Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாழம்பூவின் மருத்துவ பயன்கள்

Advertisement

Poornima Madheswaran

Well-known member
Member
தாழம்பூ :



தாழை மரம் (Pandanus Odoratissimus) நீர் தெளிக்காமல் நீரோடைகளில், ஆறுகளில், கேட்பாரின்றிப் புதராக வளர்ந்து இன்மணம் பரப்புவதுடன் மலடு நீங்க மருத்துவம் தருகிறது. இதனை ஆங்கிலத்தில் Fragrant Screwpine இப்படியும் அழைப்பர். வடக்கில் வேரைப் பயன்படுத்துகின்றனர்.

தாழைமரத்தின் வேரை - வேர்க்கிழங்கை எடுத்துவந்து அதை அரைத்துப் பசும்பாலில் (நாட்டுப்பசு) கலந்து வடிகட்டாமலேயே தரலாம். தாய்மை ஏற்படுவது மட்டுமல்ல,ஏற்கனவே உருவான கரு கலையும் ஆபத்தையும் தடுக்குமாம்.





தாழம்பூவுக்குச் சற்று வணிக முக்கியத்துவம் இருப்பினும் தாழையை நாடும் மக்கள் குறைவு.

மருத்துவக் களஞ்சியத்தில் தாழையானது, வாதம், கபம், மேகம் சார்ந்த பிணியகற்றும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, முற்காலத்தில் பிரமேகம் என்ற நோய் வந்தால் தாழை வைத்தியம் செய்யப்படும்.

மேகநோய் என்பது உடல் வெப்பம் ஏறிச் சூட்டால் ஏற்படும் பல பிரச்சினைகள். உடல் ரணமாகும். இப்படி வரும்போது உப்பில்லாப் பத்தியம் இருந்து கொண்டு பின்வரும் வைத்தியம் செய்யலாம்.

வெக்கை தீவிரமாயிருந்தால் தாழங்கிழங்கு 2 தோலா எடைக்கு (ஒரு வெள்ளி ரூபாய் எடை) நறுக்கி அரைத்துச் சீனி சேர்த்து ஜூஸை ஒரு வாரம் வெறும் வயிற்றில் தரலாம்; அல்லது தாழம்பூவையும் இதே அளவு கொழுந்தாக அரைத்துச் சீனியுடன் சீரகம் சேர்த்துத் தரலாம். இரண்டு தாழம்பூவைக் குறுக்கே அரிந்து ஒரு லிட்டர் நீரில், ஒரு நாள் ஊறல் போட்டுச் சாற்றைக் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு கிலோ சீனாக் கற்கண்டு கலந்து தேன் பதமாகக் காய்ச்சி சிரப் செய்துகொண்டு சற்று நீர் கலந்து குடித்துவந்தாலும் வெப்பம் அகலும்.



தாழம்பூ மூக்குப்பொடி, தாழம்பூ பீடி எல்லாம் நாசி, தொண்டை நோய் மருந்து என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

தாழையின் பரவலான பயன், தாழையில் சிவப்பு வெள்ளை என இரண்டு வகை உண்டு. இரண்டிலும் மணம் ஒன்றே. ஆடி, ஆவணியில் வெண் தாழம்பூ மடல் விரிக்கும்.

செந்தாழம்பூ என்றால் செக்கச் செவேலென்று இருக்காது. மஞ்சள் நிறத்தைத்தான் செந்தாழம்பூ என்று கூறுகின்றனர். இது பனிக்காலம் தாண்டி மடல் விரிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் செந்தாழம்பூ கிட்டும்.


தாழம்பூ தைலம் நல்லெண்ணெய்யில் காய்ச்சி எடுக்கப்படுகிறது. இது தலைவலிக்கு நல்லது. இயற்கை வழியில் தாழம்பூ சென்ட் எடுக்கலாம்.

தாழம்பூவின் நறுமணத்திற்கு நாகங்கள் அந்த மரத்தினை சுற்றி இருக்கும்.

இந்த பூவை சிவனுக்கு பூஜைகளில் பயன்படுத்த மாட்டார்கள்.
 
சூப்பர் சூப்பர் அருமையான பயனுள்ள தகவல்கள், பூர்ணிமா மாதேஷ்வரன் டியர்
 
Top