HAI FRIENDS SORRY FOR THE DELAY HERE WE GO WITH THE 12TH EPISODE HAPPY READING IN UR LEISURE FRIENDS

அத்தியாயம் 12
குக்கூ... குக்கூ.....குக்கூ....
படுக்கையறை கடிகாரம் எட்டு முறை குருவியின் இனிய கீதமாய் மணியைப் பறைசாற்றியதில் ஹரிபிரசாத் விழித்துக் கொண்டான். கண் விழித்தவனின் பார்வை அவன் மார்பின் மீது முகம் பதித்து, உதட்டோரத்தில் ஒரு சின்னச் சிரிப்புடன் தூங்கிக் கொண்டிருந்த அனுவின் மீது வந்து நிலைத்தது. ஒரு நிமிஷம் ஒன்றும் புரியாமல் விழித்தவனின் மனதில் சற்று முன் நடந்த விஷயங்கள் அனைத்தும்...........
அனு அவனறைக்கு வந்தது, அவன் அவளிடம் தன் மன வேதனையைக் கொட்டியது, அனு அருகில் வந்து ஆறுதல் சொன்னது, அவன் ஐலவ்யூ அனு என்று உருகியது,
அதற்குப் பின், அதற்குப் பின்............நடந்த விஷயங்கள் எல்லாமே நினைவிற்கு வர, சட்டென்று அனுவை விலக்கிப் படுக்கையில் கிடத்தி விட்டு எழுந்தான் ஹரிபிரசாத்.
எல்லாம் நடந்து முடிந்த பிறகே செய்து விட்ட காரியத்தின் தன்மை மனதில் உறைக்க செய்த தப்பு மனதைச் சிலந்தியாக அரிக்க, என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான் ஹரி.
என்ன காரியம் செய்து விட்டேன்? சாதாரண தப்பா சுதாவுக்கு செய்திருக்கும் பச்சை துரோகமல்லவா? கடவுளே...உணர்ச்சிகளை அடக்கத் தெரியாத மிருகமாய் ஒரு சின்னப் பெண்ணின் வாழ்க்கையையே சீரழித்திருக்கிறேனே? இத்தனை நாள் தவிப்பும் வேதனையும் கேவலம் இந்த சுகத்திற்காகவா? நான் தான் ஸ்பாவமான பலகீனத்தில் புத்தி கெட்டுப் போய் நடந்து கொண்டேனென்றால் அனு......அனு எப்படி இதற்கு சம்மதித்தாள்? அவளுக்கு புத்தி எங்கே போயிற்று? சும்மாவே சந்தேகப்படும் சுதாவிற்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால்
கடவுளே.........
நினைக்கும் பொழுதே உடல் முழுவதும் ஒரு நடுக்கம் சிலிர்த்துக் கொண்டு ஓடியது.
நல்லவேளை சுதா இன்னும் பார்ட்டி முடிந்து வரவில்லை. அதனால் நடந்த தவறு சுதாவிற்கு தெரிய வாய்ப்பில்லை.
இப்பொழுது தெரியாது தான். ஆனால் என்றாவது ஒரு நாள் உண்மை வெளிப்படத் தானே போகிறது ஏன் அனுவே கூட சொல்லிவிட்டால்?
மனதில் தற்காலிகமாய் முளைத்த நிம்மதியும் பயத்தில் பறந்து போக ஹரிபிரசாத் தூண்டில் சிக்கிய மீனாகத் துடித்தான்.
அனு சொல்லிவிடுவாளா? நோ நெவர். அவளும் தானே இந்த தவறுக்கு உடந்தையாக இருந்திருக்கிறாள். அவளே தன்னைக் காட்டிக் கொடுத்துக் கொள்வாளா? நிச்சயம் மாட்டாள்
தப்பையும் செய்து விட்டு அதை மறக்க தனக்குத் தானே ஆயிரம் சமாதானங்களைச் சொல்லிக் கொண்ட ஹரிக்கு திடீரென்று அனு படுக்கையறையில் இன்னும் இருப்பது நினைவிற்கு வர சுதா வருவதற்கு முன் அனுவை அங்கிருந்து கிளப்ப வேண்டும் என்ற பயத்தில் அவசரமாய் திரும்பினான். அனுவைத் தொட்டு எழுப்ப நீட்டிய கரம் சற்றே தயங்கி நின்றது.
சரியான கல்லுளிமங்கன்டா நீ. முழுக்க நனைஞ்ச பிறகும் முக்காடு போட்டகதையால்ல இருக்கு. எல்லையையே தாண்டிட்டு இப்ப எழுப்பறதுக்கு இப்டி தயங்கறே? இந்த தயக்கமும் பயமும் அனுவைத் தொடறதுக்கு முன்னாலயே இருந்திருக்கனும். இப்ப இருந்து என்ன பிரயோஜனம்டா அம்பி......
மனசாட்சியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஹரி மலைத்தான். நல்லவேளை அனுவே அவனை சிரமப்படுத்தாமல் தானாக எழுந்து விட்டாள். அவள் முகத்தைப் பார்க்கவே கூசியவனாக குற்ற உணர்வுடன் தலை குனிந்து கொண்டான் ஹரிபிரசாத்.
ஐ ஆம் சாரி அனு. டெரிப்ளி சாரி....
உதடுகள் அவனையுமறியாமல் முணுமுணுத்தன. அவனுடைய பயம் குழப்பம் வெட்கம் அனைத்தையும் புரிந்து கொண்ட அனுவிற்கு மட்டும் ஏனோ சிரிப்பு தான் வருகிறது.
என் சம்மதத்தோடு நடந்த ஒரு விஷயத்திற்கு மன்னிப்பும் வெட்கமும் எதற்காக? இயல்பா இருங்க ஹரி.. என்று சொல்ல நினைத்தாலும் சொல்லாமல் உதட்டின் புன்னகை மாறாமல் அனு அவளறையை நோக்கி நடக்க ஹரி ஸ்தம்பித்துப் போனான்.
குறைந்தபட்சம் கன்னத்தில் ஒரு அறையாவது அவன் அனுவிடமிருந்து எதிர்பார்த்திருக்க அவளுடைய புன்சிரிப்பு அவனை இன்னும் அவஸ்தைபடுத்தியது.
ஓ...ஹெல் நீயும் சுதாவைப் போல எதாவது கோபமாகப் பேசேன் அனு ஹெளவ் டேர் யூ ஸ்பாய்ல் மீ லைக் திஸ் என்று கத்தேன். கன்னத்தில் நாலு அறை கொடேன். ஐ டிசர்வ் இட் ஆல் அனு வெறும் சாரி சொன்னால் மன்னித்து மறந்து விடக் கூடிய குற்றத்தையா நான் பண்ணியிருக்கேன்?......கடவுளே
மனதிலிருந்த பாரம் தலைக்கு ஏறி இப்பொழுது தலை ஏகத்திற்கும் வலிக்க ஆரம்பிக்க, ஹரிபிரசாத் படுக்கையில் விழுந்தான்.
மேனியை இறுக்கிப் பிடித்த இரவிக்கையையும் புழுக்கமாய் உணர வைத்த பார்ட்டி வேர் சேலையையும் .களைந்து இரவு உடைக்கு மாறிய சுதா, திரும்பி கணவனைப் பார்த்தாள் அவனோ ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாக பாவனை செய்து கொண்டிருந்தான்.
அதற்குள்ளாகவா தூங்கிவிட்டார்?......சுதாவின் பார்வையில் வியப்பு.
பளிச்சென்று பிரகாசித்த சரவிளக்கை அணத்து விட்டு பெட்லாம்பின் நீல ஒளியைப் பரவ செய்து விட்டு சுதா படுக்கையில் சரிந்தாள்.
சுமுகமாயிருக்கவேண்டிய இல்லறத்தை நீயே சிக்கலாக்கிக்காதே சுதா. இன்னிக்கு இராத்திரியே ஹரியிடம் மனம் விட்டுப் பேசி சமாதானம் பண்ணிக்கோ..
பார்ட்டியில் சினேகிதி ரேணுகா சொன்ன அறிவுரை நினைவிற்கு வந்தது.
கூடவே பார்ட்டியில் சந்தித்த திருமதி சாரதா விஸ்வநாதன் மனதை விட்டு அகல மறுத்தார்.
அவரை பிரபல சமூக சேவகியாக ரேணுகா தான் அறிமுகப்படுத்தி வைத்தாள். கூடவே இன்னொரு பெண்ணையும் மீனா விஸ்வநாதன் என்று அறிமுகப்படுத்தி வைக்க, சாரதாவின் இளமை தோற்றத்துக்கு சம்பந்தமேயில்லாமல் இவ்வளவு பெரிய மகள் எப்படி சாத்தியம் என்று சுதா குழம்பிப் போனாள். அவள் குழப்பத்தை உணர்ந்தவள் போல் சாரதா தெளிவுபடுத்தினாள்.
மீனா என் மகளில்லே சுதா. என் கணவருடைய இரண்டாவது மனைவி.
சுதா அதிர்ந்து போனாள் .காரணமேயில்லாமல் அந்த மீனாவின் மீது கோபம் வந்தது. விஸ்வநாதனுக்கு இரண்டு மனைவிகள் இருக்க வேண்டிய அவசியமென்ன என்று ஆத்திரம் வந்தது.
ஒருவேளை சாரதாவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமல் போனதால் விஸ்வநாதன் வேறு ஒரு பெண்ணை வாரிசுக்காக மணந்திருப்பாரோ
அப்படியரு சந்தேகம் மனதில் எழுந்த மறு வினாடியே தன் நிலைமையும் அப்படியாகி விடுமோ என்ற தன்னிரக்கம் எழுந்தது.
என்ன சுதா எனக்கு குழந்தை இல்லாத காரணத்தால் என் கணவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வெச்சதா நினைக்கிறிங்களா?
இவள் என்ன மனோதத்துவம் படித்தவளா? அடுத்தவர் நினைப்பதை அப்படியே எதிரோலிக்கிறாள்?..............சுதாவின் வியப்பைக் கவனிக்காமலேயே தொடர்ந்தாள் சாரதா
நிச்சயமா இல்லே இப்பவும் எங்களுக்கு லட்டு மாதிரி ரெண்டு பசங்க இருக்காங்க. நிறைவான தாம்பத்யத்தோட அடையாளமே குழந்தைகள் தான்னு சொல்வாங்க. அப்படி குழந்தைகள் பிறந்த பின்னாலும் என் கணவர் இன்னொரு பெண்ணிடம் போனார்னா அதற்கு என்ன காரணமாயிருக்கும்னு நீங்க நினைக்கிறிங்க?
வேறென்ன கொழுப்பு தான்.......
சுதாவையும் மீறிக் கொண்டு வார்த்தைகள் குதித்து விட்டன. உதட்டைக் கடித்துக் கொண்டு சாரதாவை ஏறிட்டாள். அவளோ குழந்தை போல் சிரித்தாள்
ஏன் இப்படி யோசிச்சுப் பாருங்களேன் என்னிடம் இல்லாத ஏதோ ஒன்று மீனாவிடம் இருந்து அவர் அதனால ஈர்க்கப்பட்டிருக்கலாம் இல்லையா?
நீங்க இப்ப என்ன சொல்ல வர்றிங்க மிஸஸ் சாரதா? உங்க கணவர் பண்ணியது தப்பேயில்லைன்னு சொல்றிங்களா?
சுதா தன் ஸ்பாவப்படியே பொறுமையிழந்து படபடத்து விட்டாள்.
இல்லே சுதா. அவர் செய்தது தப்பு தான். ஆனால் அந்த தப்புக்கு பலியானவ என்னையும் உங்களையும் மாதிரி ஒரு பொண்ணு தானே. அதனால தான் என் மனசைப் பக்குவப்படுத்திகிட்டு மீனாவுக்கு என் வாழ்க்கையில் பங்கு கொடுத்தேன்.
என்ன பெண் இவள்? சாகலெட்டைத் தூக்கி கொடுப்பது போல் புருஷனை இன்னொருத்தியிடம் ஒப்படைத்து விட்டு சர்லசாதாரணமாக இருக்க இவளால் எப்படி முடிகிறது?
சுதாவிற்கு சாரதாவின் செயல்பாடோ எண்ணங்களோ சிறிதும் பிடிக்கவில்லை என்பதோடு அறிமுகப்படுத்தி வைத்து விட்டு விருந்தினரை உபசரிக்க சென்று விட்ட ரேணுவின் மீது கோபம் கூட வந்தது. வீட்டிற்கு கிளம்பிய வேளையில் கிடைத்த தனிமையில் சாரதாவின் மீதிருந்த கோபத்தை சுதா சகட்டுமேனிக்கு ரேணுவிடம் திட்டி தீர்த்தாள்.
இப்போ என்ன சொல்ல வர்றே சுதா? சாரதா மாதிரி ஒரு எமோஷனல் இடியட்டோட பழக்கமெல்லாம் எனக்குத் தேவையான்னு தானே? சரிம்மா நான் உன் வழிக்கே வர்றேன் நீ சொன்ன அந்த முட்டாள் சாரதா இன்னிக்கு பார்ட்டிக்கு எப்படி வந்தாங்க? புருஷனோட அவரோட புதுப் பெண்டாட்டியோட ரொம்ப சந்தோஷமா வந்தாங்க. ஆனால் அதிபுத்திசாலி அம்மணி நீங்க எப்படி வந்திங்க? கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருங்க.
அ...........அது ஹரிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருந்ததால..............
சுதாவின் குரலில் சுருதி இறங்கிவிட்டதை ரேணுகா கண்டு கொண்டாள்.
எனக்கு அம்மா அஞ்சு வயசிலேயே காது குத்திட்டா சுதா. நீ புதுசா இப்பக் குத்த வேணாம் உனக்காக கான்பெரன்ஸை கூட கான்சல் பண்ண தயங்க மாட்டார் ஹரி. அப்படியே தலை போகிற அவசர காரியம்னாலும் அதை முடிச்சுட்டு வந்து இங்கே பார்ட்டியில் கலந்துக்க ரொம்ப நாழியாகாது. ஸோ உங்களுக்குள்ளே டர்ம்ஸ் சரியில்லே. அன்னிக்கு நீ எதிர் வீட்டு ஸ்வப்னாவைப் பார்த்த பார்வையே சரியில்லை. சொல்லு அவ தான் பிரச்னையா?
அவ்வளவு தான். மடை திறந்த வெள்ளமென மனதிலிருப்பதைக் கொட்டி விட்டாள் சுதா
ஸோ உனக்கு ஹரி மேல நம்பிக்கையில்லே. அவர் ஸ்வப்னாவோட பழகறாரோன்னு சந்தேகப்படறே அப்படித் தானே சுதா? ஏன் சுதா என் இடத்தில் உனக்கு ஒரு ஆண் நண்பனாக இருந்திருந்தால் ஹரி சந்தேகப்படுவார்ங்கறே............
சுதா குற்ற உணர்ச்சியில் பதிலே சொல்லவில்லை.
ஒண்ணுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிசாக்கற முட்டாள்தனத்தை நீ செய்துட்டு சாரதாவைப் போய் முட்டாள்ங்கறியே. இதற்கு நான் எங்கே போய் முட்டிக்கறது? சொல்லு
லுக் சுதா... இராமாயணத்தில் கூட இராமர் சந்தேகப்பட்டதால தான் சீதை தீக்குளிச்சா. ஆனால் கதை ரிவர்ஸா இருந்துச்சுன்னு வை, சீதை இராமர் மேல சந்தேகப்பட்டிருந்தால் இராமர் தீக்குளிச்சிருக்க மாட்டார். சீதைக்கு ஒரு சக்களத்தி தான் வந்திருப்பா அதை நீ புரிஞ்சுக்கறது நல்லது.
சொன்னாலும் சொன்னாள் ரேணு சுதாவிற்கு நன்றாக உறைக்கிற மாதிரி சொன்னாள்.
உன் மனசில் வீண் சந்தேகங்களுக்கு இடம் கொடுத்தாயானால் மிக முக்கியமான உன் கணவரையே நீ இழந்து விடுவாய் என்று சொன்ன ரேணு நிச்சயமாய் தீர்க்கதரிசி தான்