Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தன்மானம் அல்லது சுயமரியாதை (Self-respect )

Advertisement

இந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

  • ஆம்.

    Votes: 1 100.0%
  • இல்லை.

    Votes: 0 0.0%
  • சுவாரசியமாக இருக்கிறது.

    Votes: 0 0.0%
  • சுவாரசியமாக இல்லை.

    Votes: 0 0.0%

  • Total voters
    1

V R K

Member
Member
Trailer.

ராமிற்கு மனசே ஆறவில்லை. என்ன தான் தனியார் கம்பெனியில் வேலை செய்திருந்தாலும், யார் வேணும்னாலும் எதுவேண்டுமென்றாலும் பேசலாமா? எல்லோரும் பணத்திற்கு தான் வேலை செய்கிறார்கள் ‌ மற்றவர்களை இப்படி கண்டபடி பேசும் அதிகாரம் யார் அவர்களுக்கு கொடுத்தது? வாய் இருக்கிறது என்று எதுவேண்டுமானாலும் பேசலாமா? அப்படி நான் என்ன தவறு செய்தேன். ஒருவரிடம் கைகட்டி வேலை செய்தால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போகவேண்டும் என்று ஏன் நினைக்கிறார்கள்? தன்மானம் இல்லாமல் வாழ முடியுமா? அல்லது தன்மானத்தை பணத்திற்காக அடகு தான் வைக்க வேண்டுமா? அப்படி பட்ட வாழ்க்கை வாழாத்தான் வேண்டுமா? பணம் தான் வாழ்க்கையா? பணத் தேவை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் பணமே வாழ்க்கை இல்லை. அப்படி தான் வாழ வேண்டும் என்றால் அந்த வாழ்க்கை எனக்கு தேவையில்லை. அந்த Asst. Manager என்ன வார்த்தை சொல்லி விட்டார்? அது எவ்வளவு பெரிய வார்த்தை? அப்படி பார்த்தால் அவரும் என்னைப் போல் ஒரு தொழிலாளி தானே? இதே மாதிரி நான் கூறியிருந்தால் அவர் ஏற்றுக் கொள்வாரா?. இதையெல்லாம் நினைக்க நினைக்க மனசு ஒரு நிலையில் இல்லை. எப்படியாவது இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும். இதையெல்லாம் பற்றி நினைக்க நினைக்க மன உலைச்சல் தான் அதிகமாகிறது.‌ மனநிம்மதி தான் இல்லாமல் போகிறது. குடும்ப சூழ்நிலை வேறு சரியில்லை. அவருடைய தந்தை ஒய்வு பெற்ற Deputy Collector. வருகின்ற பென்ஷன் பணத்திலும், இவனுடைய சம்பளத்திலும் தான் குடும்பம் நடக்கிறது அதுவும் மிகவும் கஷ்டப்பட்டு. எனவே வேலையை விடமுடியாது உடனே. ஆனால் அதற்காக யார் என்ன திட்டினாலும் அதை கேட்டுக் கொண்டு வேலையை யும் பார்க்க முடியாது. தன்மானத்தை இழந்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையே இல்லை. இதையெல்லாம் நினைக்க நினைக்க அவனுக்கு தலைவலி தான் வந்தது. இதற்கு நடுவில் Personnel Department இல் கூப்பிட்டார்கள் நடந்த சம்பவம் பற்றி விசாரிக்க. Accounts Department typist கணேஷ் வந்து , " சார் உங்களுக்கு விஷயம் தெரியுமா? நீங்கள் எவ்வளவு நல்லவர். உங்களை வேலையை விட்டு நீக்க சஸ்பென்ட் ஆர்டர் டைம் செய்ய சொல்லி இருக்கிறார்கள். Asst. manager personal department போயிருக்கிறார். எனக்கு மனசே கேட்கவில்லை. " ஏதாவது செய்யுங்கள் என்று B.P ஏற்றி விட்டு சென்று விட்டான். ராம் மிகவும் குழப்பமான சூழ்நிலையில் இருந்தான். நிலைமை கைமீறி போய்விட்டது என்று புரிந்தது. என்ன செய்வது? யாரை பார்ப்பது? என்ன செய்தால் இந்த சூழ்நிலையில் இருந்து வெளிவர முடியும்? ஒன்றுமே புரியவில்லை. தலைக்கு மேலே வெள்ளம் போய்விட்டது. நான் இதில் இருந்து தப்பமுடியுமா? காலம் தான் பதில் சொல்ல முடியும். நடப்பது நடக்கட்டும். எல்லாம் நன்மைக்கே என்று நினைப்போம். உரலுக்குள் தலை கொடுத்தாகி விட்டது. உலக்கைக்கு பயந்தால் முடியுமா? தன்மீதி எந்தவித தப்புமில்லை. ஆனால் வேலை செய்வதோ, தனியார் கம்பெனியில். தனக்கு சரியான ஞாயம் கிடைக்குமா? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். கதை விரைவில்...
 
Top