Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீயாய் தீரா காதல் 1

Advertisement

Thirumathi surendhar

New member
Member
அது ஒரு பரப்பரபான காலை பொழுது சாலையில் கார்கள் பந்தயங்களில் ஓடுவது போல வேகமாக ஓடிக் கொண்டிருந்தது அதில் கருப்பு நிற சொகுசு காரில் அமர்ந்து இருந்தான் சுரேந்தர்.
கவின் கம்பீரமான தோற்றம் ஆஜானுபாகுவான உடல் என்று பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தான். அதிலும் அவன் அணிந்திருந்த கண்ணாடி அவன் கவர்ச்சியை கூட்டியது.
" சார் நீங்க கேட்ட புக் " என்று முன் இருக்கையில் அமர்ந்து இருந்த அவனுடைய அசிஸ்டன்ட் சந்துரு அவனிடம் கொடுத்தான்.
அதை வாங்கி படித்தவன் " இந்த வென்பா சுப்பிரமணியம் செமயா எழுதுரா வாட்! ஆ ! ஷார்பு ரைட்டீங் " என்று சொல்ல
அதை கேட்ட சந்துரு" இந்த பொண்ணு தான் ஒரு மாசமா உங்க இன்டர்வியூக்கு கேட்டுட்டு இருக்கு " என்றான்.
கவின் " யாரு அந்த பொண்ணா இன்டர்வியூ எடுக்க போதா? " என்று கேட்க
சந்துரு" இல்ல இல்ல அவங்க சீனியர் தான் எடுப்பாங்கனு நினைக்கிறேன் பாவம் இந்த பொண்ணு கஷ்டபடுது" என்று சொல்ல
கவின் ஒரு எலனப் பார்வையோடு " அது என்ன அந்த பெண்ணு மேல அவ்ளோ அக்கறை " என்று கேட்க
சந்துரு சற்று சுதாரித்துக் கொண்டு " அப்படிலாம் ஒன்னும் இல்ல சார்" என்று சொல்லி முகம் சிறுத்து போனான்.
அவன் மனதிற்குள் " இவனும் கமிட் ஆக மாற்றான் நம்புலையும் ஆக விட மாற்றான்" என்று எண்ணிவனின் காதில் யாரோ அழைப்பது போல இருந்தது
திரும்பி பார்க்க கவின் தான் அது " சரி வர சொல்லு அதுவும் அந்த பெண்ணு தான் வரனும் சொல்லு பார்க்கலாம்" என்று சொல்ல
சந்துருவிக்கு தான் கான்பது கனவா நிஜமா என்று புரியவில்லை இதுவரை 20க்கும் மேம்பட்ட பத்திரிகைகள் அவனை அனுகியப்போது அவன் அவர்களுக்கு புகைப்படம் எடுக்க கூட அனுமதித்தது இல்லை இன்று இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று அவனுக்கு புரியவில்லை.
அவனிடம் எதாவது கேட்டால் இன்டர்வியூம் வேணாம் ஒன்னும் வேணாம் என்று சொல்லி விடுவானோ என்று பயத்தில் வாயை திறக்காது வந்தான்.
கவின் " என்ன நா சொன்னதுக்கு எதுமே சொல்லாம வர " என்று கேட்க
சந்துரு வேகமாக திரும்பி" இல்ல சார் உங்க ஸ்செட்யூல் செக் பண்ணிட்டு இருக்கேன்" என்று சொல்ல
கவின் " இவ்வளோ வேகம்!! நீ வேலைக்கு சேர்ந்ததுல இருந்து இன்னைக்கு தான் பாக்குறேன் " என்றான்.
சந்துரு" அப்படிலாம் ஒன்னும் இல்ல சார் அத விடுங்க இந்த வாரம் ஃபுலா பிஸி எப்படி சார் " என்று கேட்க
கவின் " இன்னைக்கு 7 மணிக்கு மீட்டிங் தான் கன்பார்ம் ஆகலயே அந்த டைம் சொல்லுங்க" என்றான்
அவன் மாறுவதற்குள் சொல்லி விடுவோம் என்று உடனே தொலைபேசி எடுத்து தினநிதி பத்திரிகை எடிட்டர் தமிழரசிடம் தகவலை தெரிவித்தான் சந்துரு.
அதைப் பார்த்த கவின் " என்ன ஒரு வேகம் தீயா வேலை செய்யறப்பா " என்று நக்கல் அடித்து விட்டு தினநிதி பத்திரிகையை மீண்டும் படிக்க தொடங்கினான்.
ஒரு அசட்டு சிரிப்புடன் முன்பக்கம் திரும்பிக் கொண்டான் சந்துரு அவன் மனதிற்குள் " எப்படியாவது அந்த பெண்ணு நம்பர் வாங்கி பேசி கரெக்ட் பண்ணி கமிட் அயிடனும்" என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
தினநிதி பத்திரிகை அலுவலகம் மிகவும் உற்சாகமாக காணப்பட்டது அனைவரும் அவர்கள் வேலைகளை உற்சாகமாக செய்து கொண்டு இருந்தனர்.
சீப் எடிட்டர் ரூமில் இருந்து மிகவும் சந்தோஷமாக வெளியே வந்தாள் காவியா
" காவியா மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த மாசம் பத்திரிகையில முதல் பக்கம் உங்க ஆர்டீக்கல் தான் வர போதுனு கேள்வி பட்டேன் அப்படியா " என்று அவளின் அசிஸ்டன்ட் சுதா கேட்க
காவியா " ஆமாம்" என்று புண்ணகையுடனும் பெருமிதத்துடனும் பதில் அளித்தாள்.
காவியாவிற்க்கு இன்னும் சிலரும் வாழ்த்து கூற பெருமை தாளாமல் காது வரைக்கும் சிரித்தாள்.
கூட்டத்தில் ஒருத்தி " காவியா மேடம் டீரிட்லாம் கிடையாதா " என்று கேட்க
காவியா " இன்னும் அது உறுதி ஆகல எதுக்கு அதுக்குள்ள எல்லாரும் என்னை சங்கடப் படுத்திறிங்க இன்னும் ஒரு வாரம் இருக்குல அப்ப பாத்துக்கலாம் " என்று தன்னடக்கம் உள்ளவள் போல் நடித்தாள்.
சுதா உடனே எதிர் மேஜையை பார்த்து " அட நீங்க வேற மேடம்
இன்டர்வியூ குடுக்க அவங்க முதல ரெடி ஆகனும்
அப்பறம் அதுக்கு அவுட் லைன் ரெடி பண்ணணும்
அப்பறம் இன்டர்வியூக்கு அப்பாய்ன்மன்ட் கிடைக்கனும்
அப்பறம் இன்டர்வியூ எடுக்கனும்
அப்பறம் ஆர்ட்டிக்கல் எழுதனும்
அதுக்கு எடிட்டர் ஓகே பண்ணனும்
அது அந்த இன்டர்வியூ கொடுத்த அவங்களுக்கு பிடிக்கனும்
அப்பறம் அதுக்கு அப்புருவர் வாங்கனும்
அப்பறம் தான் போட முடியும் சொல்லும் போதே மூச்சு வாங்குதே இதல்லாம் ஒரு வாரத்துல முடியுமா " என்று எதிர் மேஜையில் இருக்கும் வென்பாவை சீண்டும் வகையில் சுதா நக்கலாக சொல்ல
வென்பா பக்கத்தில் அமர்ந்து இருந்த வென்பாவின் அசிஸ்டன்ட் சுவேதா கோவமாக எழுந்து நின்று
" சுதா என்ன உடம்பு எப்படி இருக்கு" என்று கேட்க
சுதா " எங்க ஆர்ட்டிக்கல் முத பக்கத்துல வர போதே அதுனால எல்லாம் நல்லா தான் இருக்கு " என்று திமிராக பதிலளித்தாள்.
சுவேதா உடனே " இந்த பத்திரிகை சேர்ந்துல இருந்து இந்த 5 வருஷத்துல இப்ப தான் உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சது இருக்கு அதுவும் எங்களுக்கு அவங்க இன்டர்வியூ கொடுக்கல அதான் எதோ இப்படி கிடைச்சா தான் உண்டு உங்களுக்கு " என்று கிண்டலாக கேட்க
இதை கேட்டவுடன் காவியா கோவமாக" அப்ப இவ பண்ணாதுனால எனக்கு வாய்ப்புனு சொல்றியா" என்று கேட்க
சுவேதா சற்றும் யோசிக்காமல் " ஆமா அதுல என்ன டவுட்" என்று சிரித்தபடி சொல்ல
காவியா " சுவேதா அப்ப எனக்கு திறமை இல்லனு சொல்லிறியா " என்று அவள் அருகில் சென்று கேட்க
சுவேதா" நான் அப்படி சொல்ல " என்று சொல்ல
காவியா " அப்பறம் எப்படி சொன்ன" என்று கேட்டாள்
சுவேதா " உன்ன விட வென்பா திறமைசாலினு தான் சொன்ன " என்றாள்
காவியா" இவளும் நானும் உன்னா தான் ட்ரைனிங்ல சேர்த்தோம் எடிட்டரை ஐஸ் வைச்சு ஒரு ஒரு மாசமும் இவ ஆர்டிக்கல் வர மாறி பன்றா மத்தபடி திறமையூம் இல்ல ஒரு மண்ணும் இல்ல " என்று சொல்ல
சுவேதா " நீ பொறாமையுல பேசுற அவ திறமை அதான் முதப்பக்கத்துல வரா திறமை இருந்தா திறமையுல மோது " என்றாள்
காவியா " இது தான் ஆரம்பம் இனிமே எப்பவும் அவ ஆர்டிக்கல் முத பக்கத்துல வர போறதே இல்ல " என்று சொல்ல
இருவரின் வாக்குவாதத்தில் சிலர் அவர் இருக்கையில் இருந்து எழுந்து வந்து இருவர் தரப்பிலும் பேசினர்
அந்த சூழ்நிலையே ஆஃபிஸே போர்க்களம் போல் காட்சி அளித்தது‌.
ஆனால் இதை சற்றும் கண்டுக்கொள்ளாமல் ஒருத்தி காதில் ப்ளூ டூத் மாட்டிக்கொண்டு அவள் வேளையில் மும்முரமாக இருந்தாள்.
அவள் கவனம் முழுவதும் இன்டர்வியூக்கான கேள்விகளை தயார் செய்வதிலே இருந்தது.
இங்கு அவளுக்காக இருவர் முடியை பிடித்து கொள்ளும் அளவுக்கு குழாய் அடி சன்டை போட்டு கொண்டு இருந்தனர்.
ஆனால் அவளோ மும்முரமாக வேலை செய்து கொண்டு இருந்தாள்
அவர்கள் போட்ட சத்தத்தில் எடிட்டரே வெளியே வந்து விட்டாள்.
அவள் பெயர் தமிழரசி அவள் மிகவும் அழகாக இருந்தாள் நாற்பதை தொட்ட வயது ஆனாலும் முகத்தில் கம்பிறமும் தெளிவும் நிறைந்து இருந்தது.
அவள் உடுத்தி இருந்த பச்சை நிற காட்டன் புடவை அவள் கம்பிறத்தை இன்னும் மேம்படுத்தியது.
தமிழரசி வெளியே வந்து " இது ஆஃபிஸா சந்தைக் கடையா " என்று சத்தமாக கேட்க
அனைவரும் வாய் அடைத்து போனார்கள்.
சுவேதா " சாரி மேடம் அது... " என்று சொல்ல வர
தமிழரசி இடைமறித்து " ம்..... உங்களுக்கு சன்டை போடனும்னா வெளியே போய் போடுங்க இது ஆஃபிஸ் பிளீஸ் மெயின்டன் டிஸ்ப்பிலின் " என்றாள்
அனைவரும் சாரி கேட்டு விட்டு அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.
தமிழரசி காவியாவைப் பார்த்து " நீ சீனியர் தான இப்படி பொறுப்பு இல்லாமல் நடந்துக்குற " என்று கேட்க
காவியா " இல்ல மேடம் அது வந்து " என்று ஏதோ சொல்ல வர
தமிழரசி இடைமறித்து " இத நா உன்கிட்ட இருந்து எதிர்பாக்கல "
காவியா " சாரி மேடம் " என்றாள்
தமிழரசி " இன்னும் முதல் பக்கம் முடிவு ஆகல அதுக்குள்ளே இப்படி பன்ற நீ " என்று சொல்ல
காவியா " மேடம் அது வந்து " பேச வரும் போது
தமிழரசி இடைமறித்து " போய் வேலையை பாருங்க காவியா" என்று அவளை அடக்கி அமர வைத்தாள் பின் சுவேதா பக்கம் திரும்பி
" சுவேதா... " அழைக்க
சுவேதா எழுந்து நின்றாள்.
" வென்பாவ என் கேபினுக்கு வர சொல்லுங்க " என்று சொல்லி தமிழரசி உள்ளே சென்றாள்.
சுவேதா " சரி மேடம் " என்று சொல்லி அமர்ந்தாள்.
சுவேதா " வென்பா " என்று அழைக்க
அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை
பின் சத்தமாக " வென்பா " என்று அழைக்க
மீண்டும் எந்த பதிலும் வரவில்லை
பின் சுவேதா வென்பான் தோள்களை பிடித்து உளுக்கினாள்.
அவள் லூஸ் ஹெரை ஒதுக்கி அவள் காதில் இருந்து ப்ளூ டூதை எடுத்து சுவேதாவைப் பார்த்து
" என்னடி ஏன் கூப்பட்ட" என்று கேட்க
சுவேதா " அடிப்பாவி அப்ப இவ்வளோ நேரம் இங்க என்ன நடந்ததுனு நீ கவனிக்கவே இல்லையா" என்று கேட்க
வென்பா " என்ன நடந்தது இங்க " என்று பரிதாபமாக கேட்டாள்
சுவேதா " உனக்காக உயிர கொடுத்து சன்டை போட்டா என்ன நடந்ததுனு அசால்டா கேட்குற " என்று சொல்ல
வென்பா " உனக்கு தான் தெரியும்ல நான் வர்க் பண்ணும் போது டிஸ்ராக்ஷன் இருக்க கூடாதுனு ப்ளூ டூத் போடுவனு அப்பறம் என்ன " என்று கேட்க
சுவேதா " ஆமாம்ல சரி விடு " என்றாள்
வென்பா " சரி எதுக்கு சன்டை போட்ட " என்று கேட்க
சுவேதா" எல்லாம் அந்த காவியாவும் சுதாவும் வந்து முதல் பக்கம் அவங்களுக்கு கிடைச்சு இருக்குனு சீன் போட்டாங்க அதான் நா சன்டை போட்டன்" என்று சொல்ல
வென்பா " அப்பறம் " என்று கேட்டாள்
சுவேதா " அப்பறம் என்ன போட்ட சத்தத்தில் எடிட்டரே வெளியே வந்து எல்லாரையும் திட்டிட்டு போனாங்க " என்றாள்
வென்பா " நீ ஏன் தேவையில்லாம அவங்க கிட்ட வாய குடுக்குற இன்னும் ஒரு வாரம் இருக்குல பாக்கலாம் " என்றாள்
சுவேதா " அப்பனா நீ இன்னும் நம்புரியா அந்த கவின் உனக்கு இன்டர்வியூ கொடுப்பானு " என்று கேட்க
வென்பா " ஆமாம் " என்றாள்
சுவேதா " ஆனா இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு முடியுமா " என்று கேட்க
வென்பா " ஒரு வாரம் இருக்குல கடைசி நாள் வரைக்கும் ட்ரை பண்ணுவோம் இந்த மாசம் இல்லனா அடுத்த மாசம் வரப்போது அவ்ளோதான் " என்று தன்னம்பிக்கையுடன் கூறினாள்
சுவேதா " இந்த விடாமுயற்சியும் தன்னம்பிக்கும் தான் உன் பலமே " என்று சொல்ல
சிரிப்பை பதிலாக அளித்தாள் வென்பா
சுவேதா " சொல்ல வந்தயே மறந்துட்டன் பாரு " என்று சொல்ல
வென்பா " என்ன " என்று தன் புருவம் உயர்த்தி கேட்க
சுவேதா " எடிட்டர் உன்ன கூப்டாங்க போய் பாரு " என்று சொல்ல
வென்பா அவள் இருக்கையில் இருந்து எழுந்து எடிட்டர் அறைக்கு சென்றாள்.
- தொடரும்


மறக்காமல் இந்த சேப்டர் பற்றிய கருத்துக்களை கமெண்டீல் பதிவிட்டால் அது என்னை மேலும் வளர்த்துக் கொள்ள உதவும்.....
இந்த கதை பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
 
Top