Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-10

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-10

சாமியாரே ஒரு கிஸ்ஸுக்கு இவ்வளவு போராட்டம்மா.

ஏய் அக்கா 12 மணிக்கு பொண்ணை பார்க்க அலோ பண்ணறாங்கன்னா என்மேல உள்ள நம்பிக்கைதான பொம்மிம்மா.அக்காகிட்ட பர்மிஷன் வாங்கித்தான் உன்னைய பார்க்க வந்தேன்.

அடக்கடவுளே சைட் அடிக்க கூட நீ துப்பில்ல மாமா.

அது நீ மாமாவிட்டுல இருந்தேன்னா தூக்கிட்டு வந்திருக்க மாட்டேன்.

நம்பிட்டேன் போ.

சரி நீ ஏன் எப்போ கோவமா இருந்தாலும் கட்டிலுக்கு அடியில வந்துடற

சொல்லுவேன் ஆனா திட்டக்கூடாது. பிராமிஸ்

சரி சொல்லு.

மாமா, உன் செல்போன் டார்ச்சு ஆன் செஞ்சி கட்டில்ல அடி. அப்படியே செய்தான் பூவரசன். ஏய் என்னடி இது.

, கட்டுலுக்கு அடியில் போட்டோ ஓட்டியிருந்தா. அதுவா இது நீயும் நாணும் சின்ன வயசில எடுத்த போட்டோ, இது நான் ஸவன்த் படிக்க சொல்ல பர்ஸ்ட் எடுத்த கப்பை உன்கிட்ட கொடுத்தது.அப்பறம் வயசு வந்தபோது நீ என் கழுத்தில செயின் போட்டியே அப்ப எடுத்தது.கொஞ்சம் மேல டார்ச் அடி,

அதை பார்த்து அவள் தலையில் கொட்டினான், இது என்ன வேலை இந்த வயசுல எரும மாடே.

திட்ட கூடாது சொன்னேனே, பின்ன திட்டாத உன் கொஞ்சனமா,

மாமா நான் உன்ன கொஞ்சனதான இந்த போட்டோ, பத்தாவது டூர் முடிச்சு பஸ்ஸ விட்டு இறங்கி பூவரசனுக்கு முத்தம் கொடுத்த போட்டோ.

எப்படி எடுத்தடி போட்டோவ.

அதுவா பூவா, டூர் போனோமில்ல கேமிரா கையிலே வச்சிருந்தான் என் பிரட்ண்டு யாருக்கும் தெரியாம போட்டோ எடுத்து எனக்கு கொடுத்தான்.

ஆனா உண்மையை சொல்லு நீ கண்ணை மூடி ரசிச்சுட்டு , கோவப்படுற மாதிரி ஆக்ட் வேற, அண்ணிக்கு என்ன அடி அடிச்ச.

யாரு சொன்னது, எனக்கு கோவம் தான்.

அப்படியா அந்தப்பக்கம் போட்டோவ பாரு , மொத்தம் அஞ்சு போட்டோ கொடுத்தான்.

ஆஹா சிரித்தான், பூவரசன் போன் ரிங் ஆக, டைம் ஆயிடுச்சு பரதா மாமா கூப்பிடறாரு கிளம்புறேன்டி, வெளியே வந்தார்கள் இருவரும்.

வரட்டா பொம்மி. அவள் முகத்தை சீரியஸா வைக்க.

இன்னும் மூணு வருஷமுடி, கல்யாணம் முடிச்ச அண்ணிக்கு நைட் தரேன் பொம்மிம்மா, என் செல்லமில்ல, ம்ம் மாமா வரட்டா.

நாளைக்கு பேச்சை மாத்திடுவியா மாமா, இல்லடா இந்த ஜென்மத்தில நீதான் என் மனைவி இல்லைன்னா கல்யாணம் செஞ்சிக் மாட்டேன் போதும்மா. வெளியே கிளம்பினான் பூவரசன்.

அப்பறம் என்ன சுந்தரி உன் மாமாணுக்கும் உனக்கும் நிச்சயம் தானே.

நடந்துச்சு சங்கரி ஆனா மாமாவுக்கு இஷ்டமில்லாமல். என் கனவு அடுத்த நாள் காலையிலே பூஸ்வானம் ஆயிடுச்சு.

அடுத்த நாள் காலையில் மணி 7.30 பூவரசன் போன் ஓலிக்க அதை எடுத்தான், சொல்லுக்கா .

பூவரசு பவியை காணோம்.

என்னக்கா சொல்லுற, ஆமாண்டா வீடு முழுக்க தேடிட்டேன் கானோம்டா, நீ வா எனக்கு பயமாயிருக்கு. தோ வாரேண்.

மாமா பவியை கானோமா, நம்ம பசங்களை விட்டு தேட சொல்லு நான் கிளம்பறேன்,சரிடா மாப்பிள்ள நீ போ நான் பின்னாடியே வரேன்.

பெரிய வீட்டுக்குள் நுழைந்தான். அக்கா , அவ பிரண்டுக்கு போன் போட்டு கேட்டியா, எல்லாம் சுந்தரி கேட்டாடா, அவ அங்க வரலியாம்.

பரதா வீட்டுக்குள் நுழைந்தான், மாப்பிள்ளை கொஞ்சம் வெளிய வா.

என்ன மாமா, பவி நம்ம பக்கத்து ஊர் முருகன் கோவில்ல திருட்டு கல்யாணம் பண்ணிச்சாம்,

என்ன சொல்லுற மாமான் சட்டையை பிடிக்க, ஆமா பூவரசு பையன் யாரு தெரியுமா உன் மாமானோட மச்சான் சரவணபாண்டி.

பூவரசுக்கு கோவம் வர வண்டியை விடு மாமா அவனை கொண்ணா தான் என் கோவம் தணியும்.

பூவரசு இப்ப எல்லாம் முடிச்சு என்ன செய்ய விடு.

மாமா இந்த பொண்ணுக்கு புத்தியில்ல யார கல்யாணம் செய்யனும் விவஸ்தயில்ல. பூவரசன் வீட்டுக்கு ஊர் பிரஸிடண்ட் மற்றும் ஊர் பெரியவர்கள் வர , வாங்க என்று உள்ளே அழைத்தான். அனைத்தும் கேட்டுக் அழுது கொண்டு நின்றாள் ஆனந்தவல்லி

அக்கா கண்ணை துடை, எல்லோரையும் வாங்க சொல்லு, அப்படியே அழைத்தாள். அனைவரும் உள்ளே வந்து அமர்ந்தார்கள்.

என்ன விஷியம் நான் தெரிஞ்சிக்கலாமா பூவரசு கேட்க.

உன் அக்கா வீட்டுக்காரர் தான் வர சொன்னாரு , அவருக்கும் எங்களுக்கும் பேச்சு வார்த்தையில்லை அதனால நீங்க சொல்லும் போதே உள்ளே நுழைந்தார் சண்முகவேலு, அவருடன் பவி மற்றும் சரவணபாண்டி மாலையும் கழுத்தோடு, அதைப்பார்த்து ஓடி வந்து என்னடி செஞ்சியிருக்க சொல்லி தன் பெண்ணின் கண்ணத்தில் அறையை விட்டாள்.

அக்கா அவள விடு , ரொம்ப பெரிய மணிஷியாயிட்டா,

ஏம்மா இவதான் உன் மாமானா, இவன் அக்கா உன் அம்மா வாழ்க்கையே அழிச்சிட்டாங்க வாழ வேண்டிய வயசில எங்க அக்கா வாழா வெட்டி. அவனை போய் கட்டிட்டு வந்திருக்க.

யாரடா அவன்,இவன் சொல்லுற குரல் உயர்த்தினான் சரவணா

கண்ட நாயெல்லாம் என் முன்னாடி வந்து பேசுது.

டேய் கையை ஓங்கி வர ,அந்த கையை பிடித்தாள் சுந்தரி என் மாமாமேல கையை வைக்க நீ யாருடா.

கொஞ்சம் அமைதியா இருங்கப்பா, பஞ்சாய்த்து பண்ணதான் வந்திருக்கோம்.

அவ ஓடிபோய் கல்யாணம் பண்ணிக்கல, அவ அப்பன் நான்தான் கல்யாணம் செஞ்சி வச்சேன்.

என்னம்மா பவி உன்னையை கட்டாயபடுத்தி கல்யாணம் நடந்ததா.

இல்லங்க, நான் விருப்பட்டு தான் கட்டிக்கன.

சரி அப்ப உனக்கும் , பூவரசுக்கும் இன்னிக்கு பரிசம்தானே

அவன பிடிக்காம தாங்க என்னைய கட்டிக்கனா.

ஏன்ம்மா பிடிக்கல,

அது மாமா என்னைய மாதிரி படிக்காதவங்க, ரொம்ப கோவக்காரு எனக்கு சின்ன வயசிலே பயம் மாமாவ பார்த்தா.

ஏம்மா, முன்னாடி சொல்லிருக்கலாமில்ல

ஏன்னடி உன்ன வளர்த்து ஆளாக்கன அவனோட கால் தூசிக்கு இவன் வருவானா- ஆனந்தவல்லி.

நடந்தது நடந்திடுச்சு . என் பிள்ளையை நான் நல்லா பார்த்துப்பேன் எந்த பிரச்சனையும் வராத, இப்ப பூவரசு என்ன சொல்லுறான் கேட்டு சொல்லுங்க சண்முகவேலு கேட்க.

என்னப்பா சொல்லுற.

வழக்கமா பண்ணையார் வீட்டுக்கு கல்யாணம் செஞ்சி யாரு வந்தாலும் எங்க மரியாதையை கொடுத்து அனுப்புவோம் அதை வாங்கிக்க சொல்லுங்க பிறகு எங்க அக்கா அவங்க பொண்ணுக்கு செய்யும் சீர் அவங்க வீட்டுக்கு வரும்.

சரிப்பா நல்லது, நாங்க கிளம்புறோம்.

நில்லுங்க எல்லோரும் , இன்னும் எங்க வீட்டு விஷேசமே ஆரம்பிக்கல அதுக்குள்ள ஏன் கிளம்பிறீங்க உட்காருங்க.

டேய் முத்து எல்லோருக்கும் காபி கொடு , இன்னும் என் தம்பிக்கும் என் பொண்ணு சுந்தரிக்கும் பரிசமே முடியில.

வாடா தம்பி, சுந்தரி இங்க நில்லும்மா. நான் போய் தட்டு எடுத்துட்டு வரேன். இரும்மா ஆனந்தவல்லி உன் பொண்ணோ டாக்டருக்கு படிக்கு எப்படி கட்டிக்கும் அவளும் அக்காமாதிரி பண்ணிட்டான்னா.

யோவ் சொட்டை வாய முடுடா எங்க மாமன ஏத்தி விடாதேடா , அய்யோ மாமா முறைக்குதே , முடிஞ்சிடுச்சு என் கதை மனதில் நினைத்தாள்.

அக்கா போதும் நான் அசிங்க படறது, பத்தாவது படிச்ச அவளே இன்ஞினியர் மாப்பிள்ளை வேனும் போயிட்டா என்னைய முட்டாளாக்கிட்டு இப்ப சுந்தரி.

மாமா நான் மனபூர்வமா உன்னைய கல்யாணம் செஞ்சிக்கிறேன்.

நீ கொஞ்சம் வாய மூடு குறுக்க பேசாதே சுந்தரி.

டேய் பூவரசு இப்ப நிச்சியம் ஆகலனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.

அக்கா....இப்ப அவ சின்ன பொண்ணு நாளைக்கு என்னைய புடிக்கல சொண்ணா என்ன செய்வ, இண்ணும் அவ படிப்பு முடிய மூனு வருஷம் ஆகும் , அதுக்குள் அவ யாரை விரும்பினாலும் கட்டிக்கட்டும் நானே மாப்பிள்ளைய பார்ப்பேன் சொல்லிட்டேன்.

அவ படிப்பு முடிஞ்சிட்டு உன்னதான் கல்யாணம் பண்ணிப்பா எனக்கு முழு நம்பிக்கையிருக்கு நீ என்ன வேணா முயற்சி செய்.

நம் அம்மாவ முன்னாடி கூப்பிடுடா,தட்டுல பூ , பழம் வைத்து ஒருத்தருக்கு ஒருத்தர் மாற்றிக் கொண்டார்கள். அனைவரின் கால்களில் விழுந்து ஆசியும் பெற்றார்கள்.

மாமாக்கு ரொம்ப தாழ்வு மணப்பான்மை வந்திடுச்சு, நான் நடிக்கிறேன் சொல்லுவாரு என்கிட்ட முன்னமாதிரி பேச மாட்டாரு. நிறைய நாள் நான் பார்க்கிறதேயில்ல. இப்படிதான் மாப்பிள்ளைய பார்ப்பாரு அப்பறம் சண்டை வரும்.

இன்னும் இரண்டு நாள்ல படிப்பு முடிய போவது, எப்படி மாமாவ வழிக்கு கொண்டுவரணும் யோசிக்கிறேன்.

அப்ப உன் அக்கா என்ன ஆனா-சங்கரி.

அழுது அடம்பிடுச்சு வீட்டுக்கே வந்துட்டா பையன் வேற இருக்கான் அருண்.இப்ப நார்மலா ஆயிடுட்டோம். மாமா என்னன்னா என்ன பேசுவாங்க. சரி பரதா மாமா பேசறாங்க நான் அப்பறம் வந்து பேசுறேன் சங்கரி.

என்ன பரதா.

சுந்தரி நாளைக்கு பஞ்சாய்த்து கூட்டுறாங்க ஊர் திருவிழாவுக்காக ,பிரச்சனை வரும் என்னடா செய்ய.

நான் சொல்லுற மாதிரி செய் பரதா , அம்மாவுக்கு உதவி பண்ணு.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Top