Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சலசலக்கும் சொந்தங்கள்-அத்தியாயம்3

Advertisement

BelsyPrabhu

Active member
Member
Hello friends,
இது என்னோட முதல் முயற்சி, actually, நா என்னோட முதல் epiலே உங்களோட பேசுனுமுனு நினைத்தேன், but இப்பதான் எனக்கு இந்த website flow தெரிந்தது, முதல் முயற்சி முற்றும் கோணலா இருக்காதுனு நா நம்புகிறேன், எனக்கு மெசேஜ் செய்து பூஸ்ட் பண்ற உங்களுக்கு மிக்க நன்றி, பிரண்ட்ஸ்.


சலசலக்கும் சொந்தங்கள்
அத்தியாயம் 3

கண் விழித்த பீட்டர், இவ கதவை திறந்தாதான் என்ன, என நினைத்து பக்கத்தில் பார்வையை ஓட்டினான். அவ்விடத்தில் பெட் காலியாக இருந்தது. இவ எங்க போனா என யோசிக்க, அதற்குள் திரும்பவும் கதவு தட்டப்படவும், எழுந்து கதவினைத் திறந்தான். அவனின் அக்கா ஜான்சி, “மறுவீடு அழைச்சுட்டு போக அவங்க வீட்ல இருந்து வந்திருக்காங்க, இரண்டு பேரும் சீக்கிரம் கிளம்பி வாங்க” என, அவன் தலையாட்டி உள்ளே சென்றான். குளியலறை திறக்கும் சத்தம் கேட்டவுடன் பால்கனி சென்றவன், அவள் அறையை விட்டு வெளியே செல்லும் சத்தம் கேட்டு திரும்பியவன், டவல் எடுத்துக் கொண்டு குளியலறையில் ஐக்கியமானான்.

ஜான்சி, அவள் கணவர் ஆனந்த் மற்றும் மகள் ரோஷினியுடன் அவள் அறையிலிருந்து வெளியே வந்து, ஹால் சோபாவில், மறுவீடு அழைத்து செல்ல வந்திருந்தவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஆரோக்கியசாமியிடம், “அப்பா, நாங்க கிளம்பறோம்” என்றாள்.

ஆரோக்கியசாமி, “ஏம்மா இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல”.

அங்கு வந்த ரோஸ்லின், “ஏன்டி, கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே கிளம்பற, இந்த வீட்டு பொண்ணா இங்க இருந்து மற்ற வேலைகள பாக்கலாம்ல”.

ஜான்சி, “இந்த கல்யாணம் என்ன நாம நெனச்சுருந்த மாதிரியா நடந்துச்சு, அதெல்லா எதுக்கு, எங்களுக்கு நிறைய வேல இருக்கு, நாங்க கிளம்பறோம்”.

செல்லி, “ஜானி, என்னடி என்ன தனியா விட்டுட்டு போற”.

ஜான்சி, “அதான் இரண்டு மருமகளுங்க வந்துட்டாங்கள, அப்பறம் என்ன”.

பொன்னுசாமி, “சரி, பேசுனதெல்லாம் போதும், ரோஸு, பீட்டரையும் பேட்ரிக்கையும் அவனஅவன் பொண்டாட்டிங்களோடு சீக்கரம் கிளம்பி மறுவீடு போக சொல்லு, ஜான்சி ரூம்ல போய் ரெஸ்ட் எடும்மா, இல்ல வெயிலுக்கு முன்னாடி வீட்டுக்கு கிளம்புங்க, இல்லயா சாயங்காலமா போகலாம்”.

ஆனந்த், “இல்லங்க தாத்தா, இப்ப போனாதான் ஆபீஸ் வேலய பாக்க வசதியாயிருக்கும், நாங்க போய்ட்டு வரோம்” எனக் கூறி மனைவி மகளுடன் தன் இல்லம் நோக்கி பயணித்தான்.

அறையை விட்டு வெளியே வந்த பீட்டர், மாடிப்படி தொடக்கத்திலேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிர்மலாவின் அருகில் செல்ல, அவளும் அவனுடன் இணைந்து படியிறங்க ஆரம்பிக்கும் போது எதிர் அறையில் இருந்து பேட்ரிக்கும் ஜென்னியும் வெளிவந்து அவர்கள் பின்னாலேயே படியிறங்கினர். இரு ஜோடிகளும் தத்தம் மறுவீடு சடங்கிற்கு பயணமாயினர். ஏன்னா பீட்டர்-நிர்மலா மற்றும் பேட்ரிக்-ஜென்னி இரு ஜோடிகளுக்கும் ஒரே நாளில் தான் திருமணம் நடந்தது, அதான்.

பீட்டரும் நிர்மலாவும் காரில் ஏறி கிளம்ப, பேட்ரிக்கும் ஜென்னியும் நடந்து பக்கத்து காம்பவுண்ட கேட்டைத் திறந்து உள்ளே சென்றனர். ஏனெனில், பொன்னுசாமி மக்கள் மூவரும், அதாவது கிரேஸ் தவிர, அருகருகிலேயே அடுத்தடுத்த பிளாட்டில் வீடு கட்டி குடியேறியிருந்தனர். அவர் பிறப்புவரிசை போல் வீடுகளின் வரிசையும் இருந்தது.

மறுவீடு வந்திருந்த பேட்ரிக்கையும் ஜென்னியையும், ஜென்சியை நினைத்து அக்ஸிலீயாவுக்கும் நவரோஜ்க்கும் சுணக்கம் இருந்தாலும், ஒருத்தியை நினைத்து, மற்றவளை விட்டுதர மனமில்லாமல் நன்றாகவே கவனித்தனர்.

காரில் இருந்து இறங்கிய பீட்டருக்கும், நிர்மலாவுக்கும் ஆரத்தி எடுத்து, அவர்களை வீட்டிற்குள் அழைத்து சென்றனர். பிறகு, நிர்மலாவின் அறையில் அடைக்கலமானவன்தான், வெளியே வரவே இல்லை, சாப்பாடும் அறையிலேதான். மாலையானதும் கிளம்பி வந்தவன் ஹாலில் அமர்ந்தான். அப்போது பொன்னுசாமி, ஆரோக், ரூபன் மூவரும் பேசிட்டுயிருந்தனர், இவன் வந்ததும் பொன்னுசாமி தான் இவனிடம் சலசலத்தார், மற்றவர்கள் அவனை நோட்டம் விட்டு கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் நிர்மலா கிளம்பி வர, அதனைக் கண்டவன் “தாத்தா, அப்ப போய்ட்டு வரேன்” எனக் கூறி, மற்றவர்களிடம் ஒரு தலையசைப்பில் விடைபெற்று, திரும்பும் போது, ஏஞ்சல் “அண்ணா, நிம்மி சின்ன புள்ள, ஏதாவது தப்புன்னா எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவா, கொஞ்சம் பாத்துக்கோங்க” எனவும் தலையாட்டு விட்டு காரை நோக்கி சென்றான்.

அனைவர் இதயமும் கனத்து கிடந்தது. சூழலை இளகுவாக்க, நிர்மலாவிடம் அந்தோணியம்மாள், “போற இடத்துல பாத்து பொழச்சுக்கோ, வாயிருக்குனு பேசிக்கிட்டு அலையாத” என்றார்.

நிர்மலா, “நாங்க அப்படி என்ன பொல்லாதத பேசிக்கிட்டு இருக்கோமா, உங்க வாய்தான் அப்படியே எனக்கு வந்திருக்கிறதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்க, இக்கும்”.

கிரேஸ், “பெரியவங்க ஏதாவது சொன்னா, சரினு ஒத்துக்கிட்டாதான் என்ன, எப்ப பாரு எதுத்து பேசிகிட்டு, புருஷன் வீட்டுக்கு போயி ஒழுங்கா குடும்பம் நடத்துற வழிய பாரு”.

ஆரோக், “அதெல்லாம் என் பொண்ணுக்கு நல்லாவே தெரியும், ஆளாளுக்கு அட்வைஸுனு ரொம்ப எதையாவது பேச வேணாம், அவ புத்திசாலி, எங்க எப்படி நடந்துக்கனுமுனு தெரியும்”.

நிர்மலா, “இதான் என் அப்பா” என்று அவருக்கு ஹைபை கொடுத்தாள்.

கிரேஸ், “ஆமா, உங்க பொண்ண யாரும் எதுவும் சொல்லக் கூடாது”.

ரூபன், “சின்னக்குட்டி, கவனமா இருடா, எதுனாலும் எனக்கு உடனே போன் பண்ணனும், சரியா?”.

நிர்மலா தலையாட்டிவிட்டு அண்ணன் அருகில் சென்று கையைப் பிடித்துக் கொண்டாள். அத்தைக்கு போட்டியாக ரூபனின் மகள் டிரைசா, தன் அப்பாவின் அடுத்த கையைப் பிடித்துக் கொண்டாள். நிர்மலா அவளை இழுத்து, தூக்கி இடுப்பில் வைத்து கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

ஏஞ்சல், “நிம்மி, எங்களுக்கும் இன்னைக்கு நைட் பிளைட், நாங்க ரீச் ஆனதும் மெசேஜ் பண்றோம், அடிக்கடி போன் பேசு, நாங்களும் பேசுறோம், நீ உன் மாமியார் வீட்ல சந்தோசமா இரு, சில நேரம் அட்ஜஸ் பண்ணி தான் போகணும், பாத்து இரு”.

எல்லாரையும் பேசவிட்டு அமைதியாக இருந்த இராயப்பன், “இப்படியே பேசிக்கிட்டு இருந்தா வெளிய இருக்க மாப்பள டென்ஷனாகி உள்ள வந்து நிம்மிய இழுத்துட்டு போக போறாரு பாருங்க, நிம்மிமா கிளம்பு, ஜாக்கிரதை” என்று சொல்லி நிம்மியைக் கூட்டி கொண்டு வெளியே வந்தார். மற்றவர்களும் பின்னாடியே வந்தனர். நிம்மி காரில் ஏறியவுடன், அனவரையும் பாத்து ஒரு தலையசைப்புடன் பீட்டர் வண்டியை எடுக்க, அவள் அனைவருக்கும் கையசைக்க, பதிலுக்கு மற்றவர்களும் கையசைத்தனர்.

வீட்டிற்குள் திரும்பிய ரூபன், “ஏஞ்சல், பேக்கிங் முடிச்சுட்டியா, இல்லனா வேகமா முடி, இங்கிருந்து திருச்சி சிட்டி போய் அப்பறம் ஏர்போட் போகணும்”.

ரூபன், ஆரோக் கிரேஸின் முதல் பையன், அடுத்துதான் நிர்மலா, ரூபன் பொறியியல் முடித்து மேல்படிப்பில் மேனேஜ்மென்ட் முடித்து, தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு MNC நிறுவனத்தில் Financial head ஆக இருக்கிறான். ஆசைக்காகவே அமெரிக்க வாசம், பிற்காலத்தில் சொந்த ஊரில் செட்டில் ஆகவே விருப்பம் அவனுக்கும் அவனவளுக்கும்.

அந்தோணியம்மாள், “ஏண்டா பேரன்டி, ஒரு ரெண்டு நாள் கூட இருந்துட்டு போகற மாதிரி வரக் கூடாதா?”.

ரூபன், “அப்பாயி, திடீருனு போன் பண்ணி தங்கச்சிக்கு ஒரு வாரத்துல கல்யாணம் வானு ரொம்ப கூலா சொல்லியாச்சு, ஆனா நா தான அலஞ்சி திரிஞ்து லீவ் வாங்கி பிளைட் டிக்கெட் ரெடி பண்ணி வந்திருக்கேன், இதுல இன்னும் இரண்டு நாளாம்ல, அதுசரி”.

கிரேஸ், “டேய், சின்னக்குட்டியும் இல்லாம நீங்களும் இல்லாம இருந்தா கஷ்டமாயிருக்குமுனு அத்தை சொல்றாங்க, வேற ஒண்ணுமில்ல, போய் வேலய பாரு”.

தன் அறைக்குள் வந்த ரூபன், பத்து நாட்களுக்கு முன் தன் தந்தை போன் செய்து பேசியதையே நினைத்து பார்த்தான்.
மிட்நைட் மொபைல் ஒலிக்கவும், ரூபன், “ஏஞ்சல் போனடிக்குது
யாருனு பாரு”.

ஏஞ்சல், “ம்ம்ம்ம்… நீயே பாருப்பா, ப்ளீஸ்”.

ரூபன், “கும்பகர்ணன் தங்கச்சிதான் நீ, நகருடி அந்த பக்கம்”, எனக் கூறி, போனை எடுத்து, “ஹலோ” என்றான்.

மறுமுனையில் ஆரோக், “ரூபா, ஒரு முக்கியமான விஷயம் பேசனும்ப்பா, அதான் போன் போட்டேன், தூங்கிட்டு இருந்தியா?”.

ரூபன், “இல்லப்பா, முழிச்சுட்டேன், சொல்லுங்க”.

ஆரோக், “மருமக, பேத்தி எல்லாம் எப்படி இருக்காங்க? நல்லாயிருக்காங்களா?”.

ரூபன், “எல்லாரும் நல்லா இருக்கோம், நீங்க சொல்லுங்கப்பா” என்று படப்படத்தான்.

ஏன்னா, அப்பா இந்த நேரம் பேச மாட்டரே, யாருக்கு என்னவோ என்றுதான் கொஞ்சம் டென்ஷனாயிட்டான். இந்த பதற்றம் ரூபனுக்கு மட்டுமில்லைங்க, சொந்த நாட்டையும், ஊரையும், சொந்தங்களைப் பிரிந்து, உலகில் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும், தம் வாழ்நாளின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படக் கூடிய ஒன்றுதான்.

ஆரோக், “ரூபா, நம்ம சின்னக்குட்டிக்கு மாப்பிள பாத்துருக்கேன், இன்னும் பத்து நாள்ல கல்யாணம். நீங்க உடனே கிளம்பி வாங்க”.

ஏற்கனவே டென்ஷல இருந்த ரூபனுக்கு இன்னும் கொஞ்சம் கூடவும் கத்த தொடங்கினான், “அப்பா, என்ன திடீருனு, என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கல, மாப்பள யாரு என்னனு சொல்லாம, எதுவா இருந்தாலும் நா சரினு சொல்லாம என் தங்கச்சிக்கு கல்யாணம் நடக்கக் கூடாது, நானும் விட மாட்டேன், நீங்க மாப்பள வீட்டுல இருந்து வந்து பேசினா இரண்டு நாள் போகட்டும், அப்பறம் பதில் சொல்றோமுனு சொல்லுங்க, இப்ப எதுனால இந்த முடிவுனு எனக்கு விளக்கமா சொல்லுங்க”.

ஆரோக், அன்று மனைவி மற்றும் தங்கையின் குடும்பத்தாருடன் சென்ற போது, அங்கு என்ன நடந்தது என்பதை விவரிக்கலானார்.

அக்ஸிலீயா முதல் ஆளாக இறங்கி வீட்டிற்குள் நுழைந்தும், அங்கு சோபாவில் அமர்ந்திருந்தவர்களைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்றார்.
 
Top