Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை-20

Advertisement

praveenraj

Well-known member
Member
இங்கே வீட்டில் அவர்கள் எல்லோரும் இந்திரனுக்கும் ஸ்ரீகும் ஒத்து வராது என்று பயந்தது எல்லாம் வெறும் பகல் கனவாகவே மாறியது. ஏனெனில் அவர்களுக்குள் அவ்வளவு நெருக்கமும் புரிதலும் ஏற்பட்டிருந்தது. இந்த ஒரு மாதத்திலே இந்திரனின் குணத்தில் நிறைய மாற்றங்கள் தென்பட தொடங்கியது. எதற்கெடுத்தாலும் சட்டு சட்டு என்று கோவப்பட்டு எரிந்து விழுபவன் இப்போதெல்லாம் ரொம்பவும் மென்மையானவனாக மாறியிருந்தான். சகுந்தலாவுக்கும் இமையவர்மனுக்கும் இவன் தான் அவர்கள் மகன் இந்திரனா என்னும் அளவுக்கு சந்தேகமே வந்ததும் நிஜம் . ஆனால் ஒன்றை நன்றாக புரிந்தும் கொண்டார்கள். என்ன தான் இந்திரன் கொஞ்சம் ரப் ஆனவன் என்றாலும் அதற்கு முக்கியக் காரணம் சின்ன வயதில் அவனை தாங்கள் கண்டித்து வளர்க்காததும் மேலுமவன் அவனின் தாத்தாவிடம் வளர்ந்த விதமும் தான் காரணம் என்று சகுந்தலாவும் இமையவர்மனும் புரிந்துகொண்டனர். இதுநாள் வரை அவர்களின் ஒற்றுமையையும் அவர்களின் காதலையும் இருவரும் கவனிக்க இவர்கள் தவறவில்லை.

தினமும் மாலை கொஞ்சம் கொஞ்சம் நடைப்பயிற்சி மேற் கொள்வது முதல் வெளியே எங்கேயாவது காற்றாட நடந்து வருவது வரை அவனுக்கு எல்லாவற்றுக்கும் ஸ்ரீ தான் தேவை பட்டாள். ஸ்ரீக்கும் தன்னை அவன் ஒவ்வொரு விஷயத்திற்கும் அழைப்பதும் அவளை எதிர்பார்ப்பதும் மிகவும் பிடித்து இருந்தது. இந்திரனைப் பார்த்துக்கொள்ளும் சாக்கில் இப்போதெல்லாம் இங்கேயே தங்கிக்கொள்ள ஆரமித்து விட்டாள் ஸ்ரீ.

அன்று காலையில் எல்லோரும் உணவருந்த டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க இந்திரனின் கையைப் பிடித்து அழைத்து வந்தாள் ஸ்ரீ. இப்போது ஒன்றிரண்டு நாட்களாய்த் தான் கீழே டைனிங் டேபிளுக்கு வந்து சாப்பிடுகிறான். அன்று கதிரவனும் வந்திருந்தான். இமையவர்மன், கதிரவன், இந்திரன், கமலேஷ், சகுந்தலா என்று எல்லோரும் அமர்ந்து சாப்பிட ஸ்ரீயும் சிந்துவும் அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் பரிமாறிக்கொண்டு இருந்தனர். சிந்து ரகசியமாய் யாரும் பார்க்கா வண்ணம் கதிரவனைப் பார்த்து கண்ணடித்து உதடு குவிக்க உண்மையில் வெடவெடத்துப் போனான் கதிரவன். அருகில் இந்திரன் எதிரில் அவன் பெற்றோர்கள் பின்னால் ஸ்ரீ இப்படி எல்லோரும் இருக்கும் போது சிந்து செய்தது அவனுக்குள் குதூகலத்தைக் காட்டிலும் அதிக பயத்தைத் தந்தது. திருதிருவென விழித்து அருகில் யாரேனும் இதைப் பார்க்கிறார்களா என்று பார்க்க நல்ல வேளையாக எல்லோரும் சாப்பிடுவதிலே குறியாக இருந்ததால் இதை யாரும் கவனிக்கவில்லை என்று ஆசுவாசமடைந்தான்!

தங்களுடைய மேற்படிப்பை முடித்து இந்திரனும் கதிரவனும் இணைந்து ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் அவன் அவர்களின் பிஸினஸுக்கு வரவில்லை. வரவில்லை என்பதைக் காட்டிலும் வரவிடவில்லை எனலாம். அவனுக்கு ஒரு நிறுவனத்தை ஏற்று நடத்தும் திறமை இருக்கிறதா என்பதை சோதனை செய்யவே அவனை இமையவர்மன் விட்டுப்பிடிக்க அதை உணந்தவனாக அவனும் கதிரவனும் வெளிநாட்டில் mba முடித்ததும் அவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினர். சரி பணத்திற்கு தன்னிடம் வருவான் என்று எதிர்பார்த்த இமையவர்மனுக்கு ஆச்சரியம் தரும் விதமாய் 'கிரௌட் பண்டிங்' (crowd funding -நிறைய மனிதர்களிடமிருந்து சிறிய தொகையை மூலதனமாகப் பெற்று தொழில் தொடங்கப் படும் ஒரு முறை தான் இது. இதற்கென்று பிரத்தியேகமான வலை தளங்கள் இருக்கிறது. அதன் மூலம் நிதியைத் திரட்டிவிடலாம்.) மூலமாகவே இந்திரனும் கதிரவனும் அவர்கள் உடன் படித்த மாணவர்களை ஒன்று திரட்டி தங்கள் ஸ்டார்ட் அப்பை ஆரமித்தனர். தன் செயலால் தந்தையைத் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவன் அப்போதே செயல் படுத்தியிருந்தான். அந்த ஸ்டார்ட் அப் நல்ல நிலையில் தான் சென்று கொண்டு இருந்தது.

ஏற்கனவே இந்திரனின் திறமைகள் தாமோதரனுக்கு நன்கு தெரிந்ததால் அவனை உடனே தங்கள் நிறுவனத்தில் சேர்த்துகொள்ள வேண்டும் என்று அவர் சொல்ல அவனோ வேறு திட்டத்தில் இருந்தான். அன்று சாப்பிடும் போது தான்,"அப்பா நான் நம்ம கம்பெனில கொஞ்ச நாள் ஒர்க் பண்ணலாம்னு இருக்கேன்..." என்று இந்திரன் சொல்ல உண்மையில் சகுந்தலாவிற்கு இப்போது தான் நிம்மதி பிறந்தது. பின்னே தங்கள் நிறுவனத்தில் இருந்தால் அவன் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இல்லையே? வெளிநாடு செல்லாததால் ரேஸ் அப்படி இப்படி என்று இனி திரிய மாட்டான் என்று எண்ணம் அவருக்குள் மகிழ்ச்சியைத் தந்தது. மேலும் ஸ்ரீயும் படிப்பை முடிக்கவுள்ளதால் இருவருக்கும் திருமணம் செய்திடவும் அவர் விரும்பினார். இந்திரனை வார எண்ணிய சிந்து,"அப்பா அண்ணா எதுக்கு அடிபோடுறான் தெரியுமா?" என்று சொல்லி நிறுத்த,

மகளின் எண்ணத்தை அறிந்தவராக,"எதுக்கு மா?" என்று உற்சாகமாய் உரைத்தார் இமையவர்மன். இரண்டு ஆண்பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே பெண் என்றதாலும் வீட்டின் கடைக்குட்டி என்பதாலும் சிந்துஜா அவருக்கு எப்போதும் ஸ்பெஷல்.

"அப்போ தான் நீங்க அவனுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணி வெப்பீங்கனு?" என்று இழுத்து முடித்தாள். வீட்டில் எல்லோருக்கும் இந்திரனுக்கும் ஸ்ரீகும் நடுவில் இருப்பது புரிந்தாலும் யாரும் தெரியாதது போல் இருக்க இந்திரன் சிந்துவை முறைத்தான்.

"அப்பா சீக்கிரம் அவனுக்கு ஒரு பொண்ணைப் பாருங்க..." என்று சொன்னதும் இந்திரன் ஸ்ரீ இருவரும் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்க்க ஒரு கேப் விட்டு,"அப்போதான் என் ரூட் க்ளியர் ஆகும்..." என்று யாரும் பார்க்காவண்ணம் கதிரவனைப் பார்த்துச் சொன்னாள் சிந்துஜா. அவனுக்கு புரையேறிவிட ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த இந்திரன் அதை மொத்தமாய் ஓங்கி கதிரவனின் மண்டையில் தட்டினான்.

"சரி டா சீக்கிரம் பார்த்திட வேண்டியது தான்..." என்று இமையாவர்மம் சொல்லி முடிக்கக்கூட இல்ல அதற்குள் அங்கிருந்து நகரப்பார்த்த ஸ்ரீயின் கையைப் பிடித்தவன்,"நானும் ஸ்ரீயும் லவ் பண்றோம். நாங்க ரெண்டு பேரும் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். ஆனா இப்போ இல்ல... இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாள் போகட்டும்..." என்று சொல்ல இமையவர்மனும் சகுந்தலாவும் ஆச்சரியப்பட்டு அவனைப் பார்த்தனர். சகுந்தலா பேச தொடங்கும் முன்னே,"என் ஸ்ரீலேகாவை நான் பத்திரமா பார்த்துப்பேன். சின்ன வயசுல நடந்ததை நெனச்சி நீங்க குழம்ப வேண்டாம். நாங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டோம்..." என்றவன் அங்கு ஏதும் பேசாமல் அமைதியாக திருதிருவென விழித்து கொண்டிருந்த ஸ்ரீயிடம் திரும்பி,"ஏ நான் பாட்டுக்கு தனியா பேசிட்டு இருக்கேன்... நீ என்ன அமைதியாவே இருக்க? வாயைத் திறந்து பதில் சொல்லு..." என்று சொல்ல, ஏனோ இப்போது பேசாவிட்டால் உண்மையில் தனக்கும் இந்திரனுக்கும் திருமணமே நடக்காது என்பது போல் உணர்ந்தவள்,"ஆமா மாமா அத்தை. நான் இவரை விரும்பறேன்..." என்று சட்டென சொல்லிவிட அப்போது உண்மையில் ஷாக்காகியிருந்த சகுந்தலாவிடம்,"அம்மா என்னமோ சொன்னீங்க? உங்க மருமக போல இந்த உலகத்துலயே யாருமில்ல... என்னை எதிர்த்து கூட ஒரு வார்த்தை பேச மாட்டா... சொக்கத்தங்கம் அப்படி இப்படினு... இப்போ என்ன சொல்றீங்க?" என்று நக்கல் கலந்த தொனியில் சிரித்துக்கொண்டே சிந்து சொன்னாள். அவள் சொன்னது உண்மை தான். இவர்களின் காதல் லீலைகளைப் பார்க்க முடியாமல் சிந்து என்னத்தான் அவர்களைக் கண்டித்தாலும் அவர்கள் பெற்றோரிடம் இந்திரன் ஸ்ரீயின் திருமணத்தைப் பற்றிச் சொல்லிவிட இன்னும் அவர்களுக்குள் அந்த சின்ன வயது பயம் இருக்கவும் அதைப் பற்றி முடிவெடுக்கமுடியாமல் யோசித்தனர். அப்போது தான் அவர்களிடம் இந்த ட்ராமாவை சொன்னவள்,"இன்னைக்குத் தெரியும் பாருங்க அந்த ஊமை குசும்பி பத்தி..." என்று சொல்லிவிட இப்போது எல்லோரும் அவளைப் பார்ப்பதை உணர்ந்து எம்பேரசிங்கா உணர்ந்தாள் ஸ்ரீ. அப்போது தான் இந்திரனின் கரம் அவள் கரத்தில் இருப்பதைக் கண்டு அதை விலக்கிவிட அவள் போராட,

"ஆமாம் சிந்து. நீ சொன்னது சரிதான். எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்கும்னு சொல்லவே முடியாது போல? அடிப்பாவி இத்தனை வருஷமா பார்த்து பார்த்து வளர்த்த எங்களை விட நேத்து வந்தவன்..." என்று இந்திரனைப் பார்த்து முறைத்து,"முக்கியமா போயிட்டான் இல்ல? அப்போ இந்த அத்தை எல்லாம் உனக்கு ரெண்டாம் பட்சம் தான்..." என்று சகுந்தலா சொல்ல ஸ்ரீ தான் சகுந்தலாவின் பேச்சை உண்மையென்று நினைத்து எங்கே அவர் மனம் வருத்திவிட்டாரோ என்று எண்ணி,"இல்ல அத்தை. அது... எனக்கு நீங்க தான் ரொம்ப முக்கியம்..." என்று திக்கித்திணறி சொல்ல, ஏனோ இந்திரனிடம்,'பார்த்தியா? என் மருமகள் என் பக்கம் தான்...' என்பது போல் ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு,"நீ வாடா..." என்று அழைக்க இரண்டு எட்டு முன்னே வைத்தவள்,"உனக்கு நான் வேற நல்ல பையனா பார்க்கறேன். இவன் வேணாம்..." என்றவர் அந்த நல்லவில் ஒரு அழுத்தம் தந்து இந்திரனை முறைத்தபடியே சொல்ல அப்படியே நின்று விட்டாள் ஸ்ரீ. நின்றவளின் கை அனிச்சையாக இந்திரனின் கையைப் பிடிக்கவும் இப்போது என் டர்ன் என்று உணர்ந்தவன்,"சூப்பர் லேக்கு பேபி..." என்று அவளை தன் அருகே இழுத்து,"லேக்கு எப்போதும் என் சைட் தான்..." என்று சொல்ல பாவம் இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு யார் பக்கம் பேசுவது என்ன பதில் சொல்வதென்று புரியாமல் திணறிக்கொண்டு இருந்த ஸ்ரீ லேகாவைப் பார்த்த இமையவர்மன் சிந்துஜா இருவரும்,"அம்மா பாவம் மா உன் மருமக விட்டா அழுத்திடுவா போல..." என்று சொல்ல, இப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் சிரிக்க, ஒரு நொடியில் உண்மையிலே ஸ்ரீக்கு கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது. அதைக் கண்ட சகுந்தலா அவளை தன் அருகில் அழைத்து,"நாங்க சும்மா விளையாண்டோம் டா. இதுக்குப் போய் அழுவியா?" என்று சொல்லி ஆறுதல் படுத்த, அழுது கொண்டே,"என்ன உங்க வீட்டு மருமகளா ஏத்துப்பீங்களா அத்த?" என்று விசும்பினாள் ஸ்ரீ.

"என் தங்கம், உன்னை நான் எப்போ கைக் குழந்தையா பார்த்தேனோ அப்போவே எனக்கு உன்ன என் கூடவே வெச்சுக்கணும்னு ஒரு ஆசை வந்திடுச்சு. நீ வளர்ந்ததும் உனக்கும் இந்திரனுக்கும் கல்யாணம் பண்ணி வெக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா நீயும் அவனும் தான் எப்பயும் எலியும் பூனையுமாம் இருப்பீங்களே? அப்றோம் எப்படினு ஒரே கவலை. அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்னு எனக்கு எப்பயோ தெரியும். ஆனா உனக்கும் அவனைப் பிடிக்கும்னு இப்போ கொஞ்ச நாளா தான் எனக்குத் தெரியும். ரெண்டு பேரும் என்னவெல்லாம் பண்ணியிருக்கீங்க?" என்று குறும்பாக சொல்ல சங்கட பட்ட ஸ்ரீ சிந்துவை முறைக்க,"இருந்தும் எனக்குள்ள லேசா ஒரு பயம் இருந்துட்டே இருந்தது..." என்று சொல்ல, ஸ்ரீயோ இப்போது தயக்கத்தோடு இமையவர்மனைப் பார்த்ததும் அவள் பார்வையின் பொருள் புரிந்தவர்,"எனக்கு என் வீட்டுல இருக்கவங்களுக்கு என்ன பிடிக்குதோ அது தான் எனக்கும் பிடிக்கும். நீயோ உங்க அத்தையோட பேவோரைட் பொண்ணு ஆச்சே? உன்ன பிடிக்காம போகுமா? அண்ட் எல்லாத்தையும் விட இந்திரனை இந்த ஒரு மாசமா எப்படிப் பார்த்துக்கறேன்னு நானும் பார்த்திட்டு தானே இருக்கேன்? உன்னாலே அவன் கிட்ட இப்போ நிறைய நல்ல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு. இவனை மாதிரி ஒரு முரடனை உன்ன மாதிரி ஒரு பொண்ணு தான் வழிக்கு கொண்டுவர முடியும். அது தொடர நீ அவன் கூட இருக்கனும்..." என்று சொல்லிவிட்டு அவர் எழுந்து சென்றுவிட,"என்ன பன்னி சாரி டி அண்ணி... ஓகே வா?" என்று சொல்லி ஸ்ரீக்கு கண்ணடித்தாள் சிந்துஜா. ஸ்ரீயும் இந்திரனும் ஒருசேர முறைக்க,"ஆஹான் என்ன மொறப்பு? இருபத்தி ரெண்டு வருஷமா என் கூடவே ஓடியாடி விளையாடி வாடி போடி பன்னினு சொல்லி நாங்க கூப்பிட்டு பழகுவோமா... இப்போ நீங்க திடீர்னு கல்யாணம் பண்ணிக்குவீங்களாம் நாங்க உடனே மரியாதையா சொல்லுங்க அண்ணி வாங்க அண்ணி போங்க அண்ணினு பேசணுமாமே? நல்ல கதையா தானே இருக்கு?" என்று சொன்னவள் ஸ்ரீ முறைப்பதைப் பார்த்து,"இந்த முறைக்கிற வேலையெல்லாம் இங்க வேணாம். கண்ணு முழி ரெண்டையும் நோண்டிடுவேன். இனிமேல் தான் பார்ப்ப இந்த நாத்தனார் கொடுமையை... வரட்டா?" என்று சொல்லிச் சிரிப்போடு எழுந்து கையைக் கழுவினாள் சிந்துஜா. ஸ்ரீ இந்திரனைப் பார்க்க,'ப்ரீயா விடு இவளாம் ஒரு பொருட்டே இல்லை...' என்பது போல் கையையும் வாயையும் செய்கை செய்ய எல்லோரும் கலைந்தனர்.

அன்று சிந்து அறிவுரை சொன்னவுடனே இந்திரன் தன் பெற்றோர்களை அழைத்து ஸ்ரீ விஷயத்தைப் பொறுமையாக எடுத்து அவர்களுக்குச் சொல்லிவிட்டான். அவன் அவர்களிடம் பேசிய விதமே அவர்களுக்கு அவனின் மாற்றங்களையும் ஸ்ரீயோடு இருப்பது தான் அவன் சந்தோசம் என்றும் அவளுக்கு மட்டும் தான் இவன் அடங்குவான் என்றும் நன்கு புரிந்தது. ஆனால் இதே ஸ்ரீ நாளை இவனை தனியே விட்டுச் சென்றுவிடுவாள் என்றும் அதனால் அவன் வாழ்க்கை எப்படி தடம் புரள போகிறதென்றும் அவர்கள் அறிந்திருக்கவில்லை!

*********************


அவர்கள் இருவரும் அழ,"பரவாயில்ல நானே சொல்றேன்... உங்க அண்ணனை இனி நாங்க எதுவும் செய்ய போறதில்லை..." என்று நிறுத்த, அவர்கள் இருவரும் புரியாமல் விழித்தனர்.

"உங்க அண்ணனைக் கொல்லப் போற வேலையை இப்போ பார்க்கப் போறது உங்க அண்ணனோட நெருங்கிய நண்பன். என்ன சிந்து யாருனு கண்டு பிடிச்சுட்டியா? உன் அருமை காதலன் கதிரவன் தான்..." என்று சொல்ல இப்போது தான் கதிரும் சிந்துவும் காதலித்தார்கள் என்ற இந்த விஷயம் ஸ்ரீகே தெரிந்தது. அவள் சிந்துவைப் புரியாமல் பார்க்க,

"ஏன் டா இப்படிப் பண்ற? ப்ளீஸ் எங்களைக் கொன்னு கூடப் போட்டிடு... செத்துப்போனதா நம்பப்படுற நாங்க செத்தே போயிடுறோம். என் அண்ணனையாவது விடு டா..." என்று சிந்து இரைந்து வேண்டினாள்.

"ஹா அவ்வளவு சீக்கிரம் அவனைக் கொல்ல தான் உங்களை இவ்வளவு நாள் உயிரோட கூடவே வெச்சியிருக்கோமா? அவனை நான் கொஞ்ச கொஞ்சமா மனவுளைச்சல் பண்ணி அவன் சாகும் போது அந்தக் கடைசி நொடியிலே நீங்க உயிரோட இருக்கும் விஷயத்தைச் சொல்லிட்டு அவனைக் கொன்னு அப்றோம் அவன் செத்ததை உங்ககிட்ட சொல்லி உங்களையும் கொன்னு அப்றோம் இல்ல இல்ல அந்த கமலேஷையும் கொன்னா தான் என் மனசு ஆறும். இதெல்லாம் உங்கப்பன் கேட்டு உயிர்வாழவும் முடியாம சாகவும் முடியாம துடிதுடிக்கனும்..." என்று ஒரு கொடூர சிரிப்பை உதிர்த்தான்.

"நீ யாரு டா? எதுக்காக எங்க குடும்பத்தை இப்படிப் பண்ற?"

"உன் அப்பனைப் போய் கேளு... ஐயோ அவன் கிட்ட தான் உங்களால கேட்க முடியாதே? இருந்தும் சொல்றேன். ஆனா இப்போ இல்ல. அது தான் உங்க கடைசி ஆசையா நெனச்சு அதை நிறைவேத்தி உங்களையும் பரலோகம் அனுப்புறேன். சாரி சாரி ஏற்கனவே பரலோகம் போனதா நம்பப்படுற உங்களை அங்க உண்மையிலே அனுப்புறேன். அநேகமா அடுத்த முறை நாம மீட் பண்ணும் போது இந்திரன் செத்துட்டாங்கற செய்தியோட வந்து உங்க கடைசி ஆசையையும் நிறைவேத்தி வெக்கிறேன். அதுவரைக்கும் பை..." என்று சொல்லி அவன் வெளியேறினான்.

இவ்வளவு நாட்களாக (சுமார் ஐந்து மாதங்கள்) அழுததாலோ என்னவோ இப்போது இருவருக்கும் கண்ணீர் கூட வரவில்லை. முதலில் ஸ்ரீ கருவுற்று இருக்கிறாள் என்பதும் இரண்டாவது கதிரவன் இப்படி மாறிட்டானே என்றும் சிந்துவிற்கு இரண்டு சந்தேகம் இருந்தது. தாங்கள் உயிரோடு இருக்கும் விஷயம் இந்திரனுக்குத் தெரிந்தாலாவது அவன் தங்களைத் தேடி வருவான் என்று நம்பலாம். ஆனால் தாங்கள் இருவரும் உயிரோடு இருப்பது யாருக்குமே தெரியவில்லையே? என்ன செய்ய? யாரிவன்? இந்தக் கேள்வி இவர்களை இந்த ஐந்து மாதங்களாய் யோசிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. மேலும் எப்படி நாங்கள் இறந்து விட்டோம் என்று என் குடும்பம் நம்பியது? என்று யோசித்தவளுக்கு பைத்தியமே பிடித்துவிட்டது. இதுவரை மூன்று முறை இதுபோல் வந்து,'இந்திரன் இன்றோடு இறந்து விடுவான் அவனுக்கு ஒரு பை சொல்லி விட்டு நீங்களும் சாவுங்கள்' என்று சொல்ல ஆனால் இதுவரை கோமாவில் இருந்ததாகச் சொல்லப்பட்டவன் இன்று நினைவு திரும்பி இருப்பதாகச் சொன்னதும் ஒருபுறம் சந்தோசம் எழுந்தாலும் மறுபுறம் தங்கள் நிலையை எண்ணி அழுகை வந்தது. அவனின் பேச்சை வைத்தே அவன் எவ்வளவு வன்மத்தோடு இருக்கிறான் என்றும் அவர்களுக்குப் புரிந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை...

**************************

உயிரோடு இருப்பவர்களை இறந்து விட்டதாக நம்பி அங்கே சகுந்தலா, இமையவர்மன் இந்திரன், கதிரவன் ஆகியோர் நம்பி கொண்டிருக்க இறந்து விட்டவர்கள் இன்னும் உயிரோடு இருப்பதாக எண்ணி ஒருவர் நம்பிக்கையில் இருக்கிறார். யாராவர்?

இந்த மூன்று நாட்களில் வர்மா குரூப்ஸின் (இமையவர்மனுடையது)பங்குங்கள் விண்ணை நோக்கி உயர அசோக் சௌனி மற்றும் சந்திரவர்மனின் பங்குகள் அதள பாதாளத்தை நோக்கி சென்றது. தாமோதரன் தான் நேரில் வந்து தயாளனைப் பார்த்து விட்டுச் சென்றார். மற்றப்படி அங்கு வேலை செய்யும் ரபீக் உட்பட யாருக்கும் தாமோதரன் அவரின் கிளைன்ட் என்று தெரியாது. இருந்தும் லீகளாக ஒரு போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கப்பட்டு தயாளனைத் தாக்கியது யார் என்று விசாரிக்க ஒரு குழு (தயாளனின் டிடெக்டிவ் ஏஜென்சி) தீவிரமாகத் தேடிக்கொண்டு இருக்கிறது.

தருண் தான் அன்றே அந்த காசிமேடு கஜாவைத் தேடிச் செல்ல அதற்குள் ஆள் அப்ஸ்காண்ட் (தலைமறைவு) என்று அவனுக்குத் தெரிய வந்தது. இந்த மாதிரி மட்டை காரங்க எல்லாம் நிச்சயம் தண்ணியில (கடல்) தண்ணியில (சரக்கு) தான் இருப்பாங்க என்று நன்கு அறிந்து வைத்திருந்தான் தருண். வங்கக் கடலில் சுற்றிக் கொண்டு இருக்கும் விசை படகை நோட்டமிட சொல்லி ஆளை அனுப்பியிருந்தான் தருண்.

தருணிற்கும் ஒன்று மட்டும் புரியவேயில்லை. கதிரவனுக்கும் அசோக் சவுனிக்கும் இடையே இருக்கும் தொடர்பைப் பற்றித் தெரிந்துகொள்ள அந்த கஜாவுக்கு என்ன அவசியம்? அவன் ஏன் தயாளனைத் தாக்க வேண்டும்? என்று குழம்ப அந்த தருணின் டிடெக்டிவ் மூளைக்கு ஏனோ இவையாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே பட்டது.

குகன் தான் அப்படியேதும் இருக்காது என்று சொல்ல அவனை கோவமாக முறைத்தவன்,"டேய் எனக்கென்னவோ அந்தக் கதிரவனே டபிள் கேம் விளையாடுறானோன்னு ஒரு டவுட் குகா..."

"ஏன் பாஸ் இப்படிச் சொல்றீங்க?"

"அவனைப் பற்றி எல்லாம் தெரிஞ்சத வெச்சி தான் சொல்றேன். இத்தனை வருஷம் கூடவே இருந்த நண்பனுக்கே அவன் கெடுதல் நினைக்கிறானா அவன்கிட்ட ஏதோ பெருசா விஷயம் இருக்கு..."

"பாஸ் அவன் தானே பாஸ் நமக்கு சம்பளம் தரவன்?"

"நமக்கு காசு கொடுக்கறவனெல்லாம் நல்லவனா இருக்கணும்னு ஒன்னும் அவசியமில்லையே?"

"அதுவும் சரிதான் பாஸ்..."

"டேய் அப்போ இந்திரனைக் கொல்ல அனுப்புன ஆளு யாரா இருக்கும் டா?"

"பாஸ் அது எதுக்கு நமக்கு? நாம கதிரவனுக்குத் தானே வேலை செய்யுறோம்? இதுல இந்திரனை யாரு கொல்ல வந்தா நமக்கு என்ன பாஸ்?"

"அப்படி இல்ல குகா... இந்த இந்திரனை யாருனு நெனச்ச? தி கிரேட் பிசினஸ் மேன் வர்மா குரூப்ஸ் பையன். பேப்பர் பார்த்தியா?" என்று கேட்க,

"பார்த்தேன் பாஸ்..."

"என்ன விஷயம் சொல்லு?"

"மாஸ்டர் படத்துல தளபதி ஒரு ப்ரொபெஸரா நடிக்காரராம்.(பழைய கிசுகிசு...)..." இதைக் கேட்டு தருண் முறைக்க,"ஓ சாரி பாஸ், மறந்துட்டேன். நீங்க தல பேன் தானே? வலிமை படம் ஷூட்டிங்கில் தலைக்கு அடிபட்டுடுச்சாம். இன்னொரு மேட்டர் இங்க வாங்க..." என்று ரகசியம் போல் அருகில் அழைத்தவன்,"அந்த மூன்றெழுத்து ஸ்வீட் ஸ்டால் நடிகை ஒரு டைரெக்டரை லவ் பண்றங்களாம். இதுல ஹைலைட்டே அந்த கௌத புத்தர் ஹீரோ கூட நடிக்கும் ஹீரோயின் கூட கிசுகிசுப்பாம்..." என்று சொன்ன குகனை கொலைவெறியில் முறைத்தான் தருண்.

"புரியுது பாஸ் உங்க பீலிங் எனக்குப் புரியுது. இப்படி மொட்டையா சொன்னா உங்களுக்கு புரியிலனு ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட். ஸ்வீட் ஸ்டால் நடிகைனா ஓர் ஸ்வீட் கடை பெயரைக் கொண்ட நடிகை. கண்டுபிடிங்க பாப்போம்? சரி சரி நானே சொல்றேன். அகர்வால் ஸ்வீட்ஸ். அப்போ யாரு அந்த நடிகை?"

"குகன் நீ பேசாம ஒன்னு பண்ணேன்..."

"சொல்லுங்க பாஸ்?"

"என் ஃப்ரண்ட் ஒருத்தன் தினத்தந்தியில ரிப்போர்ட்டரா இருக்கான். அவனுக்கு ஒரு கிசுகிசு சொல்ற ஆளு வேணுமாம். நீ ஏன் அங்க போகக் கூடாது?"

"பாஸ் நான் டிடெக்டிவ்?"

"பரவாயில்லையே உனக்கு அதெல்லாம் ஞாபகமிருக்கா?"

"என்ன கிண்டல் பண்றீங்களா?"

"சே சே உன் அறிவைக் கண்டு நான் வியக்கேன்..."

"அப்படியா?" என்றவனை கோவத்தில் அறைந்திருந்தான்.

"ஒழுங்கா இந்த வேலையை விட்டுப் போ. உனக்கு ஏத்த ஜாப் இல்ல இது..."

"பாஸ் பாஸ் தெரியாம சொல்லிட்டேன். ப்ளீஸ் பாஸ்... ப்ளீஸ்..."

"எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன் நீ என்னடானா?"

"என்ன மேட்டர் பாஸ்?"

"இந்திரன் பதவி ஏற்று மூணு நாள்ல நிறைய ஷேர் மார்க்கெட்ல மாற்றம். மேலும் இந்திரனுக்கு இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் ஒரு ஆக்சிடென்ட் ஆகியிருக்கு. அதுல அவன் சிஸ்டரும் அவ ப்ரெண்டும் இறந்திருக்காங்க. அதுல தப்பிச்சதுனால இப்போ கொல்ல நினைக்கிறாங்கனா அப்போ ஏதோ பெரிய வன்மம் இருக்குமோனு எனக்கு ஒரு டௌட் வருது..."

"பாஸ் பிசினெஸ் எதிரிங்க யாராவது இதைச் செஞ்சிருக்கலாம்னு சொல்றிங்களா?"

"எனக்கு அப்படித் தோணல. இது பிசினெஸ் தாண்டி சம்திங் பெர்சனல் மோட்டிவ் இருக்கும் போல..."

"பாஸ் அவங்க அப்பாக்கும் சித்தப்பாக்கும் தொழில்ல போட்டி இருக்காம். சோ..."

"நானும் படிச்சேன். இருந்தும் அது காரணமா இருக்குமுன்னு எனக்குத் தோணல..."

"அப்போ வேற என்ன காரணம் பாஸ்?"

"எனக்கு என்னவோ அந்தக் கதிரவனை பாலோ பண்ணா எல்லாத்தையும் ஈஸியா நூல் பிடிக்கலாம்னு தோணுது..."

"பாஸ் இது தப்பு தானே? அவரு தானே நமக்கு காசு தராரு?"

"ப்ரொபெஷனலா தப்பு தான். ஆனா எதிக்கலா சரி..."

"பட் நமக்கு எதுக்கு அதெல்லாம்?"

"எதுக்கும் நம்ம சார்லஸ் கிட்டச் சொல்லி இந்திரனைக் கொஞ்சம் அப்செர்வ் பண்ணச் சொல்லு..." (வானிலை மாறும்...)
 
நாங்களும் கதிரவனையே நூல் புடிச்சு போறோம்... அப்பவாவது என்னனு தெரியுதான்னு பாக்கலாம் ???
உயிரோடு இருக்காங்கனு நம்பற அந்த ஒருத்தர் யாரா இருக்கும் ???

இந்திரன் குடும்பத்தை பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு அவனுக்கு அப்படினா அவன் அவங்க கூட ரொம்ப க்ளோசா இருந்தவனா இல்ல அந்த அளவுக்கு அவங்கள க்ளோசா வாட்ச் பண்ணிருக்கானா ???
 
Last edited:
நாங்களும் கதிரவனையே நூல் புடிச்சு போறோம்... அப்பவாவது என்னனு தெரியுதான்னு பாக்கலாம் ???
உயிரோடு இருக்காங்கனு நம்பற அந்த ஒருத்தர் யாரா இருக்கும் ???

இந்திரன் குடும்பத்தை பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு அவனுக்கு அப்படினா அவன் அவங்க கூட ரொம்ப க்ளோசா இருந்தவனா இல்ல அந்த அளவுக்கு அவங்கள க்ளோசா வாட்ச் பண்ணிருக்கானா ???
பாருங்க பாருங்க கண்டிப்பா தெரியும்? சொல்றேன்... ரெண்டாவது ஆப்சன் சரி. அவ்வளவு நுணுக்கமான வாட்ச் பண்ணியிருக்கான். நன்றி??
 
வர்மா குடும்பத்தில் ,மூன்றாவது வர்மன் இருந்தாரே, அவர் குடும்பம் எங்கே....

Interesting ud (y) (y)
வர்மாவின் மூத்த மகன் சின்ன வயதிலே இறந்துவிட்டார். இமையன் சந்திரன் தான் அவர் வாரிசு. அதில் ஐயம் வேண்டாம். நன்றி??
 
Top