Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-24

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-24

காலை மணி ஆறு பொழுது விடிய ஆரம்பிக்க , கொடைக்கானலில் குளிர் விடாமல் வாட்டிக்கொண்டிருந்தது. மெல்ல கண்ணை விழித்தான் பூவரசன், சன்னல் வழியே இயற்கையை பார்த்தான், ஆனால் அவனால் ரசிக்க முடியவில்லை. கடவுளே இன்று எப்படியாவது பொம்மியை பார்த்திடனும் என் நம்பிக்கையை பொய்யாகிடாத ஆண்டவா.

தன் கைகளை தேய்த்து சூடாகினான். தன் அக்காவை செல்லில் அழைத்தான், சொல்லு பூவரசு, பொம்மி கிடைச்சிட்டாலா .

அக்கா, தேடிட்டு இருக்கோம், இங்க அடிக்கடி சிக்னல் கிடைக்கல , நீ போன் கிடைக்கலன்னு பயப்படாதா , அம்மா எப்படியிருக்காங்க.

ம்ம் நல்லா இருக்காங்கடா, பூவரசு பார்த்து இருங்க புது இடம், ஒழுங்கா சாப்பிடுடா சரியா,,, சாப்பிடாம இருக்கிறதா பரதா சொல்லுறான்.

சரிக்கா வைக்கட்டா.

ரூமின் கதவை யாரோ தட்ட , கதவை திறந்தான் பூவரசன்.

சார் நான் செல்லப்பா, கைட்டு கேட்டிங்க சொன்னாங்க
உள்ளே வாங்க, அவரை உட்கார வைத்து காபி சொன்னான் ரிஸப்ஷனில்.

தான் வந்த விவரத்தை முழுவது சொல்லி முடித்தான் செல்லப்பாவிடம்.... மொத்தம் எத்தனை கிராமம் இருக்கு.

சார் கொடைக்கானல் சுத்தி நிறைய கிராமம் இருக்கு. ஆனா விபத்து நடந்த இடத்திலிருந்து பார்த்தா ஐந்து சின்ன கிராம்மா மலைவாழ் மக்கள் வாழறாங்க. அங்க போய் கேட்கலாம். மத்த இடத்தில எல்லாம் போன் , வாகனம் வசதியிருக்கும் அவங்க ஆஸ்பிட்டல சேர்த்திருப்பாங்க. இந்த மலைவாசிங்க தான் கொஞ்சம் உள்ள இருங்காங்க.

சரிங்க அண்ணா, கூட இரண்டு ஆள் சேர்த்து அங்க போய் தேடுங்க.

மதியம் உங்க கூட நான் வரேன். இப்ப கொஞ்ம் வெளிய போற வேலையிருக்கு.

செல்லப்பா விடைபெற்று செல்ல, பரதாவை எழுப்பி ரெடியாகி திருமுர்த்தி எஸ்டெட்ஸ் நோக்கி பயனித்தார்கள்.
செக்குயிரிட்டி கிட்ட அனுமதி வாங்கி உள்ளே சென்றார்கள்.மாளிகை போன்ற வீடு அமைப்பு இருந்தது. பத்துக்கு மேல் வேலையாட்கள் அங்காங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். பாஸ்கரனின் பி.ஏ அவர்களை உள்ளே அழைத்து சோபாவில் உட்கார வைத்தார்.

சிறிது நேரத்தில் பாஸ்கரன் அவர்கள் எதிரே உள்ள சோபாவில் உட்கார்ந்தான், பார்க்க கொஞ்சம் புசின போல் உடம்பு 45 வயது இருக்கும்.வாங்க என்ன விஷியமா பார்க்க வந்திங்க.

சார் இங்க நடந்த மெடிக்கல் கேம்பல சுந்தரி....

பெயர கேட்டவுடனே பாஸ்கரன் சொல்ல ஆரம்பித்தான் வெள்ளையா , அழகாக சும்மா சினிமா நடிகையாட்டும்....

அவ என் பொண்டாட்டி , நீ அடுத்த வார்த்தை பேசின வாயிருக்காது கையை நீட்டி எச்சரித்தான் பூவரசு.

ாஸ் என்னைய தப்பா நினைக்காதிங்க, ரொம்ப சுறுசுறுப்பா வேலையை பார்த்தாங்க அதனால சொல்லுங்க அவங்களுக்கென்ன.
அவங்க மிஸ்ஸிங், ஏன் சீப் டாக்டர் சொல்லலையா உங்கிட்ட.
ஆமாம் சொன்னாரு ஆனா உங்க ஓய்ப் தெரியாது, வேற யாரோ நினைச்சேன் ஸார்.
அவங்க சப்போஸ் இங்கு வந்தா எங்கிட்ட உடனே சொல்லுங்க அவங்க தங்கியிருந்த ஹோட்டல் பெயரை சொன்னான் பூவரசன்.
என்ன குடிக்கிறீங்க காபி இல்ல டீ.
பரவாயில்ல சார் நாங்க கிளம்பறோம் .மதிய வேளையில் செல்லப்பாவை அழைத்து கிராமங்களை நோக்கி பயனித்தார்கள்.
ஒவ்வொரு இடமாக விசாரிக்க, பொம்மியை பற்றி தகவல் கிடைக்கவில்லை. இரவு ரூமை வந்து சேர்ந்தார்கள் பூவரசனும், பரதாவும்.
இன்னிக்கு நாலு கிராமம் போயிட்டு வந்தாச்சு மாமா, ஆனா பொம்மி பத்தி ஒண்ணுமே தெரியிலே மாமா. செல்லப்பா என்ன சொல்லுறான்னா ஆவுட்ர் ஏரியாவிலும் தேடனா கிடைக்கலாம் சொன்னான்.
மாமா , இப்பதான் உனக்கு குழந்தை பொறந்திருக்கு நீ போய் மதனிய பாரு. நான் இங்க இருந்து பொம்மிய தேடுறேன். அவ கிடைச்சா வரேன் இல்ல எங்கனா குதிச்சு செத்து போறேன் அக்காவியும் , அம்மாவியும் பார்த்துக்கோ.
என்னடா பேசற லூஸு மாதிரி, உன் நல்ல மனசுக்கு ஒண்ணும் ஆகாது, நீ எதுவும் எங்கிட்ட மறைச்சது மாப்பிள்ள, சுந்தரி மேல நீ வச்ச காதலே உன்னைய அவகிட்ட சேர்த்திரும். அவள பார்த்து உடனே சண்டை போடாதே, உன் மனசல வச்சிருக்க அன்பை மறைக்காம சொல்லு.
எனக்கு கோவம் வந்தா கண்ட்ரோல் பண்ண முடியில, தீடிரென்று பூவரசன் “ என்ன மறைக்காமவா, மாமா இப்படி யோசிச்சா என்ன, பொம்மி யாருக்கும் தெரியாம மறைஞ்சு இருந்தா.
என்ன சொல்லுற மாப்பிள்ள....
நாம்ம மேலோட்டமா கேட்கிறோம், அவங்க யாருக்குண்ணா பயந்து மறைந்து இருந்தா... இவ்வளவுநேரம் பொம்மி நம்மல தொடர்பு செய்திருக்கும், வேற யாராவது கடத்தி வச்சிருந்தாங்கன்னா.
என்ன மாப்பிள்ள இப்படி பேசற, பயமுறுத்தா , டாக்டர போய் யாராவது கடத்துவாங்களா.
இந்த பொம்மி ஏதாவது வம்பு பண்ணிருந்தா, அவ சும்மாவே என்னைய காலி பண்ணுவா, ஏதாவது பிரச்சனையில மாட்டிருப்பாலோ தோணுது. நாளைக்கு போற இடத்தில கொஞ்ச நேர அங்கதங்கி விசாரிக்கணும்.

அடுத்த நாள் மூவரும் கிளம்பினார்கள். செல்லப்பா நீ இரண்டு ஆள அனுப்பி பக்கத்து ஊருல நடக்கிறத கவனிக்க சொல்லு. நம்ம அப்பறம் போலாம்.
சரிங்க சாரு, ரவி , குமாரு நீங்க போய் அங்க என்ன நடக்குது கவ
னிங்க நாங்க வரோம்.

போன இடத்தில் தரவா தேடி பார்த்தார்கள் பொம்மி பத்தி எதுவும் கிடைக்கவில்லை. இங்க எல்லோரும் அவங்க வேலையை பார்க்கிறாங்க. நம்ம போய் அடுத்த ஊருல தேடலாம்.

காரில் ஏறினாங்க, ஒரு இடத்தில் டீ குடிக்க நிறுத்தினார்கள். டீ கடையில் ஓடிய சுச்சுவேஷன் பாட்டை கேட்டு தன்னை மறந்தான்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே



பூவா, இந்த பாட்ட கேளேன் நமக்காக எழுதினா மாதிரி இல்ல, நீ இந்த மாதிரி ஃபில் பண்ணுவியா மாமா. காரில் எப் எம் கேட்டார்கள்

தலையில் நறுக்குன்னு கொட்டிவிட்டு , வயசு என்னாகுது பொம்மி இப்பதான் 12வது முடிச்சிருக்க, புத்திய பாரு இப்படி பேச கூடாது சொன்னேன் இல்ல
.
ஆமாம் அப்பறம் என்ன பேசறது. காலையில் என்ன சாப்பிட்ட, மதியம் என்ன சாப்பிட்ட, உங்க அம்மா எப்படியிருங்காங்க, உங்க ஊருல மழை பெய்யுதா இப்படி பேசவா மாம்மா
.
பூவரசன் இதை கேட்டு சிரிக்க, நல்லா தான் இருக்கு பாட்டு என்று மனதில் நினைத்தான். சரி தியேட்டர் வந்திடுச்சு இறங்கு.

தியேட்டர் உள்ளே நுழைந்தார்கள், என்னடி பேய் படத்திற்கு கூட்டிட்டு வந்திருக்க.

நீதான மாமா , உனக்கு டாக்டருக்கு சீட்டு கிடைச்சிருக்கு உன்ன சினிமாவுக்கு கூட்டுட்டு போறேன் சொன்னே.

அதுக்கு இந்த படமா, பேய்ன்னாவே பயப்படுவ சரி வா.

தேங்கஸ் மாமா, படம் ஆரம்பித்தது, இங்கிலிஷ் படம், மாமா எனக்கு பயமாயிருக்கு சொல்லி அவன் தோளிலில் சாய்ந்து முகத்தை அவனில் புதைத்தாள்.

ஐய்யோ தெரியாத கூட்டிட்டு வந்திட்டேனே, எனக்கு மூச்சு முட்டுதே.
ஏய் பொம்மி, பேய் போயிடுச்சு படத்த பாரு.

போயிடுச்சா மாமா அவன் காதில் இதழ் உரச மெதுவாக பேசினாள்.

பூவரசன் கூச்சத்தில் நெளிய,நகர்ந்து உட்காருடி.

அடுத்த கட்டத்தில் பேய் வர,மாமா நான் உன் கையை பிடிச்சுக்குவா பிளிஸ்.

புடிச்சு தொலை. சிறிது நேரத்தில் படம் சுவாரஸ்மா போய் கொண்டிருந்தது. திரும்பி பூவரசனை பார்த்தாள், படமா பார்க்கிற நினைத்து சிரித்தாள்.

அம்மா என்று அலற, என்ன மாமா என்னாச்சு.

என்னடி பண்ண, நான் ஓண்ணு பண்ணல மாமா
என் தோடையில ஏன்னடி கிள்ளுன.

நானா பாரு மாமா என் கை உன் கையைதான் பிடிச்சிருக்கு எப்படி நான் கிள்ளுவேன். ஏய் பொய் பேசாதடி.

மாமா பக்கத்தில யாராவது உன்னைய கிள்ளிருப்பாங்க.

பக்கத்து சீட்டு காலியாதான் இருக்கு , மாமா படத்துல பார்த்த பேய் வந்திருக்குமோ, நீ வேற இப்ப செம அழகாக இருக்கு நைட் வந்து உன்ன மேட்டர் பண்ணிட போது.

உன்ன அவ காதபிடிச்சு திருக, மேட்டர்ன்னா என்ன தெரியுமா உனக்கு இந்த வயசில பேச்ச பாரு.அப்படியே உங்க அப்பனே நீ.

அந்தாள பத்தி ஏன் பேசிற மாமா,, கையை எடுத்து முகத்தை திருப்பினாள். கொஞ்ச நேரத்தில் இடுப்பில் கிள்ள.

பூவரசன் , சுந்தரியை பார்த்து முறைத்தான், அய்யோ மாமா , என்ன முறைக்கிற,அதுக்கு அந்த பேயே தேவலாம்.

திரும்புவம் பூவரசனை கட்டிக்கொள்ள,அவளுடைய பெண்மை அவன் உணர்ச்சியை தூண்டியது. பேசாத நீ என் மடியில் உட்கார்ந்துக்கோ,

என்ன மாமா இப்படி சொல்லிட்ட , தப்பு மாமா, அப்படியெல்லாம் உட்கார கூடாது, நான் அந்த மாதிரி பொண்ணுயில்ல.

பின்ன பேயே படத்தில வரல, கட்டிக்கிற.

மாமா பேய் வரத்துக்கு முன்னாடி நான் கண்ணை முடிக்கிட்டேன்.

விவரந்தான், இன்டர்வெல் வந்திடுச்சு ஏதாவது வாங்கிதரேன் வா என்று சொல்லி விட்டுக்கு கூட்டிட்டு காரில் போய்க்கொண்டிருந்தார்கள். டேய் மாமா நீ ரொம்ப மோசம் பாதி படத்தில என்னைய கூட்டிட்டு வந்திட்ட, அதுவுமில்லாம பின்னாடி சீட்டுல உட்கார வச்சிட்ட. எனக்கு பயமாயிருக்கு மாமா.

யாருக்கு உனக்கு பேயே உன்ன பார்த்து ஓடிடும். யாருக்கிட்ட காது குத்தற,இனிமே இப்படி பண்ணுவியா
.
மாட்டேன், நான் முன்னாடி வரவா.

வந்து தொலை, அமைதியா இருக்கனும் சொல்லிட்டேன்.பாதி தூரத்தில் தூங்கி அவன் மேல் விழுந்தாள். பூவரசன் அவளை தன் தோளில் சாய்த்து மெதுவாக காரை ஓட்டினான். என்ன வம்பு பண்ணுறா.
 
Top