Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சலசலக்கும் சொந்தங்கள்-அத்தியாயம்10

Advertisement

BelsyPrabhu

Active member
Member
சலசலக்கும் சொந்தங்கள்

அத்தியாயம் 10

வருந்தியவரை மேலும் யோசிக்க விடாது, “நான் ஈவினிக் நிம்மிய ஸ்கூல்லே இருந்து கூட்டிட்டு அங்க போயிருவேன், அதான் சொல்லிட்டு போகலாம்னு, போய்ட்டு வரேன் அப்பாயி, அம்மா” என்று விட்டு ஆபீஸ் கிளம்பினான்.

பீட்டர் ஏற்கனவே போன் பண்ணியிருந்ததால், அதிக நேரம் காத்திருக்க விடாது நிர்மலா வந்தவுடன், இருவரும் அவளின் வீட்டை நோக்கி பயணித்தனர். காரில் அமர்ந்தவளிடம், “நிம்மி, டயர்டா இருந்தா ஜூஸ், இல்ல டீ, காபி எதும் குடிப்போமா?.

நிர்மலா, “வீட்ல போயி குடிச்சுக்கலாம், அத்தான்” என்றவளை திரும்பி பார்த்து விட்டு வண்டி ஓட்டவும், “என்ன, எதுக்கு அப்படி பாத்தீங்க”.

பீட்டர், “உனக்கு உண்மையாவே புரியலயா, நீ என்ன சொல்லி என்ன கூப்ட்ட” எனக் கேட்க, அவள், “அத்தானு தான், ஏன் பழங்காலம் மாதிரி இருக்கா” என்றாள்.

அவன், “அப்படி இல்ல குட்டிம்மா, எனக்கு ஓக்கே, ஆனா இவ்வளவு நாள் இல்லாம, புதுசா என்ன?”, அவள், “அது…. முறை வைச்சு கூப்டலனா, அம்மா திட்டுவாங்க, இந்த அப்பாயி வேற நல்லா ஏத்தி விடுவாங்க”.

பீட்டர், “அடிபாவி, உங்க அம்மா திட்டுவாங்கனு சொல்ற, நா என்னவோ ஆசையில கூப்பிட்டேன்னு சொல்லுவனு நெனைச்சேன், என் நேரம், அது சரி, அப்படியே இருந்தாலும், மாமானு தான சொல்லனும்”.

நிர்மலா, “உங்க அப்பா, தம்பி, சித்தப்பா, இப்படி எல்லாரையும் மாமானுதான் நான் கூப்பிடுறேன், உங்களையும் அதே மாதிரி சொன்னா எப்படி, அதுமட்டுமல்லாம புருஷன அத்தானு கூப்பிடுறது முறைதான்”

அவன், “எது எப்படியோ, ஆனா நீ அத்தானு சொல்றது கிக்காதான் இருக்கு, ஸ்வீட் சாப்பிடலாமா”

அவள், “அடி வாங்குவீங்க, பேசாம வண்டிய ஓட்டுங்க”.

இப்படி பேசியே நிர்மலா வீட்டை இருவரும் அடைந்ததும், காரின் சத்தம் கேட்டு வெளியே வந்த நிர்மலாவின் தந்தை, “வாங்க மாப்பிள்ள, வா சின்னக்குட்டி” என்று வரவேற்றார்.

பீட்டர், “கார் பார்க் பண்ணிட்டு வரேன், மாமா” எனவும் அவர், “நீ உள்ள போமா” என்று விட்டு, வெயிட் செய்து அழைத்து சென்றார்.

மாப்பிள்ளை உபசாரத்தை நன்கு அனுபவித்தான் பீட்டர், நிர்மலாவோ எல்லோரிடமும் செல்லம் கொஞ்சினாள். ஹாலில் அனைவரும் பேசி கொண்டிருக்க, நிம்மி அப்பாயி, “ஆரோக், இங்க பாரு உன் பொண்ண, அவ அம்மா மடியிலே தூங்கிட்டா, கிரேஸூக்கு கால் வலிக்க போகுது” என்றவுடன் பாட்டியிடம் தாத்தா, “எழுப்பி, உள்ள போக சொல்லாம, கதையடிக்கிற” எனக் கூற கிரேஸ், “பாப்பா, எழுந்திரி” என்று திருப்பி எழுப்புவதற்குள் நிம்மி அப்பா, “இங்கேயே தூங்கட்டுமே”, நிம்மி அம்மா, “காலையில, நடு ஹால்ல வெயில் முகத்துல அடிச்சாலும் எழும்பாம தூங்கட்டும், என்ன பிள்ள வளத்துருக்கேன்னு எல்லாரும் பேசட்டும்” என்றார், பீட்டர், “அத்த, மாமா பாவம், விட்டுருங்க, நான் பாத்துகிறேன், நீங்க எல்லாரும் போங்க” என்றுரைக்க, அவர்களை, போங்க என்றவன், “நிம்மி” கூப்பிட்டான். ‘இவ எவ்வளவு கூப்ட்டாலும் அசையுற மாதிரி தெரியல, பலத்தைக் காட்ட வேண்டியதுதான்’ என்று நினைத்து, சட்டென்று அவளைத் தூக்கி கொண்டு அறையை நோக்கி நடந்தான். காலையில் எழுந்த நிம்மி, தலையை தூக்க, முடியாமல் நன்கு கண்திறந்து பார்க்க, அவள் கூந்தல் அவனின் தலைக்கு அடியில் இருந்தது. அறையை நோட்டமிட்டவள், ‘நைட் அம்மா மடியிலே தூங்குன மாதிரியே இருந்துச்சே, வெளிச்சம் வேற நல்லா தெரியுது, இவ்வளவு நேரமா தூங்குறதுனு, இந்த அம்மா என்ன உண்டு இல்லனு ஆக்கப் போறாங்க, நா எப்படி எழுந்திரிக்க’ என்றெண்ணி அவன் தலையை மெதுவாக தூக்க, “ஹே, சும்மா தொல்ல பண்ணாம தூங்கு” என்றதோடில்லாமல் அவளை இழுத்து விட்டவன், அவளை அணைத்து கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தான். அவனை உலுக்கியவள், “எங்க அம்மா கத்துறதுக்குள் வெளிய போயிறேன், அத்தான் ப்ளீஸ்”, அவன், சரி போ” என்று கூறி அவளை விட்டான்.

அந்த நாள் முழுவதும் நிம்மியும், பீட்டரும் பிஸியோ பிஸி. ஆமாங்க, அவளின் அப்பா அவனை தங்கள் வயல், ரைஸ் மில் என்று அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார் என்றால் அவளோ அம்மா, அப்பாயி, தாத்தா என்று மாறி மாறி வாயாடினாள். அடுத்து வந்த நாட்கள் இறக்கை கட்டிப் பறந்தது. கிறிஸ்மஸ் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, இருவரும் ஷாப்பிங் சென்று திரும்பி வரும் பொழுது, தன் பிறந்த வீட்டிற்கு வந்த ஒன்று விட்ட அத்தையை வழியில் பார்த்த நிம்மி அவரிடம் பேச சென்றாள், அவரோ, “நல்லாயிருக்கியா, என்ன இந்த பக்கம், உங்க மாமியார் வீடு அளவுக்கு தான் நாங்க வசதி கிடையாதே, எங்க வீட்டுக்கெல்லாம் நீ வருவியா”.

அவளோ, “ஏன் அத்த இப்படி பேசுறீங்க, நான் உங்ககிட்ட பேசலாம்னு தான் வந்தேன், நீங்க என் மாமியார் வீட்ட பத்தி பேசுறீங்க, எனக்கு ஒண்ணும் புரியல, புரியற மாதிரி சொல்லுங்க”.

அந்த அத்தையோ, “உங்க அம்மாகிட்டயே கேளு” என்று விட்டு வீட்டிற்குள் சென்று விட்டார். இது எல்லாத்தையும் காரில் இருந்து கவனித்தவன், “என்னம்மா, பிரச்சனை”, அவளோ, “வீட்ல என்னனு கேட்டுக்கலாம், இப்ப போகலாம்”.

நிம்மியின் அம்மாவீடு, முன்புறம் முற்றம் என்றால் பின்னாடி தோட்டம் இருந்தது, அதில் அதிக இடைவெளியுடன் இரும்பினால் கூரை அமைத்து, முல்லை கொடி பந்தலை ஒருபுறம், மல்லிகை கொடி பந்தலை மறுபுறம் படரவிட்டுயிருப்பர். நிறைய கீரைகளையும், இவள் ஆசைக்கு ரோஜா செடிகளையும் வளர்கின்றனர்.

வீட்டை அடைந்ததும் பின் பக்க தோட்டத்தில் மல்லிகை பறித்த அம்மாவிடம் நிம்மி, “அம்மா, இந்த சாந்தா அத்தைக்கு என்னாச்சு, நான் போய் பேசுனா முகத்த திருப்பிகிறாங்க”.

அம்மா, “அதுவா, எல்லாம் உங்க தாத்தா செய்த வேல, உங்க அத்த, அவ பையனுக்கு உன்ன கேட்டுருப்பா போல, உங்க தாத்தா அதுக்கென்ன முடிச்சுகலாம்னு சொல்லியிருக்கார், இப்ப உங்க கல்யாணம் முடிஞ்சதால, நீங்க எப்படி என் பையனுக்கு நிம்மிய தராம, அவங்க கேட்கவும் கொடுக்கலாம்னு கோவிச்சுகிட்டா போல, ஊருக்கு வந்தா நம்ம வீடே கதினு இருப்பா, நாலு நாளாச்சு இன்னும் இந்த பக்கம் வரல”.

இவள் அறையை அடைந்ததும் பீட்டர், “என்ன உனக்கு டிமாண்ட் அதிகம் போல” என்றவாறு நெருங்கவும், “நீங்க எதுக்கு பக்கத்துல வரீங்க”.

அவன், “ரொம்ப நாளா வெறும் ஸ்வீட் மட்டும் சாப்பிடுறேன், கொஞ்சம் பஞ்சுமிட்டாயை மொத்தமா முழுசா சாப்பிடலாம்னு தான் பக்கத்துல வரேன்”, அவளோ, “இது பகல், நைட் இல்லத்தான்”, “அதெல்லாம் எங்களுக்கு தெரியும்” என்றவாறே, அவளை ஒரே இழுப்பில் அருகில் கொணர்ந்தவன் அவளைத் தன்னுடையவளாக்கி கொண்டான். அவன் நெஞ்சில் தலை சாய்த்திருந்தவளின் கேசத்தைத் தடவி, “இன்னைக்கு நாம நம்மளோட அடுத்த அடிய எடுத்து வச்சுருக்கோம், குட்டிம்மா, இனி நம்ம எப்பவும் பிரியாம ஒண்ணாவே சேர்ந்து இருக்கனும்”.

அவள், “நாம ஏன் பிரிய போறோம், அப்படியெல்லாம் நடக்காது”.

அவனோ, “கணவன்-மனைவிக்குள்ள கருத்து வேறுபாடு வரவே வராதுனு சொல்ல முடியாது, அப்படி வந்தா நாம ரெண்டு பேரு பேசி தீர்த்துக்கனும், அத விட்டுட்டு தனியா போக கூடாது”

பின்னாளில் அவள் அதைதான் செய்வாள் என்றியாது, “டீல் ஓக்கே” எனக் கூறி சிரித்தாள். அடுத்த நாள் அவர்கள் வீட்டு தோட்டத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்த போது, சாந்தா அத்தையும், அவர் மகனும் வந்தனர். அவர் மகன் ஆரோக்கிடம், “மாமா, இப்ப தான் ஊர்லே இருந்து வந்தேன், நிர்மலா வந்திருக்கறதா கேள்விப்பட்டேன், அதான் பாக்கலாம்னு” என்றவன் “எப்படி இருக்க நிர்மலா, நல்லாயிருக்கீங்களா அண்ணே?”

நிம்மி, “நாங்க நல்லாயிருக்கோம், நீங்க”.

நிம்மியின் அப்பா, “ஏன்டா, மாப்பிள்ள, எப்ப நீ உங்க அம்மாகிட்ட உண்மைய சொல்ல போற”.

இதைக் கேட்டதும், அவனோ, ‘எதப்பத்தி பேசுறாருனு தெரியலையே’ என்று உள்ளுக்குள் படப்படத்தவன், “மாமா….என்ன சொல்ல வரீங்க” அவரோ, “நிம்மிய உனக்கு கட்டித் தரலனு, உங்கம்மா கோவிச்சுட்டு இருக்காங்க” என்றது தான் தாமதம் உடனே பதற்றத்துடன், “மாமா, எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்ல, என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்க” என்று அவன் அம்மாவிடம் காய்ந்தான்.

ஆனால் நிம்மி அப்பாவோ, “உன்னோட மனசுல யார் இருக்கானு சொன்னாதான் உங்கம்மாக்கும் புரியும், பெத்தவங்க பிள்ளைக நல்லாயிருக்கனும்னுதான் நெனைப்பாங்க, உங்கம்மா மட்டும் என்ன அதுக்கு விதிவிலக்கா?, நீ நிதானமா வீட்ல போயி உங்கம்மாகிட்ட மனசு விட்டு பேசு”.

இவை அனைத்தையும் கேட்ட சாந்தா, “அண்ணே, மன்னிச்சுருங்க, நீங்க பேசவும் தான் ஏதோ விஷயம் இருக்குனு புரியுது. எனக்கு நம்ம சின்னக்குட்டிய ரொம்ப பிடிக்கும், அதான் அப்படி பேசிட்டேன்”

“எனக்கு இது புரிஞ்சதால தான், கூப்பிட்டு வச்சி பேசுறேன், இல்லனா நீ யாரோ, நான் யாரோனு சொல்லியிருப்பேன், சரி பையன கூட்டிட்டு போயி நல்ல விதமா பேசி முடிங்க” என்று விடைக்கொடுத்தார். மற்றவர்கள் ஒன்றும் பேசாமல் வேடிக்கைதான் பார்த்திருந்தனர். ஏனெனில் ஆரோக் தேவையில்லாமல் யார் விசயத்திலும் தலையிட மாட்டார். சாந்தா தன் அப்பாவின் மூலம் பெண் கேட்டதை அறிந்த ஆரோக், ஏற்கனவே சாந்தா மகன் காதலிப்பதைக் கூறி நான் சாந்தாவிடம் பேசுறேன் என்றிருந்தார். ஆனால் பேசுவதற்கு நேரமின்றி மடமடவென்று நிர்மலா-பீட்டர் திருமணமும் முடிந்திருந்தது. தன் பெண்ணிடம் ஒருவர் முகம் திருப்புவதா என்றே சாந்தாவையும், அவர் மகனையும் அழைத்து முடித்து வைத்தார்.

ஒரு வாரத்திற்கு மேல் மாமியார் வீட்டில் தான் பீட்டர் இருக்கிறான். அவசர தேவைக்கு அலுவலகம் செல்லவும் மறக்கவில்லை, இருப்பினும் அவன் தன் வீட்டினரையும் மிஸ் செய்தான், குறிப்பாக, பேட்ரிக்கை. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை, அவன் மனைவி, அவனது வார்த்தைகளை வைத்தே கண்டுக் கொண்டாள். நியூ இயருக்கு முதல் நாள் காலையிலே தோட்டத்திற்கு சென்று, யாருமறியாமல், மாமியாருக்கு போன் போட்டாள், அந்த பக்கம் அவர் எடுத்ததும், மிக மெதுவாக முடியாதவள் பேசுவது போன்று, ஆனால் அதிகாரமாக, “நீங்கெல்லாம் என்ன மாமியாரு, மருமகளுக்கு உடம்பு சரியில்லன்னா என்ன ஏதுனு எல்லாம் கேட்க மாட்டீங்களா? விட்டது தொல்லையுனு நெனச்சீங்களோ, என்ன பாக்க எல்லாம் வந்துறாதீங்க, சந்தோஷமா இருங்க” என சொல்லி பட்டென்று கட் பண்ணிவிட்டாள்.

அங்கு பீட்டர் அம்மா செல்லியோ, வீட்டினர் அனைவரையும் அழைத்து, அவள் பேசியதை சொல்லி, நம்ம உடனே நிம்மிய பார்க்க போகலாம்னு கிளம்ப சொல்லி அவசரப்படுத்தினார். செல்லி படுத்தியப்பாட்டில் அனைவரும் பதற்றமாயினர். ஜென்னியும் பேட்ரிக்கிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்து வந்தாள். அப்போது அங்கு வந்த பேட்ரிக், “அம்மா, கொஞ்சம் நேர முன்னாடி கூட பீட்டர்ட்ட பேசுனேன், அவன் ஒண்ணும் சொல்லல, நீங்க டென்ஷன் ஆகாதீங்க, இப்ப என்ன அங்க நடக்குதுனு தெரிஞ்சுக்கலாம், நா பீட்டருக்கு போன் போடுறேன், இருந்தாலும், உங்க மருமக உங்ககிட்ட மட்டும் பேசி வச்சுருக்கானா, ஏதோ ஏடாகூடமா செய்றாளோனு தோணுது, இருங்க, இப்ப தெரியும்” என்றவன் பீட்டருக்கு போன் அடித்து ஸ்பீக்கரில் போட்டான்.

போனை அட்டென்ட் செய்த பீட்டர், “ஏன்டா, இப்பதான பேசுனோம், என்னத மறந்த”.

பேட்ரிக், “அது ஒண்ணுமில்ல, அங்க எல்லாரும் எப்படி இருக்காங்கனு விசாரிக்கலையா, அதான் பேசுலாம்னு, ஆமா, நம் அண்ணி எப்படி இருக்காங்க” என்றதும் “அடேய் முறைய மாத்தாத, எனக்கு அவ பொண்டாட்டி” என்றுக் கூற, “கொசு ரொம்ப கடிக்குதே, அடி வாங்கி சாகப் போகுது பாரு” என்றான்.

பீட்டர், “சரி, சரி, அவளுக்கென்ன நல்லா ஜாலியா அவ வீட்ல உள்ளவங்க பின்னாடி சுத்திக்கிட்டு, ஊரு கதை பேசிகிட்டு, அத்த சமைக்கிறத சாப்பிட்டுகிட்டு இருக்கா”.

இதைக் கேட்டதும், செல்லி இந்த பக்கமிருந்து பல்லைக் கடிக்க, மற்றவர்கள் புன்னகைத்தனர். “அதுசரி, என்ன ரொம்ப அக்கறையாக உன் அண்ணிய பத்தியெல்லாம் விசாரிக்கற, சரியில்லையே, விஷயம் என்னனு சொல்லு” “அதுவா” என்ற பேட்ரிக் தங்கள் அம்மாவிடம் நிம்மி பேசியதை சொல்லவும், பீட்டர், “அவளுக்கு சேட்ட கொஞ்சம் கூடதான், நான் என்னனு கேட்டுட்டு திரும்ப கூப்பிடுறேன்” எனக் கூற, பேட்ரிக், “அதெல்லாம் வேணா, போன் ஆன்லே இருக்கட்டும், நீ கேளு” என்றுரைத்தான்.

பீட்டர், “என்ன வெச்சே என் பொண்டாட்டிய வேவு பாக்க போறீங்களா, இது ஓவர்டா”, என்றுவிட்டு, அவளைத் தேடி சென்று, அவளிடம் “நிம்மி, எனக்கு இங்க நெட்வொர்க்கே கிடைக்க மாட்டேங்குது, உன் போனக் கொடு” எனவும், அவள் போனை வாங்கி போன் கால் பட்டனை அழுத்தி விட்டு, அட, அம்மாக்கு பேசியிருக்க போல, என்ன விஷயம்?”.

அவள், “மாமியார் மருமகள்க்குள்ள ஆயிரம் இருக்கும், உங்களுக்கு என்ன?” என்றதும் செல்லி, “என் புள்ள பாவம், அவன ஏய்ச்சுருவா” என்றார்.

அவனோ, “நீ சொல்லல, நான் அம்மாக்கு போன் பேசுறேன்”, அவள், “ஓவரா போறீங்க, இப்ப என்ன பேசுனேன்னு தெரியனும், அவ்வளவுதான, அது…எனக்கு உடம்பு சரியில்ல, என்ன யாரும் பாக்க வரலனு சொல்லிட்டு வச்சுட்டேன்”

அவன், “எதுக்கு இந்த வேலைய பாத்துருக்க”

அவள், அதுவா… என் மைன்ட்ல அவங்கள நீங்க மிஸ் பண்றீங்களோனு தோணிச்சு, அப்பறம் உங்க அந்த வாலு, ஒட்டுபுல்லு, இல்ல இல்ல, அன்பு தும்பிய, கண் தேடுதேனு, தேடிட்டு இருக்கீங்களோனு நெனச்சு, அவங்கள வரவழைக்க தான் அப்படி சொன்னேன்” எனவும் மறுமுனையில் இருந்தவர்களுக்கு, பேட்ரிக்கைப் பற்றி அவள் சொன்னதைக் கேட்டு சிரிப்பு வரவும், அவன் முறைத்தான்.

பீட்டர், “எங்க அம்மாட்ட உனக்கு உடம்பு சரியில்லனு சொன்னா, உடனே வந்திருவாங்களா? எல்லாருக்கும் வேல வெட்டி இல்ல பாரு”.

நிம்மி, “ஹலோ, என்ன நெனச்சீங்க என் மாமியார பத்தி, அவங்களுக்கு, உங்களுக்கு நான் கம்மியோனு முன்னாடி மனசுல இருந்திச்சு, அப்படி, இப்ப இல்ல, கூட உங்களையும் பார்க்க தோணும்ல அவங்களுக்கு, அதனால அவங்க கிளம்பி, கூடவே அத்த பின்னாடி மாமா, மாமா பின்னாடி தாத்தா, அம்மாச்சினு கிளம்பிருவாங்க, ஆனா இந்த உங்க தம்பிதான் சீன் போடலாம், ஜென்னி அக்காகிட்ட ஏற்கனவே பேசிட்டேன், அதனால அக்கா வரும்போது கூட்டிட்டு வருவாங்க”.

அந்த பக்கமிருந்து ஜென்னி, ‘ஐய்யோ, போட்டு கொடுத்துட்டாலே’ என்று நினைக்க, ரோஸ்லின் பாட்டி, “கூட்டு களவாணிக” என்றார்.

பீட்டர், “வந்த விஷயத்த மறந்துட்டேன் பாரு, போன் பேசிட்டு வரேன்” என்று வெளியே வந்து போனைக் காதில் வைத்து, “என்னடா போதுமா, வேவு பார்த்தது”.

பேட்ரிக், “என்ன டேமேஜ் பண்ண சொல்லி கொடுத்துருக்க போல”.

பீட்டர், “அவளுக்கா சொல்லி தரணும், நமக்கே அவ சொல்லி தருவா, சரி அதான் எப்படியும் இங்க வர பிளான் பண்ணியாச்சுல, எல்லாரையும் அழைச்சுட்டு மதிய சாப்பாட்டுக்கே வந்துருங்க, இங்க, நான் அத்தகிட்ட சொல்லி ஏற்பாடு செஞ்சுறேன்” எனக் கூறி போனை வைத்தான்.
 

Advertisement

Top