Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா's சூரியனவனின் ஆழ்கடல்.....

Advertisement

Joher

Well-known member
Member
சரண்யா ஹேமா's சூரியனவனின் ஆழ்கடல்.....

அலங்காநல்லூர் நிஜ ஜல்லிக்கட்டு மாதிரியே ஒரு வர்ணனையோடு அறிமுகமாகிறான் அருள் ஜோதி...... மாட்டை அடக்கி காய் நிறைய பரிசு வாங்கினாலும் காயத்தோடு இருப்பதால் அடுத்த காளையை அடக்க முடியாத வருத்தத்தோடு திரும்புகிறான்..... வந்ததும் அக்காவின் கையால் மாத்து வாங்கி நிற்கும் போது தான் தெரியுது விஷயம் அக்கா மகள் மின்னொளி மூலம் தெரித்திருக்கிறதென்று........

கோபத்தோடு அவளை பார்க்கும் போது பேச இருவரும் மல்லுக்கட்ட கடைசியில் சமையாமலேயே குமரியாகிட்டியோ னு 16 வயது மின்னுவிடம் கேட்டு விடுகிறான் மாமன்......

அம்மா இல்லை....... சித்தி தான்...... அப்பா சித்தி பாட்டி யாரோடும் எந்த உரிமையான பேச்சும் இல்லை அம்மாவுக்கு பின்....... அவளின் உணர்வுகளோடு தனிமையில் போராடும் நேரம் வந்து சிக்குகிறான் தர்மராஜ்....... அவனின் போக்கு சரியில்லைன்னு சொன்னாலும் ஒத்துக்கொள்ளாத அம்மா அன்னம்........ மின்னுவின் மேல ஆசையில் இருக்கும் அவன் அவளிடமே குடித்துவிட்டு சிக்க அவனை அவமான படுத்தி அனுப்புகிறாள்....... இருந்தும் அவளை அடையும் நோக்கில் friend மூலம் அவளை அவமானப்படுத்திவிடுகிறான் ஊரார் முன்........ பின்னர் அம்மாவிடம் அவளை எனக்கு பிடிக்கும் எனக்கு கல்யாணம் பண்ணிவை னு கேட்கிறான்.....

தர்மராஜ் அம்மா அன்னம் வந்து பொண்ணுக்கேட்க மறுத்துவிடுகிறார்கள்....... தப்பு மின்னு மேல் இல்லையென்றாலும் ஒரு அப்பாவா அவளுக்கு திருமணம் நடத்திடனும் என்று அருளிடம் கேட்க அவன் அக்காவிற்கு இது விருப்பமில்லை என்று தெரிந்ததால் மறுத்துவிடுகிறான் அருள்...... இது தெரியாமல் அருளை மிரட்டி பரிசம் போடவா என்று சொல்லிவிடுகிறாள் மின்னு.....

சொன்னபடி அவனும் வர தர்மராஜ் இப்போவும் சண்டைக்கு வர மின்னுவிடம் எல்லோர் முன்னிலையிலும் அருள் கேட்க
சம்மதம் ஒன்னிய மட்டுந்தேன் கட்டிக்க சம்மதம் னு சொல்லிவிடுகிறாள்......

தர்மராஜ் செய்யும் வேலையால் கல்யாணம் உடனே நடத்தப்பட கீரியும் பாம்பும் அருள் மின்னு
எப்படி எங்களை பாவம் பண்ண விட்டு நீயி சாமியா ஒசந்துட்டடி...
சொல்லும் அளவுக்கு அவளின் உணர்வுகளை கொட்டி வாழ்க்கையில் எதிர்பார்க்கும் விஷயங்கள் அம்மா இல்லாத நிலையில் யாருடைய கவனிப்பையும் ஈர்க்காதுனு உணரவச்சுட்டா......
அவளோட இன்னொரு பக்கம் படிச்சு தெரிஞ்சிக்கோங்க......

தம்பி இளவரசன், பாட்டிகள் காசியாத்தா, அழகு, அப்பா முருகய்யன் முக்கியமா அதை குணசாலி னு ஒரு கிராமத்து சொந்தத்தை பார்க்கிற மாதிரி ஒரு கதை......
மனசெல்லாம் பாசம் கொட்டி கிடந்தாலும் சரணின் நாயகி இங்கே அவளை காத்துக்கொள்ள போடும் அடாவடி முகமூடி அழகு......
அதுவும் அவளோட தரப்பை விளக்கும் இடங்கள் சூப்பர்......

அப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணும் ஒரு பெண்ணின் மனசை அழகா ஊர் பாஷையில் சொல்லியிருக்காங்க.......
வட்டார தமிழ் பேசும் கதை.....

Best wishes Saran ? ? ?
 
தேங்க் யூ சோ மச் ஜோ அக்கா :) :)

வேற என்ன சொல்லன்னு தெரியலை :)

அவ்வளோ சந்தோஷமா இருக்கு :)

இந்த சொல்வழக்கு எழுத ஆரம்பிக்கும் போது முடியுமான்னு ஒரு சின்ன தயக்கம் கூட இருந்துச்சு.

தெரியாத ஒரு ஸ்லாங். டைப்பிங்ல எப்டி கொண்டுவரன்னு

இது போட்டிக்கான கதை. கண்டிப்பா ஸ்டெப் எடுக்கனும்னு தான் இதை முடிவு செஞ்சது :)

இப்ப எல்லோரோட கமெண்ட்ஸ் ரொம்பவே எனர்ஜி குடுத்திருச்சு.

நீங்க கூட சொல்லிருப்பீங்க. சரண் ஹீரோல இவன்வேறன்னு. அருள் வேறு தான் :)

தேங்க் யூ சோ மச் அக்கா :)
 
Top