Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தன்மானம் (அல்லது) சுயமரியாதை ( Self-respect )

Advertisement

V R K

Member
Member
தன்மானம் ( அல்லது ) சுயமரியாதை ( Self-respect )
 
அனைவருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துகள்.

எல்லோரும் காதல் கதைகளையோ எழுதுகிறார்கள்.ஒரு மாறுதலுக்காக நான் ஒரு வாழ்வியல் எதார்த்த்தை எனது அனுபவத்தில் நான் கேட்க/ பார்த்தை எழுதலாம் என்ற நினைப்பில் ஆரம்பித்தது தான் இந்த " தன்மானம் " என்ற கதை. ஒரு மனிதனுக்கு தன்மானம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த கதையின் மூலம் சொல்லப்போகிறேன்.

ஒரு மனிதன் வாழ்வில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் தன்னுடைய தன்மானத்தை மட்டும் எதற்காகவும் இழக்கக் கூடாது. தன்மானத்தை இழந்து வாழும் வாழ்க்கை, வாழ்க்கையே அல்ல. அடிமை வேலை பார்த்தாலும், தன்மானம் அல்லது சுயமரியாதை மிகவும் முக்கியம். இந்த கருத்தை ஒட்டியே இந்த கதை அமையப் போகிறது. அப்படி பட்ட சூழ்நிலையில் கதையின் நாயகன் ராம் அதை எவ்வாறு எதிர்கொள்கிறார். பிறகு என்ன நடந்தது? அவர் தன்மானத்தை காப்பாற்ற என்னவெல்லாம் செய்தார்? அவர் வெற்றி பெற்றாரா? படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

நான் இந்த தளத்திற்கு புதியவன். எனவே உங்களுடைய ஆதரவு தேவை.
நிறை, குறைகளை பதிவு செய்யுங்கள்.

ஒரு குட்டி டீச்சர்:

" ராம் நீங்கள் என்னோடு ஜெனரல் மேனேஜர் பைன்ஸ்ஸை பார்க்க வர வேண்டும் " கோபத்துடன் சொன்னார் தங்கராஜ்.

" எனக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை " என்று ராம் கூறினார்.

" ஒரு சின்ன சார்ஜ் மெமோ மட்டும் கொடுக்கிறேன். Accept it " என்றார் தங்கராஜ் மாடிப்படியில் ஏறும் போது.

" உங்களால் கொடுக்க முடிந்தால் கொடுத்து பாருங்கள். Accepting (or) not accepting the memo is my decision . But you should honestly tell to G.M the Same Words, what you have told me " Ram said.
 
Last edited:
Top