Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சலசலக்கும் சொந்தங்கள்-அத்தியாயம்2

Advertisement

BelsyPrabhu

Active member
Member
சலசலக்கும் சொந்தங்கள்
அத்தியாயம் 2

முறைத்துப் பார்த்தவனைக் கண்டு கொள்ளாமல் அப்பெண் மீண்டும் ஆரோக்கியசாமியிடம் “உங்களுக்கு யார் வேணும்?” என்றாள்.

அப்போதுதான் வெளியே வந்த இராயப்பனின் பங்காளி, “பாப்பா, அவர்தான் உங்க மாமா” எனக் கூறிவிட்டு “வாங்க” என்று கைக்கூப்பினார். பிறகு அனைவரையும் வீட்டிற்குள் அழைத்து சென்றார். யாரும் எதுவும் பேசாமல் அவர் பின்னாலேயே சென்றனர்.

வீட்டிற்குள் செல்லும் முன் அவளருகில் வந்த பீட்டர் “பாப்பாவாம் பாப்பா, பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு, பூசணிகா” என கலாய்த்து விட்டே சென்றான்.

அவளுக்கு கோபமாக வந்தது, பின்ன என்னங்க 50கிலோக்கும் குறைவா அதாங்க 49.9கிலோதான் அவளோட வெயிட்டு, இப்படி சொன்னா எப்படி இருக்கும் அவளுக்கு. பின்னோடே வீட்டிற்குள் நுழைந்தவளும் அவனை பார்த்து முறைத்து விட்டே சமையலறையில் இருக்கும் அம்மாவிடம் சென்றாள்.

வீட்டிற்குள் இருந்த இராயப்பனுக்கோ, அவர் மனைவி அந்தோணியம்மாளுக்கோ எவ்வாறு இச்சூழ்நிலையை எதிர் கொள்வதென்று தெரியவில்லை. ஏனெனில் பல வருடங்கள் என்பது ஐந்தாறு வருடங்கள் அல்ல, சுமார் முப்பத்திரெண்டு வருடங்களுக்கு பிறகு நேருக்கு நேர் பார்க்கின்றனர். இவர்களுக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்று என இருமக்கள். மகனுக்கு பொன்னுசாமியின் கடைசி மகளையே மணம் முடித்திருந்தனர்.

தங்கையின் திருமணத்தில் ஹென்றி, அதாவது பொன்னுசாமியின் இளையமகன், தனக்கும் பெண் பார்த்துக் கொண்டார். தங்கையின் நாத்தனாரான லீமாவை யாருக்கும் தெரியாமல், தங்கையின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட முடிந்திராத நிலையில் கல்யாணம் செய்தார். ஒருவேளை இரு வீட்டினரிடம் தங்கள் காதலைச் சொல்லி போராடி கல்யாணம் செய்திருந்தால் இத்தனை வருட பிரிவு நேர்ந்திருக்காதோ என்னவோ, ஆனால் விதி வலியது என்று சும்மாவா சொல்றாங்க. இவர்கள் திருமணத்தை அறிந்து ஆரோக், ஹென்றியிடம் சண்டையிட, அதற்கு சப்போட் செய்து ஆரோக்கியசாமி வர, பிறகென வழக்கமான பாணியில் இரு குடும்பமும் பிரிந்ததுதான் மிச்சம். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது என்னவோ எந்த தவறும் செய்யாத கிரேஸ்தான். அம்மா வீட்டு உறவை முற்றிலும் இழந்து விட்டார். யாரைச் சொல்லி நோவது, முடிந்து விட்டது எல்லாம்.

தற்போது ரோஸ்லின் தான் “என் பேரன்ங்க கல்யாணத்திலாவது என் மகளுடன் நான் சேர வேண்டும்” என ஒரே பிடிவாதமாக இருக்கிறார், ஆரோக்கியசாமிக்குமே தன் தாயின் எண்ணம் சரியென்றே நினைத்தார். ஏனெனில் அவரும் கடைக்குட்டி செல்லத்தங்கை மேல் பாசம் கொண்டவரே. அதன் பொருட்டே அவர் பெரியதங்கை, தம்பி வீட்டினர் அனைவரையும் வரவழைத்து எல்லோரிடம் தாயின் எண்ணத்தைக் கூறி தந்தையிடம் ஆலோசனைக் கேட்டார்.

பொன்னுசாமி “ஆரோக்கியம், உன் அம்மாவோட நினைப்புதான் எனக்கும், ஆனா நாம திடுதுப்புனு போய் நின்னா சரிவருமானு தெரியல”.

உடனே ஹென்றி, “எனக்குமே இத்தனை வருஷமா என் பொண்டாட்டிய அவ குடும்பத்திலே இருந்து பிரிச்சு வச்சு இருக்கோம்னு குற்றவுணர்ச்சியா இருக்கு”.

அக்ஸிலீயா, “செய்றத செஞ்சுட்டு பேசுற பேச்ச பாரு”.

செல்லி “இவ்வளோ நாள் இல்லாம இப்ப எதுக்கு இந்த பேச்செல்லாம்”.

ஆரோக்கியசாமி “ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருக்காம கொஞ்ச அமைதியா இருங்க எல்லாரும்” எனக் கூறி அப்பாவிடம் திரும்பி “அப்பா, அம்மா உங்ககிட்ட முன்னாடியே பேசிருப்பாங்க, நீங்களும் ஏதாவது யோசிச்சிருப்பீங்க, அதனால யோசிச்சத சொல்லுங்க”.

பொன்னுசாமி “சரிப்பா, இப்ப நா நேரிடையா விஷயத்துக்கு வரேன், முதல்ல நாம பங்காளிக இரண்டு பேர்கிட்ட பேசி, அவங்கள நம்ம கிரேஸ் மாமனார் இராயப்பன்கிட்ட தூது விடுவோம்”.

ஆரோக்கியசாமி “அப்ப இன்னைக்கே நா பங்காளிகள்ட்ட பேசுறேன்” எனக் கூறி எழுந்து செல்ல, மற்றவர்களும் அவ்விடம் விட்டு அகன்றனர்.

இவையெல்லாம், வீட்டிற்குள் வந்தவர்களை “வாங்க, உட்காருங்க” எனக் கூறி இராயப்பன் உபசரிக்க, உட்கார்ந்த பொன்னுசாமியில் மனதில் ஓடியது. முதலில் யார் பேச ஆரம்பிப்பது என யோசித்து, அனைவரும் அமைதியாய் இருந்தனர்.

இராயப்பன் பங்காளிதான் “என்னமா கிரேஸு டீ,காபி ரெடியா, கொண்டு வாம்மா”.

உடனே பொன்னுசாமி “இல்ல, குடிச்சுட்டுதான் வந்தோம்”.

ரோஸ்லின் “பரவாயில்ல, வீட்டுக்கு வந்துட்டு ஒண்ணும் சாப்பிடலனா எப்படி” எனக் கூறி தன் மகள் லீமாவைப் பார்த்தார்.

லீமாவும் அப்படியே மெதுவாக நகர்ந்து நகர்ந்து தன் அம்மாவின் அருகில் நின்று கொண்டார். அப்போது கிரேஸும், அவர் மகள் நிர்மலாவும் டீயும், பக்கோடாவும் கொண்டு வந்து எல்லாருக்கும் கொடுத்தனர்.

அப்போது பொன்னுசாமி பங்காளி ஒருவர், “ஆரோக்கியசாமி பசங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் வச்சுருங்காங்க, பொண்ணுங்க வேற யாருமில்ல, மூத்த தங்கச்சி அக்ஸிலீயா பிள்ளைங்க ஜென்சியும் ஜென்னியும்தான்”.

இராயப்பன் “நல்லது, ரொம்ப சந்தோசம்”

மற்றொரு பொன்னுசாமி பங்காளி இராயப்பனிடம் “ஏற்கனவே உங்க சம்பந்தி வீட்ல இரண்டு பொண்ணுங்க கல்யாணம் நீங்கயெல்லாம் இல்லாமலே நடந்துருச்சு. பசங்க கல்யாணத்துலயாவது எல்லாரும் ஒண்ணாயிருக்கணுமுனு ஆசைப்பட்றாங்க”.

இராயப்பன் பங்காளி “இங்கேயும் அப்படிதான், பையன் கல்யாணம் அவங்க தாய்மாமாங்க இல்லாமலே முடிஞ்சு போச்சு”.

பொன்னுசாமி, “முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும், யார் தப்பு சரினு பாக்கறத விட்டுடுவோம்” எனக் கூறி இராயப்பனிடம் “எங்க பேரனுங்க கல்யாணத்தை நீங்க முன்ன நின்னு நடத்திக் கொடுக்கனும்”.

ஹென்றி, “நானும் கொஞ்ச அவசரப்படாம யோசிச்சு செய்திருக்கணும், மன்னிச்சுருங்க”.

லீமா, “அப்பா, அண்ணனே, மன்னிச்சுருங்க” எனக் கூறி அழுதுட்டு இருந்தார். அவருக்கு வேற எதுவும் பேச வரல என்பதுதான் உண்மை.

ஆரோக்கியசாமி, “தம்பி மட்டுந்தா கண்ணுக்கு தெரிஞ்சான், எனக்கும் பொறுமையில்லாம போய்டுச்சு”.

அப்பொழுது கிரேஸ், அப்ப நா யாருக்கும் ஒண்ணுமே இல்லையா என மனதில் நினைத்தார்.

இராயப்பன், “லீமா அழாத, போதும், நடந்ததையே இன்னும் எவ்வளோ நேரம் பேசிக்கிட்டு, திரும்ப எதுவும் வரபோறதில்ல, அதனால கல்யாண வேலையில கவனத்த செலுத்துவோம், என்ன சொல்ற ஆரோக்?”

ஆரோக், “நீங்க சொன்னா சரியாதா இருக்கும்பா” எனக் கூறி, பொன்னுசாமியிடம் “கல்யாணம் எப்போங்க?” என்றார்.

அதற்கு அந்தோணியம்மாள், “இன்னும் பத்து நாள்ல கல்யாணம், மாப்பள”.

இராயப்பன் பங்காளி, “என்ன கிரேஸு, ஒண்ணும் பேசவேயில்ல”.

செல்லி, “ஏன் எங்ககிட்ட பேசக் கூடாதுனு முடிவு பண்ணிருக்கியா”.

கிரேஸ், “அப்படியெல்லா இல்ல அண்ணி”.

அக்ஸிலீயா, “எவ்வளோ வருஷத்துக்கு அப்பறம் பாக்குறோம், நல்லாயிருக்கியாடீ?”.

கிரேஸ், “ரொம்ப நல்லாயிருக்கேன்க்கா, இவ என் பொண்ணு நிர்மலா”.

பக்கத்தில் இருந்த நவ்ரோஜ், “சின்ன பிள்ளையாட்டம் இருக்க, என்ன படிக்கிறீயா” எனக் கேட்டு முடிப்பதற்குள் அவருடைய மொபைல் ஒலிக்க தொடங்கியது.

அந்த பக்கம் தன் இளைய மகளின் அழுக்குரல் மட்டுமே கேட்க, பதறியவர், தன் மனைவியிடம் சென்று, “அக்ஸி, ஜென்னி போன் பண்ணிட்டு பேசாம, அழுதுட்டே இருக்கா, நீ பேசி, என்னனு கேளு” என்றார்.

அக்ஸிலீயா வாங்கி, “ஜென்னி என்னடி, எதுக்குடி அழுற, அக்கா தங்கச்சி இரண்டு பேரும் சண்ட போட்டுகிட்டீங்களா, விஷயத்த சொல்லேன்” எனக் கத்தினார்.

பீட்டர் போனினை அத்தையின் கையில் இருந்து பிடுங்கி, “ஹலோ, ஜென்னி, என்னனு சொல்ல போறீயா இல்லையா” என சத்தம் போட,

அழுது கொண்டே ஜென்னி, “மாமா, உடனே வீட்டுக்கு எல்லாரும் வாங்க, இந்த ஜென்சி பண்ணியிருக்க காரியத்துக்கு, எனக்கு ஒண்ணும் புரியல, ப்ளீஸ்” என்று போனை வைத்து விட்டாள்.

பீட்டர், “ஜென்னி, உடனே வீட்டுக்கு வாங்கனு சொல்லிட்டு போன வச்சுட்டா, வீட்ல போய் முதல என்ன ஏதுனு பாப்போம், கிளம்புங்க எல்லாரும்”.

பொன்னுசாமி இராயப்பனிடம், “சம்பந்தி, வீட்டுக்கு போய்ட்டு பேசுறேன்” என விடைபெற, எல்லாரும் அப்படியே ஒரு தலையசைப்பில் விடைபெற்றனர்.

அனைவரும் வேனில் ஏறி கொண்டிருக்கும் போது, இராயப்பன், “ஆரோக், நீயும் அவங்கக்கூட போயி ஒரு எட்டு என்ன பாத்துட்டு வந்தா, நல்லாயிருக்கும், போய்ட்டு வா”.

ஆரோக், “சரிங்கபா” எனக் கூறி விட்டு, தன் பங்காளியின் மகனுக்கு போன் போட்டு, வீட்டிற்கு வரச் சொன்னார். ஏனெனில் போகும் போது வேனில் சென்றாலும் திரும்பி வர வண்டி வேண்டுமில்லையா?.

வேன் வீட்டை அடைந்ததும் முதல் ஆளாக அக்ஸிலீயா இறங்கி கதவைத் திறக்க, கதவு தட்டப்படும் சத்தத்தில் கண் விழித்தான் பீட்டர்.
 
Last edited:
அருமை பிரிஞ்ச குடும்பம்
ஒண்ணு சேர்ந்தது
இப்ப என்ன பிரச்சினை
 
Top