Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் விமர்சனம்

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 024 ன் தினையோடு தேனாய் எனது பார்வையில். இளஞ்சேரல் கறிக்கடை மற்றும் அது தொடர்பான தொழில் செய்து வருகிறான். அவன் பெற்றோரை ஒரு விபத்தில் இழந்த பின் ஒன்றுவிட்ட மாமா அவரது ஊருக்கு கூட்டி வந்து படிக்க வைக்கிறார். அவரது உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் சேரலின் பட்டப் படிப்பை கடன் வாங்கி படிக்க வைப்பதை விரும்பாமல் தனது சொந்த ஊரான ஆதிகுடிக்கு வந்துவிடுகிறான். மாமா அத்தை மற்றும் மகள் தமிழ் மீது அதிகம் பாசம் கொண்ட அவன் மாமாவின் இழப்பிற்கு பின் திருமணம் என்று வரும் பொழுது மாமாவின் மகள் தமிழை திருமணம் செய்து கொள்ள கேட்கின்றான். பாட்டியின் எதிர்ப்பு இருந்தாலும் அவன் தொழில் தமிழுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவள் விருப்பத்தால் திருமணம் நடக்கிறது. இருவரின் வாழ்க்கை தொடக்கத்தில் சில பிரச்சினைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு இருப்பதால் எப்படி அவர்களது வாழ்க்கை செல்கிறது என்பதை விறுவிறுப்பாகவும் யதார்த்தமாகவும் தந்திருக்கிறார். கறிக்கடை என்று சாதாரணமாக நினைக்கும் தொழில் பற்றிய விவரங்களை தந்திருக்கிறார். அக்கா கீதா மற்றும் சேரலின் பாசம் அருமை. இயல்பான கதாபாத்திரங்கள். யதார்த்தமான கதைக் களத்தில் இயல்பான நிகழ்வுகள் மூலம் எழுத்தாளரின் முத்திரை பதித்திருக்கிறார். வாழ்த்துகள் எழுத்தாளரே.
 
மிகுந்த நன்றி மா ?
 
Top