Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்ரியா's கள்வனே கள்வனே.......

Advertisement

Joher

Well-known member
Member
சிவப்ரியா's கள்வனே கள்வனே.......

காலங்காத்தலே ரவுடி பேபியை அம்மாவின் காயத்திரி மந்திரத்துக்கு போட்டியாய் அலறவிடுபவள் இனியா..... அப்பாவின் செல்ல பொண்ணு.......
IT யில் வேலை பார்க்க எல்லா அம்மாவும் போல கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லுகிறார் கணவரிடம்......
அம்மா கீதா வரன் மையம் மூலம் பார்க்க நினைக்க அப்பா பெண்ணோட விருப்பத்திற்கு போக நினைக்கிறார்...... பெண்ணுக்கு தெரிந்த மருத்துவரிடம் அவரோட உடல்நிலை காரணமா செல்ல டாக்டரோடான இளைய தலைமுறை பேச்சில் கவரப்பட்டு டாக்டர் மாப்பிள்ளை அப்பாவின் மனதில் வந்துவிடுகிறார்.......
அம்மாவும் ஆன்லைன்ல வரன் பார்க்க, இப்போ பெற்றோர் ஆளுக்கொரு வரனோடு நிற்க, பொண்ணோட selection யாரு எப்படி கல்யாணம் பண்ணிக்குறா என்பது தான் மீதி கதை........
சிவகாமி இனியா அறிமுகம் & அதோடானா தொடர் சந்திப்புகள், இதயனை பார்த்ததும் அவளோட அதன் பின்னான நடவடிக்கைகள், தோழியை காப்பாற்ற யுக்தா எடுக்கும் முயற்சி, அண்ணனுக்கு உறுதுணையா இருக்கும் இன்பன், அக்காவை அவளோட நடவடிக்கையிலேயே கண்டுபிடிக்கும் இனியன் -னு கதை விறுவிறுப்பா போகுது.......
மருத்துவ உலகம் என்ன தான் முன்னேறி இருந்தாலும் ஒரு பக்கம் மக்கள் உயிரோடு விளையாடும் டாக்டர் அதோட தொடர்ச்சியா patient & அவரோட குடும்பம் அனுபவிக்கும் வலிகள் னு படிக்க இன்டெரெஸ்டிங்கா இருக்கு.......

Best wishes Sivapriya ???
********************
இதே மாதிரி 2 கேஸ் என்னோட சின்ன வயசுல எங்க ஊரில் பார்த்திருக்கேன்.......
ரெண்டு பேரும் unmarried...... புனே & பம்பாய் ல கம்பெனி ல ஒர்க் பண்ணுறப்போ மேலே இருந்து கீழே விழுந்து தண்டுவடத்தில் அடி பட்டதால் முடங்கி போனவங்க...... ரெண்டுமே middle class பேமிலி...... ஹாஸ்பிடல் ல இருக்கும் வரை கம்பெனி செலவு பண்ணி அப்புறம் அமௌன்ட் செட்டில் பண்ணி வீட்டுக்காரங்க கையில் விட்டுட்டாங்க..... 2 வீட்டிலும் 3 பொண்ணு 3 ஆண் பசங்க.....

ஒருத்தங்க அப்பாவோட கஸின்....... அம்மா அவங்க வீட்டுக்கு பார்க்க போறப்போ நானும் போயிருக்கேன்....... கண்ணு மட்டும் பார்க்கும்....... அந்த பாட்டி யார் வந்திருக்காங்கனு சொன்னால் கண்ணு கொஞ்சமா சுத்தும்..... மற்றபடி எல்லாமே பெட் ல தான்...... எந்த உணர்ச்சியும் கிடையாது...... பார்த்தாலே பரிதாபமா இருக்கும்..... பாட்டி சித்தி தான் முழு நேரம் பார்த்துக்கிட்டது..... பேமிலி டாக்டர் நல்லாவே பார்த்துக்கிட்டார்...... அப்போ எல்லாம் ரொம்ப facility இல்லை....... கொஞ்சம் வருஷம் இருந்தாங்க....... எந்த முன்னேற்றமும் இல்லை........ அப்புறம் இறந்துட்டாங்க.......

இன்னொருத்தங்க வீடு பக்கத்துல ஒரு அண்ணா....... அவங்க வீட்டிலும் ரொம்ப கஷ்டத்திலும் நல்லா பார்த்து நடக்க வச்சி திரும்பவும் வேலைக்கு போனாங்க..... நடக்குறப்போ shoulder ஏறி தலை உள்ளே இறங்கி போய் இருக்குற மாதிரி இருக்கும்...... கல்யாணமும் பண்ணிட்டாங்க....... அவங்களுக்கு 1 பையன் அவனுக்கும் இப்போ கல்யாணம் ஆச்சு..... ஆனால் அந்த அண்ணா 5 yrs முன்னாடி இறந்துட்டாங்க.......

இங்கே சர்ச் ல கூட அதே மாதிரி ஒருத்தரை பார்க்கிறேன்....... என்ன problem னு தெரியாது...... ஆனால் பார்த்ததும் இவங்க 2 பேரும் தான் எனக்கு நியாபகம் வருவாங்க...... ஒரு குட்டி பையன் கூட இருக்கிறான்......

So இந்த மாதிரி cases சரிபண்ணமுடியாதுன்னு கிடையாது........ இப்போ எல்லாம் மெடிக்கல் உலகம் எங்கேயோ போயாச்சு........ செலவு பண்ண காசும் தன்னம்பிக்கையோட வீட்டுகாரங்களும் இருந்தால் கண்டிப்பா சரி பண்ணலாம்...... I really admired இனியா.......
 
Unexpected review @Joher sis❤️ கதையின் கரு வெளிப்படாத படி சுவாரஸ்யமான ரிவியூ??? உங்களைப் போல சீனியரிடமிருந்து என் கதைக்கு விமர்சனம் வந்தது மிக்க மகிழ்ச்சி???

சின்னதா ஒரு கஷ்டம் வந்தாலும் மனதில் வைத்து மறுகும் சாமானியரை விட ஒன்றுமே செய்ய முடியாமல் அனைத்திற்கும் மற்றவர்களை எதிர்பார்த்து இருப்பது ரொம்பவே கொடுமை. A big salute to all those survivors & their families.

நீங்க சொன்னது போலவே இப்போது மருத்துவம் முன்னேறிவிட்டது. ஆனால் நடுத்தர மக்களால் எகிரியிருக்கும் மருத்துவ செலவீனங்களை சமாளிப்பது கடினமே... எதிர்காலத்தில் அனைவருக்கும் சமமான மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்று நம்புவோம் :)

Once again Thank you very much for your review? Extremely pleased❤️
 
Top