Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தன்மானம் அல்லது சுயமரியாதை ( Self-respect )

Advertisement

V R K

Member
Member
அத்தியாயம் 2.

ராம் மிகவும் நேர்மையாக இருப்பதால் கம்பெனி பணத்தை கொள்ளையடித்து கொண்டு இருப்பவர்களுக்கு அவரை பிடிப்பதில்லை. அதைப்பற்றி ராம் கவலைப்படுவதுமில்லை.

அவருடைய மனதிற்கு சரி என்று பட்டதை எப்பொழுதும் செய்வார். ஒரு முறை முடிவு செய்தால், அந்த முடிவிலிருந்து என்றும் பின் வாங்கியதில்லை எத்தனை லட்சம் லாபம் வந்தாலும் சரி, எத்தனை லட்சம் நஷ்டம் வந்தாலும் சரி. முன் வைத்த காலை பின் வைப்பதில்லை. அவருடைய இந்த குணத்தால் கம்பெனியில் அவருக்கு நிறைய எதிரிகள். எதிரிகள் என்று சொல்வதை விட துரோகிகள் என்று சொல்வதுதான் சரி. ஏனெனில் எதிரிகள் வெளிப்படையாக கண்களுக்கு தெரிவார்கள். அதனால் அவர்களை சமாளித்து விடலாம். ஆனால் துரோகிகளை தான் அடையாளம் தெரியாது . அதனால் சமாளிப்பது மிகவும் கஷ்டம்.

அதுவும், அவருடைய பதவிக்கு மேல் இருப்பவர்களுடன் அதாவது மேனேஜர், ஜெனரல் மேனேஜர் ஆகியோருடன் மோதும் போது மிகவும் கடினம். காரணம் அவர் இருப்பது காஸ்டிங் மற்றும் இன்டேனல் ஆடிட் டிபார்ட்மெண்ட். ( Costing and Internal Audit Department.) அவர் கம்பெனி சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வேலை செய்ய வேண்டும்.

பொதுவாகவே சட்டம் பேசுபவர்களை மற்றவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. இருந்தாலும் வேறு வழியில்லை. அவர் சட்டப்படி நடந்து தான் ஆகவேண்டும். மேலும் அங்கு அவர் நிறைபேருக்கு கீழ் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை வேறு.
அவருக்கு கீழ் 10 பேர் பணிபுரிகின்றனர். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு கூட ராம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். வேறு வழியே இல்லை.

இப்படி இருக்கும் போது தான், அக்கெண்ட்ஸ் டிபார்ட்மெண்டிற்கு புதியதாக ஒரு அஸிஸ்டென்ட் மேனேஜர் (Asst.Accounts Manager) ஒருவர் சேர்ந்தார். சில மாதங்கள் அவர் இருக்கின்ற இடம் கூட தெரியாமல் தான் இருந்தார். மேலும் அவர் C. A பரிட்சைக்கு படித்து கொண்டு இருந்தார் கம்பெனி பணத்தில். ஆபீஸில் C.A Main Examination க்கு. G.M Finance வரும் போது மிகவும் வேலை செய்வது போல் நடிப்பார். அவரைப்பற்றி கம்பெனியில் நல்ல அபிப்பிராயமே கிடையாது. யாரும் அவரை மதிப்பதில்லை. அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதே இல்லை. அவர் பெயர் தங்கராஜ். தமிழ் காரர்.

அந்த கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர்‌ ( Managing Director) ஒரு தமிழர் என்ற காரணத்தால் அவருடைய சிபாரிசின் பேரில் இராமநாதபுரம், மதுரை மாவட்டத்தில் இருந்து நிறைய பேர் வேலைக்கு சேர்ந்திருந்தார்கள். ‌ நிறைய ஜால்ராக்கள் அதிகம். என்ன செய்வது தனியார் கம்பெனியில் இதெல்லாம் சகஜம். இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போகத்தான் வேண்டும்.

அவர்களில் நிறைய பேர் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.‌ ஏன் வேலை செய்யவில்லை என்றால் M.D வீட்டிற்கு வேலை செய்ய சென்றதாக கூறுவார்கள். அவர்கள் செய்ய வேண்டிய வேலையையும் ராம் தான் செய்ய வேண்டும். இதை பற்றி Personnel Department இல் சொன்னால் அது எல்லாம் மேலிடத்து சமாச்சாரம். அனுசரித்து நடந்து கொள்ள சொல்வார்கள் ராமிடம். இப்படி நிறைய பாலிடிக்ஸ் கம்பெனியில்.

இதனால் Over time ( O.T ) செய்ய வேண்டிய சூழ்நிலை வேறு. அதற்கு எந்த வித ஊதியமும் நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படாது. தேவை என்றால் சில நாட்கள் Compensation Leave எடுத்துக் கொள்ள லாம். அதுவும் ராமிற்கு தேவைப்படும் போது கிடைக்காது. கம்பெனி பாலிஸி, " வேலை செய்பவனுக்கு வேலை கொடு. வேலை செய்யாதவனுக்கு கூலி கொடு ". இப்படி இருக்கும் போது தான் அந்த கசப்பான சம்பவம் நடந்தது.

ஒவ்வொரு மாதமும் லேபர் ஆக்ட் படி, 7 ஆம் தேதிக்குள் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். கம்பெனி அப்பொழுது மிகவும் கடினமான சூழ்நிலையில், பணக்கஷ்டத்தில் இருந்ததால், ஒவ்வொரு மாதமும் சம்பளம் கொடுக்க மிகவும் கஷ்டப்பட்டது . எப்படியாவது பேங்கில் கடன் வாங்கி, ( Letter of Credit ) கொடுத்து சம்பளம் கொடுக்க என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையும் செய்து சம்பளம் கொடுத்தனர்.

சராசரியாக ஒரு ஷிப்ட் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே 40 முதல் 45 இலட்சம் ரூபாய் வரை பணம் தேவைப்படும் . முதல் ஷிப்ட் காலை 8 முதல் 2 வரை; இரண்டாம் ஷிப்ட் மதியம் 2 முதல் இரவு 10 வரை; மூன்றாவது ஷிப்ட் இரவு 10 முதல் அடுத்த நாள் காலை 6 வரை. ஜெனரல் ஷிப்ட் காலை 8 முதல் மாலை 5 வரை.

அன்று பணம் வந்தது சுமார் 12 மணிக்கு மேல் இருக்கும். சிறிது நேரம் கழித்து அக்கெண்ட்ஸ் மேனேஜர் ஆடிட் டிபார்ட்மெண்ட் வந்து பணம் பில்லிங் செய்ய வரச் சொல்லி சொன்னார். அதற்கு Stuffing
என்று பெயர். அன்று என்று ‌General Manager ராமிடம் வந்து ஒரு முக்கியமான ரிப்போர்ட் ஒன்று மிகவும் அவசரம் . அவசரமாக ரிப்போர்ட் டை தயாரித்து கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அப்பொழுது தான் Assistant Manager பணம் பில்லிங் செய்ய அக்கவுண்ட் ஸ் டிபார்ட்மெண்ட் வரசொன்னார்‌. ராம் தான் வரநேரம் ஆகும் ‌. ஏனெனில் ஜி.எம் அவசரமாக ஒரு ரிப்போர்ட் கேட்டு இருக்கிறார். எனவே அதை முடித்து விட்டு தான் வருவதாக கூறினார். நீங்கள் ஒன்று செய்யுங்கள். மற்ற ஸ்டாப்யை அழைத்து செல்லுங்கள். தான் ஜி.எம் கொடுத்த வேலை முடித்து கொடுக்க எப்படியும் 1 மணி நேரத்திற்கு மேல் ஆகும். அதை முடித்து விட்டு உடனே வருகிறேன் பணம் பில்லிங் செய்ய என்று கூறினார்.

இல்லையெனில் ஜி. எம் இடம் சொல்லி பர்மிஷன் வாங்கி வாருங்கள். உங்கள் வேலையை முடித்து விட்டு பிறகு ஜி.எம் ரிப்போர்டை தயாரிக்கிறேன் என்றார்.
ஜி.எம் க்கு தங்கராஜை பிடிக்காது. அவர் சொன்ன எந்த வேலையையும் சரிவர செய்ய வில்லை. அதனால் ஜி.எம்மிடம் அவருடைய பருப்பு வேகாது என்று தெரியும் .

அப்பொழுது Assistant Manager ( Accounts) சரி நான் கேட்டால் அவர் விடமாட்டார். எனவே நீங்கள் அதை முடித்து விட்டே பிறகு உடனே வாருங்கள் என்று சொல்லி மற்ற ஸ்டாப்களை அழைத்து சென்று விட்டார். ஜி.எம் கேட்ட ரிப்போர்ட் டை தயார் செய்து கொண்டு இருக்கும் போது, வி. பி ( Vice President ) M.D Meeting க்கு அவசரம் அவசரமாக போக வேண்டும் என்று அவர் ஒரு ரிப்போர்ட் கேட்டு வர, ராம் உடனே ஜி.எம் ஒரு ரிப்போர்ட் கேட்டதை கூற, அதற்கு V.P ஜி.எம் ரிப்போர்ட் அவசரம் இல்லை.‌ முதலில் நான் சொன்ன வேலையை செய். பிறகு அதை கவனி என்று கூறி விட்டு வேகமாக போய் விட்டார்.

இதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது. ராமிற்கு என்ன செய்வது இந்த சூழ்நிலையில் என்று தெரியவில்லை. இருந்த போதிலும் ஜி.எமிற்கே பாஸ் வி.பி என்பதால் ஜி.எம்மிடம் சென்று, விவரமாக கூற அவர் நீங்கள் வி.பி கேட்ட ரிப்போர்ட் டை முதலில் தயாரியுங்கள் . என்னுடையதை பிறகு பார்த்து கொள்ளலாம். ஏனெனில் எம்.டி மீட்டிங் மிகவும் முக்கியம் . நான் கூட அதற்கு போகவேண்டும் என்று கூறினார். சரி என்று அக்கவுண்டஸ் மேனேஜர்க்கு இன்டர் காம் மூலம் இந்த தகவலை சொல்லி தான் வருவதற்கு நேரம் ஆகும் என்று சொல்லி விட்டார் ராம். பிறகு வி.பி கேட்ட தகவல்களை தயாரித்து கொடுக்க மேலும் சிறிது நேரம் ஆனது. நேரம் ‌ மதியம் இரண்டு மணிக்கு மேல் ஆயிற்று ரிப்போர்ட் தயாரித்து கொடுக்க. ராம் சாப்பாட்டிற்கு கூட செல்ல வில்லை . ரிப்போர்ட் டை முடித்து விட்டு உடனே சாப்பாட்டிற்கு கூட போகாமல் உடனே அக்கவுண்ட் ஸ் டிபார்ட்மெண்ட் நோக்கி போனான் . நேரம் 2.30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. இருந்த போதிலும் அக்கவுண்டஸ் மேனேஜரிடம் சென்று நிலவரம் குறித்து கேட்டு பிறகு தேவையெனில் உதவி செய்யலாம் என்று யோசனை செய்து அங்கு ராம் சென்றார்.

அங்கு சென்று மேனேஜர் தங்கராஜிடம் , " இப்போது தான் வி.பி வேலை முடிந்தது . பணம் பில்லிங் செய்தாகி விட்டதாக. இல்லை இன்னும் வேலை முடியவில்லையா ? ஏதாவது வேலை இன்னும் பாக்கி இருந்தால் சொல்லுங்கள் . செய்கிறேன் " என்று கேட்டார்.‌ தங்கராஜ் மிகவும் கோபமாக அந்த Un Parliament Words ஐ பேச , அந்த வார்த்தையை கேட்ட ராம் உடனே, இவனும் கோபத்தில் , திருப்பி அதே வார்த்தையை கூறி விட்டு அங்கிருந்து வேகமாக வந்து விட்டார். அந்த நேரத்தில் அங்கு நிறைய பேர் ஒர்க்கர்ஸ் மற்றும் சம்பளம் வாங்க வந்தவர்கள் , அதை கேட்டு விட்டு திகைத்து நின்றனர்.‌ மனிதவள மேம்பாட்டு துறை அதாவது Personnel Department ஆட்களும் அங்கு அப்பொழுது இருந்தார்கள்.

தங்கராஜூக்கும் ராம் மிற்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தை எல்லோரும் கூடிய வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பிறகு அங்கு இருந்தால் அவர்களுக்கு ஏதாவது நாளை பிரச்சினை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்று அந்த இடத்தில் இருந்து அப்படியே நகர்ந்து சென்று விட்டார்கள் பிறகு சம்பளம் வாங்க வரலாம் என்று நினைக்கொண்டு.‌ அப்படி என்ன தான் அக்கெண்ட்ஸ் மேனேஜர் கூறினார் ? அதற்கு ராம் என்ன பதில் கொடுத்தார் ? அவர்கள் ஏன் திகைத்து நின்றார்கள் ? அதன் விளைவு என்னவாக இருக்கும் ? அவன் மேல் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் ? அவன் சொன்னது சரிதானா ? அவனுடைய வேலை போகுமா ? அவனுக்கு உரிய‌ ஞாயம் கிடைக்குமா ? இதற்கெல்லாம் யார் பதில் சொல்லப் போகிறார்கள் ? காலம் தான் பதில் சொல்ல முடியும்.


" ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும் " என்று ஒரு பழமொழி உண்டு. என்ன நடக்கப்போகிறது ? யாருக்கு தெரியும் ? ஆனால் ராம் சொன்ன‌ அந்த வார்த்தை மட்டும் தவறில்லை என்று அவன் மனதிற்கு தோன்றியது. தங்கராஜ் அந்த Unparliamentary Words பயன்படுத்தவில்லை என்றால் அவன் ஏன் அந்த வார்த்தையை சொல்லியிருக்க போகிறார் ? முதலில் அந்த வார்த்தையை பேசியதே தங்கராஜ் தான். இது வரையில் அவருடைய பதவிக்கு மரியாதை கொடுத்து இருந்தார். இனி எதற்கும் தங்கராஜூக்கு மரியாதை கொடுப்பதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டார்.




(தொடரும்)
 
Top