன்னா? நான் அந்த ஈசனின் பாதியாகிய பெண் சக்தி " என்று கண்களை உருட்டி .. கம்பீரமாக ...பாண்டியனின் கண்களை நேர்க் கொண்டுப் பார்த்துக் கூறினாள்.."

அவள் கூறியதைக் கேட்டவனின் மூளையோ ... ஒரு செகண்ட்... வேலை நிறுத்தம் செய்ய .. கைகளோ!.. தன்னிச்சையாக., முதிய பலா மரத்தைப் பற்ற.... நினைவுகளோ எங்கு, எங்கோ .. செல்ல .. அந்த நினைவுகளின் கனம் தாங்காமல், அம்மரத்தின் மீது சாய்ந்து அமர்ந்து, தன்னை மெதுவாக நிலைப்படுத்திக் கொள்ள வாராம்பித்தான்..

அவனின்.... மனம் துவண்ட இச்செயலை வினோதமாக பார்த்தவள்..மேற்கொண்டு பேசாமல் .. ஏன்? இப்படி செய்கிறான் என்ற காரணத்தை அவனின் முகமாறுதல்களைக் கூர்மையாக ஆராய்ந்துக் கொண்டே படிக்க முயன்றாள்...

சடுதியில் தன்னை நிலைப்படுத்தி... பழைய கம்பீரத்தோடு எழுந்து நின்றவன். அந்த சொர்க்கப் பூமி உருவான விதத்தை மனமுவந்து விவரிக்க ஆரம்பித்தான்..

. " ரதி இங்க சுத்தி இருக்கிற
காடுகள் முழுவதும்... இயற்கை வேளாண்மையால் நான் உயிராக நேசிச்சவங்களால்
உருவானது,

விதையில் இருந்து கனியாகும் வரை முழுக்க ., முழுக்க... எந்த இராசாயனமும் இல்லாம.. இழை, தழை .. உரமும் ., இயற்கையான மூலிகை பூச்சிக்கொல்லிகளை மட்டுமே வைத்து, வளர்த்த .. பழ மரங்களும், வாணிப மரங்களும் .. காய்கறிகளும் கொண்ட.... 'இயற்கை உயிர் பண்ணை ".. இது.. என்றவன்.. மேலும்., நடந்தவாறே ....

" நச்சு இல்லாத, உணவு , பழமையை மீட்டு, இயற்கையைக் காப்போம்". . என்பது இந்த இயற்கை வேளாண்மையை உருவாக்கினவங்களோட தாரக மந்திரம் ..

இராசயனக் கலப்பில்லாத உணவுப் பயிர்களான, பாரம்பரிய நெல், பருப்பு வகை ,,, காய்கறிகள் ,ஒரு புறமும்,

வாணிபத்திற்காக, ரோஸ் உட், தேக்கு, சந்தனம், சால், வேங்கை,மாகோனி .. போன்ற மரங்கள் மறுபுறமும் இங்கு வளர்க்கப்படுகிறது .. எனப் பாண்டியன் சொல்ல..

தங்களுக்குள் இருந்த மனக்கசப்புகளை ..மறந்தவள்.. இயற்கையால் ஈர்க்கப்பட்டு ..

" டிம்பர்" மரங்கள் வளர நிறைய வருஷங்கள் ஆகாது .. அப்போ, எப்படி, வருமானமே இல்லாமல் .ஆட்கள் கூலி, உரங்கள் , பூச்சிக்கொல்லி தெளித்தல், இது போன்ற ....பராமரிப்பு ...செலவையும் சமாளிக்க முடியும்.. ரொம்ப பணக்கஷ்டம் இல்லையா?... விவசாயத்தை தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தோடு கேட்டாள் ரதி..

முதல் 15 - வருடங்கள் .. செலவாகும் .. அந்த செலவைக் கட்டுப்படுத்த, அதன் ஊடே 'ஆரெஞ்சு, மா, பலா, வாழை, கொய்யா போன்ற 15-வகையான பழமரங்களை நடுவதன் மூலம் நமக்கு... வரவு - செலவுக்கு போதுமானதாக இருக்கும் ..அந்த பழமரங்களும்.....முதல் 5 - வருடங்கள் பராமரிப்பு செலவுகளுக்கு .. குறுகிய கால பயிர்களான நெல், பருப்பு வகைகள், கொய்யா, வாழை மூலம் ..வரும் வருமானம் அதிகமாகவே இருப்பதால்,

இந்த மரங்களின் தேவைகளை எளிதாக சமாளித்து விடலாம்.. மேலும், இவைகள் முழுக்க, முழுக்க .. கெமிக்கல், பயன்படுத்தாமல், இயற்கை முறையில்விளைவிப்பதால் .. மார்க்கெட்டில் நல்ல விலை போகும்.. இங்கு வேலை செய்பவர்களுக்கு, மார்க்கெட் .. விலையில் கால்வாசிதான்
முதலில் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு, நல்லதை தருவோம்..

அடுத்ததாகஇவற்றிற்கு, உரத்திற்காக .... காஞ்சிபுரம் குட்டை ... மயிலை காளை, கட்டக்காரி.. போன்ற நாட்டு மாட்டு இனங்களையும் இங்கே வளர்க்கிறோம்...

இவற்றிற்கு எல்லாம் நீர் ஆதாரமாக, ஆழ் துளை கிணறு ஒன்று கூட இல்லை . மொத்தம் 10- கிணறுகள் மட்டுமே உள்ளன...

உயர்ந்த மரங்களாக அதிகம் இருக்கு.. அவைகள் புயல் சமயத்தில், முறிந்து சேதம், ஆனா.. இத்தனை வருட உழைப்பு வீண் ஆயிடாதா..

நல்ல கேள்வி என சிரித்துக் கொண்டவன், "உயிர்வேலி " அமைச்சு இருக்கோம்.. அதாவது, மூங்கில் மரங்கள், பலத்த காற்றுக்கு வளையுமே தவிர ..ஓடிந்து விடாது... இந்த மூங்கில் மரங்களைத் தாண்டி புயல் காற்று; காட்டிற்குள்... நுழையும் போது.. வேகம் குறைந்து, உள்ளிருக்கும் மரங்களுக்கு குறைந்த சேதத்தை தான் விளைவிக்கும் ..
மேலும், இந்த மரங்களுக்கு ஆரம்பத்தில் குறைந்த நீர் இருந்தாலே போதும்.. வளர, வளர நீர் அதிகம் தேவையில்லை..... அதோடு இல்லாமல், இவற்றின் இலைகளை, இம்மரமே அதற்கு உரமாக ஆக்கிக் கொள்ளும்.. இதன் மூங்கில் கழிகளை., மற்ற காட்டிற்கு வேலிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் "... எப்படி நம் பாரம்பரிய விவசாய நுணுக்கம் என ரதியைப் பார்த்தான்..

அவன் கூற்றில்... மெச்சுதல் பார்வையை அவன் மீதி வீசியவள்... அடுத்ததாக, ஜயப் பார்வையை அவன் மீது வீச., அதை சரியாக புரிந்துக் கொண்டவன்.

" நீ நினைப்பதுப் போல், இந்த விவசாய முறையில் பெரும்பகுதி . டாக்டர் .திரு .நம்மாழ்வார் அவர்களின், வழிமுறைகளைப் பின்பற்றி.. நான் நேசித்தவரால்; உயிர் கொடுக்கப்பட்டது .. இந்த இடத்திற்கு நான் வெறும் பாதுகாவலன் மட்டும் தான் .. என்று
பூரிப்போடு கூறினான்.
...... பகை தொடரும் ...
 
ஹாய் வாசகிகளேl.... 7, 8 .. அடுத்தப் பாகங்களை பதிவு இட்டு யுள்ளேன்.. இதில் உள்ள.. நிறை,,, குறைகளை... ஓரிரு வரிகளில் தெரிவிக்குமாறு க்ேகட்டுகிறேன்.,, போன.. ePi - களுக்கு லைக்ஸ்.காமெண்ட் போட்ட அனைத்து நண்பிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. ( நண்பி .. பெண்பால்)
 
Nirmala vandhachu ???
 
Very nice epi dear.
Tq author ji for this informative, interesting epi. Ithu ellam vasikkum pol santhoshama, happy ah irruku authore.
Organic forming kurichu information ku nandrikal
 
இயற்கை விவசாயம் குறித்த விளக்கங்கள் அருமை...
அதிலும் உயிர்வேலி ..அருமை
 
Top